இவரைப்பற்றியோ, இவர் வயதைப்பற்றியோ தெரியாமல் இவரது எழுத்துக்களுடன் பயணிப்பவர்கள் கண்டிப்பாக இவரின் வயது 21 தான் ஆகின்றது என்றால் நம்புவதற்கு தயாராக இருக்கமாட்டார்கள். ஏன் என்றால் எழுத்துக்களின் கருத்துசெறிவு வயதையும்மீறிய இவரது உலக ஞானத்தை சுட்டிக்காட்டி நிற்கும்.
தனது ஒவ்வொரு பதிவிலும் நிறைய உபயோகமான தகவல்கள் வெளிவரவேண்டும் என்ற இரவது ஆர்வம், ஒவ்வொரு பதிவிலும் புலப்படும்.
எந்தவிடயப்பரப்பை எடுத்துக்கொண்டாலும் அதை ஏற்கனவே அறிந்திருக்கும் இவரது எல்லைகள் அற்ற தேடல்கள் பல பதிவர்களையும் வாசகர்களையும் எத்தனையோதடவைகள் பிரமிக்கவைத்திருக்கும் என்றால் அது சத்தியமாக மிகையான விடயம் கிடையாது.
விவாத அரங்குகளிலே கர்ஜனையாக ஒவ்வொரு வசனத்தையும் ஆக்கபூர்வமாக இவர் கர்ஜிக்கும்போது, நடுவர்கள்கூட தன்னிலை மறந்துபோன சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு என பலரும் கேள்விப்பட்டிருக்கின்றார்கள். விவாத அரங்குகளின் தாக்கம் இவர் எழுத்துக்களிலும் சிலவேளை ஆங்காங்கே எட்டிப்பார்ப்பதை அவதானிக்கமுடியும்.
பேச்சுக்களிலும் பிரமிக்கவைத்து, எழுத்துக்களாலும் பிரமிக்கவைக்கும் திறமை குறிப்பட்ட சிலருக்கே கைவரப்பெற்றது என மாமேதைகளே சுட்டிக்காட்யுள்ள நிலையில், பேச்சுக்களும், எழுத்துக்களும் ஒருங்கே கைவரப்பெற்றவர் அசோக்பரன்.
இவர் தற்போது சட்டக்கல்வியை தெரிவுசெய்து கல்விகற்றுவருவது தனக்கேயான மிகச்சிறந்த துறையினை இனங்கண்டு கற்றுவருகின்றார் என பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவில் உள்ளது.
தமிழில் பதிவெழுதிவரும் அதேநேரம் ஆங்கிலத்திலும் தனது பதிவுகளை எழுதிவருபவர் திரு. அசோக்பரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிந்தித்துப்பார்த்தால், கொழும்பு ரோயல் கல்லூரி தனியே ஒரு சட்டமாணவனாக மட்டும் அன்றி, பல்கலை உடையவனாகவே இவரை பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது என்பது தெளிவாகின்றது.
காலத்தின் சூழ்நிலைக்கேற்ற இவரது பதிவுகள் சிலவேளைகளில் இவரை திரும்பிப்பார்க்கவைத்துள்ளன. அன்றைய சூழ்நிலையில் அந்த விடயம் பற்றிய மிக நேர்த்தியான பார்வைகளாக அவை அமைந்திருக்கும்.
அரசியல், விஞ்ஞானம், கட்டுரைகள், இலக்கியம், சமுதாயம், இசை, விளையாட்டு என அனைத்திலும் அருமையான தேடல் உள்ளவர் அவர் என அவரது பதிவுகள் சுட்டிக்காட்டி நிற்கும்.
தன் நிலைவெளிப்பாடு பற்றி வெளிப்படையாக தெரிவுக்கும் தன்மை பலரையும் அவரைப்பார்த்து ஆச்சரியப்படவைத்தது என்பது உண்மை. தேர்தெடுத்து சில பதிவுகளை மட்டுமே விரும்பி வாசிப்பவர்கள் பலர் கண்டிப்பாக தாங்கள் விருப்பு பட்டியலில் அசோக்பரனின் வலைத்தளத்தையும் குறிப்பெடுத்து வைத்திருப்பதை அவதானிக்கலாம்.
