Wednesday, August 12, 2009

50 ஐ தொட்டுநிற்கும் என்பதிவுகள்….


இன்று நான் பதிவிடல் ஒன்றை மெற்கொண்டால் அது எனது ஐம்பதாவது பதிவாக இருக்கும். அனால் இன்னும் ஒரு முக்கியமான ஐம்பதுடன் ஏதேட்சையாக என்பதிவுகள் ஐம்பதை எட்டிய நாளும் பொருந்தியுள்ளது புதிராகவே உள்ளது.
இன்றுதான் தமிழ் அன்னையின் தவப்புதல்வர்களுள் ஒருவரான கலைஞானி கமல்ஹாசன் கலையுலகில் காலடி பதித்தநாள்;. இன்று அவரது கலைப்பணிக்கு பொன்விழா நாள், அதாவது 50ஆவது கலை உலக நிறைவு நாள்.
1959 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12 ஆம் திகதி பீம்சிங் இயக்கத்தில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் கலையுலகில் கால் பதித்தார் கமல்ஹாசன்.
அப்புறம் மேலும் சொன்னப்போனால் கமல்ஹாசன் பற்றிய ஒரு பதிவாகவே இந்தப்பதிவு மாறிவிடும். ஏன் என்றால் அந்த அளவுக்கு நான் அவரின் இரசிகர்களில் ஒருவன்.

பதிவுலகத்திற்கும், இணையத்தளங்களுக்கும் நான் புதியவன் அல்ல, என்பது பல மூத்த பதிவுலக மற்றும் இலக்கிய எழுத்தாளர்கள், மற்றும் உலகத்தமிழ் ஊடக நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த வேளைகளில் எழுத்துக்கள் என்னை உள்வாங்கிக்கொண்டபோது ஏற்பட்ட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கின்றேன்….

1992 ஆம் அண்டு, நான் ஆண்டு 09 இல் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது (அதற்கு முன்னர் சிறுவர் மலர்கள், ஞாயிறு இதழ்களில் கேட்ட கதைகள், சொல்லித்தந்த கட்டுரைகள், நண்பர்களுடன் பகிரும் நொடிகள் என்பன எழுதி பிரசுரிக்கப்பட்டதும் உண்டு) அப்போது யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருந்த அறிவுக்களங்சியம் நூலில் பல கட்டுரைகள் எழுதி பிரசுரிக்கப்பட்டது. அந்தக்காட்சட்டைப்பருவங்களில், கேட்கப்படும் கட்டுரைகளை எழுதி அஞ்சலிட்டுவிட்டு, அடுத்த சஞ்சிகை வரும் என ஒவ்வொருநாளும் நகம்கடித்திருப்பேன் வந்தவுடன் ஓடிச்சென்று அதைவாங்கி அதில் எனது கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது என்று அறிந்தவுடன், நல்லூரின் முன்னால் உள்ள புத்தக்கடையில் இருந்து எனது வீடுவரை நடக்கும்போது எப்படித்தான் எனக்குள் ஒரு கம்பீரம் புகுந்துகொள்ளுமோ தெரியாது.

அன்றில் இருந்து தேடிப்படிக்கவும், படித்ததை வைத்து கிறுக்கவும் ஆரம்பித்தேன். நூலகம் சென்று படிப்பது, யாரிடமும் இரவல் வாங்கி படிப்பது என்பவை எனக்கு சரிப்பட்டுவராத காரணத்தினால் தேவையான புத்தகங்களை சொந்தமாக வாங்கியே படிக்கப்பழகிக்கொண்டேன். அந்தப்பருவங்களில் ராணிக்கொமிக்ஸ் மாயாவியுடன் மற்ற மாணவர்கள் மாயாவியின் மண்டை ஓட்டுக்குறியை ஆராய்ச்சி செய்யும்போது நான் சேகுவாராவைப்பற்றி முழுமையாக அறிய அரம்பித்துவிட்டேன். இதைக்கண்டுபிடித்து என்னை அன்றே செதுக்க ஆரம்பித்தவர் எனது மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியை திருமதி.இராஜலட்சுமி. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் (யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் துணைவியார்.)


அதன்பின்னர் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய ஈழநாதம், நடத்திய 15 வயதிற்கிடையலானவர்களுக்கான கட்டரைப்போட்டியில் எனக்கு முதலாமிடம் கிடைத்தது. அதேபோல தமிழ்த்தின போட்டிகளில் கட்டுரை, சிறுகதை இரண்டுக்கும் ஒவ்வொருமுறையும் மாவட்ட மட்டங்கள் வரை போய் வென்றுவந்தேன்.(ஏன் தேசிய மட்டத்திற்கு போகவில்லை என்று கேட்பீர்கள் அன்றைய சூழ்நிலையில் அதி உச்சமாக நாங்கள் மாவட்ட மட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டோம். அதேபோல மறுபக்கம் கவிதைகளில் நண்பர் திருமயூரனும், பேச்சுக்களில் நண்பர் பிரியதீபன், நண்பர் திருக்குமரன் அகியோர் கலக்கிக்கொண்டிருந்தநேரம் அது.
1994 ஆம் ஆண்டு சாதாரண தரப்பிரீட்சைகளை முடித்து. 1995ஆம் ஆண்டு உயர்தரத்தில் நாங்கள் கற்கத்தொடங்கிய அந்த ஆண்டு என்னைப்பொறுத்தவரையில் என் எழுத்துக்களின் உச்சம் என்றுதான் பெருமிதம் கொள்வேன்.

அந்தக்காலம் மிக அழகானது. அறிந்தும் அறிமால் இருந்த புதிர்களுக்கு மேலும் புதிர்போட்ட காலங்கள் அவை. என்ன அதிசயம்! அதுவரை என்பகத்தில் பேசாமல் இருந்த பல நண்பர்களும், திடீரென கவிஞர்கள் ஆகிய பருவங்கள் அது. விவாத மேடைகளில் அனல் பறந்திருக்கின்றது. சில நண்பர்களின் ஆணித்தரமான விவாதங்களால் என் கர்வங்கள் தகர்ந்திருக்கின்றன. மீண்டும் எமது உயர்தரப்பரீட்சை நெருங்கும் 1997ஆம் ஆண்டு, பேராதனையில் பொறியியல் மாணவனான வரப்பிரகாஷ் என்ற மாணவன் பகிடிவதை, மிருகவதை ஆகியதால் இறந்துபோனான் எனக்கேட்டு ஆத்திரத்தில் உதயனுக்கு நான் எழுதிய பகிடிவதை பற்றிய கட்டுரையுடன் சமகாலநடப்பு தொடர்பாக, வெளியப்பiடான ஒரு எழுத்தாளனாக நான் உருவாகினேன். அந்த கட்டுரை அப்போதைய யாழ்ப்பாண பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாவர்கள் மத்தியில் (பலரும் எனக்கு தெரிந்தவர்கள்) ஒரு அலையினை ஏற்படுத்தி, ஒருவாரம் நான் ஒழிந்துதிரிந்த காலமது.


அதன்பின்னர் உதயன்பத்திரிகையில் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். அதேபோல ஈழநாதத்திலும், தின முரசிலும், எனது சில கட்டுரைகள், கவிதைகள், கதைகள், சொந்தப்பெயரிலேயே வெளிவந்தன.
அதன்பின்னர் பல்கலை உயர்கல்விக்காக நான் கொழும்பு வந்து, சிலகாலங்கள் கல்வியுடன் போனதால் எழுதும் வாய்ப்பு குறைந்தது. அதன் பின்னர் சுடர் ஒளி பத்திரிகை வரவைத்தொடர்ந்து பல ஆக்கங்கள், அனேகமாக அரசியல் ஆக்கங்களை எழுதினேன்.
மற்றப்பக்கம் என் கல்வித்தேடல் சட்டம், சமுகவிஞ்ஞானம் என்று போய்கொண்டிருந்தது. இயல்பாகவே ஊடகத்துறைமேல் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு செய்தி ஆசிரியராக, தயாரிப்பாளராக, சங்சிகை ஒன்றின் ஆசிரியராக, செய்தி இணையம் ஒன்றின் அமைப்பாளராக, அசிரியராக, சர்வதேச ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராக, இலங்கைக்கு அப்பாலும் உள்ள எழுத்து ஊடங்களின் கட்டுரை அசிரியராக, இணைய எழுத்தாளனாக என பல பாத்திரங்களுக்கு ஊடகம் என்னை இட்டுச்சென்றது. சில கட்டங்களில், தயாரிப்பு, ஸகிரிப்ட் எழுதல், நிகழ்ச்சி வழங்கல், ஒளித்தொகுப்பு, பொன்ற பலவேலைகளும் தனி ஆளான என்மீது விழுந்தவைகளும் உண்டு. அனேகமாக அப்போதெல்லாம் எனது சொந்தப்பெயரில் எந்த ஆக்கத்தினையும் எழுதவில்லை, கல்கி, மேகநாதன், நல்லைமைந்தன் ஆகிய பெயர்களில் எழுதிவந்தேன்.

பல காலங்களாகவே நண்பர்கள் வலைப்பதிவு ஒன்றை எற்படுத்தி எழுதுமாறு சொல்லி வந்தனர் நானும் 2003 தொடக்கம் பல புளக்களை பல பெயர்களில் தொடங்கி, பின்னர் அப்படியே கைவிடப்பட்ட வரலாறுகளே பெரும்பாலும் உண்டு. இந்த நிலையில்த்தான் எனது சொந்தப்பெயரிலேயே சுய முகவரியுடன் இந்த வலைப்பதிவை தொடங்கினேன். வேலைப்பழுக்களிலும், கற்றல் நடவடிக்கைகளுக்கும், குடும்பவிடயங்களுக்கும் இடையில் பிரச்சினை இல்லாமல் இந்த வலைப்பதிவு மட்டும் போய்க்கொண்டிருக்கின்றது, இந்த மூன்றுமாதங்களில் ஐம்பதாவது பதிவை தொட்டு நிற்பதும் எனக்கே பாரிய ஆச்சரியமாகவே உள்ளது.

உண்மையினைச்சொல்லப்போவதென்றால் பெரும்பாலான பதிவுகளை நான் பதிவேற்றும்போது பெம்பாலும் நேரம் நள்ளிரவு 12 மணியினை தாண்டியிக்கும். இருப்பினும் இந்த வலைப்பதிவில் எனது எழுத்து நடையினையே மாற்றி நான் பதிவிடுகின்றேன் என்பது உண்மைதான். ஏன் எனின் எனது முன்னைய பத்திரிகை மற்றும் பிரபல கணினிவலைப்பதிவு முகவரியில் நான் கைக்கொளும் எழுத்து நடையினை இதில் கைக்கொள்ளவில்லை. பல நண்பர்கள் இதனை என்னிடம் கேட்டுள்ளனர். காரணம் வலைப்பதிவுகளில் பலதரப்பட்டவர்களும் உலாவருவார்கள் என்பதால் எழுத்துக்கள் மிக எழிமையாக இருக்கட்டும் என மூத்த இலக்கியவாதி ஒருவர் எனக்கு அறிவுரை கூறியதால் மட்டுமே.


