றோயல் திருமண அழைப்பிற்கான தவம்!
மிகப்பிரபலமானவர்களின் திருமணம் என்றால், பல்வேறு சர்ச்சைகள், தடைகள், அறிக்கைகள், செய்திகள் என வருவது இயல்புதான் என்றாலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள பிரிட்டன் அரச குடும்ப கல்யாணத்தை இட்டு ஒரு வினோதமான செய்தி கண்ணை குத்துகின்றது.
தனக்கும் “வில்லியம் -ஹேத்” திருணமத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்படவேண்டும் என்றுகோரி கடந்த 10 நாட்களாக மெக்ஸிகோவின் தலைநகர், மெக்ஸிகோ சிட்டியில் உள்ள பிரித்தானிய தூதரகம் முன்னால் வடக்கிருக்கின்றாள் ஒரு 19 வயது மாணவி.
எஸ்ரிபலிஸ் ஷாவேஸ் என்ற இந்த மாணவி, மெக்ஸகோ சிட்டியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவி. இவளது தாயார் டயானாவின்மேல் அதிக அன்பும், அபிமானமும் கொண்டவர், அவரிடமிருந்து அந்த மோகம் இவளுக்கும் தொற்றியுள்ளது. இந்த நிலையில் டயானாவின் மகனின் திருமணத்தையாவது தான் பார்க்கவேண்டும் என்ற பெரும் விருப்பம் காரணமாக முறைப்படி பிரித்தானிய தூதரக்கத்திற்கு சென்று விஸாவுக்கு விண்ணப்பித்ருக்கின்றாள் எஸ்ரிபலிஸ் ஷாவேஸ்.
என்ன! இது ஒரு பைத்தியக்காரத்தனம் என்ற ரேஞ்சிற்கு சிந்தித்து இவளுக்கு விஸா வழங்காமல், திருப்பி அனுப்பியுள்ளது தூதரகம்.
இந்த நிலையில் விடாக்கண்டன், தொடாக்கண்டன் என்ற ரீதியில், தான் அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவேண்டும் எனவும், அதற்காக தனக்கு அரச குடும்பத்தினரின் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த பிரித்தானிய தூதரக்கதின்முன்னாலேயே ஒரு சிறிய கூடாரம் அமைத்து 10 நாளாக தவம் இருக்கின்றாள் இவள்.
எனினும் இதுவரை இவளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை.
தூதரகம் தம் நிலைப்பாடு பற்றி உரியமுறையில் அறிவிக்கமுயற்சி செய்யவில்லை என்றும், தன் முடிவில் இருந்து ஒருபோதும் தான் பின்வாங்கப்போவதில்லை என்றும் உறுதியுடன் தொடர்ந்தும் அதே இடத்தில் இருக்கின்றாள்.
தற்போது பெருமளவிலான மாணவர்களும், சில அமைப்புக்களும் அவளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு இந்தப்பெண் போவாளோ இல்லையோ! இன்று உலக நாடுகளின் பத்திரிகள் அனைத்திலும் இடம்பிடித்திருக்கின்றாள் இவள்.
The Adjustment Bureau
எதிர்வரும் மார்ச் 04ஆம் திகதி வெளிவரவுள்ள முழுமையான ஒரு திரில்லர் அனுபவம் The Adjustment Bureau. ஜோர்ஜ் நொல்பியின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் திரில்லர் திரைப்படம் இது என விபரிக்கப்பட்டுகின்றது.
மட் டமன்ட், எமிலி புலூட், ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளனர்.
இதேவேளை பெரும் எதிர்பார்ப்புகள் நிறைந்த Battle: Los Angeles, Limitless, Mars Needs Moms, Red Riding Hood ஆகிய திரைப்படங்களும் மார்ச் மாதம் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தவார வாசிப்பு
பொதுவாகவே பேய்கள், ஆமானுஷங்கள் சம்பந்தப்பட்ட கதைகள், வாசிக்கும்போது ஆர்வத்தையும், மனதில் ஒரு இனந்தெரியாத ஆர்வத்தையும், சிலவேளைகளில் பீதியையும் உண்டாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஜெயமோகனின் நிழல் வெளிக்கதைகள் மிகவும் சுவாரகசியமானதாகவும், வாசிக்கும்போது எல்லைகடந்த ஒரு ஒன்றிப்பை உண்டாக்கக்கூடியதாகவும் உள்ளது. ஜெயமோகனின் குறுநாவலான பிளாத்தீனம் படிக்கும்போதே அதில் சாடையாக எட்டிப்பார்த்த ஆமானுஷத்தைக்கண்டு, இந்த மனுசன் ஆமானுஷம், பேய்க்கதைகள் எழுதினால் சிறப்பாக இருக்கும், எழுதினாரா? என்ற கேள்வி எழுந்திருந்தது. அந்த கேள்விக்கான தரமான பதிலாக இந்த புத்தகம் அமைந்துள்ளது.
