ஒருவனுடைய திறமைக்கும் வெற்றிக்கும் உந்துதலாக ஆரோக்கியமான ஒரு போட்டியும், திறந்த சவாலும்கூட ஒருவனை எவ்வாறு வெற்றியாளனாக ஆக்கும் என்பதற்கு கடந்த ஒருமாதத்திற்கும்மேலான என் அனுபவம் சிறப்பானதொரு உதாரணமாக இருந்தது.
எதையும் சொல்லிக்கொண்டிருப்பதைவிட ஒரு வெற்றியை பெற்றுவிட்டு மற்றவர்களுக்கும் ஒரு மோட்டிவேஸனுக்காக அனுபவங்களை பகிர்ந்துகொள்வதே.. நிதிசார் முகாமைத்துவ, நிர்வாக முகாமைத்துவத்தில் என் ரோல் மொடல்களாக நான் நினைத்திருக்கும் நபர்களின் தனிப்பண்பாக அமைந்துள்ளது.
அந்தவகையிலேயே நான் கடந்த பல நாட்களாக பதிவுலகத்தின் பக்கமே தலைவைத்து படுக்காத அளவுக்கு முழுமூச்சுடன் செயற்பட்டு ஒரு இலக்கினை அடைந்த கதையினை சொல்லவிளைகின்றேன்.
இதில் என்னை நான் பெருமையாக சொல்லிக்கொள்ள முயற்சிக்கவில்லை. பதிவுலகில் புதிதாக தொழில் புரிய புறப்பட்டிருக்கும் இளவல்கள் பலர் உள்ளனர், ஏற்கனவே வாசிப்பு மற்று அறிவுதேடல் உள்ள அவர்களுக்கு இது ஏதோ ஒரு வகையில் அவர்களின் துறைகளில் வெற்றிபெற ஒரு அணில் பிள்ளை உதவியாக இருந்தாலே அதுவே இந்த பதிவுக்கும் என் அனுபவத்திற்கும் கிடைத்த வெற்றி என்று நினைக்கின்றேன்.
ஒரு உயர்ந்த நிறுவனம் எப்போதும் தன் பணியாளர்கள் சகல தரப்பினரையும் சிறப்பு செயற்பாடு நிலையில் வைத்திருக்கவே விருப்பம் கொள்ளும்.
அதற்காகவே அவ்வாறான நிறுவனங்கள் பணியாளர்களின் தரங்களுக்கு ஏற்ப அவர்களுக்கான முகாமைத்துவ, திறமை அபிவிருத்தி, நிதி முகாமைத்துவ, சுய அபிவிருத்தி பயிற்சி, வலுவூட்டல் என பல கருத்தரங்குகளை தனது பணியாளர்களுக்கு வழங்கி அவர்களின் தரங்களை மென்மேலும் உயர்த்த பெருமுயற்சிகளை மேற்கொள்கின்றது.
அது மட்டுமின்றி பிறநாடுகளில் உள்ள சிறப்பான பயிற்சியாளர்களை எமது நாட்டுக்கு வரவழைத்து பல சந்தேகங்களையும் நிவர்த்தி செய்வதோடு, பிறநாடுகளில் தொழிலால் வெற்றிபெற்றவர்களையும் அழைத்து அவர்களின் அனுபவங்கள், தொழில் வெற்றிக்கு அவர்கள் கைக்கொள்ளும் முறமைகள் என்பவற்றையும் தனது நிறுவன அதிகாரிகளுடன் பகிரும்படி வகை செய்கின்றது.
அத்தோடு தாம் கற்ற கல்விநிலையினை ஒரு பட்டமாக கருதுபவர்கள் என்றும் ஜெயித்ததில்லை. தாம் கற்றவற்றில் புதிய கோட்பாடுகள் பல மேலதிகமாக புகுத்தப்படுவதை இவர்கள் கவனிக்கத்தவறுவதுடன், தங்கள் வட்டத்திலேயே அவர்கள் நிற்கவேண்டிய நிலைமைகளும் பாராதூரமான ஒரு விடையமாக அமைந்துவிடுகின்றது.
மாறாக வெற்றியாளன் தன் கற்றலை பட்டத்திற்கானதாக பார்க்காத பண்புடையவனாக இருப்பதுடன், உலக வர்த்தக ஓட்டத்திற்கு தக்கவாறாக தன்னையும் தன் கற்றலையும் 'அப்டேட்' செய்துகொண்டிருப்பவனாகவே இருப்பான்.
