அர்த்தமுள்ள ரஜினியின் 60
ரஜினிகாந்த் தெரிந்தோ தெரியாமலோ தமிழ் சினிமாவில் ஆழமாகப்பதிந்துவிட்ட ஒரு காந்தப்பெயர். ரஜினியிடம் அனைவருக்குமே பிடித்த ஒரு குணம், அவர் உயர உயர அவரிடம் அதிகமாகிய பணிவேதான். சிண்டுமுடியும் தமிழ்சினிமாவில் பலருக்கும் தன் இயல்பான குணத்தினால் அவர்களே நாண நேர்வழியில் நடந்த சம்பவங்கள் எண்ணில் அடங்காதவை. எமக்கு முதல், நாங்கள் என்று கடந்து இன்று பிறந்த குழந்தைகளுக்குக்கூட ரஜினி அன்புக்குரியவராகவே உள்ளதே பெரும் அதிசயமாக உள்ளது.
தன்னை ஏற்றிவிட்ட ஏணிகளை எப்போதும் நன்றியுடன் எண்ணி, அவர்களுக்கு எப்போதும் ஒரு அடிமையைப்போல உதவும் ரஜினியின் குணம் ஆச்சரியப்படவைக்கின்றது. தனக்கு போட்டியாளனாக கருதப்படும் கமலின் முன்னால் எப்போதும் கமலை உயர்வாகப்பேசி, தன்னை தாழ்த்திக்கொள்ளும் ஒரு அருமையான போட்டியாளனை எந்தத்துறையிலும் பார்க்கமுடியாது.
ஒரு மிகப்பிரபல்யம் மிக்க ஒருவனுக்கு பிரதானமாக அவன் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியது முதலில் அவனது மனதே. அந்த வகையில், ரஜினி ஆன்மீகம் என்ற கருவிகொண்டு எப்போதும் தன் மனதையும், பிறர் மனதையும் மலரச்செய்தவண்ணமே உள்ளார். ரஜினிக்கு நிகர் ரஜினி மட்டும்தான்.
தியாகராஜர் ஆராதனை.
மார்கழி மாதம், தை மாதம் என்றால் சங்கீதப்பிரியர்களுக்கு உட்சாகமான நாட்கள்தான். சங்கீத மும்மூர்திகளில் முதன்மையானவரான தியாகராஜர் வசித்து வந்ததாக கூறப்படும் தஞ்சாவூரில் உள்ள திருவையாறே உற்சாக விழாக்கோலம் பூண்டுவிடும். பல சங்கீதப்பிரியர்களும், சங்கீத வித்வான்களும் திருவையாற்றை நோக்கி படையெடுத்துவிடுவார்கள். எங்கும் கர்நாடக இசை மனதிற்குள் பூரிப்பை ஏற்படுத்திவிடும். திருவையாற்றிலே தை மாதம் 5 நாட்கள் இந்த பெரும் கர்நாடக சங்கீத உட்சவம் பெருவிழாவாகவே கொண்டாடப்படுவது, காதுக்கு மட்டுமின்றி மனதிற்கும் பூரிப்பை உண்டாக்கும்.
அதேபோல திருவையாறு என்ற பெயரில் சென்னையிலும் மார்கழி மாதத்தில் கர்நாடக சங்கீதத்திருவிழா பெருவிழாவாக எடுக்கப்பட்டுவருவது மகிழ்ச்சியானதே.
ஓலங்கள் பலவற்றை கேட்ட காதுக்கு கீதங்கள் சுகமான அனுபவங்களாக இருக்கும். இசை முறைகளில் கர்நாடக சங்கீதத்தின் மேல் பலருக்கும் பவ்வியமான ஒரு மயக்கம் உண்டு. காரணம் அதில் தெய்வீகத்தன்மை இயல்பாகவே கலந்துள்ளதாக இருக்கலாம்.
இலங்கையில் உள்ள நம்போன்ற கர்நாடக சங்கீதப்பெரும் பிரியர்களுக்கு இதுபோன்ற ஒரு இசைத்திருவிழா இடம்பெறாதா என்ற ஏக்கம் மனதிற்குள் எப்போதும் உண்டு.
