Monday, December 6, 2010

இனி எல்லாம் இப்படித்தான் - பதிவர்களின் பாட்டுக்கு பாட்டு.



புதிவர் சந்திப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதால் “சீசன்” பதிவுகளாக பதிவர்கள் மத்தியில் பதிவர்களையே பாத்திரங்களாக்கி நகைச்சுவைப்பதிவுகள் அரங்கேறிவருகின்றது.
இனி எல்லாம் அப்படித்தான்…

அந்தவகையில் நாமும் கோதாவில குதித்தாகணுமே..
இதோ இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பு இனிய முறையில் ஆரம்பித்து, இதோ இடைவேளை இன்னிசை என்ற நிகழ்வு, திடீர் என பதிவர்களால் மாற்றம்பெற்று,
புதிவர்களின் பாட்டுக்குப்பாட்டு என்று பெயரிட்டு ஒரு போட்டி நிகழ்ச்சியாக இடம்பெறுகின்றது.

இதோ மேடையில் லோஷன் மைக்குடன் ஏறுகின்றார்.
பதிவர்களின் பாட்டுக்கு பாட்டு… வலைப்பரப்பெங்கும் தமிழ் பரப்பி, தமிழுக்கு சிகரம்வைத்து, ஏராளமான மனங்களை வென்ற பதிவர்கள் சார்பில் இடம்பெறும் வேடிக்கை வினோத நிகழ்வு!
இந்த இனியவேளையில், மண்டபத்தினுள்ளே இயற்கையே குளிர்மையை கொலுவீற்றிருக்க செய்துள்ள இந்த இனியநேரத்தில், இந்த போட்டியை ஆரம்பித்து வைக்கின்றேன்.

இதோ முதலாவது போட்டியாளராக….
பேசிக்கொண்டிருக்கும்போதே கிறு கிறு என்று மேடையில் ஏறி லோஷனிடம் மைக்கை பறிக்கின்றார் மதிசுதா..
“அண்ணை எனக்குத்தான் சுடுசோறு” . சரி என்றதன் பின் மைக் லோஷனிடம் கொடுக்கப்படுகின்றது.
சரி..முதலாவது போட்டியாளராக தானே வந்துள்ளார் மதிசுதா..
அவருடன் போட்டியிட்டுப்பாட நாம் அழைப்பது கஞ்சுபாய்.. சீ..பழக்கதோசம் விடுகுதில்லை கூல்போய்.

சரி மதிசுதா..பாடுங்கள் உங்கள் அபிமானப்பாடலை!
வேண்டாம் அண்ணை அதுதான் சுடுசோறுவாங்கிட்டேனே, பாவம் கூல்போயே பாடட்டும்.
சரி கூல்.. பாடுங்கள் உங்கள் அபிமானப்பாடலை…
மொபைலா? மோபைலா? நீ என்ன பிரீப்பேடா, போஸ்பெய்டா சொல் சொல்…
என கூல்போய் சுதாவைப்பார்த்து கண்ணடித்துக்கொண்டே பாடுகின்றார்.

நல்லது கூல்போய்.. அருமையான ஒரு போன் பாடல். ஆனால் உங்கள் தொலைபேசி இலக்கம்தான், போஸ்பெய்டா, பிரீப்பெய்டா தெரியவில்லை. சுதாவை முந்திக்கொண்டுபோய் கொமன்ஸ் போட்;டுவிடலாம். ஆனால் உங்களை மொபைல்ல பிடிப்பதுதானே பெரும்பாடு.. இதோ சுதா “மொ” என்ற எழுத்தில் மணி ஒலித்தது நீங்கள் பாடவேண்டிய எழுத்து “மொ” என்றார் லோஷன்.

கொய்யாலே.. “மொ” என்ற மொக்கு எழுத்தில் மணியை அடிக்கவிட்ட சிதறல்கள் ரமேசுக்கு என் கண்டனங்கள். என்றாலும் விடமாட்டான் இந்த மதி.சுதா..
இதோ என் இசையிலும் நனையுங்கள்..
மொத்திவைத்த மல்லிகை மொட்டு! பூத்திருக்கு வெக்கத்தைவிட்டு…

இல்லை..இலை;லை..சுதா நீங்கள் பாடலையே மாற்றிவிட்டீர்கள். அது பொத்திவைத்த மல்லிகைமொட்டு. எனவே இந்த போட்டியில் இருந்து நீங்கள் நீக்கப்படுகின்றீர்கள்.
மைக்கை கொஞ்சம் பொத்திக்கொண்டே.. என்னசுதா..உங்களுக்கே தெரியும்தானே! என்கின்றார் லோஷன். இல்லை இந்தப்போட்டியில் வெல்பவருக்கு இலட்சரூபா பரிசு என்று யாரோ அதுக்குள்ள ஒரு பதிவு போட்டிருக்கின்றாங்கள் அதுதான்…
சிதறல்கள் ரமேஸை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே மேடையில் இருந்து இறங்கி தனது இருக்கையில் வந்து இருக்கின்றார் சுதா.