இதேவேளை இந்த வலையமைப்பில் தொடர்ந்தும் எனக்கு உறுதுணையாக அபிப்பிராயங்களை தெரிவிக்கும் நண்பர்கள், அதிக பின்னூட்டம் இடும் நண்பர்களான பிரதீப், அபர்ணா, மனோன்மணி, நிஜாம், மருத்தவர்.முருகானந்தம், கவிஞர்.எதுகைமோனையான், நண்பர் கோபி மற்றும் நான் யூதர்கள் -தமிழர்கள் என்ற பதிவை இட்டுவந்தபோது என்னுடன் மின்- அஞ்சல்வாயிலாக பல விடயங்கள் குறித்து அராய்ந்து ஆதரவு தந்த பல நாடுகளில் இருந்த தமிழ் இளையோர் அமைப்புக்கள், என் கட்டுரையினை அனைவரினதும் கண்ணுக்கு படவைத்த தமிழ்த்திரட்டிகள் அனைவருக்கும் இந்தநேரத்தில் என் நன்றிகள்.

அடுத்து இப்போது முக்கியம் பெற்றுள்ள ஒரு செய்தி இலங்கை பதிவாளர் சந்திப்பு. இது மிக மிக வரவேற்கத்தக்க ஒன்றே. இலங்கை பதிவர்கள் அனைவருக்கும் உரிய கௌரவத்தை கொடுத்து, ஒரு வட்டத்தினர், ஒரு குழுவினரின் ஆதிக்கத்தினுள் அந்த அமைப்பினை வைத்திருக்காமல் அனைத்து பதிவாளர்களின் கருத்துக்களுக்கும் உரிய கௌரவம் அளித்து இந்த சந்திப்புக்கள், தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில் ஆக்கபூர்வமாகன கருத்தரங்குகள், இலக்கிய முயற்சிகளுக்கு வழிகோருவார்கள் என நம்புகின்றேன். தற்போது நான் சென்னையில் இருப்பதாலும் அவர்கள் குறிப்பிட்ட நாளை அண்டிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் உள்ளதாலும் இந்த கலந்துரையாடலுக்கு சமுகமளிக்க என்னால் முடியவில்லை என்பது மனவேதனையே. ஐம்பதை தொட்டு விட்ட என்பதிவுகள் 5000களை தாண்டும்வரை இயற்கையும், என் தன்னமிக்கையும், எனது மனமும், நண்பர்களாகிய நீங்களும் எனக்கு ஒத்துளைப்பீர்களாக..

Tuesday, August 11, 2009

ஆசியாவை மையப்படுத்தியுள்ள நிலநடுக்கங்கள்.


2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி ஆசியாவை மட்டும் இன்றி முழு உலகத்தையும் உலுக்கிவிட்ட சுனாமித்தாக்கத்தின் பின்னர் குறிப்பாக ஆசிய மக்களிடம் இயற்கை அனர்த்தப்பீதி அதிகரித்துவந்துவிட்டது என்பதே உண்மை. ஏனென்றால் அந்த பாரிய தாக்கத்தின் கொடூரம், பார்த்துக்கொண்டிருக்க ஒரு கணப்பொழுதில் பலர் காவுகொள்ளப்பட்டமை, பல கடற்கரைக்கிராமங்களே முழுவதுமாக சுனாமி அலைகளால் விழுங்கப்பட்ட பீதியில் இருந்து உண்மையில் மனதளவில் மக்கள் இன்னும் மீளவில்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் அன்று கடலடி நில நடுக்கம் ஏற்பட்ட யாவா, சுமாத்திரா, மற்றும் இந்தோனேசியாவுக்கு இடைப்பட்ட இடங்களில் இன்றும் அப்பப்போ 4 ரிக்டர் தொடக்கம் 7 தொடக்கம் தசங்கள் கொண்ட ரிக்டர்வரை நில அதிர்வுகள் இடம்பெற்றவண்ணமே உள்ளன.
ஏதோ மிகப்பெரும் ஆபத்து நிறைந்த கொடுங்கடல்மேல் நாம் பயணிப்பதுபோன்றும், எந்தநேரமும் 2004 ஆம் ஆண்டு போலவோ அதைவிட மோசமாகவோ நாம் காவுகொள்ளப்படலாம் என்ற உள்ளுனர்வு எச்சரிப்புக்கள், சில ஆரூடங்கள் என்பவற்றை கேட்டுக்கொண்டே, மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கை என்ற அச்சில் தமது அன்றாட நடவடிக்கைகளில் இவற்றை மறந்து சுழன்றுகொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில்த்தான் தற்போது ஆசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவை பேரளிவு ஒன்றுக்கான இயற்கையின் எச்சரிப்புக்களா? அல்லது சாதாரணமான நிலத்தடி தகட்டசைவின்போது எற்பட்ட ஒரு சிறு அதிர்வா? என புரிந்துகொள்ளமுடியாமல் மக்கள் அச்சமடைந்துபோயுள்ளனர். சாதாரண நிகழ்வுகள்தான் என்று பேசாமல் இருப்பதற்கும் எவரது மனதும் இடம்கொடுப்பதாய் தெரியவில்லை.
எது எப்படியோ இவ்வாறான ஆக்ரோசமான இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டி அறியக்கூடிய நிலையில் மனிதன் இன்று ஓரளவுக்கு முன்னேறியிருக்கின்றபோதும், அந்த இயற்கை அனர்த்தங்களை வெற்றிகொள்ளும் அளவுக்கு மனிதனோ அவனது விஞ்ஞானமோ முன்னேறவில்லை என்பதே உண்மை.


நேற்றிரவு அந்தமான் கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்தியா, தாய்லாந்து, மியான்மர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நாடுகளிலும் இன்று அதிகாலை வரை மக்களிடம் பீதி காணப்பட்டது. உண்மை என்னவென்றால் நள்ளிரவு என்பதால் அதிகமானவர்களுக்கு
விடியும்வரை என்ன நடந்ததென்பதே தெரியாது.

இந்தியாவைப்பொறுத்தவரை நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த கடல் பகுதி இந்தியாவில் இருந்து 1200 கி.மீ. தொலைவில் உள்ளது. என்றாலும், சென்னை, நாகை, கடலூர், ஐதராபாத், திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா நகரங்களில் நிலநடுக்க பாதிப்பு இருந்தது. இதேவேளை இலங்கையிலும் சில பகுதிகளிலும் இலேசான நில அதிர்வினை உணரக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரிசாவில் தலைநகர் புவனேஸ்வரிலும்; நிலநடுக்க தாக்கம் இருந்தது இன்று காலையில் தெரியவந்தது. புவனேஸ்வர் நகரை நிலநடுக்கம் அடுத்தடுத்து இரண்டு தடவை குலுக்கி எடுத்துள்ளது. உயரமான கட்டிடங்கள் சுமார் 20 வினாடி ஆடின. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். இந்திய கடலோர நகரங்களில் எங்கெங்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள் என இந்திய அனர்த்த மையம் அறிவித்துள்ளது.


நிலநடுக்கத்தின் மையப்பகுதி தாய்லாந்து நாட்டில் இருந்து 825 கி.மீ. தொலைவில் இருந்தது. பாங்காங் நகர கட்டிடங்கள் லேசாக குலுங்கின.
அது போல 365 கி.மீ. தொலைவில் உள்ள மியான்மர் நாடும் நில நடுக்கத்தால் குலுங்கியது. வங்கதேசத்தை பொறுத்தவரை கட்டிடங்கள் குலுங்கவில்லை. பெரிய அளவில் நிலநடுக்கம் உணரப்படவில்லை.
என்றாலும் சுனாமி அலைகளால் ஆபத்து உள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருந்ததால் அந்த நாட்டு மக்களிடமும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சுனாமி தாக்குதலின்போது அதிக உயிர்களை பறிகொடுத்தது இந்தோனேசியாதான். எனவே இந்தோனேசியா மக்களிடம் அதிக பீதி காணப்பட்டது. சுனாமி எச்சரிக்கையை அறிந்ததும், மக்கள் கூட்டம், கூட்டமாக மேடான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் சுனாமி தாக்கம் எற்படாது என்று இந்தோனேசியா அரசு மக்களிடம் அமைதி ஏற்படுத்தியது. என்றாலும் மீண்டும் நிலநடுக்கம் வரும் என்று இந்தோனேசியா மக்கள் பீதியுடன் உள்ளனர்.

இதேவேளை தமிழக மீனவர்கள் கடலில் ஒரு மாற்றத்தை அவதானித்ததாகவும், வழக்கத்தினைவிட நேற்று மிக அதிகமான மீன்கள் அவர்களின் வலைகளில் பிடிபட்டதாகவும் ஆழமான கடல் பகுதியில் காணப்படும் மீன்கள் கூட 500 அடி தூரத்திலேயே தமது வலைகளில் சிக்கியமை தமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இந்தக்கதை இப்படி இருக்க ஜப்பான் நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் நேற்றிரவு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் டோக்கியோவில் இருந்து 90 மைல் தொலைவில் ஷிசோகா கடலோரத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலுக்கு 6.6 புள்ளியாக அது பதிவாகி இருந்தது.
நில நடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 14 மைல் தொலைவில் இருந்தது. நிலத்தின் மேற்பரப்பில் உண்டான இந்த நில நடுக்கம் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்தன. உயரமான கட்டி டங்கள் காற்றில் தென்னை மரம் சாய்வது போல சாய்ந்து மீண்டன. இதனால் உயரமான கட்டிடங்களில் வசித்தவர்கள் உயிரை காப்பாற்றக்கோரி அலறினார்கள். வீடுகள், கடைகளில் அடுக்க வைக்கப்பட்டிருந்த பொருட்கள் உருண்டன.
வீட்டின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்து நொறுங்கின. இத்தகைய சம்பவங்களில் சுமார் 85 பேர் காயம் அடைந்தனர்.
2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மின்சாரம் தடைபட்டது. மின்சாதன பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக ரெயில் பாதைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் ரெயில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. டோக்கியோ, நகோயா நகரங்களுக்கு இடையே ஓடும் புல்லட் ரெயிலும் நிறுத்தப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. அதை நிரூபிப்பது போல ஷிசோகா மாகாண கடலோரங்களில் சிறிய அளவில் பேரலைகள் வந்து தாக்கின. கடல் நீர் மட்டம் 40 செ.மீ. அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. இந்த சுனாமி பெரிய அளவில் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
என்றாலும் 12 பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கையை ஜப்பான் திரும்பப் பெற்றது.
(செய்திகள் - மாலைமலர்)

ஜப்பானில் நில நடுக்கம் சம்பந்தமான படங்களை கீழே பாருங்கள்…






















Monday, August 10, 2009

தமிழ்நாடு மதிப்பளிக்கும் சர்வக்ஞர்!


