Sunday, February 6, 2011

இந்தவாரப் பதிவர் - திரு. கூல்போய்

இலங்கையில் உள்ள பதிவர்களில் மிக இளையவர்களில் ஒருவராகவும், அனைத்து பதிவர்களினதும் செல்லப்பிள்ளையாகவும் இருப்பதுடன், குறும்புகளுக்கும் சொந்தக்காரன் கூல்போய்.
தன் எழுத்துக்களில் மட்டும் அன்றி தனது சுயமான செயற்பாடுகளாலும் அனைத்து தரப்பினரையும் வயிறு வலிக்கும்வரை சிரிக்கவைத்து, கவலைகளை மறக்கவைக்கும் பதிவர் என்றும் கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.

குகேந்திரன் கிருத்திகன் என்ற இயற்பெயரை உடைய பதிவர் கூல்போய், பதிவர், ஓடியோ டீஜே, வீடியோ எடிட்டர், தகவல் சேகரிப்பாளர், இணையத்தொகுப்பாளர், கமராமான், குறும்பட தயாரிப்பு என ஒரே நேரத்தில் பல நிபுணத்துவங்களை பேணிவருபவர்.
முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் “எந்திரன்” திரைப்பட விமர்சனத்தை வலைப்பதிவு வரலாற்றிலேயே முதன்முதலாக பதிவேற்றியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
வலைப்பதிவுகளில் நகைச்சுவைகளை இலகுவாக, யாரும் நோகாதவிதத்தில் கையாண்டு, அனைவரையும், வயிறு வலிக்கும்வரை சிரிக்கவைக்கும் மந்திரம் கூல்போயிடமும், டிலானிடமும் மட்டுமே உண்டு.

தொழிநுட்பம், நகைச்சுவை, சினிமா, அனுபவங்கள், கலாச்சாரம், காதல், நிகழ்ச்சிகள், சமுகம், பதிவர்கள் என்ற மட்டத்தில் கூல்போய் பல பதிவுகளை இட்டுள்ளார். எப்போதும் படு பிஸியாக இருக்கும் கூல்போய் பதிவுலகத்தில் அப்பப்பபோ திடீர் என்று சிறு சிறு ஓய்வுகளை கேட்காமலே எடுத்துக்கொள்வதும் உண்டு. ஆனால் மீண்டும் வந்துவிட்டால், வாசிப்பவர்கள் அனைவருக்கும் வயிறுகள் கொழுவிக்கொள்ளும் விதம் தன் எழுத்துக்களால் கவனித்துக்கொள்வது கூல்போய் உடைய கெட்டித்தனம்.

பதிவுலகத்தில் படு சீரியஸான விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது கூட, அதைக்கூட நகைச்சுவையாக்கிவிட்டு, மற்றவர்களின் கோபதாபங்களை மறக்க வைத்துவிடும் கூல்போயின் எழுத்துக்கள். ஒவ்வொரு சொல்லில் அல்ல ஒவ்வொரு எழுத்திலும் சிரிக்கவைக்கும் தன்மை இவரது எழுத்துக்களின் நாதம்.

மறுபக்கத்தில் ஆங்கில திரைப்படங்கள், குறிப்பாக அனிமேஸன் திரைப்படங்களில் அதீத காதல் கொண்டவர் கூல்போய். ஒவ்வொரு கட்டங்களையும் நுணுக்கமாக மனதில் வைத்திருந்து எழுதவும், பேசவும் முடியுமானவராக இவர் இருகிக்கின்றமை பெரும் ஆச்சரியம்தான்.
நகைச்சுவையாக எழுதினாலும் அப்பப்போ தன் நியப்புலமைகளையும், தேடல் ஆறிவுகளையும் கூல்போயுடைய எழுத்துக்கள் காட்டிநிற்பதும் உண்டு.
முக்கியமாக சுஜாதா மற்றும் சாருவின் எழுத்துக்களின் ரசிகனாக இருக்கும் கூல்போய், அவற்றிலும் இருக்கும் கவனிக்கமுடியாத தவறுகளைக்கூட சில உரையாடல்களில் சுட்டிக்காட்விடுவது அவரின் மேலோட்டமான வாசிப்பாக இன்றி ஆழமான வாசிப்பாளராக அவர் இருக்கின்றார் என்பதை புரியவைக்கின்றது.

