ஓடி உழைக்கும் கூட்டத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமைகள் ஒரு ஓய்வுநாள்தான். சிலருக்கு இந்த நாளில் நண்பகல் 12 மணிக்கு பின்னர்தான் விடியவும் செய்யும். அட நம்ம பதிவர்கள்தான் பலதரப்பட்ட பதிவுகளையும் வாரம் ஒருநாள் தொகுத்து பல்வேறுபட்ட பெயர்களில் போட்டிட்டுவராங்களே.
அதேபோல எல்லோருக்கும் நேரம் இருக்கும் ஞாயிற்றுக்கிழமையில் இரவு நேரங்களில் கடற்கரை ஓரமொன்றில் ஒதுங்கி ஹொக்ரெயில் சாப்பிட (குடிக்க) அழைக்கின்றேன்.
சியேஸ் சொல்லிக்கொண்டே இருக்கின்றேனே ஒரு நாளும் ஊத்தி கொடுக்கவில்லையே என என் பதிவுலக நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். இதோ ஹொக்ரெயில்.. சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.. இல்ல நாம இதை தொடமாட்டோம் என்று சொல்லிறவங்களுக்கும் மிக்ஸ் புருட் தயாராகவே உள்ளது…
கண்டிப்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு நேரத்தில் ஒருதடவை வந்து எட்டிப்பாருங்கள்..
சும்மா இருந்ததற்கே நோபல் பரிசு.
60 வயதிற்கு மேற்பட்ட இரண்டுபேர் உலக விடயங்கள் பற்றி பேசும்போது அவர்கள் அறியாமல் அவர்கள் பேசுவதை நோட்டம்விட்டால் மிக சுவாரகசியமான, சிரிப்பூட்டும் தகவல்கள் கிடைக்கும்.
அண்மையில் இரண்டு சீனியர் சிட்டிசன்மார் கடற்கரையில் வந்து பேசும்போது நான் போட்ட நோட்டத்தில் அவர்கள் பேசிய கருத்து.
சும்மா இருந்ததற்கு அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பதுதான். ஒருவர் சொல்ல மற்றவர் ஆமோதித்த அந்த விடயம் இதுதான். இதே ஒரு ஆண்டு காலத்திற்கு புஸ் இருந்திருந்தால் குறைந்தது நான்கு நாடுகளின் நின்மதி போயிருக்கும். இந்த ஒபாமாபயல் ஒன்றும் பண்ணாம பொருளாதாரத்திலேயே மையமிட்டு மற்ற நாட்டு விடயங்களில் மூக்கை நுளைக்காமல் சும்மா இருந்ததினாலதான் இந்த விருதுகிடைத்திருக்காம்!
கேட்ட எனக்கு வியப்பு ஒருபக்கம், சிரிப்பு ஒருபக்கம். என்றாலும் அவர்கள் சொன்னவற்றிலும் உண்மை இல்லாமலும் இல்லைத்தானே?
ஒரு மைல் கல்லை தாண்டிய குறும்பட வட்டம்.
தமிழ் ஸ்ரூடியோ.கொம் என்ற அமைப்பு குறும்பட வட்டம் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கான ஒன்று கூடல் என்பவற்றை மாதம்தோறும் சென்னையில் நடத்திவருகின்றது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், குறும்படம் தயாரிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எந்த பிடிமானமும் இல்லாமல் இலைமறை காயாக இருக்கும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து அவர்களை குறும்பட இயக்குனர்கள் ஆக்கிய பெருமையும் இந்த அமைப்புக்கு உண்டு.
எந்தவிதமான இலாப நோக்கங்களும் இன்றி, மற்றவர்கள் பயன்படுத்தி மேலே ஏறிச்செல்ல ஒரு ஏணியாக இருக்கும் இந்த அமைப்பினை பாராட்டுவதில் தவறில்லை.
