இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கல்வி மற்றும் பிற தகவல்களை இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக ஜப்பான் மக்கள் சார்பாக ஜப்பான் அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட அப்போதைய அதிநவீன கருவிகள் மூலம் உருவாக்கப்பட்டது.
இது 1982ஆம் ஆண்டின் இலக்கம்.06, பாராளுமன்றச்சட்டத்தின் கீழ், இலங்கையின் தேசிய தொலைக்காட்சிச்சேவையாக நிறுவப்பட்டது. 15ஆம் திகதி பெப்ரவரி மாதம் 1982ஆம் ஆண்டு இந்த தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டபோது நாடவளாவிய ரீதியில் ஒரு பண்டிகை கொண்டாடுவதுபோன்ற உணர்வில் இலங்கை மக்கள் திளைத்தனர் என்பது மிகையாகாது.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சம பகுதிகளாக நிகழ்ச்சிகளை வழங்கும் என்ற பெயருடன் இந்த தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டாலும் காலப்போக்கில் சிங்கள நிகழ்சிகளே முழு அளவிலும் இந்த தொலைக்காட்சியை ஆக்கிரமித்தகதை வேறு.
தமிழ் நிகழ்ச்சிகளை பார்க்கவேண்டும் என்றால், அப்போது தமிழ் மக்கள் தவம் கிடந்தனர் என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பிட்டு மக்கள் காத்திருந்துபார்க்கும் அன்றைய நிகழ்ச்சிகளாக மாதம் ஒரு முறை வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ஒரே ஒரு தமிழ்த் திரைப்படத்தையும், இலக்கம் 77 செட்டியர் தெருவில் அமைந்துள்ள அம்பிகா ஜூவலர்ஸ் வழங்கும், வண்ணக்கோலங்கள் என்ற தமிழ்த்திரைப்படப்பாடல் காட்சிகளையும்தான் (ஒளியும் - ஒலியும் போல)
மற்றும்படி அத்தனை தமிழர்களின் வீடுகளிலும் பெரும்பாலும் மதியழகனும், விஸ்வனாதனும் மாலை 6.30 மணிக்கு ரூபவாஹினி ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் செய்திகள் மூலமாக வந்து சென்றுகொண்டிருந்னர்.
அன்றைய நிலையில் இலங்கை நிலைமைகளை எடுத்துப்பார்த்தால், மூடியதொரு பொருளாதார பின்னணியில், பாணுக்கே (பிறட்டு) வரிசையில் நின்று, கிழங்குகளையும், வீட்டுப்பயிர்களையும் சாப்பிடவேண்டிய நிலையில் இருந்த மக்கள் அப்போது வந்திருந்த திறந்த பொருளாதாரக்கொள்கை, உலகமயமாதலுடன் ஒன்றிய போக்கு, தாராள இறக்குமதி, நாகரிக வரவு, என்பவற்றில் உடனடியாக இலகித்துப்போனார்கள். அன்றைய நிலைமைகளில் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் இருந்த தொலைக்காட்சிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திறங்கத்தொடங்கியது.
ஆடடா இத்தனையினையும் எழுதுகின்றானே இவனுக்கு அப்போது எத்தனை வயது என்று நினைப்பீர்கள். 1982ஆம் ஆண்டு எனக்கு நான்குவயதே. அப்போது நான் மொண்டசறிக்கு போய்க்கொண்டிருந்த காலம் அது. அனால் அந்த சம்பவங்கள,; தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சில இசைக்குறிப்புக்கள் இன்றும் எனக்கு மிகத் தெளிவாக நினைவில் இருக்கின்றது.
என்வயதை உடைய மற்றும், மற்றும் கூடிய வயது அன்றைய சிறுவர்களுக்கு இன்றும், ரூபவாஹினியில் ஒளிபரப்பாகிய அன்றைய ஆங்கிலத் தொடர்கள் இன்றும் நினைவில் இருக்கும். ஏன் எனில் பல சந்தர்ப்பங்களில் என் வயதை ஒத்த நண்பர்கள் பலர் அந்த சுவையான சம்பவங்களை, நிகழ்ச்சிகளை என்னுடன் இரைமீட்டியிருக்கின்றார்கள். பெரும்பாலும் சிங்கள நிகழ்ச்சிகள் இருந்த காணத்தினால் அனேகமாக இரவு 7.30 மணியளவில் மனதுமறக்காத பல ஆங்கிலத்தொடர்களை விரும்பிப்பார்க்கும் சந்தர்ப்பம் அன்று எமக்கு கிடைத்தது.
