இன்று நான் பதிவிடல் ஒன்றை மெற்கொண்டால் அது எனது ஐம்பதாவது பதிவாக இருக்கும். அனால் இன்னும் ஒரு முக்கியமான ஐம்பதுடன் ஏதேட்சையாக என்பதிவுகள் ஐம்பதை எட்டிய நாளும் பொருந்தியுள்ளது புதிராகவே உள்ளது.
இன்றுதான் தமிழ் அன்னையின் தவப்புதல்வர்களுள் ஒருவரான கலைஞானி கமல்ஹாசன் கலையுலகில் காலடி பதித்தநாள்;. இன்று அவரது கலைப்பணிக்கு பொன்விழா நாள், அதாவது 50ஆவது கலை உலக நிறைவு நாள்.
1959 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12 ஆம் திகதி பீம்சிங் இயக்கத்தில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் கலையுலகில் கால் பதித்தார் கமல்ஹாசன்.
அப்புறம் மேலும் சொன்னப்போனால் கமல்ஹாசன் பற்றிய ஒரு பதிவாகவே இந்தப்பதிவு மாறிவிடும். ஏன் என்றால் அந்த அளவுக்கு நான் அவரின் இரசிகர்களில் ஒருவன்.
பதிவுலகத்திற்கும், இணையத்தளங்களுக்கும் நான் புதியவன் அல்ல, என்பது பல மூத்த பதிவுலக மற்றும் இலக்கிய எழுத்தாளர்கள், மற்றும் உலகத்தமிழ் ஊடக நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த வேளைகளில் எழுத்துக்கள் என்னை உள்வாங்கிக்கொண்டபோது ஏற்பட்ட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கின்றேன்….
1992 ஆம் அண்டு, நான் ஆண்டு 09 இல் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது (அதற்கு முன்னர் சிறுவர் மலர்கள், ஞாயிறு இதழ்களில் கேட்ட கதைகள், சொல்லித்தந்த கட்டுரைகள், நண்பர்களுடன் பகிரும் நொடிகள் என்பன எழுதி பிரசுரிக்கப்பட்டதும் உண்டு) அப்போது யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருந்த அறிவுக்களங்சியம் நூலில் பல கட்டுரைகள் எழுதி பிரசுரிக்கப்பட்டது. அந்தக்காட்சட்டைப்பருவங்களில், கேட்கப்படும் கட்டுரைகளை எழுதி அஞ்சலிட்டுவிட்டு, அடுத்த சஞ்சிகை வரும் என ஒவ்வொருநாளும் நகம்கடித்திருப்பேன் வந்தவுடன் ஓடிச்சென்று அதைவாங்கி அதில் எனது கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது என்று அறிந்தவுடன், நல்லூரின் முன்னால் உள்ள புத்தக்கடையில் இருந்து எனது வீடுவரை நடக்கும்போது எப்படித்தான் எனக்குள் ஒரு கம்பீரம் புகுந்துகொள்ளுமோ தெரியாது.
அன்றில் இருந்து தேடிப்படிக்கவும், படித்ததை வைத்து கிறுக்கவும் ஆரம்பித்தேன். நூலகம் சென்று படிப்பது, யாரிடமும் இரவல் வாங்கி படிப்பது என்பவை எனக்கு சரிப்பட்டுவராத காரணத்தினால் தேவையான புத்தகங்களை சொந்தமாக வாங்கியே படிக்கப்பழகிக்கொண்டேன். அந்தப்பருவங்களில் ராணிக்கொமிக்ஸ் மாயாவியுடன் மற்ற மாணவர்கள் மாயாவியின் மண்டை ஓட்டுக்குறியை ஆராய்ச்சி செய்யும்போது நான் சேகுவாராவைப்பற்றி முழுமையாக அறிய அரம்பித்துவிட்டேன். இதைக்கண்டுபிடித்து என்னை அன்றே செதுக்க ஆரம்பித்தவர் எனது மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியை திருமதி.இராஜலட்சுமி. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் (யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் துணைவியார்.)
