Wednesday, December 8, 2010

80களில் ரூபவாஹினி கார்டூன்கள்


80 களில் இலங்கையில் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி, மற்றும் ஐ.ரி.என் ஆகிய தொலைக்காட்சிகளே இருந்தன. எமக்கு அப்போது வேறு சொய்ஸ்கள் கிடையாது. சில காலநிலைகளில் அப்பப்போ இந்திய டி.டி.வன் தொலைக்காட்சி பிடிபடும். ஆனால் கார்ட்ரூன்கள் என்றால் அதில் அப்போதும் எமக்கு பெருவிருந்தாக ரூபவாஹினி காட்டூன்கள் இருந்தன.

காட்டூன்கள் முடிந்தவுடன் படிக்க புத்தகம் தூக்கவேண்டும் என்ற கனவான் ஒப்பந்தத்துடன் நாம் அப்போது தொலைக்காட்சிமுன்னால் அனுமதிக்கப்படுவோம்.
ஓவ்வொருநாளும் பெரும்பாலும் மாலை 5 மணிக்கும் 5.30ற்கும் கார்டூன்கள் ஒளிபரப்பாகும்.
பெரும் உற்சாகத்துடன் நாம் அவற்றுக்கு தயாராக இருப்போம்.
இன்றும் பார்க்கமுடியாதா? என்று ஏங்கவைக்கும் கார்ட்டூன்களும் அதில் அடக்கம். முக்கியமாக வூடிவூட்பெக்கர், ரொம் அன்ட் ஜெரி, ரோட் ஸ்பீடர் என்பன இப்போது பார்த்தாலும் எம்மை மறக்கக்கூடியதாகவே உள்ளன.

ஏற்கனவே 80களில் அப்போது ரூபவாஹினியில் ஒளிபரப்பான ஆங்கிலத்தொடர்களைப்பற்றி முன்னர் ஒருபதிவு இட்டுள்ளேன். இப்போது அந்தக்காலத்தில் நாம் பார்த்து ஒன்றித்துப்போன காட்டூன்களை கொஞ்சம் அசைபோடலாமே…
முக்கியமாக கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கடந்துவிட்டதனால், சிலவற்றை மறந்துவிட்டேன். இருந்தாலும் பதிவர் லோஷன் என் வயதை உடையவர் என்றபடியாலும், அடுத்து பதிவர் வந்தியத்தேவன் எங்களைவிட மூத்தவர் என்றபடியாலும், யோவொயிஸ் யோகா எங்கள் வயதுக்கு அண்மித்தவர் ஆகையால் இவர்கள் மூவரும் நான் மறந்தவைகளை நினைவு படுத்துவார்கள் என நினைக்கின்றேன்.

ரொம் அன்ட் ஜெரி.

இந்தக்கார்ட்டூன் பற்றி எழுதவேண்டிய தேவையே இல்லை. ஏன் என்றால் அந்த அளவுக்கு அது பிரபல்யம் மிக்கது. அப்பொழுதுகளில் கோம்வேர்க் பண்ணவேண்டும், கட்டுரை எழுதவேண்டும் என்று இருந்த மனச்சுமைகளை மறந்து கொஞ்சம் சிரிக்க, மனதுக்கு ரிலாக்ஸ் ஆக அப்போது இருந்தது.
எப்போதுமே நான் ரொம்முக்குத்தான் (பூனை) சப்போர்ட்.

வூட்பெக்கர்.

விழுந்து விழுந்து சரிப்பது என்பதன் அர்தத்தை புரியவைத்த ஒரு கார்ட்டூன். மரங்கொத்தி ஒன்றின் அளவுக்கு அதிகமான லொள்ளுத்தனமும், குறும்புகளும், வயிறு வெடிக்கும் அளவுக்கு சிரிக்கவைக்கும்.

ரோட் ஸ்பீடர்.

பீ…பீ… என்று ஒலிஎழுப்பி உச்சவேகத்தில் ஓடும் ஒரு பறவையை பிடிக்க ஒரு நரி எடுக்கும் பகிரதய பியத்தனம்தான் இந்தக் காhர்ட்டூன் முழுவதும். அதைப்பிடிக்கும் முயற்சியில் விக்கிரமாதித்தன்போல நரி எடுக்கும் முயற்சிகளும் எப்போதுமே தனது அதிபுத்திசாலித்தனத்தால் பறவை தப்புவதுமே இந்தக்கார்ட்டூன்.

