Tuesday, February 8, 2011

ஹொக்ரெயில் - 08.02.2011

இராத்திரியின் மன்மதன் சில்வியோ பெரிலுஸ்கோனி!

பிரபலம் ஒன்றின் காம லீலைகள் உலக மட்டத்தில் பலரையும் பேசவைக்கும் ஒரு விடயமாகிப்போவது இயல்புதான். அந்த வகையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிலின்டனின் பின்னால் மிக முக்கியமான நபராக உலகம் உன்னிப்பாக கவனித்து வரும் அதே வேளை, அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவியும் நபராகவும் இப்போது இத்தாலிய பிரதமர் சில்வியோ பெரிலுஸ்கோனி உள்ளார்.
விலைமாதர்கள், மாடல்கள், 18 வயதிற்கு குறைவான பெண் என பட்டியல் நீண்டுகொண்டு சென்று இப்போது பெரிலுஸ்கோனி பல பெண்களுடன் சல்லாபித்துக்கொண்டு நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் புரளியையும், சுவாரகசியத்தையும் மேலும் அதிகரித்தள்ளது.
இந்த புகைப்படம் 7.2 கோடிவரை விலைபேசப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிவருவது சிரிப்பதா! சிந்திப்பதா!! என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது.


சாப்பாட்டுக்கடை.

சாதாரண சாப்பாட்டு கடைக்கு அழைத்துப்போகாமல் உலகில் படு சுவாரகசியமான, பிரமிப்பான ஹோட்டல்களுக்கு அழைத்துசெல்வதே ஹொக்ரெயிலின் வழக்கம் அல்லவா?
முன்னர் உலகில் உயரமான இடத்தில் இருந்து சாப்பிட அழைத்துச்சென்றது நினைவு இருக்கும் அதேபோல உலகில் அடியில் இருந்து சாப்பிட இன்று உங்களை ஹொக்ரெயில் அழைத்துச்செல்கின்றது.

ஆர்யன்ரீனாவின் தென் பிரதேசத்தீவான பூஜியோ தீவு, தென் துருவத்திற்கு, அந்தாட்டிக்காவுக்கு மிக நெருக்கமாக உள்ள ஒரு இடம்.
அங்கே உஸ்கியா ரேட் மார்க்குடன், பல மையங்கள், இயற்கை சுற்றுலா இடங்களுடன் பூமிக்கு அடியில் (பொட்டம் ஒவ் த வேர்ள்ட்) ரெஸ்ரூரன்ட் மிகப்பிரபலம் வாய்ந்தது. இங்கு சென்று உணவருந்தினால் நீங்கள் பூமியின் இறுதி அடிப்பகுதியில் இருந்து உணவருந்திவிட்டதாக தைரியமாக காலரை தூக்கிவிட்டு இறுமாப்புடன் யாருக்கும் பெருமை பேசிக்கொள்ளலாம்.

குளிரோட்டமான கடல், இயற்கைசூழந்த இடங்கள், கண்ணுக்கு குளிர்ச்சிதரும் பசுமை, வித்தியாசமான விலங்குகள், என பலவற்றை பார்த்தவாறே உணவுவகைகளையும் விருப்பம்போல ருசித்துவிட்டு வரமுடியும்.
முக்கிமாக கடல் உணவுகள் இங்கே விசேடமாக கிடைக்கின்றன. பல வெரைட்டிகளில் கடல் உணவுகளை ருசித்துக்கொள்ளலாம். அதுபோல இந்த பகுதியில் மட்டும் வளரும் ஒருவகை காளான் உணவின் ருசி அபாரம் என்று பலர் சொல்லிக்கொள்கின்றார்களாம்.
அவற்றுடன் கோதுமை, பர்கர்ரக உணவுகள், பார்லி, இத்தாலியன் ஸ்ரைல் பூட்ஸ் என்பன கிடைக்கின்றன என தகவல்கள் உள்ளன.
ஆனால் என்ன வெறி சாரி..பிறதேஸ் அன்ட் சிஸ்ரர்ஸ்..சோறு கிடையவே கிடையாது.