அடுத்த போட்டியாளராக நாம் இங்கே அழைப்பது காதல் உணர்வு கொப்பளிக்க, மோகன மயக்கத்தில் இருக்கும் சக பதிவர் மருதமூரான்.
மருதமூரான் பாடுங்கள் உங்கள் அபிமானப்பாடலை…
ஒரு சிரிப்புடன் மைக்கை வாங்கும் மருதமூரான்..
“என்காதல் சரியா தவறா? பீல் மை லவ்!!!”

அருமை அருமை..ஸ்ருதி பிசகாமல் அனுபவித்துப்பாடினீர்கள். உங்கள் காதலை காதலி மட்டும் இன்றி உங்கள் நண்பர்களும் உணரவேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை பல தடவைகள் கவனித்து இருக்கின்றேன். தேனீர்க்கோப்பைக்குக்கூட அதிக முத்தம் கொடுப்பரல்லவா நீங்கள்..!
மருதமூரானின் உணர்வோட்டமான பாடலில் ஈர்க்கப்பட்ட ரமேஸ் மணியை ஒலிக்கவிட மறந்துவிட்டதால், கூல்போய் நீங்கள் பாடவேண்டிய எழுத்து “கூ”

கூக்கூ என்று குயில் கூவாதோ…கூக்கூ என்று குயில் கூவாதோ…கூக்கூ என்று குயில் கூவாதோ…கூக்கூ என்று குயில் கூவாதோ…கூக்கூ என்று குயில் கூவாதோ…

அப்பா இப்படியே 47 தடவைகள் குயில் கூவாதோ என்று மட்டும் பாடிவிட்டீர்கள். அங்காலே போவதாக இல்லை. வசனங்கள் மறந்துபோச்சுபோல! எனவே…என்று லோஷன் சொல்வதற்கு முதலே.. சிரிப்புடன், லோஷனை ஒரு நன்றிப்பார்வை பார்த்துவிட்டு, தன் மொபைலை கிண்டிக்கொண்டே இறங்குகின்றார் கூல்போய்..

அடுத்து மேடையில்..நாம் அழைப்பது.. சுபாங்கன்..
வாருங்கள் சுபாங்கன்…
என்ன அபிமானப்பாடலை பாடவேண்டுமா? சரி பாடுறன்.
“குன்றத்திலை குமரனுக்கு கொண்டாட்டம்”
“கொ” என்ற இடத்தில் ரமேஸ் மணியை ஒலிக்கவிட்டார் எனவே என லோஷன் இழுக்கும்போதே.
வெரி சொறி பொஸ். இவ்வளவு நாளாக நான் மியூசிக்கை மட்டும்தான் இரசித்தேன். ஆனால் இந்த இரும்பிலே ஒரு இருதயம் முளைத்தபின்னர்தான் வசனங்களை இரசிக்கதொடங்கினேன். எனவே இந்தப்போட்டியில் இருந்து விடைபெறுகின்றேன் என்றார் மருதமூரான்.

நல்லது அடுத்து நாம் அழைப்பது பதிவர் கோபி. வாருங்கள் கோபி.
கோபி இருந்த இடத்தில் இருந்து முகத்தை பின்பக்கம் திருப்பிக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றார். பின்னால் இருந்து அனுதினன், நிருஜா, ஆதிரைபோன்றோர் கோபியை மேடையை நோக்கி தள்ளுகின்றார்கள்.
அண்ணை நான் இந்த விளையாட்டுக்கு இரசிகன். இறுதியில் வேண்டும் என்றால் இந்தப்போட்டியை அனலைஸ் பண்ணி எழுதிதாறன். நான் வரவில்லை பவனை கூப்பிடுங்கள்.
பவன் மேடைக்கு வாருங்கள் என்கின்றார் லோஷன்.
மேடைக்கு வந்த பவன்… அண்ணே ஸ்கிரீனிலை படத்தை போடுங்கள் அப்பதான் நான் பாடுவேன்.