அதன்பின்னர் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய ஈழநாதம், நடத்திய 15 வயதிற்கிடையலானவர்களுக்கான கட்டரைப்போட்டியில் எனக்கு முதலாமிடம் கிடைத்தது. அதேபோல தமிழ்த்தின போட்டிகளில் கட்டுரை, சிறுகதை இரண்டுக்கும் ஒவ்வொருமுறையும் மாவட்ட மட்டங்கள் வரை போய் வென்றுவந்தேன்.(ஏன் தேசிய மட்டத்திற்கு போகவில்லை என்று கேட்பீர்கள் அன்றைய சூழ்நிலையில் அதி உச்சமாக நாங்கள் மாவட்ட மட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டோம். அதேபோல மறுபக்கம் கவிதைகளில் நண்பர் திருமயூரனும், பேச்சுக்களில் நண்பர் பிரியதீபன், நண்பர் திருக்குமரன் அகியோர் கலக்கிக்கொண்டிருந்தநேரம் அது.
1994 ஆம் ஆண்டு சாதாரண தரப்பிரீட்சைகளை முடித்து. 1995ஆம் ஆண்டு உயர்தரத்தில் நாங்கள் கற்கத்தொடங்கிய அந்த ஆண்டு என்னைப்பொறுத்தவரையில் என் எழுத்துக்களின் உச்சம் என்றுதான் பெருமிதம் கொள்வேன்.
அந்தக்காலம் மிக அழகானது. அறிந்தும் அறிமால் இருந்த புதிர்களுக்கு மேலும் புதிர்போட்ட காலங்கள் அவை. என்ன அதிசயம்! அதுவரை என்பகத்தில் பேசாமல் இருந்த பல நண்பர்களும், திடீரென கவிஞர்கள் ஆகிய பருவங்கள் அது. விவாத மேடைகளில் அனல் பறந்திருக்கின்றது. சில நண்பர்களின் ஆணித்தரமான விவாதங்களால் என் கர்வங்கள் தகர்ந்திருக்கின்றன. மீண்டும் எமது உயர்தரப்பரீட்சை நெருங்கும் 1997ஆம் ஆண்டு, பேராதனையில் பொறியியல் மாணவனான வரப்பிரகாஷ் என்ற மாணவன் பகிடிவதை, மிருகவதை ஆகியதால் இறந்துபோனான் எனக்கேட்டு ஆத்திரத்தில் உதயனுக்கு நான் எழுதிய பகிடிவதை பற்றிய கட்டுரையுடன் சமகாலநடப்பு தொடர்பாக, வெளியப்பiடான ஒரு எழுத்தாளனாக நான் உருவாகினேன். அந்த கட்டுரை அப்போதைய யாழ்ப்பாண பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாவர்கள் மத்தியில் (பலரும் எனக்கு தெரிந்தவர்கள்) ஒரு அலையினை ஏற்படுத்தி, ஒருவாரம் நான் ஒழிந்துதிரிந்த காலமது.
அதன்பின்னர் உதயன்பத்திரிகையில் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். அதேபோல ஈழநாதத்திலும், தின முரசிலும், எனது சில கட்டுரைகள், கவிதைகள், கதைகள், சொந்தப்பெயரிலேயே வெளிவந்தன.
அதன்பின்னர் பல்கலை உயர்கல்விக்காக நான் கொழும்பு வந்து, சிலகாலங்கள் கல்வியுடன் போனதால் எழுதும் வாய்ப்பு குறைந்தது. அதன் பின்னர் சுடர் ஒளி பத்திரிகை வரவைத்தொடர்ந்து பல ஆக்கங்கள், அனேகமாக அரசியல் ஆக்கங்களை எழுதினேன்.