அந்த வகையில் நேற்றைய தினம் இந்த குறும்பட வட்டத்தினரின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், சிறப்பு குறும்பட வட்ட நிகழ்வும் எழும்பூரில் உள்ள இச்சா சென்டர் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் சிறப்பு அதிதிகளாக திருமதி.சிவகாமி ஐ.ஏ.ஸ், திருதிரு துறுதுறு என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நந்தினி, ஈரம் திரைப்படத்தின் இயக்குனர் அறிவழகன் ஆகியோர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்கள்.
இதில் என்ன விசேட விடயம் என்றால், நம்ம பதிவர், வண்ணாத்துப்பூச்சியார், பதிவர் தண்டோரா, பதிவர் எவனோ ஒருவன், மற்றும் இதை எழுதும் நான் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தோம். நம்ம நண்பர் பதிவர் கேபிள் சங்கரின் குறும்படமான “அக்ஸிடன்ட்” சிறந்த எடிட்டிங்குக்கான விருது பெற்றிருந்தது. கேபிள் வராததனால் அதை எங்கள் அன்பு வண்ணத்துப்பூச்சி மெதுவாக பறந்துபோய் எங்கள் கைகளுக்கு கொண்டுவந்தது.(ஹா..ஹா..ஹா..)
நண்பர் சஜந்தனுக்கு பிறந்ததின வாழ்த்துகள்.
நான் சென்னைக்கு வந்ததும், இங்கு தங்கும் காலங்கள் குறுகியதென்றாலும் எனக்கு கிடைத்த நல்ல நண்பர்களில் சஜந்தனும் ஒருவர். மிகுந்த இலக்கிய ஆர்வம் மிக்க ஒருவர். இலக்கிய கூட்டங்கள் என்றால் அங்கே முதலாவது அளாக ஆஜராகும் ஒருவர். வாசிப்பதில் பெரும் ஆர்வம் கொண்ட ஒருவர். இந்தியாவில் பல இடங்களுக்கும் சென்று அவற்றைப்பற்றி குறிப்பெடுத்து வைத்திருக்கும் அவர், சிறப்பாக எழுதக்கூடியவரும்கூட, விரைவில் கனடா பயணமாக இருக்கும் அவர் வலையுவகிலும் கால் பதித்து முக்கியமாக தனது பயண அனுபவங்களை இலக்கிய நயத்தோடு விபரிக்கும் அவர், பயணக்கட்டுரைகளை எழுதவேண்டும் என என் சார்பாகவும், சக பதிவுலக நண்பர்களான, அடலேறு மற்றும் எவனோ ஒருவன் சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றேன். பிறந்த தினத்திற்கும் வலையுலக விரைவான வரவுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Motor Cycle Diaries
கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய ஒருபடம். முக்கியமாக சேகுவாராவின் வாழ்க்கை வரலாறு தெரிந்தவர்கள், சேகுவாராவை நேசிப்பவர்கள், பின்பற்றுபவர்கள், இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டும். இந்த திரைப்படத்தை பார்த்துமுடித்த பின்னர் “அட இத்தனை நாளாய் இந்த திரைப்படத்தை பார்க்காமல் இருந்திருக்கின்றேனே”! என்ற உணர்வே மேலோங்கியது. இந்த திரைப்படத்தை எனக்கு பரிந்துரைத்து கண்டிப்பாக பார்க்கவைத்த வண்ணத்துப்பூச்சியாருக்கு கோடானகோடி நன்றிகள். (கதைகளை நான் சொல்லவில்லை. திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்காத நண்பர்கள் பாருங்கள்)
IPL
நான் கல்வி கற்ற கல்லூரி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் என்றாலே அந்தப்பாடசாலைதான் என்று சொல்லும் அளவுக்கு அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருமே சிறந்த கிரிக்கட் வீரர்களாகவும், விளையாட்டுவீரர்களாகவுமே இருப்பார்கள்.
