Friday, February 11, 2011

இரும்புச்சீமாட்டியின் இறுக்கமானபிடியும் போக்லண்ட் யுத்தமும்.


பூமிப்பந்தின் தென் பகுதியின் தென் அட்லாண்டிக் ஆழியில் மிதக்கும் முத்துக்கள்போல ஆர்ஜென்ரீனாவுக்கு கிழக்காக உள்ள, இரு பெரியதீவுகளையும், பல சிறு தீவுக்கூட்டங்களையும் கொண்ட தீவுகளே போக்லண்ட் தீவுக்கூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
சொரசொரப்பான மெதுமையான மண்ணியல் தன்மைகளையும், பெரிய இலைகளைக்கொண்ட, இளம்பச்சை தாவரங்களையும், வர்ரஜ் என்ற நரியினம், ஸ்ராரா, ரிட்டரா போன்ற பறவை இனங்களை தன்னகத்தே தனித்துவமாக கொண்டுள்ள தீவுக்கூட்டங்கள் இவை. வெதுவெதுப்பான காலநிலை, குளிர்க்காலநிலை என இரு பெரும் காலநிலைகளின் தாக்கங்கள் இந்த தீவுக்கூட்டங்களில் உண்டு.

1880களில் இந்த தீவுக்கூட்டங்கள் பிரித்தானிய ஆளுகைக்குள் முழுமையாக உள்வாங்கப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து தென் பிராந்திய யுத்தங்களின்போது பிரித்தானிய “ரோயல்” கடற்படையினரின் முக்கிமான ஒரு வலையத்தளமாக இந்த போக்லண்ட் தீவுகள் பயன்படுத்தப்பட தொடங்கின.
குறிப்பாக ஸ்கொடிஸ் இன மக்கள் இந்த தீவுகளில் குடியேறி பிரித்தானிய முடியாட்சியின்கீழ் வாழ்ந்துவரத்தொடங்கினார்கள்.
ஆனால் ஆர்ஜென்ரீனாவின் எண்ணங்கள், தமது சுதேச நில ஆளுகைகளை எண்ணி விம்மலுடனேயே இருந்து வந்தன. பல சந்தர்ப்பங்களில் இந்த நிலத்திற்கு உரிமை கோரும் வெளிப்பாடுகளை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிகளிலேயே ஆர்ஜென்ரீனா வெளிப்படுத்த தொடங்கிவிட்டது.

இரண்டு உலக யுத்தங்களும் முடிவடைந்து, பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட நாடுகள் சுதேசிகளிடமே கையளிக்கப்பட்டு, உலகம் தொழிநுட்பம், விஞ்ஞானம் என்பவற்றில் அதிஉச்சமாக பயணித்துக்கொண்டிருந்த 1980களின் ஆரம்பங்கள்.
உலகம் முழுவதுமே, அதிநுட்ப இலத்திரனியலில் இலகித்துக்கொண்டிருந்த காலங்கள். நாடுகாண் பயணங்களை முடித்துக்கொண்ட மனிதஇனம், கிரகம்காண் பயணங்களை ஆர்வத்துடன் எதிர்பார்த்துகொண்டிருந்த காலங்கள்.
1982 மார்ச் மாதம் 19ஆம் திகதியில் இருந்து ஆர்ஜென்ரீன கடற்படையினரின் கடல்ரோந்துகள், இந்த தீவு பகுதிகளில் அதிகரிக்கத்தொடங்கின. அந்த ரோந்துகள் மெல்மெல்ல சவுத் ஜோர்ஜியா தீவுகளை தரைதட்டி கப்பல்களை நிறுத்தும் அளவுக்கு சென்றன.