இதில் பழமையான கதைகள் சில உள்ளதையும் அவதானிக்கமுடிகின்றது.
ஆனால் ஒன்று உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும், ஒவ்வொரு கதையிலும், ஒவ்வொரு கட்டங்களும், ஆர்வத்துடன் படிக்கும்விதம் அமைந்துள்ளது.
இந்த கதைகளில் பாதைகள் கதை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
ஓவ்வொருகதையும் எழுத்துக்களினூடான ஆமானுஷ பயணமான அனுபவத்தை தருவது நிஜமே. கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம்.
கீதாஞ்சலி…
மலேசியா வாசுதேவன். தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு குரல்கொண்டு, இசை பரப்பி வந்த ஒருபாடகர். “பாலுவிக்கிற பத்தம்மா” என்ற பாடலில் இருந்து தொடங்கிய அந்த இசை சாரங்கம் இப்போது ஓய்ந்துபோய்விட்டது.
“முதல் மரியாதை” பாரதிராஜா சிவாஜிக்கு செய்த முதல்மரியாதைபோல, இளையராஜா இவருக்கு செய்த முதல்மரியாதை என்றே சொல்லவேண்டும்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த மலேசியா வாசுதேவன், திரைப்படப்பாடல்கள் பாடுவதற்கு முன்னர், பாவலர் சகோதரர்கள் குழுவிலே முக்கிமான ஒரு பாடகராக இருந்திருக்கின்றார்.
பாடகராக மட்டுமின்றி ஒரு நடிகராகவும் தன்னை நெறிப்படுத்தி சாதித்த பெருமை இவருக்கு உண்டு.
இதோ அவருக்கு ஒரு கீதாஞ்சலி…(அருமையான ஒரு பாடல்)
சச்சின் அவுட்டா..! நிப்பாட்டு டி.வியை!!
இப்ப வேர்ள்ட் கப் பீவர்தானே! இப்படியான நாட்களில சிலருடைய சுவாரகசியமான சம்பவங்களுக்கும் பஞ்சம் இருப்பது கிடையாது. நம்ம வீட்டிற்கு பக்கத்திலை இந்த சுவாரகசியத்திற்கு பஞ்சம் இருக்காது.
பக்கத்து வீட்டில் உயர்ந்த ஊத்தியோகத்தில் உள்ள ஒருவர் இருக்கின்றார். அவருக்கு 5 பிள்ளைகள் ஐவருமே ஆண்கள். இருவர் பல்கலைக்கழகம் மற்றவர்கள் உயர்தரம், சாதாரண தரம் என்று கல்விகற்று வருகின்றார்கள்.
அவரோ கிரிக்கட்டில் தீவிரமான இந்திய இரசிகர். அதிலும் சச்சினின் பக்தர் என்றே சொல்லவேண்டும்.
இந்திய கிரிக்கட் அணி விளையாடும்போட்டிகளை போட்டுவிட்டு, சத்தமாக தன் பிள்ளைகளை அழைத்து மச் பார்க்கவிடுவார். சிலவேளைகளில் படித்துக்கொண்டிருக்கும் அவர்களைக்கூட கட்டாயப்படுத்தி இந்திய துடுப்பாட்டதை பார்க்கவைப்பார். ஆனால் என்ன சச்சின் அவுட் ஆகியவுடன் எமக்கு கேட்கும் அவரது குரல் “சரி..டி.வி.ஐ நிப்பாட்டு, எல்லோரும் போய் படியுங்கள்” என்பதாகவே இருக்கும்.
அதுசரி..நீங்க எந்த ரீமுக்கு சப்போர்ட் என்று நீங்க கேட்க நினைப்பது புரியுது..
நான் எப்போதுமே தென் ஆபிரிக்க இரசிகன்தான்.
இந்தவாரக் குறும்படம்.