பலரும் பலமுறை சொல்லிக்கொள்வதுபோல எழுத்துக்களால் சிரிக்கவைப்பது என்பது மிகப்பெரிய காரியம், அது எல்லோருக்கும் கைவரப்பெற்றது அல்ல. ஆனால் அந்த நகைச்சுவை எழுத்துக்களைக்கூட மேம்பட்டதாக எழுதும் தன்மைகள் பாராட்டப்படவேண்டியவை என்ற கோணத்தில் முழுப்பாராட்டிற்கும் தகுதியானவராக கூல்போய் உள்ளார்.

சரி..இந்த வாரப்பதிவரான கூல்போயிடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளையும், அதற்கான அவரது பதில்களையும் பார்ப்போம்.

கேள்வி : பதிவுலகில் உங்கள் பிரவேசம் எப்படி? ஆரோக்கியமானதாக செல்கின்றதா?

கூல்போய் : பதிவுலகில் எனது பிரவேசம், எதேட்சையானதுதான். முக்கியமாக செய்திகள், பிற தேடல்களை தேடல் திரட்டிகளில் தேடும்போது எனக்கு கிடைத்த விடைகள் பல வலைப்பதிவுகளில் இருந்தே கிடைத்தன. அவற்றை அடிக்கடி பார்த்துவந்த நிலையில் நாமும் ஒரு தளத்தை தொடங்கலாமே என்ற எண்ணத்தில் உதித்ததே எனது தளம்.
எனது தளம் என்று சொல்வதுகூட தவறு ஏனென்றால் ஆரம்பத்தில் நாங்கள் நால்வர் சேர்ந்தே இந்த ஒரு வலைப்பதிவை உருவாக்கி எழுதிவந்தோம். காலப்போக்கில் மற்றவர்கள் வேலைப்பழுக்களால் எழுத முடியாற்போனவுடன், முழுவதும் என் தலையில் விழுந்தது.
வலைப்பதிவுகள் ஆரோக்கியமானவை என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் பல தேடல்களில் எனக்கு கிடைத்த தகவல்கள் ஆரம்பத்திலேயே கூறியதுபோல வலைப்பதிவுகளில் இருந்தே கிடைத்தன. இதுபோல பல தகவல்கள் தொடராக வந்துகொண்டிருக்கின்றன. தமிழில் ஒரு சொல்லை வைத்துக்கொண்டு பல செய்திகளை தேடிக்கொள்ளமுடியுமானதாக வலைப்பதிவகள் உள்ளன என்பதே ஆரோக்கியமானதுதானே!

கேள்வி : பதிவுலகம், பதிவர்கள், நீங்கள்???

