Wednesday, October 20, 2010

நம்வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் சவால்விடும் MCQ


Multiple Choice Questions என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றே. இன்றும்கூட சர்வதேச ரீதியில் பலதரப்பட்ட பரீட்சைகளுக்கும் இந்த எம்.சீ.க்யூ முறைமூலமான வினாத்தாள்கள் கொடுக்கப்படுகின்றன.
அதில் சரியான விடை நான்கிலும் ஒன்றுதான். என்றாலும் உரிய கேள்விக்கு நான்கு விடைகளும் சரியான பதிலையே சுட்டிநிற்கின்றதுபோல ஒரு மாயை தோன்றும். எனினும் ஏனைய மூன்றிலும் ஒன்றே ஒன்று மிகச்சரியான விடையினை கொண்டதாக இருக்கும் அதனை கண்டுபிடித்தாலே எமது புள்ளிகள் உயரும்.

நாம் வாழும் சவால் மிகுந்த வாழ்விலும், வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் நாம் இந்த எம்.சி.க்யூ போன்ற நான்கு சொய்ஸ்களில் சரியானதை தெரிவுசெய்யும் கட்டத்தில் தவித்திருப்போம். அந்த வாழ்வின் கட்டங்களில் மிகச்சரியானதை நாம் தெரிவு செய்திருந்தோமானால் எம் வாழ்வுப்பாதை வளமானதாக மாற்றப்பட்டு முன்னேறியவர்களாக மாறியிருப்போம்.
விருப்பத்துக்கும், தமது திறமைக்கும் இடையில் சிக்கி பரிதவிப்போர் அதிகம்பேரை நாம் பார்த்திருப்போம்.

எமது செயல்களின் விளைவுகளும் இதே எம்.சி.க்யூ போன்ற நான்கு விடைகளையே எமக்கு திருப்பியும் தந்துவிடுகின்றது.
ஒருவர் எதிர்பார்த்து செய்த செயல் நினைத்தபடி கிடைத்தால் அது திருப்தி, அதே செயல் நினைத்ததைவிட அதிகம் பலன் தந்தால் அது பூரிப்பு, நினைத்ததைவிட சற்று குறைவானால் அதிருப்தி, நினைத்ததே நடக்காதுவிட்டால் தோல்வி.
அதாவது எமது ஒவ்வொரு செயலுக்கும் காலம் கொடுக்கப்போகும் பதிலும் எம்.சி.க்யூபோல நான்காகவே பூரிப்பு, திருப்தி, அதிருப்தி, தோல்வி என்றே அமையப்போகின்றது.

முன்னைய காலங்களைப்போலல்லாது இன்று பல துறைகள் முன்னேற்றப்பாதையிலும், இலாபத்தை தரும் துறைகளாகவும் நாளாந்தம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று இந்த “மல்ரிபிள் சொய்ஸ்” என்ற நிலை இன்றுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் அன்றி எம் எவ்வொருவரினதும் எதிர்காலத்தையும் வழிவகுக்கக்கூடியதாகவே உள்ளது.
இதில் எமக்கேற்ற மிகச்சரியான தெரிவை நாம் “ரிக்” செய்தால் எமது முன்னேற்றப்பாதையின் பாதை இலகுவாக திறந்துவிட்டதாக கருதமுடிம். இந்தக்கட்டங்களிலேயே ஒருவனுடைய வெற்றிகளும் தோல்விகளும் நிர்ணயிக்கப்படுவதாகவும் உள்ளது.