இந்த நிலையில் 1986ஆம் அண்டு முதல் நான் தொலைக்காட்சியில் கிரிக்கட் பார்க்கப்பழகி, 1996 -1999 ஆம் ஆண்டு காலகட்டங்களில் அதில் ஒரு வெறியனாகவும் இருந்தேன். கிரிக்கட் மட்ச் நடக்கும்போது உலகம் அழிந்தாலும் எனக்கு தெரிய வாய்ப்பில்லை என்ற ஒன்றிப்பு. அதன் பின்னர் நாள் செல்ல செல்ல அதிலிருந்துவிலகி, இன்று முற்றிலுமாக விலகிவிட்டேன் என்றுதான் கூறவேண்டும். இப்போது என்னமோ பேர்னாட்சோ சொன்னது உண்மைதான் என்று மனமும் ஒத்துக்கொள்கின்றது.
தற்போதெல்லாம் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று ஒரு தொகை புத்தகங்களை தெரிவு செய்துவிட்டேன். இந்த கிரிக்கட் பார்க்கும் நேரங்களை நான் அதில் செலவழிக்கின்றேன். வாசிப்பு ருசி, கிரிக்கட்டை குப்பை தொட்டிக்குள் எறியவைத்தது ஒருவித சந்தோசமே.
15 comments:
உண்மைதான் கிரிக்கட் இப்போ எனக்கும் போரடித்தவிட்டது. சச்சினும், ஜெயசூரியாவும் தற்போதும் உள்ளதால்த்தான் அப்பப்போ பார்க்கின்றேன். இருவரும் இளைப்பாற நானும் கிரிக்கட் பார்ப்பதில் இருந்து இளைப்பாறுவேன். அப்புறம் ஒபாமா! ஐயாமார் சொன்னதழில் பிழை உள்ளதாக எனக்கு தெரியவில்லை. சஜந்தனுக்கு என் வாழத்துக்கள்.
நன்றி..வினோத்.
ஓஹோ..இப்ப சச்சின், சனத்திற்காகத்தான் கிரிக்கட்டே பார்க்கின்றீர்களா?
நன்றி ஜனா. அருமையான தொகுத்து வழங்கியுள்ளீர்கள். நேற்று தான் சொன்னேன். பார்த்து விட்டீர்களா..??
Motor cycle diaries அருமையான படம். இதுவரை பதிவிடாத பல சிறப்பான படங்களில் இதுவும் ஒன்று.
விரைவில் முயல்கிறேன்.
வாழ்த்துகள் ஜனா.
தகவல்கள் நன்றாக இருக்கு, அது சரி என்ன ஜனா சியேஷ் வித் ஜனா, ஹொக்ரெயில் என்று எல்லாமே ஒரு மார்க்கமாக இருக்கு???
ஹா..ஹா...ஒபாமா நல்ல நகைச்சுவை. குறும்பட வட்டம் மிகவும் பாராட்டப்படவேண்டிய அமைப்பு. நண்பர் சஜந்தனையும் குறும்பட வட்ட இலக்கிய கூட்டத்தில் கண்டிருக்கின்றேன் தங்களோடு, அவரது எழுத்துக்களும் அரங்கேற எனது வாழ்த்துக்கள். கிரிக்கட் இப்ப எனக்கும் ஏனோ போர் அடித்துவிட்டது. தாங்கள் கேட்ட சார்பியல் கேள்விக்கு விடை கண்டுபிடித்துவிட்டேன் தலைசுத்துது.ம்ம்ம்...இந்த ஹொக்ரெயில் கிக் ஏறுதுதான். வாழ்த்துக்கள் நண்பரே
தங்கள் வழக்கமான கலக்கல்கள்போல இதுவும் உண்மையான கலக்கலாக இருக்கு...தொடர்ந்து கலக்குங்க முனைவரே...
பதில்: butterfly Surya
நன்றி. வண்ணத்துப்பூச்சியாரே..
கண்டிப்பாக இந்த திரைப்படம் பற்றி எழுதுங்கள். தங்களால்த்தான் இதை அதன் சுவாரகசியம் கெடாமல் அழகாக எழுதமுடியும்.
