ரஜினி பற்றி வபரித்துக்கொண்டிருப்பது பாலைவனத்தில் நண்பகலில் நின்று டோச் அடிப்பதுக்கு ஒப்பானது. அவர் ஒரு சிறந்தவர், பண்பானவர், பணிவானவர், அன்பானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்.
இருந்த போதிலும் என்னைப்போல கமல் ரசிகர்களிடம் ரஜினி படங்கள் பற்றி எழுது என்பது ஒரு வகையில் ஆரோக்கியமானதுதான். ஏன் என்றால் பக்கச்சார்பற்ற தரமான ரஜினி படங்கள் பற்றிய ஒரு பார்வையை கொண்டுவந்துவிடலாம்.
அந்த வகையில் நண்பர் பதிவர் லோஷன் இந்த பதிவு பந்தை என்னிடம் தட்டி விட்டுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க… இங்கே..இதோ நான் ரஜினியை ரசித்த “சுப்பர் ஸ்ரார்ஸ் சுப்பர் 10”
புவனா ஒரு கேள்விக்குறி
ரஜினியின் படங்களில் விழியிலே விழுந்தது உயிரிலே கலந்தது என இந்த படத்தை சொல்லிக்கொள்ளலாம். 1977ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரஜினியை புதிய திருப்பத்திற்கு கொண்டு சென்ற படமாக கருதிக்கொள்ளலாம்.
மகரிஷியின் கதைக்கு திரைக்கதையினை பஞ்சு அருணாச்சலம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் இதுவாகும். இவர்களின் கூட்டணியில் ரஜினி நடித்த முதல்படம் இது. பின்னர் இதேகூட்டணியினரே ரஜினியை உச்சத்திற்கு உயர்த்திய ஏணிகளில் முதன்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துணி, புடவைகள் வாங்கி விற்கும் பாத்திரங்களாக சிவகுமாரும், ரஜினியும் நடித்திருப்பார்கள். இதில் சிவகுமார் பெண்கள் விடையத்தில் மோசம் செய்பவராக மாறுபட்ட பாத்திரத்தில் நடித்திருப்பார். தன் காதலியை இழந்து அந்த சோகத்துடன் வாழ்ந்து, இறுதிவரை போராடி சிவகுமாரால் ஏமாற்றப்பட்ட சுமித்திராவுக்கு இறுதிவரை ஒரு பாதுகாவலனாகவே இருந்து கடைசியில் உயிரைவிட்டு மனங்களில் வாழ்ந்துகாட்டினார் ரஜினி.
இளமை ஊஞ்சல் ஆடுது
ரஜினி, கமல் இணைந்து நடித்த படங்களில் இரண்டுபேரின் இளமையும் ஊஞ்சலாடிய ஒரு திரைப்படம். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீதர் இரண்டுபேரையும் வைத்து இயக்கிய திரைப்படம் இது.
பணக்காரக்குடும்பத்தவராக வரும் ரஜினியும், ரஜினியின் பணக்காரத்தாய்க்கு இன்னும் ஒரு மகனாகவே கருதி பார்க்கப்படும் கமலும், இடையில் ஸ்ரீ பிரியாவும், வர பல சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் எதிர்பாராத முடிவுகளுடன் பயனிக்கும் அற்புதமான ஒரு கதை இந்த திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் பணக்காரனானாலும் மிகுந்த ஒழுக்கமுள்ளவனாகவும், ஒரு கனவானாகவும் ரஜினி நடித்திருப்பார். இந்த திரைப்படம் ரஜினி கமல் ஆகியோரின் இளமை ததும்பிய காலமான 1978ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மயுத்தம்
1979 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.சி. சக்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தர்மயுத்தம். ரஜினி, ஸ்ரீ தேவி இணைவில் முன்பாதி கலகலப்பாகவும், பின் பாதி சோகமாகம் நிறைந்ததாகவும் உள்ள திரைப்படம்.
