Dr.பாலவாசகனும் மரக்கறிக்கடைக்காரனும்
எச்சரிக்கை
மரக்கறி கடைக்காரன் :இஞ்சியுடன், மரவள்ளி கலந்தானென்றால்
கொலைகாரப்பய எச்சரிக்கை.
கத்தரிக்காய் மட்டும் வித்தானா!
ஒழுக்கங்கெட்டவன் எச்சரிக்கை
தராசில் நிறுக்கையில் கதைபேசினால்
அனுபவம் மிக்கவன் எச்சரிக்கை
மிச்சம் தருகையில் அரசியல்பேசினால்
எண்ணிப்பார்த்துக்க எச்சரிக்கை
நீதான் பெஸ்ட்டு கஸ்ரமர் என்றானா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை
சந்தைக்குவருமுன்னே மொத்தமாய் வாங்கி
பிரிச்சில்போடுதல் அதுவே நலமாகக்கொள்
லாபம் ஒன்றே குறியானபின்
கழிப்பது உன்னிடம் வேஸ்ட்டுகள்தான் என்று கொள்
உன்னை மரக்கறி வியாபாரி கேனையன் எனக்கொள்வான்
யோசிக்காமல் கண்ணாடிபார்த்து ஒத்துக்கொள்;.
மேலும் கீழும் காட்டும் ஐட்டம்ஸ்
உன் பைக்குள் வராது என்றே கொள்
வெங்காயத்தின் தலைமேல்
வேஸ்டைக்கட்டுதல் என்ற பண்டை செயலில்
உன் புத்தி கலவாது ஏற்றுக்கொள்
இந்த வியாபரிக்கெதிராய் கொன்சூமர் ஒன்றை
நாடத்துணியும் பணி சேர்த்துக்கொள்
பாலவாசகன்:
ஆஹா… நடாத்த துணியும் பணி சேர்த்துக்கணுமா?
பணியே கட்டியடிப்பதை வாங்கிச்செல்வதென்றான பின் கொன்சூமர் என்றெதற்கு?
தனியே வருவேன்…
மரக்கறி கடைக்காரன் :
அப்படி வாங்க வழிக்கு..
ஸோ..நீங்கள் பேமானிதானே?
பாலவாசகன்:
பிறில்லியன்ஸி அஸ் அக்கியூஸ்ட்
மரக்கறி கடைக்காரன் :
அப்ப ஜஜ்மென்ட் சொல்றன்
பாலவாசகன்:
சொல்லுங்க…
மரக்கறி கடைக்காரன் :
பதிலுக்கு ஒரு கவிதை சொல்லணும் அதுதான் தண்டனை
பாலவாசகன்:
யாருக்கு?
மரக்கறி கடைக்காரன் :
அது கவிதை என்று நீங்க சொல்லும் கண்றாவியை கேட்டாத்தானே தெரியும்?
பாலவாசகன்:
ஹக்…. அதுவும் சரிதான். ஆனால்…நீங்க கோவிச்சுக்க கூடாது!
மரக்கறி கடைக்காரன் :
ஏன் வியாபாரிகளை பற்றி கேலியா?
பாலவாசகன்:
சாச்சா…இது ஒரு வியாபாரியின் வேண்டுதல் மாதிரி
ஒரு வியாபாரி தெய்வத்துக்கிட்ட பாடுற தோத்திர பாடல்!
பின்னர் நானே கேட்கும் கேள்விகள்!!
மரக்கறி கடைக்காரன் :
ஓ… நீங்க சத்திமானா?
பாலவாசகன்:
நான் மிஸ்ரர் பீனா என்பதே கேள்விக்குறியா இருக்கு!
மரக்கறி கடைக்காரன் :
கவிதையை கேட்டால் கௌ;விக்குறி? சோதனைக்குறியா மாறலாம் இல்லையா?
பாலவாசகன்:
ம்ம்ம்ம்… மே பி… மே ஐ..
மரக்கறி கடைக்காரன் :
கன்ராவி…
பராக்கு
பாலவாசகன்:
மரக்கறி விற்கையில் பேரம்பேசி
தலையில் துண்டைப்போடாது, சொன்னதைக்கேட்கும்
என்போன்று இழிக்கும் வென்னிற பற்கள் வேண்டும்
10 ரூபா விலை சொன்னால் 1ரூபா கேட்டு
கடுப்பேற்றாதவன் என்போல் வேண்டும்.
அழுகிப்போனதை எறியமனமின்றி நிற்கையில்
வாங்கிப்போக என்போல் பலர் வேண்டும்
ஆடு பறக்கிறது என்றால் அண்ணாரவேண்டும்
பாவம்டா நீ எனத் திண்தோள் வேண்டும்!
