Tuesday, December 7, 2010

ஹொக்ரெயில் - 07.12.2010

பிரிட்டன் பொலிசாரை சந்தித்தார் ஜூலியன் அசஞ்ச்.

இன்று தனது சட்டவல்லுனர் சகிதம் பிரிட்டன் பொலிஸாரை சந்தித்து பல விடயங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்ச்.
அவரது சுவிஸ்கணக்கு முடக்கப்பட்டு, இன்ரப்போல் தேடும் பட்டியிலில் அவர் தொடர்ந்தும் இருந்துவரும் நிலையில் அவர் லண்டனில்த்தான் தப்பி தலைமறைவாகியுள்ளார் என ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுவந்த நிலையிலுமே இந்தச்சந்திப்பு ஏற்பாடாகி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகியுள்ளது
பொதுவாகவே தனது எதிரிகள் உலகத்திற்கே எதிரிகளாக இருக்கவேண்டும் என்று பிரியப்படும் அமெரிக்கா! அப்படியே தனது எதிரிகளை உலக எதிரிகளாக சித்திரித்துவந்த நிலையில் அவர்களின் தற்போதைய “லேட்டஸ்ட்” எதிரி அவர்களின் நேச நாட்டு பொலிஸாருடன் சந்திப்பை மேற்கொண்டதே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. இதில் அதிமுக்கியமான விடயம் என்னவென்றால் ஜூலியன் அசஞ்ச் மீது எந்தவிதமான குற்றங்களையும் பிரிட்டன் பொலிஸார் பதிவு செய்யவில்லை என்பதுதான்.
ஆனால் ஏற்கனவே பெண் ஒருவர்மீது பாலியல் பலாத்காரத்தில் அவர் ஈடுபட்டவர் என்ற ரீதியில் பிரித்தானியப்பொலிஸார் அவரை கைது செய்யும் பிடியானையினை பெற்றுள்ளனர்.
எது எப்படியோ தாம் தன்மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறும்பெண் சொல்வது பொய். தான் அவரது விருப்பத்துடனே அவருடன் உறவுகளை வைத்திருந்தாகவும் ஜூலியன் அசஞ்ச் தெரிவித்துள்ளார்.
“ஒருதன்ட வீக்னஸ்ஸை பிடித்து, ஆளைப்பிடரியிலை அடிப்பதுதான் சர்வதேசத்தின்ரை வீக்னஸ்ஸாக இருக்கு”

அடலைட்டில் கம்பீரமாக பறக்கின்றது பிரித்தானிய வெற்றிக்கொடி.

ஆஷஸ் தொடரே கிரிக்கட் ஆர்வலர்களுக்கு ஒரு திருவிழாதான்.. எவராலும் மறுக்கமுடியாத ஒன்று. முதலாவது போட்டி எப்படியோ சமநிலையில் முடிந்தாலும், இரண்டாவது போட்டியில் “பிரித்தானியாவில் சூரியன் மறைவதில்லை” என்று பிரித்தானியரை மீண்டும் ஒருமுறை இறுமாப்பு கொள்ளவைத்துள்ளார்கள் இன்னிங்ஸ் வெற்றி ஒன்றின் மூலமாக பிரித்தானிய அணியினர்.
620 என்ற இலக்கை அவுஸ்ரேலியாவுக்கு நிர்ணயித்து, அவுஸ்ரேலியாவை முதல் இன்னிங்ஸில் 245, இரண்டாவது இன்னிங்ஸில் 304 என்று சுறுட்டி அபாரமான வெற்றியை கொண்டாடியுள்ளது இங்கிலாந்து.

இந்தவாரக்குறும்படம்.

வர்ஸாவில் ஒரு கடவுள்.