ஹீ –மான்.

அநியாயங்களை எதிர்த்துப்போராடும் ஒரு குழு, ஒவ்வொரு கட்டத்திலும் பல சிக்கல்களை சந்தித்து நிற்கும். அப்போது நாயகன் தனது வாளை உயர்த்தி குரல் எழுப்பும்போது மிகுந்த சக்திமிக்கவனாக மாறுவதும், பின்னர் எதிரிகளை துவம்சம்செய்வதுமான ஒரு கார்ட்டூன்.

கெக்கிலி ஜக்கிலி

இரண்டுகாகங்கள் மரத்தில் இருந்து சாலை நிகழ்வுகளை அவதானிப்பதும், தமக்குள் உரையாடுவதும், சில தேவைகள் நிமித்தம் தம் சாகசங்களை காட்டுவதுமான ஒரு கார்ட்ரூன் இது.

டக்ரலிஸ்

டிஸ்னிவேள்ட் தயாரிப்பில் உலகப்பிரபலம் பெற்ற ஒரு கார்ட்டூன். இந்தக்கார்ட்டூன் அடிப்படையில்தான் முட்டாள்வாத்து, வாத்துமடையன் என்ற பெயர்கள் வந்தனவோ என்று அப்போது நான் யோசித்துப்பார்த்ததுண்டு.

பட்மன்டஸ்

சித்திரக்கதைகளில்வரும் பட்மான் பாத்திரத்தை சித்தரிக்கும் ஒரு கார்ட்டூன். பட்மானின் சாகசங்களும், தனது சக்தியால் எதிரிகளை திணறடிக்கும் சாகசங்களும் நிரம்பிய விறுவிறுப்பான கார்ட்டூன் இது.

ஸ்பைடர்மான்.

சிலந்தி மனிதனின் சாகசங்கள் நிறைந்த கார்ட்டூன் இது. தனது அற்புதமான சாகசங்களால் மக்கள் மத்தியில் பிரலம்பெற்று, அனர்த்தநேரங்களில் மக்களை காப்பாற்றி, பல எதிரிகளின் சூழ்ச்சிகளையும் துவசம் செய்வார் ஸ்பைடர்.
பின்னர் இதுவே படமாக எடுக்கபட்டு சக்கைபோடு போட்டகதைகளை சொல்லவும் வேண்டுமா என்ன?

வில்லிங்ஸ்.

விண்வெளி சம்பந்தமான கொஞ்சம் போறடிக்கும் ஒரு கார்ட்டூன். விண்வெளியில் பயணிக்கும்போது சில தீய சக்திகளை எதிர்த்து போராடும் ஒரு தொடர்கார்ட்டூன்.

டொக்ரர் ஹொட்டகித்த

இன்றும் இந்த காட்டூன்பாடல் காதுக்குள் ஒலிக்கும். ஒரு சிக்கள கார்ட்டூன் தொடர். டொக்ரர் ஹொட்டகித்தவுடன் கப்பலில் பயணிக்கும், குரங்கு, முயல் முதலான பாத்திரங்களின் நகைச்சுவைகளும், டொக்ரரின் பெட்டிக்குள் மியூசிக் குரூப் நடத்தும் எறும்புகளின் பட்டாளமும் அருமை.

அந்தநேரத்தில் மனதில் நின்ற இந்தக்கார்ட்டூன்கள் காலங்கள் பல கடந்தாலும் இன்றும் மனதில் நிற்கின்றன. என்ன இருந்தாலும் இந்தக்கார்ட்ரூன்கள்போல இப்போது வரும் கார்ட்டூன்கள் மனதில் இடம்பிடிக்கமறுக்கின்றன.

16 comments:

mayu said...

There are even more :)

I watched cartoons during late 80's and early 90's

Those days we watched all the cartoons except batman and spiderman.

Beside, Dr. Honda Hitha there are more Pissu Poosa and then there is a male bear and female bear. Dat male guy always make mistakes when doing stuff and get hit by his wife. Can't remember the name. And more.. can't remember all now :)

but mostly they showed Sinhala dubed cartoons not Tamil or English during the time I watched cartoons in Rupavahini.

டிலான் said...

அண்ணர் என்ன மீண்டும் தொட்டிலுக்கோ??? சம்யுக்தா வந்து கார்ட்டூன் பார்க்கிற நேரத்திலை அப்பாவும் கார்ட்டூன் பார்க்க நிற்கிறார்போல???

வார்த்தை said...

