Tuesday, December 21, 2010

ஹொக்ரெயில்.- 21.12.2010

பதிவர் கிரிக்கட்போட்டியும், பதிவர் சந்திப்பும்.

கடந்த சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் என்பன மிகவும் சந்தோசமான நாட்கள் என்றே கூறிக்கொள்ளவேண்டும். சனிக்கிழமை இலங்கை தமிழ் பதிவர்கள் ஒன்று கூடி கிரிக்கட் போட்டியொன்றை வெற்றிகரமாகவும், குதூகலமாகவும் நடத்தி முடித்த அதேவேளை, மறுநாள் திட்டமிடப்பட்டபடி சிறப்பாகவே பதிவர் சந்திப்பும் இடம்பெற்று முடிவடைந்ததுமே ஆகும்.
இதற்கு முதற்கண் ஏற்பாட்டுக்குழுவினருக்கு அனைத்து பதிவர்கள், பதிவுலகம் சார்பில் விசேடமான நன்றிகள்.
எழுத்துக்களால் சந்தித்துக்கொண்ட பலர் நேரடியாக சந்தித்து தமது உறவுகளை மேலும் வலுச்சேர்க்கவும், ஆணித்தரமான நட்புக்களை நிலை நிறுத்திக்கொள்ளவும் இவ்வாறன சந்திப்புக்கள் ஏதுவாக அமைந்துள்ளன என்பன நிரூபிக்கப்பட்டுவிட்டது.
பல்வேறு துறை சார்ந்தவர்களும் வலையுலக எழுத்துக்கள் என்ற புள்ளியில் ஒன்றிணைந்து நட்பு பாராட்டுவது மனதிற்கு மிகவும் சந்தோசமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் உள்ளது என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளும் ஒருவிடயமாகும்.
இந்த சந்திப்புக்கள் மூலம் இலங்கை பதிவுலகம் புதியதொரு பாதையில் வீறு கொண்டு எழும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

இந்திய திரை நட்சத்திரங்களின் பிரமாண்ட கிரிக்கட்போட்டி.

கிட்டத்தட்ட ஐ.பி.எல் ரேஞ்சிற்கு!! ஒரு கேளிக்கையான சினிமா நட்சத்தரிரங்கள் பங்குகொள்ளும் கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றை நடத்த இந்திய கிரிக்கட் நிறுவனங்கள் சினிமா சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் புத்தாண்டின் முதல் மாதத்தில் இந்தப்போட்டிகளை நடத்த முயற்சிகள் பெருமளவில் இடம்பெறுவதாகவும் செய்திகள் வருகின்றன.
குறிப்பாக இது தொடர்பாக இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள திரையுலகத்தினருக்கு இந்த அழைப்புக்கள் கிடைத்துள்ளன எனவும், இதில் தமிழ் சினிமா சங்கம் கலந்துகொள்வதென அறிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
“தமிழ் சுப்பர்ஸ்ரார்ஸ்” என்ற பெருடன் தமிழ் சினிமா அணியினர் இந்தப்போட்டியில் கலந்துகொள்வர் எனவும், குறிப்பாக ஜெயம்ரவி, கார்த்தி, ஜீவா, விக்ராந்த், ஆர்யா, ஷாம் போன்ற இளைஞர் நட்சத்திரங்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும், அதேவேளை பெரும்பாலும் இந்த அணிக்கு நடிகர் சூர்யா தலைமைதாங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தபோட்டிகளுக்கு பல முன்னணி விளம்பர நிறுவனங்கள் அனுசரணை வழங்கத்தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ இதை இரசிக்கவும் பெரிய கூட்டம் உள்ளது என்பதை மறுக்கமுடியாது. அதேவேளை படங்கள் தான் ஒழுங்காக ஓடவில்லை கிரிக்கட்டாவது ஒழுங்காக ஆடுவார்களா? என்பதுபோன்ற கேள்விகளும் கிண்டல்களாக ஒலிக்கத்தொடங்கிவிட்டன.

நீங்கப்பட்டது கமலின் மன்மதன் அம்பு கவிதைப்பாடல்!!

