கொடுக்கின்ற தேவதை கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்குமாம் (நம்பிக்கை இன்மையால் கொடுக்கின்ற தெய்வம் என்று எழுதவில்லை) என்று சொல்வார்கள் அல்லவா அது என்னமோ இந்த மாதத்தில் எனக்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.
அடுத்தடுத்து சந்தோசமான செய்திகள் கிடைத்து திக்குமுக்காடச்செய்கின்றது.
யார் என்ன சொன்னாலும் இதை கிரகநிலை மாற்றம் என்றோ அல்லது அதிஸ்டம் என்றோ ஒரு போதும் ஒத்துக்கொள்ளமாட்டேன். ஏனென்றால் மிகவும் நிதானமாக, தினை விதைத்து கொத்துக்கொத்தாக அந்த தினையினை அறுபடை செய்கின்றேன் என்றுதான் என் மனம் சொல்கின்றது.
வலைப்பதிவை எழுதத்தொங்கியபோதே, எனக்குள் பல பிரமாணங்களை எடுத்துக்கொண்டே எழுதத்தொடங்கினேன், ஒவ்வொரு பதிவும் வாசிக்கும் யாராவது நாலுபேருக்கு, எந்த விதத்திலாவது உபயோகமுள்ளதாக இருக்கவேண்டும்.
மனதிலிருக்கும் வலிகளை, உண்மைகளை, உணவுர்களை பதியத்துடிக்கும் கைகளை கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும், முக்கியமாக உலகத்தரமான பதிவுகளை தமிழுக்கு கொண்டுவரவேண்டும், உலக அசைவுகளை உடனுக்குடன் பதியவேண்டும்,
மறந்துபோயும் உள்ளுர் அரசியல்கள் நுளைந்துவிடக்கூடாது என பல பிரமாணங்கள். ஒருவகையில் அவற்றை ஓரளவுக்காவது இன்றுவரை என்னால் பதியமுடிந்துள்ளமை சந்தோசமே.
இது இப்படி இருக்க இந்த மாதமே எனக்கு வசந்தங்களை அள்ளிக்கொண்வந்த மாதமாக மாறியது பிரமிப்பாகவே உள்ளது.
இந்த மாதத்தின் முதலாம் நாளே, எனக்கு அழகான ஒளி பொருந்தியவளாக தேவதை போன்ற ஒரு மகள் பிறந்தாள். என் வாழ்நாளில் மிக முக்கியமான நாள் அது. அன்று நானும் புதிதாக பிறந்தேன் என்பது மறுக்கமுடியாத உண்மை.
அடுத்து நான் சமர்ப்பித்திருந்த பல்கலைக்கழகத்திற்கான ஆராட்சிக்கட்டுரை (A+) முதன் நிலைபுள்ளிகளை பெற்றிருந்ததாக எனக்கு அறிவிக்கப்பட்டது.
அடுத்து எனது யூதர்கள் - தமிழர்கள் தொடரினைப்பற்றி நான் மதிக்கும் பல பல பிரபலங்களிடமிருந்தும் வந்த மின் அஞ்சல்கள் உண்மையிலேயே என்னை திக்குமுக்காடச்செய்தன. உண்மையில் நான் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.
அந்த தொடர் யாழ்இணையம் உட்பட பல பிரபலமான இணையங்களில் இணைக்கப்பட்டதும், சில ஊடகங்கள், பத்திரிகைகள் அதை ஒலிபரப்பி பிரசுரம் செய்ததும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கலாம்.
இதேவேளை “இருக்கிறம்” சங்சிகையிலும் முதலில் நான் வலையேற்றிய “யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்புக்கள்” என்ற பதிவும், பின்னர் இருக்கிறம் தீபாவளி மலரில் “திருடர்கள் பலவிதம்” என்ற எனது சொந்த அனுபவமும் அச்சேற்றப்பட்டிருந்தமையை அறியமுடிந்தது.
அடுத்து இந்த வலைப்பூவின் மூலம் பல பிரபலமான வலைப்பதிவர்கள் தமிழ்நாட்டில் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களாகியமை எனக்;கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.
நட்சத்திரப்பதிவராக்கிய யாழ்தேவி.
வலைப்பதிவர்களின் திரட்டியாகவும், அதேவேளை வலைப்பதிவர்களுக்கு ஒரு களமாகவும், ஊன்றுகோலாகவும் செயற்பட்டு, அதேபெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டுவருகின்றது யாழ்தேவி.
இந்த யாழ்தேவி இணையம் இன்றுமுதல் ஒரு வாரகாலத்திற்கு என்னை நட்சத்திரப்பதிவாளராக அறிவித்திருக்கின்றதை நேற்று அறிந்துகொண்டேன். அந்த நட்சத்திர அந்தஸ்த்திற்கு எனது நன்றிகள்.