எப்போதுமே நிதானமாக அமைதியாக இருப்பதாக காட்டிக்கொண்டு கண்ணுக்குள் எண்ணை விட்டு கவனித்துகொண்டிருக்கும் வெள்ளைக்காரப்புத்தி இதை கவனிக்காமல் இருக்கவில்லை. மிக நிதானமாக கவனித்துகொண்டுதான் இருந்தது.
மறுபக்கம் 1982ஆம் ஆண்டு, ஏப்ரல் 02ஆம் நாள் ஆர்ஜென்ரீனா மேற்படி போக்லண்ட் தீவுகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை முழுமையாக அரங்கேற்றியது.
தீவுகள் தொடர்பான அதிகார உரிமம் தொடர்பான நூற்றாண்டு சர்ச்சைகளின் உச்சமாக இந்த நடவடிக்கைகள் அமைந்தன. ஆர்ஜென்ரீனா திடீர் என எடுத்த இந்த கைப்பெற்றல் நடவடிக்கையினால் போக்லண்ட், சவுத் ஜோர்ஜியா ஆகிய தீவுகள் ஆர்ஜென்ரீனாவின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டன.
இதை தொடர்ந்து ஆர்ஜென்ரீன வான்படை, மற்றும் கப்பல் படைகளை மேற்படி பிரதேசங்களில் எதிர்த்து முதல் நடவடிக்கையாக பிரிட்டன் பெரும் வான்தாக்குதலை தொடங்கியது.

அப்போது உலகம் இரண்டு வல்லரசுகளின் கைகளில் இருந்தது என்பது அறிந்ததே. இந்த விதத்தில் இந்த நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஆர்ஜென்ரீனா இதை இராஜதந்திர ரீதியில் அணுகமுன்வரவேண்டும் என்றும், யுத்தம் சரியான முடிவாக இருக்கமுடியாது. இதில் பாதிக்கப்படபோவது ஆர்ஜென்ரீனாவே எனவும், அமெரிக்கா அழுத்தமாக கூறி, ஆர்ஜென்ரீனாவை சமரை நிறுத்திவிட்டு பேச்சுக்களுக்கு வரவேண்டும் என அமெரிக்கா வலியுறத்தியது. ஆனால் ஆர்ஜென்ரீனா அதை மறுத்துவிட்டது.
தமக்கே உரிமையான தமது நிலத்தின்மேல் உள்ள பிரித்தானிய ஆளுகைக்கு எதிரான போர் இது என உலகத்திற்கு ஆர்ஜென்ரீனா அவசரமாக வியாக்கியானம் செய்தது.
மறு கரையில் சோவியத் யூனியன் ஆர்ஜென்ரீனாவின் இந்த நடவடிக்கைகளை மறுத்துவிட்டது. இராஜதந்திர ரீதியிலேயே இதை அணுகப்படவேண்டும் என சோவியத் யூனியனும் உறுதியாகச் சொல்லிவிட்டது.

ஏப்ரல் 05ஆம் நாள் “ரோயல்” கப்பற்படை என்பது எத்தனை எல்லமையானது என்பதை கண்டு ஆர்ஜென்ரீனா மட்டும் அல்ல முழு உலகமும் திடுக்கிட்டது. அட்லாலாண்டிக் சமுத்திரத்தை கிழித்துகொண்டு, பிரிட்டன் ரோயல் கடற்படையினரின் கப்பல்கள், விமானம்தாங்கி கப்பல்கள், ஏவுகணை, நாகசாகி கப்பல்கள் என வந்த கடற்படைகள், தென் சமுத்திரம் தொடங்கும் இடத்தில் இரு பிரிவாக பிரிந்து போக்லண்ட் தீவுகளையும், சவுத்ஜோர்ஜியாத் தீவுகளையும், ஆளுகைக்குட்படுத்திய ஆர்ஜென்ரீன படைகள் மீது தாக்குதல்களை நடத்தியவாறே துரப்புக்களை மள மளவென தரையிறக்கம் செய்தன. அதேவேளை பி.எம்கே, மிராஜ் 3, சொனிக், போன்ற அதிநவீன ரோயல் யுத்த விமானங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியை கொடுத்துகொண்டிருந்தன.

1880களின் பின்னர் பிரிட்டன் ஒரு நாட்டின்மீது தனித்து நின்று யுத்தம் செய்த ஒரு வரலாறாக இது பொறிக்கப்பட்டது. அடிக்கு உடனடியாக பெரும் பதிலடி கொடுத்து தான் இரும்புச்சீமாட்டிதான் என்பதை நிரூபித்துக்காட்டினார் அப்போதைய பிரிட்டன் பிரதமர் மார்க்கிரேட் தட்ஷர்.
இந்த யுத்தம் பற்றி இரு நாடகளுமே எந்தவிதமான முன்னறிவிப்பையும் விடவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது. அடுத்ததாக முக்கிமான விடயம் இது எந்த நிலத்திற்காக யுத்தமோ அந்த நிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. அதை தவிர நாடுகளின் குரோதங்களை இரு நாடுகளுமே இரு நாடுகளின் வேறு பகுதிகளை தாக்கி காட்டவில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டியதே.

