உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் உச்சமான ஒரு பயம் மரணபயமே. நாளை தனக்கு மரணம் உண்டு என்பதை மறந்து மனித இனம் வாழ்ந்துகொண்டிருந்தாலும்கூட, மரணம் என்பது நிச்சயம் என்பது மனிதனுக்கு ஒவ்வொரு செக்கனும் சொல்லிக்கொண்டுதான் உள்ளது. மரணம் என்னும் முடிவை கண்டும் காணதவன்போல மனிதன் நடித்துக்கொண்டு தன்னைத்தானே சமாதனப்படுத்திக்கொண்டு வாழப்பழகிக்கொண்டுவிட்டான்.
ஒருவகையில் மனிதனது இந்த நடவடிக்கைகூட ஒருவகையில் அவனது முறையான சாமர்த்தியம், அல்லது அவனுக்கு கிடைத்த வரம் என்றுதான் சொல்லவேண்டும், ஏனெனில் மரணம், முடிவு என்பனபற்றிய சிந்தனைகளுக்கு மனிதன் உட்பட்டிருந்தால், அது மனித வாழ்வையே கேள்விக்குறி ஆக்கிவிட்டிருக்கும்.
அத்தோடு சாகத்தானே போகின்றோம் என்று வாழாதிருப்பதும் நியாமாகப்படவில்லை.
மரணம் என்பது இந்த பூமியில் ஒரு மனிதனின், ஆடி அசையும் வாழ்வியலின் முடிவு என்று பௌதீக ரீதியில் சொல்லிக்கொண்டாலும், மரணத்தின் பின்னர்..!! என்று மனிதன் யோசிக்காமல் இருந்ததில்லை.
இங்கே உடல், ஆன்மா என்ற சித்தார்ந்தத்திற்குள்ளும், விஞ்ஞான கண்ணோட்டத்திற்கும் சென்று வாசிப்பவர்களுக்கு சலிப்பை உண்டாக்க விரும்பவில்லை. இரண்டையும் தாண்டிய பேதமையான மனிதமனத்தின் கோணத்திலேயே மரணத்தின் பின்னர் என்ற கேள்வியுடன் பயணித்துப்பார்ப்போம்.
மரணத்தின் பின்னர் என்ன? என்ற கேள்வி மனிதன் சிந்திக்கத்தொடங்கிய நூற்றாண்டிலேயே மனித மனதிற்கு தோன்ற ஆரம்பித்திருக்கவேண்டும்.
ஒருவனுடைய செதுக்கப்பட்ட வாழ்க்கை, அவன் கற்றவை, பெற்றுக்கொண்டவை, அவனது தனக்குள்ளான ஆராய்வுகள், அவனது சிந்தனைகள், அவனது அனுபவங்கள், வாழ்வியலின் புரிதல்கள், கற்பனா சக்தி ஓட்டங்கள் என அவன் பூமிக்கு வந்து கஸ்டப்பட்டு சேகரித்த எல்லாமே அவனுடைய மரணத்துடன் முடிவுக்கு வந்துவிடுகின்றனவா? இவைதான் முடிவென்றால் அவன் இத்தனைக்கும் சிந்திக்கவே தேவையில்லையே? போன்ற கேள்விகள் எழுகின்றதல்லவா!
மரணம் முடிவு என்பதை பெரும்பாலான மனித மனங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதிருப்பதற்கு இவைகள்தான் காரணங்களாக இருக்கவேண்டும்.
இதன் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளே மதங்களிலும் தாக்கம் செலுத்த ஆரம்பித்தன.
சொர்க்கம், நரகம், மறுபிறப்பு, பாவ, புண்ணியம், இயமன், சித்திரபுத்தன், தேவதூதர்கள், பாவத்தின் சம்பளம் மரணம், மீட்க ஆண்டவர் வருவார், ஜின்கள், என பல்வேறு கருத்துக்கள் தோன்ற இந்த மரணபயமே காரணமாக இருந்திருக்கவேண்டும்.
“நீ பிறப்பதற்கு முன்பே உனக்கான உணவாக உன் தாயின் முலைகளில் பாலை சேகரித்தவன் எவனோ, நீ இறந்ததன் பின்னர் உனக்கான இடத்தையும் அவன் நிர்மாணித்திருப்பான்” என்கிறது கலீல் ஜிப்ரானின் ஒரு வசனம்.
சரி..அதைவிட்டு விடுவோம். மரணத்தின் பின்னான சம்பவங்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே சொல்லப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. அதற்காக மரணத்தின் விழிம்பு வரை சென்று மாண்டு மீண்டவர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஒரு சமுதாயத்தில் என்றிலில்லாமல் உலகின் பல்வேறு இடங்களில் இவ்வாறு மரணத்தின் விழிம்புவரை சென்று “மாண்டு மீண்டவர்கள்” என்று கருதப்படுபவர்களின் அனுபவங்கள் பெறப்பட்டுள்ளன.