கூல்போய் : 2010 ஆம் ஆண்டு பதிவெழுத தொடங்கிய புதிதில் பெரிதாக பதிவர்கள் எனக்கு அறிமுகமாகி இருக்கவில்லை. அதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் யாழ்தேவி நடத்திய யாத்திரா இணையத்தமிழ் மாநாடு சம்பந்தமாக அறிந்து,
முதன் முதலில் ஜனா அண்ணாவுக்கு அழைப்பை எடுத்து விசாரித்தேன். சிறுதயக்கம், முகம்தெரியாத நபர்கள் என்ற பயம் எனக்கு இருந்தது. இருந்தாலும் உடனயடிhகவே என்னையும் வந்து தங்களுடன் பேசுமாறு அவர் அழைத்தார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மறுநாள் நடைபெறவிருந்த யாத்திரா நிகழ்வுக்கான பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அங்கு சென்று அழைப்பை எடுத்த என்னை ஜனா அண்ணா அன்பாக அழைத்துச்சென்று மற்றவர்களையும் அறிமுகம் செய்தார்.
அங்கே எனக்கு ஒரே கல்லில் ஏழெட்டு மாங்காய்கள் கிடைத்தன.
அங்கே மருதமூரான், சேரன் கிரிஷ், கன்-கொன், பாலவாசகன், இலங்கன், புள்ளட், என பலர் அறிமுகமானார்கள். ஆரம்ப அறிமுகமே அசத்தலாக இருந்தது.
அதன் பின்னர், சுபாங்கன், வரோ என்று அறிமுகங்கள் கிடைத்து, ஒரு முறை கொழும்பு சென்றபோது ஆதிரை உட்பட பலரை சந்திக்கும்வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்னர், பதிவர் சந்திப்பில் நிறைய நண்பர்கள் இதுதான் என் பதிவுலகம், பதிவர்கள், அவர்களுடன் நான்.

கேள்வி : பதிவுலகில் வேறு ஆரோக்கியமாக நீங்கள் விரும்பும் விடையங்கள்?

கூல்போய் : நான் எனது தேவைக்காக தேடும்போது கண்ணில் பட்டதே பதிவுலகம். அந்த வகையில் இன்னும்பலர் பல தேவைகளுக்காக தேடிக்கொண்டிருக்கின்றனர்.
எனவே ஒவ்வொரு துறையிலும் துறைதோய்ந்தவர்கள் அவர்களின் துறை சம்பந்தமான விடையங்களை விரிவாக பதிவுகளில் தரவேண்டும் என்பது எனது அவா. அவை தொழிநுட்பம், மருத்துவம், பொறியில், விஞ்ஞானம், சூழல், என எவையாகவேண்டும் என்றாலும் இருக்கலாம். அவை பலருக்கும் பயன்படும் விதம் இருக்கவேண்டும்.
அடுத்து பதிவர் சந்திப்பில் ஜனா அண்ணா நீங்கள் சொன்னது ஒரு முக்கியமான விடயம். இன்று புலம்பெயர் சமுதாயமாக உலகநாடுகள் எல்லாம் பரவிவாழும் வாழ்வு, கெட்டத்திலும் ஒரு நன்மையாக எமக்கு கிடைத்துள்ளது. இந்த வகையில் இன்று தமிழுடன் உலகின் பல முக்கியமான மொழிகளை எழுதவும், படிக்கவும் தெரிந்த ஒரு சமுதாயம் உருவாகியுள்ளது. எனவே அவர்கள் அந்த அந்த மொழிகளில் உள்ள முக்கியமான தகவல்களை தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து தந்தால், அது தமிழ்; எழுத்தியலில் பாரிய ஒரு பரிநாமமாக இருக்கும்.


14 comments:

ம.தி.சுதா said...

நீண்ட நாளின் பின்னர் ஒரு சுடு சோறு

மாத்தி யோசி said...

thanks jana for sharing it.mybest wishes to CB.is he a comedy writer? ok i visit his blog

ம.தி.சுதா said...

////பதிவுலகத்தில் அப்பப்பபோ திடீர் என்று சிறு சிறு ஓய்வுகளை கேட்காமலே எடுத்துக்கொள்வதும் உண்டு.////

ஆமாம்...
மிகவும் ஒரு வித்தியாசமான நகைச்சவை பதிவராகும் இவர் அதை மொக்கை பதிவு என்றாலும் நான் நகைச்சுவை என்றே சொல்வேன்... பதிவர் சந்திப்புக்கு முன்னர் எழுதிய பதிவு ஒன்றில் நான் லொசண்ணாவிற்கு முகம் துடைக்க பத்திரிகை கொடுத்ததை நினைத்து நினைத்து நான் மட்டுமல்ல அவரும் இப்போதும் சிரிப்பார் என நினைக்கிறேன்...

