Sunday, February 13, 2011

இந்தவாரப் பதிவர் - திரு.மாத்தியோசி றஜீவன்.

பெயரில் மட்டும் இன்றி தன் பதிவுகளாலும், பலரை மாற்றி யோசிக்கவைத்துவிடுபவர் இவர். அண்மைக்காலத்தின் அதிரடிப்பதிவர்களில்முக்கியமான ஒருவரும்கூட. வித்தியாசமாக, ஜனரஞ்சகத்தோடு அனைவரையும்கவரும் நடையில் எழுதும் பதிவர்கள்மேல் பலரின்பார்வைகள் கண்டிப்பாகமையமிடும் என்பதற்கு ஏற்றால்போல் பலரையும் தனக்கே உரியதானஜனரஞ்சகம் மிக்க எழுத்துக்களால் தன்னோடு சேர்ந்து பலரையும் மாற்றியோசிக்கவைத்துள்ளார் பதிவர் றஜீவன்.

சக நண்பன் ஒருவனுடன், கட்டை மதிற்சுவர் ஒன்றின்மேல் உட்கார்ந்துகொண்டு, இடைக்கிடை கடலையும்போட்டுக்கொண்டு, பல விடையங்கள் பற்றியும்சிலாகிப்பதுபோன்ற உணர்வினை இவரது பதிவுகள் ஏற்படுத்தி விடுவதே இவரதுபதிவின் பெரு வெற்றியாக அமைந்துள்ளது.
நகைச்சுiவாயக பேசவும், எழுதவும் தெரிந்தவர்கள் எல்லோரையும் தம்மகத்தேகவர்ந்துகொள்வது இயல்பு என்பது றஜீவனின் பதிவுகளில் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ராமலிங்கம் றஜீவன் என்ற இயற்பெயரைக்கொண்ட இவர், யாழ்ப்பாணம்மானிப்பாயை பூர்விகமாகக்கொண்டவர். தனது உயர்தரக்கல்வியைவவுனியாவில் கற்று, பின்னர், ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியைபூர்த்திசெய்து வன்னி மண்ணில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றியவர். அதன்பின்னர் ஈழத்தமினத்தின் தலைவிதியான புலர்பெயர்வு வாழ்வு இவரையும் வந்துசூழ, தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துவருகின்றார்.
ஆனால் இவரது எழுத்து நடைகளையும், எழுதும் விடையப்பரப்பக்களையும்காணும் பலர் இவரை தமிழ்நாட்டுப்பதிவராகவே கருதுகின்றார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டும் இன்றி “With Me” என்ற ஆங்கில வலைப்பதிவையும், Avec மொய் என்ற பிரஞ்சுவலைப்பதிவையும்கூட இவர் பதிந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றே. ஒருவகையில் மூன்று மொழிகளில் பதிவெழுதும் பதிவர்களில் நாம் அறிந்துமும்மொழி புலமையுடன் இருக்கும் ஒருவர் றஜீவன் என்பதும் பெருமைசேர்க்கும் ஒருவிடயமே.

கடந்த வருடம் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவுலகத்தில் முழுமையாககளமிறங்கிய றஜீவனின் பதிவுகளும், வாசகர் தொகையும் மளமளவெனஅதிகரித்து சென்றதற்கு அவரது தொடர் ஈடுபாடும், பல துறைத்தேடல்களுமேபெரும் காரணங்களாக அமைந்துள்ளதை கண்டுகொள்ளலாம்.
சினிமா, இசை, பாடல்கள், சமுகம், சமகால நிகழ்வுகள், அரசியல், அரசல்புரசல்கள், தொழிநுட்பத்தகவலல்கள், ஒவ்வொரு பதிவுலும்அட்மார்க்குடன் எட்டிப்பார்க்கும் கவிதைகள் என வாசிப்பவர்களை நிறையயோசிக்கவும் வைத்து, அதேநேரம் எந்தவொரு இடத்திலும் சலிப்புத்தன்மையைகொஞ்சமேனும் வாசகர்களுக்கு வராதபடி அவதானமாக கையாளும் எழுத்துக்கள்றஜீவனிடம் அலாதியாகவே உள்ளன.