ஆஹா.. இப்பவே கண்ணை கட்டுதே என்கின்றார் லோஷன்.
அடுத்து பதிவர் நிரூஜா
….
ஆணென்ன பெண்ணென்ன நான் என்ன நீயென்ன எல்லாம் ஓரினம்தான்….
ஓகோ அதுதான் பெண் பெயரில் எழுதுறிங்களோ என்று கேட்டார் சுபாங்கன்.
சுபாங்கனிடமிருந்து மைக்கை பிடுங்கிய லோஷன்..இங்க கொமன்ட் பண்ணுவது நான்தான் போட்டியாளர்கள் பண்ணக்கூடாது. மணி அடிக்கவிட்ட ரமேஸை காணவில்லை. உங்கள் அனைவரினதும் பாடல் இரசனையை கேட்டால் நான்கு நாளுக்கு ரூம்போட்டு அழவேண்டும் போல் உள்ளது.

சரி.. சுபாங்ஸ்.. நீங்கள் பாடுங்கள் “கு”
அப்படி போடுங்கண்ணே…கனநேரமாய் தொண்டைக்குள்ள நிக்குது..
“குழந்தை வாயை முகர்ந்ததுபோன்ற கடும் நாற்றமில்லாத வாயும்வேண்டும்
காமக்கழிவுகள் கழுவும்போதும் கூட நின்றவள் உதவிடவேண்டும்”

ஐயா…அது பாட்டும் இல்லை ஐயா..அதோடு அது முதல் வரிகளும் இல்லை என்று கத்தியே விட்டார் லோஷன்.
விடைபெறுகின்றேன் வணக்கங்கள்.. அடுத்து நாம் அழைப்பது வரோதயன். நிகழ்ச்சியை பார்க்க பின்னால் இருந்ததனால் தெரியாதகாரணத்தால், அங்கே இருந்த கப்பு ஒன்றில் ஏறி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வரோ திடுக்கிட்டு கீழே குதித்து…
ஆத்திசூடி..ஆத்திசூடி..யூமே ஆத்திசூடி…என்று பாடியபடி மேடைக்கு வந்து பாடுகின்றார்.
என்ன அதிசயம்…நிரூஜாவும், வரோவும் ஏட்டிக்குப்போட்டியாக அடுத்தடுத்து பாடல்களை அடுக்கினார்கள்.
ஓவ்வொருமுறையும் யாராவது தோற்றுப்போவார்கள் அடுத்தது நான் என்று இருக்கையில் இருந்து எழுந்து எழுந்து அனுதினன் ஏமாந்துபோனதுதான் மிச்சம்.

நல்லது பதிவர்களே இந்த இருவரையுமே வெற்றிபெற்றவர்களாக அறிவித்து இந்த போட்டியை என் பாடல் ஒன்றோடு நிறைவேற்றிக்கொள்கின்றேன். என்றுவிட்டு
“மரி மரிநின்னே முரலிட” என்று கண்களை மூடிக்கொண்டே பாடுகின்றார் லோஷன்.
பாடலின் இறுதியில் உச்ச ஸ்தாயியில் மரிமரிநின்னே..மரிமரிநின்னே….
என்று பாடிவிட்டு மேடையை பார்த்து அதிர்கின்றார் லோஷன்.

24 comments:

Subankan said...

உஸ்ஸபா.......... இது முடியறமாதிரித் தெரியலயே

கன்கொன் || Kangon said...

ஹா ஹா....
இரசித்தேன்.

// உங்கள் காதலை காதலி மட்டும் இன்றி உங்கள் நண்பர்களும் உணரவேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை பல தடவைகள் கவனித்து இருக்கின்றேன். //

:D :D :D


// ஓகோ அதுதான் பெண் பெயரில் எழுதுறிங்களோ என்று கேட்டார் சுபாங்கன். //

ஓகோ, சுபாங்கன் அண்ணாவும் பாதிக்கப்பட்டாரோ... ;-)


நல்ல நகைச்சுவை, சிரித்தேன், இரசித்தேன்...

Bavan said...

எனக்குத் தன் ஆறின புளிச்சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
N.BAVAN..:P

Bavan said...