மற்றப்பக்கம் என் கல்வித்தேடல் சட்டம், சமுகவிஞ்ஞானம் என்று போய்கொண்டிருந்தது. இயல்பாகவே ஊடகத்துறைமேல் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு செய்தி ஆசிரியராக, தயாரிப்பாளராக, சங்சிகை ஒன்றின் ஆசிரியராக, செய்தி இணையம் ஒன்றின் அமைப்பாளராக, அசிரியராக, சர்வதேச ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராக, இலங்கைக்கு அப்பாலும் உள்ள எழுத்து ஊடங்களின் கட்டுரை அசிரியராக, இணைய எழுத்தாளனாக என பல பாத்திரங்களுக்கு ஊடகம் என்னை இட்டுச்சென்றது. சில கட்டங்களில், தயாரிப்பு, ஸகிரிப்ட் எழுதல், நிகழ்ச்சி வழங்கல், ஒளித்தொகுப்பு, பொன்ற பலவேலைகளும் தனி ஆளான என்மீது விழுந்தவைகளும் உண்டு. அனேகமாக அப்போதெல்லாம் எனது சொந்தப்பெயரில் எந்த ஆக்கத்தினையும் எழுதவில்லை, கல்கி, மேகநாதன், நல்லைமைந்தன் ஆகிய பெயர்களில் எழுதிவந்தேன்.
பல காலங்களாகவே நண்பர்கள் வலைப்பதிவு ஒன்றை எற்படுத்தி எழுதுமாறு சொல்லி வந்தனர் நானும் 2003 தொடக்கம் பல புளக்களை பல பெயர்களில் தொடங்கி, பின்னர் அப்படியே கைவிடப்பட்ட வரலாறுகளே பெரும்பாலும் உண்டு. இந்த நிலையில்த்தான் எனது சொந்தப்பெயரிலேயே சுய முகவரியுடன் இந்த வலைப்பதிவை தொடங்கினேன். வேலைப்பழுக்களிலும், கற்றல் நடவடிக்கைகளுக்கும், குடும்பவிடயங்களுக்கும் இடையில் பிரச்சினை இல்லாமல் இந்த வலைப்பதிவு மட்டும் போய்க்கொண்டிருக்கின்றது, இந்த மூன்றுமாதங்களில் ஐம்பதாவது பதிவை தொட்டு நிற்பதும் எனக்கே பாரிய ஆச்சரியமாகவே உள்ளது.
உண்மையினைச்சொல்லப்போவதென்றால் பெரும்பாலான பதிவுகளை நான் பதிவேற்றும்போது பெம்பாலும் நேரம் நள்ளிரவு 12 மணியினை தாண்டியிக்கும். இருப்பினும் இந்த வலைப்பதிவில் எனது எழுத்து நடையினையே மாற்றி நான் பதிவிடுகின்றேன் என்பது உண்மைதான். ஏன் எனின் எனது முன்னைய பத்திரிகை மற்றும் பிரபல கணினிவலைப்பதிவு முகவரியில் நான் கைக்கொளும் எழுத்து நடையினை இதில் கைக்கொள்ளவில்லை. பல நண்பர்கள் இதனை என்னிடம் கேட்டுள்ளனர். காரணம் வலைப்பதிவுகளில் பலதரப்பட்டவர்களும் உலாவருவார்கள் என்பதால் எழுத்துக்கள் மிக எழிமையாக இருக்கட்டும் என மூத்த இலக்கியவாதி ஒருவர் எனக்கு அறிவுரை கூறியதால் மட்டுமே.
இதேவேளை இந்த வலையமைப்பில் தொடர்ந்தும் எனக்கு உறுதுணையாக அபிப்பிராயங்களை தெரிவிக்கும் நண்பர்கள், அதிக பின்னூட்டம் இடும் நண்பர்களான பிரதீப், அபர்ணா, மனோன்மணி, நிஜாம், மருத்தவர்.முருகானந்தம், கவிஞர்.எதுகைமோனையான், நண்பர் கோபி மற்றும் நான் யூதர்கள் -தமிழர்கள் என்ற பதிவை இட்டுவந்தபோது என்னுடன் மின்- அஞ்சல்வாயிலாக பல விடயங்கள் குறித்து அராய்ந்து ஆதரவு தந்த பல நாடுகளில் இருந்த தமிழ் இளையோர் அமைப்புக்கள், என் கட்டுரையினை அனைவரினதும் கண்ணுக்கு படவைத்த தமிழ்த்திரட்டிகள் அனைவருக்கும் இந்தநேரத்தில் என் நன்றிகள்.