ஒரு கட்டம் வரை எதிர்த்த ஆர்ஜென்ரீனாவால் பிரிட்டனின் தொடர்ந்த ஓயாத அதிரடி நடவடிக்கைகளை தாங்கமுடியவில்லை. அத்தோடு பெருமளவிலான ஆர்ஜென்ரீன படையினர் பிரிட்டனின் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டனர்.
ஆர்ஜென்ரீன படைகள் சரணடைவதாக அறிவித்த உடன் யுத்தம் முடிவுக்கு வந்தது. பெருமளவிலான ஆர்ஜென்ரீன முப்படையினரும் பிரிட்டன் படைகளிடம் சரண்புகுந்தன.
1982 ஜூன் மாதம் 17ஆம் நாள் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
74 நாள் யுத்தம் என வர்ணிக்கப்படும் இந்த யுதத்தத்தில் 257 பிரித்தானிய முப்படையினரும், 647 ஆர்ஜென்ரீன முப்படையினரும், மூன்று சிவிலியன்களும் இறந்தனர். ஆனால் இங்கு இடம்பெற்ற யுத்தத்தின் தன்மைகள், யுத்தத்தின் மூர்க்கம் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் இறந்தவர்கள்தொகை குறைவானதே.

மீண்டும் போக்லண்ட் தீவுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பிரிட்டன் இப்போ நீங்கள் இதை படிக்கும்வரை அதை தனது நிர்வாகத்தின்கீழேயே வைத்திருக்கின்றது. போக்லண்ட் தீவுகளில் வசிப்பவர்கள், பிரிட்டன் பிரஜைகளாகவே கருதுப்பட்டுவருகின்றார்கள். அதேவேளை அவர்கள் ஆர்ஜென்ரீன குடியுரிமைக்கும் விண்ணப்பிக்கும் தகுதியும் உள்ளவர்கள்.
போக்லண்ட் யுத்தத்தின் பின்னர் இரு நாட்டு கலாச்சாரத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. முக்கியமாக ஆர்ஜென்ரீன நாட்டு மக்களின் கலாச்சாரம் பெரும் மாற்றத்தை அடைந்தது. அந்த யுத்தத்தின் தாக்கம் பெரிதும் மக்களால் உணரப்பட்டது. இந்த யுத்தம் தொடர்பான திரைப்படங்கள், பாடல்கள், விபரணங்கள் என்பன பெரிதும் வெளிவரத்தொடங்கின.
இன்றும் போக்லண்ட் தீவுகளில் வாழும் மக்களிடையே இந்த யுத்தம் பற்றிய பேச்சு உண்டு.

இந்த யுத்தின் பின்னர் இதுவரை ஆர்ஜென்ரீன இந்த நிலத்தின் உரிமம் தொடர்பான அறிவுப்புக்களை கொண்டுவரவில்லை. ஆனால் இந்த யுத்த வெற்றிமூலம் அதிக அரசியல் லாபம் மட்டும் அடைந்தவராக அன்றி, பிரித்தானிய மக்களால் போற்றப்பட்டார் பிரதமர் மார்க்கிரேட் தட்ஷர். 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் வெற்றிக்கு அவருக்கு இந்த போக்லண்ட் யுத்தம் பெருமளவில் கைகொடுத்தது.
ஆனால் மறுகரையில் பிரித்தானிய – ஆர்ஜென்ரீன நாடுகளின் இராஜதந்திர உறவில் கரும்புள்ளி விழுந்தது. இருந்தாலும் 1989ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீண்டும் சீர்அமைக்கப்பட்டன.
ஒரு குடையின் கீழான மாநாடு என்ற தொணியில் முக்கியமான மாநாடு ஒன்றும் இடம்பெற்றது.