வேறு எந்த சனலும்(சேனலும்) இல்லாத காரணம் ஒன்று, குறைவான ஒளிபரப்புக்கள் என்றாலும் அன்று தரமானவையாக நகழ்ச்சிகள் இருந்தமை மற்றொன்றென அன்றைய நாட்களில் தொலைக்காட்சி நிகழ்வுகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாவரையும் கவர்ந்தன.
அன்று சிறுவர்களை மட்டும் இன்றி பெரியவர்களையும் உடனடியாக தன் பக்கம் ஈர்க்கும் ஆங்கில தொலைக்காட்சி நிழ்ச்சிகள் பல வந்தன. இன்றும் மனதைவிட்டகலாத அந்த நிழ்ச்சிகள். என்வயதையுடைய நண்பர்கள், இன்று உலகத்தின் எந்த பாகத்தில் இருந்தாலும், அந்த நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்காகவே இந்த பதிவை நான் இடுகை செய்கின்றேன்.
நிச்சயமாக அந்த பழைய நிகழ்சிகளின் ஞாபகங்கள் உங்களை மேற்படி தொலைக்காட்சி தொடர்களை மட்டும் இன்றி நீங்கள் அன்று அனுபவித்த சம்பவங்களுக்கும் தொடராக அழைத்துச்செல்லும் என நம்புகின்றேன்.
அந்த வகையில் ரூபவாஹினியில்; அந்தக்காலங்களில் ஒளிபரப்பட்ட சில சிறந்த ஆங்கில தொலைத்தொடர்களைப்பார்ப்போம்…
ஓட்டோ மான் AUTO MAN
வோல்ட்டர் என்ற பயந்த சுபாபமுடைய ஆனால், அநியாயங்களைக்கண்டு அதை தட்டிக்கேட்டு, நியாயத்தை காப்பாற்ற நினைக்கும் ஒரு கணனி பொறியிலாளனின் கணனியில் இருந்து நட்சத்திரத்துடன் வெளிவரும், சுப்பர் ஹ_ரோதான் ஓட்டோ மான்.
நீலம் மினுங்கும் மேனியுடன் வந்து இறங்கும் இந்த சுப்பர் ஹ_ரோ, தன்னுடன் இருக்கும் ஸ்ராரின் உதவியுடன், அநியாயக்காரர்களை பந்தாடும் சுவாரகசியமான தொடர்தான் இந்த ஓட்டோமான்.
மினி மான் MINI MAN
தன்னை மற்றவர்களின் கண்களில் இருந்து மறைக்கும் சக்திகொண்ட கைக்கடிகாரத்தின் மூலம், பல சாகசங்களையும், சுவாரகசியங்களையும் புரியும் அதேநேரம், திருடர்கள், அக்கிரமக்காரர்களை பொலிஸாருக்கு பிடித்துக்கொடுக்கும் நபர் பற்றிய சுவாரகசியமான தொடர்தான் மினி மான் தொடர்.
ஜெமினி மான்.
மிகப்பெரிய மொபியா ஹாங்க் ஒன்றை குறிவைத்து செயற்படும் ஒருவன். ஒருவர் மூலம் அசாத்திய சக்தி ஒன்றை பெற்றுக்கொள்கின்றான். தான் விரும்பும் உருவத்தை மனதில் நினைத்து அவன் கைவிரல்களை அசைப்பதன்மூலம் அந்த உருவங்களை எடுத்து அந்த மொபியா ஹாங்கை திக்குமுக்காடச்செய்கின்றான்.
கழுகு, சிங்கம், சிறுத்தை, கறுத்தப்புலி, பாம்பு, என தேவைகள் நிமித்தம் பல உருவங்களை எடுத்து அசத்துகின்றான் அந்த ஜெமினி மான்.
பிளேக் செவிண்.
பூமிக்கு விரோதமான வேற்றுக்கிரகவாசிகள், பறக்கும் தட்டுக்கள் என்பவை தொடர்பான ஆச்சரியமான அதேவேளை பலராலும் மறக்கமுடியாத ஒரு தொடர் பிளேக் செவிண். வேற்றுக்கிரகத்தில் இந்துவரும் பூமிக்கான அச்சுத்தல்களை துணிந்து, அதிரடியாக, அதேநேரம் அசாத்தியமான முறையில் செயற்பட்டு தவிடுபொடியாக்கும் சிறப்பான ஏழு வீரர்கள் கொண்ட குழுவே பிளேக் செவிண்.