அடுத்து இப்போது முக்கியம் பெற்றுள்ள ஒரு செய்தி இலங்கை பதிவாளர் சந்திப்பு. இது மிக மிக வரவேற்கத்தக்க ஒன்றே. இலங்கை பதிவர்கள் அனைவருக்கும் உரிய கௌரவத்தை கொடுத்து, ஒரு வட்டத்தினர், ஒரு குழுவினரின் ஆதிக்கத்தினுள் அந்த அமைப்பினை வைத்திருக்காமல் அனைத்து பதிவாளர்களின் கருத்துக்களுக்கும் உரிய கௌரவம் அளித்து இந்த சந்திப்புக்கள், தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில் ஆக்கபூர்வமாகன கருத்தரங்குகள், இலக்கிய முயற்சிகளுக்கு வழிகோருவார்கள் என நம்புகின்றேன். தற்போது நான் சென்னையில் இருப்பதாலும் அவர்கள் குறிப்பிட்ட நாளை அண்டிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் உள்ளதாலும் இந்த கலந்துரையாடலுக்கு சமுகமளிக்க என்னால் முடியவில்லை என்பது மனவேதனையே. ஐம்பதை தொட்டு விட்ட என்பதிவுகள் 5000களை தாண்டும்வரை இயற்கையும், என் தன்னமிக்கையும், எனது மனமும், நண்பர்களாகிய நீங்களும் எனக்கு ஒத்துளைப்பீர்களாக..
27 comments:
அடடா...என்னையும் உங்கள் வெற்றியின் பங்காளி ஆக்கிவிட்டீர்களே! முதலில் உங்கள் பதிவுகள் ஐம்பதை தொட்டதுக்கு எனது மனம் கனிந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும். உண்மையினை சொல்லப்போனால் உங்கள் பதிவுகள் அத்தனையுமே ஏதோ ஒருவகையில் உபயோகமானதாகவே உள்ளன என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. நாத்திகத்தின் சாரல் உங்களிடம் உள்ளதால் உங்கள் கடைசிவரியும் எனக்கு பிடித்திருக்கின்றது. மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே...
என்னவரை...மனமொழி மெய்களால் வாழ்த்துகின்றேன். மேலும் தரமான ஆக்கங்களை தொடர்ந்து பதிவிடுங்கள்..
50ஆவது பதிவை தந்துள்ள உங்களுக்கு எனது பாராட்டுக்கள் ஜெனா. உங்கள் பதிவுகளில் எனக்குப்பிடித்தது சமகால நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து நீங்கள் எழுதும் உலக நடப்புக்கள் தொடர்பான விரிவான அலசலே. அடுத்து யூதர்கள் - தமிழர்கள் என்ற தொடருக்காகவே உங்களை பாராட்டுவதில் எந்த பிழையும் இல்லை என ஆணித்தரமாக கூறமுடியும். அதேபோல உங்கள் சிறுவயது தாக்கத்தினை அடிப்படையாக வைத்து நீங்கள் எழுதும் "இலைதளிர் காலத்து உதிர்வுகள்" தொரையும் தொடர்ந்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். என்னையும் உங்கள் பதிவுகளில் நினைவுவைத்து நன்றி சொன்னதற்கு எனது நன்றிகள். வாழ்த்துக்கள்...
Pradeep said...

----------------
மிக்க நன்றி நண்பரே...என் பதிவுகள் தொடங்கிய காலத்தில் இருந்து எனக்கு பேஸ்புக்கில் அறிமுகமாகிய உங்கள் பங்களிப்பு மிகையானது. குறிப்பாக சில பின்னூட்டல் நண்பர்களுக்கு என் இடத்தில் இந்து நீங்கள் பதில் பின்னூட்டல் இட்மையும் என்னை சிலிர்க்கவைத்தது. இந்த ஐம்பது பதிவுகளிலும், பின்னூட்டல் இடுகைகளுக்கு நான் பதிலளிக்கவில்லை. ஆனால் ஐம்பதாவது பதிவில் இருந்து நண்பர்களின் பின்னூட்டல்களுக்கு கண்டிப்பாக பதிலளிப்பதாக எண்ணியுள்ளேன்.
Gowsi said...
என்னவரை...மனமொழி மெய்களால் வாழ்த்துகின்றேன். மேலும் தரமான ஆக்கங்களை தொடர்ந்து பதிவிடுங்கள்..