உண்மையிலேயே வயதிற்கும் மீறிய தேடல்கள் உள்ள அவர், இனிவரும் நாட்களில் அந்த தேடல்கள் அதிகரிக்க அதிகரிக்க இலங்கை எழுத்தாளர்களின் வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பார் என்பது வெள்ளிடை மலை.
சரி..இந்தவாரப்பதிவர் திரு. அசோக்பரனிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளும், அதற்கான அவரின் பதில்களும் இதோ..
கேள்வி: பதிவுலகத்தில் தாங்கள் கற்றுக்கொண்டவைகள் எவை? பெற்றுக்கொண்டவைகள் எவை?
அசோக்பரன் : கற்றுக்கொண்டவைகள் - நிறைய மாற்றுக்கருத்தக்கள் சமூகத்திலுண்டு, ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மையானவன். ஆகவே நிறைய மாற்றுக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பதிவுலகத்திலிருந்தும் கற்றுக்கொள்ள முடிந்தது.
பெற்றுக்கொண்டவைகள் - நண்பர்கள்! இதோ உங்களைப் போன்ற அன்பான உறவுகள்! அடிக்கடி வாதாட சில நண்பர்கள்! விடயமறியாது தவிக்கும் போது உடனே உதவும் நண்பர்கள்! கருத்துக்களுக்கு ஆதரவு தரும், பின்னூட்டம் தரும் நண்பர்கள்!
கேள்வி: ஒருபேச்சாளனாக, ஒரு எழுத்தாளனாக என்ன வித்தியாசத்தை தாங்கள் இரண்டிற்கும் இடையில் பார்க்கின்றீர்கள்?
அசோக்பரன் : பேச்சுக்கும் எழுத்துக்கும் என்ன வித்தியாசம்?! எழுதும் போது அந்தக் கருத்தை மறுப்பவரால், அதே கருத்தைப் பேசும் போது பல இடங்களில் மறுக்கமுடிவதில்லை! எழுத்து என்பது வாசகர் புரிந்துகொள்ளும் முறையில்தான் பெரிதும் தங்கியிருக்கிறது, பேச்சு என்பது பேச்சாளர் புரியவைக்கும் முறையில்தான் பெரிதும் தங்கியிருக்கிறது. சில “பிரபல” எழுத்தாளர்கள் மிகத்தாராளமாக சில “வார்த்தைகளை” தமது படைப்புக்களில் பாவிப்பார்கள் ஆனால் பேச்சு என்று வரும்போது அவர்களால்கூட பலவேளைகளில் அந்தச்சொற்களைப் பயன்படுத்தமுடிவதில்லை - முடியாது. ஆனால் பேசும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டிய ஒரு தேவை இருக்கிறது, வார்த்தைகள் ஒருமுறை விடப்பட்டால் அதற்கு மாற்று இல்லை! எழுத்து பிரசுரிக்கும் வரை எத்தனை முறையும் பிழைதிருத்தம் பார்த்துக்கொள்ளலாம் - திருத்திக்கொள்ளலாம்! என்னைப் பொருத்தவரை இரண்டும் வித்தியாசமான இரண்டு கலைகள் - பொதுவாக, எழுத்து மூளையைத் தொடும், பேச்சு மனதைத் தொடும்
கேள்வி: :தமிழ் பதிவுகள் எப்படி பயணித்தால் ஆரோக்கியம் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
அசோக்பரன் :தமிழ்ப்பதிவுலகம் வம்புச்சண்டைகள், விதண்டாவாதங்களைக் கழித்துவிட்டுப்பார்த்தால் நல்லாகத்தான் இருக்கிறது. இன்று பத்திரிகைகள், இணைய செய்திச்சேவைகள் போன்றன பதிவர்களின் பதிவுகளைத் தாம் பயன்படுத்தும் (சில சந்தர்ப்பங்களில் திருடும் என்றும் சொல்லலாம்) அளவிற்குப் பதிவர்கள் சிறப்பாக எழுதுகிறார்கள்! ஆரோக்கியமான விடயம்! ஆங்காங்கே நடக்கும் வம்புச்சண்டைகளும், விதண்டாவாதங்களும் வீணே! கருத்துடன் கருத்து மோதலாம் ஆனால் தனிப்பட்ட தாக்குதல்களும் கூடவே இடம்பெறுவது கவலைக்குரியது. கருத்துக்குப் பதில் கருத்தைக் கூறிவிட்டு அமைதியாகிவிடுவது மெத்தச்சிறந்தது ஏனென்றால் தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும் போது ஒருவேளை உங்களின் கருத்தில் இருக்கும் நியாயத்தை மற்றவர் புரிந்துகொண்டாலும் கூட அவரது ஈகோ அதை ஏற்றுக்கொள்ள விடாது.
