இன்று தம் இனத்தைப்பற்றி, ஏளனம் செய்பவர்கள், மனதிலே வஞ்சம் வைத்துக்கொண்டு உலகத்திற்கு பரிதாபம் காட்டுகின்றோம் பேர்வழிகளாக அவர்களுக்கு இத்தனை மில்லியன் வழங்குகின்றோம் என்று தெரிவிப்பவர்களை எல்லாம் பார்த்தும், எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கும், தன்கபடங்களை மறைக்க எதிரிகள் எடுக்கும் கபட நடவடிக்கைகள் குறித்தும் யூதர்கள் அன்று விழிப்பாகவே இருந்தனர். இன்று அவர்களை ஏளனம் செய்யும் எதிரியின் குரல் அவர்களுக்கு அப்போது கேட்கவில்லை! “ ஏனெனில் யூதர்கள் சில பொழுதுகளில் யுத்தங்களில் தோற்றாலும், அவர்களுக்குரிய நாடு என்ற கொள்கையில் அவர்கள் நூறு ஆண்டுகள் முன்னோக்கிப்போய்விட்டவர்களாக ஒரே குறிக்கோள,; ஒரே எண்ணத்துடன் இருந்தார்கள். இன்றைய நாட்களில் இருக்கும் அவர்களின் எதிரிகளின் கூக்குரல்கள் அவர்களுக்கு கேட்பதற்கு நியாயமில்லை.
யூதர்களுக்குரிய நாடு ஒன்றுக்காக தாம் இழக்கக்கூடாதவற்றை எல்லாம் இழந்தாலும், ஒன்றல்ல இரண்டல்ல நூற்றாண்டாக சந்ததி சந்ததியாக அவர்களின் கனவு இஸ்ரேல் என்ற தேசமே. அவர்களின் மூச்சென இஸ்ரேல் அச்சு. அந்த தேசம் எனும் ஒரு நிரந்தர மோட்சத்திற்காக இன்று தமது மூச்சுக்களை முழுமையாக நிறுத்திக்கொள்ளவும் அவர்கள் தயாராகவே இருந்தனர்.
கபடதாரிகளும், இஸ்ரேல் என்ற தேசம் வர விரும்பாத சக்திகளும்;, ஏன் துரோகிகளாக இருந்த ஒருசில யூதர்களும் சேர்ந்து, தொடர்ந்தும், புனிதமான அவர்களின் பாதையினை மோசமாகக்கொச்சைப்படுத்தி, யூதர்களின் மனங்களை மாற்றி தமது குறுகிய இலாபங்களுக்காக யூதர்களின் காதுகளில் சாத்தான்களின் வேதங்களை ஓதாமல் இருந்ததும் இல்லை. அவர்களுக்குள்ளும் கில்பேர்ட் போன்ற எட்டப்பர்களும், இன்றைய தமிழர்களின் உதாரணங்களும் இல்லாமல் இல்லை.
ஆனால் ஒரு புனிதமான பயணத்தை தொடங்கிய அந்த இனம், தம் இனத்திற்கான தேசம் என்ற பாதையில் எத்தனையோ தங்கள் சந்ததிகளை கொட்டிக்கொண்டு சென்ற இனம், இந்த சாத்தான்களின் வேதங்களுக்கு செவிசாய்க்கவில்லை. தமக்கான தேசம் கிடைப்பது தள்ளிப்போவதுபோல் தெரிந்த வேளைகளில் அவர்கள் சோர்ந்துவிடாமல் இன்னும் தம்மை பலப்படுத்தி, மேலும் மேலும் புதிய வழிகளில் தந்திரங்களாக தமது காய்களை நகர்த்தினார்கள். உலகின்போக்குக்களை ஆழமாகப்பார்த்தார்கள். தமக்கு அதரவாக பக்கத்தில் இருக்கும் பட்டமரங்களைப்பிடிக்காமல், தூரத்தில் இருந்தாலும் புளியங்கொப்புக்களை பிடித்துக்கொண்டார்கள்.
இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்த கையோடு, பிரித்தானியா முன்னர் ஆதரவு தெரிவித்த 1917அம் ஆண்டு உருவான பல்ஃபர் பிரகனத்துடன் பிரித்தானியாவின் முன்னால் வந்துநின்றார்கள் யூதர்கள். இந்த இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்ற காலத்தினுட்கூட, இரகசியமாக யூதர்களின் புரட்சிப்படைகள் சிலவற்றை உருவாக்கி போர் பயிற்சிகள் கொடுத்து பலஸ்தீனத்தின் எல்லைப்பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்தனர் யூதர்கள்.
இந்தவேளையில் “எமது தாயகமான இஸ்ரேலை உருவாக்கிக்கொடுங்கள்” என்ற கோசங்களுடன் கலகங்களில் ஈடுபட்டனர் அந்த வீரர்கள். எங்கள் இறுதி மூச்சு உள்ளவரை பலஸ்தீனத்தை யூதர்களுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என பதிலுக்கு கலகங்களில் ஈடுபட்டனர் முஸ்லிம்கள்.
எனினும் தொடர்ந்தும் கும்பல் கும்பலாக யூதர்கள் வந்து குடியேறியவண்ணம் இருந்தனர், அவர்களுக்கான நிலங்களை யூத வங்கி வழங்கிக்கொண்டே இருந்தது. ஆனால் இந்த நிலையில் பிரிட்டனால் தனித்து ஒரு முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. ஒரு பக்கம் சக்திவாய்ந்த ரஷ்யா, மற்றப்பக்கம் இரண்டாம் உலகப்போரில் தனது சக்தியை குறுகிய காலத்தினுள் உலகத்திற்கு நிரூபித்துக்காட்டிய அமெரிக்கா. ஆனால் இந்த நிலையில் அரேபிய தேசங்களின் அதரவு தனக்கு கிடைக்கப்போவதில்லை. எனவே மத்திய கிழக்கில் தனக்கு அதரவளிக்க ஒரு தேசம் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது. இந்த தேவை பூ+ர்த்தியாகவேண்டும் என்றால் இஸ்ரேலை உருவாக்கியே தீரவேண்டும் என அமெரிக்கா நினைத்தது. அதற்குள் அமெரிக்காவுடனும் யூதர்கள் பல தொடர்புகளை மேற்கொண்டு. பல தரப்பு உயர் மட்ட பேச்சுக்களையும் பேசிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், யூதர்களுக்கு தனிதேசம் ஒன்றை அமைத்துக்கொடுக்கும் முடிவை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டது. என்றாலும் அதை எப்படி பிரித்துக்கொடுப்பது என்று குழம்பிக்கொண்டிருந்தது. பிரிட்டனால் ஒரு முடிவை எடுக்கமுடியாதிருந்தது. என்றாலும் எடுக்கும் முடிவு யூதர்களுக்கு மிகவும் சாதகமாக அமையவேண்டும் என்பதில் அது மிகத்தெளிலாகவே இருந்தது.
1947 பெப்ரவரி 14அம் திகதி இந்தப்பிரச்சினைக்கு பதில் காணும் பொறுப்பை பிரிட்டன் ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்தது. ஐக்கிய நாடுகள் சபை ஒரு தேசத்தை யூதர்களுக்கு உருவாக்கிக்கொடுக்க அதற்கேற்ற அளவில் யூதர்கள் இருக்கின்றார்களா? என்று தலைகளை எண்ணிக்கொண்டது. இதன் நிமித்தம் தனது அறிவிப்பை வெளியிட்டது,
* பலஸ்தீன் இரண்டாகப்பிரிக்கப்படுகின்றது. யூதர்களுக்கான தனி நிலப்பகுதி ஒன்று அமைக்கப்படும், அந்த நிலத்தின் பெயர் இஸ்ரேல். அந்த பகுதிபோக பூர்விக அரேபிய முஸ்லிம்கள் வாழும்பகுதி பலஸ்தீன் என்றே இருக்கும்.
* இரண்டு தேசங்களிலும் இரண்டு இனத்தவர்களும் வசிக்கலாம். இஸ்ரேலில் இருக்கும் 4,98,000 யூதர்களுடன், 4,07,000 அரேபியர்கள் வசிப்பார்கள். அதேவேளை பலஸ்தீனத்தில் இருக்கும் 7,25,000 அரேபியர்களுடன் 10,000 யூதர்கள் வசிப்பார்கள். ஒற்றுமையினை கட்டிக்காப்பதற்காகவும், புவியியல் ரீதியாகவும் இந்த ஏற்பாடு அமையும்.