தொடர்ந்து படிக்கமுடியாமல் கிட்டத்தட்ட ஒரு 20 நாட்களாக பகுதி பகுதியாக படித்து முடித்து கொஞ்சம் பிரமிக்கவைத்த புத்தகம் இது.
தமிழவனின் அற்புதமான ஒரு படைப்பு என்று சொல்லக்கூடிய அளவிற்கு உள்ளது. பல பாத்திரங்களுக்கிடையேயான உரையாடல்கள் அதிகமாகக்காணப்பட்டாலும், அந்த உரையாடல்கள்மூலமாகவே நாவலின் அடிநாதமான ஒரு கோர்ப்பு தொடராக கொண்டு செல்லப்படுவதை அவதானிக்கலாம்.
வர்ஸா எங்குள்ளது என்று தெரியும்தானே? ஆம் இந்தக்கதை போலந்து நாட்டை தழுவி எழுதப்பட்டாலும், தமிழ் தமிழாகவே இருக்கின்றது.
நாவலின் முன்னுரையிலேயே இந்தக்கதை எழுதும்போது படிக்க கிடைக்காத ஐரோப்பிய நாட்டு கிளாசிக் கதைகளை தாம் படித்துக்கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார் தமிழவன். அதனால் அவற்றின் தாக்கமும் இந்தக்கதையில் தென்படலாம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் ஒரு சில சந்தர்ப்பங்களிலேயே அவற்றை அவதானிக்கமுடிகின்றது. எனது இந்த நாவல் வாசிப்பு அனுபவம் என்னவெனின், படிக்க கொஞ்சம் நேரமும், பொறுமையும்வேண்டும்.

பத்துதலை நாகம்..படம் எடுத்ததா?

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் தொல்புரத்தில் ஒரு வயற்கரையோரம் பத்து தலைகளை உடைய நாகபாம்பு ஒன்று வந்ததாகவும் இதை சிலர் கண்டுள்ளதாகவும், அதேவேளை இந்த பத்துதலை நாகபாம்பு பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீர் என்று வயல்வெளிக்குள் ஓடி மறைந்துவிட்டதாகவும் வதந்தியாக இருந்தாலும் சுவையான தகவல்கள் பரவலாக அடிபட்டன. இது இப்படி இருக்க தற்போது மீண்டும் அப்படி ஒரு பாம்பு வேறு ஒரு பிரதேசத்தில் காணப்பட்டதாகவும் இதை சிலர் தங்கள் மொபைல்களில் படம்கூட எடுத்துள்ளனர் என்று நேற்று என்காதில் ஒரு செய்தி வந்தது.
என்னதான் இருந்தாலும் மக்களின் வேடிக்கை விநோத பழக்கமும், வதந்திபரப்பும் தன்மையும் இன்னும் இல்லாமற்போகவில்லையே என்பது மட்டும் மனதில் நின்று படம் எடுக்குது.


வெளிநாட்டு புத்தகங்கள், சஞ்சிகைகள் தாமதம்!

தென்னிந்தியா உட்பட இலங்கைக்குவரும் வெளிநாட்டு புத்தகங்கள், சஞ்சிகைகள் என்பன போர் உச்சக்கட்டத்தில் இருந்த நாட்களில் இருந்து இதுவரை சுங்கப்பிரிவினரின் தடுப்பில் வைக்கப்பட்டு, அவை ஆய்வு செய்யப்பட்டு, நாட்டுக்கு உகந்தவை அல்லாத பகுதிகள் நீக்கப்பட்டு (கிழிக்கப்பட்டு) அதன்பின்னரே விற்பனைக்கு வெளியே அனுமதிக்கப்பட்டுவந்தன. இதனால் உதாரணமாக எட்டாம் மாத ஆனந்தவிகடன் எமக்கு ஒன்பதாம்மாதம் இறுதியிலேயே கிடைக்கும். ஆனால் அண்மையில் அப்படியான நடவடிக்கைகள் இனி எடுக்கப்படமாட்டாது எனவும, வெளிநாட்டு புத்தகங்கள், சஞ்சிகைகள் உடனுக்குடன் வெளியேற அனுமதிக்கப்படும் எனவும் அரசும், உயர்மட்டமும் அறிவித்திருந்தது. எனினும் இந்த அறிவிப்பு வந்து ஒருமாதம் ஆனாலும்கூட தற்போதும் அதே தாமதமும், சில கிழிஞ்சல்கள் (ஆங்கில சஞ்சிகைகளில்க்கூட) உள்ளதையும் அவதானிக்கமுடிகின்றது.

காதோடுதான் நான் பாடுவேன்…
வெள்ளிவிழா திரைப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் அருமையான குரலில் காதோடு என்றும் நின்று ஒலிக்கும் அருமையான இந்தப்பாடல் அன்றுமட்டும் அல்ல இன்றும் பலதரப்பட்டோரின் இரசனைக்கு விருந்தாகி நிற்கின்றது.

