Monday, January 31, 2011

றீபொக் டீ சர்ட்டும், அடிடாஸ் பொட்டமும்.


இன்று உடைகள், பாதணிகளில் சர்வதேச ரேட்மார்க்குடன் பல பிராண்டுகள் இருந்தாலும், நம்மத்தியில் றீபொக் மற்றும் அடிடாஸ் உடைகள், பாதணிகள் என்பன செல்வாக்கு செலுத்திவருகின்றன.
ஆரம்பத்தில் எம்மவர்கள் மத்தியில் ஸ்போர்ட் சம்பந்தமான உடைகள், மற்றும் பாதணிகள், கிரிக்கட் பாட்டுகள், கையுறைகளிலேயே இதை கண்டுகொண்டாலும்கூட,
இன்று கஸ்ஸ_வல் உடைகளாக பல டீ சர்ட்டுக்கள், பொட்டங்கள், டவுசர்கள் என றீபொக் மற்றும் அடிடாஸ் ரேட்மார்க்குகள் நம்மத்தியில் செல்வாக்கு செலுத்துகின்றன.

குறிப்பாக 1999 ஆம் ஆண்டுக்கு பின்னதான காலங்களில் தென்னாசிய கிழக்காசிய நாடுகளில் இந்த இரண்டு பிராண்டுகளும் ஆழமாக கால்பதிக்க தொடங்கின.
முன்னரே இருந்தாலும்கூட 2000 ஆண்டுக்கு பின்னதான காலங்களிலேயே தென்னாசிய ஆசிய நாடுகளில் இவற்றின் தாக்கங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து, இந்த பிராந்தியங்களில் அதிகளவிலான றீபொக், அடிடாஸ் வர்த்தக நிலையங்கள் கிளை பரப்ப தொடங்கின.
இது தவிர இந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கு ஏற்றவரான கஸ்ஸ_வல் உடைகளையும் இந்த நிறுவனங்கள் தயாரித்து விநியோகிக்கத்தொடங்கி வெற்றியும் பெற்றன.

ஆண், பெண் என இருபாலருக்குமான விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு உடைகள், விளையாட்டு பாதணிகள், என்ற வட்டத்தில் இருந்து, கஸ்ஸ_வல் உடைகள், கஸ்ஸ_வல் பாதணிகள், மணிக்கூடு, பாக், என பல பொருட்களை இவை சந்தைப்படுத்த தொடங்கியுள்ளபோதிலும், குறிப்பாக இந்தியா இலங்கையில் ஆண்களே பெருமளவில் இவ்வாறான நிறுவனங்களின் உடைகள் பாதணிகள்மேல் கண்வைக்கத்தொடங்கியுள்ளனர்.
ஆண்மைக்குரிய கம்பீரம், நவீனத்துவம், செல்வச் சீமை, என்பன இந்த உடைகள்மூலம் கிடைத்துவிடும் என்ற எண்ணங்கள்கூட பலபேரிடம் வேரூன்றி காணப்படுகின்றது.
என்ன..இந்த உடைகளின் உச்ச விலைகளும், சாமானியர்கள் எட்டமுடியாத நிலைமைகளும் இந்த எண்ணங்களுக்கு இன்னும் வலுச்சேர்த்து நிற்கின்றது.

பூமா, நைக், போலோ போன்றனவும் இவற்றுடன் மறு முனையில் போட்டிபோட்டு நின்றாலும்கூட அதிகமாக நம்மவர்களை கவர்ந்திழுத்துள்ளது என்னமோ இந்த றீபொக்கும், அடிடாஸ்ஸ_ம்தான்.


நானும் குறிப்பாக இந்த இரண்டு பிராண்ட் கஸ்ஸ_வல் உடைகளை அதிமாக பாவிப்பதால் இது குறித்து இதை பாவிக்கும் இந்திய, இலங்கை நண்பர்களிடம் கேட்ட தகவல்கள், அவர்களின் பாவனை அனுபவங்களை தருகின்றேன்.
இறுதியாக இவைகுறித்த பாவனையின் என் அனுபவங்கள்.