கமல் ஹாசன் எழுதி “மன்மதன் அம்பு” திரைப்படத்தில் வரும் காட்சியாக இருந்த
“கண்ணோடு கண்ணை கலந்தாளென்றாள்” என்ற பாடலை தற்போது படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
பாடல்கள் வெளியாகியதில் இருந்தே ஒருவித சர்ச்சையினை இந்தக் கவிதைப்பாடல் உருவாக்கியது. இதை பலர் வரவேற்று இரசித்ததையும், சிலர் கடுப்பாகி எதிர்த்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
விரசம் கக்கும் வரிகள், இந்து மதத்தினரை புண்படுத்தும் வரிகள் கொண்டுள்ளது இது என இந்து மக்கள் கட்சியினர் போர்க்கொடி தூக்கினர்.
இருந்தபோதிலும் இந்தப்பாடலுக்கு தணிக்கை குழு அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் எதிர்வரும் 24ஆம் நாள் இந்த திரைப்படம் வெளிவர இருக்கும் நேரத்தில் தற்போது இந்த கவிதைப்பாடல் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கமல் ஹாசன் நேற்று அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். அதில் தாம் என்றும் பகுத்தறிவு வாதியே என்பதை குறிப்பட்டுள்ள அவர், இதே தமது சொந்த நிறுவனம் தயாரித்த படம் என்றால் இந்தப்பாடலை நீக்குதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை எனவும், இருந்தபோதிலும் இது ரெட் ஜெயன்ட் மூவிஸின் படம் என்பதாலும், தான் பகுத்தறிவு வாதி என்றபோதிலும், இவற்றின் நம்பிக்கை உள்ள பலரின் மனங்களை தாம் ஒருபோதும் புண்படுத்த எண்ணியது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய குறும்படம்

இவள் பெயரும் தமிழிச்சிதான்….

அர்த்தங்கள் புரியமல்
அந்தரித்த நாட்கள்..
இடம் மறால்கள்கூட
இடக்கரடக்கல் ஆகியபோதும்
அர்த்தம்புரியா மொழிகளின்
அரவணைப்பினை நாடியபோதும்
தாய் நாட்டின் தாகம்
கழுத்தை நெரித்து அடக்கப்பட்டபோதும்
குடியுரிமைக்கான பொய்கள்
குடியில் மெய்யாகியபோதும்
சுகம் என்னும் போலிவாழ்க்கையுடன்
சுகத்தினுள் அவலமாக கரைகின்றாள்
இவள் பெயரும் தமிழிச்சிதான்.
-ஒரு கவிதை முயற்சிதான்

நரேந்திரனின் வினோத வழக்கு

அனேகமாவர்களுக்கு தெரியும் இது சுஜாதாவின் ஒரு படைப்பு. எத்தனையோ நாள் கேள்விப்பட்டு நேற்று நூலகத்தில் எடுத்து படித்துக்கொண்டிருக்கின்றேன். படு சுவாரகசியமாகச்செல்கின்றது.
முன்பு, நடிகர் ராஜீவ், வை.ஜி மகேந்திரன் நடித்த ஒரு தொலைக்காட்சி நாடகத்தின் காட்சிகள் படிக்கும்போது கொஞ்சம் கொஞ்சம் நினைவுக்கு வருகின்றது.
பின்னர் வலையில் தேடியபோதும் மின் நூல் வடிவில் இந்த புத்தகம் உள்ளது தெரிந்தது. உங்களுக்கு பயன்படுமே.

சர்தாஜி ஜோக்.
கணனி ஒன்றை வாங்கி குறிப்பாக எம்.எஸ்.ஒபிஸ் பாவித்துவரும் சர்தாஜி கணனியையும் அதன் நிகழ்வுகளையும் ஆராய்ந்து பில்ஹேட்சுக்கு எழுதிய ஒரு கடிதம்.

Dear Mr Bill Gates,

This letter is from Banta Singh from Punjab. We have bought a
computer for our home and we found problems, which I want to bring to
your notice.

1. After connecting to internet we planned to open e-mail account and
whenever we fill the form in Hotmail in the password column, only ****** appears, but in the rest of the fields whatever we typed appears, but we face this problem only in password field.