நீலம்பாரித்த மரவெள்ளியை தட்டிட வசதியாய்
ஆர்வப்பதத்தில் நீயும்வேண்டும்
அதற்கு பின்னும் நீ உயிருடன்வேண்டும்
சந்தையில் மரக்கறி வீட்டில் சொஸேயஸ் என
சமைத்து சாப்பிட பணமும்வேண்டும்
ஏ.ரி.எம்மும்வேண்டும் டெபிட்டும் வேண்டும்
எனக்கென்று கிரடிட்கார்ட் கேட்கும்வேளையில்
ஏமாற்றவேண்டிய திட்டமும் வேண்டும்
இப்படி உன்போல் பலர் வரவேண்டும் என்று
21 நாட்கள் நோன்பிருந்தேன்
வரம் தருவான் விநாயகன் என
கடும் விரதம் இருந்து வேண்டிப்போனேன்
ம.வி: வேண்டி எங்க போனீங்க???
கடலுக்குத்தான்…
தூசனம் கொட்டியே வெறிமுறியவென
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
அப்புக்கள் பலபேர் திரிவதைக்கண்டேன்..
ரைம் மிஸின் உதவியால் சுபாங்கன்
வானிலே பறப்பதைக்கண்டேன்…
இந்தக்காலத்தில் ஏமாற்றமே என்றுவிட்டு..
ஐந்நூறுஆண்டுகள் முன்னால்ப்போய் மரக்கறி பார்த்தேன்.
எச்சந்தை ஆனால் என்ன வென்று லெமோரியாக்கண்டம்வரை
சென்றுபார்த்தேன்.
இன்று மட்டும் அல்ல அன்றும்
நல்ல லட்சணம் நிறைந்த வியாபரி
மரக்கறிச்சந்தையில் மிக மிகக்குறைவு
வரந்தரக்கேட்ட பிள்ளையாரே உனக்கு
சாப்பாடுகள் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் மாம்பழத்தை தவிர வேறு எது பலித்தது?
தும்பிக்கையில் சுற்றியிருக்கும் அந்த மோதகம் எப்படி?
பிரபஞ்சம் படைத்த உனக்கு நல்ல மரக்கறி கிடைத்தது உண்டோ?
சுவையும், இயற்கையும், பதமும் உள்ள நல்லமரக்கறி கிடைத்தது உண்டோ?
உனக்கேனும் அமையப்பெற்றால் உண்மையிலே அதிஸ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும் அமையச்செய்யேன்
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே"
15 comments:
ஹி ஹி...
கலக்கல்... :-)
ஆகா கலக்கல் தான்.. நடக்கட்டும் நடக்கட்டும்...
அருமையாக இருக்கிறது ஜனா
கலக்கிறீங்க பாஸ்! :-))
ஹீ ஹீ கலக்கல் பாஸ்
அருமை.. உங்கள் கையிலே சிக்கினா சின்னாபின்னம் தான் போல..
வாவ் ரசித்தேன் ரசித்தேன் ரசிப்பேன். இந்த வருடம் நீங்கள் எழுதிய பதிவுகளில் இதுதான் மணிமகுடம்.
கலக்கல் தலைவரே
படித்து ரசித்து சிரித்தேன்
யோவ், டாக்டரு பாவமையா, நடக்கட்டும் நடக்கட்டும். ஆனா நடுவில இந்த அப்பாவி எதுக்கு வந்தான்?
ஹி ஹி...
கலக்கல்... :-)
ஹாஹா.. இரவு மொபைலில்தான் படித்தேன், தீடீரெண்டு சிரிக்க வீ்ட்டில் எல்லாரும் பயந்திட்டாங்க..ஹிஹி
டாக்டர் Rocks..:D
கடைசியில் முருகன் வருவாரெண்டு எதிர்பார்த்தன் ஆனா பிள்ளையார் வந்திட்டார்(சாப்பாட்டு விசியத்துக்கு பிள்ளையார்தான் சரி...ஹிஹி)
இதுவரை மரக்கறி வாங்க போனதில்லை இனிமேல் வேண்டி வந்தால் உங்கள் அனுபவம் வாய்ந்த அறிவுரைகளை கவனத்தில் எடுக்கிறேன்..
//வாவ் ரசித்தேன் ரசித்தேன் ரசிப்பேன். இந்த வருடம் நீங்கள் எழுதிய பதிவுகளில் இதுதான் மணிமகுடம்//
உர்ர்ர்ர்ர்ர்ர்...
மடிக்கணனி நேற்று மக்கர் பண்ணிவிட்டது. நகைச்சுவை பதிவை தவறவிட்டுவிட்டேன்.
ரசித்துச் சிரித்தேன். மன்மதன்அம்பு பாடல்கள் வெளியாகியவுடன் இணையத்தில் தேடும் போது கமல் கவிதை தான் முதலில் கிடைத்தது. அதையே பதிவாகவும் இட்டுவிட்டேன்.
கலக்கல் பாஸ்..
டாக்டர் கலக்கிட்டார் ;)
ஜனா உங்கள் காய்கறி வாங்கும் அனுபவம் தெரிகிறது.
Post a Comment