நேற்று ஒன்பதாம் நாள், ஓகஸ்ட் மாதம் 2009ஆம் அண்டு ஆன திகதியில், கர்நாடக மாநிலம் பெங்களுரில் திருவள்ளுவர் தரிசனத்தை தொடக்கிவைத்துள்ளார் தமிழகத்தின் முதலமைச்சர்.மு.கருணாநிதி அவர்கள்.
1991 ஆம் ஆண்டு பெங்களுர் தமிழ்ச்சங்கத்தினால் அமைக்கப்பட்டு, அப்போதிருந்த கர்நாடக முதலமைச்சர் பங்காரப்பா திறந்துவைப்பதாக இருந்த இந்த ஐயன் திருவள்ளுவர் சிலை கன்னட அமைப்புக்களின் கண்டனங்கள், சிலை திறக்கப்படக்கூடாது என்ற விடாப்பிடியான செயற்பாடுகளால் இன்றுவரை தள்ளப்போகியவாறே.. வந்து இறுதியில் இங்கு நீ, அங்கு நான் என்ற ஒப்பந்த அடிப்படையில் திருவள்ளுவரும், சர்வக்ஞரும், மாறிவந்து சிரித்துக்கொண்டு நிற்க, இருக்கப்போகின்றார்கள்.
முத்தமிழை வித்தவர் ம்ஹ_..ம்….மன்னிக்கவும் முத்தமிழ் வித்தகர் மு.கருணாநிதி அவர்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை திருவள்ளுவருக்கு சிலை வைக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கின்றதோ என்னமோ தெரியவில்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதில் குற்றமும் இல்லைத்தான்.
ஆனால் ஈழத்தில் எங்களைக்காப்பாற்றுங்கள், என்று சதைதொங்க, பாதி எலும்புடன் குண்டுகள் விழ, எழுந்த தன் இனத்தின் மரண ஓலத்தை காதுகளில் விழுத்தாமல் இருந்த ஒருவரால், தன் தமிழ்நாட்டு மீனவர்களையே காப்பாற்றமுடியாமல் இருப்பவரால், ஈழத்தில் இன்றும் காயாத அந்த இனப்படுகொலைகளுக்கு ஒருவிதத்தில் காரணமானவர் என்ற கறைபடிந்த இரத்தக்கைகளால் அந்த ஐயன் திருவள்ளுவரின் சிலையினை திறந்துவைக்க அவருக்கு இப்போது தகுதி உள்ளதா என்பதே உலகத்தமிழர்கள் அனேகமானவர்களின் கேள்வியாக உள்ளது.
ஒருவிதத்தில் கலைஞரைவிட ஒருபடி மேலாக 1991ஆம் ஆண்டு நிறுவப்படத்தயாராக இருந்த இந்தச்சிலை பெங்களுரில் திறக்கப்படவேண்டும் என கன்னட நடிகர் ராஜ்குமாரைக்கடத்தியபோது வீரப்பன் அவர்கள் தனது கோரிக்கைகளில் முக்கிமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி..விடயத்திற்கு வருவோம் மாற்றுச்சிலைவைப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் எதிர்வரும் 13ஆம் நாள், சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள எல்.ஐ.சி.நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள யுனைட்ரட் இந்தியா கொலினியில் உள்ள பூங்காவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவினால் சர்வக்ஞர் சிலை திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யார் இந்த சர்வக்ஞர்? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும் என்பதால் இது பற்றி பதிவில் இடலாமே என்று, வலையமைப்பிலும், நூலகத்திலும் தேடிக்களைத்ததுதான் மிச்சம். எனக்கு தெரிந்தது என்னமோ தமிழும், ஆங்கிலமும் என்பதனால் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில இடங்களில் அவர் பற்றிய தகவல்கள் கிடைத்தது. முக்கிமாக பல தடவைகள் உதவி செய்வதுபோல இந்தத்தடவையும் விக்கிபீடியாவே குறைந்த பதிவுகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் உதவி செய்தது. கன்னடம் தெரிந்திருந்தால் கண்டிப்பாக அவர் பற்றிய முழு தகவல்களையும் அறிந்திருக்க ஏதுவாக இருந்திருக்கும்.


அறிவிலிக்கு அறிவுரை கூறுவதன் விளைவு
கருங்கற்பாறைமேல் நூறுவருடங்கள் மழைபொழிவதாம்
இதில் ஏதுபயன் அறிவீரோ பாரீர்?

யாவருக்குமே யாதும் தெரியாதே, அறிவதும் கொஞ்சமே
வாழ்வியல் எனும் வேதியலுக்கு எவருக்கும் உத்தரவாதம் இல்லை
அறிவு எவருக்கும் விற்பனைக்கு இல்லை.

நாம் அனைவரும் ஒரே மண்ணை மிதிக்கிறோம்
ஒரே நீரை குடிக்கிறோம்,அடுப்புத்தீயும் பிரிப்பதில்லை
எங்கிருந்து சாதி வந்தது கடவுளே.

தீண்டத்தகாதவர் வீட்டில் விழும் ஒளியும் தீண்டத்தகாததா?
மேலோர்,கீழோர் எனப்பேசாதீர்;
கடவுள் அருள் பெற்றவனே மேன்மையானவன்.

அரியோ பன்றியாக திரிந்தார்,அரனோ பிச்சையெடுத்து திரிந்தார்,
பிரமன் தலையோ கிள்ளப்பட்டது
இவர்கள் விதியை விதித்தவர் யார்.

இதுபோன்ற தேடுதல்களின்போது கிடைக்கத்தக்க தமிழுக்கு மொழிமாற்றப்பட்ட பெரும்பாலும், கன்னடத்தில் இந்து ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டு, பின்னர், ஆங்கிலத்தில் இருந்து அண்மையில் தமிழுக்கு மொழிமாற்றப்பட்ட அவரது செய்யுள்கள் மூலம் அவர் தமது படைப்புக்களை ஒவ்வொன்றும் மூன்றுவரிச்செய்யுள்களாகவே புனைந்திருப்பது புரிகின்றது.
அத்துடன், அவர், கவிஞராக மட்டும் இன்றி அவரது செய்யுள்களின் மூலம் முற்போக்குச் சிந்தனையாளர், தத்துவவாதி, புரட்சிகர சிந்தனை உடையவர் என்று தெரியவருகின்றது.
தீண்டாமையினை எதிர்க்கும் அவரது செய்யுள்மூலம் அவர் ஒரு முற்போக்கு சிந்தனைவாதியாகவும், யாருக்கும் யாதுமே தெரியாதே என்ற செய்யுள்மூலம் அவர் ஒரு தத்துவவாதியாகவும், அரி, அயன், பிரமன் தலைவிதிகள் பற்றிய செய்யுளில் இவர் ஒரு நாத்திகராகவும் என பன்முகப்படுத்தப்பட்ட ஒருவராக தெரிகின்றார்.


அவரைப் பற்றியும் அவரது வாழ்க்கையை பற்றியும் கூடுதல் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அவரது மொழிநடையையும் அவரைப்பற்றிய பிற அறிஞர்களின் குறிப்புகளையும் கொண்டு அவர் பதினாறாம் நூற்றாண்டின் பின்பகுதி அல்லது பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார்.
அவரது இயற்பெயர் புசுபதத்தா என்று அவரது செய்யுள்கள் சிலவற்றில் உள்ள குறிப்புகள் மூலம் கணிக்கின்றனர். அவர் தந்தை ஓர் விதவை குயவர் பெண்ணை மணம் புரிந்து பிறந்த குழந்தையுடன் காசிப்பயணம் மேற்கொண்டார். இதனால் சர்வக்ஞர் நாடோடி துறவியாகவே வளர்ந்தார். இவரது படிப்பற்றவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான பாடல்கள் ஏழை மக்களைச் சென்றடைந்து மிகவும் வாய்மொழியாகவே பரவியது. தற்போது ஏறத்தாழ இரண்டாயிரம் செய்யுள்கள் 47 அல்லது 49 தலைப்புகளில் கிடைத்துள்ளன. இரண்டு அச்சு செய்யுள்கள் ஒன்றுபோல இருப்பதில்லை. தவிர இடைச்செருகல்களும் உள்ளன. அவை சமயம், பண்பாடு, ஒழுக்கம், குமுகம் என்ற பொருட்களில் உள்ளன.
அனேகமாக சமயம் சம்பந்தமாக இவர் கூறியதாக பின்னால் வந்தவர்களால் பல சொருகல்கள் நடந்திருக்கின்றன என்பது மட்டும் உண்மை. நாத்திகம் கொப்பளித்த இவரது செய்யுள்களில் இடைக்கிடையே கடவுள்கள் பற்றி போற்றுதல் தெரிவது இதையே குறித்து நிற்கின்றது.

எது எப்படியோ, வள்ளுவருடன் இவரை ஒப்பிடுவதா? வள்ளுவர் அளவுக்கு இவர் உயர்ந்த கருத்துக்களை சொல்லி இருக்கின்றாரா? என தற்போது பலரிடம் தொடங்கியுள்ள விவாதங்கள் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை. ஏனெனில் இந்தப்பாளாய்ப்போன அரசியல் நலங்களுக்காகவே இந்தப்பாளாய்போன சிலைமாற்றுத்திட்டங்கள் இடம்பெறுகின்றதே தவிர இவர் அளவுக்கு அவர் சிறந்தவர் என்ற எண்ணத்தில் அல்ல. அத்தோடு எந்த மொழிக் கவிஞன் என்றாலும் அந்த கவிஞனின் கவித்துவத்தையும் வரவேற்று மதிப்பளிப்பதே தமிழர்களின் பண்பாடு. அந்த ரீதியில் சர்வக்ஞர் தமிழ்நாட்டிற்கு சிலையாக எழுந்து நிற்க எடுக்கப்பட்ட முறை தவாறக இருந்தாலும், அவருக்கு மதிப்பளித்தல் பிழையாகாது.