We checked with hardware vendor Santa Singh and he said that there is no problem in keyboard. Because of this we open the e-mail account with password *****.

I request you to check this as we ourselves do not know what the
password is.

2. We are unable to enter anything after we click the 'shut down '
button.

3. There is a button 'start' but there is no "stop" button. We request you to check this.

4. We find there is 'Run' in the menu. One of my friend clicked 'run' has ran upto Amritsar! So, we request you to change that to "sit", so that we can click that by sitting.

5. One doubt is that any 're-scooter' available in system? As I find only 're-cycle', but I own a scooter at my home.

6. There is 'Find' button but it is not working properly. My wife lost
the door key and we tried a lot for tracing the key with this ' find',
but unable to trace. Is it a bug??

7. Every night I am not sleeping as i have to protect my 'mouse' from
CAT, So i suggest u to provide one DOG to protect from the cat.

8. Please confirm when u are going to give me money for winning
'HEARTS' (playing cards in games) and when are u coming to my home to
collect ur money.

9. My child learnt 'Microsoft word' now he wants to learn 'Microsoft
sentence', so when u will provide that?

10. Hey, I brought computer, cpu, mouse and keypad there is only one
icon with 'MY Computer', where is remaining ?

11. And in 'MY Pictures' there is not even single photo of mine, So when u will keep my photo in that.

Thanks
Banta Singh…

19 comments:

கன்கொன் || Kangon said...

சனி, ஞாயிறு: ஆமாம். மிகவும் மகிழ்ச்சியான நாட்கள்.
ஏற்பாட்டுக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

திரைநட்சத்திர கிறிக்கற்: :-)))

மன்மதன் அம்பு: :-(
ஏனோ கமல் படமென்றாலே வந்துவிடுகிறார்கள்.


கவிதை: :-)))


நகைச்சுவை: :-)))
வாசித்திருக்கிறேன், இரசிக்கக்கூடிய நகைச்சுவைகளில் ஒன்று.

என்.கே.அஷோக்பரன் said...

அந்தப் பாடலை நீக்கியது நலமே. அவருக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம் ஆனால் மற்றவர்களது நம்பிக்கையை ஆபாசமாகக் கொச்சைப்படுத்தியிருக்கக்கூடாது.

பகுத்தறிவுள்ளவன் மற்றவர்கள் உணர்வுகளைப் புண்படுத்தமாட்டான். அவர் பயன்படுத்தியிருக்கும் அந்தக் கடவுள்களின் பெயர்களுக்குப் பதிலாக அவரது உறவினர்களின் பெயர்களைப் பயன்படுத்தினால் அவர் எப்படி உணர்வார்?

KANA VARO said...

சந்திப்பு, கிரிக்கட் போட்டி இரண்டுக்கும் தனித்தனிப் பதிவை எதிர்பார்த்தேன்...

ம.தி.சுதா said...

அருமையாக அமைந்திருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள். மீண்டும் நட்சத்திர கிரிக்கேட்டா மீண்டும் சிம்பு குழப்புவாரா அல்லது போட்டியை ஒழுங்காக நடக்க விடுவாரா...

kippoo said...

//////இலங்கை பதிவுலகம் புதியதொரு பாதையில் வீறு கொண்டு எழும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்///////
"எதிர் பார்ப்பு வீணாகாது"
////படங்கள் தான் ஒழுங்காக ஓடவில்லை கிரிக்கட்டாவது ஒழுங்காக ஆடுவார்களா?/////
"இதுவும் இல்லாட்டி"
///சுகம் என்னும் போலிவாழ்க்கையுடன்
சுகத்தினுள் அவலமாக கரைகின்றாள்///
"எல்லோருடைய வாழ்க்கையும் இப்படித்தான். வரிகள் அனைத்தும் உண்மையானவை உணர்வு பூரணமானவை"

kippoo said...