சர்தாஜி ஜோக்
நம்ம பன்டாசிங்கும், அவரது ஹசின் சன்டாசிங்கும் ஒருநாள். டில்லியில் இருந்தனர். ஒரு கோப்பி பாரில் இருவரும் கொப்பி அருந்திக்கொண்டிருக்கையில் பக்கத்தில் தீவிரவாதிகள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர் எங்கள் காரில் இரண்டு ரைம் பொம்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை இந்த மாவட்ட கலக்டர் காரில் பொருத்தவேண்டும். அடுத்ததை பொதுச்சந்தை ஒன்றில் பொருத்தவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.
இதைக்கேட்ட நம்ம இரண்டு புத்திசாலிகளும் அவர்களின் காரைக்கண்டுபிடித்து அவர்களின் காரிலேயே அதைப்பொருத்துவதாக முடிவு செய்தனர். பன்டாசிங் பொருத்திக்கொண்டிருக்கும்போது சன்டாசிங் கேட்டார்…
பொருத்தும்போது தவறுதலாக வெடித்துவிட்டால் என்ன செய்வது? அதற்கு நம்ம பன்டாசிங் சொன்னார்….முட்டாளே…அவர்கள் தப்பமுடியாது இன்னும் ஒரு குண்டு இருக்கின்றது அல்லவா? அதைப்பொருத்திவிடலாம்

12 comments:

Ramesh said...

சுப்பர். நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி அண்ண.

pichaikaaran said...

நல்ல தகவல்கள் . அந்த நாவலைப்பற்றி தனி பதிவிட்டால் நன்றாக இருக்குமே . விரிவாக எழுதுங்கள்

Kiruthigan said...

அடடா...! சுடுசோறு போச்சே..!!!

//பத்துதலை நாகம்..படம் எடுத்ததா//
கேக்கறவன் கேணயனாயிருந்தா எலி ஹெலி ஓடிச்சுன்னும் சொல்லுவீங்களே..!!
அத எடிட் பண்ணின வெங்காயம் நிழலையும் வரையணும்கிறத மறந்திடிச்சு போலிருக்கு...!!

நா வேணும்னா நல்லூரடியில ஆறு தலை பசு மாடு ஒண்டு உலாவுதாம் படம் காட்டவா..?

வழக்கம் போல மற்ற பகுதிகள் அசத்தல்.

Subankan said...

// றமேஸ்-Ramesh said...
சுப்பர். நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி அண்ண.
//
செல்லாது செல்லாது, முதல் பின்னூட்டம் எனக்குத்தான் சுடுசோறு எண்டுதான் இருக்கவேணும் :P

கலவை அருமை அண்ணே :)

புத்தகங்களைப் பற்றிப் பதிவு போட்டு அடுத்தவங்களைக் கடுப்பாக்குறதே சிலருக்கு வேலயாப்போச்சு

//கேக்கறவன் கேணயனாயிருந்தா எலி ஹெலி ஓடிச்சுன்னும் சொல்லுவீங்களே..!!
அத எடிட் பண்ணின வெங்காயம் நிழலையும் வரையணும்கிறத மறந்திடிச்சு போலிருக்கு...!!

//

பயபுள்ள என்னமா நோட் பண்ணுது

KANA VARO said...

விக்கி லீக்ஸ் //

வடை போச்சே!


நாகம்//

தலை கிர்ர் எண்டுது...

கன்கொன் || Kangon said...

:-))

அந்தப் படத்தை பல செய்தி இணையத்தளங்கள் என்று சொல்லிக் கொள்வோரும் வெளியிட்டது தான் கொடுமை.

கூல்போய் சொன்னது போல நிழலும், அத்தோடு தலைகளில் இருபுறமும் வெளியே உள்ள 2 தலைகளிலும் கறுப்பு நிறமாக பூச்சி போன்ற ஒன்று இருக்கிறது.
தலைகள் இணைத்ததும்இடது புறத்தில் சரியில்லை, blur செய்யப்பட்டது தெரிகிறது.

நாங்கள் திருந்தமாட்டம்.

Bavan said...