மங்கி.
தான் வைத்திருக்கும் மந்திரக்கோல், தனது தற்காப்பு உச்சநிலைப்பயிற்சிமூலம், பல சகாசங்களை நிகழ்த்தி எதிரிகளுக்கு சிம்ம சொற்பனமாக இருக்கும், குரங்கு முகத்தை ஒத்த வீரன் ஒருவனின் கதையே மங்கி. இவனை நேரடியாக வீழ்த்த முடியாத எதிரிகள் இவனை குறுக்குவழியிலும், தற்திர வழியிலும் வீழ்த்த பல சதிவலைகளை விரிப்பதையும், அவற்றிலிருந்து இந்த மங்கி எப்படி வெளியேறுகின்றான் என்பவை போன்ற பல சுவாரகசிமான கட்டங்களை உள்ளடக்கியது இந்த மங்கி தொடர்.
பக்ரோ யெஸ்
அண்டவெளியில் உலாவும் விண்ணூர்தியில் ஒரு ஆராட்சிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள்பற்றிய தொடர். இதில் பக்ரோ யெஸ் என்ற தலைவன்தான் இந்த தொடரின் நாயகன். அண்டவெளியில் அவர்கள் சந்திக்கும் ஆச்சரியங்கள், திகில்கள், சாகசங்கள், என பல அம்சங்கள் அடங்கிய தொடர்தான் பக்ரோ யெஸ். இதில் பிக்கி என வரும் ரோபோ மிகச்சுவாரகசியமாக இரசிக்கப்பட்டது.
லிட்டில் ஹவுஸ் ஒன் த பேபி.
மிஸ்ரர் அண்ட் மிஸ்ஸிஸ் வில்லியம்ஸ் குடும்பத்தினருக்கு மூன்றாவது மகளாக பிறக்கும் சிறுமியின் வரவால் அவர்களின் சிறுவீடு அடையும் சந்தோசம். அவளின் துடுக்குகள், குறும்புகள், அடங்கலாக சுவாரகசியமாகச்செல்லும் குடும்ப தொடர். சிறுவர்களை மிகவும் கவர்ந்த இந்த தொடர் இலங்கையில் மட்டும் இன்றி பல நாடுகளிலும் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டாஷன்
காட்டில் பிறந்து, காட்டு மிருகங்களுடன் வழர்ந்து அவற்றின்மீது பெரும் அன்பு கொண்டதுடன், காட்டின்மீதும் அதிக அன்பு கொண்டு காட்டு மிருகங்களின் பாசைகள் அறிந்து இயற்கையுடன் ஒன்றி வாழ்பவன் டாஷன். அவனுக்கு துணையாக ஸீட்டா என்ற குரங்கு. இப்படி மகிழ்ச்சியாக வாழும் அவன், மனிதர்களின் காட்டுக்குள் அத்துமீறிய பிரவேசங்களால் அடையும் சம்பவங்கள்தான் சுவாரகசியமும், இரசிக்கும் தன்மையும் கொண்ட டாஷன் தொடர்.
மப்பட் ஷோ
மனிதர்களின் கைகளில் உருவங்களை அணிந்து அந்த உருங்கள் பேசுவதுபோன்ற காட்சிகளை நடத்திவந்தமை, நூல்களால் பொம்மைகள் பேசுவதுபோன்ற பொம்மலாட்ட நிகழ்வுகள் என்பன பெரும் வரவேற்பைப்பெற்றது. அந்த நிலையில் பல்வேறு மிருகங்கள் இணைந்த ஒரு குழுவாக அவர்களின் நிகழ்ச்சிகளை வழங்குவது போன்ற ஒரு தொடரே மப்பட் ஷோ என்ற பெயரில் ஒளிபரப்பாகியது.
கஸ்பரோ என்ற ஓணானை தலைவனாகவும், பிஞ்கி என்ற பன்றியை அழகியாகவும் உருவகித்து தொடர்ந்து நடந்த இந்த தொடர் மிகச் சுவாரகிசியமானது.