பதில்: Sivakaran
வாங்க சிவகரன். அடடா..இதெல்லாம் எழுத்துப்போதையினால்த்தான்..வேறு ஒன்றும் இல்லை..நன்றி
பதில்:கவிஞர்.எதுகைமோனையான்
வாங்க கவிஞரே..தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. பதில் கண்டுபிடித்துவிட்டீர்களா? விசையும், தூரமும் சரியான கணிப்பில் வருகின்றதா என்ன? கலக்கிட்டீங்க கவிஞரே..
பதில்:Abarna
நன்றி தோழி அபர்ணா அவர்களே..
சியேஸ் சொல்லிக்கொண்டே இருக்கின்றேனே ஒரு நாளும் ஊத்தி கொடுக்கவில்லையே?
Yes..always cheers with jana..
Evano oruvan.
முதலில் நண்பர் சஜந்தனுக்கு பிறந்ததின வாழ்த்துகள்..
சஜந்தனை பற்றியும் , ஜானாவின் நண்பர் குலாம் பற்றியும் சொல்ல ஒரு 60 பக்க நோட்டு புத்தகமே வேண்டும். முதல் முறை பாத்த போதே நீண்ட நாள் பழகியதை போன்ற உணர்வு சஜந்தனிடமும், அவர்கள் நண்பர் குலாமிடமும் நிச்சயம் ஏற்படும்.
//சும்மா இருந்ததற்கே நோபல் பரிசு.//
நானும் யோசிச்சதுதான் ஜனா...
//ஒரு மைல் கல்லை தாண்டிய குறும்பட வட்டம்.// அடுத்த முறையின் இருந்து நானும் கலந்து கொள்ள முடிவுசெய்துள்ளேன்..
என்னையும் சேத்துக்கோங்க
//Motor Cycle Diaries//
உங்க கிட்ட படத்துக்கான மென்வட்டு இருக்கா..
நல்ல பதிவு.தேவதையை கேட்டதாக சொல்லவும்
நன்றி நண்பர் அடலேறு..
அப்படி என்றால் உங்களை என்வென்று சொல்வதாம் அடலேறு!
அது எப்படி நான் உங்களுடன் பார்த்தவுடனேயே, ஒரு வார்த்தை பேசியவுடனேயே உங்களால் கவரப்பட்டேன்????
சென்னையில் உங்கள் நட்பு கிடைத்தமையே பெரியபேறாகவே நினைக்கின்றேன்.
நம் சக நண்பர் எவனோ ஒருவனின் பதிவை சிறப்பிக்கும்வண்ணம் நாம் கண்டிப்பாக ஒரு சோற்றில்
மதியமொன்றில் சந்திப்போம் விரைவாக..
http://www.watch-movies-online.tv/
இந்த இணைப்பின்மூலம் எந்தவொரு தரமான திரைப்படத்தினையும் ஒன்லைனில் பார்த்துவிடலாம். உலக சினிமாவில் பலவற்றை அறிந்துகொள்ள எனக்கு துணைநிற்பது இருவர். ஒருவர் எமது நண்பர் பட்டபிளை சூரியா, மற்றது இந்த இணைப்பு.
ஜனா, அறுதியிட்டு கூற முடியும் தங்கள் நட்பு கிட்டியமை தான் பாக்கியம். வெள்ளந்தி நண்பனை கேள்விப்பட்டதோடு சரி. நிஜத்தில் இறுக்கிறார்கள் உங்கள் நண்பர் குலாம் முழுதும். ”தங்களின் இனிப்பு பலகாரத்துக்கு” ஈடாக நான் எதை தர முடியும் நீங்களே சொல்லுங்க. தள உரல் இனைப்புக்கு நன்றி.
//ஒரு சோற்றில்
மதியமொன்றில் சந்திப்போம் விரைவாக// கண்டிப்பாக ஒரு சோறில் சந்திப்போம் அதற்கு முன்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் மாலையில் கடற்கறையில் சந்திப்போம். தேவதை பற்றி கேட்டேனே???
Post a Comment