ஜீ... said...

உண்மையாகவே 'கூல்போய்' தான்! தற்போது பிசியா உள்ளார் போலும்!

நிரூசா said...

தலைவரே வாழ்த்துக்கள்

தர்ஷன் said...

அடடடடா பொதுவாக இலங்கைப் பதிவர்களை நான் மிஸ் பண்ணுவதில்லை எப்படியோ இவரது ஒரிருப் பதிவுகளை மட்டுமே படித்திருக்கிறேன். இப்போது உங்கள் அறிமுகத்துக்குப் பின் சென்று பார்த்தேன் மனிதர் அசத்துகிறார்
நன்றி

றமேஸ்-Ramesh said...

இவரைப்பற்றிய விடயங்கள் அதிகம் எனக்கு தெரியாமல்போச்சே. சே இவ்வளவுநாளும் என்சிரிப்புகளை இழந்திருக்கிறேன்.. இனி நாமும் கூலா இருக்கலாம்
நன்றி ஜனா அண்ணா..

Chitra said...

Cool! :-)

மருதமூரான். said...

வாழ்த்துக்கள் கூல். தொடர்ந்து கலக்குங்கள்

மைந்தன் சிவா said...

நீங்கள் பதிவு போட்ட வேளையில் அவருடன் நான் நேரில் கதைத்துக்கொண்டிருந்தேன் தலை நகரில்!!
பய புள்ள நம்ம ஏரியா எண்டு தெரியாம பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கான்..
நல்ல காலம் உடனேயே பஸ் எடுக்கொனுமேண்டு ஓடிட்டான்..இல்லாட்டி....

நச்சத்திரா said...

வணக்கங்கள் அண்ணா. கிருத்திகனுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். பிற வலைபதிவர்களை சிறந்த முறையில் அறிமுகம் செய்துவைக்கும் உங்கள் முயற்சி எங்களைப்போன்ற பதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அண்ணா.
என் வலைப்பக்கமும் வந்து புதியவள் எனக்கு நல்ல வழிகாட்டியாக தங்களை இருக்க வேண்டுகின்றேன் அண்ணா.

வடலியூரான் said...

வாழ்த்துக்கள் கூல்.. அண்ணனின் நகைச்சுவை இயல்பு... அச்சரம் பிசகாமல் அப்பிட்யே தம்பியிடமும் உள்ளது.. வாழ்த்துக்கள்.

“நிலவின்” ஜனகன் said...

அருமை...

முதலில் சுடு சோற்றுக்கு வாழ்த்துகள் சுதா அண்ணா...


கூல் போய் நம்ம பாடசாலை அன்பர்-பழைய மாணவர்- என் மூத்த ஆண்டு மாணவர் என்பதால் ஏற்கனவே அறிமுகமான மனிதர்..பாடசாலையில் இவரின் குறும்பை காலம் காலமாக கல்லுாரி மறக்காது என்று அவரின் நண்பர்கள் தெரிவித்தனர்..

அண்மையில் தான் பதிவராக நேரில் சந்தித்தேன்..மகிழ்ச்சி..

வாழ்த்துகள் இருவருக்கும்..
இளமை வேகம் பெறட்டும்..லீவு இன்றி..

நிரூபன் said...

கூல் போய் பற்றிய விடயபங்கள் ரொம்பவும் கூலாகவே இருக்கிறது. போட்டோவிலும் சிரித்துக் கொண்டு கூலாக நிற்கும் இவரைப் பற்றிய அறிமுகத்தைத் தந்த சகோதரத்திற்கும் நன்றிகள். இவரது வலைப் பதிவையும் இன்று தான் பார்த்தேன். ஆள் நகைச்சுவையில் தூள் கிளப்புகிறார். கூலிற்கு வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails