பாக்கு நீரிணையில் பலிபீடம்.
இப்போது பதிவுலகத்தில் ரொப் ரொப்பிக்காக பல பதிவர்களும் இது குறித்து ஆக்கபூர்வமான ஆதங்கங்களை, தேவையான பதிவுகளாக இட்டுவருகின்றனர்.
பதிவுலக எழுத்தாளர்கள் என்ற விடயப்பரப்பில் இந்த சமூக அக்கறைக்கும், கண்முன்னே நடக்கும் சகோதரர்களின் இழப்புக்களுக்கெதிரான குரலும் மிக மிக வரவேற்கப்பட்டவேண்டிய ஒரு விடயம்.
உணர்வுகள் சம்பந்தப்பட்ட விடயத்தை மிக நிதானமாக கையாளவேண்டும் என்பது இன்று பதிவுலக எழுத்தாளர்கள் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு பெரிய விடயமாக உள்ளது.
எமது சகோதரர்கள் பாக்கு நீரிணையில் பலியெடுக்கப்பட்டுவரும் நிலையில் எம் துடிப்புக்கள், ரௌத்திரங்கள் வரவேண்டியது நியாயமானதே. தேவைப்படும்போது ரௌத்திரம் கொள்வதில் தப்பு இல்லவே இல்லை.
ஆனால் சிறு பார்வையுடன் நாம் இதனை பார்ப்பது தவிர்க்கப்படவேண்டும். இப்போது அனைவரினதும் எதிர்பார்ப்புக்கள் எம் சகோதரர்களின் உயிர்ப்பலி நிறுத்தப்படவேண்டும் என்பதுதான்.
மறுகோணத்தில் “ஒப்பரேஸன் முத்துமாலை”, இந்துசமுத்திர வல்லாதிக்க திணிப்புகள், அகலக்காலூன்ற மறைமுகமாக ஒரு சக்தி முனைப்பாக இருப்பவை என்பவை பின்புலமாக இருக்கின்றன. (எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதமுடியாது, உலக அரசியல் நகாவுகளை உற்றுநோக்குபவர்களுக்கு புரியும்)
அவற்றின் சில வெளிப்பாடுகளில் இவையும் அடக்கம் பெறுகின்றன. நீண்டகாலப்பார்வையில் இது இந்தப்பிராந்தியத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும், “இன்று கடலில் நாளை தரையில்” என்ற வகையிலும் வியாபிக்க இடங்கள் உண்டு. எனவே இந்த நிலையில் இப்போதாவது குறிப்பாக இந்தியா கொஞ்சம் தெளிவாகவும் தூரநோக்கத்தோடும் சிந்திக்கவேண்டிய கடப்பாடு ஏற்பட்டுள்ளது மிக ஆழமான உண்மை.
இது சாதாரணமான விடையம் அல்ல.. உணர்வுகள், எமது இன்றைய நாளைய இழப்புக்கள் சம்பந்தப்பட்ட விடையம்.
அடுத்து ஈழத்தமிழர்களை பொறுத்தவரையில் தமிழக மீனவர்கள் பல வழிகளிலும் உயிர்காத்தவர்கள் என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் கையில் சுமந்து நடுக்கடல் மணல்திட்டிகளில் இலங்கை படகோட்டிகளால் கைவிடப்பட்டு உயிருக்கு அந்தரித்தநிலையில் ஆயிரக்கணக்கான இந்த மக்களை உயிர்காப்பாற்றியவர்கள் தமிழக மீனவர்களே. எமக்குமத்தேவை நம் சகோதரர்களின் உயிர் பாதுகாப்பே.
ஒரே வார்த்தையில் சொல்வதானால்…
“நாம் சாகலாம்…நாங்கள் சாகக்கூடாது”
நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை கவலை!
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், உலகம் மதிக்கும் ஒரு நபராகவும் உள்ள நெல்சன் மண்டேரலா அவர்கள் இப்போது தனது 92 ஆவது வயதில், அமைதியான வாழ்க்கையினை வாழ்ந்துவருகின்றார்.
ஆபிரிக்காவின் கறுப்பு சிங்கம் என்ற அடைமொழியுடன் இனவெறிக்கெதிராக போராடி பல ஆண்டுகள் சிறைவாசம் இருந்தவர் அவர் என்பது யாவரும் அறிந்த விடயமே.
