Saturday, June 4, 2011

மலையாள நாவல் இலக்கியங்கள் - ஒரு முன்னோட்டம்

திராவிட மொழிகளிலே ஒன்றாக கண்ணுக்குப்பசுமையாகவும், கலாச்சாரம் நிறைந்ததாகவும், மருதம், நெய்தல், குறிஞ்சி ஆகிய இலக்கியம் கூறும் நில அமைப்புக்களையும், தன்னகத்தே கொண்டு, கலைகளிலும், கல்வியிலும், நிர்வாகத்திலும், எழுத்தியலிலும் தலைநிமிர்ந்து நிற்பவையே மலையாளமும் கேரளமும் ஆகும்.

பொதுவாக திராவிட மொழிகளில், ஒரு நயத்துடனான சப்தங்களை கொண்ட நளினமாக மொழியாக மலையாளம் உள்ளது. அதன் ஆதி மொழி தமிழ்தான் என்றும், சங்கமருவிய காலத்தின் பின்னதான வட இந்தியவருகை, வடமொழிக்கலப்பு, மற்றும் சமஷ்கிருதத்தின் தாக்கம் என்பன தமிழுடன் கலந்து இந்த மொழி உருவாகியதாகவும், அதேபோல் ஒலிவடிவில் பெரும்பாலும் தமிழுடன் இந்த மொழி முழுமையாக உடைபட்டு கொள்ளவில்லை என்றும், ஆனால் சமஷ்கிருத தாக்கத்தால் அதன் வரிவடிவம், முழுமையாக வேறுபட்டது என்றும் ஆய்வாளர்கள் கூறிநிற்கின்றனர்.

ஒருவகையில் அதன் ஆரம்ப இலக்கியப்பயணிப்பு என்பது தமிழ் இலக்கியத்துறையினையே சார்ந்து நின்றுள்ளது என்பது வெளிப்படையான ஒன்று.
குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் பதிற்றுப்பத்து, புறநானூறு, சிலப்பதிகாரம் என்பன மலையாள இலக்கிய பயணிப்பில் அவற்றுக்கான ஒரு ஊன்றுகோல்களாகவும், தொடக்கப்புள்ளிகளாகவும் இருந்துள்ளதாக கொள்ளமுடியும்.
மலையாளத்தின் இலக்கிய தொடக்கம் பா..அல்லது பாட்டு என்ற அடிப்படையில், வெண்பா, விருத்தங்கள் கொண்டு செய்யப்பட்ட பாடல்கள் அல்லது பாக்களாகவே ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

'ராமச்சரிதம்' மலையாள இலக்கய வராலாற்றில் ஒரு முக்கிய இலக்கியமாக கருதப்படுகின்றது, இதுவே மலையாள இலக்கியங்களுள் இப்போது கிடைத்துள்ளவற்றில் தொன்மையான நூல் என்றும் கருதப்படுகின்றது. ஒருவகையில் ராமச்சரிதம் என்பது மலையாள இலக்கியத்தின் ஒரு மைல்கல் என்று கூறிக்கொள்ளலாம்.
சீராமகவி என்ற புலவர் இயற்றியுள்ள இந்த இலக்கியத்தில், ஆயிரத்து எண்ணூற்று பதினான்கு செய்யுள்கள் உள்ளன.

அடுத்து 'மணிப்பிரவாளம்' என்னும் நடை மலையாள இலங்கியங்களின் தொடங்கங்களில் பெரும் செல்வாக்கு செலுத்தியிருந்தன.
அதாவது மணிப்பிரவாகம் என்ற சொல் சமஸ்கிருதமும், திராவிட மொழியும் சேர்ந்து அமைக்கும் நடையை குறிக்கும் சொல் என்ற பொருள் பட்டது.
இதில் மணிப்பிரவாகம் என்பது நேரடியாக மணியும், பவளமும் ஒருங்கே சேர்த்து அமைக்கப்பட்ட மாலை என்ற பொருளை கொண்டதாக அமைந்துள்ளது.

