இருக்கிறம் சஞ்சிகை ஒழுங்கு செய்துள்ள ஊடகத்துறையினருக்கும், வலைப்பதிவாளர்களுக்குமான சந்திப்பு ஒன்று நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியினை தொடர்ந்து இலங்கை பதிவாளர்கள் அனைவரும் பெரும் உட்சாகத்துடன் காணப்படுவதை அவதானிக்கமுடிகின்றது. இலங்கை பதிவர்களின் முதலாவது சந்திப்பின் பின்னர் இவ்வாறானதொரு ஒழுங்குபடுத்தல் மூலம் பல வலைப்பதிவாளர்களும் ஒன்றுகூட நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஊடகத்துறையினருக்கும், வலைப்பதிவாளர்களுக்கும் இடையில் ஒரு நட்புறவு ஏற்பவது நல்லதொரு விடயமே. இதன்மூலம் வலைப்பதிவாளர்களின் பல வலைப்பதிவுகள் அச்சேற்றம்பெறவும், ஒலிவடிவம் பெறவும் ஏதுவாக இருக்கும்.
பல இலட்சம் மருமக்களின் மாமா
இலங்கை வானொலியில் “வானொலிமாமா” என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி, தனது மென்மையான குழந்தைகளுக்கே உரிய பேச்சுக்களால் பல இலட்சம் குழந்தைகளின் அன்பு மாமாவாக பிரவாகம் எடுத்திருந்த ச.சரவணமுத்து அவர்கள் கடந்த 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் தனது 94ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இலங்கை வானொலியின் பிதாமகர்களில் ஒருவராக இவரை கொள்ளமுடியும். நிகழ்ச்சிவழங்கல் மட்டும் இன்றி நாடக நடிப்பு மற்றும் நாடக தயாரிப்புக்களிலும் இவர் ஈடுபாடுடையவராக இருந்ததாக அறியமுடிகின்றது.
இலங்கையர்கோனின் “விதானையார் வீடு” என்ற இலங்கையில் புகழ்பெற்ற நாடகத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடன் முக்கிமான பாத்திரம் ஒன்றில் இவர் நடித்துள்ளதாக தகவல்கள் உண்டு.
வானொலி மாமா என்ற அடைமொழியுடன் இவர் ஆரம்பித்த அந்த சிறுவர் நிகழ்ச்சி காலம்காலமாக மற்றய அறிவிப்பாளர்களால் இந்தப்பெயருடனே இவரது பாணியிலேயே நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்படத்தக்கது.
(படம் - நன்றி கானாபிரபா)
மனிதம் செத்துப்போன நாட்டில்…
கொழும்பில் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஆகிய இடங்கள் மக்கள் பரவலாகவும், மிகச்செறிவாகவும் வாழும் பகுதிகள் ஆகும், இந்த பகுதிகளில் பெரும்பான்மையாக தமிழர்களே வாழ்ந்துவருகின்றனர்.
கோல்பேஸ் என அழைக்கப்படும் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை தற்போது மூடப்பட்டுள்ளதால், வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி கடற்கரையில் காதலர்கள் உட்பட இளைஞர்கள், குடும்பத்தினர், சிறுவர்கள் என பலர் கூடுவது வழக்கம்.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில், மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞன் ஒருவனை சிங்கள இனத்தவர்கள் (ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட) கடலுக்குள் தள்ளி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் ஒன்றும் அது காட்சியாக பதிவாகியுள்ளதும் எனக்கு நீங்கள் நினைப்பதுபோல அதிர்ச்சியை தரவில்லை. ஏனென்றால் மனிதம் எப்போதோ செத்துப்போன ஒரு நாட்டில இப்படி எல்லாம் நடப்பது ஒன்றும் அதிசயமோ அல்லது புதிதாக ஒரு அதிர்ச்சியையோ தந்துவிடவில்லையே.
என் கோபம் என்னவெனில் பலர் கண்முன்னால் நடந்திருக்கும் இந்த மிருகத்தனத்தை அப்போதே தட்டிக்கேட்டு தடுத்துநிறுத்த ஒரு மனிதாபிமானம் உள்ள மனிதனும் இல்லை என்பதுதான்.
பிடித்த ஒரு கேள்வி – பதில்
ஏன் ஒரு எழுத்தாளனின் படைப்புக்களை சக படைப்பாளிகள் ஒப்புக்கொள்வதில்லை? (எழுத்தாளனுக்கு பதில் பதிவர்கள் என்றும் போடலாம்)
பிரஞ்சு தேசத்தைச்சேர்ந்த எழுத்தாளர் அன்ரே ழீட் தனது படைப்புக்கள் குறித்து இப்படி ஒருமுறை கூறியிருந்தார்.
“பல இலட்சம் பேர்களில் சில ஆயிரம்பேர்கள் ழீட் எழுதியதில் சில நூல்களையாவது படித்திருப்பார்கள். இந்த சில அயிரம்பேர்களில் சில நூறு ஆசாமிகளாவது ழீட் சொல்வதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கின்றது என்று நினைப்பார்கள். அந்த நூறு ஆசாமிகளில் ஒருவர் நிச்சமாக ழீட் சொல்வது சரி என்று எண்ணுவார். அட..அந்த ஒருவர் ழீட் தான்”
அப்படி என்றால் சக எழுத்தாளர்கள்????