Sunday, August 9, 2009

பேராசிரியர் பெரியார்தாசன்…தமிழின் சாட்டை


பேராசிரியர் பெரியார்தாசனுக்கு அறிமுக உரை தேவையில்லை. பேராசிரியர் பெரியார்தாசன் பற்றி உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்களும் அறிந்திருப்பார்கள்.
ஆணித்தரமான தனது கருத்துக்களால் அழுத்தமாக உரையாற்றும் ஒரு பேச்சாளர், எத்தனை மணித்தியாலங்கள் என்றாலும் சுற்றியிருக்கும் கூட்டத்தினரை தன் பேச்சுக்களால் கட்டிப்போடவல்ல ஒரு இலாவகம் நிறைந்த சிந்தனையாளர், தன்னம்பிக்கை சுயமுன்னேற்றத்தை ஊட்டும் பேச்சுக்களால் இளைஞர்களுக்கு பின்னால் ஒரு தூண்டுகோலாக இருந்துவருபவர். தமிழை இகழ்வோருக்கும், பார்ப்பனிய தந்திரக்கொள்கை, இந்திய கொள்கைவகுப்பாளர்களுக்கும் ஒரு அச்சப்படாத சாட்டை அடி கொடுப்பவராகவும், ஒரு பேராசிரியராகவும், மூட நம்பிக்கைகளை அழித்தல், மற்றும் முற்போக்கு சிந்தனைகளுக்கான ஒரு முனைவனாகவும் என்று தெரிந்தது மட்டும் அன்றி, இயக்குனர் இமையம் பாரதிராஜா இயக்கிய “கருத்தம்மா” திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து, தேசிய விருதுபெற்ற நடிகராகவும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
பார்ப்பனியம் சார்ந்த ஏடுகளிலும், முக்கியமாக பார்ப்பனிய கொள்கை திணிப்பாளர் இந்து பத்திரிகையின் ராமின் செய்திகளில், கட்டுரைகளில் இவர் பற்றி தாறுமாறாக எழுவதில் இருந்து பார்ப்பனியத்திற்கு இவர்மீது உள்ள வஞ்சகமான கோபங்கள் தமிழர்களுக்கு புரிந்திருக்கும்.
“ஒரு துறையில் செல்ல வேண்டும் என்கிற முனைப்பு, வெல்ல வேண்டும் என்கிற வெறியாக மாறினால் இந்த இடர்பாடு இல்லை. எல்லோரும் பங்கேற்கும் துறையில் தன் இலட்சியத்தை நோக்கி மனிதன் செல்ல வேண்டுமே தவிர அடுத்தவர்களை வீழ்த்துவதில் கவனம் செலுத்துவது ஆக்கப்பூர்வமாகாது” என்ற கருத்தினை அணித்தரமாக சொல்பவர் என்பது மட்டும் இன்றி தனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் அப்படியே வாழ்ந்தவர்.


சுட்டுப்போட்டாலும் இவனுக்கு சரிவராது என்று இவரை கேவலப்படுத்தியவர்களுக்கே அவர்களை சுட்டிக்காட்டும் வகையில் தன் விடாமுயற்சியால் உயர்ந்து அவமானப்படுத்தியவர்களின் தலைகளை குனியச்செய்தவர். இன்று உலகம் போற்றும் பேச்சாளராக இருந்தபோதிலும் இளமைப்பருவத்தில் அவருக்கு இருந்த திக்குவாயினை ஒரு குறையாக நினைக்காமல் தான் எதிர்காலத்தில் பெரிய பேச்சாளனாக வரவேண்டும் என கடுமையான பயிற்சிகளை செய்து திக்குவாயினை போக்கி இன்று உயர்ந்த நிலையில் உள்ளார்.
பெரியாரை பார்க்கும், அவரை வாழ்த்தி கவிதை பாடும் அவசரத்திலேயே சேஷாசலம் என்ற அவரது இயற்பெயர் பெரியார்தாசன் ஆனது. பெரியாரைப்போலவே… “தனது கருத்து என்பதற்காக தனது பேச்சினை அனைவரும் ஏற்றாகவேண்டும் என்ற எண்ணம் ஒரு துளியும் இன்றி தனது பேச்சுக்களையும் உங்கள் அறிவினால் திறனாய்வு செய்து பாருங்கள் என்ற எண்ணத்தில் உள்ளவர்”.

“தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கே உரிய ஒரு குணம், அவர்கள் தமக்கான ஒரு நிலையினை எடுத்தவுடன் புதிதாக வருபவர்களுக்கு, முன்னுக்கு வருபவர்களுக்கு இடம்கொடுப்பதில்லை” அனால் பேராசிரியர் பெரியார்தாசன் வித்தியாசமானவர். பலபேர் முன்னுக்குவர ஏணியாக இருந்தவர். இன்றைய பிரபலங்கள் பலரை தன் கையால் அரவணைத்து வழர்த்துவிட்டவர். தான் சிகரங்களில் இருந்தாலும்கூட, புதிதாக ஒருவன் சிகரத்திற்கு வர எண்ணி இரண்டு எட்டு வைத்தாலும் ஓடிவந்து அவனுக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்பவர்.


இத்தனையும் மற்றவர்கள் மூலமாகவும், சில நூல்கள், பதிப்புக்கள் வாயிலாகவும் நான் அவரைப்பற்றி அறிந்தவைகள். சென்னையில் ஏழும்பூரில் இடம்பெற்ற ஒரு இலக்கிய ஒன்றுகூடல் ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்து. அங்கு இலக்கியச் சொற்பொழிவாற்ற வந்த அவரை நேரடியாக கண்டு, அதன் பின்னர் சில மணித்துளிகள் அவருடன் பேசும் சந்தர்ப்பமும் கிடைத்து. நான் ஒரு ஈழத்தவன் என்பதால் இன்னும் ஒருபடி நெருங்கியே வந்தார் என்றுதான் கூறவேண்டும். ஈழ அவலங்கள் பற்றி மனமுருகினார், ஈழத்தமிழர்கள், அவர்களது போராட்டம் தொடர்பாக, ஒரு தமிழின உணர்வாளராக இருந்து அவர் குரல்கொடுப்பது அனைவரும் அறிந்த விடயமே, எனவே அவரின் அந்த பரிதவிப்பில் எந்த மாசும் தெரியவில்லை.
எழுத்துக்கள் பற்றியும், ஈழத்து இலக்கிய நிலை பற்றியும் என்னிடம் கேட்டார். “உங்களால் இலங்கையில் இருந்துகொண்டு மனதில் உள்ளதை எழுதமுடியாது என்பதை நான் அறிவேன் என்றார்” தனது வாகனத்தின் ஏறிச்செல்லும்வரை என்னுடன் ஆர்வமாகப்பேசினார். நான் எட்டாம் ஆண்டு படிக்கும்போது எனது கல்லூரி நூலகத்தில் எதேட்சையாக எடுத்து வாசித்த ஒரு சஞ்சிகையில் (அனேகமாக ராணி என நினைக்கின்றேன்) உன்னால் முடியும் தம்பி என்ற தலைப்பில் பேராசிரியர் பெரியார்தாசன் பேச்சு..என்று இருந்து, அதைப்படித்தபோது எனது மனது முதற்தடவையாக அறிந்த அந்தப்பெரியமனிதர், என் தோழில் கைபோட்டு நின்று என்னுடன் பேசி, தட்டிக்கொடுத்துவிட்டுப்போனதை நினைக்கையில் நெஞ்சுபெருமிதம் கொள்கின்றது.


நான் நேரடியாக கேட்ட அவர் பேச்சின் சுவாரகசியமான ஒரு கட்டத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன்.
பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றியபோது பி.யூ.சி. மாணவர்களுக்கான தமிழ் இலக்கியப்பரீட்சை நடந்துகொண்டிருந்தபோது அந்த பரீட்சையின் கண்காணிப்பாளராக பெரியார்தாசன் அவர்கள் இருந்தார்கள்.
அங்கே “அசோகவனத்தில் சீதையின் நிலை என்ன?” என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்ததாம். முழுமாணவர்களும் அவசரமாக விரைவாக எழுதிக்கொண்டிருந்தனராம். ஆனால் கறுப்பாக இருந்த ஒரு மாணவன் மட்டும் பேனாவை முகவாயில் வைத்து எதையோ கடுமையாக யோசித்தவண்ணம் இருந்தானாம். என்னடா இவன் அப்போது தொடக்கம் பேசாமல் இருக்கின்றானே என எண்ணி, அவன் அருகில் போய் நின்றுபார்த்துவிட்டு, முதுகில் தட்டி, எழுதப்பா என்றுவிட்டுப்போனராம் பேராசியர் பெரியார்தாசன். மீண்டும் அந்த மாணவன் அதேபோல சிந்தனையில் இருக்க அவனது விடைத்தாளை வாங்கிப்பார்த்தாராம்,
அதைப்பார்த்தும் அதிர்ந்துவிட்டாராம், காரணம் அதில் இருந்தது,

“அசோகவனத்தில் எல்லா மலர்களும் சிரித்துக்கொண்டிருந்தன, ஒரு மலர் மட்டும் வாடிக்கொண்டிருந்தது” என எழுதியிருந்தானாம் அந்த மாணவன்;.
உடனயடிhக அந்த மாணவனிடம் “தம்பி கவிதை நல்லா எழுதுவீகளோ?” என கேட்டுவிட்டு கல்லூரி அதிபரிடம் அவனைக்கூட்டிச்சென்று விடைத்தாளை காட்டிவிட்டு. சிரி நன்றாக கவிதை எழுதுவாய் போல இருக்கிறது. எங்கே ஒரு கவிதை சொல்லு எனக்கேட்டாராம். ஏற்கனவே பயந்துபோயிருந்த அந்த மாணவன், ஏற்கனவே பேரறிஞர் அண்ணாவைப்பற்றி ஒரு கவிதை வைத்திக்கின்றேன் சேர் அதை பாருங்கள் என்று ஒரு மடலைக்காண்பித்தானாம்; அதில்,
“ஆயதோர் காலையில் ஆலய வீதியில்
நாயகனே உன் நாத்திகம் கேட்க
தெய்வங்கள் எல்லாம் தேரினில் வந்தன…
என எழுதப்பட்டிருந்தன. உடனடியாக அதை பார்த்த பெரியார்தாசன் ஏன் தம்பி நாத்திகம் என்று எழுதுகின்றாய், ஆனால் அங்கே தெய்வம் எல்லாம் தேரில் வந்தனவே எனறு எழுகின்றாயே என்று கேட்டாரம், அதற்கு அந்த மாணவன் அடுத்த வரியினை பாருங்கள் சேர் என்றானாம். அடுத்தவரி
பொய்தான் தாமெனப் புலம்பிப் போயின” என எழுதப்பட்டிருந்தனவாம்…
ஆக…
“ஆயதோர் காலையில் ஆலய வீதியில்
நாயகனே உன் நாத்திகம் கேட்க
தெய்வங்கள் எல்லாம் தேரினில் வந்தன
பொய்தான் தாமெனப் புலம்பிப் போயின”
என இருந்ததாம் அந்த கவிதை. இப்போது நீங்களும் ஊகித்திருப்பீர்களே அந்த மாணவன் வேறு யாரும் அல்ல கவிப்பேரரசு வைரமுத்துவே.

Friday, August 7, 2009

இன்றே மணிமுடி களையப்படும் நாளைய மன்னர்கள்.


