GOOD BYE - 2010.
நம்மிடம் இருந்து விடைபெற்றுக்கொள்ளும் இந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு சிறப்பான ஆண்டாக இல்லை என்பதுடன் உலக அரசியல் ரீதியாகவும் குறிப்பிடத்தக்க ரீதியில் எந்தவொரு பாரிய மாற்றங்களையும் ஏற்படுத்திவிடவும் இல்லை. அதேவேளை வருடத்தின் பின் பாதியில், வடகொரிய, தென் கொரிய முறுகல் நிலை, ஆங் சாங் ஷ_கியின் விடுதலை, விக்கிலீக் கிளப்பிவிட்ட அதிர்ச்சி என்பதே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்கின்றது.
அதேவேளை உலகக்கோப்பை கால்பந்துப்போட்டி இந்த ஆண்டின் உற்சாகமான சுவாரகசியம். இலங்கையை பொறுத்தவரை ஜனாதிபதித்தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக ஜனாதிபதி, பொதுத்தேர்த்தல், யுத்தக்குற்ற சர்ச்சைகள் என்பன பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அதேபோல இந்தியாவைப்பொறுத்தவரை இது ஊழல்களின் ஆண்டு என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சர்ச்சைகளும், பிரளயங்களும் இன்னும் தொடர்ந்து வெடித்துக்கொண்டிருக்கின்றன.
எரிமலை வெடிப்பு, சுரங்க விபத்துக்கள், விமான, ரெயில் விபத்துக்கள், மண் சரிவு, போன்ற அனர்த்தங்களும் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் பதிவுலகத்திலும், பெரியதொரு தொய்வுநிலை ஏற்பட்டது என்பதுடன் பல பல சர்ச்சைகளும், மோதல்களும்கூட இடம்பெற்றுவிட்டன.
கால நிலையில் கூட பாரிய மாற்றங்கள், அளவுக்கதிகமான வெயில், ஆடியில் காற்று பெரிதாக அடிக்கவே இல்லை, வெப்பநிலை திடீர் என்ற உயர்வு, மேற்குலகத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான பனிப்பொழிவு, ஆசிய நாடுகளில் தொடர் தாளமுக்கங்கள், மார்கழியும் முடியும் நிலையிலும் தொடர்ந்து பெய்யும் மழை என இயற்கையும் பொய்த்த ஆண்டாகவே இது உள்ளது.
உலகில் பொதுவாக வசந்தங்களை கொண்டுவராத 2010ஆம் ஆண்டே சென்றுவிடு.
வனப்பேச்சி
தமிழச்சி தங்கபாண்டியன், நான் கவனித்துக்கொண்டிருக்கும் ஒருவர். அவரது பேச்சுக்கள் மட்டும் அல்லாது அவரது எழுத்தக்களும் கொஞ்சம் வர்ணனைகளும், அலட்டல்களும் இன்றி யதார்த்தத்தை அப்படியே கொடுப்பவையாக இருக்கும்.
இன்று காலையில் நண்பர் ஒரிவரிடம் இருந்து தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி புத்தக்தை படிப்பதற்கு வாங்கி படித்துமுடித்தேன்.
அத்தனை கவிதைகளிலும் எனக்குள்ளே ஏக்கத்துடன் காத்திருந்த வலிகள் வெளிப்பட்டன. கிராமங்களுடன், உணர்வுகளையும், பாசங்களையும் தொலைத்துவிட்ட நம் சமுதாயத்தின் மேல் ஒரு ஏக்கப்பெருமூச்சு விட வைக்கின்றன கவிதைகள்.
எமக்கு கூட புலப்பெயர்வு என்ற ஒன்று வாழ்வில் ஏற்படுத்திவிட்ட தாக்கத்தை, அவர் கருவாக எடுக்காதபோதிலும் சாடிக்கு மூடியாக அளவாகவே அதுகூடப்பொருந்துகின்றது.
அத்தனை கவிதைகளும், என் காற்சட்டைப்பருவகால பசுமையான நினைவுகளையும், அதை தொலைத்துவிட்டு இன்று நிற்கும் வெறுமையினையும் காட்டுகின்றது.
உதாரணத்திற்கு ஓரிரண்டு இதோ….
"சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு…"
"சுடு சோறு கொதி கஞ்சி
வேப்பம் பழம்
பொசுக்கியதே இல்லை
ஊர் வெயில்.
குளிரூட்டப்பட்ட
நகரத்து அறைகளில் வசிக்கும்
என் மகள் கேட்கிறாள்"
ஆடை கட்டிய காமத்திற்கு பெயர் காதல் இல்லை.
நாகரிகம் பெரு வளர்ச்சிபெற்ற போதிலும் இன்றும் தென்னாசிய நாடுகளில் காதல் என்ற வார்த்தையை கேட்டாலே பெற்றோர்கள் பதறிப்போவது ஏன்?
அதற்கு பல காரணங்கள் இருந்தாலும்கூட காதல் என்ற பெயரில் இன்று அதிகரித்துவிட்ட காமக்களிப்புக்களே அதற்கு முதற்காரணமாக அமைந்துவிடுகின்றது. குறிப்பாக விடலைப்பருவத்தினர் விழிப்பாக இருக்கவேண்டிய தருணங்கள் இது. விடைபுரியமுடியாத விநோதங்கள் மனதில் வந்து வட்டமிடும் நாட்களில் உத்தரவின்றியே உள்ளேவரும் இனம்புரியாத இன்ப உணர்வுகள், தவறான வழிநடத்துதல்கள், பாதுகாக்காத சுற்றம் என்பனவே, பெரும்பாலும் இந்த ஆடை கட்டிய காதலுக்கு ஏதுவாகிவிடுகின்றன.
காமக்கண்ணோட்டித்திற்கும், சில வக்கிரகங்களுக்கும் காதல் என்னும் அற்புதமான பெயர் இழுத்துப்போடப்படுவது எத்தனை கொடுமையானது.
குறிப்பாக 13 தொடக்கம் 21 வயதிற்கு இடைப்பட்டவர்களை அந்த வயதிலேயே இவை பற்றிய போதிய தெளிவுடையவர்களாக ஆக்கவேண்டிய தேவை இன்று சமுகத்திற்கு எற்பட்டுள்ளது. இந்த பாரிய பொறுப்பு பெற்றோர்கள், உறவுகள், மற்றும் ஆசிரியரிடமே கூடுதலாக உள்ளதை புரிந்துகொண்டு, ஒரு வளமான எதிர்காலத்திற்காக தமது பிள்ளைகளையும், மாணவர்களையும் உருவாக்கவேண்டும்.
இன்றைய குறும்படம்.
நிர்வாகம்???
நிர்வாகம் என்பது மேல் மட்டத்தில் இருந்து கடைநிலைவரை தம்நிலை அறிந்து நடந்தாலே அனைத்திலும் சிறப்பான பெறுபேறுகளை தாமும், தம்சார்ந்தவர்களும் அடைந்துகொள்ள ஏதுவாக இருக்கும். ஆனால் நிரந்தரமான ஒரு பதவி, வேலைசெய்தேனோ வேலை செய்யவில்லையோ மாதக்கடைசியில் ஊதியம், என்ற நிலை வந்தால், சில அசண்டையீனங்கள், தலைதூக்கி, அதனுடன் சுயநலமும், அலுப்பும் ஒன்றுகூடி கடமைமீறல், நிர்வாக அலங்கோலங்கள் எனத்தொடங்கி அதன் தாக்கம் சமுகத்தின்மேல் பாய்ந்து அதுவே பாரியதொரு பிரச்சினையாக விஸ்வரூபம் எடுக்கும் சந்தர்ப்பங்கள் மிக உண்டு.
நேரடியாகவே சொல்லுகின்றேன், இன்றைய அரசாங்க அலுவலக ஊழியர்களில் ஒரு சிலரின் நிலை இதுதான்.
எத்தனை நிர்வாகச்சிக்கல்கள், பொதுமக்களுக்கு எத்தனை பிரச்சினைகள்.
அரச அலுவலகர்கள் என்ற பதமே மிகத்தவறு. அரசாங்கமே பொதுமக்களின் சேவகர்கள்தான். பொதுமக்களின் வேலைக்காரர்கள்தான் நாங்கள் என்ற உணர்வு இருந்தால் அரச அலுவலகங்களில் எந்தவொரு நிர்வாக சிக்கல்களும் ஏற்படாது.