இதேவேளை மணிப்பிரவாளமும் மலையாளத்தோற்றமும் என்று நோக்கும்போது..
கி.பி 9 ஆம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழியின் ஒரு பகுதியாகவே மலையாளம் இருந்தது. இதன் பின்னர் தென்னாட்டில் மணிப்பிரவாளம் பெருக்கெடுத்தபோது சேர நாட்டுத் தமிழ் மாற்றம் பெறத் தொடங்கியது. பாட்டுஎன்னும் உள்ளூர் இலக்கிய வழக்கு ஒரு பிரிவினரிடையே பயின்று வந்தபோதிலும், சமூகத்தின் உயர் மட்டத்தினர் மத்தியில் மணிப்பிரவாள நடை பரவலாகக் கைக்கொள்ளப்பட்டது. சிறப்பாக நம்பூதிரி சமூகத்தினர் மணிப்பிரவாளத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருந்தனர். கேரளத்தில், 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் லீலாதிலகம் என்னும் இலக்கண நூல், பாட்டு மரபுக்கும், மணிப்பிரவாளத்துக்கும் இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர், சமஸ்கிருதச் சொல் வகைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. மணிப்பிரவாளப் பாடல்களில் சமஸ்கிருத இலக்கணமே பின்பற்றப்படவேண்டும் என்றும் இந்த நூல் கூறுகிறது. இது, எவ்வாறு சேரநாட்டுத் தமிழில் மணிப்பிரவாளம் மூலம் சமஸ்கிருதம் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தியது என்பதை விளக்குகிறது. கேரளத்தில் இந்த மணிப்பிரவாள நடையில் எழுதி, இன்று கிடைக்கின்ற மிகப் பழைய நூல் வைஷீகதந்ரம் என்பதாகும்.

என்று குறிப்பிடப்படுகின்றது.
இதுபற்றி மேலதிகமாக அறிய கீழே உள்ள 'இங்கே' என்பதை சொடுக்கவும்.

அதேபோல் பாஷா கவுட்டாலிகம், அட்டப்பிரகாரம், கிரம்மதீபிகா, வைஷீகதந்ரம் என்பனவும் முக்கியமான நூல்களாக உள்ளன.
இவற்றைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக பக்திசார், மண்சார் மலயாள இலக்கியங்கள் உதயமாகத்தொடங்கின. எனினும் அந்தவேளைகளிலும் தமிழ் இலக்கியத்தின் செல்வாக்கு குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய அளவுக்கு மலையாள இலக்கியங்களிலும் தாக்கம் செலுத்தின.

ஆர்னோஸ் பத்திரி, குஞ்சன் நம்பியார், இமைம்மன் தம்பி ஆகியோரின் கவிதைகள், இடைக்காலங்களில் மலையாள இலக்கியத்தின் திருப்பங்களாக அமைந்தன. அவை சமுகம்சார் இலக்கிய பார்வைகளாக முக்கிய திருப்பங்களை கொண்டுவந்திருந்தன.

அந்த மரபில் வந்த மலையாள நாவல் இலக்கியங்கள், 19 நூற்றாண்டில் இருந்தே அனைவரையும் திரும்பி பார்க்கவைக்கும் வண்ணம் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டன. ஒருவகையில் நாவல் இலக்கியங்கள் என்று எடுத்துக்கொண்டால் தமிழைவிஞ்சும் அளவுக்கு மலயாள நாவல் இலக்கியங்கள் முந்திக்கொண்டன என்று சொல்லத்தான் வேண்டும்.
சந்துமேனன் தொடக்கம் விஜயன்வரை எண்ணற்ற இலக்கிய நாவல் எழுத்தாளர்கள் மலையாள இலக்கியங்களை செம்மைப்படுத்தி உலக அரங்கில் அவற்றுக்கு ஒரு தனித்துவத்தை தேடிக்கொடுத்திருக்கின்றார்கள்.

அதனைத்தொடர்ந்து வைக்கம் முஹமது பஷீர், தகழி, கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி, போன்றோர் மலயாள யதார்த்த இலக்கியங்களின் முன்னோடிகளாக பார்க்கப்படுகின்றனர்.
பாலகிருஸ்ணபிள்ளை, பேராசிரியர் போல் ஆகியோர் மேல்நாட்டு இலக்கியங்களையும், நூல்களையும் அறிமுகம் செய்துவைத்து மலையாள இலக்கியத்தை வளமானதொரு தளத்திற்கு அழைத்துச்சென்றனர்.
இவ்வாறான அடிப்படையிலேயே வந்ததனால்த்தான் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மலையாள நாவல் இலக்கியங்கள் மிகப்பெரும் பாச்சல் ஒன்றை எடுத்து ஏனைய மொழிக்காரர்களும் வியந்து வியக்கும் தரத்திற்கு முந்திக்கொண்டு செல்ல முடிந்தது.

தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடிபாயும் என்ற தத்துவத்தை மலையாள நாவல் இலக்கிய எழுத்தாளர்கள் தொடர்ந்தும் நிரூபித்துக்காட்டிக்கொண்டே வந்தனர்.
எனினும் இதில் பெரும் ஆச்சரியம் என்னவென்றால், தமிழ் எழுத்தளர்களின் காழ்ப்புணர்வோ, அல்லது தங்களை விஞ்சுவதை செரிக்கமுடியாமையோ இந்த அபரிதமான மலையாள நாவல் இலக்கிய வளர்ச்சியை தாம் கவனியாதவர்கள்போல இருந்துவிட்டு, தங்கள் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருந்தனர்.