1992 முதல் 1994 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கர்நாடக சங்கீதம் பாரிய ஒரு எழுற்சி பெற்று விஸ்பரூபம் எடுத்து நின்றது. திரு.பொன்.சுந்திரலிங்கம் அவர்களும், யாழ்ப்பாணம் அண்ணாமலை இசைத்தமிழ் மன்னத்தினரும், இராமநாதன் இசைக்கல்லூரி சுற்றமும் இந்த எழுச்சியில் அப்போது பெரும் பங்கு கொண்டன. இலங்கை கலைஞர்கள், மிருதங்க அம்பலவாணர் அவர்கள், வயலின் ஓ.ராதாகிருஷ்ணன் அவர்கள், லயஞான திலகம். ஏல்.திலகநாயகம்போல் அவர்கள், சுரஞான வித்தகர் நாதஸ்வர கலைஞர் பத்மநாதன் அவர்கள், தவில் வித்வான் தெட்சணாமூர்தி அவர்கள் போன்றோர்கள் இசையால் ஈழநாட்டில் மட்டும் இன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு தேசங்களிலும் தங்கள் இசை சாம்ராஜ்யத்தை அமைந்தது தெரிந்ததே.
இன்று ஈழத்தில் கர்நாடக ரீதியான இசையை மீண்டும் பேரெழுச்சிகொள்ளவைப்பதன் தேவை ஏற்பட்டுள்ளது. வீணையையே கொடியாகக்கொண்ட இசைமன்னன் ஆண்டபூமியல்வா எமது!
டபிள் பிரமோசன் முறை மீண்டும் தேவை!
இலங்கையின் கல்விமுறையில் முன்னர் டபிள் பிரமோசன் முறை; இருந்துவந்தது. அதாவது சுப்பர் கிரேட் எடுக்கும் மாணவர்கள் அவர்களின் அறிவாற்றலை காரணமாகக்கொண்டு, அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்படாது அதற்கு அடுத்த வகுப்புக்கு அனுப்பி வைக்கும் முறை.
பின்னர் அவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
இன்றைய சந்ததியினர் அதிபுத்திசாலித்தனங்களை உடையவர்களாக இனங்காணப்பட்டுள்ள இன்றைய நிலையில் இவ்வாறான டபிள் பிரமோசன் முறை மீண்டும் தேவை என பல அறிஞர்கள் வாதிட்டுவருகின்றனர்.
அதில் ஒரு காரணம் மிக முக்கியமானது அதாவது.
இன்றைய வகுப்பு சூழ்நிலையில் குறிப்பிட்ட அளவு சித்தி எல்லையை அடையாத மாணவன் அசாதாரண மாணவனாக கருதப்படும் நிலை காணப்படுகின்றது. அதேவேளை அதேவகுப்பில் எதிர்பார்க்கும் திறமைக்கு அப்பால் சுப்பர் கிரேட் மாணவன் ஒருவன் இருந்தால் அவனும் அசாதாரண மாணவனே. பாடத்திட்டத்திலும், அதைவிட நுண்ணறிவிலும், இன்ன பிற அறிவிலும் உள்ள அவன் அடுத்த வகுப்பு பாடத்திட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கும் நிலையை கொண்டிருக்கின்றான் என்றால், தொடர்ந்தும் அவனை அதே வகுப்பில் வைத்திருந்து, அவன் அறிந்த பாடத்திட்டத்தையே திரும்ப திரும்ப அவனுக்கு போதிக்கும்போது அவனது மனதில் விரக்தி நிலை தோன்றிவிடும் என்று சாயல்பட ஒரு கருத்து சிந்திக்க வைக்கின்றது.
அதே வேளை இந்த டபிள் பிரமோசனால் வயது என்று கருதும்போது, அவர்களது வளர்ச்சி, சக மாணவர்கள், இன்னும் பிற சிக்கல்களும் உருவாகும் நிலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இது பற்றி கல்வியலாளர்களும், பரீட்சைத்திணைக்களமும், கல்வி அமைச்சும் கொஞ்சம் சிந்திக்கலாமே!!
இன்றைய குறும்படம்.
கொழும்பில் பதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி.
எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை 19ஆம் நாள் காலை 9.30 மணியளவில் கொழும்பில் இலங்கை தமிழ் பதிவர்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளது யாவரும் அறிந்தவிடயமே. இதற்கு முதன்நாள் 18ஆம் நாள் சனிக்கிழமை பதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு நல்ல புரிதலையும், மகிழ்ச்சியையும், ஒற்றுமையினையும் மேன்மைப்படுத்த பெரிதும் உதவும் என்ற நிலையில், குறிப்பாக பதிவர்களிடையே ஒரு கிரிக்கட் போட்டி என்பது எவ்வளவு சந்தோசத்தையும் ஆர்வத்தையும் தோற்றுவித்துள்ளது. நிற்சயமாக இதில் வெற்றிதோல்வியோ, அல்லது மான் ஒவ் த மச்சாக வருவதோ இல்லை. எல்லோரும் ஒன்றுகூடி விளையாடுவதே மிகப்பெரிய மகிழ்சிக்குரிய விடையமாகும். கல்லூரி காலங்களில் விளையாடிய என்போன்றோர்கள் கையில் பட்டை பிடித்தே இன்று 13 வருடங்கள் கடந்துவிட்டது.