ஆனால் என்னைப்பொறுத்தவரையில் அனைத்துப்பதிவர்களுமே ஒவ்வொரு விதத்திலும் சிறந்தவர்களாகவே இருப்பார்கள். அனைவருமே என்பார்வையில் நட்சத்திரப்பதிவர்களே, இதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.
இலங்கையில் இருந்து இன்று சில நூறுகளாக இருக்கும் பதிவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கானதாக உருவாகவேண்டும், அதன்மூலம் ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
நான் முன்பு சொன்னதுபோல வேலைப்பழுக்கள் காரணமாக இலங்கையில் சிறந்த பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், இந்த எழுத்துக்களில் இருந்து சற்று வலகியிருக்கின்றார்கள் கண்டிப்பாக அவர்களும் இதற்காக ஒரு சிறுநேரம் ஒதுக்கி வலையுலகில் பரவேசிக்கவேண்டும் என்பதும் எனது அவா.
என்னை நட்சத்திரப்பதிவாளராக்கி அழகுபார்க்கும் யாழ்தேவிக்கு இந்தவேளையில் எனது நன்றிகள்.
யூத்ஃபுள் விகடன் குட்பிளாக்கில் எனது வலைப்பதிவு
அடுத்து இளமை ததும்பும், இனிமை கொண்டாடும், விகடனின் பிரிவுகளில் ஒன்றான யூத்ஃபுள் விகடன் குட்பிளாக (Good blog) பட்டியலில் எனது வலைப்பூவும் இடம்பிடித்துக்கொண்டது என்ற செய்தி. இன்று நண்பர் பதிவர் வண்ணத்துப்பூச்சியாரின் ஒரு தொடுப்பில் அவரது பதிவு யுத் விகடன் பட்டியலில் வந்துள்ளதாக அறிந்து அவருக்கு வாழ்த்து எழுதிவிட்டு, அந்த தொடுப்பில் சென்று பார்த்தால் எனக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. அங்கு எனது வலைப்பூவும் பட்டியல் இடப்பட்டிருந்தது.
எனது வலைப்பூவையும் தமது குட்பிளாக்கில் இணைத்துக்கொண்டதற்காக யுத்விகடனுக்கும், அங்கிருந்து வருகை தரும் அனைவருக்கும் என் நன்றிகள்.
விரைவில் வெளிவரும் குறும்படம்.
தற்போது இரண்டாவதாக நான் தயாரித்து, இயக்கிவரும் குறும்படம் வெகுவிரைவில் வெளிவரும் என்பதை நண்பர்களுக்கு சொல்லிக்கொள்ளவிரும்புகின்றேன்.
இயகத்தில் உள்ளபோதே அது பற்றிய நண்பர்களின் எதிர்பார்ப்புக்கள் என் வேலைகளையும், இயக்கத்தையும் இன்னும் சிரத்தை எடுக்கவைத்துள்ளன.
மிகவும் உணர்வோட்டமான இந்த கதைக்கருவை வைத்து தயாரிக்கும் இந்த குறும்படம் வெளிவந்ததும் பெரிதும் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
மேலும் இந்த குறும்படம் வெளிவர எனக்கு பல நண்பர்களும் தம் உதவிகளை புரிவதாக தெரிவித்திருக்கின்றமை மேலும் தைரியத்தை வரவழைத்துள்ளது.
எனவே இந்த வேளையில் இந்த வலைப்பதிவுமூலம் எனக்கு உண்டான மகிழ்சிகளில் எனது வலைப்பதிவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரையும், அதேவேளை, என்னை பின்பற்றும் நண்பர்கள், பின்னூட்டல் இடும் நண்பர்கள், பின்னூட்டல் இடவேண்டும் என நினைத்துவிட்டு இடாமல்போகும் நண்பர்கள், எனது வலைப்பதிவுகளை தமது நண்பர்களுக்கு சிபாரிசு செய்துவைக்கும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது கரம்கூப்பிய நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை, எனக்கு ஏடுதொடங்கி பிஞ்சுவிரல் பிடித்து அகரம் எழுதவைத்த எழுத்தாளர் சொக்கன் அவர்களையும், எனக்கு ஆண்டு 01இல் கற்பித்த வகுப்பாசிரியை எனது பாட்டியார் (அம்மம்மா – யாருக்கு இந்தப்பேறு கிடைக்கும்!)
குணரட்ணம் அவர்களையும், மரபணுவிலேயே கலைகளை என்னுள் புகுத்திய எனது பாட்டனார் கலாநிதி கணபதிப்பிள்ளை கந்தையா அவர்களையும், இலக்கிய உலகத்திற்கு என்னை வழிநடத்திய என் தமிழாசிரியை திருமதி. பாலசுந்தரம்பிள்ளை அவர்களையும் இந்தவேளையில் நெஞ்சார நினைத்துபார்க்கின்றேன்.