ஒரு காலத்தில் எங்க ஊரிலும் ரூபவாஹினி தெரிந்தது (இலங்கையில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதை தெளிவாக பார்த்ததும் அதில் தான்). அதை சிறிது காலம் பார்த்ததால் தான் அதன் பின் எங்களுக்கு தெரிய ஆரம்பித்த தூர்தர்ஷனை வெறுத்தேன் (அட்லீஸ்ட் டெக்னிகலி).

அப்புறம் அந்த கார்ட்டூன் ரோட்ஸ்பீடர் இல்ல , ரோட் ரன்னர். அது என் ஃபேவ்.

ஒரு சிரியல் பார்த்து "அலங்கில பிசு" என்று சிங்களம் கற்று கொண்டேன்.

நிஷா said...

Sweet memories!!!

KANA VARO said...

பச்சிளம் பாலகன் ஜனா வாழ்க!

KANA VARO said...

சுதாவைத் தேடுகின்றோம்... எங்கிருந்தாலும் உடனே வரவும்...ஆக்கிய சோறைத் தரவும்.

Anonymous said...

சுதா 'கொட்ரைஸ்' என்று ஒரு காட்டூன் தயாரிக்கிறார்

pichaikaaran said...

காட்டூன்கள் முடிந்தவுடன் படிக்க புத்தகம் தூக்கவேண்டும் என்ற கனவான் ஒப்பந்தத்துடன் நாம் அப்போது தொலைக்காட்சிமுன்னால் அனுமதிக்கப்படுவோம்.
ஓவ்வொருநாளும் பெரும்பாலும் மாலை 5 மணிக்கும் 5.30ற்கும் கார்டூன்கள் ஒளிபரப்பாகும்.
பெரும் உற்சாகத்துடன் நாம் அவற்றுக்கு தயாராக இருப்போம்.”

இந்த அனுபவம், தென் தமிழ் நாட்டு (அப்போதைய) சிறுவர்களுக்கும் பொருந்தும் என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்..

ஆனால் அது உண்மை...

அன்று இருந்த நிலையில், தமிழ் நாட்டின் தூர்தர்ஷனை விட , ரூபவாகினியே நன்றாக இருக்கும்..

ரேடியோ கேட்கவே வேண்டாம்..
இலங்கை ஒலி பரப்பும், இனிய தமிழும் கேட்டுகொண்டே இருக்கலாம்.

அதெல்லாம் அழிந்து விட்டதே என்ற சோகம் எனக்கு உண்டு..

ஆனால் உங்களை போன்ற நண்பர்களின் பதிவு சற்று ஆறுதல் தருகிறது...

test said...

சூப்பர் அண்ணே! எனக்கும் ஞாபகம் இருக்கு அவையெல்லாம்! :-)

யோ வொய்ஸ் (யோகா) said...

ஜனா அண்ணா, இவைகளை சிறிய வயதில் நானும் ரசித்திருக்கிறேன்,
அதிலும் “த ரோட் ரன்னர் ஷோ”வில் வரும் “மிக் மிக்” என்னும் சத்தம் இன்னும் நினைவில் இருக்கிறது

மேலும் ஹாவா ஹரி ஹாவா, பிஸ்ஸு புசா, கலிவர் போன்ற சிங்கள மொழிபெயர்த்த கார்ட்டுன்களையும் ரசித்திருக்கிறேன்.

சிரச டீவியில் பார்த்த ”சூர பப்பா“ என்னும் அஸ்டரிக்சின் சிங்கள வடிவத்தையும் ரசித்திருக்கிறேன்

sinmajan said...

நாம பார்த்து ரசிச்ச கார்ட்டூன் tintin தான்... ஏனோ மாயாவி கதைகளிலிருந்த ஆர்வம் cartoon களில் என்க்கு ஏற்படவேயில்லை..

ARV Loshan said...

மலரும் நினைவுகளைத் தந்ததுக்கு நன்றி ஜனா. :)
மறக்க முடியாத இனிமையான காத்திருப்புக்கள் அவை.

சில திருத்தங்கள்..
ஹொந்த ஹித்த (நல்ல மனது)
டக் டேல்ஸ் (Duck Tales )
Road Runner

அடப் பாவி நீங்கள் பூனை ரசிகரா? நான் எப்போதும் அப்பாவி ஜெரி பக்கம் தான்..