மிகச்சரியானதை, மிகச்சரியான நேரத்தில், மிகச்சரியான முறையில் தொடங்கினால் அந்தத்தொடக்கத்திலேயே முக்கல்வாசி வெற்றி கிடைத்துவிட்டதாக பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சரியான தெரிவைப்போல் அதற்கு மிக நெருக்கமாக பல மாஜைகளும் தோன்றுவதன் குறியீடுகளாகவே நாம் இந்த எம்.சி.க்யூவை கருதவேண்டும்.
தெரிவுகளை செய்தபோதும் கூட, சில தெரிவுகள் ஏனைய தெரிவுகளைவிட அந்த நேரத்தில் சரியானதாகவே தோன்றினாலும், பின்னர் அது பெரும் ஆபத்தில் போன அபாயகரமான தெரிவுகளும் அண்மைய வரலாறுகளில் இல்லாமல் இல்லை.
தூரநோக்கத்துடன் சிந்திக்கின்றோம் என்ற பெயரில் அந்த நேரத்தில் அப்போது மிகச்சரியாக இருந்த தெரிவு பிழை எனக்கருத்தி, பிழையான தெரிவை, “ரிக்” செய்துவிட்டு அந்தப்பிழையான தெரிவால் அத்திவாரமே தகர்க்கப்பட்ட வரலாறுகளும் உண்டு.


எனவே வாழ்க்கை எம் முன்னால் வைக்கும் எம்.சி.க்யூ தெரிவுகளையும், அதன்மூலம் எமக்கு கிடைக்கப்போகும் அதே எம்.சி.க்யூ விடைகளையும் நாம் மிக அவதானமாக கையாளவேண்டும்.
பரீட்சைகளில் பல கேள்விகள் இருக்கும் ஒன்று பிழையாகப்போனாலும் பரவாய் இல்லை, அனால் எம் வாழ்க்கையின் கால கட்டங்களில் முக்கியமான வேளைகளில் காலம் எமக்கு முன்னாள் வைக்கும் எம்.சி.க்யூ கேள்வி ஒன்றே எனவே நாம் அதைப்பற்றி எம்மையே ஆராய்ந்து சரியான தெரிவை “ரிக்” செய்யவேண்டும். மிகச்சரியானதை “ரிக்” செய்தவர்கள் இன்று நாம் அண்ணாந்து பார்க்கமுடியாத உயரத்தில் உள்ளனர், பிழையாக ரிக் செய்தவர்கள் வாழ்விழந்து போய் உள்ளர். ஒரு சிலர் அதிஸ்ரவசமாக, குறிப்பிட்ட ஒன்றைப்பற்றிய விபரம் அறியாமல் தமது வாழ்வின் கட்டம் ஒன்றில் சாரியான பாதையினை “ரிக்” செய்து வெற்றியின் உச்சிக்கு போனவர்களும் உண்டு. அதேவேளை மிகவும் திறமையுடன், பல செயற்திட்டங்களுடன் முன்னேறி எதோ ஒரு கட்டத்தில் தவறான வாழ்வின் புதிருக்கு விடையினை “ரிக்” செய்து அத்தனை முயற்சிகளையும் போட்டுடைத்தவர்களும் உண்டு.

எனவே இந்த எம்.சி.க்யூ சொல்லும் விடையும் என்னவென்றால், தயமயந்தியாய் இரு என்பதுவே. அதாவது தமந்தியின் சுயம்வரத்துக்கு அவள் நளனைத்தான் காதலிக்கின்றாள் என அறிந்து தேவ குமாரர்கள் பலர் நளனைப்போலவே தாமும் உருக்கொண்டு சுயம்வரத்தில் கலந்துகொண்டபோதும், அதன் சூட்சுமத்தை அறிந்து தேவகுமாரர்களின் பாதம் தரையில் படாது என்ற நுண்மையான விடயத்தை அந்தநேரம் மிகச்சரியான தருணத்தில் அறிவைப்பயன்படுத்தி, உண்மையான நளனுக்கு மாலையிட்டாள் தயமந்தி, அதேபோல எம் வாழ்வு எமக்கு முன்னாள் வைக்கும் பலதரப்பட்ட விடைகளில், மிகச்சரியனதை எமது நுண்அறிவு, அறிவாற்றல் மூலம் தெரிவுசெய்து வாழ்வில் வெற்றிபெறவேண்டும்.