நகைச்சுவைக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் றஜீவனுடைய எழுத்துக்கள், தன் பதிவுகள் மற்றவர்களுக்கு ஒரு றிலாக்ஸ்ஸாக இருக்கவேண்டும் என்றஅவரது எண்ணத்தின் வெளிப்பாடாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு ஐயமும்இல்லை.
அதேவேளை சகல பதிவர்களுடனும், மென்மையான உணர்வோடும்நகைச்சுவையுடனும் அவர் எழுததுக்களால் தொடர்பு கொண்டுள்ளதும், காத்திரமான பதிவுகளுக்கும், உபயோகமான பதிவுகளுக்கும் ஓடிச்சென்றுவாசிப்பது மட்டும் அன்றி எழுதும் சக பதிவரை ஊக்குவிக்கும் பண்பும் அவரிடம்இயல்பாகவே உள்ளதை அவதானித்துகொள்ளமுடிகின்றது.

அடுத்த ஒரு முக்கியமான விடயம் என்னதான் நகைச்சுவைகள் கொண்டதாகஅவரது பதிவுகள் இருந்தாலும் உன்னிப்பாக கவனித்தால் அந்த எழுத்துக்களிலும், கருப்பொருள்களிலும் எந்தவொரு யதார்த்த மீறல்களையோ, அல்லது சார்பானதகவல்களையோ காணமுடியாதிருப்பது அவரது எழுத்துக்களின் முக்கியமானஒரு சிறப்பு.

பதிவுலகில் கால் பதித்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குள் மிக அதிகமானநண்பர்களையும், வாசகர்களையும், சக பதிவர்களையும் அவர்பெற்றுக்கொண்டுள்ளது மிக முக்கிமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயமே.
தனது வலைத்தளத்தில் “என்னைப்பற்றி” என்ற இடத்தில் எதையும் இதுவரைசாதிக்கவில்லை சாதித்துவிட்டு சொல்கின்றேன் என்ற கருத்தை இட்டுள்ளமை, அவையடக்கமாக மட்டுமே கருத முடிகின்றது. அதற்கு கீழேயே அப்படிபார்க்காப்போனால் எப்போதுமே என்னைப்பற்றி சொல்லப்போவதில்லை என்று, எழுத்தினால் கண்ணடிப்பதும் அதைவிட ஒரு அவையடக்கமாகவே தெரிகின்றது.

சரி.. இந்தவாரப்பதிவரான மாத்தியோசி றஜீவன் பற்றிய சிறிய பார்வையைஇதுவரை பார்த்தோம். இனி இந்தவாரப்பதிவர் றஜீவனிடம் கேட்கப்பட்ட அந்தமூன்று கேள்விகளையும் அதற்கான அவரது பதில்களையும் பார்ப்போம்.

கேள்வி: சம்பிரதாயக் கேள்விதான் தங்கள் வலையுலகப்பிரவேசம் எப்படி?

றஜீவன் : எங்க எது ப்ரீ யா குடுத்தாலும் அத வெக்கப்படாம வாங்குறது நம்ம பழக்கம்! கூகுளும் ப்ளாக்குகளை பிரீயாகத் தருவதால், சரி நம்மளும் ஆரம்பிப்போமே என்று தொடங்கினேன்!

கேள்வி: தங்கள் வலைப்பதிவில் குறிக்கோள் அப்படி ஏதாவது உண்டா?

றஜீவன் : எல்லோரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கவேணும்! இதுதான் எனது குறிக்கோள்! ஆனால் இது லேசான காரியம் இல்லை! கிரியேட்டிவ் மைன்ட் நிறைய வேணும்! எனக்கு கிரியேட்டிவ் மைன்ட் உள்ள எல்லோரையும் ரொம்ப பிடிக்கும்! எமது மூளையை கசக்கி பிழிந்து அதில் சாறெடுத்து, நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்று சிறிய வயதில் இருந்தே யோசிப்பேன்!

கேள்வி: வலையுலகம், எழுத்துக்கள் சார்பாக எதிர்காலத்திட்டங்கள் ஏதாவது?

