Sunday, June 21, 2009

துடுப்பாட்டத்தில் சுருண்டது சிறி லங்கா…கிண்ணம் பாகிஸ்தானுக்கு..


ஆரூடங்கள், விமர்சகர்களின் கணிப்புக்கள், கிரிக்கட் விற்பன்னர்களின் எதிர்பார்ப்புக்கள் அத்தனையும் எதிர்மாறாக மாற இலங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் வைத்து ஐ.சி.சி. வேர்ள்ட் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது பாகிஸ்தான்.
இன்று காலை மக்ஸ் தொலைக்காட்சி இன்றைய வெற்றிவாய்ப்பு பற்றி கணிப்பிடுகையில், இரசிகர்களின் எதிர்பார்ப்பின் பிரகாரம் 65 வீதம் சிறி லங்காவுக்கும் 35 வீதமான வெற்றிவாய்ப்பே பாகிஸ்தானுக்கும் உள்ளதாக தெரிவித்திருந்தது.
எனினும் கிரிக்கட் என்னும் விளையாட்டில் யாருமே எதையும் தீர்மானிக்கமுடியாது என்பதை இன்று ஞாயிற்றுக்கிழமை லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டி சிறப்பாக விளக்கியுள்ளது.



நாணைய சுழற்சியில் வெற்றிபெற்ற சிறி லங்கா அணியின் தலைவர் குமார் சங்ககார முதலில் தாம் துடுப்பெடுத்தாடுவதாக தெரிவித்தார். இதன் பிரகாரம் சிறி லங்கா அணியினர் துடுப்பபெடுத்தாட களத்திற்கு இறங்கினர். ஆரம்பத்திலேயே ஐந்து பந்துகளுக்கு முகம் கொடுத்து எந்தவொரு ஓட்டத்தினையும் பெற்றுக்கொள்ள முடியாமல் மொஹமட் ஆமெரின் பந்துவீச்சில் சாஹிப் ஹசனிடம் பிடிகொடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார் சிறி லங்கா அணியின் அதிரடி ஆட்டநாயகன், சிறி லங்கா அணியின் ரன் குவிக்கும் எந்திரமுமான திலகரட்ன டில்ஷான். கண்டிப்பாக திலகரட்ன டில்ஷானை வந்தவுடனேயே குறைந்த ஓட்டங்களுடன் அட்டமிழக்கவைப்பதே பாகிஸ்தான் அணியின் முழு வியூகமும் கவனமுமாக இருந்திருக்கும். ஏனெனில் சிறி லங்கா அணி இதுவரை ஆடிய விளையாட்டுக்கள் அனைத்தையும் நன்றாக பாகிஸ்தான் அணி கணித்திருந்தால், சிறி லங்கா அணியில் டில்ஷான் மட்டுமே முழு போர்மான வீரராக இருந்தார் என்பதும். அயர்லாந்தினுடனான ஆட்டத்தின்போதே டில்ஷானை எந்தவொரு ஓட்டமும் பெறாத நிலையில் பறிகொடுத்த சிறி லங்கா அணி, பட்ட திண்டாட்டங்களையும் அறிந்திருக்கும்.
அந்தவகையில் இன்று பாகிஸ்தான் அணியின் திட்டம் அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே வொர்க்கவுட் ஆகியுள்ளது.


இன்றைய ஆட்;டத்தில் சிறி லங்கா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பாகிஸ்தானிடம் சுருண்டனர் எனவே சொல்லவேண்டும், இன்றயை சிறி லங்கா அணியின் துடுப்பாட்டத்தை நோக்கினால், டில்சானின் ஓட்டப்பெறுதியற்ற வெளியேற்றத்துடன்,
அடுத்ததாக மைதானத்துக்கு வந்த முபாரக் தன்பங்குக்கும் எந்தவொரு ஓட்டத்தினையும் பெறாமல் டக்முறையில் அப்துல் ரஷாக்கின் பந்வீச்சில் ஸாகிப் ஹசனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்கராராக களமிறங்கிய சனத் ஜெயசூரியா, இந்தப்போட்டியிலும் சோபிக்கத்தவறியவராக வெறும் 17 ஓட்டங்களை மட்டுமே பெற்று அப்துல் ரஷாக்கின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். தொடர்ந்து மஹேல ஜெயவர்த்தன ஒரு ஓட்டத்துடனும், சாமர சில்வா 14 ஓட்டங்களுடனும், உதான ஒரு ஓட்டத்துடனும், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில் அணித்தலைவர் சங்ககார மட்டும் நிதானமாகவும், அபாரமாகவும் துடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழக்காமல், அணியின் ஓட்ட எண்ணக்கையினையும் 138 எனும் ஒரு பெறுதிக்கு கொண்டுசென்றார்.

பாகிஸ்தானின் பந்துவீச்சில் அப்துல் ரஷாக் 3 விக்கட்களையும், உமர் ஹல், சாஹிட் அப்ரிடி, முஹமட் ஆமெர் ஆகியோர் தலா ஒரு விக்கட்களையும் கைப்பற்றியிருந்தனர்.
139 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அக்மல், ஷாஹிப் ஹசன் ஆகியோரை ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்காளக களமிறக்கியது, அணியின் 7ஆவது ஓவரில் மொத்த ஓட்டங்கள் 48 ஆக இருந்தபோது 37 ஓட்டங்களுடன் ஜெயசூரியாவின் பந்துவீச்சில் சங்ககாரவிடம் பிடிகொடுத்து அக்மல் ஆட்டமிழந்து சென்றார். அடுத்து அணியில் 9 அவது ஓவரில் மொத்த ஓட்டங்கள் 63 ஆக இருக்கும்போது, தனது 19ஆவது ஓட்டத்துடன் ஷாகிப் ஹசன் முரளிதரனின் பந்துவீச்சில் ஜெயசூரியாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெழியேறியிருந்தார்.
அடுத்தாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அப்ரிடி, சுஹய் மாலிக் அகியோர் தலா 54, மற்றும் 24 ஓட்டங்களைப்பெற்று அட்டமிழக்காமல் வெற்றி இலக்கினை எட்டினர்.
இந்தப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஷாகிப் அப்ரிடியும், போட்டித்தொடரின் நாயகனாக நினைத்தபடி திலகரட்ன டில்ஷானும் தெரிவு செய்யப்பட்டனர்.



கடந்த ஐ.சி.சி. வேர்ள்ட் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகளிலும் இறுதிப்போட்டிவரை வந்து கடைசிவரை போராடி தோற்றது பாகிஸ்தான். இந்தமுறை இறுதிப்போட்டிவரை வந்து வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிகொண்டுள்ளது.
சிறி லங்காவின் தற்போதைய அதிஸ்ர காலங்கள். எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்ற கோசங்கள். லோhர்ட்ஸில் நடந்த இறுதியாட்டத்தில் பலிக்காமலேயே போய்விட்டது.

2 comments:

Anonymous said...

athu ennyya kinnam ? athai koppai enru sollakkodaatha? tamil vazhka1 kalaignar vazhga! matravargal ozhiga!!!

பூச்சரம் said...

பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..

LinkWithin

Related Posts with Thumbnails