இது அடிப்படை மனித உளவியல் - எல்லோருக்கும் பொதுவானது. கருத்துக்களை கருத்துக்களால் சந்திப்போம் - எல்லோரும் நான் சொல்வதுதான் சரி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு - அது சாத்தியமில்லை. ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மையானவன். ஆகவே நிறைய மாற்றுக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பதிவுலகம் பெறவேண்டும். தமிழை இணையத்தில் பிரபலப்படுத்தியதில் எம் தமிழ்ப்பதிவர்களின் பங்கு பாரியது என்பதில் ஐயமில்லை! குற்றங்குறைந்து எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான நிலைமையைத் பதிவுலகம் அடையும் என்று நம்புகிறேன்.
http://nkashokbharan.blogspot.com/
நல்லது நண்பர்கேளே இந்தவாரப்பதிவராக பதிவர்.என்.கே.அசோக்பரன் பற்றியும், அவரது மூன்று பதில்களையும் பார்த்தோம் மீண்டும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை இன்னும்மொரு பதிவுலக நண்பருடன் வருகின்றேன்.
நன்றி.
20 comments:
அருமையான அறிமுகம். அஸோக்கின் தேடல்களையும், கருத்துக்களை சொல்லும் விதத்தையும் பார்த்து பலதடவை ஆச்சரியப்பட்டிருக்கிறேன் :)
அண்ணா நல்லதொரு முயற்சி.. அசொக்பரனை பற்றி உண்மையில் எனக்கு அவ்வளவு தெரியாது.. இனி எதுவும் தெரியாது என்று சொல்லவும் முடியாது...
தங்களின் வாழ்க்கைப்பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள் அசோக்...
உங்கள் அறிமுகப்படுத்தலுக்கு நன்றி! இப்போதுதான் அவரது தளத்திற்கு முதன்முறையாக செல்கிறேன். எனக்கு இலங்கைப் பதிவர்களின் அறிமுகம் மிகக் குறைவு! நன்றி அண்ணா!
ஆனா இவரை நான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்!
//அடுத்த ஞாயிற்றுக்கிழமை இன்னும்மொரு பதிவுலக நண்பருடன் வருகின்றேன்//
வாங்க! :-)
அசோக், அதிகமாக பதிவுகள் எழுதுவதை தற்போது குறைத்துக் கொண்டது கவலை தான். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று ஒரு பதிவு. இந்த வருடத்தில் 16 பதிவுகள் மட்டுமே!
நிறைய தேடலுள்ள இவரிடமிருந்து பதிவுலகம் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறது. வாழ்துக்கள் நண்பா!
அஷோக் அண்ணாவின் விவாதங்களை ருவிட்டரில் பார்த்திருக்கிறேன், நாம் ஏதாவது சட்டங்களில் டவுட்டு வந்தாலும் அவரைத்தான் கேட்போம்...ஹிஹி
இதுவரை நேரில் சந்தித்ததில்லை இம்முறை சந்திப்போம்..:)
:)
அசோக்பரன் அவர்களின் பதிவுகளை விருப்பத்தோடு எப்போதும் படித்துக்கொள்வேன். அவரின் கருத்தக்கள் எப்போதும் எனக்கு ஒரு கௌரவம் உண்டு.