ஓயாத கற்றல் அதன்மூலமானதொரு தேடல், தன் தொழில்சார் வெற்றியாளர்கள் பற்றிய தரவுகள், அவர்களின் வெற்றியின் காரணங்கள், அவர்கள் கைக்கொள்ளும் முறைகள் என்பவற்றை கவனித்துக்கொண்டே, அல்லது தேடி அறிந்துகொண்டே இருந்தால் எம்மை அறியாமல் நாம் அதுவாகவே ஈர்க்கபட்டு செயற்படத்தொடங்குவோம் என்பது பலரின் அனுபவ உண்மை.
ஆனால் இத்தனையும் இருக்கம்போதும் எமக்கிருக்கும் சில பழக்கவழக்கங்கள், ஈர்ப்புகள், மேற்படி எமது இலக்குகளை அடைய சிரமத்தை கொடுத்தால் அவற்றை சிலகாலம் இடைநிறுத்தவோ அல்லது முழுமையாக துரக்கி எறியவோ தயங்காதவர்களாக நாம் எம்மை தயாராக்கவேண்டும்.
முக்கிய உதாரணம், சமுக இணையதளங்களிலான வேலைக்கழிப்பு, வலைப்பூக்கள் பக்கமான அதிக நேரம் செலவிடல்.
அது மட்டுமின்றி எமக்கு இருக்கும் தயக்கங்கள், சுய பின்னடிப்புக்கள், நம்பிக்கை இல்லாமைகள், இவற்றுக்கு மேலாக முன் நிற்கும் சோம்பல், பஞ்சி என்பவற்றை கொழுத்தியேவிடவேண்டும்.
சரி... என் அனுபவத்டதிற்கு வருகின்றேன்.
சில நாட்களின் முன் கொழும்பில் இடம்பெற்ற முகாமைத்துவம் சார் கருத்தரங்கொன்றை வழங்குவதற்காக வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவர் வந்திருந்தார், அவர் பேச தொடங்கியத்தில் இருந்து பேசி முடிக்கும்வரை ஒரு ஊசி விழுந்து சத்தம் வரவில்லை. ஓவ்வொரு சொல்லும் உடலிலும் மனத்திலும் பெரும் புத்துணர்வையே ஏற்படுத்தியிருந்தன.
அந்த கருத்தரங்கை முடித்துவிட்டு ஹொட்டலில் தங்கியிருக்கும்போது நானும் என் தரத்தில் உள்ள சக அதிகாரியும் இது பற்றி பல விடையங்களையும் பேசிக்கொண்டிருந்தோம்.
ஒரு கட்டத்தில் ஒரு மாதத்தில் அதிகமாக திட்டங்கள், நிகழ்;சி திட்ட ங்கள், அமுலாக்கங்கள், குழு உச்ச செயற்பாடுகள் என்பவற்றை உயர்த்தி எங்கள் வருமானத்தையும் குறிப்பிட்ட ஒரு தொகையினை இலக்காக்கி ஒரு மாதத்தினுள் இவ்வளவும் செய்து அதற்கான ஊதியமாக நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட தொகையினை பெறமுடியுமா? என இருவருமே சவால் விட்டு கொண்டோம்.
உண்மையில் எமக்கு போதிய வருமானம் கிடைக்கின்றது என்று நிறுவனம் தரும் செயற்திட்டங்களை மட்டும் செய்து கணிசமான ஊதியத்தை பெற்றுவந்ததே எம் விஸ்பரூபங்கள் அடக்கப்பட்டிருந்ததன் முழுமையான காரணம்.
போட்டி கடந்த மாத ஆரம்பத்திலேயே செயலுக்கு வந்தது. இருவரும் பல திட்டங்களை முன்வைத்தோம், ஆரம்ப முயற்சிகள் சில இருவருக்குமே பெரிதாக வெற்றி இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் விடா முயற்சியாக மோதிக்கொண்டோம். என் செயற்திட்டங்களை நான் பார்ப்பதைவிட கணனித்திரையில் அவர் பார்ப்பதே அதிகமாக இருந்தது, அதுபோலவே என் நிலையும். அடுக்கடுக்காக புதிய புதிய திட்டங்களை போட்டு என் குழுவினரையும் வலுப்படுத்தி இயங்கசெய்தேன். அங்கே இங்கே போக்கு காட்ட நினைத்தவர்களுக்கு ருத்திர தாண்டவமும் ஆடிக்காட்டினேன்.