குறும்படம்

வரிகளுக்கிடையே – மீண்டும் தயானந்தா.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களின் பின்னர் எழுத்துக்களின் ஊடாக “வரிகளுக்கிடையே” அனைவரையும் சந்திக்க வருகின்றார் மூத்த ஊடகவிலாளரும், எழுத்தாளருமான இளைதம்பி தயானந்தா அவர்கள்.
“வானலைகளின் வரிகள்” என்ற நூல்மூலம் இளையதம்பி தயானந்தாவின் எழுத்துக்களில் மெய்மறந்த வாசகப்பிரியர்களுக்கும், அவரது மொழிக்கையாட்சியை புரிந்துகொண்டவர்களுக்கும் இது ஒரு இனிப்பான செய்தியாகவே இருக்கும் என்பது வெள்ளிடைமலை.
மிக விரைவில் இலங்கை முன்னணி பத்திரிகையின் வார இதழில் “வரிகளுக்கிடையே” என்ற மகுடத்துடன் இளையதம்பி தயானந்தா அவர்களின் எழுத்துக்களுடன் பயணிக்கும் புதுமையான அனுபவம் இலங்கை வாசகர்களுக்கும், இணையத்தில் பத்திரிகை படிப்பவர்களுக்கும் கிட்டப்போவதாக அறிந்தமை மிக மகிழ்ச்சியான செய்தியே.
புகழ்ச்சிக்காக அல்ல உண்மையாகவே நடமாடும் ஒரு பல்கலைக்கழகமாக தன்னகத்தே பெருந்தேடல்கள்மூலம் பல துறைசார்ந்த அறிவுடன் உலாவும் அவரிடமிருந்து உதிரப்போகும் எழுத்துப்பூக்களை பவுத்திரமாக பொறுக்கிக் கொள்ளக்காத்திருக்கும் இளையவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும் என்பதே என் எண்ணம்.

நெடுந்தீவுக்கு புதிய கப்பல் வெள்ளோட்டம்.

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணிப்பதற்கான கப்பல்சேவைக்கு நாளை புதன்கிழமை புதிய கப்பல் வெள்ளோட்டம் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.
இதுவரைகாலமும், தரமற்ற படகின்மூலம் சிரமமான ஆபத்தான கடல்பகுதிப்பயணமாகவே குறிகட்டுவான் - நெடுந்தீவக்கான கப்பல் பயணம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் சுமார் 800 மில்லியன் செலவில் கொழும்பில் அபிவிருத்தி அதிகார சபையின்மூலம், டொக்கியாட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய கப்பலில் சுமார் 200 பயணிகள் ஒரே பிரயாணத்தில் பயணிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன், லைவ் ஜக்கட், உள்காற்று கட்டமைப்புடன் இந்த கப்பல் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுமானவரை இது இலவச பயண ஒழுங்கில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியூசிக் கபே