இந்த நிலையிலேயே கடந்த வருடம் ஆபிரிக்காவில் இடம்பெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் மக்கள் மத்தியில் அவர் தோன்றியிருந்தார். அதன்பிறகு அவர் தனது கேப்டவுணியில் உள்ள வீட்டில் அமைதியாக வாழ்ந்துவந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
வயதோதிபம் அவரை வாட்டிநின்றாலும், அவரை இழப்பதில் உள்ள பயம் பல நெஞ்சங்களில் தோன்றியுள்ளன. இருந்தபோதிலும் இன்னும் சில ஆண்டுகள் அந்த ஆபிரிக்காவின் கறுப்பு சிங்கம் நலமாகவாழவேண்டும் என்று பிராhத்திப்போமாக.
இந்தவாரக்குறும்படம்
இந்தவார வாசிப்பு
சர்ச்சைகளில் சுஜாதாவும் விதிவிலக்கல்ல என்பது “மாயா” வில் தெரிந்தது.
அதாவது மாயா கதை குறிப்பிட்ட நபர் ஒருவர் சிறுகதை ஒன்றுக்கு எழுதியதாகவும் அந்த சிறுகதை போட்டிகளில் நடுவராக இருந்த சுஜாதா தன்கதையினை சுட்டுவிட்டார் என மேற்படி நபர் தொல்லை கொடுத்திருக்கின்றார்.
ஆனால் மறுபக்கம் அவர் எழுதிய கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், தெரிவு செய்யப்பட்ட பத்து சிறுகதைகள் மட்டுமே சுஜாதாவிடம் கொடுக்கப்பட்டதாகவும் இதில் அவரது கதை தெரிவு செய்திருக்கப்படவில்லை என்றும் சாவி ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக சரிப்பா..வேண்டுமென்றால் கேஸ் போட்டுக்கோ என்று அவர் சொன்னவுடன், அந்த நபர் அடங்கியதாக அறியமுடிகின்றது.
ஆனால் இந்தக்கதை வேறு ஒருவரின் கதையாக இருக்கமுடியாது என்பதற்கு படிக்கும்போது முழு ஆதராமும் வாசகர்களுக்கு கிடைத்துவிடும்.
கதையின் ஆரம்பத்திலேயே கணேஸ் வந்துவிடுவது மற்றுமொரு சிறப்பு, ஒரு கட்டத்தில் கணேஸே சாமியாரை முற்றுமுழுதாக நம்பும் நிலைக்கு வந்ததும், இறுதியில் தற்செயலாகத்தான் சாமியாரின் லீலைகளை காணுவதும் யதார்த்தம்.
தற்கால சாமியார்களுடன் எம்புட்டு பொருந்துகின்றது இந்த கதை.
யாழ்ப்பாண கல்லூரிகளுக்கிடையான கிரிக்கட் அசத்திய எடின்.
யாழ்ப்பாணத்தில் கல்லூரிகளுக்கிடையான 19 வயதுப்பரிவு பருவகால கிரிக்கட்போட்டிகள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டள்ள நிலையில் கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் துடப்பாட்ட வீரர் எடின் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கும் இடையிலான போட்டியிலேயே இந்த சாதனை புரியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி இடம்பெற்ற இந்தப்போட்டிகளில் மத்திய கல்லூரி துடுப்பாட்ட வீரர் எடின் 31 பவண்டரிகள், 7 ஸிக்ஸர்கள் அடங்கலாக 247 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதுவே தற்போது யாழ்ப்பாணத்தில் தனி நபர் ஒருவர் பெற்ற ஓட்டங்களில் உயர்வான ஓட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்போட்டியில் ரொஸ்ட்டில் வென்ற மானிப்பாய் இந்துக்கல்லூரி அணி, முதலில் மத்திய கல்லூரியை துடுப்பெடுத்தாட பணித்தது, இதன்படி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 85 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 418 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அதனைத்தொடர்ந்து மானிப்பாய் இந்துக்கல்லூரி முதல் இனிங்ஸில் சகல விக்கட்களையும் இழந்து 32 ஓட்டங்களையும், பலோஒன் கொடுக்கப்பட்டு இரண்டாவது இனிங்ஸில் சகல விக்கட்களையும் இழந்து 31 ஓட்டங்களையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக “பட்டில் ஒவ் நோர்த்” என்று புகழப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – பரி.ஜோவான் கல்லூரி அணிகளுக்கிடையிலான பெரும் துடுப்பாட்டப்போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மியூசிக் கபே
ஜோக் பொக்ஸ்
வெளிநாடு ஒன்றில் பல இந்திய பாகிஸ்தானிய தொழிலாளிகள் வேலை புரிந்துவந்தார்கள். குறிப்பாக வாரஇறுதி நாட்களில் அவர்களின் தொழிற்சாலையில் இருந்து ரெயிலைப்பிடித்து வெளியிடங்களுக்கு; செல்வது வழக்கம்.