திட்டங்கள் விரைவு பெற்றன, வெற்றியின் சிகரங்கள் தெரிய ஆரம்பித்தன.
அந்த நேரத்தில் ஆரம்பமாகியது நல்லூர் திருவிழா.. மனைவி, குழந்தை திருவிழா என்ற சிறு வட்டம்வேறு விழுந்தன. சரி... மாலை ஐந்தரையில் இருந்து ஏழுமணிவரை அதற்கு ஒதுக்கினேன். அதன் பின்னரும் நிறுவன வேலைகளை பார்த்தேன்.
நிற்க... இந்தநேரம் ஏன் பதிவு எழுதவில்லை. கடந்த வலைப்பதிவர் ஒன்றுகூடலில்கூட என்னதான் வேலை என்றாலும் பதிவு எழுதலாம் என்று பேசியிருந்தவன் நான்தான் மறுக்கவில்லை. சத்தியமாக இரவு 3 மணியாகினால்க்கூட ஒரு பதிவு எழுத்தியிருக்கலாம். ஆனால் அங்கே மனம் சென்றால் இங்கே இருக்கும் வேகம் வலு குறைந்தவிடும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அது தான் முன்னேயே சொல்லியிருக்கின்றேன். எமது முன்னெற்றம் தொழில் என்பவற்றுக்கு பதிவுகள், இணையங்கள் தடை என்றால் அதை தூக்கி எறியவும் தயங்க கூடாது என்று!
ஒரு கட்டத்தில் என் குழுவினருக்கும் என் வேகம் பிடித்துக்கொண்டது. என் ஓட்டத்திற்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்யத்தொடங்கினார்கள்.
இதற்கிடையில் பல சமயங்களில் இந்தப்போட்டிகளால் போட்டிபோடும் அதிகாரியும் நானும் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்தன.
உண்மையை சொல்லவெண்டும் என்றால் சில சில மனக்கசப்புகளும் ஏற்பட்டன.
23ஆம் நாளுக்கு பின்னர் இருவரின் செயற்பாடுகளும் எப்படி என்று மற்றவர் மற்றவரை பார்க்க முடியாதபடி நெட்வேர்க் முறை மாற்றப்பட்டது.
இருவரும் எம் பாட்டிற்கு ஓடினோம். மாத இறுதிநாள் இரவு 10.30 வரை இந்த திட்டத்திற்கான வேலைகள் ஓடி முடிவடைந்தன.
இதில் நான் ஆச்சரியப்பட்ட விடயம் என்னவென்றால் இலகுவான நடைமுறைகள், நிகழ்ச்சி திட்டங்களையே முதலில் தயாரிக்க முடிவெடுத்து செயற்பட்டேன் அனால் ஆரம்பத்தில் அதில் சிறு திருத்தங்கள் செய்யவேண்டிய நிலையும் வந்தது. ஆனால் உச்சவேகத்தில் செயற்பட்டால்கூட பென்டிங்காக பெரிய விடயங்கள் உள்ளனவே என்ற கவலை இரவுகளில் என்னை வெருட்டியவண்ணமே இருந்தது.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இறுதிப்பகுதியில் அவை அடுத்தடுத்து மிக இலகுவாக செய்து முடிக்ககூடியதாக இருந்ததே.
இம்மாத ஆரம்பத்திலேயே இன்னுமொரு நிகழ்வுக்காக தம்புள்ளைக்கு நிறுவனத்தால் அழைக்கப்பட்டிருந்தோம். அந்த கருத்தரங்கில் சிறப்பாக செயற்பட்டவர்கள் 10 பேரின் பெயர்கள் இல ங்கை மட்டத்தில் செல்ல ஆரம்பித்தன. 3 ஆவது நபர் பற்றிய விபரம் திரையில் விழுந்தது, அடுத்து இரண்டாவது அதிலும் எம் இருவரின் பெயர்கள் இல்லை, இறுதியாக முதலாவது நபருக்கான ஸ்கிரீன்பிளே செல்ல இருதயத்துடிப்பு அதிகரிக்க ஆவலுடன் பார்த்தோம்.
ஆம்... அங்கே எனது பெயரும் அந்த அதிகாரியின் பெயரும் அந்த இடத்திற்கான இருவராக வந்துகொண்டது.
