Sunday, February 20, 2011

இந்தவாரப் பதிவர் - திரு. ஜீ

“கவிதையோ இலக்கிய உரைநடையோ எனக்கு தெரியாது> எனது கருத்துக்களையும்> அனுபவங்களையும்> நான் இரசித்தவற்றையும் கொஞ்சம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்” என்பதே தன்னைப்பற்றி தனது வலைத்தளத்தில் பதிவர் ஜீ தெரிவித்துள்ள கருத்து.

உண்மைதான்> அவரது வலைத்தளத்திற்கு சென்றால்> சிந்திக்க தூண்டும் கருத்துக்களையும்> உணர்வோட்டமான அனுபவங்களையும்> பிரமிப்பான இரசிப்புக்களையும் கண்டு கொள்ளலாம்.

கௌரவமான எழுத்தோட்டம் ஜீயினுடைய எழுத்துக்களின் புலப்பாடு. இவரது எழுத்துக்களை வாசித்துகொண்டிருக்கும்போதே எழுதிய அவர்மேல் எம்மையும் அறியாத ஒரு கௌரவம் தோன்றிவிடுவது யதார்த்தம்.

பல பதிவுகள் அடடா..இவை நாமும் அனுபவித்த விடயங்களாயிற்றே> ஏன் நமக்கு இப்படி தோன்றவில்லை என ஆனந்தமான ஆச்சரியம் கொள்ளச்செய்யும் தன்மைகள் ஜீயினுடைய எழுத்துக்களின் புலப்பாடு.

இப்படியும் பலர் இரசிக்கத்தக்க அதேநேரம் சிறப்பான பதிவுகளை இடமுடியும் என்பதற்கு ஜீயினுடைய பல பதிவுகள் எடுத்துக்காட்டு.

கிருபாகரன் உமாசுதன் என்ற இயற்பெயரைக்கொண்ட பதிவர் ஜீ.. 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவுலகத்தில் தடம்பதித்துகொண்டார். அன்றிலிருந்து தன் தனித்துவமான அனைவரும் விரும்பும்> இலகுவான அதேநேரம் சிறப்பான ஒரு எழுத்துநடையை தனதாக்கிக்கொண்டு பலரையும் கவரும் வண்ணம் பதிவுகளை தந்துவருகின்றார்.

எந்த ஒரு விடயத்தையும் மிக ஆழமாக பார்க்கும் ஜீயின் பார்வைகள்> அனுபவங்கள்> தான் சந்தித்துகொண்டவை> ஏன் கசப்பான அனுபவங்களை பதிவிடும்பொழுது கூட> உணர்வானதாகவும்> அதேநேரம் யதார்த்தமானதாகவும்கூட தொட்டுச்செல்வது அவருக்கே உரித்தான பண்பு என்று தான் சொல்லவேண்டும்.

முக்கிமானதாக ஜீயினுடைய வாசிப்பு என்ற விடயத்தை சொல்லியே ஆகவேண்டும். பலவேளைகளில் ஜீயினுடைய வாசிப்பு பற்றிய அவரது பதிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும். காரணம் ஜீ.. பல எழுத்தாளர்களின் நாவல்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர். இருப்பினும் அவர் தெரிவு செய்து படிக்கும் நாவல்களே இங்கு குறிப்பிடப்படவேண்டியவை. பிரபலமான எழுத்தாளர்களின் மிக தரமான நாவல்களை ஜீ தெரிவு செய்து படித்து வருவதும் அந்த அனுபவங்களை பிறருக்கும் தெரிவித்து பிறரையும் அந்த சுகாவனுபவங்கைளில் இலகிக்க வைப்பதிலும் ஜீ..க்கு அலாதியான பிரியம் உண்டு என்பது புலப்படுகின்றது. (றீடர்ஸ் ஹைட்)

நல்லதொரு கலைஞன், நல்லதொரு எழுத்தளான், தேடல்கள் உடையவன்> தன்மேல் திருப்திப்பட்டுக்கொள்ளாமல்> தன்னை நாளாந்தம் மென்மேலும் சிறப்பு செய்பவன்> இசை என்னும் விடையத்தில் அன்நியமாக நிற்பது என்பது முடியாத காரியம். அதற்கு ஜீ யும் விதிவpலக்கில்லை. ஜீ யினுடைய இசைக்காதல் அவரது பல பதிவுகளில் வெளிப்பட்டு நிற்கின்றன. அந்த இசைக்காதல்> இன்னது என்ற வரையறைக்குள் மடடுப்படாமல்> இலகிக்கவைக்கும் இசைகள் அனைத்தின்மீதும் பிரியம் கொள்ளும் தன்மைகள் தொக்கி நிற்கின்றன.

