Thursday, December 30, 2010

மனதிற்குள் எப்போதும் இசை மீட்டுபவர்கள்.

சை ஒரு உன்னதம், சுபானுபவம், மனங்களை மலரச்செய்யும் மந்திரம் இப்படி எதனைவேண்டும் என்றாலும் சொல்லிக்கொள்ளலாம். இசை என்பதிலேயே இது தன்னகத்தை அத்தனையையும் இசைத்துக்கொண்டு சென்றுவிடும் என்ற பொருள் சுட்டி நிற்கின்றதே! என்னைப்பொறுத்த வரையில் இசை ஒரு மூலம், இசை ஒரு தவம், இசை ஒரு வரம்.

உன்னதமான இசை ஒன்றை முழுமையாக அனுபவித்திருக்கின்றீர்களா? ஒவ்வெலாரு செல்லிலும் இசை ஊடுருவும் என்பதன் அர்த்தங்கள் அப்போது கண்டிப்பாக உங்களுக்கு புரிந்துவிடும். மனதில் இருக்கும் அத்தனை உணர்வுகளையும், உணர்வுகத்தின் அடி ஆழத்திற்கே சென்று தட்டி எழுப்பிவிடும் தன்மை இசைக்கு மட்டுமே உண்டு.
என்னைக்கேட்டால்… உன்னதமான இசை ஒன்றைக்கேட்டால் என்னை மறந்து நான் அழுதுவிடுவேன்.
ஆஹா… தியானத்தின் சுகம் என்கிறார்களே…இசையில் இலகித்தல்கூட ஒரு தியானமே. கழுத்துக்கரையோர கீழ்ப்பாகத்தில் இருந்து உச்சந்தலைக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதை இசையில் இலகிக்கும்போது எப்போதும் அனுபவித்துக்கொள்கின்றேன்.

இசை.. கறைபட்ட மனங்களை கழுவிவிடுகின்றது, இசை தெளிவில்லாத மனங்களை, தெளிவு படுத்துகின்றது, இசை மனிதனை மனிதனாக்கின்றது, ஏன் ஒருபடிமேலேபோனால் இசைதான் மனிதனை இறைவனுடன் நெருங்கி இருக்க செய்கின்றது. இசைக்கு மனிதன் மட்டுமன்றி அனைத்து உயிரினங்களும் இலகித்துவிடுவதாக மெஞ்ஞானம் அன்றே சொன்னது, விஞ்ஞானம் இன்று சொல்கின்றது. மெஞ்ஞானமும், விஞ்ஞானமும் எப்போதும் ஒரு கணம் கௌரவப்பார்வை பார்ப்பது என்னமோ இசைக்கு மட்டுமே.

இதோ…இசை எனும் நாதம் பரப்பில் என் மனதில் இசைக்கற்களை எறிந்து, இன்றும் மனதிற்குள் இருந்து இசை பரப்பியவர்களில் பத்துப்பேர்.
இவர்கள் என் மனதில் இசை என்னும் கல் எறிந்தவர்களில் முதன்மையானவர்கள்.
சிரிக்கவைத்தவர்கள், சுகானுபவங்களை பெறவைத்தவர்கள், சற்றுநேரம் என்றாலும் என்னை மறக்கவைத்தவர்கள், இசையின்ப வெள்ளத்தில் என்னை அழவைத்தவர்கள்.

ஷாஹீர் உசைன்

கே.ஜே.ஜேசுதாஸ்

மான்டலின் சிறினிவாசன்


குன்னைக்குடி வைத்தியநாதன்

இசைஞானி இளையராஜா

ஏ.ஆர்.ரஹ்மான்

எம்.எஸ்.சுப்புலஷ்மி

மைக்கேல் ஜக்ஸன்

குரு காரைக்குடி மணியம்


லக்கி அலி

9 comments:

றமேஸ்-Ramesh said...

இசை எப்போதும் என்னை மீட்டுக்கொள்ளும் நானும் நனைந்துகொண்டே இருப்பேன், ஆனாலும் இசையில் நேரகாலம் என்பது அவசியம் அதற்கேற்றால்போல விருப்பத்துக்குரிய இசை வேறுபடும். பகிர்வுக்கு நன்றி. இசை இசைந்துவிட்டது.

பார்வையாளன் said...

எனக்கு இசை ஞானம் இல்லை . இந்த பதிவு நல்ல அறிமுகம் தந்தது

யோ வொய்ஸ் (யோகா) said...

அருமை ஜனா

ஜீ... said...

'ஜானி' பின்னணி இசையை கொஞ்சம் copy + modify பண்ணி யுவன் '7Gரெயின்போ காலனி'யில் பின்னணி அமைத்திருப்பார்! மைக்கேல் ஜாக்சனை ஞாபகப் படுத்தி....மொத்ததுல சூப்பர்! :-)

“நிலவின்” ஜனகன் said...

இசை ஒரு இயற்கை விஞ்ஞானம்....

நல்ல பதிய கூடிய பதிவு......


ஷாஹீர் உசைன்,குன்னைக்குடி வைத்தியநாதன் இருவரையும் ரசிக்க வைத்தமைக்கு நன்றிகள்..

KANA VARO said...

ஆமா, நானும் அழுதிட்டன். இனிமையான இசை.

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா...

Anuthinan S said...

வேறுபட்ட இசை கோலங்கள் ஆனால், ஒன்றிணைந்த பதிவில் அருமையாக இருக்கிறது.

//ஆனாலும் இசையில் நேரகாலம் என்பது அவசியம் அதற்கேற்றால்போல விருப்பத்துக்குரிய இசை வேறுபடும்.//

நானும் இந்த கருத்தை ஆமோதிக்கிறேன்

தர்ஷன் said...

இசையை ரசிக்கும் பேறு ஒரு வரம்
நீங்கள் பகிர்ந்திருந்தது எல்லாமே பிடித்திருந்தது
ராஜாவின் பின்னணி இசை இல்லாமல் மௌனராகம், நாயகன்,தளபதி படங்களை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
ஆ பி ஜா பாடலின் சிங்கள் வடிவத்தை கேட்டிருக்கிறீர்களா?
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜனா அண்ணா

Cool Boy கிருத்திகன். said...

அருமையான தேடல் அழகான பதிவு...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

LinkWithin

Related Posts with Thumbnails