//////இலங்கை பதிவுலகம் புதியதொரு பாதையில் வீறு கொண்டு எழும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்///////
"எதிர் பார்ப்பு வீணாகாது"
////படங்கள் தான் ஒழுங்காக ஓடவில்லை கிரிக்கட்டாவது ஒழுங்காக ஆடுவார்களா?/////
"இதுவும் இல்லாட்டி"
///சுகம் என்னும் போலிவாழ்க்கையுடன்
சுகத்தினுள் அவலமாக கரைகின்றாள்///
"எல்லோருடைய வாழ்க்கையும் இப்படித்தான். வரிகள் அனைத்தும் உண்மையானவை உணர்வு பூரணமானவை"

Kiruthigan said...

கமல் சொல்றதுல தப்பிருந்தா சுட்டிக்காட்டலாம்.. மத்தவங்க நம்பிக்கை பொய்யாயிம்னா நம்புறவங்க தப்பா அத சுட்டிகாட்டுறவங்க தப்பா..?

அருமையான பதிவு..

நிரூஜா said...

//இதற்கு முதற்கண் ஏற்பாட்டுக்குழுவினருக்கு அனைத்து பதிவர்கள், பதிவுலகம் சார்பில் விசேடமான நன்றிகள்

இதுக்கெல்லாம் நன்றி சொல்லீட்டு; இண்டைக்கு நாங்க; நாளைக்கு நீங்க.

//இந்த சந்திப்புக்கள் மூலம் இலங்கை பதிவுலகம் புதியதொரு பாதையில் வீறு கொண்டு எழும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

எனது எதிர்பார்ப்பும் அதுவே


//இந்திய திரை நட்சத்திரங்களின் பிரமாண்ட கிரிக்கட்போட்டி.
:-)
//நீங்கப்பட்டது கமலின் மன்மதன் அம்பு கவிதைப்பாடல்!
கண்டிப்பாக வருந்துகின்றேன். இதை எப்படி எல்லாம் படமாக்கி இருப்பார்கள் என்று கற்பனை பண்ணி வைத்திருந்தேன்.

//பில்கேட்ஸ்
முன்னர் வாசித்திருக்கின்றேன்

test said...

நன்றி அண்ணா! டவுன்லோட் பண்ணிட்டோம்ல! :-)
நல்ல பதிவு! :-)

யோ வொய்ஸ் (யோகா) said...

பதிவர் கிரிக்கட் சிறப்பாக இருந்தது, அதிலும் உங்களது அதிரடி ஆட்டம் சிறப்பாகவே இருந்தது.

பதிவர் சந்தி்ப்பிற்கு வர இயலாதது வருத்தமே, அடுத்த முறை சந்திப்போம்,

நட்சத்திர கிரிக்கட் சென்ற முறை பார்த்து நொந்து போய்விட்டேன், ஜீவா, ரமணா துடுப்பாட்டமும் ஸ்ரீகாந்தின் ஒரளவு சிறப்பான பந்து வீச்சும் தவிர இப்போட்டிகளில் பார்க்க எதுவுமேயில்லை.

கமல் படமென்றால் கட்டாயம் அதில் சர்ச்சையிருக்கும்.

சர்தார்ஜி நகைச்சுவை முன்னர் ஒருமுறை எனக்கு மின்மடலாக வந்தது.

நரேந்திரனின் விநோத வழக்கு தொலைகாட்சி தொடர் பார்த்துள்ளேன், சுட்டிக்கு நன்றி

Kiruthigan said...

//அந்தப் பாடலை நீக்கியது நலமே. அவருக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம் ஆனால் மற்றவர்களது நம்பிக்கையை ஆபாசமாகக் கொச்சைப்படுத்தியிருக்கக்கூடாது.

பகுத்தறிவுள்ளவன் மற்றவர்கள் உணர்வுகளைப் புண்படுத்தமாட்டான். அவர் பயன்படுத்தியிருக்கும் அந்தக் கடவுள்களின் பெயர்களுக்குப் பதிலாக அவரது உறவினர்களின் பெயர்களைப் பயன்படுத்தினால் அவர் எப்படி உணர்வார்?//
@ என்.கே.அஷோக்பரன்

இது ஆண்டாளின் பாடலாம்...
https://groups.google.com/group/minTamil/msg/f28c6e6fdfcca4a2?hl=es&pli=1

இந்து மதம் எங்கே புண்படுகிறது ? கோவிலுக்குள் நுழைந்தால் கோபுரத்தில் இருக்கும், சுற்றில் இருக்கும், தூண்களில் இருக்கும் சிலைகளில் வடிக்கப்பட்டு இருக்கும் எந்த ஒன்றையும் விட பாடல்வரிகளில் என்ன ஆபசம் இருக்கிறது என்றே தேடிப்பார்த்தாலும் புலப்படவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

pichaikaaran said...