Darkness at dawn (குறும்படம்)
போரின் தாக்கத்தினை மெல்லிதான ஒரு உணர்வு ஓட்டத்துடன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெல்லப்புரியவைக்கும் ஒரு இலங்கை குறும்படம்.
கொடிய யுத்தம் உலகம் முழுவதிலும் எத்தனைபேரை ஊனமுற்றவர்களாக்கியிருக்கும்? அதிலும் எத்தனை சிறுவர்களை???
எப்போ வருவாரோ???
நமக்கும் சங்கீதம் என்றால் அலாதிபிரியம். கர்நாடாக சங்கீதத்தில் மொழி தெரியாத உருப்படிகளைவிட செந்தமிழால் இசை மணம்பரப்பிய எம்.எஸ்.சும்பு லட்சுமியின் காற்றினிலே வரும்கீதம், குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ஆகிய பாடல்களை கட்டு தன்னிலை மறந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு.
அதேபோல எனக்கு பிடித்த பாடல் “எப்போ வருவாரோ எந்தன் கலி தீர”
என்ற பாடல். ஆனால் இப்போது என்னமோ, அந்தப்பாடலை கேட்டுக்கொண்டே இருப்பேன். கலிதீர்க்க வருவார் என்ற ஒரு நம்பிக்கையுடன்.
செஞ்சுறுட்டி இராகத்தில், ஆதிதாளத்தில் அமைந்த இந்தப்பாடலை கோபலகிருஷ்ண பாரதியார் அவர்கள் இயற்றியிருக்கின்றார்கள்.
ஒரு சர்தாஜி ஜோக்.
சர்தாஜி ஒருநாள் நூலகத்திற்கு சென்றிருந்தார். அங்கே நெப்போலியனின் படமும் போட்டு..”முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்ற அவரது வசனமும் போடப்பட்டிருந்தது. அதை வாசித்த சர்தாஜி, நெப்போலியனின் படத்தைப்பார்த்து
இப்ப நீங்கள் இதைச்சொல்லி என்ன பிரியோசனம்.? அகராதியை வாங்க முதல் நீங்கள் அதை கண்டிப்பாக சரிபார்த்திருக்கவேண்டும். வாங்கிவிட்டு குறைகூறக்கூடாது என்றார்.
13 comments:
மனிதம் செத்துப்போன நாட்டில் மனிதத்தை எதிர்பார்க்கமுடியாது என்பது, நெருடலான வசனம் ஜனா. அந்த வீட்யோ காட்சி திடுக்கிட வைத்துவிட்டது.
ஹொக்ரெயில் செம ஹிக் நண்பரே
எப்போ வருவாரோ எந்தன் கலி தீர்க்க!!! அதன் அர்த்தம் எனக்கும் புரிந்துவிட்டது நண்பா, அசைக்கமுடியாத நம்பிக்கைகள் வீண்போவதில்லை. பின்னர் அந்த குறும்படம் தாங்கள் சொன்னதுபோல மெல்லிதாக ஒரு உணர்வை தந்துவிடுகின்றது.
சர்தாஜிஜோக் சுப்பர்.
அருமையான ஒரு குறும்படம். தங்கள் குறும்படத்தினை காண ஆவலாக உள்ளேன்.
தமிழர் என்பதால் கொல்லப்பட்டார் என்பது பிழை. அதை பார்த்துக்கொண்டிருந்த தமிழர்களை வேண்டுமானால் வையலாம். கையாலாகாமல் பார்த்துக்கொண்டிருந்ததற்கு..
ஹொக்ரெயில் ரொம்ப நல்லாவே இருக்கு. அப்புறம் ஜனா அண்ணா, உங்கள் ஹொக்ரெயிலின் போதையோ என்னமோ நானும் தவறணை என்ற பெயரிலேயெ வலைப்பூ ஒன்று தொடங்கியாச்சு. கண்டிப்பா தவறணைக்க வாங்கோ..பிரவசம் இலவசம்.
பதில்:கவிஞர்.எதுகைமோனையான் உண்மைதான் கவிஞரே. என்ன செய்வது மனங்கள் மலரவேண்டி உள்ளது.
பதில்:Sivakaran
நன்றி சிவகரன்
பதில்:Ragavan
வலைப்பதிவில் நாசுக்காக சொல்லவரும் விடயங்களையும் பின்னூட்டலின்மூலம் விளங்கப்படுத்திவிடுவீர்ளே! நன்றி நண்பரே
பதில்:சயந்தன்
நன்றி சயந்தன். கண்டிப்பாக வெகுவிரைவில் குறும்படம் வெளிவரும். நதிவழியில் கலக்கிறிங்களே...
பதில்:கிரிஷ்
நன்றி கிரிஷ். உண்மைதான் பார்த்துக்கொண்டு நின்றவர்கள்மேல்த்தான் எனக்கு கோபம்.
பதில்:டிலான்
அடடா..நீங்களும் தொடங்கியாச்சா?? மகிழ்ச்சி கண்டிப்பாக உங்கள் தவறணைக்கு வருகின்றேன்.
வலைப்பூவின் பெயரே தவறணையா? வித்தியாசமான ஒரு சிந்தனை கண்டிப்பாக வருகின்றன்.
எல்லாம் நன்றாக இருக்கிறது ஜனா, ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டம் தட்டி ஜோக் போட வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்
Post a Comment