Friday, October 8, 2010

உடையுதிர்காலம் -இறுதிப்பாகம்

கூல்போயின் மொபைலில் “விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி” என்று கலைவாணரின் பாடல் “ஃபக் மியூசிக்காக” ஒலிக்க சுபாங்கன் தனது டைம் மெஷினை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொண்டிருந்தான்.
டேய்..கூல்…எவ்ரிதிங் ஓகேடா! இந்த டைம் மிஷினாலை உன் பாஸ் எங்கயோ போகப்போறேன்டா என்றான் சுபாங்கன்.
ஆமா பாஸ்..நீங்க இவ்வளவு கஸ்டப்படுறதை பார்த்தா எவ்ரிதிங் டபிள் ஓகே போலத்தான் தெரியுது.
பட் வன்திங்.. நான் கதைகளாக வாசித்த டைம் மெஷின் பற்றிய கதைகள் எல்லாம் விபரீதத்தில் மாட்டிக்கொள்வதாகவே இருந்ததுதான் உதைக்குது.
போடா…அதெல்லாம் கதைகளில்த்தான். இங்க இந்த சுபாங்கன்ட விஸ்பரூபத்தை நீ இன்னும் கொஞ்சநேரத்தில பார்க்கப்போகின்றாய் என்றான் சுபாங்கன் முகம் முழுவதும் பெருமிதத்துடன்.

டைம் மெஷின் பற்றி உனக்கு தெரிந்தவைகளை சொல்லு கூல். இல்லை வேண்டாம் நீ என்னையே குழப்பி விடுவாய்.
சார்ள்ஸ் டன்னின் “எக்ஸ்பெரிமன்ஸ் வித் டைம்” படித்திருக்கின்றாயா? அல்லது அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றாயா?
இல்லை பாஸ். ஆனால் நீங்க என்ன பாஸ் திடீர் என்று எக்ஸ்பெரிமண்ட்ஸ் வித் டைம் பற்றி எல்லாம் பேசுறீங்க?
டேய் முதல் நாங்க பார்த்தது ஆமானுச சம்பந்தமான விடயம். சோ..கொஞ்சம் திகில் தேவை இப்ப சயின்ஸ்பிக்ஸன்டா, அதுவும் டைம் மெஷின் பற்றியது ஆகவே இப்படி எல்லாம் பேசவேண்டும். அதுதான்.
ஓகே..பாஸ்..அங்காலை சொல்லி நீங்க கஸ்டப்படவேண்டாம்…
என்னால் இடம், வலம், மேல், கீழ், முன், பின், சகல திசைகளிலும் என்னால் முப்பரிமானத்தை உணரமுடிகின்றது.
எப்படி அது சாத்தியம் என்றால் நான் ஒரு நான்கு பரிமாண ஆசாமி.
நான்காவது பரிமாணம் காலம்… இப்படித்தானே சொல்லப்போறீங்க பாஸ்? என்றான் கூல்போய்.
வர வர, நீ ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுறாய்டா என்றான் சுபாங்கன்.

சரி ரொம்ப சஸ்பென்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது பாஸ். எந்திரன் படத்திலை சுப்பர் ஸ்ரார் எந்திரனை செட்பண்ணும்போதே இன்ருடியூஸ் ஆகிறாப்போல நீங்களும் டைம் மெஷினை செட் பண்ணும்போதே அந்த டைம் மெஷினுக்கு ஒரு இன்ருடியூஸ் கொடுப்போம் என்று விட்டு.
புதிய மனிதா பூமிக்குவா…என்ற பாட்டின் மியூசிக்கை ஒலிக்கவிட்டான் கூல்போய்..
இதோ என் டைம் மெஷின், இதனால் நான் அமரன் என்று பாடிக்கொண்டே டைம்மெஷினை றீசெட் பண்ணுகின்றான் சுபாங்கன்.


