Sunday, June 28, 2009

70 களின் தேவதை ஃபரா ஃபோசெட்.


லொஸ் ஏஞ்ச்ஸ் நகருக்கு 2009 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 25 ஆம் நாள், ஒரு துக்கரமான நாளாகவே நிர்ணயிக்கப்பட்டது போல். ஆம் அமெரிக்கர் மட்டும் இன்றி முழு உலகமும் போற்றும் யுகக்கலைஞனான பொப் உலகின் மன்னரான மைக்கல் ஜக்ஸனை மட்டும் இன்றி அதே நாளில் 1970 களின் அமெரிக்க இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்த ஃபரா ஃபோசெட்டையும் இழக்கவேண்டி ஏற்பட்டது.

1947 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ஆம் நாள் அமெரிக்காவின் ரெக்ஸஸ் மாநிலத்தில் பிறந்தவர் ஃபரா ஃபோசெட், கோல்டன் குலோப், மற்றும் எம்மி விருதுகளுக்காக பபல தடவைகள் பரிந்துரைக்கப்பட்ட நடிகையாகவும் அவர் உள்ளார். 1976 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி தொடராக வெளிவந்து அனைரையும் கவர்ந்த சார்லியஸ் ஏஞ்சல்ஸ் தொலைக்காட்சித் தொடரில் ஒரு துப்பறிந்து தீய சக்திகளுடன் போராடும் துணிச்சல் மிக்க பெண்ணாக நடிதத்தன் மூலம் இரசிகர்களின் அன்றைய கனவு தேவதையாக ஃபரா ஃபோசெட் அன்று உருவெடுத்துக்கொண்டார்.


The Burning Bed, Nazi Hunter: The Beate Klarsfeld Story, Poor Little Rich Girl: The Barbara Hutton Story, Margaret Bourke-White போன்ற தொலைக்காட்சி திரைப்படங்களில், துணிச்சல் மிக்க ஒரு சாவால் விடுக்கும் பெண்ணாக நடித்து இவர் பெரும் புகழ் பெற்றார். ஒரு வகையில் சொல்லப்போனால் 70-80 களுக்கிடையிலான ஆண்களின் செக்ஸ் சிம்போலாகவே இவர் கொள்ளபட்டார். 70 களின் அமெரிக்க இளைஞர்கள் இவரது புகைப்படங்களை தமது படுக்கை அறையில் ஒட்டி அழகு பார்த்தனர்.

அமெரிக்காவின் ரெக்ஸஸ் மாநிலத்தில் பிறந்த ஃபரா ஃபோசெட், அடிப்படையில் ஒரு பிரஞ்ச் இனத்தவராவார். ஜேம்ஸ் வில்லியம்ஸ் ஃபோசெட், ரொளலின் அலிஸ் தம்பதிகளுக்கு இரண்டாவது மகளாக பிறந்தவர். அஸ்ரின் ரெக்ஸஸ் யூனிவசிட்டியில் படித்து பட்டம் பெற்றவர் ஃபரா ஃபோசெட். பல்கலைக்கழக வாழ்வில் காஸ்பொக்ஸ் சஞ்சிகை நடத்திய அமெரிக்காவின் முதல் 10 அழகான, கவர்ச்சான இளம்பெண்கள் என்ற தெரிவில் ரெக்ஸ்சஸ் யூனிவர்சிட்டியில் இவர் கல்வி கற்றபோது தெரிவாகியிருந்தார். இதன்மூலம் வெளியான இந்தப்புகைப்படமே இவரது கொலிவூட் வாழ்வுக்கு படிக்கல்லாக அமைந்தது. இவது புகைப்படத்தைப்பார்த்த தொலைக்காட்சி இயக்குனர் ஒருவர் இவரை லொஸ் ஏஞ்சல்சுக்கு அழைத்து “சார்லியஸ் ஏஞ்சல்ஸ்”; தொலைக்காட்சித் தொடரில் இவர் நடிப்பதற்கான வாய்ப்பினை வழங்கியிருந்தார்.


ஆரம்ப காலங்களில் இவர் தொலைக்காட்சித் தொடர்களில் மட்டும் இன்றி நொக்ஸிமா சேர்விங் கிரீம், அல்ட்ரா பிரைட் ரூப்பேஸ்ட், வெல்லா ப்பல்ஸம் ஸம்பூ, போன்றவற்றுக்கான விளம்பரப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார்.
மார்ச் மாதம் 21 ஆம் நாள் 1976ஆம் ஆண்டு, ஃபரா ஃபோசெட், சாலியஸ் ஏஞ்சலாக அமெரிக்கர்களின் முன் தோன்றினார். இதன் மூலம் அமெரிக்க இளைஞர்களின் பார்வை இவர் மீது மையம்கொண்டது. அன்றைய நாட்களில் இந்த தொடர் ஆரம்பமாகும், இரவு 8.30 மணிக்கு அனைவரும் தங்கள் நேரங்களை ஒதுக்கி தொலைக்காட்சிகளின் முன் இருக்கும் வகையில் இந்த தொலைக்காட்சித் தொடர் அன்று பெரும், விறுவிறுப்பும், அபிமானமும் பெற்ற தொடராக விளங்கியது.
செப்ரெம்பர் மாதம் 22 ஆம் நாள் 1976 ஆம் ஆண்டு, மக்களின் பேரபிமானம் பெற்ற நடிகையாக ஃபரா ஃபோசெட் தெரிவாகியதுடன், அபிமானம் பெற்ற தொடராக சாலியஸ் ஏஞ்சலும் தெரிவாகியிருந்தது.
ரெட்பொக்ஸ், வரிட்ரி ஷோ, ஏபிசி, டைனமிக் போன்ற புகழ்பெற்ற சஞ்சிகைகளின் அட்டைப்படமாக ஃபரா ஃபோசெட் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்.


அதன் பின்னரும் பல தொடர்களிலும், சில கொலிவூட் திரைப்படங்களிலும் நடித்து, பெரும் புகழும், அதனுடன் பெரும் பணமும் பெற்றார்.
ஃபரா ஃபோசெட,; லீ மேஜர் என்பவரை திருணம் புரிந்துகொண்டார். 1979 களில் அவருடன் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக அரை விவாகரத்து செய்துகொண்டார். அதன் பின்னர் தனது இறுதிக்காலங்களில், வயதில் மிக மிக குறைந்த பிரபல நடிகர் ஒருவடன் அவர் காதல் உறவு கொண்டிருந்தார் என்று கூறப்டுகின்றது.


புகழின் சிகரங்களை தொட்ட ஃபரா ஃபோசெட் தனிப்பட்ட தனது வாழ்வல் மிகவும் நொந்துவிட்டார் எனவும், பல்வேறு தரப்பட்ட ஏமாற்றங்கள், சோகங்கள் அவரை வாட்டிவிட்டன எனவும் அவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
2006 ஆம் ஆண்டு புற்றுநோய்க்காக சிகிற்சைகளை பெறத்தொடங்கிய அவர், இறங்கும்வரை நோயின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு, சிறப்பான சிகிற்சைகளை பெற்றவண்ணம் இருந்தார்.
2006 ஆம் ஆண்டில் அவருக்கு புற்றுநோய்க்கான அறுவை சிகிற்சை ஒன்று இடம்பெற்று புற்றுநோய்க்கான கட்டி அகற்றப்பட்டது, இருந்தபோதிலும், 2007 ஆம் ஆண்டு அவர் மறுபடியும் புற்றுநோய்க்கு ஆளானார். புற்றுநோய் அவரது கல்லீரல் பகுதிகளுக்கும் பரவியது.
இந்த நிலையில் கடந்த 25 ஆம் நாள், ஜூன் மாதம் 2009 ஆம் ஆண்டு அவர் இந்த உலகத்தைவிட்டு விடைபெற்றார். இறக்கும் போது அவரின் வயது 62.

