(பொதுவாக தமிழில் ஃபான்ரஸிக் கதைகள் குறைந்துவரும் நிலையில், பதிவர்களிடையே ஒரு சுவாரகசியம் மிக்க ஃபான்ரஸி கதை ஒன்றை கொண்டு செல்வோமே என்ற ஒரு முனைப்புத்தான் இந்த ஃபான்ரஸி தொடர்கதை.
இதை தொடங்கி ஒரு இடத்தில் நிறுத்தும்வரை மட்டுமே என்பங்கு. அடுத்து இந்த கதையில் என்ன என்ன மாயாஜாலங்கள் வரப்போகின்றன எப்படி எல்லாம் சிரிக்க வைக்கப்போகின்றன என்பது இதை கொண்டோடும் அடுத்த அடுத்த பதிவர்களிலேயே தங்கியுள்ளது. தொடங்கு என்றார்கள் தொடங்கியுள்ளேன், இனி இந்த ஓட்டத்தில் தேச எல்லைகளைக்கடந்து பல பதிவர்கள் ஓடவுள்ளதாக அறிமுடிகின்றமையால் கதை விறுவிறுப்பாக போகும் என்றே எண்ணுகின்றேன்.
இதோ எனது பிள்ளையார் சுழி.)
ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் கடற்கரைக்குப்போய் விளையாடாதீங்கடா! என்று சந்தியில் சம்மணம்போட்டிருந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த பெரியவரின் 26 டிசெம்பர் 2004ஆம் ஆண்டு அனுபவ பயமுறுத்தலை செவியில் எடுக்காமல் நழுவிவிழும் காற்சட்டைகளை பிடித்தபடி ஒருவனும், மூக்குநீரை இரண்டு கைகளாலும் ஓ வடிவில் துடைத்துக்கொண்டு ஒருவனும், எந்த ஒரு பிளானும் இல்லாமல் இரண்டு பேருக்கும் பின்னால் ஓடும் ஒருவனுமாக கடற்கரையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள் மூன்று சிறுவர்கள்.
இன்னும் 5 நாட்களில் மூன்றுபேரும் மொண்டசறியில் இருந்து பாடசாலைக்கு பிரமோட் ஆகின்றார்கள். மொண்டசறியில் “வண்ணத்திப்பூச்சி” சொல்லத்தெரியாமல், “வண்ணாத்தி ஊச்சி” என்று பாடியதில் இருந்து மூன்றுபேருக்கும் சினேகிதம் ஏற்பட்டதாக வைத்துக்கொள்ளுங்களேன்.
அடேய்…அங்க பாருங்கடா..கப்பல்; ஒன்றை கரையில் விட்டிருக்கிறாங்க தானே..அங்கபோய் இருப்போமடா..என்றான் காற்சட்டை அளவில்லாமல் இந்த கதையில் நாலாவது வரியில் அறிமுகமான பையன். அதையே எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் ஆமோதித்து அந்த இடத்தில்போய் சத்தமிட்டுக்கொண்டே ஒருவர் மீது ஒருவர் ஓடிவந்து விழுந்து பின்னர் அதே இடத்தில் உக்காந்துகொண்டனர்.
டேய் இந்தக்கப்பல்ல நேற்று நான் அப்பாவோட, ஆப்கானிஸ்தான் போட்டு வந்தேன் என்றான் மற்றவன். சரி..ஆப்கானிஸ்தானில இருந்து எனக்கு என்னடா கொண்டுவந்தே என்றான் காற்சட்டை அளவில்லாதவன். சிரித்துக்கொண்டே நான் சும்மா சொன்னேன்டா என்றான் கதை விட்டவன்.
சரி..அதுகளை விடுவோம்டா… இந்தப்பயல் என்ன இன்றைக்கு பேயை பார்த்ததுபோல முளித்துக்கொண்டிருக்கிறான் என்று பின்னால் ஓடிவந்தவனை பார்த்தனர் இருவரும்.
“டேய்.. எனக்கு ஏ.பி.சி.டி.க்கு அங்கால ஒழுங்காத்தெரியாதா! நேற்று இரவு எங்க சித்தப்பா மூலையில் இருந்து பாடமாக்குடா என்று சொல்லிப்போட்டாரு!”
இதிலிருந்து எப்படி தப்புவது என்று யோசித்து நேத்து இராத்திரி கடற்கரைக்கு ஓடிவந்து நிலவை பார்த்திட்டு இருந்தேன்டா..
அப்போ..திடீர் என்று கடலுக்குள் இருந்து சிவப்பாய் பாய்ந்து வந்து என் மடியில் விழுந்திடிச்சுடா.. எடுத்து பார்த்தா ஏதோ ஏதோல்லாம் சொல்லுதடா..
இந்தா இந்த படகுக்கு பக்கத்தில அதை புதைச்சுட்டு போய்ட்டேன்டா என்றான் அவன்.
அவன் காட்சிய இடத்தில் தோண்டி ஒரு பெட்டிபோன்ற ஒன்றைக்கண்டு கையில் எடுத்தனர். உடனே அது சிவப்பு வர்ணத்தில் பிரகாசிக்க ஆரம்பித்துவிட்டது.
