Tuesday, June 2, 2009

தமிழிசையின் இமயம் இன்று தனது 66 ஆவது அகவைக்குள் கால்பதிக்கின்றது.


சில மரபுகள் உடைக்கப்படும்போதுதான் புதியதொன்று உருவாகின்றது. அனால் உடைக்கப்படும் அந்த மரபு அது உடைக்கும் துறையின் அஸ்திவாரத்தையே தகர்க்காமல் உடைத்துக்கொண்டு புதுப்பாதையில் செல்லவேண்டும். அப்படித்தான் இந்த தமிழ் உலகு அன்னக்கிளியிலே, வயல்வெளிகளிலும், கிராமியப்பாடல்களிலும், மக்களுக்கு நெருக்கமான இசையில் “மச்சானைப்பார்த்தீங்களா மலைவாழைத் தோப்புக்குள்ளே, குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்துச்சொல்லு வந்தாரா பார்க்கலையே” என்று மக்களோடு நெருக்கமான ஒரு இசையில் வந்தபோது தமிழ் உலகம் சற்று நின்று அதை உள்வாங்கிக்கொண்டது.
கல்லும் முரடுமாண முட்பாதைகளால் மனதிலும், உடலிலும் ரணங்களைச்சுமந்து, வந்திருந்தாலும், அந்த ரணங்களைத் துடைத்து சுரங்களாய் மாற்றி தமிழிசைக்கு பல வரங்களாய் வந்தவர்தான் இளையராஜா.
இசையமைப்பில் மட்டும் இன்றி ஆன்மிகத்திலும், இலக்கியத்திலும், கவிதை புனைவதிலும் இளையராயாவுக்கு ஈடுபாடு அதிகம். இசையமைப்பது மட்டும் அன்றி நெஞ்சைத்தொடும் கவிதைகள், பாடல்கள் எழுதுவிதிலும், கைதேர்ந்த வசனநடையில் கட்டரைகள் வரைவதிலும் இளையராஜா விற்பன்னரே.
அந்த வகையில் அவர், சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்), வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு), வழித்துணை, துளி கடல், ஞான கங்கா, பால் நிலாப்பாதை, உண்மைக்குத் திரை ஏது?, யாருக்கு யார் எழுதுவது?, என் நரம்பு வீணை, நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு), பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள், இளையராஜாவின் சிந்தனைகள் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைகழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைகழகத்தினாலும் முனைவர் பட்டம் (டொக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.

திரை இசைகள் மட்டும் இன்றி மிக அற்புதமான நெஞ்சை நிறைக்கும், ஒன்று : காற்றை தவிர வேறில்லை (Nothing But Wind ),மற்றொன்று : எப்படிப் பெயரிட்டு அழைப்பது ( How to Name It ) இவையிரண்டும் இசையின் இன்னொரு பரிமாணம். அதை வார்த்தைகளால் வர்ணிப்பது என்பது குயிலின் குரலை காகிதத்தில் எழுதிப்படிப்பதற்கு ஒப்பானது.

இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் ஊரில் பிறந்தார் (1943 ஜூன் 02). இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய சகோதரர்கள்;. இவரது அண்ணன் பாவலர் வரதராஜன், தம்பி அமர் சிங் எனப்படும் கங்கை அமரன். சிறுவயதிலேயே ஹார்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். இதன் மூலம் தமிழர்களுக்கு தமிழர்களை அறிமுகப்படுத்தினார் இளையராஜா.

இவவரது இசை பிரவேசத்தை அத்தனைபேரும் ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்லுவதற்கில்லை. “வெறும் டப்பாங்குத்து….” என்ற உதடுகளும்…“தவுல் பார்ட்டி….” என்ற உதடுகளும்…“எண்ணி எட்டே படம் தான்….” என்று சொன்ன உதடுகள் ஈரக்கத்தான் செய்தன. ஆனால் இளையராஜாவின் அடுத்தடுத்த இசையெனும் அஸ்திரங்களால், அதே உதடுகள் ‘மண்வாசனையில் மயங்கி‘ மூடுபனியில்; விறைத்து ‘நெஞ்சத்தைக்கிள்ளாதேயில் நெருங்கி, ‘கவிக்குயிலில்’ கரைந்து அவரது ‘பயணங்கள் முடிவதில்லை’ என்று ஒப்புக்கொண்டன.

திரைப்படங்கள் மட்டும் இன்றி இன்றைவரை இளையராஜா பல இசைப்பெட்டகங்களையும் உருவாக்கி வெளியிட்டுவந்துள்ளார். இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கர்னாடக செவ்வியலிசை இராகத்தினை உருவாக்கியுள்ளார், "How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை இரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார். "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார். "India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும். 1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார். "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது."இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். "மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.


இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை மூன்று முறைப்பெற்றுள்ளார், 1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு), 1987இல் - சிந்து பைரவி (தமிழ்), 1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு) ஆகியனவே விருதினைப் பெற்றுத் தந்த படங்கள்.
இசை தவிர்ந்து தனிப்பட்ட முறையில் இளையராஜா, ஒரு அற்புதமான மனிதர், கடவுள் நம்பிக்கை கொண்டவர், தண்டிக்கவேண்டிய நேரத்தில் தண்டிக்கவும், பாராட்டவேண்டிய நேரத்தில் பாராட்டவும் சிறிதும் தயங்காதவர், சகல துறைகளிலும் உள்ள பிரபலங்களுக்கும் பிடித்தமான நண்பர். இசைக்கும் இறைவனுக்கும் அன்றி எவருக்கும் தலைவணங்காதவர், இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.
முன்னரே சொன்னதுபோல இளையராஜா பற்றி எழுதுவதென்பது மிகவும் சிரமமான ஒரு விடயம் ஒரு குயிலின் குரலோசையினை எப்படி காகிதத்தில் வடிப்பது?இரத்தத்தாலும், கொலைகளாலும் இரங்காதவன்கூட இசையினைக் கேட்டு நொருங்கிவிடுவான் என்றால், எம்போன்ற சாதாரண இசைப்பித்தர்களின் நிலை என்ன? இசையால் வசமாகாத இதையமெது? இறைவனே இசைவடிவம் எனும்போது என்கின்றார்கள்! அப்படி என்றால் இசைவடிவமான அந்த இறைவனையே, பிரசவிப்பவன் அல்லவா நல்ல இசையின் இசையமைப்பாளன்.

வைகோவுக்கு அரசியல் பற்றி மட்டும்தானா தெரியும்? இளையராஜா பற்றியும், இசை பற்றியும் அவரது சிறப்பான பேச்சு.

7 comments:

Pradeep said...

இராக தேவனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு நிகர் அவரே...
Y.KO!!! Waaw What a Amercing speech!

Unknown said...

அப்பா….வைக்கோவா இது???? எதையுமே எழுதிவைத்துப்பார்க்காமல் சரவெடிபோல முழங்குகின்றாரே!! உண்மையில் அவர் அறிஞர்தான். மேன்மையானவர்களை மேன்மையானவர்களே விரும்புவார்கள் என்பது உண்மைதான்.
ராஜா ராஜாதான்.

Unknown said...

Ilaiyaraja is a genius, nobody have doubt about that. He is a mirror of Tamil Music and Tamils live.
May god give long and Peaceful live for Him. Buy the buy our Vaico! Yes in that Video I couldn’t see a Political Leader. As a Professer, as a Prequel leader……………He is Grate.

thamizhparavai said...

ராஜாவுக்கு வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி...

Anonymous said...

Raja solla vaarthai illai.

balavasakan said...
This comment has been removed by the author.
balavasakan said...

இசை ராஜாவுக்கு எனது வாழ்த்துகளும் !
ஆனால் உங்கள் கருத்துக்கள் சிலவற்றுடன் எனக்கு உடன்பாடு இல்லை வெளிப்படையாக பேசுவதுதான் இப்போதைய ட்ரென்ட் என்ற படியினால் சிலவற்றை நான் மனம் திறக்கலாம் என்றிருக்கிறேன் !

//இசை தவிர்ந்து தனிப்பட்ட முறையில் இளையராஜா, ஒரு அற்புதமான மனிதர்,//

யார் சொன்னது நீங்க பழகிப்பாத்தனீங்களா.. ஒரு படைப்பாளிக்கு இருக்கவேண்டிய கர்வத்தை விட பலமடங்கு கர்வம் கொண்ட ஒரு மனிதர்.. சில வேளைகளில் அவரது செயல்கள் மேடைகளில் நடந்து கொண்ட விதம் எரிச்சலை ஊட்டி இருக்கிறது..

//சகல துறைகளிலும் உள்ள பிரபலங்களுக்கும் பிடித்தமான நண்பர்.//
என்னது..? இவருடன் முரண்பட்டவர்கள் என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறார்கள கங்கைஅமரன் வைரமுத்து தொடங்கி ... மணிரத்னத்துடன் ஏறபட்ட முர்ரண்பாட்டால் தானே அவர் புது இசைஅமைப்பாளர் தேடப்போய் ஏ.ஆர்.ரகுமான் கிடைத்தார்....

மொத்தத்தில் உலகத்தில் எவருமே நல்ல மனிதர்கள் கிடையாது அப்போ இளைய ராஜாவைமட்டும் எப்படி அற்புதமான மனிதர் எண்டு சொல்லலாம் .. அற்புதமான இசையமைப்பாளர் அவ்வளவுதான் !

LinkWithin

Related Posts with Thumbnails