Yogi Bear Show, Mickey Mouse, Haa Haa Hari haaawa(Sinhala translation of Bugs Bunny),பிசு பூசாவை (Top cat )விட்டு விட்டீர்களே?

//காட்டூன்கள் முடிந்தவுடன் படிக்க புத்தகம் தூக்கவேண்டும் என்ற கனவான் ஒப்பந்தத்துடன் நாம் அப்போது தொலைக்காட்சிமுன்னால் அனுமதிக்கப்படுவோம்.
//
எங்களுக்கும் தான் ;)
அந்த நேரம் சொர்க்கமாக இருக்கும்..

//பதிவர் வந்தியத்தேவன் எங்களைவிட மூத்தவர் என்றபடியாலும்//
அப்படிப் போடுங்க.. மாமா என்றாலே மூத்தவர் தானே?

அதெல்லாம் சரி..
//பதிவர் லோஷன் என் வயதை உடையவர் //
யாராவது கேட்டாங்களா? ;)

LOSHAN
www.arvloshan.com

Bavan said...

ஹிஹி.. டீவியில் பட்மான் ஆரம்பிச்சிட்டாங்கடா என்று அண்ணா கத்த, நான் பட்மான் பார்க்க அவசரப்பட்டு படியில் ஓடி விழுந்து நாடி உடைந்து 5 வயதிலேயே தாடியுடன் கார்டூன் பார்த்திருக்கிறேன்.

இப்போதும் கொழும்பு அல்லது யாழ் போனால் டொம் அட் ஜெரி தொடக்கம் எல்லாக் கார்ட்டூனும் பார்ப்பதுண்டு.

//எப்போதுமே நான் ரொம்முக்குத்தான் (பூனை) சப்போர்ட்.//

ஹிஹி நானும்தான்.:D

பதிவை வாசிச்சிட்டு கார்டூன் பாக்க போய்ட்டன் அதுதான் பின்னூட்டம் கொஞ்சம் லேட்டு..:D

ம.தி.சுதா said...

அண்ணா பிந்திய வருகைக்கு மன்னிக்கவும்... எங்களை ஒரு புதிய உலகுக்கு அழைத்துச் செல்லும் கார்ட்டுனை மீண்டும் போட்டுக்காட்டியுள்ளீர்கள்..

(அது சரி சம்யு பார்ப்பதற்கு ஒரு சேகரிப்பு முயற்சி தானே இது..)

ம.தி.சுதா said...

அனானிச் சகோதரா நிங்க சொந்தப் பெயரில் அடித்தாலும் சுதா கோபிக்கமாட்டான்... ஹஹஹ என நீங்களும் சிரிக்கணும்... அப்பதான் மற்றவர்களும் இவர்கள் கும்மியடிப்பதை விளங்கிக் கொள்வார்கள்...

(ஹஹஹஹ... இது நம்ம கும்மிங்கோ..)

Kiruthigan said...

Woodpecker மாதிரி சிரிக்கணும்னு யா/இந்து ஆரம்ப பாடசாலை வயசிலருந்து முயற்சி செய்ததுண்டு இன்னிக்கு வரைக்கும் அது கைகூடவேயில்லை...

//எப்போதுமே நான் ரொம்முக்குத்தான் (பூனை) சப்போர்ட்.//
நான் ஜெர்ரிக்கு தான்....

ஓ.. அப்பவே ஸ்பைடர் மான் இருந்திருக்காரா..! நான் படம் வந்தாப்பிறகுதான் கார்ட்டடூண் வந்திச்சின்னு நெனச்சிட்டிருக்கேன்...

நாங்க ரூபவாகினி பாத்ததே 95ல தான் இடம் பெயர்ந்து இருக்கும் போது சைக்கிள் டைனமோவ சுத்தி க்ரிக்கட் பாத்தது தான் முதல் டிவி அனுபவம்(வயசு 5) அப்போ...!!!

இவங்க கார்ட்டூண்களோட நமக்கு சின்னவயசில ரின்ரினும் லக்கிலூக்கும் புடிக்கும் காமிக்ஸில் அறிமுகமாகி கார்ட்டூணில் தொடர்ந்தவர்கள் இப்பவும் சில சமயம் கனவில் தொடர்பவர்கள்..

நல்ல பதிவு ஜனாண்ணா...!!!
பாவம் சம்யுக்தாக்கு பழைய கார்ட்டூணேல்லாம் போட்டுக்காட்டி பயப்புடுத்துறீங்க போலிருக்கே..!

LinkWithin

Related Posts with Thumbnails