சென்னை நண்பர் - றீபொக் டீ சர்ட்டுக்கள், ஒவ்வொருவரின் உடல் அமைக்கும் பொருந்தக்கூடிய பிட்டிங் முறையில் தெரிவு செய்தால் அமைப்பாக இருக்கும்.
குறிப்பாக றீ பொக் டீ சர்ட்டுக்களின் தனித்துவம் அவற்றின் ஆம்கட், மற்றும் சோல்டர் ஜாயின்டுகளின் பொருத்தங்களில் தனித்துவமாக இருக்கும்.
இது அணிபவருக்கு ஒரு கவர்ச்சியை உண்டாக்குவதுடன், அவருக்கு இயல்பானதமாகவும் இருக்கின்றது.

மற்றுமொரு சென்னை நண்பர்: அடிடாஸ் பொட்டங்கள், றீ பொக் பொட்டங்களைவிட நம் பாவனைக்கு ஏற்றவாறாக நீடித்து உழைக்கக்கூடியதாகவும் உள்ளன. பொதுவாக றேட்;மார்க் பொட்டங்களில் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் நெட்கள், மிக நெருக்கமானதாக இருப்பதே பாவனைக்கு உதவுவதாக இருக்கும்.
பொதுவாக றீ பொக்கினுடைய டீ சர்ட்டுக்கள் இரட்டைத்தையல் அம்சம் உள்ளடக்கப்பட்டதனால் பாவனையும் அழகும் நன்றாக இருக்கும். அனால் அடிடாஸ் டீ சர்ட்டுக்கள் அதுபோல இல்லவே இல்லை.

கொழும்பு நண்பர் ஒருவர் : மேற்கூறிய பிராண்டுகள் நேரடியாக இன்னும் தமது நிறுவனங்களை இலங்கையில் உத்தியோகபூர்வமாக இன்னும் தொடங்காத காரணத்தால், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்தும், இந்தியா, சிங்கப்பூர் மலேசியா, தாய்லாண்ட் ஆகிய இடங்களில் இருந்துமே இந்த பிராண்ட் உடைகள் இங்கு வருகின்றன. இவற்றுடன் 6 ஒரிஜினலுடன் 4 டுபிளிகேட் என்ற வகையில் கலந்து கட்டப்படுகின்றன. எனவே தேர்வு செய்யும்போது உண்மையானதை தெரிவு செய்யும் தன்மை எம்மிடம்தேவை.
எமக்காக றீ பொக் கஸ்வலைஸ் பண்ணியிருக்கும் டீ சர்ட்கள், சில டிசைன் சர்ட்கள் என்பன கண்களை கவர்வதுடன், அணிகைளில் புதிய அனுபவங்கள் ஏற்படுவது உண்மை. ஆனால் அடிடாஸில் அவை இல்லை.

யாழ்ப்பாண நண்பர் - எனக்கு பொதுவாக அண்ணா மார் அனுப்பும் உடைகள் (வெளிநாடுகளில் இருந்து), அதுபோக சிங்கப்பூர் சென்றுவருகையில் எனக்கு பிடித்த இந்த இரண்டு பிராண்ட் உடைகளும் ஆவலாக வாங்கி வந்தேன்.
றீ பொக் டீ சர்ட்கள் பாவனைக்கு உகந்தன. அழகானவையும்கூட, ஆனால் றீP பொக் பொட்டங்கள், கஸ்வல் டவுஸர்கள் சொல்லும்படி இல்லை. அவற்றில் அடிடாஸ் பறவாய் இல்லை. இங்கே 2000 ரூபாவுக்கு ஒரு டீ சர்ட் வாங்கி இரண்டு மாதம் பாவித்து சாயம்போய், சுருக்கு விழுந்து எறிவதையும் விட, 4500 ரூபாவுக்கு ஒரு றீபொக் டீ சர்ட் வாங்கி இரண்டு வருடத்திற்கு புதிதாகவே உடுத்திக்கொள்ளமுடியும் என்பதற்கு நான் உத்தரவாதம்.