ரஷ்ய, மேல்நாட்டு நாவல்களை மொழிபெயர்ப்பதில் பெரும் ஆர்வம்காட்டி தமிழில் அவற்றை மொழிமாற்றிப்படித்தவர்கள், மலையாளத்தின் அருமையான பல நாவல்களை கண்டுகொண்டதாக தெரியவில்லை.
ஆனால் மலயாள எழுத்தாளர்கள் தங்களை இன்னும் இன்னும் சிறப்புறும் வழியில் கொண்டு சென்றுகொண்டிருந்தனர்.
இன்றைய கட்டத்தில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் நாவல்களை எழுதி புக்கர் உட்பட எழுத்து துறைக்கு கொடுக்கப்படும் விருதுகளைக்கூட அவர்கள் பெற்றுள்ளமை கண்கூடு.

உசாத்துணை - ஹிஸ்ரி ஆவ் மலையாள லிட்ரேச்சர், விக்கிபீடியா, மலையாள நாவல் ரைட்டேஸ் (ராம்மேனன்)

19 comments:

உணவு உலகம் said...

உங்கள் பார்வை,பகிர்வு வித்யாசமானது.

நிரூபன் said...

நாவல், புளி, உவப்பு, கசப்பு....

நிரூபன் said...

மலையாள இலக்கியங்கள் பற்றிய பரந்துபட்ட பார்வையினைப் பகிர்ந்துள்ளீர்கள் சகோ.

தமிழ் இலக்கியப்பரப்பிற்கு நிகராக இம் மலையாள இலக்கியங்களும் தமது பயணத்தினை நகர்த்தியிருக்கின்றன என்பதனை அறிந்து கொண்டேன் சகோ.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மலையாள நாவல் இலக்கியம் பற்றி பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஜனா அண்ணை!

உங்கள் கட்டுரையை வைத்துப் பார்க்கும் போது, தமிழைவிட மலையாளத்தில் இலக்கிய படைப்புக்கள் குறைவென்றே எனக்குத் தோன்றுகிறது!

தமிழில் முதற்தர காப்பியமாக கொள்ளப்படும் கம்பராமாயணம் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்டது! ஆனால் மலையாளத்தில் முதல் தர இலக்கியமாக கொள்ளப்படும் ** ராமச்சரித்திரத்தில் வெறும் 1814 செய்யுள்கள் மட்டுமா?

ரொம்ப ஆச்சரியமாக இருக்கே!

எழுந்த ஞாயிறு விழுவதற்கு முன் எழுனூறு பாடல்கள் பாடிய கம்பன் எங்கே?

வெறும் 1814 செய்யுள்களைப் புனைந்த சீராமகவி எங்கே?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இப்பதிவின் விஷயங்களை கூர்ந்து ஆராய்கையில், தமிழினின்று பிரிந்திட்ட மலையாள பாஷையில், எத்துணை லக்கியங்கள் புனைந்திடப்பட்டுள்ளன என்று புரிகிறது!

ஆயினும் தமிழினின்றும் மேம்பட்ட தன்மைகளை மலையாள பாஷை கொண்டுள்ளது என்ற முடிவுக்கு வரல் கஷ்டமாகவே உள்ளது! அங்ஙனம் தமிழைவிட மேம்பட்டதாய் மலையாள புதினங்கள் விளங்குவது உண்மையாயின், பத்ரிக்கை ஒன்றில் இதுபற்றிவந்த செய்தி ஒன்றை உங்களுக்கு அனுப்பிட இருக்கிறேன்!

ஜனா அண்ணை பயந்திடாதீங்கோ, ச்சும்மா எனக்கும் மணிப்பிரவாள நடை வருதோ என்று செக் பண்ணிப் பார்க்க எழுதினேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடிபாயும் என்ற தத்துவத்தை மலையாள நாவல் இலக்கிய எழுத்தாளர்கள் தொடர்ந்தும் நிரூபித்துக்காட்டிக்கொண்டே வந்தனர்.
எனினும் இதில் பெரும் ஆச்சரியம் என்னவென்றால், தமிழ் எழுத்தளர்களின் காழ்ப்புணர்வோ, அல்லது தங்களை விஞ்சுவதை செரிக்கமுடியாமையோ இந்த அபரிதமான மலையாள நாவல் இலக்கிய வளர்ச்சியை தாம் கவனியாதவர்கள்போல இருந்துவிட்டு, தங்கள் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருந்தனர்.