* ஜெருசலேம் பிரச்சினைக்குரிய இடமாகக்கருதப்படுவதனால் அது இஸ்ரேல் வசமோ அல்லது பலஸ்தீன் வசமோ ஒப்படைக்கப்படாது. ஐக்கிய நாடுகள் சபையே அதனை நிர்வகிக்கும். ஜெருசலேம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளான பெத்தலகேம், பெயித் ஜெல்லா ஆகிய இடங்களில் பெரும்பாலும் அரேபியக்கிறிஸ்தவர்கள் வசித்துக்கொண்டிருக்கின்றார்கள். இது மூன்று மதத்தினருக்கும் உரிய புனித இடம் எனவே இனிவரும் காலங்களில் அவர்களுடன் இணைந்து 1,05,000அரேபிய முஸ்லிம்களும், ஒரு இலட்சம் யூதர்களும் வசிக்கலாம்.
* கலிலீ மலைப்பகுதியில் மேற்குப்பகுதி முழுவதும் பயிரிடுவதற்கும் விவசாயத்திற்கும் ஏற்றது. அது அரேபியர்களின் வசம் இருக்கும்.
நெஹவ் பாலைவனப்பகுதி இனி யூதர்களின் வசம் இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
இந்த தீர்மானத்தை ஐ.நா.அறிவித்து முடித்த உடனடியாகவே பலஸ்தீன் கலவரங்கள் நிறைந்த பூமியாக மாறியது. அரேபியர்கள் ஆயுதங்களுடன் வீதிக்கு இறங்கி போரடினார்கள். துப்பாக்கிகள் ஓயாமல் வெடித்தன. எங்களுக்குரிய நிலத்தை யூதர்களுக்கு பிரித்துக்கொடுக்க நீங்கள் யார்? உச்சபட்ச கோபத்தை கொப்பளித்தார்கள் அரேபியர்கள்.
இந்த கலவரங்களின் மத்தியிலும் யூதர்கள் வெற்றிப்புன்னகையுடன் வலம் வந்தார்கள். அவர்களின் எத்தனை தியாகங்கள், எத்தனை நூற்றாண்டு கனவுகளின் மூலம் நிறைவேறிய தருணம் இது. கடவுள் எம் இனத்திற்கு எனறு கொடுத்த தேசம் எமக்கு திரும்பக்கிடைத்துவிட்டது. மீண்டும் மோஸசே ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக வந்து “இஸ்ரேல் யூதர்களின் நாடு” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவித்து கொண்டாடினார்கள். ஒருவரை ஒருவர் அன்புடன் ஆரத்தளுவி தமது நூற்றாண்டு கஸ்டங்களை எண்ணி ஆளுதார்கள். வீடுகளை, வீதிகளை அலங்கரித்தார்கள், இனிப்புக்களை ஒருவருக்கொருவர் வாயில் அள்ளித் திணித்து ஆனந்தத்தில் திளைத்தார்கள். தமக்கான தேசம் மலர்வதை ஒரு உலகப்பெருவிழாவாகவே உலகம் வாழ் யூதர்கள் அத்தனைபேரும் குதூகலித்து கொண்டாடினார்கள்.
1947 நவம்பர் 29 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூடியது. சிறப்பு ஆணைக்குழுவின் முன் இந்த “இஸ்ரேல் எனும் தேசம் உருவாக்கப்படல்” என்னும் பொருளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு 33 நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையால் இஸ்ரேல் என்ற தேசம் அங்கீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
துமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நேரடியாகவே தமது பிரதிநிதிகளை போய் நன்றி சொல்ல வைத்தனர் உலகம் முழுவதும் வாழும் யூதர்கள். இந்த நாடுகளுக்கு தாம் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும், அவர்களுடன் இஸ்ரேல் காலம் முழுவதும் நல்லுறவைப்பேணும் எனவும் தெரிவித்தனர். ஆனால் மறுபுறத்தில் பலஸ்தீனத்தில் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே சென்றது. யூதர்களுக்கு எதிரான படுகொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் என அரேபியர்களின் அட்டகாசங்கள் கட்டுக்கடங்காமலே சென்றுகொண்டிருந்தன.