விழிமுந்தியதோ கரமுந்தியதோ... என்ற வரிகளுக்கு அமைவாக இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் இறுக கட்டி அணைத்தோம். அந்த அணைப்பில் இருவரின் உறுதிம், விடாமுயற்சியும், இருந்தது. எமக்குள் இருந்த போட்டி, சில கசப்புகள், வலிகள் அத்தனையும் உண்மையில் அந்த அணைப்பில் அழிந்தபோகின. ஓன்றல்ல இரண்டல்ல சுமார் 10 நிமிடங்கள் கட்டிப்பிடித்து ஒரவரை ஒரவர் மாறி மாறி வாழ்த்திக்கொண்டிருந்தோம்.
மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி இதுதான் என்பதை இருவரும் உணர்ந்தோம்.
இன்று எமது கைகளில் நாம் எட்ட நினைத்த ஊதியம், எமக்கு பக்கத்துணையாக நின்ற குழுவினர் இன்று மலேசியா, சிங்கப்பூருக்கான சுற்றுலாவுக்கு செல்கின்றனர்.
சரி..கொஞ்சம் ஓய்வாக இருப்போம் என நாம் நினைத்தாலும் இனி எம்மை எம் நிறுவனம் விடப்போவதில்லை.
ஆம்... ஒரே மாதம் உங்களால் முடியும் என்று ஒரு விடயத்தை அடைய உங்கள் தொழிலில் விடாமுயற்சியுடன் முயன்றுபாருங்கள்...
நிற்சயமாக உங்களால் முடியும்.
16 comments:
படிக்கும் போது நமக்குள் ஒரு வெற்றி வந்தது போல உணர்வு!!
பல உந்துதல்களை தருகிறது நமக்கு!!!
வாழ்த்துக்கள் சகோ!!!
இந்த காலப்பகுதி எனக்கும் மிக நேர நெருக்கடியான காலம் தான்..ஆனால் காப்பி பேஸ்ட் பதிவுகள் போட கொஞ்சம் நேரம் கிடைத்தது :)
வணக்கம் பாஸ்,
புது டெம்பிளேட்..
கலக்கலா இருக்கு.
எப்படி இருக்கிறீங்க?
இருங்க படிச்சிட்டு வாரேன்.
http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
என்ன பாஸ்,
ஓட்டுப் பட்டைகளைக் காணேல்ல.
இந்த இணைப்பில் போனால் ஓட்டுப் பட்டைகளை இலகுவாக இணைக்கலாம் பாஸ்.
விடா முயற்சி எப்போதும் வெற்றியினைத் தரும் என்பதனை அனுபவ வெளிப்பாடாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
வாழ்த்துக்கள் பாஸ்.
வாழ்த்துக்கள் பாஸ் ....
//ஆம்... ஒரே மாதம் உங்களால் முடியும் என்று ஒரு விடயத்தை அடைய உங்கள் தொழிலில் விடாமுயற்சியுடன் முயன்றுபாருங்கள்...
நிற்சயமாக உங்களால் முடியும்.///
இப்பொழுது நான்.. இம்மாதம் இன்னும் சில மாதங்கள்..
மனதுக்கு ஒரு புது உத்வேகத்தையும் துடிப்பையும் தருகிறது உங்கள் அனுபவம். உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா. I really impressed.
நல்ல பதிவு.
பயனுள்ள பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
நல்ல அனுபவம்.பலருக்கும் பயந்தரக்கூடிய ஒன்று.
மனதுக்கு ஒரு புது உத்வேகத்தை தருகிறது ....நல்ல பதிவு....
நல்லதொரு அனுபவம் தான்...
அண்ணா முதல் வேலையாக மேலே உள்ள நவிகேசன் பாரை தக்கங்கள் இதை வச்சுத் தான் தமிழ் புளொக் எல்லாத்துக்கும் ஆப்பு வைக்கிறாங்கள்.
எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்
நல்ல பயனுள்ள பதிவு.....வாழ்த்துக்கள்....
நல்ல பகிர்வு உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி
விடாமுயற்ச்சி வெற்றியைத் தரும் என்று அனுபவத்தை அழகாய் பதிவு செய்திருக்கின்றீர்கள் படிக்கும் போதே ஒரு உத்வேகம் வருகின்றது!
மனதுக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது உங்கள் அனுபவம்
Post a Comment