இன்றைய சிறுவர்களே நாளைய எதிர்காலம்!, நாளைய எதிர்காலத்தின் சிப்பிகள் அவர்களே!! என்பதுபோன்ற பலதரப்பட்ட பேச்;சுகளை நாம் மேடைகளிலும், அரசியல் கட்சி தலைவர்களுடைய திருவாய்களில் இருந்துவம் மொழிகளில் இருந்தும் கேட்டிருப்போம். அனால் இன்று குறிப்பாக தென்னாசிய நாடுகளில் சிறுவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசடைந்துசெல்வதாக அண்மைய சர்வதேச அமைப்பு ஒன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பாலியல் ரீதியான சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள், சிறுவர் வேலைக்கமர்த்தல் நடவடிக்கைகள், சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தல், சிறுவர் போராளிகள் என இன்றைய உலகில் பச்சிளம் பாலகர்கள் திரும்பிய இடங்களில் எல்லாம் மேற்படி உருவெடுத்திருக்கும் பூதங்கள் வாயை பிழந்தவண்ணம் உள்ளன.
உலகம் நாயகரிகம் அடைந்து செல்வதாக கூறிக்கொண்டாலும், மறுபக்கம் நாகரிகம் அடையாத மனிதன் செய்யாமல் இருந்த இனச்செயல்களைக்கூட இன்றைய மனிதன் செய்துவரும் நிலைமைகளை நாம் காணாமல் இருக்கமுடியாது. புதினப்பதிரிகைகளை இன்று தூக்கியவுடன், சிறுவர்சம்பந்தமாக, சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக எதாவது ஒரு செய்தி வராமல் இருப்பதில்லை. அந்த அளவுக்கு இன்று உலகெங்கும் சிறுவர்கள் அடக்குமுறைகளுக்குள் அளாகியவண்ணம் உள்ளனர். சிறுவர்களுக்கே உரிய உணர்வுகள். எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கை துளிர்விடம் சிந்தனைகள், சந்தோசங்கள், என்பவை அவர்களிடம் இருந்து மழுங்கடிக்கப்படுவதனால், நாளைகள் மீது ஒரு நம்பிக்கை இல்லாத விரக்தியுடனேயே அவர்கள் வழர்ந்துவருவதும்; நாளை பெரும் அபாயத்தை ஏற்படுத்திவிடும்;. நிச்சயமாக அப்படி வழரும் குழந்தைகள், தமக்கு மட்டும் இன்றி சமுதாயத்திற்கும் ஆபத்தாகும் சந்தர்ப்பங்கள் பல உண்டு என பிரபல மனோதத்துவ நிபுணர்கள் திரும்பத் திரும்ப சொல்லிவருகின்றனர்.


இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற கோட்பாட்டிற்கிணங்க ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் சிறுவர்கள் கைகளில் தான் தங்கியுள்ளது. சிறுவர் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் தங்களைத் தனித்து வழிநடத்திச் செல்லக்கூடிய ஆற்றல் அற்றவர்களாகக் காணப்படுகின்றார்கள். மனித வாழ்க்கையில் சிறுவர்கள் பராயமானது மிக முக்கியமான பருவமாகக் காணப்படுகின்றது. இப்பருவத்தில் இவர்கள் பெரியவர்களின் வழிகாட்டல், அன்பு, ஆதரவு என்பவற்றினை வேண்டி நிற்கின்றனர். பிள்ளைகளின் ஆளுமை முழுமையாக வளர்ச்சியடைவதற்கு அன்புடனும், அரவணைப்புடனும் வழிகாட்டக்கூடிய குடும்பம் அவசியம். இவை சிறுவர்களது உரிமையும் ஆகும். எனினும், சரியான வழிகாட்டலின்மையாலும் போதிய பாதுகாப்பின்மையாலும் சிறுவர்கள் தங்கள் உரிமைகளை இழந்து துன்பப்படுகின்றனர்.
இன்றைய சிறுவர்களினது பிரச்சினையானது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரலாற்று ரீதியாக நோக்கும் போது ஆரம்ப காலத்திலிந்தே வழமை, பாரம்பரியம், சமயம் என்பவற்றின் அடிப்படையில் சிறுவர்களது உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. இன்றைய சிறுவர்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும், சுரண்டல்களுக்கும் உள்ளாக்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இவ்வகையில் 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே சர்வதேச ரீதியாக சிறுவர்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளமை அறியக்கூடியதாகவுள்ளது.


சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் 1924 ஆம் ஆண்டு ஜெனிவாவில் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அது சட்டரீதியான அங்கீகாரம் பெறாமையால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனையடுத்து 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் உருவாக்கப்பட்டது. இப்பிரகடனத்தில் சிறுவர்கள் உரிமைகளை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. எனினும், தொடர்ந்தும் சிறுவர்கள் பாதிக்கப்பட்ட குழுவாகவே காணப்பட்டனர். எனவே, 1959 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் சிறுவர்களின் நலனைப் பாதுகாக்கும் பத்து அம்சங்களை உள்ளடக்கிய சிறுவர் உரிமைப் பிரகடனம் உருவாக்கப்பட்டது.
இப்பிரகடனமும் 1924 ஆம் ஆண்டு பிரகடனத்தைப் போலவே சட்ட வலுவற்றதாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து 1979 ஆம் ஆண்டை சர்வதேச சிறுவர் ஆண்டாக அடையாளப்படுத்தியதையடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவானது முழுமையாக சிறுவர்களைப் பாதுகாக்கும் பல அம்சங்களை கவனத்தில் கொண்டு சிறுவர் உரிமைகள் தொடர்பாக சர்வதேச சமவாயத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.


பொதுப்படையாக நோக்குமிடத்து எத்தனை சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் எத்தகைய விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாளுக்குநாள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வறுமை, பஞ்சம் போன்ற நிலைமைகள் இத்தகைய காரணியை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன. 2008ம் ஆண்டு உலகத் தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில்; உலகில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர் பணியாளர்களாகச் சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் 165 மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பணியாளர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் பெறுமதிமிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல்பாட்டாளர்கள். சிறுவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நமது பெரியவர்கள் சிலர் அறிவதில்லை. இத்தகைய காரணத்தினாலேயே சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் பணி எமது சமூகங்களில் தொடர்கின்றன.


சிறுவர் துஸ்பிரயோகத்தில் சிறுவர் உழைப்பு ஒரு பகுதி என்றால் சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பனவும் மூன்றாம் உலக நாடுகளின் சிறுவர் உழைப்புடன் இணைந்த வகையில் தனித்துவமான பிரச்சினைகளாக மாறியுள்ளன எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல. இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. இதற்காகவே அனைத்து நாடுகள் மட்டத்திலும் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய ஆய்வு பொதுமைப்படுத்தப்பட்டதாக உள்ளன.
யூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை.. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் , பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.


இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் ருNஐஊநுகு போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன.
பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் பல உறுப்பினர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் என்ற பரவலான ஒரு எண்ணமும் உண்டு. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் சிறுவர் வேலையாட்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையாவது படித்துவிட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இச்சிறுவர்களைப் பொறுத்தமட்டில் படிப்பதற்கு ஆர்வமில்லை என்பதை விட குடும்பப் பொருளாதாரமே மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாம்.


இந்தியாவில், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1 கோடியே 28 லட்சம் சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. ஆனால், 5 முதல் 14 வயதிற்குட்பட்ட 2 கோடியே 90 லட்சம் சிறுவர் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று யூனிசெஃப் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியவாவைப்பொறுத்தவரை, தீப்படி, பட்டாசு போன்ற தொழிற்சாலைகள், கட்டிடவேலைகள், உணவக வேலைகள், போன்ற வேலைகளுககே பெருமளவில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். கிராமங்களில் மட்டும் இன்றி சென்னை போன்ற இடங்களிலேயே உணவங்களில் நீங்கள் சாப்பிட்டதன் பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்யவோ அல்லது, நிங்கள் உணவருந்திய இலையினையோ, பிளேட்டினையோ எடுத்துப்போட சிறுவர்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். உலகத்திலேயே பிறேசிலிலும், இந்தியாவிலுமே சிறுவர் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.
இலங்கையில் சிறுவர்கள் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையை ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக வறுமை, குடும்ப வன்முறைகள், பெற்றோரின் போதிய பராமரிப்பின்மை, பெற்றோரின் மதுபாவனை, தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை நாடிச் செல்லல் போன்ற காரணிகளே இலங்கையின் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு பிரதான காரணிகளாக அமைகின்றன. இதனால், பாடசாலையிலிருந்து இடைவிலகல், இலக்கின்றி அலைதல், மதுப்பாவனைக்கு உட்படல், சமூக குற்றச் செயல்களில் ஈடுபடல் போன்றவை சிறுவர் மத்தியில் அதிகரித்து வருகின்றன.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஒன்றான சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற போக்கு சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது. இலங்கையில் சிறுவர் தொழிலாளர்களுக்கான கேள்வியானது நகர்ப் புறங்களிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. இன்று நகர்ப்புறங்களில் பெண்கள் தொழிலடிப்படையில் சேருகின்ற வீதம் அதிகரித்துச் செல்வதால் அது சிறுவர் தொழிலாளர்களுக்கான கேள்வியை அதிகரிக்க வழி வகுக்கின்றது.


சொல்லப்போனால் உலகில் இன்று உள்ள அத்தனை பேரும் சிறுவர் என்ற ஒரு கட்டத்தினை தாண்டியவர்களாகவே இருப்பர். அந்த பருவத்தில் தனக்கிருந்த ஏக்கங்கள், தனது அபிலாசைகள் எப்படி இருந்தது என்பதை அவன் நன்கு அறிந்திருப்பான் அந்த நிலையில், இன்று இருக்கும் சிறுவர்களின் ஏக்கங்கள் கண்டிப்பாக அவனுக்குப்புரியும். தனி மனித இலாபங்களுக்காகவும், சில நிறுவனங்கள் தமது வருமானங்களுக்காகவும், மனதில் எந்த ஒரு இரக்க குணமும் இன்றி இன்றும் சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி தொழில் நடத்திவருகின்றமை கண்கூடே. உண்மையில் சிறுவர் தொழிலாளர்களை இல்லாது செய்யவேணடும், சிறுவர்களுக்கு கட்டாயக்கல்வி பெற ஆவன செய்யவேண்டும் என எண்ணி மெகா புறஜெக்ட்க்கள் போட்டு, பல பில்லியன்கள் செலவழித்து, போக்கு காட்டிக்கொண்டிருக்கும் யுனிசெப் போன்ற அமைப்புக்கள் உண்மையில் அடி மட்டத்திற்கு இறங்கிவந்து ஒவ்வொரு சமுதாயத்திலும் இந்த சிறுவர் தொழிலாளர் என்பது மிகப்பெரிய கொடுமை என்ற வழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். சமுதாயத்தின் கண்களில் சிறுவர்களை வேலைக்கமர்த்தல், சிறுவர்களை எந்த வழியிலும் இம்சைப்படுத்தல் எற்றுக்கொள்ளப்படமுடியாது என்ற கடினமான மனமாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். தனியே சிறுவர்களுக்கு மறுமலர்ச்சி அளிக்கவேண்டும் எனத்தெரிவித்து தொழிற்சாலைகளில்போய் அவர்களைப்பிடித்து சீர்திருத்தம் செய்யாமல், சிறுவர் தொழிலுக்கமர்த்தப்படுவதற்கான காரணிகளை கண்டறிந்து அதனையும் இல்லாமற்செய்யவேண்டும்.
இப்படியான நடவடிக்கைகளின் மூலமாகவே ஓரளவுக்காவது சிறுவர்களை சிறுவர்களாக வாழவைக்கலாம்.