திடீர் திடீர் என அரேபிய முஸ்லிம் தீவிரவாதக்குழுக்கள் முளைத்தன. யூதர்கள் முதலில் தற்காப்பு தாக்தல்களை மட்டுமே நடத்தினார்கள். நிலமைகள் கட்டுக்கடங்காமல் போகவே அரேபியர்களின் கிராமங்கள் சிலவற்றை தேர்தெடுத்து திடீர் தாக்குதல்களை நடத்தினர்.
1948 மே மாதம் 15ஆம் திகதியோடு பலஸ்தீனில் இருக்கும் தனது படைகள் அத்தனையினையும், பிரிட்டன் விலக்கிக்கொள்ளும், என பிரிட்டன் அறிவித்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யூதர்கள் அத்தனைபேரையும் கொன்று குவிக்கவேண்டும் என அரேபியர்கள் தமது நடவடிக்கைளை ஆரம்பித்தனர். அருகே உள்ள அத்தனை முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் அவர்களுக்கு கிடைத்தது. அந்த முஸ்லிம் நாடுகளிடமிருந்து பெரும் தொகையான ஆயுதங்களை வாங்கிக்குவித்தனர் அரேபிய முஸ்லிம்கள். ஒவ்வொரு யூதக்கிராமங்களுக்குள்ளும் புகுந்த அரேபிய முஸ்லிம்கள் இரக்கமின்றி யூதர்களை கொனறு;குவித்து, மனைகளையும் தீயிட்டு கொழுத்தினார்கள். ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி 1948 ஆம் ஆண்டு ஷர் ஈஜன் என்ற யூத நகருக்குள் புகுந்த அரேபிய முஸ்லிம்கள் அந்த கிராமத்தில் இருந்த குழந்தைகள் உட்பட 200 யூதர்களை கோரமாகக்கொன்றனர்.
இஸ்ரேல் பிறக்கப்போவதென்னமோ உறுதியாகிவிட்டது. அனால் அதற்கு முன்னர் எவ்வளவு யூதர்களை பலஸ்தீனத்தில் இருந்து அடித்து வெளியே துரத்த முடியும் என்று அரேபியர்கள் கணககுபபோட்டுக்கொண்டனர். ஆனால் காலங்காலமாக பலரால் துரத்தியடிக்கப்பட்டு, பலஸ்தீனத்தை விட்டு தரத்தப்பட்ட யூதர்கள் இந்த முறை ஓடுவதற்கு தயாராகவில்லை. மாறாக இந்த ஆரேபிய முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் புகட்டுவதாக சபதம் செய்துகொண்டனர்.
எப்போது பிரிட்டன் தனது படைகளை முழுவதும் விலக்கிக்கொள்கின்றதோ, அடுத்த நொடியிலேயே யூதர்கள் மீது கடும் தாக்குதல்களை நடத்த அரேபிய முஸ்லிம்கள் தயாராகிக்கொண்டிருந்தனர். துணைக்கு அண்டைய முஸ்லிம் நாடுகளான எகிப்து, சிரியா, லெபனான், ஜோர்தான் ஆகிய நாடுகள் தம் படைகளுடன் எல்லைப்பகுதிகளில் காததுக்கொண்டிருந்தனர்.
இஸ்ரேலின் அரசியல்க்குழுத்தலைவர் பென் குரியன், பிற நாட்டு தலைவர்கள், மற்றும் இராணுவ தளபதிகளுடன் அவசர அலோசனைகளில் ஈடுபட்டார். படை பலம் மற்றும் ஆயுத பலம் இன்றி, அரேபிய முஸ்லிம்களின் வலிந்த தாக்குதல்களை எப்படி முறியடிப்பது என வியூகங்கள் அமைக்கப்பட்டது.
மே 13ற்கு முன்னதாகவே பலஸ்தீனத்தில் இருந்து பெரும்பாலான பிரிட்டன் படைகள் விடைபெற்றுச்சென்றன.