//என்று பாடிவிட்டு மேடையை பார்த்து அதிர்கின்றார் லோஷன்.//

இடைவேளையில் கொடுக்க வடைகொண்டு சட்டிக்குள்ள மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களைத்தவிர வேற யாரையும் காணேலயா????..:P

ஹாஹா.. எல்லாரும் இண்டைக்கு ஒரு பிளானோடதாக் இருக்கிறீங்கள் அடுத்தது யாருப்பா?? முதல்லயே சொல்லிருங்க எவ்வளவு அடியத்தான் எதிர்பார்க்கமயே வாங்கிறது..:)))

Ramesh said...

ஆகா ரூம் போட்டு யோசிப்பாங்களோ..
டங்
மணி அடித்திட இங்க இசை ஒலித்திடுமோ.

மருதமூரான் ஹாஹாஹா... தேனீர்கோப்பை முத்தங்கள் ....
சுடுசோறு மதிசுதா அப்படி எல்லாம் பாக்கப்போடாது சகோ. கைகோர்த்து பாடுவோம்ல..
வம்பாத்தான் மாட்டிக்கொண்டேனோ

ம.தி.சுதா said...

சோறு ஆறீட்டுதா..??

ஆகா எல்லோரும் ஒருவரை ஒருவர் சளைத்தவரில்லை என ஒருமித்து ஜமாய்க்கிறாங்களே...

எல்லோரிலும் ஒரே ஒரு விசயம் பிடித்திருக்கிறது.. ஹலிவுட் படங்கள் போலவே முடித்து வைக்கிறீர்களே...

உ-ம் ஃஃஃஃஃமேடையை பார்த்து அதிர்கின்றார் லோஷன்.ஃஃஃஃ

anuthinan said...

பதிவர்களே, ஒரே நாளில் இவ்வளவு பதிவா?? முடியலடா சாமி!!

//ஓவ்வொருமுறையும் யாராவது தோற்றுப்போவார்கள் அடுத்தது நான் என்று இருக்கையில் இருந்து எழுந்து எழுந்து அனுதினன் ஏமாந்துபோனதுதான் மிச்சம்.//

எனக்கு என்னவோ இது பதிவர் சந்திப்புக்கு முதல் எதிர்வு கூறல் மாதிரியே இருக்குது!!

பாடல் தெரிவும், தொகுத்து வழங்கிய விதமும் நன்று அண்ணா!!!

KANA VARO said...

அடச்சே! நானும் எதையாவது எழுதுவம் எண்டு நினைச்சா... மூச்சு விடாமல் அடிக்கிறீங்களே! அடுத்தது யாருப்பா? கொஞ்சம் யோசிசிச்சு ஒரு பதிவு போட விடுங்கோ!

KANA VARO said...

நிகழ்ச்சியை பார்க்க பின்னால் இருந்ததனால் தெரியாதகாரணத்தால், அங்கே இருந்த கப்பு ஒன்றில் ஏறி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வரோ திடுக்கிட்டு கீழே குதித்த…//

கடுமையான உள் குத்து நிறைந்த இந்த வரியை கடுமையாக கண்டிப்பதுடன், அண்ணர் ஜனாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன்!@

KANA VARO said...

என்ன பயந்திட்டீங்களா?

ஏறி நிண்டு பார்க்கும் அளவுக்கு நான் 'கட்டை' எனச்சொல்லி விட்டார். (செம கட்டை இல்லைப்பா)

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃசுடுசோறு மதிசுதா அப்படி எல்லாம் பாக்கப்போடாது சகோ. கைகோர்த்து பாடுவோம்ல..
வம்பாத்தான் மாட்டிக்கொண்டேனோஃஃஃஃ

ரமேசண்ணா எனக்குத் தெரியும் எனக்க வந்தது “மோ” தானே நீங்க shift கொடுக்காமல் சொல்லி விட்டீர்கள்..

ம.தி.சுதா said...

பவன் கட்டாயம் ஒரு போட்டோ கொமண்ட் போடுங்க தம்பி... பதிவுலகத்தில உங்க கொமண்ட்டுக்கு ஒரு தனி மதிப்பே இருக்கிறது...

KANA VARO said...

ரமேசண்ணா //

பச்சிளம் பாலகன் ரமேஷை அண்ணா என்றழைத்து தன்னை இளமையாக காட்டிக்கொண்ட சுதாவை கன்னாபின்ன என கண்டிக்கிறேன்!

KANA VARO said...

சுதாவை Dialog மற்றும் Hitch முகவர்கள் தேடுகிறார்கள். சிம் மோசடி தொடர்பாக....

KANA VARO said...