இதனை நம்புவது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது ஜனா அண்ணை! நான் நினைக்கிறேன் நீங்கள் குறிப்பிடும் அக்காலகட்டத்தில் தமிழிலும் போதியளவு இலக்கிய முனைப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்று!

எனக்கு விளக்கம் தேவை !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் என்ற பதம், யாருக்குப் பொருந்தும் என்றால் - இலங்கை இலக்கியவாதிகளுக்குத்தான்!

இலக்கியம் வளர்ப்போர், தமிழை வளர்ப்போர், கவிதை வளர்ச்சிக்கு பாடுபடுவோர், நாவல் வளர்ச்சிக்கு பாடுபடுவோர் என பல அடைமொழிகளோடு தம்மை வெளிப்படுத்தும் இலங்கை இலக்கியவாதிகள்தான் இன்னமும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!

அத்துடன் இலங்கை இலக்கியவாதிகள் சுத்தசேம்போறிகளும் கூட! அவர்கள் படைக்கும் இலக்கியங்களோ, அவர்களைவிட சோம்பேறித்தனமானவை!

என்றுதான் திருந்தப்போகிறார்களோ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இலங்கை இலக்கியவாதிகளை குறைசொல்லிவிட்டேன் என்று யாராவது கோபம் கொள்பவர்கள், தாராளமாக உங்கள் கருத்துக்களுடன் வரலாம்! எத்தகைய கருத்து மோதல்களுக்கும் நான் தயார்!

யாரும் வராவிட்டால், ** இலங்கை இலக்கியவாதிகள் சுத்த சோம்பேறிகள் ** என்ற எனது கருத்து ஆணித்தரமாக நிறுவப்படும்!

முக்கிய குறிப்பு . - இலங்கை இலக்கியங்கள் என்று நான் சொல்பவை - போராட்டசூழலுக்கு வெளியேயான இலக்கியங்கள் + இலக்கியவாதிகள் பற்றியே!

கார்த்தி said...

எனக்கு இங்கே பல புதுவிடயங்களை அறியும் வாய்ப்பு கிடைத்தது! இதுவரை மலையாளம் தமிழை ஒத்ததென்றும் அவர்களின் உணவுகள் யாழ்ப்பாணத்தவரை ஒத்தது என்று மட்டுமே அறிந்திருந்தேன்.
நீங்கள் சொன்னவாறு மலையாள காரர்கள் திறமையானவர்கள்தான். ஏன் தமிழ்திரையுலகில் முன்னணி பாடகர்களாக இருந்த பலர் மலையாளிகளே. உன்னிகிருஷ்ணன் உன்னிமேனன் சுஜாதமேனன் சித்திரா etc போன்றோர் மலையாளிகளே

Unknown said...

மாப்ள பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்...நன்றிய்யா!

sinmajan said...

மலையாள இலக்கியம் பற்றிய விடயங்களை அறிந்துகொண்டேன்.. நல்ல பகிர்வு ஜனா அண்ணா..

Unknown said...

அய்யய்யோ எலக்கியமா? நா வரல! எதையும் படிக்கல! :-)

Unknown said...

ஜி...நில்லுங்க நானும் உங்க கட்சி தான் சேர்ந்தே ஓடிடுவோம் ஹிஹி

Unknown said...

ஜி...நில்லுங்க நானும் உங்க கட்சி தான் சேர்ந்தே ஓடிடுவோம் ஹிஹி

மாதேவி said...

மலையாள இலக்கியங்கள் பற்றி நல்ல பதிவு.

"வைக்கம் முஹமது பஷீர், தகழி, கேசவதேவ்," படித்திருக்கிறேன். மிகுதி அறியத்தந்ததற்கு நன்றி ஜனா.

சி.பி.செந்தில்குமார் said...

மணீக்கொடி காலம் வரை பொய்ட்டு வந்துட்டீங்களே?!!!!!!!!!!

shanmugavel said...

சிறப்பான அலசல் ஜனா !மலையாள இலக்கிய உலகை பார்த்து பொறாமைப்படாத தமிழ் இலக்கியவாதிகள் குறைவு.வாழ்த்துக்கள்.

Ashwin-WIN said...

அருமையான பதிவு அண்ணா. நிறைய தகவல்கள்.
உங்களால்தான் இப்படியான பதிவுகளிலும் ஜொலிக்கமுடிகிறது.

rajamelaiyur said...

Very useful post

LinkWithin

Related Posts with Thumbnails