//பிரிட்டன் பொலிசாரை சந்தித்தார் ஜூலியன் அசஞ்ச்.//

விக்கிலீக் லீக் ஆகத் தொடங்கின பிறகு செம பேமஸ் ஆகிட்டுது..ஹிஹி

//அடலைட்டில் கம்பீரமாக பறக்கின்றது பிரித்தானிய வெற்றிக்கொடி.//

ஆஹா.. என்ன ஒரு அணி..:D:D:D:D:D

ஆனால் சின்னக் கவலை, நான் அதிகாலை 7.30க்கு நித்திரைவிட்டு எழும்ப மட்ச் முடிஞ்சுது..:(

டண்டணக்கா My Favorite Andersonனும் இண்டைக்கு விக்கெட் எடுத்திருக்கிறார். ஹைலைட்சில்தான் பாக்கோணும்..:D

//பத்துதலை நாகம்..படம் எடுத்ததா?//

ஆம் அண்ணா, அந்தப் 10 தலைப் பாம்பு படத்தை எடிட் பண்ணியவர், பின்னால் நிழலில் ஒரு தலையோடு விட்டுட்டார், அதுதான் மாட்டுப்பட்டுட்டார், இல்லாட்டி பக்கா எடிட்டிங்..:)

//காதோடுதான் நான் பாடுவேன்…//

:D

//சர்தாஜி ஜோக்//

ஹாஹாஹா...:D

ம.தி.சுதா said...

இம்முறையும் ஒரு கலக்கல் தான் போங்க... அண்ணாத்தே.. அரசியல், விளையாட்டு, புத்தகம், நகைச்சுவை என்று ஒன்றுக் கொன்று சளைக்காதவை..

நன்றிகள்..

Kiruthigan said...

@ Subankan
////கேக்கறவன் கேணயனாயிருந்தா எலி ஹெலி ஓடிச்சுன்னும் சொல்லுவீங்களே..!!
அத எடிட் பண்ணின வெங்காயம் நிழலையும் வரையணும்கிறத மறந்திடிச்சு போலிருக்கு...!!

//

பயபுள்ள என்னமா நோட் பண்ணு//

எல்லாம் தங்களிடம் குடித்த யானைப்பால் மன்னா...!!!


@ கன்கொன் || Kangon
//கூல்போய் சொன்னது போல நிழலும், அத்தோடு தலைகளில் இருபுறமும் வெளியே உள்ள 2 தலைகளிலும் கறுப்பு நிறமாக பூச்சி போன்ற ஒன்று இருக்கிறது.
தலைகள் இணைத்ததும்இடது புறத்தில் சரியில்லை, blur செய்யப்பட்டது தெரிகிறது.//

கோபியின் கழுகுப்பார்வையிலிருந்து தப்பமுடியுமா..?

@ Bavan
//ஆம் அண்ணா, அந்தப் 10 தலைப் பாம்பு படத்தை எடிட் பண்ணியவர், பின்னால் நிழலில் ஒரு தலையோடு விட்டுட்டார், அதுதான் மாட்டுப்பட்டுட்டார், இல்லாட்டி பக்கா எடிட்டிங்..:)//

ஆமா பவன் அடுத்தமுறை அவர் திருத்துவார் என நினைக்கிறேன்..
ஆனா கோபி சொன்ன மாதிரி
//நாங்கள் திருந்தமாட்டம்//

anuthinan said...

அருமையான தகவல்கள் & பத்து தலை நாகம் ரொம்பவே ஓவர்.....!!

சர்தாஜி ஜோக் ரொம்பவே யோரு!!

வந்தியத்தேவன் said...

உந்தப் பாம்பை நான் நம்பமாட்டேன்.
நல்ல கிக்காத் தான் இருக்கு ஹொக்ரெயில். சர்தாஜிக்குப் பதிலாக சுபாங்கன் ஜோக் கூல் போய் ஜோக் என அந்த ஜோக்குகளில் சர்தாஜிப் பெயர்களை மாற்றிப்போடுங்கள் இன்னும் சிரிப்பாக இருக்கும்.

Unknown said...

//“ஒருதன்ட வீக்னஸ்ஸை பிடித்து, ஆளைப்பிடரியிலை அடிப்பதுதான் சர்வதேசத்தின்ரை வீக்னஸ்ஸாக இருக்கு”//

//பத்துதலை நாகம்..படம் எடுத்ததா?//
ஏன்ணே?..ஏன்?... எதுக்கு?
வேணாம்! :-)

LinkWithin

Related Posts with Thumbnails