Friday, June 26, 2009

இந்த யுகக் கலைஞனை லொஸ் ஏஞ்ஸல்ஸில் தொலைத்துவிட்டது உலகம்.


1982 களில் “திரில்லர்” என்ற இசைத்தொகுப்பு (அல்பம்) வெளியாகியபோது பூமிப்பந்தே அந்த இசைக்கும், நடனத்திற்கும் ஏற்றால்ப்போல் துள்ளியது என்ற அளவுக்கு சக்கை போடு போட்டு உலகின் அதிகளவிலான விற்பனைகள் இடம்பெற்று வசூல் குவித்த இசைத்தொகுப்புகளின் பட்டியல்களில் முதன்மையான ஒன்றாக உள்ளது.

அந்த அளவுக்கு உலகத்தையே எழுந்து நின்று ஆடவைத்தவர் இந்த யுகக்கலைஞர் மைக்கல் ஜக்ஸனே. 1980 களில் இருந்து இவரது அல்பங்களையும், பிரேக் என்னும் அதிவிரைவான நடனஅமைப்பின் ஸ்ரெப்ஸ்களையும் அன்றைய உலகம் வாயை பிளந்தவண்ணம் பார்த்துக்கொண்டே இருந்தது. இன்றுவரை பாடல்களில் மட்டும் இன்றி நடனத்தில்க்கூட அவருக்கு நிகர் அவரே.
இதே 80 களில் இவரது அல்பங்களின் ஒளிக்காட்சிகளை ஒளிபரப்பியதன் மூலமே பேரபிமானம் பெற்று பிரபலமானது எம்.ரி.வி. என்று சொன்னாலும் அது மிகையானதல்ல.

ஒரு பாடகராக, இசை பற்றிய எழுத்தாளராக, இசை அமைப்பாளராக, இசைத்தொகுப்புகளின் தயாரிப்பாளராக, நடனக்கலைஞராக, நடன அமைப்பாளராக, நடிகராக, இவர் எடுத்துக்கொண்ட பரினாமங்கள் பல.
ஆனால் அன்று அத்தனையிலும் படு கச்சிதமாகவே இவர் செயற்பட்டிருக்கின்றார்.
1980 களில் எம்.ரி.வி. நிறுவனத்தின் தயாரிப்பளராக இவருடன் நெருக்கமாக இருந்த ஸ்ரீபன் றிவ், மைக்கல் ஜக்ஸன் பற்றி கூறுகையில், எப்போது குறுகுறு என்று பார்த்து, எப்போதும் சுறுசுறுப்பாக தனது வேலைகளை முடிப்பவர் மைக்கல்,
தொழில் விடயங்களில் அவரது பக்தி, எல்லாவற்றுக்கும் மேலாக கொடுத்;த வாக்குகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற தன்மை அவரிடம் உண்டு. யாரையும் மனம் நோக வைக்கக்கூடாது என்பதில் எப்போதும் கவனம் எடுத்துக்கொள்வார். என்னைப்பொறுத்தவரையில் எல்லோருக்கும் தான் நல்லவனாக இருக்கவேண்டும் என அவர் நான் அறிந்ததிலிருந்து இறுதிவரை இருந்ததே அவரது பலவீனமாக இருந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.


பெரும்பாலான உலகின் இசை இரசிகர்களுக்கும், நடனப்பிரியர்களுக்கும் 26 ஆம் நாள், ஜூன் மாதம் 2009 இன்று ஒரு துக்கரமான நாளாகவே விடிந்திருக்கும். உலகின் ஒவ்வொவருக்கும் மைக்கேல் ஜக்ஸனைப்பற்றித் தெரிந்திருக்கும்.
1958 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் நாள் பிறந்த மைக்கேல் ஜோசப் ஜக்ஸன் என்;ற இந்த யுகக்கலைஞன் தனது 11ஆவது வயதில் இசை உலகத்திலும் நடனத்திலும் புதிய முத்திரை பதிக்க இறங்கிய இந்த கலைஞன், 25 ஆம் நாள் ஜூன் மாதம் 2009ஆம் ஆண்டு இசை உலகத்தில் இருந்து மட்டுமல்லாது இன்று இந்த உலகத்தில் இருந்தே நிரந்தரமாக விடை பெற்றுச் சென்றுவிட்டாhர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹோல்ம்பி ஹில்ஸ் இல்லத்தில் திடீரென ஏற்பட்ட இருதய கோளாறினால் மைக்கல் ஜெக்சன் உயிர் பிரிந்தததாக அவரது சகோதரர் ரென்டி ஜெக்சன் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற மற்றுமொரு பாடகர் எல்விஸ் பிரிஸ்லியன் புதல்வியை 1994ம் ஆண்டு மைக்கல் ஜெக்சன் கரம்பிடித்தார்.
எனினும், அந்த திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. பின்னர் மற்றுமொரு நடிகையை ஜெக்சன் திருமணம் முடித்தார். எனினும் அந்த திருமண பந்தமும் நீண்டகாலம் நீடிக்கவில்லை.

மைக்கல் ஜக்ஸன், பிரின்ஸ் மைக்கல் 1, பிரின்ஸ் மைக்கல் 2 மற்றும் பரிஸ் என மூன்று குழந்தைச் செல்வங்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நூற்றாண்டின் மிகப் பிரபலமான இசைக் கலைஞராக மைக்கல் ஜக்ஸன் கருதப்படுகின்றார்
எதிர்வரும் மாதம் லண்டனில் நடைபெறவிருந்த இசை நிகழ்வுகளுக்கான டிக்கட்டுகள் நான்கே மணித்தியாலங்களில் விற்றுத் தீர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் சுமார் 75000 டிக்கட்டுகள் நான்கு மணித்தியாலங்களில் விற்று தீர்க்கப்பட்டன.நிற, மொழி, சமய பேதங்களை களைந்து, சமகால உலக இசை வரலாற்றில் தனக்கென ஓர் தனியான இடத்தை பதிவு செய்துகொண்டுள்ள மைக்கல் ஜக்ஸனின் மரணம் அத்துனை இசைப் பிரியர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


ஒரு கலைஞன் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுவது இயல்பு என்ற ரீதியில் மைக்கல் மீதும் பல குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் எழாமல் இல்லை. இருப்பினும் “கலைஞன் ஒருவனின் கலை” என்ற ரீதியல் மைக்கேலின் கலை போற்றுதலுக்குரியதாகும். இந்த யுகத்தின் சிறந்த கலைஞன் மைக்கல் ஜக்ஸனே என்பதையும் எவரும் மறுத்துவிடமுடியாது.

Thursday, June 25, 2009

தென்னாசியாவில் பெரும் பிரச்சினையாக உள்ள போக்குவரத்து நெரிசல்கள்.


தென்னாசியாவில் இன்று பெரும் தலையிடியாகவும், பெரும் அலுப்பையும் எரிச்சலினையும் ஏற்படுத்தும் விடயமாக போக்குவரத்து நெரிசல்களும், பாதை ஒழுங்கீனங்களும், பிரயாணிகளுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
அதாது உலகின் சனத்தொகையில் 5 இல் 1 பங்கினர் உள்ள தென்னாசியா போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் போக்குவரத்திற்காக இன்னும் ஓரிரு பதைகளே போக்குத்திற்கான பிரதான பாதைகளாக இருந்துவருகின்றன.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த நாடுகள் ஆங்கில காலனித்துவ ஆட்சியில் போடப்பட்ட பாதைகளே இன்றும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றமையினை கூறலாம். குறிப்பாக பக்கத்தில் உள்ள ஊர்களுக்குக்கூட சுற்றிவரத்தக்க வகையிலேயே பெரும்பாலான பாதைகள் அமைந்துள்ளதை நோக்கலாம்.