இன்னும் ஒரு நாள், நூற்றாண்டு யூதர்களின் கனவுகள், அந்த கனவுகளுக்காக காலங்காலமாக தமது உயிரை அர்ப்பணித்த யூதர்களின் தியாகங்கள் ஒப்பேறும் நன்நாள், நாளை யூதர்களுககு சுததந்திரம். யூதர்களுக்கான இஸ்ரேல், அவர்களின் இலட்சியம் நிறைவேறப்போகும் நாள் வரப்போகின்றது. யூதர்கள் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு சூழலில் இருந்தார்கள்.
இஸ்ரேல் பிறந்த மறு நொடியே அரேபியர்கள் தாக்கினால் என்ன? இந்த எமது இலட்சியம் நிறைவேறும் சந்தோச உணர்வே எமது பலத்தை பன்மடங்கு அதிகரிக்குமே! சாமாளித்துவிடலாம். ஐக்கிய நாடுகள் சபை இருக்கின்றது, பிரித்தானியா இருக்கின்றது. அமெரிக்கா இருக்கின்றது இவை பார்த்து எமது தேசத்தை மீட்டெடுத்து கொடுத்துவிடுவர். என தம் மனதை தேற்றிக்கொண்டு நாளை மலரும் தங்களுக்கான தேசத்தினை வரவேற்கும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். எனினும் எச்சரிக்கையுடன் தமது பாதுகாப்பினை உறதிப்படுத்தியவாறே இருந்தனர்.
மே 14, யூதர்களின் நூற்றாண்டுக்கனவுகள், இந்த நூற்றாண்டுகளில் தமக்கான தேசத்தின் ஏக்கத்துடன் மடிந்த கோடிக்கணக்கான யூதர்களின் ஏக்கங்கள் நிறைவேறும் நாள் வந்தது.
பலஸ்தீனத்திற்கான பிரிட்டனின் ஆளுநர் விடைபெற்று சென்றார். அவரை வழியனுப்பிவிட்டு, யூதர்களின் அரசியல்த்தலைவர் பென் குரியன் உதடுகள் துடிதடிக்க கண்ணீர் சொரியும் தனது கண்களுடன் இந்த அறிவிப்பை உலக வாழ் யூதர்களுக்கு விடுத்தார்,
“இதோ இன்றுமுதல் எங்கள் யூதர்களின் கனவு, எங்கள் முன்னையவர்களின் ஏக்கங்கங்கள், அவர்களின் தியாகங்களுக்குரிய யூதர்களின் தேசமான இஸ்ரேல் பிறக்கின்றது என உணர்ச்சி பொங்க தழு தழுத்த குரலில் கண்களில் கண்ணீர் சொரிய அறிவித்தார்”
அந்த நொடி ஒட்டுமொத்த உலக யூதர்களும் உடைந்து அழுத்தார்கள். உலகில் உள்ள அத்தனை யூதர்களும் தமது மனங்களில் இந்த இலட்சியங்களுக்காக தமது உயிரை அர்பணித்தவர்கள் ஒவ்வொருவரையும் தொழுதார்கள்.
அப்பா…எத்தனை கோடி யூதர்களின் உயிர், எத்தனைபேரின் உயிர்த்தியாகங்கள், எத்தனை தடைக்கற்கள், எத்தனை வலிகள், எத்தனை அவமானங்கள், எத்தனை பாடுபடல்கள் அத்தனையும் ஈடேறும்போது, அந்த உச்சக்கட்ட சந்தோசத்தின்போது ஆழுகைதான் வரும் என்பது அன்று அந்த யூத இனத்தைப்பார்த்து உலகம் புரிந்துகொண்டது.
அந்தக்கணப்பொழுதுகளில் யூதர்களின் மனக்கண்களின் முன்னால் மோசஸ் தெரிந்தார்….
தொடரும்….
13 comments:
அந்த சந்தோசமான அறிவிப்பும், அந்த உச்ச சந்தோச ஆளுகைகளும் தமிழர்கள் அனுபவிக்கும் நாளை என்றோ ஒரு நாள் அனுபவிப்போம்.