----------
மிக்க நன்றி, திருமதி. கௌஷல்யா ஜெனா அவர்களே.
முதலில் நான் உங்களுக்கு நன்றி தெரிவித்திருக்கவே வேண்டும். அனால் அது எனக்கு நானே நன்றி தெரிவித்ததுபோல ஆகிவிடுமே என்பதனால் தெரிவிக்கவில்லை. என்றாலும், என்வெற்றிகளின் பின்னால் எனது பதிவுகளின் முதல் வாசகியாக, எனக்கு சில சம்பவங்களை நினைவுபடுத்துபவராக உள்ள உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
என்னவளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
மனோன்மணி said...
50ஆவது பதிவை தந்துள்ள உங்களுக்கு எனது பாராட்டுக்கள் ஜெனா. உங்கள் பதிவுகளில் எனக்குப்பிடித்தது சமகால நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து நீங்கள் எழுதும் உலக நடப்புக்கள் தொடர்பான விரிவான அலசலே. அடுத்து யூதர்கள் - தமிழர்கள் என்ற தொடருக்காகவே உங்களை பாராட்டுவதில் எந்த பிழையும் இல்லை என ஆணித்தரமாக கூறமுடியும். அதேபோல உங்கள் சிறுவயது தாக்கத்தினை அடிப்படையாக வைத்து நீங்கள் எழுதும் "இலைதளிர் காலத்து உதிர்வுகள்" தொரையும் தொடர்ந்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். என்னையும் உங்கள் பதிவுகளில் நினைவுவைத்து நன்றி சொன்னதற்கு எனது நன்றிகள். வாழ்த்துக்கள்...
-------------
நன்றி ஐயா… தங்களைப்பற்றி அண்மையில்த்தான் அறிந்துகொண்டேன் தங்களைப்போல ஒரு பிரபலமான எழுத்தாளர் சிறியோனான என்னை தடவிக்கொடுப்பதற்கு நான் பெருமைகொள்கின்றேன். தங்கள் மேலான ஆசிகளையும், வழிகாட்டல்களையும் எதிர்பார்க்கின்றேன்.
தங்கள் வாழ்த்துக்களுக்கு எனது பணிவான நன்றிகள் ஐயா.
"என்னை அன்றே செதுக்க ஆரம்பித்தவர் எனது மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியை திருமதி.இராஜலட்சுமி. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள்"......
அந்த நாற்று வளர் நாளில், அருகிருந்த இந்த செடி இத்துணை வீரியமாய் விழுது
எறியும் என்று கண்டுகொண்ட அவருக்கு என் வாழ்த்துக்கள், அடுத்து ஐம்பதாய் ஆகிய நண்பரின் விடா முயற்சிக்கு என் மரியாதைகள்!! - மயூரன்
mayuran said...

------------
நன்றி கவிஞர் திருமயூரன் அவர்களே...கலைப்பட்டறையில் அந்த மத்திய கல்லூரி என்ற ஆலமரத்தின் விழுதுகளில் பண்கட்டி ஒன்றாக சுரம்பாடினோம், ஒன்றாக செதுக்கப்பட்டோம். அத்தகய நண்பனின் வாழ்த்துக்கள் இப்போது கிடைப்பது சுகம் சுகமே..நன்றிகள்.
இனியும் செதுக்க இடங்கள் இல்லை
இத்தனைக்கும் கண்கள்தான் வைத்தாகவேண்டும்..
முழுச்சிலையாய் நீ எழுத்துக்களில் ஆகிவிட்டாய்
முழுவதுமான உன்னைக்காட்ட தயக்கமென்ன?
நீ சொல்லாமலே பெரியாரிலும், கரி காலனிலும்
நீ கொண்ட பற்றுகள் புரிந்துகொண்டேன்
ஐந்தாயிரமா? ஐந்து இலட்சம் கோடுகள்
நீ..கீறினாலும் அவை சித்திரங்களே…
வாழட்டும் உன் கலை….