மேற்படி நாடுகள் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்று இன்று 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டபோதிலும்கூட இன்றுவரை முறையான வீதி அபிவிருத்தி, போக்குவரத்து ஒழுங்குகளை அமுல்ப்படுத்துகின்றனவா? என்ற கேள்விக்கு விடை கண்டிப்பாக பூச்சியமாகவே இருக்கும்.
மேலை நாடுகளில் 60, 70 களில் இப்படியான போக்குவரத்து சிக்கல்கள் எழுந்தபோதிலும் அவை குறிப்பாக ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் 1985 ஆம் ஆண்டுகளின் பின்னர் ஒரு முழுமையான கட்டுப்பாடுகளின் கீழ் கொண்டுவரப்பட்டன. எனினும் இந்த நடைமுறைகளை தென்னாசியா போன்ற நாடுகளில் செயற்படுத்த இன்னும் முடியாமை இருப்பது பெரும் கேள்விக்குறியினையே ஏற்படுத்துகின்றது.சனத்தொகை பெருக்கத்தையும், வாகனப்பானையாளர்களின் பெருக்கங்களையும் காரணமாகக்கூறி இதில் சம்பந்தப்பட்டர்கள் தப்பிக்க நினைக்கின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை உலகில் இரண்டாது பாரிய ரயில்வே போக்குத்தில் உள்ள நாடு என்று கூறப்படுகின்றது. சில அரசியலவ்hதிகளால் அது அபிவிருத்தி செய்யப்பட்டு, நஸ்டமடைந்த துறையாக இருந்து இலாபமீட்டும் துறையாக மாற்றப்பட்டதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அது ஓரளவுக்கு வரவேற்கத்தக்க விடயமும் ஆகும். ஆனால் இன்றும் கூட மேற்படி ரயில்களின் வேகம் குறிப்பிட்ட பிரதேசங்களை அடையும் காலம் என்பi பெரும் சந்தேகத்துடனே நோக்கவேண்டி உள்ளது. ஏனெனில் இன்றும் முன்னேற்றம் அடைந்த நாடுகளின் வேகங்களுக்கு இணையாக கடுகதியில் செல்லக்கூடிய மின்சார ரயில் திட்டங்கள், மின்சார ரயில்கள் என்பன சேவைகளி;ல் ஈடுபடுத்தப்படவில்லை. ஓரிரு இடங்களில் இடம்பெற்றாலும், அவை 90-95களில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை அடிப்படையானதாக கொண்டதாகவே உள்ளன.

வாகன நெரிசலை எடுத்துக்கொண்டால் இந்தியாவில் அது ஒரு பெரும் பிரச்சினையாகவே உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக இரண்டு ஊர்களுக்கு இடையில் செல்வதென்றாலும்கூட பல மணித்தியாலங்களை வாகன நெரிசல்காரணமாக வீதிகளிலேயே செலவழிக்கவேண்டி ஏற்படுகின்றது. இந்த நெரிசல் காரணமாக பல்Nறு தேவைகள், அசரத்தேவைகள், என செல்பர்கள் பாடு பெரும் திண்டாட்டமாகN உள்ளன. பல மேம்பாலங்களும், டவுண்டானாக்களும் அமைக்கப்பட்டும்கூட இதை கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மும்பை, கொல்கத்தா, சென்னை, பங்களுர், டில்லி போன்ற இடங்களில் மக்கள் செறிவு அதிகம் என்பதனால் நாளாந்தம் வாகன நெரிசல்களிலேயே பெரும்பாலானர்களின் நேரங்கள் விரயமாகின்றது.


குறிப்பாக பிளாட்போர்ம் (நடைபாதை) கடைகள், சட்டவிரோத கட்டங்கள், முச்சக்கரவண்டி ஓட்டுனர்களின் அசண்டையீனமான போக்குவரத்து விதி மீறல்கள், வாகன ஒழுங்குகளை பின்பற்றாமை போன்ற காரணங்களை நாம் வெளிப்படை உண்மையாக தெரிவித்துவிட்டுப்போகலாம்.
அது தவிர, வீதிகள் அகலப்படுத்தப்படாமை, குறிப்பிட்ட சில வீதிகளை மட்டுமே தொடு பாதைகளாக கொண்டிருப்பது, சிறிய வீதிகள் கூட இருவழிப்பாதைகளுக்கு அனுமதிக்கப்பட்டது, வீதிகள் பாராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருப்பது என்பனவும் ஒரு காரணமாக இருப்பதுடன், சென்னையினை போன்ற இடங்களில் சகல வேலைகளையும் ஒரே தடவையில் செய்து முடிக்காமல், கோப்பிரேசன் காரர்களால் ஒருதடவை, கேபிள் காரர்களால் ஒருதடவை, மின்சார வாரியத்தால் ஒரு தடவை, கழிவு நீர் பாதைக்காக ஒரு தடவை என பல தடகைள் வீதிகள் கிண்டப்படுவதும் இந்தப்போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகின்றது. இந்த நிலையில் இந்த வாகன நெரிசல்களின் மத்தியில் அமைச்சர்கள், முக்கிய பிரதிநிதிகள் போவதென்றால் வீதிகள் மூடப்படுவதும் மறுபுறம்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இன்றும் கூட மின்சார சமிக்கை விளக்குகள் முக்கிய இடங்களில் பெருத்தப்பட்டாலும்கூட, அங்கு போக்குவரத்து பொலிஸாரின் விசில்களும், கை சமிக்கைகளும் நின்றதாக இன்றும் காணமுடியிவில்லை.
காரணம் மின்சமிக்கை ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பதற்கு வாகன சாரதிகள் தயாரில்லை என்பதே காரணம்.


மேலை நாடுகளில் உடனுக்குடன் ஒழங்கு படுத்தப்படும் போக்குவரத்து நடைமுறைகளை இங்கும் ஒழுங்குபடுத்தப்படவேண்டும். மாறாக இங்கு படிப்பiடியான திட்டங்களே மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் மூலம் போக்குவரத்து பிரச்சினைகள் நிரந்தரமாக தீர்ந்துவிடும் என்று கூறிவிடமுடியாது. குறிப்பிட்ட காலத்தினுள் பாரிய தொகை நிதியினை ஒதுக்கி புதிய பாதைகள் அமைக்கப்படவேண்டும், நகரத்தின் மத்திகளில் உள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்த, நகர்புறங்களிலேயே தனியார் வாகங்களை தரிக்வைத்து, சகலரும் மைய நகருக்குள் குறிப்பட்ட பேருந்துக்களிலேயே பயணிக்கவேண்டும் என்ற ஒழுங்குகளை அறிமுகப்படுத்தலாம்.
விரைவான ஒருவழிப்பாதைகளை வாகன சாரதிகளுக்கு இலகுவான முறையில் ஒழுங்குபடுத்தலாம், பாதசாரிகளுக்கு என பாதசாரிகள் கடவைகள் மிகப்பாதுகாப்பாக நிறுப்பட்டு, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கடவைகள் அமைக்கலாம். இவைபோன்றற்டன் வருடத்திற்கு ஒருமுறையாவது வீதிகளின் தரமெ;படுத்தலை செயற்படுத்துதுடன், வீதி ஒழுங்குகளை மீறுபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்தன் மூலமுமே இந்தப்போக்குவரத்து நெரிசலை இல்லாது செய்யமுடியும்.
குறிப்பாக இன்று நம்மில் பலருக்கு தான் மட்டும் என்ற சிந்தனைகள் மாறி மற்றவர்களும் மற்ற வாகனங்களும் வீதியில் பயணிக்கின்றன. முற்றவர்களும் எங்களைப்போல பல்வேறு தேவைகளுக்காக வீதியில் பயணிப்பவர்கள் என்ற எண்ணம் வந்துவிட்டாலே வீதி ஒழுங்குகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும்.

Wednesday, June 24, 2009

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….


ஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள், அதாவது அவனின் வாழ்க்கைத்துணைநலமான மனைவி இருக்கின்றாள், அவனது இன்பங்களிலும், துன்பங்களிலும் ஒன்றாக பங்கேற்று, அவன் துவண்டு விழும்போது தன் தோழ்களில் தாங்கி, அவனை தேற்றி, அவனது வெற்றிகளில், உலகமே அவனைப்பாராட்டும்போது ஓதோ ஒரு மூலையில் இருந்து விழிகளில் வழியும் தனது ஆனந்தக்கண்ணீரால், கணவன் அந்த நிலையினை அடைவதற்காக பட்ட கஸ்டங்களை எல்லாம் நினைத்து பார்;கின்றாள்.
என்றெல்லாம் நாம் படித்திருக்கின்றோம், அனுபவித்திருக்கின்றோம், கேள்விப்பட்டும் இருக்கின்றோம்.

தமிழை பொறுத்தவரையில் “ஈன்றபொழுதில் பெருதுவக்கும்” என்று தாயினையும், தந்தை மகற்காற்றும்” என தந்தை பற்றியுமே அவன் சான்றோன் ஆனால் அவர்களின் உப்பினை சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் எங்கிருந்தோ தனது இருத்த சொந்தங்கள் அத்தனையினையும் விட்டுவிட்டு, தாய் 10 மாதம் சுமந்த அவனை, தனது நெஞ்சில் ஆயுள் முழுவதும் சுமக்கும் மனைவி பற்றி பெரிதாக யாரும் சொன்னதாக இல்லை.
எமனுடன் வாதிட்டு தனது கணவன் சந்தியவானை மீட்ட சாவித்திரியுடன் அது சரியாகிவிட்டது.


சரி, இன்றைய நிலையில், ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் அவனது மனைவி எப்படி இருக்கின்றாள் என்பது பற்றி சிறிது அலசுவோம்.
பொதுவாக இன்றைய நிலையை எடுத்துக்கொண்டால், கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். இந்த நிலையில், இருவருமே சந்தித்துக்கொள்ளும் நேரங்கள் வெகுவாக குறைந்துவிட்டன என்பதே உண்மை. முன்னைய காலங்களில், சிறு குழந்தைகள், தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, அத்தை, மாமா, என ஒரு உறவு வட்டத்தினுள் இருந்து வழர்ந்தன. ஆனால் பாவம், இன்று அந்தப்பிள்ளைகள் தமது தாய் தந்தையரையே சந்திப்பது இரவாகத்தான் இருக்கும். காரணம் இன்றைய உலகமயமாதலின் விளைவு. இதனால்த்தான் பேசாத உறவுகள் பக்கத்தில் இல்லாததனால், குழந்தைகளுக்காக கார்ட்ரூன் சனல்களில், மிருகங்கள் அவர்களுடன் பேசுகின்றனவோ என்னமோ?


சரி, விடயத்திற்கு வருவோம், இன்று முன்னர்போல அல்ல, போட்டிகள் நிறைந்த உலகமாக இது இருக்கின்றது. எனவே பாரிய வேலைச்சுமையுடன் வீடுவரும் கணவனுக்கு மனைவி ஆறுதலாக இருக்கவேண்டும். ஆனால் இன்று மனைவியும் தொழிலுக்கு செல்வதனால் அவளும் பெரும் மன அளுத்தத்துடனே வீட்டுக்குவருபவளாக இருப்பாள். பணிமனையிலும், மனஅழுத்தம், வேலைப்பழு, வீட்டிற்கு வந்தாலும் நின்மதி இல்லை என்றால் அந்த ஆணினால் சாதிக்கமுடியுமா?
பெரும்பாலும் வேலைப்பழு அதன்மூலமான மன ஆழுத்தத்தினால் ஆத்திரமும், எரிச்சலும் தன்னை அறியாமலே அவர்களுக்குள் குடிகொண்டுவிடும். இந்தச்சூழ்நிலைகளிலேயே கணவன் மனைவியரிடம் ஒரு சிறு பிரச்சினைகூட பூதாகரமாக வெடித்துவிடும். இவ்வாறான சூழ்நிலைகளே இன்று பெரும்பாலாக நடப்பதை நாம் அவதானிக்கலாம்.
“ஓவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண இருக்கின்றாள், இவர் ஒன்றும் பெரிதாக சொல்லும்படியான வெற்றியாளர் அல்ல! என்று சொல்லிக்கொண்டு” என்று ஒரு நகைச்சுவையினை அண்மையில் படிக்கக்கிடைத்தது. அது நகைச்சுவையாக மட்டும் அன்றி சிந்திக்கவைத்தது.
காரணம் ஒரு ஆணின் சகலத்துக்கும் உரிமையானவள், அவனது மனைவியே, கண்டிப்பாக, வெளியில் கணவன் பற்றி தெரியாத பல விடயங்கள் அவனின் மனைவிக்கு தெரியவரும். வெளியில் சண்டியர்களாக இருக்கும் பலர் தமது மனைவிக்கு பயந்தவர்களாகவே இருப்பர்.


ஒருவனிடம் இன்றைய நிலையில் அவனது மனைவி எதிர்பார்ப்பது, தனக்கு கணவனால் வழங்கப்படும் ஒரு கௌரவம், தனக்காக அவன் ஒதுக்கும் நேரம், அன்பான பேச்சு இவை மட்டுமே. ஆனால் இவற்றை கொடுப்பதற்குக்கூட இன்றைய உலக கணவன்மார்களால் இயலாமல் உள்ளது.
ஓவ்வொரு அணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் உள்ளால் என்று அவளை சிறப்பிப்பது. அவனது துறையில் அவளுடைய பங்கும் உள்ளது என்பதல்ல. சிறந்த ஒரு இல்லாளாக இருந்து கணவனை அனுசரித்து, அவனை முழுமையாக புரிந்துகொண்டு, அவனுக்கு வீட்டிலோ குடும்பத்திலோ எந்தப்பிரச்சினைகளும் வராது, வீட்டின் நிர்வாகத்தை தான் கவனித்து வீடும் வரும் கணவனுக்கு ஆறுதலை அளித்தாள் என்றால் அவள் கண்டிப்பாக அவளது கணவனின் வெற்றியில் பெரும் பங்கு எடுத்துக்கொள்கின்றாள் என்றே கூறமுடியும். நிச்சயமாக அவளது கணவன் வெற்றிபெறுவான். மாறாக எதிரும் புதிருமாக இருந்தால் நிலைமைகள் தலைகீழாவே மாறும்.உதாரமாக இன்றைய வெற்றியாளர்கள் என்று நீங்கள், கருதும் நபர்களையும் அவர்களது மனைவிகளையும் உற்றுப்பாருங்கள், அவர்களிடம் எவ்வளவு, அந்நியோன்னியம், புரிந்துணர்வுகள் இருக்கும் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
இவ்வாறான மனைவியரே தனது கணவனின் வெற்றிப்பாதைகளில் இருக்கும் முட்களை அகற்றி, அவனின் முன்னேறத்திற்கு பின்னால் நிற்கின்றனர்.
வெற்றிபெற்று பெரியமனிதர்கள் ஆகிவிட்டாலும், உலகின் கண்கள் முழுவதும் அவர்களை உற்றுநோக்கினாலும், எங்கு சென்றபோதிலும், போன அலுவல்களை உடனடியாக முடித்துக்கொண்டு தமது மனைவியை நாடி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஓடிவந்துவிடுவார்கள். உதாரணங்கள் நிறைய பிரபலங்களைச் சொல்லலாம். அதற்காக அவர்களை பொண்டாட்டி தாசர்கள் என்று நினைத்துவிடக்கூடாது, அவர்கள் வாழ்க்கையின் அர்தத்தையும் வாழ்வியலையும், தூய்மையான அன்பையும் புரிந்துகொண்டவர்கள் என்பதே அதன் அர்த்தம்.

Sunday, June 21, 2009

துடுப்பாட்டத்தில் சுருண்டது சிறி லங்கா…கிண்ணம் பாகிஸ்தானுக்கு..


