1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆளுகையில் இருந்து முற்றுமுழுதாக இலங்கை எனும் அழகிய தேசம் சுதந்திரம் அடைந்து தேசபிதா டி.எஸ்.செனநாயக்கா இலங்கைத்தேசியக்கொடியை ஏற்றிவைத்தபோது.
1996 ஆம் ஆண்டு லாகூரில் இடம்பெற்ற உலகக்கோப்பை கிரிக்கட்போட்டியில் அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றியை பெற்று உயர்ந்தபோது...
2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியின்போது இலங்கை குறுந்தூர ஓட்டவீராங்கனை
சுசந்திகா முதன்முதலாக இலங்கைக்கு ஒரு ஒலிம்பிக் பதக்கத்தை வாங்கியபோது
2004ஆம் அண்டு ஆழிப்பேரழிவில் இருந்து மீண்டுவர, இனமத பேதங்கள் இன்றி ஒருவருக்கு ஒருவர் உதவி, ஆறுதல்கூறி ஒருவராகவே நிமிர்ந்து காட்டியபோது..
உலகிலேயே பாலர்பாடசாலைமுதல், பல்கலைக்கழகம்வரை இலவச கல்வியை வழங்கும் தேசம் எமதே என்றபோது..
இதே ஆண்டு 800 விக்கட்டுக்கள் என்ற மகத்தான சாதனையினை இலங்கை மைந்தன் முரளிதரன் நிகழ்த்தி மலைக்கவைத்தபோது..
இந்த அழகியதேசம் எமதே என்று என்றும் நினைக்கும்போது...
15 comments:
அண்ணா மன்னிக்கணும் நம்மளால விடியோபார்க்க முடியவில்லை... இருந்தாலும் கடைசி வீடியோ தவிர மற்றவை பார்த்திருக்கிறேன்....
இம்புட்டு விசயம் இருக்கா ஐயோ தெரியாமல் போயிட்டே
உண்மையில் கிரிக்கேட் போட்டிகளின் போது நான் பெரிதும் பெருமிதப்பட்டிருக்கிறேன்... இலங்கையின் முதலாவது ரெஸ்ட போடடி வென்ற தருணமும் பஸ்சில் கூட இலவசமாக விட்டார்களாமே...
முதலாவது வீடீயோ இன்றுதான் பார்த்தேன்,
நானும் இலங்கையன் என்பதில் பெருமையடைகிறேன்..:D
பகிர்வுக்கு நன்றி அண்ணா..:)
எனது தேசம் இலங்கை
நான் பெருமைப்படுகிறேன்
இங்கு இனமதமொழி பேதமின்றி மக்கள் நகமும் சதையும் போல கொஞ்சிக்குலாவி வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்றார்கள்.
இந்த அழகிய தீவு கௌதம புத்தர் நமக்காய் தந்தது.
பின்னர் திராவிடரின் வருகையுடன் அவர்களும் எமது நாட்டில் வாழத்தொடங்கினர்.
எம்மை ஆட்கொண்ட போத்துக்கேயர் ஒல்லாந்தர் போன்றவர்களுக்கு அடிபணியாமல் கண்டியை ராசதானியாய் கொண்டு ஆட்சிசெய்தநம் மன்னர்களால் பல வழிபாட்டுத்தலங்கள் சிலைகள் அமைக்கப்பெற்றன.
இறுதியில் வெள்ளையர்களிடமிருந்து இலங்கையருக்கு சுதந்திரம் கிடைத்து தற்போது ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவருகிறது.
என்ன ஜனா அண்ணே ஏதாவது தேசமானிய விருதுக்கு குறிவைக்கிறியளோ...
மனசாட்சியே இல்லாமல் எப்படி இப்படி எழுதுறீர்?
மனசாட்சியே இல்லாமல் எப்படி இப்படி எழுதுறீர்?
மனசாட்சியே இல்லாமல் எப்படி இப்படி எழுதுறீர்?
மனசாட்சியே இல்லாமல் எப்படி இப்படி எழுதுறீர்?
உலகுக்கே முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டிய தேசம்...
அப்ப பெருமைப்படவும் விஷயம் இருக்கு எண்டுறீங்க? :-)
//பார்வையாளன் said...
உலகுக்கே முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டிய தேசம்..//
இப்பகூட உலகுக்கு முன்மாதிரியாத்தான் இருக்கு!
எப்படி ஒரு தேசம், ஒரு ஆட்சி, அடக்குமுறை, அராஜகம் இருக்கக்கூடாதுன்னு!
நானும் உங்களுடன் சேர்ந்து பெருமை பட்டு கொள்ளுகிறேன்!!!
இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?... நல்ல விசயம்..
Post a Comment