அமாவாசை தினங்களில் முரட்டு சக்தி ஒன்று ரஜினிக்கு வருவதும், தன் தங்கைமேல் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்துள்ள ரஜினிக்கு, பிளக் ரோசஸ் என்ற கும்பலால் தன் தங்கையை இழக்க நேரிடும் சந்தர்ப்பமும், அதன் பின்னர் அவர்களை அழிப்பதற்கான அவரது தர்மயுத்தமும் ஒரு கோர்வையாக பயணிக்கும்.
அமாவாசை தினங்களில் ரஜினியின் முரட்டு சக்தியை வெளிப்படுத்தும் அவரது நடிப்பு, அந்த முரட்டுத்தனத்தை வெளிப்படுத்த அவர் உச்சமாக நடிக்கும் தன்மை, முகவெளிப்பாடுகள் அருமை.
நெற்றிக்கண்
ராமனின் தந்தை தசரதன்தானே! என்ற தத்துவத்தை வேறு ஒரு கோணத்தில் கொண்டுசென்ற ஒரு திரைப்படம். தந்தை மகனாக முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் ரஜினி இரட்டைவேடம் போட்ட திரைப்படங்களில் முதன்மையானது என்றுகூடச்சொல்லிவிடலாம்.
1981ஆம் ஆண்டு எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நெற்றிக்கண்.
பார்க்கும் பெண்களை எல்லாம் தன் கட்டிலுக்கு கொண்டுவர எண்ணும் தந்தையும், வாழும் வாழ்க்கை அது ஒருத்திக்குத்தான், காதலும் கற்பு நெறி வாழ்வதுதான் என்று ஒருதிக்காவே வாழ நினைக்கும் மகனும், இதற்கிடையில் தந்தையை திருத்த நினைக்கும் தனையனுக்கும் தந்தைக்கும் இடையிலான போராட்டங்கள். சுபமான இறுதி முடிவு என அற்புதமான திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் “ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்” என்ற ஒரு பாடலில் நாயகி மேனகாவும், மகன் ரஜினியும் நடித்திருப்பார்கள், மகன் பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துவதாக இந்தப்பாடல் காட்சி அமைந்திருக்கும் எந்த இடத்தில்க்கூட நாயகனும், நாயகியும் தொட்டுக்கொள்ளாமலேயே பாடல் முழுவதும் வருவது இயக்குனரின் டச்.
புதுக் கவிதை
ரஜினியை வைத்து எடுக்கபட்ட காதல் படங்களில் ஒரு புதுக்கவிதை இந்தத்திரைப்படம். ரஜினி, ஜோதி ஆகியோர் ஒரு உருக்கமான காதலர்கள். விதிவசத்தால் ஜோதிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் ஆகின்றது. காதலில் தோல்வியுற்ற ரஜினி உடைந்து அந்த காதல் ரணங்களை மறந்து வாழ எத்தனிக்கின்றார். மீண்டும் ஜோதியை ஒரு விதவையாகச்சந்தித்து, வித்தியாசமான முடிவுடன் திரைப்படம் முடிகின்றது. ஸ்ரைல், அக்ஸன், என்று பார்த்த ரஜினி இதில் காணமற்போயிருப்பார். மிக மெல்லிய இதயமுள்ள, காதலிலே தோற்ற ஒரு சராசரி இளைஞன்போல அருமையாக நடித்திருப்பார் ரஜினி.
எங்கேயோ கேட்டகுரல்
அம்பிகா, ராதா, என்ற தமிழ்சினிமா சகோதரிகளுடன் ரஜினி நடித்த ஒரு வித்தியாசமான, அதேவேளை நடிப்புக்கு அதிகவேலை இருந்த திரைப்படம் “எங்கேயோ கேட்ட குரல்” மிக அற்புதமான அந்த திரைப்படத்தில், சாந்தமான முகத்துடன், மிகச்சாந்தமான நடிப்பால், அனைவரினதும் கவனத்தை ஈர்ந்திருப்பார் ரஜினி.
தனக்கு துரோகம் செய்தவள் மூத்த மனைவி என்று ஊரே அவளை ஒதுக்கிவைத்த போது, இறுதியில் அவளது இறப்பிற்கு அதே ஊரே எதிர்த்தபேவாதும், தன் கடமைகளை முடித்து, ஊரைவிட்டே வெளியேறுவார் ரஜினி. இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ரஜினியின் நடிப்பும், முகபாவமும் ஒவ்வொரு கதைகளை பேசும். நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினியின் மகளாக இந்த திரைப்படத்தில்த்தான் அறிமுகமானார்.