ஆரூடங்கள், விமர்சகர்களின் கணிப்புக்கள், கிரிக்கட் விற்பன்னர்களின் எதிர்பார்ப்புக்கள் அத்தனையும் எதிர்மாறாக மாற இலங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் வைத்து ஐ.சி.சி. வேர்ள்ட் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது பாகிஸ்தான்.
இன்று காலை மக்ஸ் தொலைக்காட்சி இன்றைய வெற்றிவாய்ப்பு பற்றி கணிப்பிடுகையில், இரசிகர்களின் எதிர்பார்ப்பின் பிரகாரம் 65 வீதம் சிறி லங்காவுக்கும் 35 வீதமான வெற்றிவாய்ப்பே பாகிஸ்தானுக்கும் உள்ளதாக தெரிவித்திருந்தது.
எனினும் கிரிக்கட் என்னும் விளையாட்டில் யாருமே எதையும் தீர்மானிக்கமுடியாது என்பதை இன்று ஞாயிற்றுக்கிழமை லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டி சிறப்பாக விளக்கியுள்ளது.நாணைய சுழற்சியில் வெற்றிபெற்ற சிறி லங்கா அணியின் தலைவர் குமார் சங்ககார முதலில் தாம் துடுப்பெடுத்தாடுவதாக தெரிவித்தார். இதன் பிரகாரம் சிறி லங்கா அணியினர் துடுப்பபெடுத்தாட களத்திற்கு இறங்கினர். ஆரம்பத்திலேயே ஐந்து பந்துகளுக்கு முகம் கொடுத்து எந்தவொரு ஓட்டத்தினையும் பெற்றுக்கொள்ள முடியாமல் மொஹமட் ஆமெரின் பந்துவீச்சில் சாஹிப் ஹசனிடம் பிடிகொடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார் சிறி லங்கா அணியின் அதிரடி ஆட்டநாயகன், சிறி லங்கா அணியின் ரன் குவிக்கும் எந்திரமுமான திலகரட்ன டில்ஷான். கண்டிப்பாக திலகரட்ன டில்ஷானை வந்தவுடனேயே குறைந்த ஓட்டங்களுடன் அட்டமிழக்கவைப்பதே பாகிஸ்தான் அணியின் முழு வியூகமும் கவனமுமாக இருந்திருக்கும். ஏனெனில் சிறி லங்கா அணி இதுவரை ஆடிய விளையாட்டுக்கள் அனைத்தையும் நன்றாக பாகிஸ்தான் அணி கணித்திருந்தால், சிறி லங்கா அணியில் டில்ஷான் மட்டுமே முழு போர்மான வீரராக இருந்தார் என்பதும். அயர்லாந்தினுடனான ஆட்டத்தின்போதே டில்ஷானை எந்தவொரு ஓட்டமும் பெறாத நிலையில் பறிகொடுத்த சிறி லங்கா அணி, பட்ட திண்டாட்டங்களையும் அறிந்திருக்கும்.
அந்தவகையில் இன்று பாகிஸ்தான் அணியின் திட்டம் அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே வொர்க்கவுட் ஆகியுள்ளது.


இன்றைய ஆட்;டத்தில் சிறி லங்கா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பாகிஸ்தானிடம் சுருண்டனர் எனவே சொல்லவேண்டும், இன்றயை சிறி லங்கா அணியின் துடுப்பாட்டத்தை நோக்கினால், டில்சானின் ஓட்டப்பெறுதியற்ற வெளியேற்றத்துடன்,
அடுத்ததாக மைதானத்துக்கு வந்த முபாரக் தன்பங்குக்கும் எந்தவொரு ஓட்டத்தினையும் பெறாமல் டக்முறையில் அப்துல் ரஷாக்கின் பந்வீச்சில் ஸாகிப் ஹசனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்கராராக களமிறங்கிய சனத் ஜெயசூரியா, இந்தப்போட்டியிலும் சோபிக்கத்தவறியவராக வெறும் 17 ஓட்டங்களை மட்டுமே பெற்று அப்துல் ரஷாக்கின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். தொடர்ந்து மஹேல ஜெயவர்த்தன ஒரு ஓட்டத்துடனும், சாமர சில்வா 14 ஓட்டங்களுடனும், உதான ஒரு ஓட்டத்துடனும், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில் அணித்தலைவர் சங்ககார மட்டும் நிதானமாகவும், அபாரமாகவும் துடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழக்காமல், அணியின் ஓட்ட எண்ணக்கையினையும் 138 எனும் ஒரு பெறுதிக்கு கொண்டுசென்றார்.

பாகிஸ்தானின் பந்துவீச்சில் அப்துல் ரஷாக் 3 விக்கட்களையும், உமர் ஹல், சாஹிட் அப்ரிடி, முஹமட் ஆமெர் ஆகியோர் தலா ஒரு விக்கட்களையும் கைப்பற்றியிருந்தனர்.
139 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அக்மல், ஷாஹிப் ஹசன் ஆகியோரை ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்காளக களமிறக்கியது, அணியின் 7ஆவது ஓவரில் மொத்த ஓட்டங்கள் 48 ஆக இருந்தபோது 37 ஓட்டங்களுடன் ஜெயசூரியாவின் பந்துவீச்சில் சங்ககாரவிடம் பிடிகொடுத்து அக்மல் ஆட்டமிழந்து சென்றார். அடுத்து அணியில் 9 அவது ஓவரில் மொத்த ஓட்டங்கள் 63 ஆக இருக்கும்போது, தனது 19ஆவது ஓட்டத்துடன் ஷாகிப் ஹசன் முரளிதரனின் பந்துவீச்சில் ஜெயசூரியாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெழியேறியிருந்தார்.
அடுத்தாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அப்ரிடி, சுஹய் மாலிக் அகியோர் தலா 54, மற்றும் 24 ஓட்டங்களைப்பெற்று அட்டமிழக்காமல் வெற்றி இலக்கினை எட்டினர்.
இந்தப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஷாகிப் அப்ரிடியும், போட்டித்தொடரின் நாயகனாக நினைத்தபடி திலகரட்ன டில்ஷானும் தெரிவு செய்யப்பட்டனர்.கடந்த ஐ.சி.சி. வேர்ள்ட் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகளிலும் இறுதிப்போட்டிவரை வந்து கடைசிவரை போராடி தோற்றது பாகிஸ்தான். இந்தமுறை இறுதிப்போட்டிவரை வந்து வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிகொண்டுள்ளது.
சிறி லங்காவின் தற்போதைய அதிஸ்ர காலங்கள். எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்ற கோசங்கள். லோhர்ட்ஸில் நடந்த இறுதியாட்டத்தில் பலிக்காமலேயே போய்விட்டது.

கச்சதீவு???


இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட மின் கொயர்ஸ் தீவுப்பிரச்சினையே உலகின் தீவுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளில் மிகவும் பெரிதும், சிக்கல் மிகுந்ததாகவும் காணப்பட்டு, பின்னர் சர்வதேச சட்டங்கள் வாயிலாக தீர்வு காணப்பட்டது.தென்னமெரிக்காவில் போக்லன்ட் தீவுகளுக்காக பிரித்தானியாவுக்கும். ஆஜென்ரீனாவுக்கும் இடையில் பெரும் யுத்தமே இடம்பெற்றுள்ளது.இவை மட்டுமல்ல, நோர்வேக்கும், டென்மார்க்குக்குமான கிறீன்லான்ட் பிரச்சினை கூட சர்வதேச சட்டங்களின் பிரகாரம் தீர்த்து வைக்கப்பட்டது,


ஆனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கச்சதீவு விடயமோ, இன்று அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது. 1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப்பிரதமரான திருமதி. இந்திராகாந்தி, இலங்கையின் பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து அப்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, மற்றும் தி.மு.கவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. கச்சதீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “”இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சதீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் இலங்கை அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை” என்பதே ஆகும்.