Tuesday, August 4, 2009

யூதர்கள் - தமிழர்கள்!! (நிறைவுப்பாகம்)


ஆகக்கூடியது மூன்று தொடர்களுடன் முடித்துவிடுகின்றேன் என்று தெரிவித்து நான் ஆரம்பித்த இந்த தொடர், இந்த பதிவுடன் ஆறாவது தொடராக வந்துவிட்டதற்கு முதலில் அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த தொடரை நினைத்ததை விட நீளமாக்கியமைக்கு காரணம், இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து பெரும்தொகையாக வந்த மின் அஞ்சல்கள்தான்.
ஜூதர்களுக்கு இஸ்ரேல் என்னும் தேசம் கிடைத்துவிட்டது. இத்துடனேயே இந்த தொடரை முடித்துவிட எண்ணியுள்ளேன். அப்பப்போ எதிர்வரும் பதிவுகளில் பின்னர் நடந்தவைகளை பதியலாம் என எண்ணியுள்ளேன். முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று நான் இங்கு எழுதவந்தது ஜூதவரலாற்றினையோ, அல்லது யூதர்களையும் தமிழர்களையும் ஒப்பிடுவதற்கோ அல்ல. ஏனெனில் தற்போதைய நிலையில் மட்டும் நின்றுகொண்டு யூதர்களையும், தமிழர்களையும் ஒப்பிடமுடியாது என்பது வெளிப்படை உண்மை.
ஆனால் உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் ஒரு இனம் எத்தனை நூற்றாண்டுகளாக தமது நாட்டுக்காக தொடர்ந்து இலட்சியப்பாதையில் பயணித்து, பல பல வருடவங்களை எடுத்தாலும், இறுதியில் தமது இலட்சியங்களை அடைந்தார்களே…ஏன் தமிழர்கள் அப்படி இருக்கக்கூடாது என்ற ஒரு கேள்விக்காகத்தான். தமிழ்த் தேசியத்தின் நாயகனுடன் தமிழர்களுக்கென்ற தேசமும் போச்சு என்ற வெறுப்புற்ற மனங்களுக்காகத்தான், அந்த உன்னதமான பாதையினை இன்றும் கொச்சைப்படுத்தும் சாத்தான்களை சுட்டிக்காட்டதான், சோரம்போகும் மனங்களை 30 வருடங்களிலேயே சோர்ந்துவிட்டீர்களா? 300 நூற்றாண்டு என்றாலும் கொண்ட இலட்சியத்திற்காய் மனம் மாறாது தொடர்ந்து பயணித்த ஒரு இனத்தின் வரலாற்றினை பாருங்கள்….குறுகிய பார்வை வேண்டாம்…என தைரியமூட்டத்தான்.
போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம், போராட்டம் மாறாது என்ற சொல்லுக்கு யூதர்கள் சிறந்த உதாரணமாக இருக்கின்றார்கள் எனக்காட்டதான். ஒரு தலைவனுடன் யூதர்களின் பயணம் முடிந்துவிடவில்லை, தொடர்ந்தும் பயணித்தார்கள் எனச்சொல்லத்தான். தம் இலட்சியத்திற்காக பல நூற்றாண்டுக்கு முன்னாள் மரணித்த புனிதர்களை யுகங்கள் கடந்தபோதும், நினைத்து துதித்தார்கள் எனக்காட்டத்தான். வஞ்சகங்கள், சூழ்ச்சிகள் துரோகங்கள், பசப்பு வார்த்தைகளுக்கு எப்படி மயங்காமல் இருந்தார்கள் என்பதைக்காட்டத்தான்.
எவரும் எந்த இலாபங்களும் இல்லாமல் உதவிக்குவரமாட்டார்கள், அவர்களது பாதைகளில் பலவற்றை கொடுத்துத்தான் பல காரியங்களை யூதர்கள் சாதித்துக்கொண்டார்கள் எனக்காட்டத்தான். அவர்கள் பக்கத்தில் இருந்த பட்டமரங்களை பிடிக்காமல் தூரத்தில் இருந்தாலும் புளியங்கொப்புக்களை பிடித்தார்கள் என்று காட்டதான். உலகமெலாம் பரந்து வாழும் சந்தர்ப்பம் கிடைத்தபோது கிடைக்கும் துறைகளில் உச்சங்களுக்குச்சென்று சாதித்துக்காட்டி உலகின் கவனத்தை தம்பக்கம் திருப்பி தமது நியாங்களை உணரவைத்தமையினை காட்டத்தான். ஒரு யூதன் ஒரு துறையில் சிறப்பாக வருவான் என இனங்கண்டால் அவனது வழர்ச்சிக்கு உலகத்தில் அத்தனை யுதர்களும் ஏணியாகி அவனை உலக அரங்கின் உச்சிக்கு ஏற்றியதைக்காட்டத்தான். இப்படி பலவற்றை தமிழ் நெஞ்சங்களுக்கு என் சிறிய சிந்தனையில் காட்டத்தான் இந்த தொடரினை எழுதினேன்.
காலம் எப்போதும் ஒரேபோல இருந்துவிடப்போவதில்லை, நேற்று குற்றமாகத்தெரிந்தவை பல இன்று குற்றங்களில்லை என கூறப்படுகின்றன. உலகம் என்றோ ஒருநாள் நியாயத்தின் பக்கம் நின்றே ஆகவேண்டும். தமிழர்களுக்குரிய நாடு தூரப்போனதுபோல ஒரு தோற்றப்பாடு தெரிந்தாலும் நாளை என்ன நடக்கும் என்பதை இன்று எவரும் தீர்மானித்துவிடமுடியாது. என்ன இன்னும் 10 வருடங்களோ, அல்லது 50 வருடங்களோ, ஏன் 100 வருடங்கள் கூட அதற்கு எடுக்கலாம் அனால் என்றோ ஒரு நாள் அது தமிழர்களின் கையில் கிடைக்கப்போவது உறுதியின் மேல் உறுதி.
இந்த தொடரினை எழுத தொடங்கிய நாள் முதல் எனக்கு மின்னஞ்சல் செய்து ஊக்கப்படுத்திய அன்பு உள்ளங்களின் மின்னஞ்சலில் இருவர் தெரிவித்த கருத்துக்களை அவர்களின் அனுமதியுடன் இந்த இறுதிப்பாகத்தில் தருவதில் பெருமையடைகின்றேன்.


எம் நிலத்தையும், எம் உரிமையினையும் மற்றுமொரு இனம் வஞ்சமாகப்பறித்துக்கொண்டு, எம் ஒருதலைவர் கெஞ்சிக்கேட்டும் தரவில்லை, அடுத்த தலைவர் அடித்துக்கேட்டும் தரவில்லை என்றால் எமக்கு எமது உரிமைகளை கொடுத்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் எவ்வளவு உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை பாருங்கள். அநியாயமாக செயற்படும் அவனுக்கே இந்த உறுதி இருக்கின்றது என்றால், நியாம் வேண்டிநிற்கும் எங்களுக்கு மட்டும் ஏன் அந்த உறுதி தளரவேண்டும்? கெஞ்சியும் தராதவனுக்கு, அடித்தும் தராதவனுக்கு தந்திரமாக ஆப்புவைத்துத்தான் நாம் எமது உரிமைகளை பெறவேண்டும்.
இராஜதந்திரத்துடன், உலகத்தமிழர்களின் பேராதரவுடன், ஒரு தடவைக்கு நாறு தடவைகள் யோசித்து இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் தமது நடவடிக்கைகளை சாணக்கியத்துடன் காய் நகர்த்தவேண்டும். ஏன் தமிழன் மேல் கைவைத்தோம் என தன் ஆயுள்பூராகவும் எதிரியின் இனம் வருந்தத்தக்க வகையில் உலகத்தமிழர்கள் வைக்கும் ஆப்பு இருக்கவேண்டும்.
ஓன்றை மட்டும் யோசித்துப்பாருங்கள், உணர்ச்சி வசப்படுதல், பழிவாங்கல் என்பது யூதர்களுக்கு இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் அவர்கள் தமக்கு துரோகம் செய்தவர்களை, தம் மக்களை கொன்றவர்களை பழிவாங்கினார்கள் தான் ஆனால் அது தமக்கான இலக்கினை அடைந்ததின் பின்னர்.-அபர்ணா. ஜெயபாலசிங்கம்
அவுஸ்ரேலியா


தமிழர்களுக்கு ஒரு சாபக்கேடு அருகிலே இருக்கும் தமிழ்நாடு. இலங்கையில் என்ன நடக்கின்றது என அறிய உலக வரைபடத்தை எடுத்து ஆராயும் ஒவ்வொரு நாட்டுக்குழந்தைகள் கூடச்சொல்லும், அட அருகில் தமிழ்நாடு என்று ஒரு பெரியதேசம், அறாரைக்கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலம், அதே இனம் இவ்வளவு அருகில் இருந்தா ஈழத்தில் இத்தனைவருட இனவன்முறைகள் என்று சொல்லி ஏளனம் செய்யமாட்டார்களா? மதிப்புக்குரிய எழுத்தாளர் பாமரன் சொன்னதுபோல இலங்கையில் என்ன நடக்கின்றது என முழுத்தமிழ்நாடும் அறியவே இன்னும் 25 வருடங்கள் வேண்டும். எனினும் ஈழத்தமிழர்கள் மீது உண்மையான பாசம் வைத்து வேதனைப்படும், துணிந்து குரல்கொடுக்கும், அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், பாமர மக்கள் என்று பலர் இல்லாமலும் இல்லை.-ராஜேஸ். சென்னை தமிழ்நாடு.