யாருக்கு தன் காதுகளால் முதன்முதலில் கேட்ட பாடல் நினைவு இருக்கும்?

ஒரு சிலருக்கு மட்டுமே இத்தனை நினைவாற்றல்கள் வரமாக கிடைத்திருக்கும். அப்படி ஒரு வரம்வாங்கிவந்தவராக ஜீ யை தைரியமாகக்கூறிக்கொள்ளலாம்.

நினைவுகள்> அவற்றின் ஞாபக சக்திகள் என்பனவே> உணர்வோட்டமான பழைய விடங்கள் பற்றி அனுபவங்களை எழுதுபவர்களுக்கும்> அவற்றை சுவாரகசியம் குன்றாமல் தருவதற்கும் மிகத்தேவையான விடயம். அந்த வகையில் ஜீயினுடைய அனுபவப்பகிர்வுகள்> ஜீயினுனைய கண்களினூடாக நாம் பார்க்கும் காட்சிகள்போல வாசிக்கும் எங்களை அந்த காலங்களுக்கு அழைத்துச்செல்வது ஆச்சரியமான ஒரு அனுபவம்.

உலகசினிமா> மற்றும் கொலிவூட் பார்வைகள்! ஆம்> இது தான் ஜீயின் விஸ்பரூபம் என்று மலைத்துப்பார்க்கும் அளவிற்கு இருக்கின்றன. முக்கிமான தரமான உலக சினிமாக்கள் பற்றிய ஜீயினுடைய ஆராய்வுகள். எப்படி இந்த மனிதன் ஒரு படத்தின் இத்தனை நுன்னிய விடயங்களையும்> அவதானிக்கின்றார் என்ற ரீதியில் அவை அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு படங்கள் பார்த்து முடிந்தவுடனும் ஒவ்வொருவர் மனதினுள்ளும் சில கேள்விகள் இருக்கும்> யதார்த்தமுரணான சில கட்டங்கள்> சில கட்டங்கள் திரைப்படத்தில் ஏன் புகுத்தப்பட்டன> சில கட்டங்கள் அர்த்தமின்றி வந்தனவே அதற்கும் பிரதான கதைக்கும் என்ன தொடர்பு! என்பனபோன்ற கேள்விகளை நாம் கேட்டுவிட்டு பேசாமல் இருந்துவிடுவதுதான் இயல்பு.

ஆனால் இந்த மனிதர்> அந்த கேள்விகளுக்காகவே மீள் பார்வை ஒன்றை பார்க்கின்றார் போல! பின்னர் மனதில் தோன்றும் அந்த கேள்விகளுக்கான விடைகளையும் கண்டுபிடித்து விடுகின்றார்> அதை எழுதியும் விடுகின்றார்.

ஆச்சரியம்தான்…

“உண்மையில் அந்த சிறகுகள் வானம் தாண்டிவிட்டன..”

இந்தவாரப்பதிவர் ஜீ.. பற்றிய சிறிய பார்வை ஒன்றை கண்டோம். சரி..இனி இந்த வாரப்பதிவர் ஜீ.. இடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளையும் பார்ப்போம்…

கேள்வி : பதிவு எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது உங்களுக்கு?

ஜீ : சிறு வயதிலிருந்தே பாடசாலைகளில் கதை, கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெறுகிறதென்றால் நான் முதல் ஆளா.........வெளிநடப்பு செய்திடுவேன்! அவ்வளவு பொருத்தம்!

எந்த ஒரு தமிழ் பரீட்சையிலும் ஒழுங்காக ஒரு கட்டுரை எழுதியதாக ஞாபகமில்லை!சும்மா முயற்சி செய்யலாமேன்னு தான் எட்டுமாசமா பதிவுலகில்.

ஆனால் வாசிப்பு பழக்கம் மட்டும் சிறுவயதிலிருந்து இருக்கு! தீவிர சுஜாதா ரசிகன் நான்!