கச்சதீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் “டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சதீவும் ஒன்று.கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பீரிஸ், “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சதீவு இலங்கையைச் சேர்ந்ததன்று அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்” என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56 இல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது என இந்தியத் தரப்பினரால் திரும்பத் திரும்ப சொல்லிவரப்படுகின்றது.


முன்னர், இலட்சத்தீவுகள், அந்தமான், நிக்கோபர் தீவுகள் என்பவற்றைப்போலவே கச்சதீவும் இந்தியாவுக்கே சொந்தமானதாக இருந்தது. எனினும் 1974 ஆம் ஆண்டு அதை இலங்கைக்கு தாரைவார்த்துக்கொடுக்க இந்தியா எப்படி முன்வந்தது? எப்போதும் குள்ளநரிபோல, நாகலாந்து. காஸ்மீர் போன்ற தனி நிலரங்களையே கபடமாக தன்னகத்தே அபகரித்த இந்தியா எப்படி இந்த தீவை மட்டும் இலங்கைக்கு கொடுத்தது? உள்நோக்கம் இல்லாமலா இருக்கும்? என சாதாரணமாகவே ஆய்வாளர்கள் கணக்குப்போட்டுவிடலாம்.

1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சதீவைக் கை கழுவ இசைந்தது.


இப்போது அதேகாலம் திரும்பியுள்ளது. இலங்கையிலுல் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டதாக அதே ஐ.நாவில் தீர்மானத்திற்கு விடப்பட்டது. இதிலும் இந்தியா, தனது சக்தியை பாவித்து, மற்ற நாடுகளையும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி நிர்பந்தித்து இலங்கையினை காப்பாற்றியுள்ளது. ஆனால் இப்போது இந்தியா கேட்டாலும் கச்சதீவை திரும்பத்தர இலங்கை ஒருபோதும் தயாராக இருக்கப்போவதில்லை. அப்படி இந்தியா கோரினாலும், இல்லை இங்குதான் ஞானம் பெற்றதன் பின்னர் புத்தபகவான் சிங்களவர்களுக்கு நேரில் வந்துபோதனை நடத்தினார் என்று புதிய வரலாறு ஒன்றைச் சொல்லவும் அங்குள்ள பொளத்த மத பிக்குகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தயாராகவே இருப்பார்கள்.


கச்சதீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், இராமேஸ்வரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான “உமிரி’ போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை. கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் 1983 ஆம் ஆண்ட கூறியுள்ளனர். கச்சத்தீவு – குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது. அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.


கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். இராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்’ போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.இந்தவிதமான அறிக்கைகளும் சுட்டிக்காட்டுக்களும் இந்தியாவை இப்போது கச்சதீவை நோக்கி திரம்பிப்பார்க்கவைத்துள்ளன.


அடுத்து கச்சதீவில் முக்கிமானது அங்கு உள்ள புனித. அந்தோனியார் கோவிலாகும். இங்கு அண்டுதோறும் மார்ச் மாதம் முதலாவது வாரத்தில் பெருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இந்த பெருவிழாக்காலங்களில், தமிழகத்தில் இருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் பெருவாரியான மக்கள் இங்கு கூடி இந்த திருவிழாவை கொண்டாடுவதுடன், தாங்கள் எடுத்துவந்த பண்டங்களையும் பரிமாறிக்கொள்வார்கள். ஒருவகையில் ஈழ, தமிழக தமிழர்களின் சந்திப்பு இடமாக கச்சதீவு இருந்தது என்பது மறுக்கப்படமுடியாத உண்மை.

சிந்தித்துப்பார்த்தால் தமிழனுக்கு இடையில், தமிழனுக்கு சொந்தமான இந்த நிலத்தை, இந்தி, தமிழனிடம் இருந்து பிடுங்கி சிங்களவன் கையில் கொடுத்துள்ளதையும், இந்த கச்சதீவு இலங்கைக்கா? இந்தியாவுக்கா? சொந்தமானது என்பதை ஒருபக்கம் வைத்துவிட்டு இது தமிழனுககே சொந்தமானது என்ற உண்மையினை நாம் மறக்காமல் இருப்பதே இப்போதைய தேவை. (உசாத்துணை - தாகூர் -Katcha Theevu – Issue & History: Indian Naval Strategy" )

Saturday, June 20, 2009

20 இற்கு 20 = டில்ஷான்.

1996 ஆம் ஆண்டுகளில் சிறி லங்கா அணி விஸ்பரூபம் கொண்டு எழுந்துநின்றபோது அன்று சனத் ஜெயசூரியா என்ற ஒருவரை உலகத்தின் கண்கள் எப்படி பாhர்த்தனவோ அதேபோல இன்று அந்தக்கண்கள் சிறி லங்கா அணியின் அதிரடி நட்சத்திரம் திலகரத்ன டில்ஷான் மீது தமது பார்வைகளை திருப்பியிருக்கின்றன..
எந்த நாட்டு, எந்த பந்துவீச்சாளர் என்றாலும் என்ன? நான் வலுவாகவே உள்ளேன் என்று சொல்லும் வகையில் அவர் முழு நிலையில் நின்று தனது துடுப்பாட்டத்தினால் பதில் சொல்லிக்கொண்டு இருக்கின்றார். சொல்லப்போனால் தற்போது சிறி லங்கா அணியின் “குயினாக” டில்ஷான், சிறி லங்கா அணியை வலுப்படுத்திக்கொண்டிருக்கின்றார். 20 இற்கு 20 என்றாலே டில்ஷான்தான் என்று சொல்லும் அளவுக்கு இன்று உலகின் கிரிக்கட் ரசிகர்கள் அனைவரையும் தன்னை திரும்பிப்பார்க்கவைத்துள்ளார்.

சிறி லங்காவின் தென் பகுதியில் உள்ள களுத்துறை மாவட்டத்தில் 1976 ஆம் ஆண்டு, ஒக்ரோபர், 14 ஆம் திகதி, மலாய் பெற்றோருக்குப்பிறந்த டில்ஷான் பிறப்பாலும், ஆரம்பத்திலும் ஒரு இஸ்லாமியராகவே இருந்தார். அப்போது அவரது பெயர் ருவான் முஹமட் டில்சான் என்பதாகவே இருந்தது. பின்னர் அவர் பௌத்த மதத்திற்கு மாறியதன் மூலம் திலகரத்ன முடியன்சீலக்க டில்ஷான் என்று தமது பெயரை மாற்றிக்கொண்டார். அதேவேளை பௌத்த பெண்ணான மஞ்சுள திலினி என்ற விளம்பர மற்றும், சிங்கள திரைப்பட, நாடாக மோடலாக இருந்த பெண்ணை திருமணம் புரிந்துகொண்டார். இவரின் முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு ஆறுவயதுடைய மகன் ஒருவரும் உள்ளார்.

இந்த முறை ஐ.பி.எல். போட்டித்தொடரின்போதே அனைவரின் கவனமும் டில்ஷான் மீது திரும்பியிருந்ததை யாராலும் மறுக்க முடியாது. டில்லி அணிக்காக விளையாடிய அவர், மிகத்திறமையாக தனது பெறுமானங்களை இதில் வெளிப்படுத்தியிருந்தார். செவாக், கம்பீர் அகியோரை விட இரசிகர்கள் வர வர இவருக்கு ஆதரவு தெரிவித்ததையும் கவனித்திருக்கலாம். அன்றே கிரிக்கட் இரசிகர்கள் புரிந்துகொண்ட விடயம். திலகரட்ன டில்ஷான் தற்போது முழு போர்மில் உள்ளார் என்பதுதான்.
ஐ.பி.எல் முடிந்து குறுகிய காலத்தின் உள்ளாகவே ஐ.சி.சி. 20 ற்கு 20 போட்டிகள் ஆரம்பமானதும் ஒருவகையில் சிறி லங்காவுக்கு நல்லாதாகவே இருந்தது. எனென்றால், ஐ.பி.எல். போட்டிகளிலேயே , டில்ஷான், சங்ககாரா, மலிங்க, முரளிதரன் என அனைவரும் முழு போர்மிலேயே இருந்தனர். இந்தியாபோல அல்லாமல் தொடர்ந்தும் அதே தங்கள் போர்மை (நிலையை) தக்கவைத்திருந்ததனால் சிறி லங்காவால், டில்ஷானின் அபார ஆட்டங்களின் உதவியுடன் தொடர்வெற்றிகளை பெறமுடிந்திருந்தது.