சரி…ஆரம்பம் முதலே இந்த தொடர் தொடர்பாக மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு, ஊக்கப்படுத்தியதோடு, தங்கள் விருப்பங்களையும், கேள்விகளையும் கேட்டு பல நெஞ்சங்களுக்கு முதலில் அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கினறேன். அதேபோல பின்னூட்டல் இட்டவர்கள், ஆலோசனைகள் தெரிவித்த நண்பர்கள், ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள். ஆதேபோல யூதர்களின் வரலாற்றினை தொகுத்து புத்தகவடிவிலே வெளியிட்டிருந்த நண்பர் முகில் அவர்களை இங்கு சொல்லியே ஆகவேண்டும்.
யூதர்கள் பற்றி பெரும்பாலான தகவல்களை அவரது நூலில் இருந்தே பெற்றுக்கொண்டேன். அவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேபோல இந்த தொடர்களை தமது இணைங்களில் வெளியிட்டிருந்த அப்பாடொட்கொம், மற்றும் யாழ்டொட்கொம் இணையத்தளங்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோல என்வலைப்பதிவுகள் மற்றவர்கள் கண்களிலும்படும்படி என்னை நாடி பலரை வரவைத்த இணைய வலைப்பதிவு திரட்டிகளான தமிழிஸ், தமிழ்10, பூஞ்சரம் ஆகிய திரட்டிகளுக்கும் எனது மனம் கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
இந்த யூதர் தமிழர் தொடர் ஏதோ ஒரு வழியில் தமக்கு உபயோகமாக இருந்ததாக பல மின் அஞ்சல்கள் கிடைக்கப்பெற்றன. அதேபோல இந்த தொடரை தொடர்ந்து படித்த வாசக நண்பர்கள், பதிவுலக நண்பர்கள் இதில் ஏதாவது உபயோகமான கருத்துக்களை பெற்றிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து இந்த தொடரை நிறைவு செய்கின்றேன்.

Sunday, August 2, 2009

யூதர்கள் - தமிழர்கள்!! (ஆய்வுத்தொடர் -05)


இன்று தம் இனத்தைப்பற்றி, ஏளனம் செய்பவர்கள், மனதிலே வஞ்சம் வைத்துக்கொண்டு உலகத்திற்கு பரிதாபம் காட்டுகின்றோம் பேர்வழிகளாக அவர்களுக்கு இத்தனை மில்லியன் வழங்குகின்றோம் என்று தெரிவிப்பவர்களை எல்லாம் பார்த்தும், எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கும், தன்கபடங்களை மறைக்க எதிரிகள் எடுக்கும் கபட நடவடிக்கைகள் குறித்தும் யூதர்கள் அன்று விழிப்பாகவே இருந்தனர். இன்று அவர்களை ஏளனம் செய்யும் எதிரியின் குரல் அவர்களுக்கு அப்போது கேட்கவில்லை! “ ஏனெனில் யூதர்கள் சில பொழுதுகளில் யுத்தங்களில் தோற்றாலும், அவர்களுக்குரிய நாடு என்ற கொள்கையில் அவர்கள் நூறு ஆண்டுகள் முன்னோக்கிப்போய்விட்டவர்களாக ஒரே குறிக்கோள,; ஒரே எண்ணத்துடன் இருந்தார்கள். இன்றைய நாட்களில் இருக்கும் அவர்களின் எதிரிகளின் கூக்குரல்கள் அவர்களுக்கு கேட்பதற்கு நியாயமில்லை.
யூதர்களுக்குரிய நாடு ஒன்றுக்காக தாம் இழக்கக்கூடாதவற்றை எல்லாம் இழந்தாலும், ஒன்றல்ல இரண்டல்ல நூற்றாண்டாக சந்ததி சந்ததியாக அவர்களின் கனவு இஸ்ரேல் என்ற தேசமே. அவர்களின் மூச்சென இஸ்ரேல் அச்சு. அந்த தேசம் எனும் ஒரு நிரந்தர மோட்சத்திற்காக இன்று தமது மூச்சுக்களை முழுமையாக நிறுத்திக்கொள்ளவும் அவர்கள் தயாராகவே இருந்தனர்.
கபடதாரிகளும், இஸ்ரேல் என்ற தேசம் வர விரும்பாத சக்திகளும்;, ஏன் துரோகிகளாக இருந்த ஒருசில யூதர்களும் சேர்ந்து, தொடர்ந்தும், புனிதமான அவர்களின் பாதையினை மோசமாகக்கொச்சைப்படுத்தி, யூதர்களின் மனங்களை மாற்றி தமது குறுகிய இலாபங்களுக்காக யூதர்களின் காதுகளில் சாத்தான்களின் வேதங்களை ஓதாமல் இருந்ததும் இல்லை. அவர்களுக்குள்ளும் கில்பேர்ட் போன்ற எட்டப்பர்களும், இன்றைய தமிழர்களின் உதாரணங்களும் இல்லாமல் இல்லை.
ஆனால் ஒரு புனிதமான பயணத்தை தொடங்கிய அந்த இனம், தம் இனத்திற்கான தேசம் என்ற பாதையில் எத்தனையோ தங்கள் சந்ததிகளை கொட்டிக்கொண்டு சென்ற இனம், இந்த சாத்தான்களின் வேதங்களுக்கு செவிசாய்க்கவில்லை. தமக்கான தேசம் கிடைப்பது தள்ளிப்போவதுபோல் தெரிந்த வேளைகளில் அவர்கள் சோர்ந்துவிடாமல் இன்னும் தம்மை பலப்படுத்தி, மேலும் மேலும் புதிய வழிகளில் தந்திரங்களாக தமது காய்களை நகர்த்தினார்கள். உலகின்போக்குக்களை ஆழமாகப்பார்த்தார்கள். தமக்கு அதரவாக பக்கத்தில் இருக்கும் பட்டமரங்களைப்பிடிக்காமல், தூரத்தில் இருந்தாலும் புளியங்கொப்புக்களை பிடித்துக்கொண்டார்கள்.


இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்த கையோடு, பிரித்தானியா முன்னர் ஆதரவு தெரிவித்த 1917அம் ஆண்டு உருவான பல்ஃபர் பிரகனத்துடன் பிரித்தானியாவின் முன்னால் வந்துநின்றார்கள் யூதர்கள். இந்த இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்ற காலத்தினுட்கூட, இரகசியமாக யூதர்களின் புரட்சிப்படைகள் சிலவற்றை உருவாக்கி போர் பயிற்சிகள் கொடுத்து பலஸ்தீனத்தின் எல்லைப்பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்தனர் யூதர்கள்.
இந்தவேளையில் “எமது தாயகமான இஸ்ரேலை உருவாக்கிக்கொடுங்கள்” என்ற கோசங்களுடன் கலகங்களில் ஈடுபட்டனர் அந்த வீரர்கள். எங்கள் இறுதி மூச்சு உள்ளவரை பலஸ்தீனத்தை யூதர்களுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என பதிலுக்கு கலகங்களில் ஈடுபட்டனர் முஸ்லிம்கள்.
எனினும் தொடர்ந்தும் கும்பல் கும்பலாக யூதர்கள் வந்து குடியேறியவண்ணம் இருந்தனர், அவர்களுக்கான நிலங்களை யூத வங்கி வழங்கிக்கொண்டே இருந்தது. ஆனால் இந்த நிலையில் பிரிட்டனால் தனித்து ஒரு முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. ஒரு பக்கம் சக்திவாய்ந்த ரஷ்யா, மற்றப்பக்கம் இரண்டாம் உலகப்போரில் தனது சக்தியை குறுகிய காலத்தினுள் உலகத்திற்கு நிரூபித்துக்காட்டிய அமெரிக்கா. ஆனால் இந்த நிலையில் அரேபிய தேசங்களின் அதரவு தனக்கு கிடைக்கப்போவதில்லை. எனவே மத்திய கிழக்கில் தனக்கு அதரவளிக்க ஒரு தேசம் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது. இந்த தேவை பூ+ர்த்தியாகவேண்டும் என்றால் இஸ்ரேலை உருவாக்கியே தீரவேண்டும் என அமெரிக்கா நினைத்தது. அதற்குள் அமெரிக்காவுடனும் யூதர்கள் பல தொடர்புகளை மேற்கொண்டு. பல தரப்பு உயர் மட்ட பேச்சுக்களையும் பேசிவிட்டிருந்தனர்.


இந்த நிலையில், யூதர்களுக்கு தனிதேசம் ஒன்றை அமைத்துக்கொடுக்கும் முடிவை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டது. என்றாலும் அதை எப்படி பிரித்துக்கொடுப்பது என்று குழம்பிக்கொண்டிருந்தது. பிரிட்டனால் ஒரு முடிவை எடுக்கமுடியாதிருந்தது. என்றாலும் எடுக்கும் முடிவு யூதர்களுக்கு மிகவும் சாதகமாக அமையவேண்டும் என்பதில் அது மிகத்தெளிலாகவே இருந்தது.
1947 பெப்ரவரி 14அம் திகதி இந்தப்பிரச்சினைக்கு பதில் காணும் பொறுப்பை பிரிட்டன் ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்தது. ஐக்கிய நாடுகள் சபை ஒரு தேசத்தை யூதர்களுக்கு உருவாக்கிக்கொடுக்க அதற்கேற்ற அளவில் யூதர்கள் இருக்கின்றார்களா? என்று தலைகளை எண்ணிக்கொண்டது. இதன் நிமித்தம் தனது அறிவிப்பை வெளியிட்டது,
* பலஸ்தீன் இரண்டாகப்பிரிக்கப்படுகின்றது. யூதர்களுக்கான தனி நிலப்பகுதி ஒன்று அமைக்கப்படும், அந்த நிலத்தின் பெயர் இஸ்ரேல். அந்த பகுதிபோக பூர்விக அரேபிய முஸ்லிம்கள் வாழும்பகுதி பலஸ்தீன் என்றே இருக்கும்.

* இரண்டு தேசங்களிலும் இரண்டு இனத்தவர்களும் வசிக்கலாம். இஸ்ரேலில் இருக்கும் 4,98,000 யூதர்களுடன், 4,07,000 அரேபியர்கள் வசிப்பார்கள். அதேவேளை பலஸ்தீனத்தில் இருக்கும் 7,25,000 அரேபியர்களுடன் 10,000 யூதர்கள் வசிப்பார்கள். ஒற்றுமையினை கட்டிக்காப்பதற்காகவும், புவியியல் ரீதியாகவும் இந்த ஏற்பாடு அமையும்.

* ஜெருசலேம் பிரச்சினைக்குரிய இடமாகக்கருதப்படுவதனால் அது இஸ்ரேல் வசமோ அல்லது பலஸ்தீன் வசமோ ஒப்படைக்கப்படாது. ஐக்கிய நாடுகள் சபையே அதனை நிர்வகிக்கும். ஜெருசலேம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளான பெத்தலகேம், பெயித் ஜெல்லா ஆகிய இடங்களில் பெரும்பாலும் அரேபியக்கிறிஸ்தவர்கள் வசித்துக்கொண்டிருக்கின்றார்கள். இது மூன்று மதத்தினருக்கும் உரிய புனித இடம் எனவே இனிவரும் காலங்களில் அவர்களுடன் இணைந்து 1,05,000அரேபிய முஸ்லிம்களும், ஒரு இலட்சம் யூதர்களும் வசிக்கலாம்.