அன்தா ஹானூன்.
ரஜினி நடித்த ஹிந்திப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு திரைப்படம். தனது குடும்பத்தினரை கொன்றவர்களை பழிவாங்க வலைவிரித்து ரஜினி வேட்டையாடும் ஒரு படம். இதில் ரஜினியின் அக்காவாக ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்ரராக ஹேமா மாலினியும், கொலைக்கும்பலால் பழிதீர்க்கப்பட்ட முன்னர் பொலீஸ் காரனாக அமிதாப் பச்சனும் நடித்திருப்பார்கள்.
இந்த திரைப்படம்தான் தமிழில் “சட்டம் ஒரு இருட்டரை” என்ற பெயரில் விஜய்காந்த் நடித்திருந்த படம்.
இதில் ரஜினியின் கதாநாயகியாக ரீனா ரோய் நடித்திருந்தார். அத்தோடு இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், அம்ரிஸ்பூரி, தர்மேந்திரா, மாதவி, என பெரிய நடிகர் பட்டாளமே கொளரவ பாத்திரங்களில் நடித்திருந்தமைதான்.
அன்புள்ள ரஜினிகாந்த்
பெயரைப்போலவே அன்பை போதிக்கும் படம். குழந்தை மீனாவைச்சுற்றி அமைக்கப்படும் ஒரு கதை அமைப்பில் அன்பானவராகவே வரும் ரஜினி, பல இடங்களில் மனதில் சிம்மாம்போட்டு உட்காருகின்றார்.
தாய்க்குலங்கள், பெரியவர்களுக்கு ரஜினிமேல், பெரும் அன்பையும், மதிப்பையும் உருவாக்கிவிட்ட படம் என்றுகூடச்சொல்லலாம். இந்த திரைப்படம்போல அன்புள்ள….. என்று வேறு எந்த நடிகரைப்போட்டு எடுத்திருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு ஒன்றிப்போ, யதார்த்தமோ வேறு யாரிலும் கிடைத்திராது என்பது மறுக்கமுடியாத உண்மை. “கருணை இல்லமே” என்ற பாடல் இப்போதும் கண்களுக்குள் நீரைக்கொண்டுவந்துவிடுகின்றது.
பிளட் ஸ்ரோன்
ஜேம்ஸ்போன்ட் உட்பட பல ஆங்கில திரைப்படங்களை தயாரித்த இந்தியரான அசோக் அமிர்தராஜ் தயாரிப்பில் டி.எச்.லிட்டில் இயக்கத்தில் 1988ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத்திரைப்படம்தான் பிளட் ஸ்ரோன்.
இதில் ஸ்ரிம்லி, அனா நிக்கலொஸ் ஆகியோருடன் ரஜினி இணைந்து நடித்திருப்பார்.
12ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த இந்திய அரசன் ஒருவன், கடவுளின் வரமாக இந்த கல்லை வைத்திருக்கின்றான். பின்னர் அந்த சாம்ராஜ்யங்கள் அழிந்து 18ஆம் நூற்றாண்டில் அது பிரித்தானியரால் கொண்டு செல்லப்படுகின்றது.
பின்னர் அது அங்கிருந்து கடத்தப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றது. இதற்குள் தற்செயலாக அதில் சிக்கிக்கொள்ளும் ஸ்ரிம்லி, அனா நிக்கலொஸ் ஜோடிகள், பின்னர் டக்ஸி ரைவரான ரஜினியின் காரில் ஏறுவதும் ரஜினியின் காரில் அந்தக்கல் தவறுவதும், பின்னர் கொள்ளையர்களுக்கும் இந்த மூவருக்கும் இடையலான போராட்டமுமமாக இந்தக்கதை நகர்கின்றது.
சிவா.