இம்முறை இங்கிலாந்தில் நடந்துவரும் 20ற்கு 20 போட்டிகளின் கதாநாயகன் டில்ஷான் தான் என கண்களை முடிக்கொண்டே கூறிவிடலாம். அத்தனைபோட்டிகளிலும், சிறப்பான பெறுமானங்களை காட்டி சிறி லங்கா அணியினை இறுதிப்போட்டிவரை ஒரே இழுவையில் இழுத்துவந்து விட்டிருக்கின்றார். இம்முறை போட்டிகளில், அவுஸ்ரேலியாவுக்கு எதிரான போட்டியில் (08, ஜூன்) சங்ககாரவுடன் இணைந்து சிறப்பாட்ட பெறுமதியை பெற்றுக்கொடுத்த டில்ஷான் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 53 ஓட்டங்களையும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில்(10 ஜூன்) தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய சனத் ஜெயசூரியா மற்றும் டில்ஷான் ஆகியோர் மிக ஆபாரமாக ஆடி 12.3 ஓவர்களில் 124 ஓட்டங்களை குவித்திருந்தனர் இதில் டில்ஷான் 47 பந்துகளுக்கு 74 ஓட்டங்களை பெற்றிருந்தார். அடுத்து பாகிஷ்தானுடனான போட்டியில் (ஜூன் 12) 46 ஓட்டங்களை பெற்றிருந்தார், அயர்லாந்துடன் நடைபெற்ற போட்டியில் (ஜூன் 14) எந்தவொரு ஓட்டத்தையும் பெறாதநிலையில் ஆட்டமிழந்திருந்தார். அடுத்து நியூஸிலாந்துடன் இடம்பெற்ற காலிறுதிப்போட்டியில் (ஜூன் 16) 48 ஓட்டங்களைப்பெற்றிருந்தார். அடுத்து மிக முக்கியமான போட்டியான மேற்கிந்தியத் தீவுகளுடனான அரையிறுதிப்போட்டியில் (ஜூன் 19) மிக மிக அருமையாக துடுப்பெடுத்தாடி 96 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழக்காமல் நிலைத்துநின்று ஆடி அணிக்கு பாரிய அளவில் பலம் சேர்த்தார்.

அத்துடன் தற்போது இடம்பெற்றுவரும் இந்தப்போட்டித்தொடரின் மிக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற பெருமையினையும் டில்ஷான் பெற்றுள்ளார்.

டில்ஷானுடைய இந்த ஆட்டம் நிலைத்து நிற்கப்போவதில்லை, அவரது ஆட்டம் நேர்த்தியானது இல்லை எனப் பல விமர்சனங்கள் அவர் மீது சுமத்தப்பட்டாலும் தற்போதைய அணியின் தேவையினை டில்ஷான் மிக மிக நேர்த்தியாக பூர்த்திசெய்கின்றார் என்பதில் யாரும் மறுப்பு தெரிவிக்கமுடியாது.
எதிரணியினை திணறடிக்கச்செய்து அத்தனை பந்துகளையும் எல்லைக்கோடுகளுக்கு அப்பால் செலுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையினை விரைபுபடுத்தும் ஒரு கிற்றர் ஒரு திறமையான அணிக்கு வேண்டும் என்றபார்கள், அந்த வகையில் டில்ஷான் ஒரு கிற்றராக சிறி லங்கா அணியினை வெற்றிக்கொடிகளை நோக்கி பல தடவைகள் சுமந்துசென்றுள்ளார்.

எது எப்படியோ சிறி லங்கா அணி வெற்றிகளை எடுத்துநோக்கினால் அந்த அணி, மிகக்குறைந்த ஓட்டங்களைம், மத்திய தர ஓட்டங்களையும் பெற்றிருந்தாலும், அந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் எதிர் அணியை வீழச்செய்யும் வகையில் அதனது பந்துவீச்சு உள்ளது. பார்க்கப்போனால் ஒரு “வன்மான் ஷோ” வாகவே ஒவ்வொரு போட்டிகளிலும் டில்ஷான் துப்பெடுத்தாடியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுகள் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் சோபித்தது போன்று சனத் ஜெயசூரியா மற்றப்போட்டிகளில் பெரிதாக கைகொடுக்கவில்லை, இடைக்கிடையே சங்ககாரவின் துணையுடன் டில்ஷான் மட்டுமே அணியின் ஓட்டங்களை முனகொண்டு சென்றுள்ளதை அவதானிக்கலாம்.

சிறி லங்கா இரசிகர்களை மட்டும் இன்றி தற்போது மற்ற அணியின் ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார் திலகரட்ன டில்ஷான் எனும் இந்த 32 வயது மனிதர்.எது எப்படியோ இந்த ஐ.சி.சி. வேர்ள்ட் போட்டித்தொடருக்காக டில்ஷானா? டில்ஷானுக்கான ஐ.சி.சி. வேர்ள்;ட் போட்டித்தொடரா? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இன்று டில்ஷானின் திறமை அபாராமாக வெளிப்பட்டு நிற்கின்றது.சிறி லங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியிலும் டில்சான் சிறப்பாக விளையாடுவார் என பெரும்பாலான விமர்சகர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். பார்க்ப்போனால் எந்த பந்துவீச்சாளர்களைம் எதிர்கொள்ளும் முழுமையான போர்மிலேயே டில்சானும் உள்ளார் என்பது தெளிவானதே.

Wednesday, June 17, 2009

நாயின் தர்க்கம்…


உலகின் பெரும்பாலானவர்களும், பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்களும் கூட சமகால நிகழ்வுகளிலும் சரி, கடந்தகால வரலாறுகளிலும் சரி, ஒரு தூரநோக்கத்துடன் செயற்பட்டதாக எந்தப்பதிவுகளும் இல்லை. இதில் ஓரளவுக்கு அமெரிக்காவை தவிர்த்தே ஆகவேண்டும். ஏனெனில் அமெரிக்கா என்ற நாடு மட்டுமே எதிர்காலத்திற்கான திட்டங்களையும் இன்றே எடுத்து வருகின்றது. அது கூட இன்று அல்ல அவர்களின் இன்றைய செற்பாடுகளுக்கான திட்டங்கள் குறைந்தது 30 வருடங்களின் முன்னரே திட்டமிடப்பட்டிருக்கும்.

ஆனால் தற்போது முதலாம் உலக நாடுகளும் சுதாகரித்துக்கொண்டு அமெரிக்காவை பின்பற்றத் தொடங்கியுள்ளனர் எனலாம். ஆனால் மூன்றாம் உலக நாடுகள் அந்தோ பரிதாபம் இன்றும் கூட, அவர்கள் தற்கால சிறு ஆதாயங்களுக்காக எதிர்காலத்து பயங்கர ஆபத்துக்களுக்கு வழிகோலிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகளின் அண்மைக்கால நடவடிக்கைகளை ஆளமாகச் சிந்தித்துப்பார்ப்பீர்களேயானால் இந்த உண்மை புரியும். இவர்கள் இன்றைய தமது சிறு ஆதாயங்களுக்காக, நாளை வரப்போகும் பேராபத்துக்கள் பற்றி சிந்திக்காமல், எதிர்கால தூரநோக்கப்பார்வை இல்லாமலே சென்றுகொண்டிக்கின்றன.
தொடர்ந்தும் தன்பாட்டிற்கு இருக்கும் ஆப்புக்களை வலியப்போய் இழுக்கும் குரங்குகளாகவே இவர்களின் செயற்பாடுகள் உள்ளன. மூன்றாம் உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் எங்கே இவர்கள் மீண்டும் மன்னர் ஆட்சி முறைக்கு திரும்பிவிட்டார்களோ என எண்ணும்படியாக, குடும்ப அரசியல், லஞ்சமும் அதிகார துஸ்பிரயோகமும் தலைவரித்தாடுதல், ஊழல்கள் என மேலும் மேலும் இந்த நாடுகளை படு பாதாளத்திற்கு கொண்டுசென்றுகொண்டிருக்கின்றார்கள்.