இருந்தாலும் இந்தச்சந்தர்ப்பத்திலாவது விளையாட்டு நினைவில் உள்ளதா என்று பரீட்சிக்கவேண்டாமா?
சர்தாஜி ஜோக்
தனது மொபைல் பில் எவ்வளவு என அறிய விரும்பிய ஷர்தாஜி..வாடிக்கையாளர் சேவை நிலையத்துடன் தொடர்பு கொண்டார். அங்கே அழைப்பில் வாடிக்கையாளர் சேவைக்குரிய பெண் தொடர்பை எடுத்தார்…
பெண் - நான் உங்களுக்கு எந்த வகையில் உதவவேண்டும் சேர்?
ஷர்தாஜி –எனக்கு எனது மொபைல் பில் எவ்வளவு எனத்தெரியவேண்டும்.
பெண் - நல்லது சேர்! இதற்கு நீங்கள் அழைப்பை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. *123# என்ற குறியீட்டை அழுத்தினாலே உங்கள் கரன்ட் பில் எவ்வளவு எனக்காண்பித்துவிடும்.
ஷர்தாஜி – முட்டாளே…நான் எனது கரன்ட் பில் எவ்வளவு என்று கேட்டகவில்லை மொபைல் பில் பற்றித்தான் கேட்டடேன்.
14 comments:
Rock.:)))
சர்தாஜி ஜோக் சூப்பர்
:)
ரஜினி – பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே!
தியாகராஜா ஆராதனை – அந்நியனில் செட் போட்டு படமெடுத்த சங்கரை மறக்க முடியுமா?
பதிவர்கள் கிரிக்கட் - கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.
joke.. :))
வழமையான கிக், இம்முறை கொஞ்சம் பெரிய பெக் ;-)
ரஜினி - :))
Short film - அவ்வ்வ்..:)
பதிவர் கிறிக்கட் - விளையாடுவோம்..:D
ஜோக் - ஹிஹிஹி..:D
ஹொக்ரெயில் - இம்முறை கொஞ்சம் திகிலுடன்..:D
//தனக்கு போட்டியாளனாக கருதப்படும் கமலின் முன்னால் எப்போதும் கமலை உயர்வாகப்பேசி, தன்னை தாழ்த்திக்கொள்ளும் ஒரு அருமையான போட்டியாளனை எந்தத்துறையிலும் பார்க்கமுடியாது//
true! :-)
//1992 முதல் 1994 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கர்நாடக சங்கீதம் பாரிய ஒரு எழுற்சி பெற்று விஸ்பரூபம் எடுத்து நின்றது//
உண்மை அண்ணா! அதற்கு நல்லூர் ஒரு களமாக இருந்தது!! :-)
நல்ல ஹொக்ரெயில்
ரஜினி: ஆமாம். அந்தப் பணிவு தான் ரஜினியை இவ்வளவுக்கு உயர்த்தியது.
தியாகராஜர் ஆராதனை: :-))
இசையில் சக்தி.
இரட்டை வகுப்பேற்றத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. :-(
கிறிக்கற்: ஆவலாக இருக்கிறோம் எல்லோரும். :-)))
நகைச்சுவை: :-)))))
இம்முறையும் அருமை தான் அண்ணா....
கிரிக்கேட் நேரடி ஒளிபரப்பு இருக்குதாமே.. போட்டி ஏற்பாட்டாளர்களே பஞ்சில் பந்து செய்து வைத்திருங்கள்.. பின்னர் வீதியால் பயணிப்போருக்கு தலை வெடித்ததென்று பின்னேர சந்திப்பிற்கு குழப்பம் ஏதாவது வரக் கூடும்...
மதி.சுதா.
நனைவோமா ?
ரஜினி :) நல்ல மனிதர்,நல்ல நடிகர்
தியாகராஜர் ஆராதனை - நல்ல விஷயம்
டபிள் பிரமோ - கட்டாயம் தேவை.இதெல்லாம் இருந்திருந்தால் நாம் எங்கேயோம் போயிருப்போம்.. (யோவ் யாரும் சிரிக்காதீங்க அய்யா)
கிரிக்கெட் - இப்போ கொஞ்ச நாளா அடிக்கடி விளையாடுகிறோம்.. :)
சினேகபூர்வமாக ஆடலாம்.. வாங்கோ விளையாடுவம்
ஜோக் - அட நேற்று காலையில் மீண்டும் ஒரு தடவை நம்ம கஞ்சிபாய்க்காக சொன்ன ஜோக் :)
LOSHAN
www.arvloshan.com
வழக்கம் போல பதிவு அருமை..
Post a Comment