பதிவர் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிரது...

இன்னும் படங்கள் சேர்த்து இருக்கலாம்

Subankan said...

சனி, ஞாயிறு: மிகவும் மகிழ்ச்சியான நாட்கள்.
ஏற்பாட்டுக்குழுவுக்கு வாழ்த்துக்கள் :)

திரைநட்சத்திர கிறிக்கற்: :-)))

மன்மதன் அம்பு: நாங்கள் இன்னும் முன்னேற இடமுண்டு


கவிதை: கலக்கல்

ARV Loshan said...

இம்முறை ஸ்ட்ரோங் கொக்டேயில் :)
கொழும்பு வருகையாலோ? ;)

பதிவர் கிரிக்கட்போட்டியும், பதிவர் சந்திப்பும் - மகிழ்ச்சியான நாட்கள். மறக்க முடியாதவை. உங்களை சந்தித்ததும் இனிமையானது

இந்திய திரை நட்சத்திரங்களின் பிரமாண்ட கிரிக்கட்போட்டி. - ஆர்வமில்லை :)

மன்மதன் அம்பு கவிதைப்பாடல்!! - கமல் பாவம். ஆனால் சொந்தப் படமாக இருந்திருந்தால் கமல் துணிந்திருப்பார்..

இன்றைய குறும்படம் - என் ஆங்கில வலைப்பதிவின் பெயர் ;)

கவிதை - கலக்ஸ்.. யாருக்காவது கடியா? ;) நான் அப்பாவிங்கோவ்..

நரேந்திரனின் வினோத வழக்கு - நீண்ட காலத்துக்கு முன் வாசித்தது - தொலைக்காட்சியில் பார்த்தது.. நன்றி சுட்டிக்கு :)

சர்தாஜி ஜோக் - முன்பு வாசித்து விடியலிலும் பகிர்ந்துள்ளேன். அதனாலென்ன மீண்டும் சிரித்தேன் :)

anuthinan said...

////இதற்கு முதற்கண் ஏற்பாட்டுக்குழுவினருக்கு அனைத்து பதிவர்கள், பதிவுலகம் சார்பில் விசேடமான நன்றிகள்

இதுக்கெல்லாம் நன்றி சொல்லீட்டு; இண்டைக்கு நாங்க; நாளைக்கு நீங்க.//

அதே!!!

சர்தாஜி நகைச்சுவை சுப்பர்!!

சுஜாதா லிங்க் தந்தமைக்கு மிக்க நன்றிகள்

ஷஹன்ஷா said...

நல்ல பதிவு அண்ணா....

பதிவர் கிரிக்கட்போட்டியும், பதிவர் சந்திப்பும்-
வர முடியாமை கவலை....

இந்திய திரை நட்சத்திரங்களின் பிரமாண்ட கிரிக்கட்போட்டி-
ஆர்வமில்லை...நடக்குறது நடக்கட்டும்

நீங்கப்பட்டது கமலின் மன்மதன் அம்பு கவிதைப்பாடல்!!-
கவலைதான்.....என்ன செய்ய.....


நரேந்திரனின் வினோத வழக்கு-
சுட்டிக்கு நன்றி........


http://sivagnanam-janakan.blogspot.com/2010/12/blog-post_22.html

போளூர் தயாநிதி said...

உங்களது எண்ணம் பாராட்டுகளுக்குரியான

balavasakan said...

அந்த கவிதையை நீக்கியது சரி என்றுதான் படுகிறது சில வரிகள் முகத்தை சுளிக்க வைத்தது ..

shabi said...

sujatha link ennal download seyya mudiya villai enakku pdf file mail seyya mudiyuma shafiullah76@gmail.com

LinkWithin

Related Posts with Thumbnails