சரி பாஸ்..நீங்க இப்போ எந்தக்காலத்திற்கு போகப்போவதாக உத்தேசம்?
போகப்போறேன் அல்ல போகப்போறோம்! நீயின்றி நானா? வாடா சங்கிலியன்ட காலத்திற்கு போய் பார்க்கலாம் நம் இறுதி மன்னன் அல்லவா? சோ வீ காவ் ரு கோ இயர் 1505 என்றான் சுபாங்கன்.
ஓகே பாஸ்..எவ்வளவோ பண்ணிட்டோம். இதை பண்ணமாட்டோமோ என்ன?
என்றாலும் டைம் மெஷின் பற்றி கனக்க தகவல்களை திரட்டி பரிசோதனைகூட செய்திருப்பீங்க.. என்றாலும் இதில் உங்களுக்கு ஏதாவது டவுட் இருக்கா பாஸ்?
ஆமாடா…ஒரே ஒரு டவுட். எனக்கு மரணகாலம் இன்று என்று வைத்துக்கொள் நான் டைம்மெஷினில் பல ஆண்டுகள் முன்னுக்கு சென்றுவிட்டால் என்ன ஆகும்?
தப்பித்து விடுவேனா? அல்லது அங்கேயும் அந்த நேரத்தில் எனக்கு மரணம் சம்பவிக்குமா என்பதுதான்டா அந்த டவுட்!
சபாஷ். பாஸ்! காமடி இல்லாமல் அற்புதமான டவுட் ஒன்று உங்களுக்கு வந்திருக்கு… சரி வாங்க நாம் புறப்படுவோம் 1505ற்கு..
அழுத்துங்கள் டைம்மெஷினில் 1505ஐ, அமத்துங்கள் தன் செயற்பாட்டு பட்டனை.

அந்தநேரம் சுபாங்கனின் மொபைலில் “அவனே என்னை ஆட்டுகின்றான்” என்றுவிட்டு கந்தரனுபூதி பாடியது. யாராடா இது என்று விட்டு எடுத்து ஹலோ என்றான் சுபாங்கன்.
அடியேன் தங்கமுகுந்தன் தொடர்புகொள்ளும் சுவிஸ் நேரம் அதிகாலை 05.55 நிமிடம் என்று பதில் வந்தது.
ஓ…தங்கமுகுந்தன் அண்ணாவா சொல்லுங்கோ என்றான் கூல்போய்!
என்னடாப்பா இரண்டுபேரும் சேர்ந்து கலக்கிறியளாம், ஏதோ ஆவி திரத்தினியளாம், இப்ப டைம் மெஷின்ல போகப்போறியளாம்! என்றார்.
ஓமண்ணா..சரியான நேரத்திற்குத்தான் எடுத்திருக்கிறியள். நாங்க இப்ப 1505 அதாவது சங்கிலியன்ட காலத்திற்கு போகப்போறம். என்றான் சுபாங்கன்.
சரியாப்போச்சு. அப்ப அந்தக்காலத்தில செம்பகப்பாடினியார் என்ற ஒரு கவிஞர் இருந்தாராம் அவர்ட எழுத்துக்கள் ஏதாவது இருந்தால் எடுத்துக்கொண்டு வாருங்கோடா தம்பியவை என்றார் தங்கமுகுந்தன்.
சரி அண்ணை. புறப்படநேரமாச்சு. இது ரகசியமாக இருக்கட்டும். உங்களுக்கு தெரிந்தது போகட்டும் இனி வேறு எவருக்கும் சொல்லாதையுங்கோ என்றுவிட்டு, புறப்பட ஆயத்தனமானார்கள் இருவரும்.


