நாம் கதைகேட்டு அதை கற்பனையாக மனத்திரையில் விழுத்தி, அதில் சுவைகண்ட வேளைகளில் எம் உணர்வுகள் எப்படி?
“சினோவைட்” மீள எழுந்திருக்கவேண்டும் என்று கதைகேட்டபோதே எம் மனம் பிரார்த்தித்தலில்லையா? எத்தனை இரவுகள் ஈசாப்கதைகளில் வரும் பாத்திரங்களுடன் நாமும் ரொட்டியும், பேரிச்சம்பழமும் சாப்பிட்டுள்ளோம் இல்லையா? ஆயிரத்தோர் இரவு கதைகளில் தாலிவிற்;க்கு தன் தையபாதான் கிளி என்பது தெரியவேண்டும் என்று தையபாவைவிட தவிர்தவர்கள் நாம் இல்லையா?
ஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் பிஞ்சு மனத்தில் நாம் கேட்ட கதைகள்தான் நமக்கு உணர்வுகளையும், கற்பனைகளையும் ஊட்டிவிட்டது என்பதை என்றாவது சிந்தித்துள்ளோமா?
இன்று நம் கண்களால் ஆயிரம் புத்தகங்களை வாசித்து இறுதிப்பக்கத்தை மூடினாலும், அவற்றில் சில மட்டும், வாசித்து மூடும்போதே மனதிற்குள் ஏதாவது ஒரு உணர்வின் நெருடலை தந்ததாக அனுபவித்துள்ளோம் அல்லவா?
ஆகவே எம் அடி மனத்தில் உள்ள அந்த உன்னதமான உணர்வுகள், அன்பு, பாசம், ஏக்கங்கள் என்பவற்றை மிக இலாவகமாக தட்டிக்கொடுக்கும் எழுத்துக்கள், காட்சிகள் பார்த்துமுடியும்போது நாம் அதில் ஒன்றி இலகித்துப்போய் நிற்கின்றோம்.
அத்தோடு நின்றுவிடாது அவை எம்மை குறிப்பிட்ட சில நேரத்திற்கு தன்னகத்தே ஆட்கொண்டு விட்ட நிலையில் எம் மனம் சஞ்சரித்து நிற்பதையும் என்றாவது அனுபவித்து பார்த்திருக்கின்றீர்களா?
தேர்ச்சி பெற்ற ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களோ அல்லது, மிகப்பிரமாண்டமாக திரைப்படம் எடுக்கும் இயக்குனரோ தான் அதை செய்யமுடியும் என்று இல்லை.
இந்த உணர்வுகளின் உந்துதல்களை எம் மனத்திரைக்கு கொண்டுவரும் சாமான்ய ஒரு எழுத்தாளனும், அல்லது ஒரு குறும்பட இயக்குனனும்கூட பிரமாக்களே.
ஆக..உணாவுகளை தட்டியெழுப்பும் உன்னத படைப்புக்கள் கதைகேட்கும் நாட்களில் இருந்து இன்றுவரை எம் மனதை வருடிச்செல்வதை உணர்கின்றோம் இல்லையா?
சில நாவல்கள் படித்து இந்த உணர்வுகளை நீங்கள் அடைந்திருப்பீர்கள், அனால் பின்னர் அதேநாவல் திரையில் வரும்போது, அது நாவல்போல் இல்லாமல் அந்த உணர்வை தராமல் ஏமாற்றிய சந்தர்ப்பங்களையும் சந்தித்திருப்பீர்கள்! அதேபோல வாசிக்கும்போது சுமாராக இருந்த நாவல்கூட, திரைக்காட்சியாகவரும்போது உணர்வுகளை தட்டிவிட்டு செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டுதானே!!
சில வாசிப்புக்கள், திரைக்காட்சிகள், எம் மனதை வருடிவிடுகின்றன ஆனால் அந்த உணர்வு எத்தகயதாக இருக்கும் என்பது வரையறுத்து சொல்வது கொஞ்சம் கஸ்டமாக இருக்கும்.
கீழே ஒரு திரைக்காட்சி…கண்டிப்பாக முழுவதையும் பாருங்கள்..
அந்த ஏதோ ஒரு உணர்வு கண்டிப்பாக கிடைக்கும்.
அதேவேளை இந்தக்கதை வாசிப்பதாக இருந்தாலும் அதே உணர்வை தந்திருக்கும்.
பார்த்துவிட்டு கண்டிப்பாக நீங்களும் என்னுடன் பேசிவிட்டுபோங்கள்…
8 comments:
பகிர்வுக்கு நன்றி அண்ணா, சிறந்த ஒரு திரைக்காட்சி, I am impressed by this film...:)
Super Bro! :-)
பகிர்வுக்கு நன்றி
ம்...
குறை நினைக்காதைங்கோ படத்தை நாளைக்குத் தான் பார்ப்பன்.
பதிவுக்கு நன்றி அண்ணா
தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html
நல்ல பதிவு!
அண்ணா தீட்டத் தீட்ட ஜொலிக்கும் வைரம் போல் உங்கள் பதிவு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகிறது
(காணோளி நான் காணா ஒளியாகிப் போய்விட்டதண்ணா மன்னிக்கவும்..)
Post a Comment