றஜீவன் :கண்டிப்பாக! முதல் முறையாக இதனை இப்போதுதான் ஏனைய நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்! அதாவது சினிமாவில் ஸ்க்ரிப்ட் ரைட்டராக வரவேண்டும் - அதுவும் மிகச்சிறந்த காமெடி ஸ்க்ரிப்டுகளை எழுதி அதனை நல்லதொரு இயக்குனரின் கையில் கொடுத்து, நல்ல நகைச்சுவைப் படங்கள் எடுத்து மக்களை சிரிக்க வைக்க வேணும் என்பதே எனது குறிக்கோள்!

எனது வலைப்பூ மூலமாக நான் இதற்கான பயிற்சியினை மேற்கொண்டு வருகிறேன்! நான் எழுதும் ஒவ்வொரு பதிவும் எனக்கான பயிற்சியே! இப்படியே எழுதி எழுதி நன்கு புடம் போடப்பட்ட பின்னர் - சினிமாவுக்குள் நுழைவதாக எண்ணம்! காமெடி ஸ்க்ரிப்டுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்!

திரைப்படங்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் எனது நண்பர்கள், இப்போதே எதையாவது எழுதும்படி கேட்கிறார்கள்! ஆனால் நான் அவசரப்படவில்லை! என்னை இன்னும் நிறைய வளர்த்துக்கொள்ள வேண்டும்! பின்னர்தான் கால்வைக்க வேண்டும்!

சரி நண்பர்களே! இதற்குமேல் நான் நீட்டி முழக்கி, நண்பர் ஜனாவின் ப்ளாக் கு இருக்கிற பெயரைக் கெடுக்க விரும்பவில்லை! என்னை இன்று அறிமுகம் செய்த நண்பன் ஜனாவுக்கு எனது நன்றிகள்!!

றஜீவனின் - மாத்தியோசி

21 comments:

தமிழ் உதயம் said...

வாழ்த்துக்கள் - மாத்தியோசி றஜீவன்.

டிலான் said...

வண்ணம் றஜீவன். நன்றி ஜனா அண்ணா. இன்று விடுமுறைதானே! றஜீவனுடைய தளத்துடன் மினக்கடுவதாக முடிவு எடுத்துள்ளேன்.

MANO நாஞ்சில் மனோ said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள். 3 வெச்சு மெயிண்ட்டன் பண்றார்னா கேடி தான்

Admin said...

நல்ல அறிமுகம். பகிர்விற்கு நன்றிகள்.

ம.தி.சுதா said...

நன்றி ஜனா அண்ணா..

வாழ்த்துக்கள் ரஜீ... மிகவும் ரசனை கூடிய பதிவர்களில் ஒருவராகவே இவரை நான் பார்க்கிறேன்... அத்துடன் மிகவும் அருமையான குரல் வளம் கொண்ட ஒரு மனிதர் தன் அவையடக்கத்தால் இதை வெளிக்காட்டிக் கொள்ளாத மனிதராக இருக்கிறார்...

Riyas said...

அடடா மாத்தியோசி ரஜீவன் அண்ணா இலங்கையர் என்பதை இப்போதுதான் அறிகிறேன்

வாழ்த்துக்கள்... ஜனா அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்,,

நிரூபன் said...

றஜீவனின் நகைச்சுவைகளை நினைத்து நினைத்துச் சிரிக்கலாம். அந்தளவு தூரம் மனதைக் கவரும் வகையில் காமெடிகளை அள்ளி வீசும் வல்லமை அவரது எழுத்துக்களில் தெரிகிறது. வாழ்த்துக்கள் ரஜீவனிற்கு. ரஜீவனின் கனவுகளும் வெகு விரைவில் நிறைவேறும் என்பதற்கு அவரது திடமான பதிலும் எழுத்துக்களுமே சான்று பகர்கின்றன. ரஜீவனைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றிகள் சகோதரா.

Unknown said...

மாத்தியே சோசிப்பவர்...வாழ்த்துக்கள் மாத்தியோசி..

சக்தி கல்வி மையம் said...

உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு ....
வாழ்த்துக்கள்...
ஜனா உங்கள் சேவை தொடரட்டும்,,

test said...

