Wednesday, June 3, 2009

உலக வரலாற்றில்.ஜூன் மாதம் 03 ஆம் நாள்.

1539 - ஸ்பானிய நாடுகாண் பயணி ஹெர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை ஸ்பெயினுக்காக உரிமை கொண்டாடினான்.

1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வேர்ஜீனியாவின் ஹனோவர் நகரில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளைத் தாக்கினர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படை பாரிஸ் நகரில் குண்டுகளை வீசின.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் நகரில் இடம்பெற்ற போடரில் ஜெர்மன் படைகள் வெற்றி பெற்றன. நட்பு அணி நாடுகள் முழுமையாகப் பின்வாங்கின.

1962 - பிரான்சின் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

1965 - நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.

1969 - தெற்கு வியட்நாமில் ”மெல்பேர்ன்” என்ற அவுஸ்திரேலியப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.

1984 - அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.

1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.

1991 - ஜப்பானில் உன்சென் மலை வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார்.

1998 - ஜெர்மனியில் கடுகதி தொடருந்து ஒன்று பாதையை விட்டு விலகியதில் 101 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - 2001இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.

2006 - மொண்டெனேகுரோ நாடு செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.

2007 - கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2007 - தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.

பிறந்த பிரபலங்கள்.

1808 - ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இ. 1889)

1924 - மு. கருணாநிதி, தமிழ் நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்

1931 - ராவுல் காஸ்ட்ரோ, கியூபாவின் அரசுத் தலைவர் 1961 - லோறன்ஸ் லெஸிக், அமெரிக்கக் கல்வியலாளர்

1966 - வசீம் அக்ரம், பாகிஸ்தான் துடுப்பாட்டக் காரர்

இறந்த பிரபலங்கள்.

1657 - வில்லியம் ஹார்வி, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1578)

1963 - பாப்பரசர் 23ம் ஜோன், (பி. 1881)

1975 - எய்சாக்கு சாட்டோ, ஜப்பானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)

1989 - அயதொல்லா கொமெய்னி, ஈரானிய மதத் தலைவர் (பி. 1900)

1990 - ராபர்ட் நாய்சு, அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1927)

2000 - ஜெய்சங்கர், தமிழ் நடிகர்

2001 - அந்தனி குயின், ஹாலிவுட் நடிகர் (பி. 1915)

2007 - ரத்னமாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

(தொகுப்பு -விக்கிபீடியா, ஏ.பி.பிரஸ், கிஸ்ரோரிக்கல் அவுட்லுக்.)

3 comments:

Pradeep said...

Ooooh...Happy Birth Day wasim akram.

SMOKY said...

சின்னப்புள்ளத் தனமா என்ன இது.. விக்கிபீடியாவுக்குப் போய் காப்பி அடிச்சு அதை ஒரு பதிவாப் போடுறியே... போ போ.. போய் வேற வேலையப் பாரு..

Unknown said...

பதிவிலேயே இவை விக்கிபீடியா, ஏ.பி, கிஸ்ரோரிக்கல் அவுட்லுக் ஆகியவற்றின் தொகுப்பு என்று சொல்லியும், அவற்றின் கொப்பி என்கின்றார் ஒரு கண்டுபிடிப்பாளர். வரலாறுகள் வரலாறுகள்தானே நாம் என்ன புதிதாக எழுதவா முடியும்? கொஞ்சம் மெருகூட்டி ஒளித்தொகுப்புடன் பார்க்க நன்றாகவே உள்ளது. ரீமிக்ஸ் பாட்டுகளையும், ரீமேக் படங்களையும் மட்டும் வாய்கிழிய சிரித்துக்கொண்டு விசிலடித்துப்பார்க்கும் கூட்டம்தான் இது நண்பரே. இந்த வைக்கல்பட்றையில் படுத்திருப்பதுகளை விட்விட்டு உங்கள் பதிவுகளை தொடருங்கள் நண்பரே…

LinkWithin

Related Posts with Thumbnails