மிக மிக…காலத்தக்கு பொருத்தமான பதிவு தோழரே…பாராட்டுக்கள். –கிருபாகரன்
You are doing Good job Man. very good Article
சில சமயங்களில் அலைபாய்ந்த மனது தங்களின் தொடரினை படித்து ஒரு தெளிவுக்கு வந்துவிட்டது. நன்றி அண்ணா. தொடர்க உங்கள் பணி
I think you know Palestine is home country for both Arabs and Jews. Then why u r comparing Tamilils with Jews. Perhaps you should compare with Shinhalas with Jews and Tamiliaans with Palestine Arabs. Palestinians are sacrified and stuggled a lot to save their country in many wars from christians. But jews were cowards who ran out of palestine in history, not saving their country in many wars. Citizen should save their country not to show their back. Jews are cunning fellows who occupied palestine country from illiterate arabs. Shame on them. I think you read some article which makes sympathy on Jews.
Dont ever compare jews with Tamilians who are brave.
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரடின கதையால இருக்கு
நாமும் இதே மாதிரி ஒடுக்குமுறைகளை சந்தித்து வருபவர்கள் என்ற ரீதியில் யூதர்களின் உணர்வுகள் எப்படி இருந்திக்ககூடும் என்று விளங்கிக்கொள்ள முடிகிறது. எதிரிகளை விட இந்த சாத்தான்களிடம் இருந்து நம்மினத்தை முதலில் மீட்டெடுக்க வேண்டும்.
ஜெனா தன் எழுத்துக்கள் மூலம் எதைச்சொல்லவருகின்றார் என்று உங்களால் புரிந்துகொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும் நண்பர் நிஸாம் அவர்களே..யூதர்களைப்போல தொடர்ந்து ஒடுக்கப்பட்ட இனம், யூதர்களைப்போல உலகம் எல்லாம் பரவிய இனம், தமிழ் இனம். உலகமெலாம் பரவிய யூதர்கள் என்ற இனத்தவர்கள் தமது தேசத்தை அமைப்பதற்கு எப்படியெல்லாம் பாடுபட்டனவோ, எப்படி தன் இனத்தை வளப்படுத்தினதோ அதையே தமிழர்கள் யூதர்களைவிட இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் என்று சொல்லவருகின்றார். அது தவிர யூதர்களை எப்படி சிங்களவர்களுடன் ஒப்பிடுவது சொல்லுங்கள்? நண்பர் ரதீசனின் பின்னூட்டல் இந்திரஜித், மனோன்மணி ஆகியோரின் பின்னூட்டல்கள் எதைக்குறிக்கின்றது என்பதை உங்களுக்கு புரியவைக்கும்.
பலஸ்தீனர்களை ஏன் தமிழர்களுடன் ஒப்பிடக்கூடாது என நண்பர் நிஷாம் கருத்து தெரிவித்துள்ளார். நல்லது…ஸ்ரீ லங்காவில் பெரும் இனக்கலவரம் நடத்திய அந்த நாட்டு அரசின்மீது ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு அந்த ஸ்ரீ லங்கா அரசாங்கத்திற்கு சாதகமாக நின்று கேவலமான செயலை பலஸ்தீன் செய்ததை நண்பர் எப்படி எடுத்துக்கொள்வார்?
please give the right history
think you know Palestine is home country for both Arabs and Jews. Then why u r comparing Tamilils with Jews. Perhaps you should compare with Shinhalas with Jews and Tamiliaans with Palestine Arabs. Palestinians are sacrified and stuggled a lot to save their country in many wars from christians. But jews were cowards who ran out of palestine in history, not saving their country in many wars. Citizen should save their country not to show their back. Jews are cunning fellows who occupied palestine country from illiterate arabs. Shame on them. I think you read some article which makes sympathy on Jews.
Dont ever compare jews with Tamilians who are brave.
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரடின கதையால இருக்கு
think you know Palestine is home country for both Arabs and Jews. Then why u r comparing Tamilils with Jews. Perhaps you should compare with Shinhalas with Jews and Tamiliaans with Palestine Arabs. Palestinians are sacrified and stuggled a lot to save their country in many wars from christians. But jews were cowards who ran out of palestine in history, not saving their country in many wars. Citizen should save their country not to show their back. Jews are cunning fellows who occupied palestine country from illiterate arabs. Shame on them. I think you read some article which makes sympathy on Jews.