இவற்றில் குறிப்பிட்ட அளவு நபர்களின் செய்திகள், அவர்களது அனுபவங்கள், தங்கள் தங்கள் மதம் சார்ந்த கதைகளாக வருவதனால், அவ்வாறானவற்றை பொய்யானது என்ற கண்ணோட்டத்தில் தவிர்த்துவிட்டு பொதுவான கருத்துக்களை இது தொடர்பாக ஆராய்பவர்கள் சேகரித்து வருகின்றார்கள்.
விபத்துக்கள், கடுமையான நோய்வாய்ப்பட்டவர்கள், உயரமான இடங்களில் இருந்து தவறி விழுந்தவர்கள், தற்கொலை செய்யப்போய் ஆபத்தான கட்டத்தில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள், இறந்ததாக கருதப்பட்டு, சற்று நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தவர்கள், என பல்வேறு பட்டடோரிடம் இந்த மாண்டு மீண்ட தகவல்கள் சேரிக்கப்பட்டு வருகின்றன.
இதிலும் பலர், இறக்கும் நேரத்தில் முன்னர் இறந்துவிட்ட, தன் உறவினர்கள், நண்பர்கள், தன்னை பரிதாபத்துடன் பார்த்ததாகவும், அந்த நேரத்தில் நிகழ்காலத்தில் நிகழ்வதை, தம்முடன் வாழ்பவர்களைவிட, இறந்த அவர்களது நினைவுகளும், அவர்களது அன்பும் தமக்கு தேவையானதாக இருந்ததை உணர்ந்ததாகவும், அவர்களுடன் செல்லவே மனது ஆசைப்பட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
வேறு சிலர் இறந்து சில செக்கன்களில் ஒரு கோணத்தில் மேல்நோக்கி நின்று தம் உடலைதாம் பார்த்து அதிசயித்ததாகவும், வலிகள், வேதனைகள், மறைந்து மிதக்கும் நிலையையும், தட்பவெப்பமான ஒரு அருமையான சூழலையும் உணர்ந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இங்கு மிக முக்கமான விடயம் என்னவென்றால், மாண்டு மீண்டவர்களாக பல்வேறு தரப்பினரிடமும், பல்வேறு பிரதேசத்தவரிடமும் பெறப்பட்ட தகவல்களில் பாரிய ஒரு ஒற்றுமை தன்மையே ஒரு திடுக்கிடும் கட்டமாக அமைந்துள்ளது.
அதாவது அவர்களில் பெரும்பான்மையானவர்கள், தாம் மீண்டும் உயிர்பெறும் நிலை குறித்து கூறிய இறுதி கட்டங்கள் பெரும்பாலும் ஒத்து இருக்கின்றமையே அது.
அதாவது இறுதியான பொழுதில், மிகவும் இருளாக காணப்படுவதாகவும், ஒளியின் எந்த அடையாளத்திற்கோ, எந்த அசைவுக்கோ வசதிகள் அற்றநிலையில் திடீர் என்று தோன்றும் பெரு ஒளி ஒன்று தம்மை பரவசத்தில் ஆழ்த்துவதாகவும், அதை காணும் கணமே எப்போதும் அனுபவித்திராத ஆனந்த அனுபவமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து ஆச்சரியமானதாக இருந்தாலும்கூட, இதற்கும் விளக்கங்கள் உண்டு என்று ஆராட்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, விமானப்படையினர், மிகை வேகங்கொண்ட போர் விமானப்பயிற்சிகளை ஆரம்பத்தில் எடுக்கும்போது, நன்றாகப்பழக்கப்படுவதன்முன்னர், அந்த வேகம்கண்ட பிரமிப்பிலும், வேகமான சுழற்சிகளிலும், தம்நிலை இழந்து, அந்த வேகம், நினைவலைகளை தடைப்படுத்தும்நேரம், இதுபோன்ற இருட்டு, பின்னர் ஒளி போன்ற சம்பவங்களை நிறைய அனுபவித்துள்ளதாக ஆதாரங்களுடன் தெரிவிக்கின்றனர்.
அதேபோல வேறு சில சந்தர்ப்பங்களிலும், திடீர் என நினைவு நிலை இழக்கப்பட்டு, மீண்டும் அது சுயநிலையை அடையும் சந்தர்ப்பங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அவர்களுக்கும் நிகழ்ந்துள்ளதாக கூறவும்படுகின்றது.
இது தவிர “மறு ஜென்ம” அனுபவங்கள் கொண்ட சம்பவங்கள், நிறையவும் பதியப்பட்டு, எந்த தொடர்பும் இல்லாத இடமொன்றையும் நபர்களையும்கூறும் சிலர் பற்றியும், அவர்கள் கூறும் தகவல்கள் சரியாக இருப்பது பற்றியும் கண்டு மூளையை கசக்கிக்கொண்டுள்ளனர் ஆராய்வாளர்கள்.
மறு ஜென்ம சம்பவங்கள், பலவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கின்றது. இது குறித்த “டிஸ்கவரியின் டாக்குமென்றி” கூட இதை புரியாத கேள்வியுடனே முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மறு ஜென்மம் தொடர்பான சம்பவங்கள் உலகில் சிறி லங்காவிலேயே அதிகமாக உள்ளது.