நன்றிகள் கவிஞரே..என்பதிவுகளில் பெரும் அக்கறை கொண்டு கருத்துக்களும் மின் அஞ்சல்களும் அனுப்புபவர் நீங்கள், தங்கள் பாவாழ்த்திற்கு மிக்க நன்றி. அப்புறம் எனக்கு இன்னும் இரண்டு.. மூன்றெழுத்து தமிழ் தலைவர்களையும் பிடிக்கும்.
"வலைப்பதிவு எண் உயர" நாங்களும் ஒளவையார் போல ஆகிட்டோம்ல...வாழ்த்துக்கள் ஜனா...தொடர்ந்தும் எழுதுங்கள். உங்களால்த்தான் இலங்கை பதிவாளர்களின் தரத்தினை முன்கொண்டுசெல்லமுடியும் என அணித்தரமாக நம்பகின்றேன்.
வாழ்த்துக்கள் ஜனா.
முதலில் வாழ்த்துக்கள் அண்ணா...அப்புறம் இந்திய இணைத்தளங்கள் சிலவற்றில் தங்கள் புகைப்படங்கள், பார்த்தேன். இலங்கையில் அமைதியாக இருந்துவிட்டு. இந்தியாவில் கலக்குகின்றீர்களோ? பேராசிரியர் பெரியார் தாசன், கார்ட்ரூன் மதன், எழுத்தாளர் பிரபஞ்சன் என்று பிரபலங்கள் பலருடன் கலக்குகின்றீர்கள்.
Vinoth said...
"வலைப்பதிவு எண் உயர" நாங்களும் ஒளவையார் போல ஆகிட்டோம்ல...வாழ்த்துக்கள் ஜனா...தொடர்ந்தும் எழுதுங்கள். உங்களால்த்தான் இலங்கை பதிவாளர்களின் தரத்தினை முன்கொண்டுசெல்லமுடியும் என அணித்தரமாக நம்பகின்றேன்.
-----------------------
மிக்க நன்றி வினோத். தங்கள் தொடர் பின்னூட்டல்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அப்புறம் கண்டிப்பாக நேரில் விரைவில் சந்திப்போம்.
டக்ளஸ்... said...
வாழ்த்துக்கள் ஜனா.
------------
நன்றி டக்ளஸ் மதுரை என்றாலே மனதில் தனி மதிப்பு வந்துவிடுகின்றது. வாழ்த்துக்கு மிக்க நன்றி.
Abarna said...
முதலில் வாழ்த்துக்கள் அண்ணா...அப்புறம் இந்திய இணைத்தளங்கள் சிலவற்றில் தங்கள் புகைப்படங்கள், பார்த்தேன். இலங்கையில் அமைதியாக இருந்துவிட்டு. இந்தியாவில் கலக்குகின்றீர்களோ? பேராசிரியர் பெரியார் தாசன், கார்ட்ரூன் மதன், எழுத்தாளர் பிரபஞ்சன் என்று பிரபலங்கள் பலருடன் கலக்குகின்றீர்கள்.
--------------------
நன்றி அபர்ணா...உங்கள் வாழ்த்துக்களுக்கு மனம் கனிந்த நன்றிகள். என்ன செய்வது, இலங்கையில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவிலாளர்கள் என்ற பெயர்களின் பின்னால் இருக்கும் பெரும்பாலானவர்களின் குணஇயல்புகள் எப்படி என்று உங்களுக்கு தெரியும்தானே. உதாரணத்திற்கு எனக்கு பின்னூட்டம் இடும் நண்பர்கள், வாழ்த்து தெரிவிக்கும் நண்பர்களை எடுத்துப்பாருங்கள், அனைவருமே இந்திய தமிழர்களாகவே இருக்கின்றார்கள்.
நீங்கள் படங்களில் அவர்களுடன் என்னை பார்த்ததாக சொல்லும் நபர்கள் என்னை கவர்ந்தவர்கள், நான் மதிப்பவர்கள், மனதுகளில் ஈகோவோ, தற்பெருமைகளோ,இன்றி தமக்கான ஒரு வட்டத்தை போட்டு அதற்குள் நிற்பவர்கள் அல்லர்.
Enathu Vazhukkal. Todarnthum...unkal sirantha Aakkankalai tharaveedum ennru Keedu Kolikireen. -Sagithya
வணக்கம் ஜனா அவர்களே.