மியூஸிக் கபே
இதுவும் மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய ஒரு சிறப்பான பாடல்தான்.
ஒரு அண்ணன் தங்கை பாசத்தை புலப்படுத்தும் இந்த பாடல், தன் தங்கையின் எதிர்கால கனவில் மிதக்கும் பாசமான அண்ணனின் குரலின் பாசமும், தழுதழுப்பும் உன்னிப்பாக கேட்டீர்கள் என்றால் உணர்ந்துகொள்ளமுடியும்.
“கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா!
முன்னூறு நாள் தாலாட்டினால் என்பாசம் போகாதம்மா!
என் ஆலயம் பொன்கோபுரம், ஏழேழு ஜென்மங்கள் அனாலும் மாறாதம்மா”
அற்புதமான வரிகள்..
ஜோக் பொக்ஸ்
ஒரு சிறுவன் நான்கு வயது வந்தபோதும் கை சூப்பிர பழக்கத்தை விட்டபாடா தெரியலை. அவனது அப்பாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டு, பையா.. நீ விரல் சூப்பும் பழக்கத்தை விடாமல் போனால் அதோ போறாரே... ஒரு போலீஸ் காரர் அவரைப்போல உனது உயிறு பெரிசாயிடும் என்று பையனுக்கு காட்டினார். பயந்துவிட்ட சிறுவன், அப்போதிருந்து விரல் சூப்புவதை கஸ்டப்பட்டு விட்டுவிட்டான். அன்று மாலை அவனது தாயாரின் பிறந்த தினம் என்று தாயின் நண்பர்கள் நண்பிகள் அனைவரும் வந்திருந்தனர்.
அங்கே ஒரு கர்ப்பிணி பெண்ணும் வந்திருந்தாள்.. அவளிடம் சென்ற சிறுவன்.."ஆண்டி எப்படி உங்களுக்கு வயிறு பெருசாச்சு என்று எனக்கு தெரியும். எல்லோருக்கும் சொல்வா என்று கேட்டான்." அந்தப்பெண் வியர்த்து வறுவிறுத்தப்போனாள்.
25 comments:
நிழல்வெளிக் கதைகளை யாழ்ப்பாணத்தில் வந்து பெற்றுக்கொள்கின்றேன். ஜெயமோகனின் எழுத்துக்கள் ஆர்வத்தை துண்டுபவையே.....!
சச்சின் அவுட்டா..! நிப்பாட்டு டி.வியை!!// அட நம்ம பாலிசி..
ஜோக் ... ம்ம்ம்ம்ம..
அருமையான மலேசிய வாசுதேவன் பாடல்கள், ஜெயமோகனின் நூல் விமர்சனம் மற்றும் செய்திகள் என்று ஹொக்ரெயில் அருமை.
அள்ளித் தந்த பூமி..... சூப்பர் சாங்! இந்த பாடலை எனக்கு அறிமுகப் படுத்திய தமிழ் உதயம் அண்ணனுக்கு நன்றி சொல்லணும்.
குறும்படம் என்ன அண்ணை ஆளையாள் மாறி மாறி போட்டு தள்ளுராங்கள்?
அந்த மாணவி அரச கல்யாணத்திற்கு போக நானும் வேண்டுகின்றேன்.
joke and other messages super
என்ன உலகமப்பா ஒர கலியாணம் பார்க்க இந்தளவு அக்கப் போறகவல்லவா இருக்கிறது...
ஃஃஃஃஃஃ“கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா!
முன்னூறு நாள் தாலாட்டினால் என்பாசம் போகாதம்மா!
என் ஆலயம் பொன்கோபுரம், ஏழேழு ஜென்மங்கள் அனாலும் மாறாதம்மா”ஃஃஃஃஃ
அண்ணா தங்களது ஒவ்வொரு பதவிலும் ஏதோ ஒன்று மனதை ஆழமாகத் தொடும் இந்தத் தரம் எனக்கு இந்த வரிகள்....
COULDN'T WATCH VIDEOS IN MOBILE.OTHERWISE ALL ARE SUPER.WELL.
காணொளிகள் சூப்பர்.
அது சரி குறும்படத்தில் ஒரு தவறு கண்டீர்களோ... ரவை பெட்டியை எடுக்கும் வீரனில் ஒருவன் காலணியான் கயிரை சரிவரக் கட்டவில்லை....
இது விருதகளில் இதைக் கூட கவனிப்பார்களாமே...