Dont ever compare jews with Tamilians who are brave.
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரடின கதையால இருக்கு
Sorry to say that. Don’t Read this Article with Your Religion Think Mr.Nizam. You can’t Understand Eelam Tamils Pains.
தமிழர்கள் இன்று யூதர்கள்போல செயற்படவேண்டும், யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசத்தை எவ்வாறு அமைத்துக்கொண்டார்களோ அதேபோல தமிழர்களுக்கான ஒரு தேசத்தை நாம் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் யூதர்களுடன் தமிழர்கள் ஒத்துப்போகும் சில இடங்கள், தமிழர்கள் யூதர்களாக மாறுவற்கு இன்னும் எடுக்கவேண்டிய விஸ்வரூபங்கள், மாற்றிக்கொள்ளவேண்டிய குண இயல்புகள், இன்னும் செய்யத்தயாராக வேண்டியுள்ள தியாகங்கள் என பலவற்றை சுட்டிக்காட்டவேண்டிய தேவை வந்துள்ளது. எனவே யூதர்கள் மற்றும் இஸ்ரேல், பற்றிய இந்த ஆய்வுத்தொடரினை நீண்டதாக அல்லாமல் மிகவும் சுருங்கியதாக........இது தான் இந்த தொடரை எழுதும்போது இந்த வலைப்பதிவர் தெரிவித்த கருத்து…இங்கு ஜூதர்களுடன் அவர் தமிழர்களை ஒப்பிடவில்லை. அவர் எடுத்துக்கொண்ட விடயம் இன்றைய நிலையில் இருக்கம் தமிழர்களுக்கு மிகவும் தேவையான தொடர், இவற்றை முழுமையாக புரிந்துகொள்வது முக்கியம்.
I am replying for all you post.
First for Pradeep ,
I understood wat he is coming to say. I am not uneducated to not understanding the CORE. I will be also happy if Tamil Ezham get freedom in SriLanka. Yes I agree Tamilians and Jews are and were stuggled a lot. Yeah Tamilians must get land for Live in FREEDOM. I agree Jews were Planned a lot to form this country with Intelligence and CUNNINGNESS.
//
அது தவிர யூதர்களை எப்படி சிங்களவர்களுடன் ஒப்பிடுவது சொல்லுங்கள்? // This is your question. Rite? I send u one mail regarding this. I need ur mail Id. I wont misuse.
For கவிஞர் எதுகைமோனையான்:
Sorry. I dont know Race Attack in Srilanka that supported by Palestine. I want to read that article. if u could provide me the link. If Race Attack supported by Palestine,then i must agree Palestinians are crucial.
For Anonymous :
Its a not small history to explain in one paragraph. Its 4000 years history need to be explained in 1000 of pages. I dont have tat much knowledge.
பச்சையா சொன்ன " இது ஒரு பங்காளி சண்ட "
For Abarna:
I am sorry if i written anything related to Religion. How did you think its Religion bcoz of my NAME. i dont know wat to say.ப்ச் வெருதிட்டேன்
me too know value of single SOUL and Pain inside it. I am also Tamilian . i think u are saying me tat not having PATRIOTISM
Pradeep:
//அவர் எடுத்துக்கொண்ட விடயம் இன்றைய நிலையில் இருக்கம் தமிழர்களுக்கு மிகவும் தேவையான தொடர், இவற்றை முழுமையாக புரிந்துகொள்வது முக்கியம் //
me too looking for that One.
I think u peoples not understand wat i am coming to say.
wat i said was,
Jews ran out of Palestine before 1800 years bcoz of war and not saving their COUNTRY.
Palestine ARAB stayed in country and fought and fighting till date, stuggled a lot in their own country.
Jews moved to various locations. They have one mentality to dominate anothers. Tats why they stuggled a lot by the country peoples where they stayed.
Shinhalese are same kind of persons who dominating others.
Watever it is, Tamil Ezham must have FREEDOM.
Post a Comment