லெஸி
லெஸி என்று அழைக்கப்பட்ட ஒரு நாயின் சாகசங்கள் கலந்த ஒரு தொடரே லெஸி தொடர். அசாத்திய அறிவும், தன்னை வளர்ப்பவர்களின்மீது பெரும் பாசமும் கொண்ட இந்த நாய் அதன் அறிவினாலும் திறமைகளாலும் சந்திக்கும் ஆபத்துக்களை திறமையாக வெற்றி காண்பதே இந்த தொடரின் சிறப்பம்சம்.
ஹ_ங் பூ
மிக கடுமையான பயிற்சிகளை வழங்கும் ஹ_ங் பூ பயிற்றுவிக்கும் இடத்தில், தனது பயிற்சிகளை முடித்து வெளியேறி வெளி உலகத்திற்கு வரும் ஒருவன் சந்திக்கும் சம்பவங்கள் பற்றிய போர்க்கலை சம்பந்தமான தொடரே ஹ_ங் பூ. ஹ_ங் பூ என்ற ஒரு கலையினை பற்றி முழு இலங்கையும் அறியும் சந்தர்ப்பத்தை இந்த தொடர் ஏற்படுத்திக்கொடுத்தது.
நைக் றைடர்.
இந்த தொலைக்காட்சித் தொடரைப்பற்றி தெரியாதவர்கள் உலகத்திலேயே இருக்கமுடியாது என்ற அளவுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப்பெற்றது இந்த நைக் றைடர் தொடர். தானியங்கி சக்தி பொருந்திய அதேநேரம் குண்டுகளோ எந்த ஆயுதங்களோ துளைக்காத சக்தி பொருந்திய கார் ஒன்றின் சாகசமே இது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தநேரத்தில் சக்கை போடு போட்ட தொலைக்காட்சி தொடராக நைக் றைடரை கூறலாம்.
ரொபின் ஹ_ட்
ரொபின் ஹ_ட் என்ற பெயரே இன்று மிகப்பிரபலமானது. அந்த பெயரே பணம் இருக்கும், சர்வாதிகார முதலைகளிடமிருந்து பணத்தினை பிடுங்கி இல்லாதவர்களுக்கு பகிந்தளிக்கும் நாயகன் என தற்N;பாது பொருளாகிவிட்டது.
இந்த தொடரில் மூன்று ரொபின் ஹ_ட்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தாலும், என்னைக்கவர்ந்தது என்னமோ அந்த முதலாவது ரொபின் ஹ_ட்தான்.
இந்த தொடர்கள் தவிர ஷிப், போர்னி, ப்புளுதண்டர், மோட்டர்பைக் கார்ட், டொக்ரர் கொஸ்பி, சிம்பான்ஸி, விட்டில்மென் பிளனெட் போன்ற தொடர்களும் ஒளிபரப்பப்பட்;டு பலராலும் இரசிக்கப்பட்ட தொடர்களாகும். இன்னும் சில தொடர்கள் பற்றிய நினைவுகள் இருந்தாலும் அதன் பெயர்கள் மறந்துபோய்விட்டது.
அதன் பின்னரான காலங்களில் 1990களின் பிற்பட்ட காலங்களில் “எக்ஸ் பைல்;” மற்றும் ஷீனா போன்ற தொடர்கள் ஒளிபரப்பப்பட்டன. இதில் எக்ஸ் பைல் இன்றும் ஒளிபரப்பாகிவருகின்றது. இதைத்தவிர அன்றைய நாட்களில் மேற்குறிப்பிட்ட சுவாரகசியமும் ஈர்ப்புத் தன்மையும் கொண்ட வேறு தொடர்களை காணமுடியவில்லை.
எனினும் இலங்கையில் அதன் பின்னர் முளைத்த தனியார் தொலைக்காட்சிகளில்
ஷ_னா, அமெரிக்கன் எஸ்.ரி.எவ், அலி மக் பீல், எலியஸ், ருவன்ரி போர் அவர்ஸ், பே வோர்ச், போன்ற மிகச்சில சுவாரகசியமான தொடர்களே ஒளிபரப்பப்பட்டன.
இலங்கையில் ரூபவாஹினி தொலைக்காட்சியின் ஆரம்பகாலக்கட்டங்களில், வேறு எந்த ஒளிபரப்பு நிலையங்களின் தொல்லைகளும் இன்றி, அமைதியாக காத்திருந்து எம் இளவயதுகளில் பார்த்து இரசித்த அந்த சுவையான தருணங்களும், அந்த நகழ்ச்சிகளும் இன்றும் நனைத்துப்பார்த்து இரசிக்கக்கூடியவைகளே.