இலங்கை பதிவாளர்களின் பதிவுகளை எவ்வளவு ஆசையாக நாம் பார்க்க ஆர்வமாக இருப்போம். சிலர் வெளிநாடுகளில் இருந்து தமிழ் உணர்வுடன் அட்காசமாக எழுகின்றார்கள். இந்த நிலையில் இலங்கையில் இருந்துகொண்டே நாசுக்காக பல விடயங்களை நீங்கள் எழுத்துக்களில் கையாளும்விதம் பாராட்டத்தக்கது. உங்கள் பதிவுகள் சிறப்பானதாக உள்ளது. பாராட்டுக்கள்.

அடடடா... வைரம்போல உள்ள ஈழத்தவன் உங்களை விட்டுவிட்டு இதுவரை நாளும் நாங்கள் பித்தளைகளைஅல்லவா...பெரிதாக நினைத்திருந்தோம்...வாழ்த்துக்கள் தோழரே. சோபா சக்தி போன்றவர்களை முகத்தின் முன்னால் அடித்த உங்களுக்கு ஒரு சலூட்.
அன்பு நண்பா,
வாழ்த்துகள்... ஐநூறுக்கும் உம்மை வாழ்த்த விழைகிறேன்... உங்களை என்னுடன் இணைத்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்...
பிரபாகர்.
வாழத்துக்கள். நண்பரே...பதிவர்கள் உலக அரசியல் பற்றி அதிகம் தராத காரணத்தினால், உங்களைப்போன்ற சில பதிவர்களே அது தொடர்பான hகவல்களை தருவதால் பெரும்பாலும் அதுபோன்ற தகவல்களை எதிர்பார்க்கின்றேன். உங்கள் பதிவுகள் சகலதையும் நான் இரசித்தாலும் றிப்பாக, ஒபமா, மியன்மார், ரஷ்ய -அமெரிக்க தலைவர்களின் செக், விமானவிபத்துக்கள், ஆர்ச்சிஸ் கொமிக்ஸ் பற்றிய மதல் தமிழ் தகவல், அது பனினர் ஆனந்த விகடனிலும் வந்தது. மைக்கேல் ஜக்ஸன், ஸாலியஸ் எஞ்சல்ஸ் நடிகை பற்றிய தகவல், வடகொரிய தகவல்;, மெக்ஸகோ தீவிபத்து தகவல், என உலக அரங்கம்பற்றிய ஆங்கில கட்டுரைகளை நிங்கள் தமிழில் தந்தது மிகவும் விரும்பி படித்ததுடன், மிகப்பெரும் பயனாகவும் இரந்தது. அந்த பதிவுகளால்த்தான் நான் உங்கள் தளத்திலேயெ இலகித்தேன். பாராட்டுக்கள் நன்றிகள்.
Sagithya said...
Enathu Vazhukkal. Todarnthum...unkal sirantha Aakkankalai tharaveedum ennru Keedu Kolikireen. -Sagithya
------------
நன்றிகள்.சாகித்யா..சுவிஸில் அண்மையில் இடம்பெற்ற உங்கள் நடன அரங்கேற்றம் பற்றி கேள்விப்பட்டேன். இணையதளம் ஒன்றில் சில படங்களும் பார்த்தேன். தங்களின் பெயர் நடனத்திற்கு சிறப்பாக பொருந்தியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. தங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்
Anonymous said...
வணக்கம் ஜனா அவர்களே.
இலங்கை பதிவாளர்களின் பதிவுகளை எவ்வளவு ஆசையாக நாம் பார்க்க ஆர்வமாக இருப்போம். சிலர் வெளிநாடுகளில் இருந்து தமிழ் உணர்வுடன் அட்காசமாக எழுகின்றார்கள். இந்த நிலையில் இலங்கையில் இருந்துகொண்டே நாசுக்காக பல விடயங்களை நீங்கள் எழுத்துக்களில் கையாளும்விதம் பாராட்டத்தக்கது. உங்கள் பதிவுகள் சிறப்பானதாக உள்ளது. பாராட்டுக்கள்.