சரி அண்ணை. எப்படி இதை செலுத்துவது? சங்கிலியன் காலத்திற்கு தானே? எதுக்கும் பருத்தித்துறை வீதியாலை போறது சோர்ட் கட் என்றான் கூல்போய்.
1505 ஐ திரையில் அழுத்தி, சிவப்பு பட்டனை அமத்தினர் இருவரும்.
ஒரு நிமிடம் இருக்கும் இருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. குளிர், வெப்பம், நனைவு, தட்பவெப்பம் என்பன அந்த ஒரு நிமிடத்திற்குள் மாறி மாறி உணரப்பட்டன. ஏதேதோ சத்தங்கள், யார்யாரோ பேசுவது எல்லாம் கேட்டது.
இறுதியில் தள்ளப்பட்ட உணர்வுடன் ஒரு இடத்தில் நின்றது மெஷின்.

நினைத்ததைவிட யாழ்ப்பாணம் அன்று மிக மிக அழகாகவே காணப்பட்டது. தூரத்தே குதிரைகளில் போர் வீரர்கள் வந்துகொண்டிருந்தமை தெரிந்தது.
மண் பானைகளில் சில பெண்கள் தண்ணீர் முகர்ந்துகொண்டு வந்தார்கள். இவர்கள் இரண்டுபேரையும் கண்டவுடன் பானைகளை போட்டு உடைத்துவிட்டு வீரிட்டுக்கொண்டு ஓடினார்கள்.
இந்த அமர்க்களத்தில் குதிரையில் வந்த வீரர்கள், அவசரமாக ஓடி வந்து இவர்களை உற்றுப்பார்த்துவிட்டு, ஏ…காண்மின்..பறங்கிகன் இவ்விடமும் உட்புகல்கொண்டான் என்று ஈட்டியால் இவர்களை குத்தவந்தனர்;.
இல்லை! யாம் பறங்கிகள் அல்லர். உம்மினத்தவரே. ஐந்து நூற்றாண்டுகளின் பின் இருந்து வந்தோம் என்று கத்தினான் கூல்போய்..குத்த வந்தவன் நின்றான்.
யாம். மன்னன் சங்கிலியனை காணவேண்டும் தயவுசெய்து அழைத்து செல்லுங்கள் என்றான் சுபாங்கன்.

அருகில் வந்த அந்த கூட்டத்திற்கு பெரியவன் சுபாங்கனுடன் நீர் செப்பும் தமிழ் சற்று திரிபடைந்ததே என்று ஏதோ பேசினான். அதற்குள் டைம்மெஷினை அருகில் தெரிந்த புதர் ஒன்றினுள் மறைத்துவிட்டு அடையாளம் இட்டுவிட்டு வந்தான் கூல்.
சங்கிலி மன்னனிடம் அழைத்து செல்ல உடன்பட்டுவிட்டார்கள் என்றான் சுபாங்கன் கூல்போயிடம்.
போகும்வழியில் அழகிய பொய்கை ஒன்றை கண்டனர் டேய்..இதுதான்டா யமுனா ஏரி என்று இரகசியமாகச்சொன்னான் சுபாங்கன்.
சற்று தூரத்தில் அழகிய அரன்மனை ஒன்று தெரிந்தது. அங்கே இருவரும் அழைத்து செல்லப்பட்டு இருக்கை ஒன்றில் அமரவைக்கப்பட்டனர். பெண் ஒருத்தி வந்து கை அலம்புக உணவு புக என்றாள். இருவரும் கை கழுவிட்டு வந்திருந்தனர். சுடச்சுடச்சோறும், கத்தரி, பாகல், பயிற்றங்காய் கறிகளுடன் உணவு பரிமாறப்பட்டது. பாஸ்.. நான் ஏதோ கனிகள் பழங்கள் தான் தருவார்கள் என்று நினைத்துவிட்டேன் என்றான். சாப்பிட்டு இருவரும் சுவையான ஒரு பானம் அருந்தினர். இப்போதைய ஒரேஞ் கிரஸ்போலவே இருக்கு என்றான் கூல்போய்.