கண்டு பிடித்துக்கொடுப்பவர்களுக்கு ஒரு இலச்ச ரூபாய் பரிசு (எங்கோ பதிவில் படித்த ஞாபகம் )

ம.தி.சுதா said...

/////சுதாவை Dialog மற்றும் Hitch முகவர்கள் தேடுகிறார்கள். சிம் மோசடி தொடர்பாக.../////

வரோ யாராவது தேடினால் இந்த லிங்கை கொடுங்கோ அவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் எற்றி விட்டிருக்கிறேன்...

http://www.esnips.com/webfolder/b950cee3-26c8-49f5-93c6-40daae6a08d5

ஷஹன்ஷா said...

ஸப்பா....ஒரு நாளுக்குள்ள எத்தனை தரம் தான் சிரிக்குறது....மூச்சு வாங்குதய்யா....


அடுத்தது யாரு...
இருங்க றெஸ்ட் எடுத்திட்டு வாறேன்...

ஃஃஃஃஃஇதோ மேடையில் லோஷன் மைக்குடன் ஏறுகின்றார்.
பதிவர்களின் பாட்டுக்கு பாட்டு… வலைப்பரப்பெங்கும் தமிழ் பரப்பி, தமிழுக்கு சிகரம்வைத்து, ஏராளமான மனங்களை வென்ற பதிவர்கள் சார்பில் இடம்பெறும் வேடிக்கை வினோத நிகழ்வு!
இந்த இனியவேளையில், மண்டபத்தினுள்ளே இயற்கையே குளிர்மையை கொலுவீற்றிருக்க செய்துள்ள இந்த இனியநேரத்தில், இந்த போட்டியை ஆரம்பித்து வைக்கின்றேன்ஃஃஃஃஃ
வாவ்....லோஷன் அண்ணாவின் பாத்திரப் படைப்பு அற்புதம்...

ஃஃஃஃஃஃமேடையை பார்த்து அதிர்கின்றார் லோஷன்ஃஃஃஃஃஃஃஃஃஃ
இது வேறயா...!!

Ramesh said...

என்னங்கடா இம்புட்டு ஆடுறியல். அவர் சும்மா ஒரு பதிவு (சும்மாவா இது)
போட நீங்க ஆளுக்காள் அடிச்சுக்கிறீங்க (வேறன்ன செய்ய)
ம்ம் இதுக்குமேல போட்டோ கொமண்டும் வேணுமா??

Kiruthigan said...

மதிசுதா மல்லிகைப்பூவ மொத்திவிட்டரையிட்டு கெக்கே பிக்கே என சிரித்தேன்... அண்ணாச்சி சுடுசோற்றயும் மொத்தி தான் திம்பீங்களோ..!!?

வரோண்ணா நீங்க செம கட்டை தான் ஒத்துக்கிறேன்...!

//கோபி இருந்த இடத்தில் இருந்து முகத்தை பின்பக்கம் திருப்பிக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றார்.//
அவர் எப்பல புன்னகை சிந்தாம இருந்தாரு...!!!
அது தெரியுது முகத்தை முன்பக்கமாவே வச்சிருக்கிறாரா பின்பக்கம் திருப்புறார்னு எப்பிடி கண்டு பிடிக்கிறீங்க..?

சுபாங்கனண்ணாவின் “கு” பாட்டு வெரி பன்டாஸ்ட்டிக் பர்பாமன்ஸ்...
மனுசன் அனுபவிச்சு பாடியிருக்கு...

ஆதிரை said...

ரசித்தேன்

ARV Loshan said...

ஜனா அண்ணே, கலக்கிறீங்க..
ரசனையை ஒரு ரகளை..
நீளமாப் பதிவு போடுறனான் எண்டதுக்காக உங்க பதிவு முழுக்கவே பேச வச்சிருக்கிறீங்களே.. ;)
பாட ஒரு வாய்ப்பாவது தந்திருக்கக் கூடாதா?
பரவாயில்லை..
cheers :)

யோ வொய்ஸ் (யோகா) said...

பின்னூட்டங்களுக்காக...

SShathiesh-சதீஷ். said...

விழுந்து விழுந்து சிரித்தேன் நண்பா. அன்மைக்காலமாய் பதிவுலகில் மொக்கை என்றாலும் பலர் பழைய போர்முக்கு வருவது சந்தோசம்.கலக்குங்கள்.

pichaikaaran said...

ம.தி.சுதா said...
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா ”

சூப்பர்...

LinkWithin

Related Posts with Thumbnails