58ஆவது முறையாக 2009ஆம் அண்டிற்கான பிரபஞ்ச அழகிப்போட்டிகளின் இறுதிபபோட்டி பஹமஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள அத்லான்டிக் பரடைஸ் தீவில் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஓகஸ்ட் மாதம் 2009ஆம் திகதியான நேற்று இடம்பெற்றது. 83 நாடுகளைச்சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இந்தப்போட்டிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்று தற்போது இறுதிப்போட்டியும் முடிவடைந்துள்ளது.
83 நாடுகள் கலந்துகொண்ட இந்தப்போட்டிகளில் இம்முறை சிறப்பான விடயங்கள் என்வென்றால், ஆரம்ப நிலை போட்டிகளே பல தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டமைதான். இந்த போட்டிகளில் கலந்துகொள்வதென அறிவித்த சிறி லங்கா, டென்மார்க், கசஹஸ்தான், வட மரியானா, பெர்முடா ஆகிய நாடுகள் அடங்கலாக எட்டு நாடுகள் இந்தப்போட்டிகளில் இருந்து பின்வாங்கிக்கொண்டன.
இந்தப்போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு மிஸ் பியூர்டோரிகா, மிஸ் ஐஸ்லாந்து, மிஸ் அல்பேனியா, மிஸ் செக், மிஸ் பெல்ஜியம், மிஸ் சுவீடன், மிஸ் கொசாவோ, மிஸ் அவுஜ்ரேலியா, மிஸ் பிரான்ஸ், மிஸ் சுவிட்ஸர்லாந்த், மிஸ் அமெரிக்கா, மிஸ் வெனிசூலா, மிஸ் தென் ஆபிரிக்கா, மிஸ் டொமினிக்கன், மிஸ் குரோஷியா ஆகிய 15 அழகிகள் தகுதி பெற்றனர். இந்திய இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 15 பேரும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா அழகி ஸ்டெபனியா பெனாண்டஸ் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவுக்கே மிஸ் யூனிவர்ஸ் பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெபானியாவுக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசூலாவின் டயானா மென்டெஸ் கிரீடம் சூட்டினார்.
அழகிப் பட்டங்களை வெல்வதில் வெனிசூலா புதிய சாதனையும் படைத்துள்ளது. இதுவரை வெனிசூலா ஐந்து மிஸ் யூனிவர்ஸ் பட்டங்களை வென்றுள்ளது. இதுதவிர ஐந்து மிஸ் வேர்ள்ட், நான்கு மிஸ் இன்டர்நேஷனல் பட்டங்களையும் அது வென்றுள்ளது. வேறு எந்த நாட்டு அழகியும் இவ்வளவு அதிக பட்டங்களை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மிஸ் யுனிவர்ஸ் பெனான்டஸ் ஸ்டெபானியா, ரஷ்ய, உக்ரைனிய, காலிசிய, போலந்து நாடுகளின் பின்னணியைக் கொண்டவர். அவரது தாயார் நடியா கிருபிஜ் ஹோலோஜாத் மற்றும் தந்தை கார்லோஸ் பெர்னாண்டஸ் ஆவர். 18 வயதாகும் ஸ்டெபானியா கன்னி ராசியைச் சேர்ந்தவர். நீச்சல், டென்னிஸ் இவரது பொழுதுபோக்குகள் ஆகும். மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் கடைசி ஐந்து இடங்களுக்கு ஸ்டெபானியா தவிர மிஸ் டொமினிக்கன், மிஸ் அவுஸ்ரேலியா, மிஸ் பியூர்டாரிகோ, மிஸ் கொசாவோ ஆகியோர் முன்னேறினர்.
விசேட விருதுகளின் படி, முதலாவது ரன்னர்ஸ் அப் விருது மிஸ் டொமினிக்கன் குடியரசுக்கும், இரண்டாவது ரன்னர்ஸ் அப் மிஸ் கொசோவாவுக்கும், சிறந்த புகைப்பட அழகி விருது மிஸ் தாய்லான்டுக்கும், சிறந்த உடலசைவு விருது மிஸ் சீனாவுக்கம், வழங்கப்பட்டள்ளது.
இந்தப்போட்டிகளின் காட்சிகள் சில…
3 comments:
36,28,36 கொல்லுதே...அங்கங்கள் எங்கெங்கும் தங்கம்போல் மின்னுதே
அடடா...உலகில் மிக விலையுயர்ந்த அழகுசாதனப்பொருட்களை பயன்படுத்தும் பெண்கள் வெனிசூலாப்பெண்களே என அண்மையில் ஒரு ஆங்கில சஞ்சிகையில் படித்தேன். அந்த தகவலுக்கும் அடுத்தடுத்து வெனிசூலாப்பெண்களே அழகிகளாக தெரிவாவதற்கும் நிறைய தொடர்புகள் இருக்குபோலதான் இருக்கு.
அழகுதேவதைகளின் அணிவகுப்பு
இலவச தொலைக்காட்சியில்
அழுகிய அரிசியுடன் மாரடிப்பு
பசிவந்ததால் அனைத்தும் போய்விடவில்லை
முழுமையாக இரசித்தேன் அந்த தேவதைகளை
Post a Comment