ஜோக் பொக்ஸ்
ஒரு ஊரில் “கரிநாக்கன்” என்று மக்களால் சொல்லப்படுபவன் ஒருவன் இருந்தானாம். அவன் எதை கண்டு சொன்னாலும், மறுநாளே அது நாசமாய்ப்போய்விடும் அதுதான் அந்த பெயரை அவன் பெறக்காரணம். அவன் வாயும் சும்மா கிடக்காது.
ஒரு ஊரில் அண்ணன் தம்பி இருவர் இருந்தாங்க..ரொம்ப பாசக்கார பயலுக..அண்ணன் சாப்பிட்ட மிச்சத்தைதான் தம்பி சாப்பிடுவான், தம்பி குடித்த தண்ணியைத்தான் அண்ணன் குடிப்பான் அப்படி ஒரு பாச இணைப்பு.
இந்தப்பாவிப்பயபுள்ளை ஒருநாள் அவர்களைப்பார்த்து…. இருந்தா அவங்கபோலத்தானய்யா இருக்கணும் என்று சொன்னான். கதை மறுநாள் கந்தலாகிப்போச்சு. ஒரு பெண் விடயத்திற்காக அண்ணனை வெட்டிப்புட்டு தம்பி ஜெயிலுக்கு போனான்.
அதேபோல ஊருக்கே பால் கொடுக்கும் பசு ஒன்றை கண்டு அப்பா..இது பசுவில்லை காமதேனு என்றான். சொன்ன கொஞ்ச நேரத்திலையே பசு வலிப்பு வந்து செத்துப்போச்சு.
இத்தனையையும் கண்ட ஒருவன் விருப்பத்துடன் கரிநாக்கனை தன் வயலுக்கு அழைத்துப்போனான். ஏனென்றால் அவன் விதைப்பு அப்படி. அறுவடை நாளாகிவிட்டது ஆனால் வயலில் முக்கால்வாசி களைதான். கால்வாசிதான் நெல்.
அதைப்பாத்து அட இம்புட்டு களையா என அவன் சொல்வான் உடன களையெல்லாம் பொசுங்கிப்போகும் என்ற எண்ணம்தான் வயற்காரனுக்கு.
ஆனால்..வயலைப்பார்த்து “கரிநாக்கன் சொன்னது இப்படி
“பார்ரா…இம்புட்டு களை பரந்து கிடந்தாலும் அங்கங்க நெல்லும் முளைச்சுத்தானே இருக்கு”

11 comments:

பார்வையாளன் said...

புதிய ஜோக் அருமை

ஜீ... said...

//இதுவரைகாலமும், தரமற்ற படகின்மூலம் சிரமமான ஆபத்தான கடல்பகுதிப்பயணமாகவே குறிகட்டுவான் - நெடுந்தீவக்கான கப்பல் பயணம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது//

ஆனா அந்தப்படகில அடிக்கும் அலைக்குத் துள்ளித் துள்ளிப் போகிற 'த்ரில்' கப்பல்ல போகும்போது கிடைக்காதண்ணே!

மாத்தி யோசி said...

all are super.i too waiting for i.thayanantha.joke super.jana this cocktail is sema kick.

Chitra said...

nice post. :-)

கார்த்தி said...

அண்ணே அந்தப்படம் உங்களுக்கு கிடைக்கலயா? அதயும் போட்டிருக்கலமெல்ல. நெடுந்தீவுக்கு பழைய ஆபத்தான படகில் பயணித்தவன் என்ற வகையில் இது மிகவும் சந்தோசம்!!

Anuthinan S said...

அண்ணா கதை அருமை!!!

சாப்பாட்டு இடம் மட்டும்தான் காட்டுவிங்களா??? கூட்டி கொண்டு போய் வான்கிதாறது???:P

நிரூசா said...

வழமைய போலவே ஹொக்ரெயில் நல்லா இருக்கு

நிரூபன் said...

ஹொரெயில் வழமை போல ஹிக்குதான். இந்த வாரம் நகைச்சுவை போதை ரொம்பவும் அருமை. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது இவ் வார நகைச்சுவை.

மைந்தன் சிவா said...

அருமை........
விடயத் தெரிவுகள் அருமை தல..

டிலான் said...

குறும்படம் வெருட்டுது அண்ணை. நெடுந்தீவு பயணம் இதுவரை ஆபத்துதான் வழங்கப்படும் லைப் ஜக்கட்டுகள்கூட என்ன தரத்தில், எவ்வளவு சுத்தமானதாக இருந்தன அப்போது! அடுத்து தயா அண்ணாவின் கட்டுரைகள் வரவிருப்பது சந்தோசமே. இத்தாலி பிரதமர் பாவம்அண்ணே அந்த ஆளு.
ஹொக்ரெயில் அவசரத்தில்போட்டது போலவும் ஒரு உணர்வு. என்றாலும் கலக்கல்தான்.

sakthistudycentre-கருன் said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது நகைச்சுவை...


பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

LinkWithin

Related Posts with Thumbnails