உண்மையாகவே மாத்தி யோசிப்பவர்! அவரது இலட்சியம் ஈடேற வாழ்த்துக்கள்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை ஜனா! என்னைப் பற்றி இந்தளவுக்கு எழுதியிருப்பது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கும் அதேவேளை, இன்னும் கடுமையாக உழைக்கவும் தூண்டுகிறது! என்னை என்னால் அளந்து கொள்ள முடியாத, ஒரு பலவீனம் எனக்கு இருக்கிறது! ஆனால் நீங்கள் சொல்லும்போதுதான், எனக்கே என்னைப் பற்றி புரிகிறது!



// அடுத்த ஒரு முக்கியமான விடயம் என்னதான் நகைச்சுவைகள் கொண்டதாகஅவரது பதிவுகள் இருந்தாலும் உன்னிப்பாக கவனித்தால் அந்த எழுத்துக்களிலும், கருப்பொருள்களிலும் எந்தவொரு யதார்த்த மீறல்களையோ, அல்லது சார்பானதகவல்களையோ காணமுடியாதிருப்பது அவரது எழுத்துக்களின் முக்கியமானஒரு சிறப்பு. //



எனது எழுத்துக்களை இந்தளவுக்கு கூர்ந்து கவனித்திருக்கிறீர்கள்! மிகப்பெரிய நன்றி உங்களுக்கு!!





நீங்கள் இப்படி என்றால் - நண்பர்கள்? அவர்களும் என்னை இந்தளவுக்கு மதிப்பது மகிழ்ச்சியாக உள்ளது! இத்தனைக்கும் காரணம் எனது நகைச்சுவையான எழுத்துக்கள் என்றால், கண்டிப்பாக உங்களை மேலும் மேலும் சிரிக்க வைக்க நான் முயல்வேன்!!



இந்தத் தருணத்தில், நண்பன் ஜனாவுக்கும், எல்லா நண்பர்களுக்கும் இதயபூர்வமான நன்றிகள்!! தொடர்ந்து பயணிப்போம்!!

ஆனந்தி.. said...

என் சகோதரன் ராஜிவன் பற்றிய உங்கள் அலசல்கள் ரொம்ப மகிழ்ச்சி ஜனா...அருமையான மனிதரும் அவர்..அருமையான க்ரியடிவிட்டி உள்ள நல்ல சகோதரன்...அவர் இடுகைகள் படிக்கும்போது இதழோரம் புன்னகை நம்மை அறியாமல் வந்து விடும்...அறியாத சில தகவல்கள் என் சகோதரனை பற்றி சொன்னமைக்கு நன்றி...நானும் கவனித்து சொல்லியும் இருக்கிறேன் குறிப்பிட்ட வட்டார வழக்கை மட்டும் கையாலாகாமல் இயல்பான அவர் தமிழ் நடையும் ரொம்ப அருமை...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வாழ்த்துக்கள் - மாத்தியோசி றஜீவன்.

நச்சத்திரா said...

றஜீவனின் அறிமுகத்திற்கு நன்றி ஜனா அண்ணா. உண்மையிலேயே மதி.சுதாவையும், றஜீவனையும் நான் இதுவரை இந்தியப்பதிவர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். றஜீவனின் பதிவுகளை இப்போது படித்துகொகொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு அழகான நடிகைகளின் படங்களை போட்டு வருவதை குறிப்பிட மறந்துவிட்டீங்கள் அண்ணா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட, நம்ம மாத்தியோசி, வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல பேட்டி, இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கலாம்!

shanmugavel said...

மாத்தியோசி,என் பக்கத்துவீட்டு தம்பியைபோல் இருக்கிறாய்.நீயும் என் தம்பியே!உன் கனவு நிறைவேறட்டும்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றி வெகு அருமையான அறிமுகம்!

ஷஹன்ஷா said...

நன்றிகள்...அறிமுகத்திற்கு.......

Unknown said...

இந்த வார பதிவர்க்கு இனிய நல்வாழ்த்துக்கள்..
மாத்தி யோசித்தல் இன்னும் தொடரட்டும்..

LinkWithin

Related Posts with Thumbnails