எந்த தயார்படுத்தலும் இன்றி வந்ததால் மற்றவர்களிடம் சேர்க்கவேண்டும் என்று யோசிக்காமல் முதல் நான்கு மாசம் நானே எழுதி நானே வாசித்தேன்! (முற்றிலும் ஒரு டைரியாகவே)

நான் என்ன நினைக்கிறேனோ, உணர்கிறேனோ அதை சரியாக எனது எழுத்துக்களில் சரியாக வெளிப்படுத்த முடிந்ததில்லை!


எழுதும்போது ஏற்படும் ஏதோ ஒரு அவசரம், பரபரப்பில் எல்லாமே காமாசோமாவாகி விடுகிறது!


கேள்வி : பதிவுலகிற்கு வந்தபின்னர் பதிவுலகம் தாண்டிய வாழ்க்கையில் ஏற்பட மாறுதல்கள்?

ஜீ :

பதிவுலகிற்கு வந்தபின்னர் பதிவுலகம் தாண்டிய வாழ்க்கையில் ஏற்பட மாறுதல்கள் என்று சொல்வதற்கு, பெரிதாக எதுவுமில்லை!

blog என்பது ஒரு டிஜிட்டல் டைரி போன்றது! என்ன ஒரு வித்தியாசம் மற்றவர்களைப் படிக்க அனுமதிக்கும் டைரி.

எனது நண்பர்களில் ஒரு பத்துப் பேருக்குகூட எனது டைரி அறிமுகமில்லை. அப்படித்தெரிந்தவர்களிலும் வாசிப்புப் பழக்கம் உள்ளோர் ஓரிருவர் மட்டுமே!

என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு வீட்டிற்கு வரும்போதெல்லாம் எனது சமீபத்திய பதிவு ஒன்றை வாசித்துப் பார்க்க சொல்வேன்!

இப்ப அவன் வீட்டுக்கு வருவதையே நிறுத்திட்டான்! :-)


எனது பதிவுகள் பற்றி எப்போதாவது பேசுபவன் நண்பன் பார்த்தி மட்டுமே! ஜீ என்ற பெயர் யாழில் நான் வசித்த ஏரியால உள்ள சிலருக்கு மட்டுமே பரிச்சயம்.

எனது வீட்டிலும் யாருக்கும் தெரியாது! ஆகமொத்தத்தில் பதிவுலகம் என்பது என்வரையில் ஒரு தனியுலகமாகவே உள்ளது! இது எனக்குப் பிடிச்சிருக்கு!


அதே போல் ஏதோ ஒரு கணத்தில் நான் திடீரென நிறுத்திச் சென்றும் விடலாம்! :-)


என்னை வெளிப்படுத்திக் கொள்வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. இயல்பில் கூச்சசுபாவி என்பதாலும் இருக்கலாம்!

(ஆமா! இல்லாட்டி மட்டும் பாக்கிறவங்க எல்லாம் ஆட்டோக்ராப் கேட்டுடுவாங்க! யாருப்பா அது திட்டறது? :-))

நீங்கள் வற்புறுத்தியதால் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். அதன் மூலம் ஒருசில நண்பர்கள் அறிமுகமானார்கள். சமீபத்தில் மருதமூரான் எப்படியோ என்னை அடையாளம் கண்டுகொள்ள, பேசினோம்!

பதிவுலகில் நிறைய நண்பர்களை, ரசனையுள்ளவர்களைக் கண்டுகொண்டேன். அதே போல் ஜீ- யையும் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கிறது!


கேள்வி : உலகசினிமா பற்றிய உங்கள் கவனம்!, உங்கள் எழுத்துக்கள், வாசிப்புக்கள், உங்கள் பார்வைப்பதிவுலகம்?

ஜீ :

எனக்கு சினிமா பிடிக்கும்! பிடிக்கும் என்பதைவிட I Love cinema. அனால் நான் படங்கள் பார்ப்பது குறைவு!

நான் பர்த்த சில படங்களில் உலக சினிமாக்களே அதிகம். ஹாலிவுட் குறைவு.


ஆரம்பத்தில் ஈரானிய சினிமா! Majid Majidi யின் படங்கள்!

அதேபோல் இத்தாலிய சினிமா என்னைக் கவர்கிறது - இயக்குனர் Guiseppe Tornatore, Roberto Benigni போன்றோரின் படங்கள்! என்னை ஆகக் கவர்ந்த இத்தாலியப் படம் 'Cinema Paradiso'.

அதே போல் கொரியப் படங்கள் குறிப்பாக Kim Ki -duk இன் படங்கள்!