சங்கிலி மன்னனை சந்திக்க அழைப்பு வந்தது. இருவரும் உள்ளே அழைத்துவரப்பட்டனர். உயர்ந்த இடம் ஒன்றில் பெரிய இராஜ சிம்மாசனத்தில் சங்கிலி மன்னன் உட்கார்ந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு மீண்டும் சங்கிலியனை உற்றுப்பார்த்தனர்.
பாஸ்..சங்கிலியனைப்பார்த்தால் நம்ம வரோ போலவே இருக்கு என்றான் கூல்போய்.
ஆளை மட்டுமாடா பார்த்தாய் சிம்மாசனத்திற்கு மேலே என்ன எழுதியிருக்கு என்று ஒருமுறை பார் என்றான் சுபாங்கன். ஆம் அங்கே “அகசியம்” என்று எழுதப்பட்டிருந்தது.

டைம் மெஷின் பற்றி, நூற்றாண்டுகள் பற்றி, விஞ்ஞானம் பற்றி, யாழ்ப்பாணம் 1505ற்கு பின் என்று பலவற்றையும் சங்கிலியனுக்கு புரியவைத்தனர் இருவரும்.
ஆ…என் மண், ஐந்து நூற்றர்டின் பின்னும்…என்று அழுதான் சங்கிலியன்.
சற்று தொலைவில் பீரங்கிகள் ஒலி கேட்டது.
நண்பர்களே பறங்கியர் எம் அருகில் வந்துவிட்டனர். எம் வீரர்கள் தம்மிடமுள்ள ஆயுதங்கள் கொண்டு இறுதிவரை போராடுவார்கள். என் மரணம் எனக்கு புரிகின்றது.
அதன் முன்னர் நீங்கள் பத்திரமாக திரும்புங்கள் என்றான் சங்கிலி மன்னன்.
நண்பர்களே எனக்கு இருக்கும் ஒரே ஒரு கவலை. என் சுயசரித்திரத்தை நானே எழுதவேண்டும் என்பது என் கனவு. அது நிறைவேறாமலே நான் சாகப்போகின்றேன் என்றான்.
கவலைவேண்டாம் மன்னா! உங்கள் இந்த கனவு உங்கள் பல பிறப்புகளின் பின்னர் 2010 காலங்களில் நிறைவேறும் என்று விட்டு இடம் தெரியாமல் சிரித்தான் கூல். சுபாங்கன் முறைத்துப்பார்க்க எங்கேயோ பார்த்து சாமாளித்தான்.

பீரங்கிச்சத்தங்கள் மிக அருகில் கேட்கத்தொடங்கின. நண்பர்களே பறங்கியர்கள் நம்மை அண்மித்தனர் என நினைக்கின்றேன். நீங்கள் பத்திரமாக சென்றுவிடுங்கள் என்று ஆணையிட்டுவிட்டு, ஈட்டியும் கேடையமும் எடுத்து போருக்கு புறப்பட்டான் சங்கிலியன்.
இனிமேலும் இங்கிருந்தால் நிலமை மோசமாகும்டா கெதியா டைம்மெஷின் பக்கம் ஓடுவோம் என்றுவிட்டு, கூல்போயை திரும்பி பார்க்காமல் தலை தெறிக்க ஓடினான் சுபாங்கன். ஓடிவந்து டைம் மெஷின் இருந்த இடத்தை அடைந்து பார்த்தபோது, நாங்கை தொங்கப்போட்டுக்கொண்டு இளைப்பு வாங்க மூச்சிழுத்துக்கொண்டிருந்தான் கூல்போய்.
ரைம் மெஷினை எடுத்து கெதியா திருப்படா என்றான் சுபாங்கன்.
முடியவில்லை…..
பாஸ்…சொதப்பிட்டோமே பாஸ்..என்று தலையிலை கையை வைத்தான் கூல்போய்.
ஏனடா என்றான் சுபாங்கன் பதபதைப்புடன்?
“எக்ஸ்பெரிமன்ஸ் வித் டைம்” பற்றி எல்லாம் கதைத்தீங்க பாஸ்..இந்த கதையின் ஆரம்பத்தை மறந்துவிட்டீங்களே…போச்சு எல்லாம் போச்சு என்றான்…
கொலையுதிர்காலம் 01
சக்ஸஸ்..சக்ஸஸ்…என்று இரண்டு வயர்துண்டுகளை V வடிவமாக வைத்துக்கொண்டு சிவாஜி கணேசன் கணக்காக கதைக்குள் எண்டர் ஆகின்றான் சுபாங்கன்.
அப்படி அவன் கத்தியதற்கு காரணம் “கால இயந்திரம்” ஆம் அவனால் பின்பக்கமாக கடந்த நூற்றாண்டுகளுக்கு செல்லக்கூடிய ஒரு டைம் மெஷின் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. அதுதான் அந்த கத்தல்.