ஆனால்… இவற்றுக்கான விடைகள், எமக்கு என்றோ ஒருநாள் கிடைத்துவிடுவது மட்டும் உறுதி. கண்டிப்பாக நாம் சாகும் அந்த நேரத்தில் இந்த மர்மங்கள் துலங்கிவிடும். அல்லது ஒன்றும் இல்லாமலே போயும்விடும்.
(மாண்டுமீண்டவர்களின் வாக்குமூலங்கள் சில யூடியூப்பில் உள்ளன. ஆர்வமாக இருந்தால் கொஞ்சம் தேடிப்பாருங்கள்.)
21 comments:
வடை..................
வாழைப்பழம்
பாயாசம்
.......................
நானும் பலரின் கதைகள் வாசித்திருக்கிறேன்...
அவர்கள் கூறுபவை மிரட்சியை தருவனவாயினும்
நம்பத்தகுந்தவையா என்பதில் எனக்கு சந்தேகம்..!
எல்லாவற்றிற்க்கும் இந்த மரண பயம் தான் காரணம் . சில நொடிகளில் உயிர் பொய் வந்தது போல உணர்ந்தவர்களின் வீடியோக்கள் அதிகம் இருக்கிறது :)
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
மரணம் பயம் தான். அதற்காக அது வராமல் இருக்க போவதில்லை. ஏற்று கொள்ள தானே வேண்டும்.
நல்ல பதிவு
உலகத்தில் எத்தனையோ ஆச்சரியங்கள் நன்று,ஜனா
நானும் சில கட்டுரைகளும் காணொளிகளையும் கண்டு இருக்கிறேன். புல்லரித்து போகும்.
.....nice post...
அருமையான பதிவு ..
நீங்கள் ஒரு ஆராய்ட்சி மன்னனப்பா! இவ்வளவு தகவல்களையும் எங்க இருந்து புடிக்கிறீங்க? அகால மரணத்தில் போது ஒருவருடைய நினைவலைகள் காற்றில் உலாவுவதை நான் நம்புகிறேன்! ஐயோ ரொம்ப பயமா இருக்கு!!
ஏன் அண்ணா பயப்பட வைக்கிறீர்கள்....
நல்ல பதிவு..மறு ஜென்மங்கள் இலங்கையில் அதிகம் காணப்பட யுத்தமும் காரணமாய் இருக்கலாம்..
இதற்கு விடையே கிடையாது
இது சரியோ பிழையோ என்று சொல்லவாவது நான் செத்திட்டு பதிவெழுத விரும்பிறன்!
எனக்கு உண்டான மரண அனுபவம்...
http://rkguru.blogspot.com/2011/02/blog-post_07.html
சகோதரம் ரொம்பவும் பயமுறுத்துறீங்க:)
மறு ஜென்மம் தொடர்பான சம்பவங்கள் உலகில் சிறி லங்காவிலேயே அதிகமாக உள்ளது.//
இற்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்னர் ஹொரவப்பொத்தானையில் பிரேமதாசா மறுபிறவி எடுத்த கதை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஒரு சகோதர மொழிச் சிறுவன் நாணயம் அடிக்கப்பட்ட வரலாறு முதல், யுத்தங்கள், தனது மறு பிறவி, முன்னைய பிறப்பில் ஆட்சியில் இருந்த போது தான் செய்த செயல்கள் பற்றியும் கூறினான். இப்போது எங்கே அந்த பிரேமதாசா என்று அறிய ஆவல்.
அடுத்த விடயம், இராணுவ வீரன் ஒருவனின் மறு பிறவி.
இதை விட உலகில் இடம் பெறும் கடவுளர்களின் காமெடி மறு பிறவி வரிசையில்,அவதாரங்கள் வரிசையில் கல்கி பகவான், சாயிபாபா இன்னும் பல மறு பிறவி மனிதர்களையும் குறிப்பிடலாம். இது ஒரு புரியாத புதிர்.
அண்ணா ஒரு சில மனிதரால் மட்டும் விரும்பி ஏற்கக் கூடிய ஒன்று தான் மரணம் எல்லோரும் வாருங்கள் ஒரு முறை போய் விட்டு வருவோம்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன
நானும் இவ்வாறான சிலரின் அனுபவங்களை வாசித்திருகிறேன்!
//மறு ஜென்மம் தொடர்பான சம்பவங்கள் உலகில் சிறி லங்காவிலேயே அதிகமாக உள்ளது. //
அப்படியா? இங்குதான் அகால,அவலமான மரணங்கள் அதிகமாச்சே!
நல்ல பதிவு அண்ணா.. மரணம் மரண பயம் பற்றி..
நல்ல பதிவு.
இவை பற்றிப் படித்திருக்கிறேன்.
மறுஜென்ம தகவல் சிறி லங்காவில் அதிகம் என்பது இப்போதுதான் அறிகிறேன்.
புதிய வகையிலான பதிவு. உங்கள் வித்தியாசமான சிந்தனைக்கு சல்யூட்.
மரணத்திற்கு பின்பு என்ன என்பது அதிகம் சர்ச்சைக்குட்பட்ட விஷயம் தான்..
Post a Comment