18 comments:
வாழ்த்துக்கள் ஜனா..தகுதியான இடத்திற்கு பெருமைகள் வந்து சேருகின்றன.
Congratulations Jana. Ask My Regard for Your new angle.
அப்பப்பா படித்து திக்குமுக்காடி போய் விட்டேன். வாழ்த்துக்கள் ஜனா, அனைத்தும் தங்கள், உழைப்பிற்க்கும், படைப்பிற்க்கும் கிடைத்த சான்றுகள் தான். இன்னும் நிறைய பதிவிடுங்க.
உண்மையிலேயே நிரம்ப சந்தோஷம் கொள்கிறேன். தேவதை பிறந்த அதிஷ்டம் தான்.
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
ரொம்பவே அதிர்ஸ்டமுள்ள மாதம் கார்த்திகை உமக்கு! வாழ்த்துக்கள் ஜனா!
வாழ்த்துக்கள் ஜனா.
கொடுக்கிற தெய்வம் அப்படியே உங்கள் அருகிலிருக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கட்டும்.
வாழ்த்துக்கள் ஜனா……..
அழகிய தேவதைக்கு தந்தையானதற்கு. ‘பேஸ்புக்’கில் அந்த படங்களைப் பார்த்து ஒரு தந்தையின் மகிழ்வை கண்டு ஆனந்தப்பட்டேன். தேவதையும், அம்மாவும் சுகமாக வாழ என்னுடைய மனப்பூர்வமான பிரார்த்தனைகள். தங்களின் பதிவுகளில் காத்திரமான விடயங்களை அலசி வருகிறீர்கள் வாழ்த்துக்கள். நட்சத்திர வாரத்துக்கும் வாழ்த்துக்கள். தேடல்களையும், எழுதுவதையும் என்றுமே நிறுத்தாதீர்கள்.
வாழ்த்துக்கள் ஜனா.
கலை ஆர்வத்தை மரபணுவில் இட்ட எனது பாட்டனார் என்று எழுதியிருந்தீர்கள் அருமையான வரி. காவிய நாயகனையே பிரமிக்கவைத்து அந்த நாயகனின் பாராட்டையும், கொளரவத்தையும் பெற்றவரின் பேரன் சும்மாவா என்ன?
எழுத்தக்களால் உங்களால் உயரமுடியும், தொடர்ந்தும் எழுதுங்கள், தொடருங்கள், வாழ்த்துக்கள்.
அடடா..கலக்கிட்டீங்க ஜனா. வாழ்த்துக்கள். அனைத்திலும் எனக்கும் மகிழ்ச்சியே. உங்கள் குறும்படத்திற்கான கதை அற்புதமானது நண்பரே. இன்றே அதன் வெற்றிக்கான வாழ்த்தையும் சொல்லிவிடுகின்றேன். அப்புறம் தேவதை என்ன செய்கின்றாள்? தேவதையை கேட்டதாக சொல்லுங்கள்.
பதில்:Vinoth
நன்றி விநோத். ரொம்ப புகழுறிங்க விநோத்..கூச்சமாக இருக்கு
பதில்:usha
நன்றி உஷா. கண்டிப்பாகச் சொல்கின்றேன்.
பதில்:அடலேறு
நன்றி நண்பர் அடலேறு.
தாங்கள் பக்கத்தில் இருப்பதென்றால் சமுத்திரமும் எனக்கு சமதரைதானே???
தங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
பதில்:Priyan
நன்றிகள், நன்றிகள், நன்றிகள்
பதில்:தங்க முகுந்தன்
கடைசியில் முகுந்தன் அண்ணா சாத்திரக்காரராகவே மாறிட்டீங்கபோல. பரவாயில்லை அடுத்தமாதமும் எனக்கு நல்ல மாதம் என வாழ்த்துக்கூறியுள்ளீர்கள் பார்ப்போம்.
பதில்:எவனோ ஒருவன்
தெய்வம் இல்லை எவனோ ஒருவன். தேவதை என்று சொல்லுங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் கொட்டட்டும்.
பதில்:மருதமூரான்.
தங்கள் வருகைக்கு "நல்வரவு" நண்பர் மருதமூரான்.
தங்கள் வருகை என்னை மகிழ்வுறச்செய்துள்ளது. தாங்கள் உட்பட இலங்கை வலைப்பதிவர்கள் அத்தனை பேரினதும் வலைப்பதிவுகளுக்கு நான் தவறாமல் வருவதுண்டு, கிடைக்கும் குறுகிய நேரம் என்பதால் பின்னூட்டல்களை இடமுடிவதில்லை.
தொடர்ந்தும் நட்புடன் இணைந்திருப்போம்.
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பா..
பதில்:Pradeep
நன்றிகள் Dr.Pradeep
பதில்:கவிஞர். எதுகைமோனையான்
நன்றிகள் கவிஞரே.
Post a Comment