அன்றைய காலங்களில் முதல்நாள் அந்த தொடர்களை பார்த்துவிட்டு மறுநாள் பாடசாலை சென்று சகநண்பர்களுடன் அந்த தொடர்பற்றிய சாகசங்களையும், நிகழ்வுகளையும் சொல்லி ஆனந்தம் கொள்ளும் பொழுதுகள் என்றும் மறந்துவிடமுடியாத வாழ்வின் அருமையான தருணங்களே.
அந்த தொடர் நிகழும் தருணத்தின் மின் சாரம் நின்றுவிட்டாலோ, அல்லது அந்த நேரங்களில் விழாக்கள், கோவில்களுக்கு கட்டாயம் செல்லவேண்டி இருந்தாலோ அன்று அழுது அடம்பிடித்த காலங்கள்…அப்பா…நினைத்தாலே இனிக்கும்..
நண்பர்களே இந்த அனுபவங்களும் இந்த தொடர்களும் உங்கள் மனதுகளிலும் நிச்சயம் இருக்கும் என நம்புகின்றேன். உண்மைதானே????
15 comments:
பழைய ஞாபகங்களை கிண்டிவிட்டீர்கள்
பழைய ஞாபகங்களை கிண்டிவிட்டீர்கள்
சரியாக சொன்ன்னீர்கள் ஜனா. அப்போது ஒளிபரப்பு ஆரம்பிக்கும் முன்னரே காட்டூன் காண காத்துக்கிடக்கும் சிரார் நாம். இப்போ எதைப்பார்ப்பது? எதை விடுவது?
அப்பா என்மனதில் என்ன உள்ளதோ... அன்று என் இரசனைகள் எப்படி இருந்ததோ...நம்பமுடியவில்லையே...நான் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படியே எழுதியுள்ளீர்கள்...
பழைய நினைவுகளை தூண்டிவிட்டு, மறந்துபோன பல நினைவுகளை நினைவுபடுத்தி, அசத்திட்டீங்கபோங்க...
//பழைய ஞாபகங்களை கிண்டிவிட்டீர்கள்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் "என்ன கொடுமை சார்" பழைய நினைவுகள் கிழறப்பட்டதன் இனிமையினை அந்தக்காலங்களை நினைத்து மீண்டும் காட்சட்டை பருவங்களுக்கு சென்றிருப்பீர்கள்..என நினைக்கின்றேன்.
தேவதாசன் dilshaad said...
சரியாக சொன்ன்னீர்கள் ஜனா. அப்போது ஒளிபரப்பு ஆரம்பிக்கும் முன்னரே காட்டூன் காண காத்துக்கிடக்கும் சிரார் நாம். இப்போ எதைப்பார்ப்பது? எதை விடுவது?
---------
தங்கள் வரவுக்கு முதலில் எனது வரவேற்பையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் டில்ஷாட் (தேவதாசன்-" அந்தப்பார்வதி யாரோ"?? )
நான் சொல்லாத ஒரு விடயத்தை நினைவு படுத்தினீர்கள்..ஆம் கார்ட்ரூன்கள், குறிப்பாக ரொம் அன்ட் ஜெர்ரி, வூட் பெக்கர், ரோட் ஸ்பீடர், கீ -மான், கோர் கவுஸ், ஸ்பைடமான், என்று எத்தனை தரமான கார்ட்ரூன்கள் இல்லையா?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தரம் கூட வேண்டும்...ஆனால் குறைவதுபோன்றே தோன்றுகின்றது.
பாழாய்ப்போன இந்திய மெகா தொடர்களை பார்த்து, யதார்த்தவியலின் தத்துவங்களை அப்படியே காட்டிய சிங்கள நாடகங்கள் கூட அந்த மாஜைக்குள் சென்றுகொண்டிருப்பது வருந்தத்தக்கதே.
Abarna said...
அப்பா என்மனதில் என்ன உள்ளதோ... அன்று என் இரசனைகள் எப்படி இருந்ததோ...நம்பமுடியவில்லையே...நான் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படியே எழுதியுள்ளீர்கள்...