நான் வாசித்திருக்கிறேன் என நினைக்கிறேன்! (மூன்று வருடங்களுக்கு முன்)
ஒரு யட்சிணி தனக்குப் பிடித்த ஒருவனை ஒரு மூன்று அறை பளிங்கு மாளிகைக்குள் தன்னுடன் சிறை வைத்து விடுகிறாள்! எப்படிஎன்றால், அவனை வண்டாக மாற்றி, ஒரு நுங்குக்குள்! - இந்தக்கதை உள்ளதா?
'கொக்டெயில்' வழக்கம் போல கலக்கல்!
சூப்பர் ஜோக்! :-)
கல்யாணம்-ம்ம் கல்யாணம்...!!
புஸ்தகம்-கேள்விப்பட்டதில்லை...
தென்னாபிரிக்கா-சாதிக்கலாம்!!
காணொளி-அருமை..
வாசுதேவன்-அனுதாபம்
ஜோக்-ஹிஹி
நீங்கள் சொன்னதுபோல எனது உறவனர் ஒருவரது வீட்டிலும் நடந்தது. அவர் அந்தக்கால சிறந்த கிரிக்கெட்டர். இந்திய சென்றெல்லாம் விளையாடி வந்தவர். அன்று மட்ச் நடந்த முதல்நாளே எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். மட்ச் பாக்கலய எண்டதுக்கு சச்சின சேவாக் அவுட் ஆக்கிட்டான் பிறகெதுக்கு பாக்கிறது ஆவ் பண்ணிட்டன் எண்டார். நான் என்னத்த சொல்லுறது (உண்மையில் அந்த ஆட்டமிளப்புக்கு சச்சினே காரணம் ஆனால் அந்த பெரிசுக்கு சொன்னா விளங்காது)
ஜோக் கொஞ்சம் எல்லை தாண்டிவட்டது ஹிஹி இத நான் முதலே கேட்டருந்தாலும் திருப்ப கேக்க நல்லாருக்கு.
ம்ம்ம்ம் மலேசியா வாசுதேவனை மறக்கமுடியுமா,,,
திருமண்: விடாமுயற்சியினைக் காட்டுகிறது.
பட ரெயிலர்: hitman, Unstoppable இவை தான் கடந்த வருடத்தின் பிரபலமான திரிலர் படங்கள். இவற்றை The Adjustment Bureau முந்துமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயம்.
கிறிக்கற் பீவர்: நீங்களும் நம்ம கட்சியா.
வாசிப்பு: இனித்தான் இந்த நூலைப் படிக்க வேண்டும்.
மலேசியா வாசுதேவன்: குரலால் எமையெல்லாம் குளிப்பாட்டிய ஒருவர். நெஞ்சை ஈரமாக்கும் சம்பவம்.
குறும்படம்: கொலை செய்வதில் இருக்கும் வெறியை உணர்த்துக்கிறது. பாடிய வாயும், ஆடின காலும் சும்மா இருக்காதாம்.
மலேசியா வாசுதேவனின் பாடல்: என்னுடைய அம்மாவிற்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. ஆதலால் அடிக்கடி நான் கேட்கும் பாடலாவும் ஆகி விட்டது.
ஜொக் பாக்ஸ்: சமயோசிதம்.
இந்தவாரமும் செம ஹிக் சகோதரா.
ஒரு சஞ்சிகை படிச்சது போல இருக்கு..
எனது பதிவுலக அறிமுகத்தை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்
சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்
பகிர்வுக்கு நன்றி
உங்க உழைப்பு உங்க இடுகையில் தெரிகிறது நன்றி நண்பரே
பார்த்தா டீசண்ட்டா இருக்கீங்க.. இப்படி இண்டீசண்ட்டா ஏ ஜோக் போட்டிருக்கீங்க.. ஹி ஹி
நன்றி....
நன்றி....
ம்ம்
fentastic ஜனா..அருமையான கோர்ப்பு...அந்த மெக்சிக்கோ பொண்ணை நினைச்சு சிரிப்பு தான் வந்தது...:)) ஓ..நீங்க சவுத் ஆப்ரிக்க வா...ஓகே..ஓகே..:)) வாசு சார் மறைவு மிகவும் வருத்தம் தான்...அவரின் பாடல்கள் காலத்தால் மறக்க முடியாது...அந்த ஜோக் ..ஹ ஹ...:))
Post a Comment