அருமையான அறிமுகம்.
//கொழும்பு ரோயல் கல்லூரி தனியே ஒரு சட்டமாணவனாக மட்டும் அன்றி, பல்கலை உடையவனாகவே இவரை பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது என்பது தெளிவாகின்றது//.
Yes Anna. He is Very Talented Person.
நான் அவரது பதிவுகளை படித்திருக்கிறேன். நல்ல பதிவர். அறிமுகப்படுத்தியது நன்றாக இருக்கிறது.
அசோக் ஒரு அருமையான சிந்தனையாளன்.
நல்ல ஒரு பக்குவப்பட்ட எழுத்தாளன்.
// வயதிற்கும் மீறிய தேடல்கள் உள்ள அவர், இனிவரும் நாட்களில் அந்த தேடல்கள் அதிகரிக்க அதிகரிக்க இலங்கை எழுத்தாளர்களின் வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பார் என்பது வெள்ளிடை மலை.
//
முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறேன்.
சிறுவயது முதல் அசோக்கை அவதானித்து வருகிறவன் என்ற அடிப்படையில் அசோக்கின் எதிர்காலம் பற்றி பெருமையுடன் காத்திருக்கிறேன்.
ஜனா உங்கள் அறிய முயற்சிக்கும் அசோக்கின் சீரிய பதில்களுக்கும் வாழ்த்துக்கள்.
LOSHAN
www.arvloshan.com
என்னது அசோக் தம்பியா! சத்தியமாய் ஏன்னா நம்பமுடியவில்லை. வயதில் சிறியவனாக இருந்தாலும் நிறைய அறிவு ராசா. வாழ்த்துக்கள்.
நல்ல அறிமுகம்...
இந்த நல்ல பணியை தொடருங்கள்
அருமையான அறிமுகம்...
இன்னும் கொஞ்சம் அடிக்கடி எழுதினார் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். :-)
ஏனய்யா எழுத்து எழுத்து என்று பிதற்றுகீர்கள், அது தான் வாழ்க்கையா?
@jagadeesh
உண்மைதான் ஜெகடீஸ்... கொள்கை உள்ளவர்கள் உறுதியானவர்கள், எழுத்து எழுத்து என்று நெறிமுiறில் இருப்பார்கள். தங்களைப்போல சொந்த இனத்தையே கேவலமாக்குபவர்களுக்கு எழுத்து ஒரு பொழுதுபோக்குத்'தான். தங்களுக்கு நேரடியாகவே எச்சரிக்கின்றேன். இதற்கு மேலும் தொடர்ந்து குதர்க்கம் பேசி வபரிதுங்களை தேடிக்கொள்ளவேண்டாம்.
உங்கள் பாணியிலேயே சொல்வதென்றால் எங்களுக்கு காந்தியவாதமும் தெரியும், சுபாஸ் சந்திரபோஸ் வாதமும் தெரியும் இனி காந்தியா நடக்கணுமா இல்லை சுபாஸ் சந்திரபோஸா மாறனுமா என்பதை நீரே தீர்மானித்தக்கொள்ளும்
அப்படி என்ன சொல்லிட்டேன். இனம் இனம்னு நீங்க தா வெறி பிடிச்சு அலைறீங்க.
நாங்க எப்பவுமே காந்தியவாதிகள் தான். எப்படியோ விடுதலைப் புலிகள் ஒளிஞ்சாங்க, அது வரைக்கும் சந்தோசம்
உங்களிடம் குதர்க்கம் பேசவேண்டுமென வேண்டுதல் இல்லை. நீங்களும் இந்தியாவை குறை சொல்லாமல் இருந்தால் போதும்..
அட ஜெயகதீஸ் பன்னாடை நீ திருந்த போவதே இல்லையா! உன்னாலை நம்ம மானம்தான் கப்பல் ஏறுது.
ராஜபக்சே வாழ்க!
Post a Comment