தனியார் மயமாதல் நடவடிக்கைகளுக்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து, சம்பள உயர்வுக்கு கொடிபிடித்து, ஆனால் வேலைகளை அசண்டையீனமாக செய்துவரும் அரசாங்க ஊழியர்கள் பலபேரை நான் பார்த்திருக்கின்றேன். அதேபோல திறமையானவர்களை வரவிடாமல் இனவாத காரணங்கள்கூறி நிறுத்தி, தாமும் ஒன்றும் செய்யாமல் வைக்கல் பட்டறையில் படுத்திருக்கும் பலர் யாழ்ப்பாண அரச அலுவலகங்களில் உண்டு.
ஒன்றை யோசித்துப்பாருங்கள், இன்னும் வேலை கிடைக்காமல் உங்களைவிட எத்தனை பட்டதாரிகள் வெளியில் ஏக்கத்துடன் நிற்கின்றனர். இதை உணர்ந்தாவது கொஞ்சமாவது கடமை என்ற பதத்தை கடைப்பிடிக்கலாமே!
ஆஹா…போடவைக்கும் அடன்சமி.
நிசப்தமான இராத்திரிகளின் தனிமைகளில் அடன்சமியின் பாடல்களை கேட்டிருக்கின்றீர்களா? அற்புதமான அனுபவங்கள் அவை. கிளஸிக்கல், இந்துஸ்தானி, பாகிஸ்தானிய இசை, ஜாஸ் என எத்தனை ஸ்வரங்களில் அற்புதமான குரலில் மனதை வருடிச்செல்லும் அடன்சமியின் குரல்.
“ராக் டைம்” முதல் “தெரி கஷம்” வரையான ஆல்பங்கள் என் ஐப்பொட்டில் எப்போதும் என் எவர்கிரீன் தெரிவுகள்.
தமிழில்க்கூட ஆய்த எழுத்து திரைப்படத்தில் “மஞ்சத்தில் என்னை மன்னிப்பாயா?” என்ற பாடலை ஏ.ஆர்.ஆர் இசையமைப்பில் பாடியுள்ளார்.
1973ஆம் ஆண்டு பிரித்தானியாவில் பிறந்து கனடிய பிராஜா உரிமையுடன், மும்பைக்கும் கனடாவுக்கும் அடிக்கடி பறந்துகொண்டிருப்பவர் அடன்சமி.
அடன் ஒரு இசைச்சுரங்கம்.
இன்றைய பாடல்.
சர்தாஜி ஜோக்.
ஷர்தாஜியின் ஊரில் இளைஞர்கள் இரண்டு குழுவாகப்பிரிந்து பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்தனர். மாநாடு அளவில் அவர்களது வாதங்களும் பிரதிவாதங்களும் முன்னெடுக்கப்பட்டன…விடயம் இதுதான் பூமிக்கு சூரியனா? சந்திரனா? முக்கியம் என்பதே அந்த வாதம். இந்த நிலையில் அந்த வழியால் எதேட்சையாகச்சென்ற நம்ம ஷர்தாஜியைக்கண்ட அந்த இளைஞர்கள்…எங்கள் பன்டாசிங் அண்ணன்தான் உலகம் முழுவதும் சுற்றித்திரிபவர் அவரையே நடுவராக வைத்து விவாதிப்போம்..தீர்ப்பை அண்ணனே சொல்லட்டும் என்றனர்…ஷர்தாஜியும் அதனை ஏற்றுக்கொண்டு…அமைதியாக இருந்து வாதப்பிரதிவாதங்களைக் கேட்டார்…
இறுதியில் இளைஞர்கள்….அண்ணே..இப்ப நீங்கள் இந்தப்பிரச்சினையை உங்கள் தீர்ப்பால் முடித்துவைக்கவேண்டும்…அத்துடன் அந்த தீர்ப்புக்கான காரணத்தையும் சொல்லவேண்டும் என்றனர்..