-------------
இலங்கைப் பதிவாளர்களின் பதிவுகளை விரும்பி படிப்பதற்கு முதலில் எனது நன்றிகள். நீங்கள் சொன்னதுபோல வெளிநாடுகளில் இருந்து பல நண்பர்கள் மிகவும் தரமான பதிவிடுதல்களை மேற்கொள்கின்றனர். காலத்தின் தேவை கருதி உண்மையான எழுத்தாளர்களாக அவர்கள் செயற்படுவதை நானும் பாராட்டுகின்றேன். தங்கள் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்.
eelakesari said...
அடடடா... வைரம்போல உள்ள ஈழத்தவன் உங்களை விட்டுவிட்டு இதுவரை நாளும் நாங்கள் பித்தளைகளைஅல்லவா...பெரிதாக நினைத்திருந்தோம்...வாழ்த்துக்கள் தோழரே. சோபா சக்தி போன்றவர்களை முகத்தின் முன்னால் அடித்த உங்களுக்கு ஒரு சலூட்.
-------------
உங்கள் பாராட்டுதல்கள் எனக்கு கிடைத்தமை மிகப்பெரிய பெருமை தோழர்களே. அரசியலைக்கூட இத்தனை நகைச்சுவை நையாண்டியாக நீங்கள் கையாழும்விதம் என்னை கவர்ந்தவையே. பிறப்பினாலும், தேச எல்லைக்கோடுகளாலும் இந்தியர்களாக இருந்தபோதும், ஈழத்தமிழர்களின் விடயங்களில் உங்களின் தெளிவுகள், ஆச்சரியப்படத்தக்கவை. நன்றிகள்.
பிரபாகர் said...
அன்பு நண்பா,
வாழ்த்துகள்... ஐநூறுக்கும் உம்மை வாழ்த்த விழைகிறேன்... உங்களை என்னுடன் இணைத்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்...
பிரபாகர்.
-----------
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே!.... தொடக்கத்திலேயே மகிழ்ச்சிக்கான வழிமுறைகளைச்சொல்பவர் நீங்கள். உங்களை எப்போதோ என்னுடன் இணைத்துப்படிக்கத்தொடங்கிவிட்டேன் நண்பா...வருகைக்கும் வாழ்த்துக்களுக்கம் என் நன்றிகள்.
ashal said...
வாழத்துக்கள். நண்பரே...பதிவர்கள் உலக அரசியல் பற்றி அதிகம் தராத காரணத்தினால், உங்களைப்போன்ற சில பதிவர்களே அது தொடர்பான hகவல்களை தருவதால் பெரும்பாலும் அதுபோன்ற தகவல்களை எதிர்பார்க்கின்றேன். உங்கள் பதிவுகள் சகலதையும் நான் இரசித்தாலும் றிப்பாக, ஒபமா, மியன்மார், ரஷ்ய -அமெரிக்க தலைவர்களின் செக், விமானவிபத்துக்கள், ஆர்ச்சிஸ் கொமிக்ஸ் பற்றிய மதல் தமிழ் தகவல், அது பனினர் ஆனந்த விகடனிலும் வந்தது. மைக்கேல் ஜக்ஸன், ஸாலியஸ் எஞ்சல்ஸ் நடிகை பற்றிய தகவல், வடகொரிய தகவல்;, மெக்ஸகோ தீவிபத்து தகவல், என உலக அரங்கம்பற்றிய ஆங்கில கட்டுரைகளை நிங்கள் தமிழில் தந்தது மிகவும் விரும்பி படித்ததுடன், மிகப்பெரும் பயனாகவும் இரந்தது. அந்த பதிவுகளால்த்தான் நான் உங்கள் தளத்திலேயெ இலகித்தேன். பாராட்டுக்கள் நன்றிகள்.
---------
நன்றி தலை (அசல் என்னும் உங்கள் ஐ.டி.குறிப்பு) எனது வலைப்பதிவுகளுக்கு அப்பப்போ பின்குறிப்பு இடுபவர்களில் நீங்களும் ஒருவர். தங்கள் வாழ்த்துக்களுக்கும், என்னுடன்' கைகோர்த்தமைக்கும் நன்றி.
Post a Comment