இன்று போக்லண்ட் தீவுகள், பெருமளவில் அபிவிருத்தி கண்டு, பிரபலமான உல்லாசவிடுதிகள், உல்லாச மையங்களை கொண்டுள்ளன. உல்லாசப்பிரயாணம், மற்றும் நவீன மீன்பிடி என்பன இந்தப்பிரதேசத்தில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. இன்று இந்த பிரதேசத்துடன் ஆர்ஜென்ரீனா மிகவும் சினேகிதமாகவே உள்ளது என்பதும் இந்த கட்டுரையை முடிக்க ஒரு சுபமாக உள்ளது.

இலங்கையைச்சேர்ந்த வாசகர்களுக்கு – “புக்கரா” இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டதுபோல தோன்றுகின்றது அல்லவா? நினைவுக்கு வரவில்லை என்றால், முன்னேறிப்பாய்தல், நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் என்ற சொற்களை போட்டு தேடிப்பாருங்கள். அந்த புக்காரா ரக விமானங்களை முதலன்முதல் ஆர்ஜென்ரீனா அந்த போக்லண்ட் யுத்தங்களுக்கு பயன்படுத்தியிருந்தது.

13 comments:

sakthistudycentre-கருன் said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

மைந்தன் சிவா said...

நிறைந்த தெரியாத தகவல்கள்..
இறுதியில் மறக்க முடியாத வடுக்களின் ஞாபகம்...ம்ம்

ம.தி.சுதா said...

மிகவும் கவர்ச்சியான மொழியில் பகிர்ந்துள்ளிர்கள் அண்ணா நன்றி...

“புக்கரா”...

மறக்க முடியுமா அந்த காலப்பகுதியில் ரொக்கட்டை வீசுவதற்கு இருந்த ஒரே வான்கலம் இது தான்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

Chitra said...

நிறைய தகவல்களுடன், பதிவு அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்!

தமிழ் உதயம் said...

இந்த யுத்தம் குறித்து முன்பே ஒரளவு படித்திருத்தாலும், முழுமையான வரலாற்றை இப்பதிவின் மூலம் அறிய முடிந்தது.

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

akulan said...

தகவலுக்கு நன்றி...

FOOD said...

தகவல் தந்த விதம் அருமை. நன்றி நண்பரே.

நிரூபன் said...

ஏப்ரல் 05ஆம் நாள் “ரோயல்” கப்பற்படை என்பது எத்தனை எல்லமையானது//


சகோதரம்.. இதில் ஒரு எழுத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். வல்லமையானது என வர வேண்டும்.

நிரூபன் said...

வரலாற்று ஆய்வுக் கட்டுரை.. எங்கள் உள்ளங்களுக்கு ஒரு நினைவு மீட்டலாய் அமைந்தது. றம் உருட்டி அல்லது சகடை அல்லது பீப்பா என அழைக்கப்படும் முதலாவது இலங்கையின் யுத்த விமானத்திற்குப் பின்னர் இப் புக்காரா வகை விமானங்களே இலங்கைப் போரியல் வரலாற்றில் செல்வாக்குச் செலுத்தின. அதிலும் இப் புக்காராக்கள் இரண்டு அடுத்தடுத்து நிலாவரை, மற்றும் ஊரெழு பகுதிகளில் சரிக்கப்பட்ட பின்னர் அன்ரனோவ், மிக், சுப்பர் சொனிக், கிபிர் முதலிய விமானங்கள் தமது செல்வாக்கைச் செலுத்தத் தொடங்கின.

’புக்காரா எடித்தாரா போயாச்சே எடிப்பாரா என்று ஒரு குத்துப் பாட்டின் இடை நடுவில் ஒரு வரி வரும்.

மாத்தி யோசி said...

ஜனா உங்க பதிவ படிக்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும்! அந்தப் புக்காரா மேட்டர்!" முன்னேறிப் பாய்வதென்ன அம்மா - நீ

பின்னாலே ஓடுவதேன் சும்மா!

புக்காரா எடித்தாரா போயாச்சே எடுப்பாரா? "ஆஹா இந்தப் பாடல்களை மறக்க முடியுமா?இவ்வளவு தகவல்களையும் எங்கிருந்து பாஸ் புடிச்சீங்க?

ஜீ... said...

//புக்காரா//
மறக்க முடியுமா?
அருமையான பதிவு!

கார்த்தி said...

நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம் சார்!

LinkWithin

Related Posts with Thumbnails