ரஜினி, ரகுவரன் இணைந்த திரைப்படம்; என்றால் அதைப்பற்றி சொல்லத்தேவை இல்லை அந்த அளவுக்கு இருவருக்குமிடையலான இரசாயனவியல் நல்லா வேலை செய்யும். சிறுவயதில் நண்பர்களாக இருக்கும் இருவர் பிரிந்து, பின்னர் இணைவதான ஒரு திரைப்படம். ஆரம்பம் முதல் இறுதிவரை கலகலப்பாக இருக்கும் திரைக்கதை அமைப்பு பிரமாதம்.
“இரு விழியின் வழியில் தானாய் வந்து போன ஒரு திரைப்படம்”
*** விழியிலே தொடங்கி விழியிலே முடிச்சிருக்கோம்ல!!
சரி.. லோஷன் நம்மிடம் தட்டிவிட்ட இந்தப்பந்தை நாமளும் யாரிடமாவது தட்டிவிடணுமெல்ல…
ஜீ – என்னைப்போலவே கமல் ரசிகன் என்றாலும் ரஜினியையும் ரசிப்பவர்.
சிதறல்கள் ரமேஸ் - உணர்வுகளை பிழியும் இவரிடமிருந்து உணர்வான ரஜினி படங்கள் வெளிப்படலாம்.
style="color: rgb(0, 0, 0); -webkit-text-decorations-in-effect: none; ">அகசியம் வரோ – தான் ரசித்தவற்றை மிகவும் நேர்தியாக கூறும் திறமை கொண்டவர்.
14 comments:
ஃஃஃஃஃஃஅகசியம் வரோ – தான் ரசித்தவற்றை மிகவும் நேர்தியாக கூறும் திறமை கொண்டவர்ஃஃஃஃஃ
கமல் கோயில் அதைச் சொன்னதற்காக தானே....
அருமையாக தங்களின் ரசனை வட்டத்தின் நீட்சியை காட்டியுள்ளிர்கள் நன்றி
ஃஃஃஃஃபிளட் ஸ்ரோன்ஃஃஃஃஃ
ரஜனி ரசிகருக்கே அதிகம் கவராத படம் என நினைக்கிறேன்... அதில் பிடித்ததை குறிப்பாகச் சொன்னால் நானும் திருப்பி ஒரு தடவை பார்க்கலாமென்றிருக்கிறேன்...
ம.தி.சுதா said...
கமல் கோயில் அதைச் சொன்னதற்காக தானே...//
இப்பிடியெல்லாம் நோட் பண்ணுறதா? சுடுசோறு சுடு சோறு தான்..
நல்ல தெரிவுகள் ஜனா அண்ணா!
ஆகா! நானுமா!!! :-)
நல்ல தெரிவுகள்தான் ஜனா அண்ணா.
வாவ் .
தெரிவுகள் நல்லா இருக்கு.
நானும் கமல் விக்ரம் ரசிகன்.
முயற்சிக்கிறேன் உங்களைப்போல உணர்வு பீறிட்டு வராது.
தெரிவுகள் நல்லா இருக்கு.
நானும் கமல் விக்ரம் ரசிகன்.
முயற்சிக்கிறேன் உங்களைப்போல உணர்வு பீறிட்டு வராது.
நல்ல தெரிவுகள் super star
ரஜினியின் டாப் 10 படங்கள்
http://shayan2613.blogspot.com/2010/12/10.html
நல்ல தெரிவுகள்
அருமை..
நன்றி..
அஞ்சலோட்டத்தைக் கொண்டு செல்வதற்கு நன்றிகள்..
வித்தியாசமான தெரிவுகள். என் தெரிவுகளோடு இடை வெட்டக் கூடாதென்று இப்படியோ? :)
சிவா,தர்ம யுத்தம், ப்ளட் ஸ்டோன் நான் எதிர்பார்க்கவில்லை.
அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் - அருமையான தெரிவுகள் :)
அந்த ஹிந்திப் படம் பார்க்கவேண்டும்.
நான் பார்க்காத பல படங்களைப் பட்டியலிட்டுள்ளீர்கள் ஜனா அண்ணா.. பார்த்திருவம்.. :)
Post a Comment