போட்டுவிட்டு மூன்றுபெரும் ஓட்டம் பிடித்தனர். “பிளீஸ் ஸ்ரொப் மைடியர் லோர்ட்ஸ்.. ஓ சொறி..இட்ஸ் மை மிஸ்ரேக்” தயவு செய்து நில்லுங்கள் என் பிரபுக்களே.. நீங்கள் மூவருமே இந்த உலகை ஆளப்பிறந்தவர்கள்..ஆம் நீங்களே அந்த 666. நான் உங்கள் கட்டளைகளை நிறைவேற்றும் அடிமை என்றது அது.
ஓடுவதை விட்டுவிட்டு ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தனர் காட்சட்டை நழுவிவிழும் ஆறுமுகன், மூக்குக்குள் வோட்டர்போல் வைத்திருக்கும் ஆறுபடையான் மற்றும் நேற்று இரவு வந்து அதை மடியில் ஏந்திய ஆறுனி.
டேய்..நம்ம மூன்றுபேரின் பெயரும் ஆறு என்றுதான் தொடங்குது என்று அதுக்கு தெரியுதடா என்றான் ஆறுமுகன். ஆமாடா..முந்தநாள் டீச்சர்கூட சொல்லித்தந்தாங்களே..கடற்கரையில ஒருபையன் போத்தல் ஒன்றுக்குள்ள இருந்து பூதத்தை வெளியில கிழம்ப வைத்தான் என்று!! அது இதேதாண்டா என்றான் ஆறுனி.
எஜமானர்களே…மன்னியுங்கள். நீங்கள் கூறுவதுபோல நான் பூதம் கிடையாது. 666 என நான் சொன்னதையும் நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள். அது டேமியன்…..!
சீ வேண்டாம் உங்களுக்கு புரியாது. உங்களுக்கு ஒன்று தெரியுமா இந்தப்பெட்டியாகிய இதை வைத்துக்கொண்டு நீங்கள் மூவரும் ஒருமித்து எதைச்சொன்னாலும் நடக்கும். இந்த உலகமே இப்போது உங்கள் காலடியில் என்றது அந்தப்பெட்டி.
அப்படியா என்று விட்டு. டேய்.. எங்களுக்கு 5 ஸ்ரார் சொக்லட்ஸ் இந்த கப்பல்நிறைய வேண்டும் என்று ஆணைபிறப்பித்தனர். என்ன ஆச்சரியம் அங்கு கரையில் நின்ற அந்தக்கப்பல்முழுவதும் 5 ஸ்ரார் சொக்லட்ஸ்சாக நிறைந்தது.
டேய் கதைகள்ல பாட்டியும், டீச்சரும் சொல்லுறது பொய்யில்லைடா..
சும்மா சின்னப்பிள்ளைத்தனமா சொக்லட்ஸ் அது இது என்றாமல் ஏதாவது பெரிதாக செய்யவேண்டுமடா என்றான் ஆறுபடையான்.
இந்த இடத்தில் நிறுத்திக்கொண்டு தொடர்ந்து கதையை சுவாரகசியமான போக்கில் கொண்டோட நகைச்சுவை மன்னன் கூல்போய் கிருத்திகனை அழைக்கின்றேன்.
17 comments:
ஃபான்ரஸிக் கதை, பென்ராசிக்கான தொடக்கம்.
மன்னிக்கவும் மதிசுதா இன்று உங்கட சுடுசோறு எனக்குத்தான்.
நல்லாத் தான் போய்க்கிட்டிருக்கு... கலக்குங்க கூல்...
அடுத்த கதை எப்படி வரப்போகுது என்று பார்க்க மிக்க ஆவலாக உள்ளேன் அண்ணா!!!
ஆஹா...அருமை தல..கூல் பாய் என்ன பன்னபோகிராறேன்று பார்ப்போம்!
வாவ் . இன்டரஸ்டிங்க்
அட இது நல்லா இருக்கே....!
ஆஹா... super தல..
இதையும் படிச்சி பாருங்க
ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்
நல்ல ஆரம்பம்..கூல் எப்படி கொண்டு செல்கிறாரெனப் பார்ப்போம்.
நல்லாத் தான் போகுது அண்ணாத்தே.. எப்படியும் விடியுமுன்னர் கூகூல் பதிவிடுவார் என நினைக்கிறேன்...
ஃஃஃஃமன்னிக்கவும் மதிசுதா இன்று உங்கட சுடுசோறு எனக்குத்தான்.ஃஃஃஃ
பரவாயில்லை டிலான்.. தங்களுக்குத் தான் நான் இன்னும் ஒரு நாளும் தரவில்லையே.. அது தான் கவலை..
ஆஹா...ஜனாண்ணா.
அருமையான கதைய கொணந்து என்னட்ட தந்திட்டீங்களே..!!!
என்ன எழுதணும்னு இன்னும் முடிவு பண்ணலை... எதுக்கும் ரை பண்ணி பாப்பம்..!!
அச்சா கதை..............#பாட்டி சொல்லுறா.............!
எழுதிட்டேன்...
http://tamilpp.blogspot.com/2010/12/02.html
கதைல எங்கயாவது தப்பு நடந்திருந்தா மன்னிச்சுக்குங்க...
தலைப்பைப் பாத்திட்டு ஏதோ கிறிக்கட் போட்டி பற்றி எழுதியிருக்கிறீங்க எண்டு நினைச்சன்..;)
ஒரு நாள் இணையப்பக்கம் வராட்டி அதுக்குள்ள இம்புட்டு நடந்துபோச்சா..:D
கதை கலக்கல்..:D
அடுத்த பகுதியைப் படிக்கபோறன் வர்ட்டா..;)
Post a Comment