ஓகோ…இன்னும் முன்னுக்கு முன்னுக்கே நாம் போக முடியுமே தவிர மீண்டும் திரும்ப முடியாதுடா! சீ..உனக்குகூட இந்த சந்தேகம் வரவில்லையேடா…
எப்படிடா தப்புறது?
நோ சான்ஸ்…பாஸ்! ஒரே ஒரு சான்ஸ் மட்டும்தான் உண்டு. ஜனா அண்ணாவை ஏதாவது செய்யக் சொல்வதே.
“ஏதாவது செய்யுங்கள் அண்ணே பிளீஸ், முதல்ல எங்கள் இரண்டுபேரையும் பழைய இடத்திற்கே கொண்டுவந்து விட்டுடுங்க”
பேரிரைச்சலுடன் ஒரு பெரிய மெஷின் வருகின்றது அதில் ஜனா இருந்து இரண்டுபேரையும் சைகையால் அழைக்கின்றார். இதோ கண்முன்னாலே பறங்கியர் வீரர்களையும் மக்களையும் கொன்று குவிப்பது தெரிகின்றது. இருவரும் குறிகள்வேறு வைக்கப்படுகின்றனர்.
பல வேட்டுக்களுக்கு தப்பித்து அந்த டைம் மெஷினை அடைகின்றார்கள். இதோ அது ஜிவ் என்று கிளம்பகின்றது.

மீண்டும் பழைய இடம், பழைய சூழல். அப்பாடா என இரண்டு பேரும் மூச்சுவாங்குகின்றார்கள். சந்தேகம் தாளாமல் கூல் மேசையில் இருந்த வலம்புரி பேப்பரை எடுத்து பார்க்கின்றான். அதில் தேதி 08.10.2010 என்று இருக்கின்றது.
இப்போதுதான் முழுமையாக அப்பாடா என்றான் சுபாங்கன்.
அப்பாடா பெரிய ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றிவிட்டீங்க ஜனா அண்ணா என்று ஜனாவின் தோழில் தட்டுகின்றான் சுபாங்கன்.
“டொங்” என்று ஒரு சத்தம், ஆம் அது மனித தசை இல்லை.
வடிவாக உற்றுப்பார்த்து ஜனா அண்ணே என்கின்றான் சுபாங்கன்..
ஹலோ வேர்ள்ட்…ஐம் நொட் ஜனா.. ஐம் விலேஜ். ஸ்பீட் ஒன் தெராஹெட்ஸ், மெமறி வன் ஸிட்டா பைட்.

ஆஹா…என்றான் கூல்போய்.. அப்போ ஜனா அண்ணா எங்கே என்கின்றான் சுபாங்கன்?
அங்கே இருக்கும் சுவரில் இருவருக்கும் விஸ்வல் செய்துகாட்டுகின்றான் விலேஜ்.
அதில்…..
ஜெஸ் நான் இதை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

முற்றும்.

LinkWithin

Related Posts with Thumbnails