இப்படி இருக்கும் நிலையில் ஒருமுறை இந்தியர் ஒருவர் ஏறியவுடன் ஏன்டா ஏறினேன் என்ற நிலை அவருக்கு காரணம் அவரது கம்பாவுண்டில் இருந்த பலர் பாகிஸ்தானியர்கள். அவர்கள் இவரை சீண்டும் நடவடிக்கைகளை தொடங்கினர்.
இவருக்கு சீட் வேறு கிடைக்கவில்லை. கொஞ்சம் ரிலாக்ஸாக பீல் பண்ண தனது சப்பாத்தை கழற்றிவைத்துவிட்டு, இயற்கையை பார்த்தவாறு இந்தியர் இருந்தார்.
முன்னால் இருந்த இரண்டு பாகிஸ்தானியர்கள், டேய்..மதர் இந்தியா…போய் ஒரு கோக் வாங்கிவா என்றார்கள். இவரும் ரயிலில் உள்ள விற்பனை தொகுதிக்கு சென்று கோக்வாங்கிவந்தார், அதற்குள் பாகிஸ்தானியர்கள் அவரின் சப்பாத்தினுள் காறித்துப்பிவிட்டு, எதுவுமே தெரியாததுபோல இருந்துவிட்டார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் கோக் வாங்கிவர இந்தியரை அனுப்பிவிட்டு, அதையே திரும்பவும் செய்தார்கள்.
கோக்கை கொடுத்துவிட்டு சப்பாத்தை போடும்போது அவர்கள் செய்ததை உணர்ந்த இந்தியர், அவர்களை நேரடியாகவே பார்த்து கேட்டார்.
எத்தனை நாளுக்குத்தாண்டா இந்த மோதல்கள். சப்பாத்திற்குள் எச்சில் துப்பி வைப்பதும், கோக்கிற்குள் ஒன்றுக்கு இருந்துவிட்டு வந்து குடிக்கத்தருவதும்!! என்று ஆத்திரத்துடன் கத்தினார்.
12 comments:
//ஹொக்ரெயில் //
சரக்கில் கிக்கு எப்பவும் குறையாது போல!!!!
தமிழக மீனவர்கள - உயிகள் காக்கப்படவேண்டும்!
நெல்சன் மண்டேலா - அவருக்காக பிரார்த்திப்போம்!!
குறும்படம் - பார்த்துவிட்டு சொல்கிறேன்!!
சுஜாதா - சொல்லவா வேணும் ?
எடின் - வாழ்த்துக்கள்!!
மியூசிக் கபே - வேலை செய்யவில்லை!
ஜோக் - செமை!
மொத்தத்தில் காக்டெயில் - கிக்கோ கிக்கு!
வழக்கத்தை விட சுவையும் அதிகம்,, சூடும் அதிகம்
7இன்1 பதிவு நன்றாக இருந்தது.
ஹொக்ரெயில் நவரசமும் கலந்து நச்சென்று இருக்கிறது.
வழமைப் போலவே சூப்பர் அண்ணா,
தமிழக மீனவர் பிரச்சினை கண்டிப்பாய் கண்டிக்க வேண்டியதே, நெல்சன் மண்டேலா சிறந்த தலைமைத்துவத்திற்கான உதாரணபுருஷர்.
நிறைய விஷயங்களை நன்றாக தொகுத்து தந்து இருக்கீங்க.... பாராட்டுக்கள்!
மண்டேலாவின் காலத்தில் நாமும் வாழ்வதே பெருமை தான்.
எடின் போன்ற எத்தனையோ வாடா கிழக்கு வீரர்கள் திறமை இருந்தும் இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்படாது இருந்தார்கள், இருக்கிறார்கள்.இனியாவது நிலைமை மாற வேண்டும்.
வழக்கம் போலவே கலக்கல்ஸ்! ஜோக் செமை! :-)
வழமைபோலவே அருமை
நெல்சன் மண்டேலா வாழும் உதாரணம். தொடர்ந்து வாழவேண்டும்
பிரயோசனமான தொகுப்பு!!
உங்களுக்கு கிரைன் அதிகம்..சாரி பிரைன் அதிகம் பாஸ்!!
பதிவை வாசித்தால் ஒரு திருப்தி...
அதே திருப்தியை தொடர்ந்து தாருங்கள்
Post a Comment