------------
நன்றி அபர்ணா...சிறுவர்களின் மனது ஈர்ப்புத்தன்மைகளைக்கண்டு இலகிக்கத்தக்கது. பசுமையான நினைவுகளையும், தம்மை மகிழ்வு படுத்திய நிகழ்வுகளையும் மீண்டும் எதிர்பார்ப்பது, அசைபோடுவது. இன்று நாம் சிறுவர் என்ற அங்கீகாரத்தையும், சுகமான பொழுதுகளையும் தொலைத்துவிட்டு நிற்கின்றோம். அந்தப்பொழுதுகளில் மனதை ஈர்க்கும் அந்த தொடர்களால் சிறுவர்களான நாங்கள் ஈர்ககப்பட்டு இலகித்துப்போனது உண்மையே...ஒரே உணர்வுகளே இன்றும் அன்றைய சிறுவர்கள் அனைவருக்கம் இருக்கும்...இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை...நாம் நினைப்பதுபோலதான் அன்றைய சிறுவர்கள் அத்தனை பேரும் நினைத்திருப்பார்கள்.
(அடுத்த ஒரு முக்கியமான விடயம்.. தமது வயதினை வெளிப்படுத்த தயங்கும் பெண்கள், தாம் பிறந்த ஆண்டுகளை மறைத்துவைத்திருக்கும் பெண்கள், இப்படி அன்றைய லகிப்புகளின்மூலம் அன்று நாங்கள் இந்த வயதை உடையவர்கள் என்று தெரிவித்து தமது வயதுகளை காட்டிகொடுக்கின்றனரே)
Sharankan said...
பழைய நினைவுகளை தூண்டிவிட்டு, மறந்துபோன பல நினைவுகளை நினைவுபடுத்தி, அசத்திட்டீங்கபோங்க...
----------
நன்றி சாரங்கன்.
இறந்த காலத்தின் சுகங்கள்..நினைத்தாலே இனிக்கும் தானே?
old id gold
ரஹ்மான் said...
old id gold
----------
And Sweet memories
MACGYVER miss pannitingae ..thalaiva..ennado innoru favourate ..seriala irunthuch..
http://www.youtube.com/watch?v=3w-oDZSLUrY
மன்னிக்கவும் இளையபாரத்...உண்மையில் நினைவில் நின்றது... பெயர் நினைவில் வரவில்லை செவ்வாய்க்கிழமைகளில் ஒளிபரப்பட்ட தொடர் MACGYVER.
மறக்க முடியாத காலங்கள் அவை.
மெகைவர், ஸ்ட்ரீட்ரோக், டினஸ்டி(வயது வந்தவர்கள் மட்டும் பார்த்தது), எயார்வுல்ப் போன்ற தொடர்கள் உங்களால் விடுபட்டவைகள். அப்புறம் சிங்களத்தில் டப் செய்யப்பட்ட ஹாவா ஹரி ஹாவா, கலிவர், தொஸ்தர ஹொந்த ஹித, பிஸ்சு புசா போன்ற காட்டுன்கள் பார்க்க தவம் இருந்த காலங்கள் அவை.
அந்த காலத்தில் தமிழ் பாடல்கள் பார்க்க இருந்த ஒரே நிகழ்ச்சி பொன் மாலை பொழுது பார்க்க இருந்த ஆர்வம், நாள் முழுதும் காட்டும் சினிமா பாடல்களை காட்டினாலும் இல்லை. ரொபின் ஹுட் நைட் ரைடர் ஸ்ரீட்ரோக் ப்லாஷ் பார்க்க நான் விளையாட போகாமல் இருந்த நாட்கள் அவை.
பசுமையான நினைவரலகளை நீட்டி சென்றதற்கு உணர்வு புர்வமான நன்றிகள் தோழரே!..
மிக்க நன்றி நண்பர் யோகா அவர்களே..
விடுபட்ட பல நிகழ்சிகளை தொட்டுக்காட்டினீர்கள். அடுத்து இன்னும் ஒரு விடயம் ஆம்...தமிழ்த்திரைப்படப்பாடல் காட்சிகளுக்காக ஒளிபரப்பட்ட நிகழ்ச்சிகள் பொழுதுதான். அதேவேளை 1987-88களில் வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பாகிய எஸ்வி.சேகரின் நகைச்சசுவை நாடகத்தின் பெயர்தான் வணக்கோலங்கள். அந்த நாடகம் கூட பலராலும் தவறாமல் ஆவலுடன் பார்க்கப்பட்ட ஒரு நாடகம்.
Post a Comment