நம்ம ஷர்தாஜியின் தீர்ப்பு இதுதான்…
சந்திரனே…பூமிக்கு முக்கியமானது…
காரணம்…சந்திரன் இல்லாவிட்டால் இரவு நேரத்தில் கிடைக்கும் சின்ன வெளிச்சம்கூட கிடைக்காமல்போய்விடும். ஆனால் சூரியனோ வெளிச்சம் தேவைப்படாத பகல் நேரத்தில்க்கூட கண்ணுக்குள் குத்திக்கொண்டு நிற்கின்றது
17 comments:
எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
இவ்வளவு சீரியசான விசயத்தை உரைத்து வந்துவிட்டு கடைசியில் இப்படி சிரிக்க வச்சிட்டிங்களே....
2010: நானும் நிறைய பெற்றிருக்கின்றேன். அதை விட அதிகமாக இழந்திருக்கின்றேன், இந்த வருடத்தில்
வனப்பேச்சி: நேரம் ஒதுக்கவேணும். எடுத்துக்காட்டு கவிகள் அருமை
காதல்: புரிகின்றது
குறும்படம்: touching
நிர்வாகம்: அதிகமாக சென்றதில்லை
அடன்சமி: சில பாடல்கள் கேட்டிருக்கின்றேன்
ஜோக்: :D
GOOD BYE - 2010.:-
கவலை
வனப்பேச்சி:-
கற்றல்...(செம்மொழி மாநாட்டில் என்னை கவர்ந்த பேச்சாளர் தமிழச்சி தங்கபாண்டியன்
ஆடை கட்டிய காமத்திற்கு பெயர் காதல் இல்லை.:-
சீரியஸ்
குறும்படம்:-
குறுகிய நேரத்தில் நிறைய சொன்னது...இடையில் கலங்க வைத்தும் சென்றது..
நிர்வாகம்:-
பொறுப்பு
இன்றைய பாடல்:-
ரசனை...பதிவிறக்கியாச்சு
சர்தாஜி ஜோக்:-
தவிர்த்திருக்கலாம்...குறும் படம் மனதை திருடிவிட்டதால்.....
2011 - தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல வருடமே.
கவிதை - வாசிக்க வேண்டும்.
கா(மம்)தல் - என்னை போன்ற பதின்ம வயதுக்காரர்கள் கவனமாயிருக்க வேண்டும்.
அட்னன்சாமி - ரசித்திருக்கிறேன், யுவனின் இசையிலும் பாடியிருக்கிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி
ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன் . சில வரிகள் சிந்திக்க வைத்தன் . தித்திக்கும் தேன் தமிழ் பொறாமைபட வைக்கிறது .
இந்த ஆண்டு - புத்தாண்டை இனிமையாக வரவேற்போம்.
வனப்பேச்சி வாசிக்க கிடைக்கவில்லை. காதல் - காமம் செல்போன் காதல்களில் இது நிறையவே உண்டு
குறும்படம் நன்று
அந்த நிர்வாகப் படம் சூப்பரண்ணே. நீங்களும் இப்பிடியா
"ஒரு கல் ஒரு கண்ணாடி" (யுவன் - அட்னன் சாமி)
சர்தாரி கலக்கல்
நிர்வாகம்- அடிக்கடி உணர்ந்திருக்கிறேன் #யதார்த்தம்
Thank you for your Year End Cocktail.
Nice :)
//////குறிப்பாக 13 தொடக்கம் 21 வயதிற்கு இடைப்பட்டவர்களை அந்த வயதிலேயே இவை பற்றிய போதிய தெளிவுடையவர்களாக ஆக்கவேண்டிய தேவை இன்று சமுகத்திற்கு எற்பட்டுள்ளது.////
"இன்றைய நிலையில் யாழ்ப்பாணத்துக்கு மிகவும் அவசியமானது .
உங்களுடைய பதிவுகள் ஆழமாக சிந்திக்க தோண்டுகிறது. உண்மையான விடயங்களும் கூட "
வருட இறுதி கொக்ரைல் அந்தமாதிரி அண்ணர். 2010 தனிப்பட்ட ரீதியில் என்னில் பல மாற்றங்களை தந்துவிட்டது. 2011 அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமையட்டும்.
புதுவருட வாழ்த்துக்கள்.
Happy New Year Jana.
அட்னன் சாமி பற்றி 1 1/2 வருடங்களுக்கு முன் நானும் எழுதியுள்ளேன்!
http://vidivu-carthi.blogspot.com/2009/06/adnan-sami.html
அருமை அருமை...
நிர்வாகம் தொடர்பாக உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன் பாஸ்!!
Post a Comment