அப்படிப் பார்த்ததில் பல படங்கள் எனது பதிவில் எழுதப்படாமலே இருக்கிறது! எல்லாம் சோம்பேறித்தனம் தான் காரணம்!

தமிழ்- இயக்குனர்,பதிவுலக விமர்சனங்களைப் பார்த்தே தெரிவு செய்து பார்ப்பேன்!

நான் இந்தியாவில் இருந்தால் இப்போது ஒரு உதவி இயக்குனராக மாற முயற்சியாவது செய்திருப்பேன்! :-)


கடந்த நான்கு வருடங்களாக எனது வாசிப்புப் பழக்கம் (புத்தகங்கள்)வெகுவாகக் குறைந்துவிட்டது! ஆனால் பதிவுகளை வாசிப்பதால் நிறையத் தெரிந்து கொள்ள, ரசிக்க, சிரிக்க, ஆச்சரியம் கொள்ள முடிகிறது!

இந்த உலகில் எந்த பேதமுமின்றி ஒவ்வொருவரிடமும், ஏதோ எங்களுக்குப் புதிய, ரசிக்கக்கூடிய ஒரு விஷயம், செய்தி இருக்கிறது! பதிவுலகமும் அப்படியே!


ஜீசஸ், நபி, புத்தர், கிருஷ்ணர் மட்டுமல்ல! ஒரு வகையில் எல்லா மனிதர்களுமே ஒரு Messenger என்றே நான் நினைக்கிறேன்!

எப்போதும் நான் ஒரு ரசிகனாகவும், பார்வையாளனாகவுமே இருக்கின்றேன்!


எனது பதிவுகளிலும் நான் ரசித்த, பார்த்த, என அனுபவங்களையே அதிகமாக சொல்லியிருக்கிறேன்!

உணர்ந்து கொள்ளாத எதையும், முழுதுவதும் கற்பனையாக என்னால் எழுத முடிவதில்லை!

எனக்கு நகைச்சுவை கலந்த எழுத்துக்கள் பிடிக்கும்! (சுஜாதா மாதிரி) அம்மாதிரி பதிவுகளை விரும்பி வாசிப்பேன்!. அம்மாதிரி எழுவது கடினமானதும் கூட.

நம்மிடையே அருகி வரும் நல்ல குணங்களில் ஒன்று நகைச்சுவை உணர்வு!


நம்மவர்கள் பலர், எபோதும் படு சீரியஸ் ஆகவே இருக்கிறார்கள்! வடிவேலு காமெடியையே படு சீரியஸா உர்ர்ர்ர்ரென்று பார்ப்பவர்கள் ஏராளம்! நம்மவரின் நகைச்சுவை உணர்வு அப்படி!


அதேநேரம், ஒரு சீரியசான விஷயத்தையும் 'அவல நகைச்சுவையாகச்' சொல்லிச் செல்லலாம்!


ஜீயின் "வானம்தாண்டிய சிறகுகள்"

27 comments:

கார்த்தி said...

எனக்கும் பதிவர் சந்திப்பின் பின்பே ஜீயின் வலைத்தளம் என் கண்ணில் பட்டது. அதன் பின் ஒவ்வோர் பதிவையும் வாசித்து வருகிறேன். சிறந்த பதிவர். கூடுதலான சினிமா ச்பந்தமான பார்வை ,இவரது பதிவுகளில் பிரபலம்.

ஆனந்தி.. said...

அட..என் தம்பி ஜீ.:)))..ஏய் ஜீ..இன்னைக்கு தான் உன் ஒரிஜினல் பேரு தெரியும்...:))) அழகான பெயரை வச்சிட்டு..ஜி..எச் .ஐ, ஜே..னு...:) ஜீ ஒரு வழியா புகைபடத்தில் உன்னை பார்த்துட்டேன்..கொஞ்சம் நல்லா சாப்டு..அப்போ தான் என் மற்றொரு பிரிய சகோதரன் ராஜிவன் மாதிரி இருக்க முடியும்...ஹ ஹ...

ஜனா!!!....நீங்கள் ஜீ யை பற்றி சொன்னது எல்லாமே நானும் மனதில் நினைத்தவை..fentastic ரசனை...creativity ...எல்லாம் கொட்டிகிடக்குது ஜீ குள்ளே...ஜீ யின் கவிதைகள் கூட short & lovely ஆ இருக்கும்...உதாரணம் அந்த பேருந்து பயணம்..குண்டு வெடிப்பின் பயம்..சத்தம் பற்றிய கவிதை...

ஜீ எழுதும் உலக சினிமா review க்கள் எல்லாம் ரொம்பவே தரமான ரசனையில் படைக்கப்பட்டவை..நான் ஜீ யின் பதிவுகளுக்கு பெரிய விசிறி...

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் ஜீ... உண்மையில் அவர் சிறகுகள் வானம் தாண்டி விட்டன.. அவர் திரைப்பட பார்வையை ரசித்தப் படிப்பேன் என்னால் பார்க்க முடியலியெ என்ற ஒரு வருத்தம் இருக்கிறதே ஒழிய அதை தீர்க்கும் ஜீயில் எப்போதும் தனிப் பிடிப்பு இருக்கும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

ம.தி.சுதா said...

நன்றி ஜனா அண்ணா...

Unknown said...

சார் சூப்பர் ஜி அவர்களின் பதில்களை ரசித்து படித்தேன்

shanmugavel said...

நல்ல அறிமுகம் ,ஜனா .வாழ்த்துக்கள்

shanmugavel said...

நல்ல அறிமுகம் ,ஜனா .வாழ்த்துக்கள்

Unknown said...

இந்த வார பதிவராக உங்களால் மகுடம் சூட்டப்பட்ட ஜீ-க்கு இனிய வாழ்த்துக்கள்..

Unknown said...

//கொஞ்சம் நல்லா சாப்டு..//

Unknown said...

//நான் பர்த்த சில படங்களில் உலக சினிமாக்களே அதிகம்//
உலக படங்கள் பற்றிய ஜீ-யின் விமர்சனகள் தரமானவை.

Riyas said...

வாழ்த்துக்கள் ஜீ,,

ஆயிஷா said...

நல்ல அறிமுகம் .வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள் ஜீக்கு...
நல்ல அறிமுகம்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Congratulations Jee.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Hi jana.i am a new blog writer.can you introduce me in your blog? hi....... hi....... hi..... ..

சக்தி கல்வி மையம் said...

நல்ல அறிமுகம் ,வாழ்த்துக்கள் ....

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நான் உன்மையாகவே உங்களின் தேவையான விமர்சனத்தினை நினைத்து பெருமையடைகிறேன்...நன்றிங்க.....
http://vellisaram.blogspot.com/
அன்புடன் ...சீலன்

john danushan said...

நல்ல பதிவு

செங்கோவி said...

அடடே, என் அருமைத் தம்பி ஜீ பற்றி நான் கணித்திருந்ததை அப்படியே எழுதியிருக்கீங்களே..ஜீ போன்ற தரமான பதிவர்களின் வருகையால், பதிவுலகம் இப்போது புத்துயிர் கொண்டுள்ளது. ஜீ போட்டோவையும் போட்டதுக்கு நன்றி சார்!

maruthamooran said...

வாழ்த்துக்கள் ஜீ!

Unknown said...

வாழ்த்துக்கள் ஜீ,

டிலான் said...

வணக்கம் ஜீ..தங்கள் பதில்கள் மிக வெளிப்படையானவை. அப்படியே நீங்கள் என்றும் இருக்க வாழ்த்துகின்றேன். ஏனென்றால் உங்க பலபேர் இப்படி இல்லை என்று அறிந்துகொண்டேன்.

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துக்கள் ஜீ....

சி.பி.செந்தில்குமார் said...

>>என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு வீட்டிற்கு வரும்போதெல்லாம் எனது சமீபத்திய பதிவு ஒன்றை வாசித்துப் பார்க்க சொல்வேன்!

இப்ப அவன் வீட்டுக்கு வருவதையே நிறுத்திட்டான்! :-)

haa haa ஹா ஹா செம காமெடி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வாழ்த்துக்கள் ஜீ..

நிரூபன் said...

இன்று தான் இவ் நல்ல பதிவரைப் பற்றி அறிந்தேன். நன்றிகள் ஜனா. வாழ்த்துக்கள் ஜீ.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜீயின் பதிவுகள் எனக்கு முன்பே பரிச்சயம். அவரது சிறப்பான, ஆழமான எழுத்துக்களைப் படித்துவிட்டு அவர் சற்று முதிய வயதினராய் இருப்பார் எனக் கற்பனை செய்திருந்தேன். இப்போது அவரது படத்தினைப் பார்க்கும் போது, மிகுந்த ஆச்சர்யம் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள் ஜீ......!

LinkWithin

Related Posts with Thumbnails