சரி.. இதுவே நன் இந்த பதிவுக்காக கருத்துக்கேட்ட நான்கு நண்பர்களின் கருத்துக்கள். இவர்கள் நால்வரினதும் கருததுக்களில் ஒரு ஒற்றுமை உண்டு.
அதாவது றீ பொக் டீ சர்ட்கள் நன்றாக இருக்கின்றது உழைக்கின்றது, அனால் பொட்டங்களோ, டவுஸர்களோ இல்லை. அடுத்தது அடிடாஸ் டீ சர்ட்டுக்கள் எங்களுக்கு எற்றதுபோல இன்னும் இல்லை. ஆனால் பொட்டங்கள், டவுஸர்கள் அதிகம் பாவிக்கின்றன என்பதே.

என் பாவனை அனுபவத்தில், அந்தக்கருத்தை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்கின்றேன். பொட்டம், டவுஸர் டிசைன்களில் றீ பொக்கைவிட அடிடாஸில் நல்ல ஸ்ரைலிஸான மொடல்கள் உண்டு. அடுத்து றீ பொக் பொட்டங்களிலும், மென்மையான, அதேவேளை ட்றவ்வான துணிகள் கொண்டவையும் உண்டு. எமது பிரதேசங்களுக்கான பாவனைக்கு ட்றவ்வான துணி பொட்டங்களே உகந்ததாக இருக்கும். றீ பொக் டீ சர்ட்டுக்களிலும் இந்த சொப்ட், ட்றவ் தன்மைகள் உண்டு,
எமக்கு எற்றதுபோல பார்த்துவாங்குவது நன்று. என் அனுபவத்தில் ட்றவ்வான துணிகள் கொண்ட உடைகளே இந்த பிராண்களில் நம் சூழலில் அதிகமாக உழைக்கின்றது.

ஹலோ…பொறுங்க..எங்க அதுக்குள்ள கிளம்பிட்டிங்க.. சொப்பிங்குக்கா?

14 comments:

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு ரெண்டு பீஸ் பார்சல் பண்ணு மக்கா...................

சக்தி கல்வி மையம் said...

நண்பா, கலக்கீரீந்க போல,சூப்பர்..

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_31.html

சக்தி கல்வி மையம் said...

நான் ஓட்டு போட்டுட்டேன்..

டிலான் said...

ஓ. இன்று ரெக்ஸ்ரைல்ஸ். நாம இதெல்லாம்போடுறதில்லைன்ணா. பூப்போட்ட சேட்டும், புளியங்கா ஜீன்ஸ்சும்தான்.

Unknown said...

நம்மளுக்கு எப்பவுமே அடிடாஸ் தான் அண்ணே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வித்தியாசமான பதிவு ஜனா! தகவல்களை அருமையாக தொகுத்துள்ளீர்கள்! இங்கு சொல்லவா வேணும்! உங்களுடைய இந்தப் பதிவைப் பாராட்டி, ஒரிஜினல் அடிடாஸ் போட்டொமும், ரீபோக் டி சர்ட்டும் பார்சலில் அனுப்பி விடவா?

test said...

அண்ணன் fashion உலகத்துக்குள்ள போயிட்டீங்க போல கலக்கிறீங்க! :-)

pichaikaaran said...

என்ன எழுதினாலும் ரசிக்கும்படி எழுதுகிறீர்கள்

தர்ஷன் said...

இதெல்லாம் எழுதி பர்சுக்கு வேட்டு வைக்காமல் விட மாட்டீங்க போல

கார்த்தி said...

அண்ணே உதெல்லாம் வாங்கி போடுற அளவுக்கு எனக்கு வசதியில்ல!!

Chitra said...

Thank you for the shopping tips. :-)

ஆகுலன் said...

What happen to Nike?

KANA VARO said...

அண்ணாச்சி டெனிம் எல்லாம் போடுது….

அண்ணே! டெனிம் போட்டு அரை …ண்டி தெரிய திரியிற பெடியள் பற்றி என்ன நினைக்கிறீங்க..

நிரூபன் said...

இப்பவே வேண்டி அடிட்டாஸ் போட்டுப் பார்க்க வேணும் போல இருக்குது. என்ன தான் இருந்தாலும் எங்கடை ஊர் புட்டுக் குழல்(ஜீன்ஸ்) தரத்தை விட இவை விலைக்கேற்ற வகையில் தரமானவை என்பது உண்மை.

LinkWithin

Related Posts with Thumbnails