* கலிலீ மலைப்பகுதியில் மேற்குப்பகுதி முழுவதும் பயிரிடுவதற்கும் விவசாயத்திற்கும் ஏற்றது. அது அரேபியர்களின் வசம் இருக்கும்.
நெஹவ் பாலைவனப்பகுதி இனி யூதர்களின் வசம் இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.


இந்த தீர்மானத்தை ஐ.நா.அறிவித்து முடித்த உடனடியாகவே பலஸ்தீன் கலவரங்கள் நிறைந்த பூமியாக மாறியது. அரேபியர்கள் ஆயுதங்களுடன் வீதிக்கு இறங்கி போரடினார்கள். துப்பாக்கிகள் ஓயாமல் வெடித்தன. எங்களுக்குரிய நிலத்தை யூதர்களுக்கு பிரித்துக்கொடுக்க நீங்கள் யார்? உச்சபட்ச கோபத்தை கொப்பளித்தார்கள் அரேபியர்கள்.
இந்த கலவரங்களின் மத்தியிலும் யூதர்கள் வெற்றிப்புன்னகையுடன் வலம் வந்தார்கள். அவர்களின் எத்தனை தியாகங்கள், எத்தனை நூற்றாண்டு கனவுகளின் மூலம் நிறைவேறிய தருணம் இது. கடவுள் எம் இனத்திற்கு எனறு கொடுத்த தேசம் எமக்கு திரும்பக்கிடைத்துவிட்டது. மீண்டும் மோஸசே ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக வந்து “இஸ்ரேல் யூதர்களின் நாடு” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவித்து கொண்டாடினார்கள். ஒருவரை ஒருவர் அன்புடன் ஆரத்தளுவி தமது நூற்றாண்டு கஸ்டங்களை எண்ணி ஆளுதார்கள். வீடுகளை, வீதிகளை அலங்கரித்தார்கள், இனிப்புக்களை ஒருவருக்கொருவர் வாயில் அள்ளித் திணித்து ஆனந்தத்தில் திளைத்தார்கள். தமக்கான தேசம் மலர்வதை ஒரு உலகப்பெருவிழாவாகவே உலகம் வாழ் யூதர்கள் அத்தனைபேரும் குதூகலித்து கொண்டாடினார்கள்.


1947 நவம்பர் 29 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூடியது. சிறப்பு ஆணைக்குழுவின் முன் இந்த “இஸ்ரேல் எனும் தேசம் உருவாக்கப்படல்” என்னும் பொருளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு 33 நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையால் இஸ்ரேல் என்ற தேசம் அங்கீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
துமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நேரடியாகவே தமது பிரதிநிதிகளை போய் நன்றி சொல்ல வைத்தனர் உலகம் முழுவதும் வாழும் யூதர்கள். இந்த நாடுகளுக்கு தாம் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும், அவர்களுடன் இஸ்ரேல் காலம் முழுவதும் நல்லுறவைப்பேணும் எனவும் தெரிவித்தனர். ஆனால் மறுபுறத்தில் பலஸ்தீனத்தில் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே சென்றது. யூதர்களுக்கு எதிரான படுகொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் என அரேபியர்களின் அட்டகாசங்கள் கட்டுக்கடங்காமலே சென்றுகொண்டிருந்தன.
திடீர் திடீர் என அரேபிய முஸ்லிம் தீவிரவாதக்குழுக்கள் முளைத்தன. யூதர்கள் முதலில் தற்காப்பு தாக்தல்களை மட்டுமே நடத்தினார்கள். நிலமைகள் கட்டுக்கடங்காமல் போகவே அரேபியர்களின் கிராமங்கள் சிலவற்றை தேர்தெடுத்து திடீர் தாக்குதல்களை நடத்தினர்.


1948 மே மாதம் 15ஆம் திகதியோடு பலஸ்தீனில் இருக்கும் தனது படைகள் அத்தனையினையும், பிரிட்டன் விலக்கிக்கொள்ளும், என பிரிட்டன் அறிவித்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யூதர்கள் அத்தனைபேரையும் கொன்று குவிக்கவேண்டும் என அரேபியர்கள் தமது நடவடிக்கைளை ஆரம்பித்தனர். அருகே உள்ள அத்தனை முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் அவர்களுக்கு கிடைத்தது. அந்த முஸ்லிம் நாடுகளிடமிருந்து பெரும் தொகையான ஆயுதங்களை வாங்கிக்குவித்தனர் அரேபிய முஸ்லிம்கள். ஒவ்வொரு யூதக்கிராமங்களுக்குள்ளும் புகுந்த அரேபிய முஸ்லிம்கள் இரக்கமின்றி யூதர்களை கொனறு;குவித்து, மனைகளையும் தீயிட்டு கொழுத்தினார்கள். ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி 1948 ஆம் ஆண்டு ஷர் ஈஜன் என்ற யூத நகருக்குள் புகுந்த அரேபிய முஸ்லிம்கள் அந்த கிராமத்தில் இருந்த குழந்தைகள் உட்பட 200 யூதர்களை கோரமாகக்கொன்றனர்.
இஸ்ரேல் பிறக்கப்போவதென்னமோ உறுதியாகிவிட்டது. அனால் அதற்கு முன்னர் எவ்வளவு யூதர்களை பலஸ்தீனத்தில் இருந்து அடித்து வெளியே துரத்த முடியும் என்று அரேபியர்கள் கணககுபபோட்டுக்கொண்டனர். ஆனால் காலங்காலமாக பலரால் துரத்தியடிக்கப்பட்டு, பலஸ்தீனத்தை விட்டு தரத்தப்பட்ட யூதர்கள் இந்த முறை ஓடுவதற்கு தயாராகவில்லை. மாறாக இந்த ஆரேபிய முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் புகட்டுவதாக சபதம் செய்துகொண்டனர்.


எப்போது பிரிட்டன் தனது படைகளை முழுவதும் விலக்கிக்கொள்கின்றதோ, அடுத்த நொடியிலேயே யூதர்கள் மீது கடும் தாக்குதல்களை நடத்த அரேபிய முஸ்லிம்கள் தயாராகிக்கொண்டிருந்தனர். துணைக்கு அண்டைய முஸ்லிம் நாடுகளான எகிப்து, சிரியா, லெபனான், ஜோர்தான் ஆகிய நாடுகள் தம் படைகளுடன் எல்லைப்பகுதிகளில் காததுக்கொண்டிருந்தனர்.
இஸ்ரேலின் அரசியல்க்குழுத்தலைவர் பென் குரியன், பிற நாட்டு தலைவர்கள், மற்றும் இராணுவ தளபதிகளுடன் அவசர அலோசனைகளில் ஈடுபட்டார். படை பலம் மற்றும் ஆயுத பலம் இன்றி, அரேபிய முஸ்லிம்களின் வலிந்த தாக்குதல்களை எப்படி முறியடிப்பது என வியூகங்கள் அமைக்கப்பட்டது.
மே 13ற்கு முன்னதாகவே பலஸ்தீனத்தில் இருந்து பெரும்பாலான பிரிட்டன் படைகள் விடைபெற்றுச்சென்றன.


இன்னும் ஒரு நாள், நூற்றாண்டு யூதர்களின் கனவுகள், அந்த கனவுகளுக்காக காலங்காலமாக தமது உயிரை அர்ப்பணித்த யூதர்களின் தியாகங்கள் ஒப்பேறும் நன்நாள், நாளை யூதர்களுககு சுததந்திரம். யூதர்களுக்கான இஸ்ரேல், அவர்களின் இலட்சியம் நிறைவேறப்போகும் நாள் வரப்போகின்றது. யூதர்கள் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு சூழலில் இருந்தார்கள்.
இஸ்ரேல் பிறந்த மறு நொடியே அரேபியர்கள் தாக்கினால் என்ன? இந்த எமது இலட்சியம் நிறைவேறும் சந்தோச உணர்வே எமது பலத்தை பன்மடங்கு அதிகரிக்குமே! சாமாளித்துவிடலாம். ஐக்கிய நாடுகள் சபை இருக்கின்றது, பிரித்தானியா இருக்கின்றது. அமெரிக்கா இருக்கின்றது இவை பார்த்து எமது தேசத்தை மீட்டெடுத்து கொடுத்துவிடுவர். என தம் மனதை தேற்றிக்கொண்டு நாளை மலரும் தங்களுக்கான தேசத்தினை வரவேற்கும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். எனினும் எச்சரிக்கையுடன் தமது பாதுகாப்பினை உறதிப்படுத்தியவாறே இருந்தனர்.


மே 14, யூதர்களின் நூற்றாண்டுக்கனவுகள், இந்த நூற்றாண்டுகளில் தமக்கான தேசத்தின் ஏக்கத்துடன் மடிந்த கோடிக்கணக்கான யூதர்களின் ஏக்கங்கள் நிறைவேறும் நாள் வந்தது.
பலஸ்தீனத்திற்கான பிரிட்டனின் ஆளுநர் விடைபெற்று சென்றார். அவரை வழியனுப்பிவிட்டு, யூதர்களின் அரசியல்த்தலைவர் பென் குரியன் உதடுகள் துடிதடிக்க கண்ணீர் சொரியும் தனது கண்களுடன் இந்த அறிவிப்பை உலக வாழ் யூதர்களுக்கு விடுத்தார்,
“இதோ இன்றுமுதல் எங்கள் யூதர்களின் கனவு, எங்கள் முன்னையவர்களின் ஏக்கங்கங்கள், அவர்களின் தியாகங்களுக்குரிய யூதர்களின் தேசமான இஸ்ரேல் பிறக்கின்றது என உணர்ச்சி பொங்க தழு தழுத்த குரலில் கண்களில் கண்ணீர் சொரிய அறிவித்தார்”

அந்த நொடி ஒட்டுமொத்த உலக யூதர்களும் உடைந்து அழுத்தார்கள். உலகில் உள்ள அத்தனை யூதர்களும் தமது மனங்களில் இந்த இலட்சியங்களுக்காக தமது உயிரை அர்பணித்தவர்கள் ஒவ்வொருவரையும் தொழுதார்கள்.
அப்பா…எத்தனை கோடி யூதர்களின் உயிர், எத்தனைபேரின் உயிர்த்தியாகங்கள், எத்தனை தடைக்கற்கள், எத்தனை வலிகள், எத்தனை அவமானங்கள், எத்தனை பாடுபடல்கள் அத்தனையும் ஈடேறும்போது, அந்த உச்சக்கட்ட சந்தோசத்தின்போது ஆழுகைதான் வரும் என்பது அன்று அந்த யூத இனத்தைப்பார்த்து உலகம் புரிந்துகொண்டது.
அந்தக்கணப்பொழுதுகளில் யூதர்களின் மனக்கண்களின் முன்னால் மோசஸ் தெரிந்தார்….
தொடரும்….

LinkWithin

Related Posts with Thumbnails