மேற்படி மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கங்களிடம் எந்த ஒரு அதிகாரபூர்வ சர்வதேச அமைப்பும் உங்கள் நாடுகளின் அடுத்துவரும் 15 அண்டுகளுக்கான திட்டங்கள் என்ன? என கேள்வி எழுப்பி பார்க்கட்டும்? இந்தக்கேள்வியால் கண்டிப்பாக மூன்றாம் உலக நாடுகள் சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்ததுபோன்ற நிலையினையே அடைவர். ஏதோ வண்டி ஓடுகின்றது என்ற நிலையிலேயே இன்று மூன்றாம் உலக நாடுகளின் பயணங்கள் சென்றுகொண்டிருக்கின்றன.

முதலாம் உலக நாடுகளும் இவர்களை இப்படியே வைத்திருக்க கடன்களை தாராளமாக கொட்டிகொடுக்கின்றார்கள். ஒருவகையில் இவர்களின் சுய முன்னேற்றங்களை தடுத்து, கடன்களை அள்ளிவழங்கி, சில கடன்விலக்குகளையும் அறிமுகம் செய்து இவர்களை தம்மில் தங்கிவாழும் நாடுகளாகவே வைத்திருக்க முதலாம் உலக நாடுகள் திட்டங்களைப்போட்டு நிற்கின்றன.
ஆகவே பார்க்க இலாபமானதாக, இலகுவானதாக, சந்தோசமானதாக தெரியும் மேற்படி நாடுகளின் தற்போதைய நடவடிக்கைகள், அவர்கள் தங்களையும் அறியாமல் தங்கள் முன்னேற்றத்தையே அழித்து, அதை ருசித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும்.
இதையே ஆங்கிலத்தில் Dog Logic (நாயின் தர்க்கம்) என்று அடைமொழியிட்டு வரையறை செய்கின்றனர். அதாவது ஒரு நாயினை எடுத்துக்கொண்டீர்களேயாளால் அந்த நாய்க்கு யாராவது ஒரு எலும்புத்துண்டை போட்டுவிட்டால்ப்போதும், அது தனக்கான உணவுத்தேடலையும் மறந்து அந்த எலும்புத்துண்டே சொர்க்கம் என நினைத்து அந்த எலும்புத்துண்டை கடித்தவண்ணமே இருக்கும். எலும்புத்துண்டை கடித்து உணவாக உட்கொள்ள என்றும் முடியாது. எலும்பை கடிக்க கடிக்க அந்த நாயின் நாக்கு, வாயின் உட்புறம் என்பவற்றில், எலும்பினால் கீறப்பட்டு உண்டான காயங்களில் இருந்து இரத்தமே கசியும், எனினும் அந்த நாய், அது தன்னுடைய இரத்தம் என நினையாது, அந்த எலும்பின் சுவைதான் அது என தொடர்ந்தும் அந்த எலும்புத்துண்டை கடித்தவண்ணமே இருக்கும்.

இந்த நாயின் செயற்பாடுகள் போன்றதாகவே இன்று மூன்றாம் உலக நாடுகளின் செயற்பாடுகள் உள்ளன. நாட்டில் வறுமை, பஞ்சம், வேலையின்மை, அபிவிருத்தி இன்மை என ஒருபுறம் பிரச்சினைகள் தலைவிரித்தாடும்போது, இந்த நாடுகள், ஏவுகணைப்பரிசோதனைகள், அணுகுண்டுப்பரிசோதனைகள் என நடத்துவதும், தங்கள் நிலை என்ன என்பது பற்றி தெரியாமல் தங்களைப்பற்றி அதீத எண்ணங்களை வளர்த்து உலக வல்லரசுகளுக்கே சவால்விடுவதும், பெரும் நகைப்பிற்குரிய விடங்களே.

அடுத்த ஒரு உலகப்போர் நடந்தால்ப்பாருங்கள், இந்த சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகளை வல்லரசு நாடுகள் அல்ல மிகச்சில அபிவிருத்தி கண்ட சாதாரண நாடுகளே கைப்பற்றும் நிலைதான் ஏற்படும். எனக்கு ஒன்மட்டும் இன்றும் புரியவில்லை இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டு ஐந்து இறுதி முடிவெடுக்கும் வீட்டோ அமைப்பு நாடுகள் என, வல்லரசு நாடுகள் என அமெரிக்கா, ரஸ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் தெரிவாகின, எந்த அடிப்படையில் சீனா இதில் தெரிவாகி வல்லரசு ஆகியது என இன்றுவரை எனககு புரியவில்லை. உண்மையில் இரண்டாம் உலக யுத்தத்தின்போது படைஎடுத்துவந்த யப்பான் படையினர் முன்னாள் நிற்கவே பயம்கொண்டு தனது அரைவாசி நாட்டையும் யப்பான் படையிடம் கொடுத்துவிட்டு ஓடியதுதான் சீனா. அப்படி இருக்கையில் எந்த வகையில் சீனா அப்போது வல்லரசாகத் தெரிந்ததோ எனக்கு புரியவில்லை. மறுபக்கம் ஊழலில் சுழன்று, ஜனநாயகத்தையே பணத்தால் கேள்விக்குறி ஆக்கி, உலகமெல்லாம் பிச்சை எடுத்துக்கொண்டு, அயல்நாடுகளிடமே பயம்கொண்டு அடக்கிவாசித்து வரும் இந்தியா 2020 ஆம் ஆண்டு தான் வல்லரசு ஆகிவிடும் என்று கனவுகாணுகின்றது.

மூன்றாம் உலக நாடுகள் தமது நாய்த் தத்துவங்களில் இருந்து வெளிவரவேண்டும். தமக்கு மத்திலேயே இருந்து வெற்றிகண்ட நாடுகளான சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் முன்னேறத்திற்கு அவர்கள் போட்ட திட்டங்களை எண்ணிப்பாருங்கள். வெறும்சேரிதானே என நினைத்து மலேசியாவால் கழித்துவிடப்பட்ட சிங்கப்பூர் எவ்வாறு இன்று எழுந்துநிற்கின்றது? 20 க்கு 20 என இருபது அண்டு இலக்கை கொண்டு அனால் அந்த இலக்கிற்கு முன்னதாகவே இலக்கினை அடைந்து முன்னேறிய மலேசியாவை பாருங்கள். அந்த நாடுகளால் மட்டும் எவ்வாறு முன்னேற முடிந்தது.

இன்று மூன்றாம் உலக நாடுகளின் பின்தங்கல்களுக்கு காரணம் அரசியல்தான் என சாதாரணமாக சொல்லிவிட்டுபோய்விடலாம். ஆனால் அந்த அரசியலை மக்கள் தானே தீர்மானிக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் தெரிந்தும் பிழையானவர்களைத்தானே தெரிவு செய்கின்றார்கள். இப்படியாக இருண்ட பாதையில் நாடுகள் செல்லும்போதுதான் விரக்தியடையும் இளைஞர்கள் புரட்சியாளர் ஆகின்றார்கள். அவர்களை இந்த அரசியல்ப்பயங்கரவாதிகள், பயங்கரவாதிகள் என்கின்றார்கள்.

Sunday, June 14, 2009

சிலோன் பொப் இசைப்பாடல்கள்.

பொப் எனும் இசைவடிவம் போத்துக்கேயர்களினால் 15 ஆம், 16ஆம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.
இந்தவகையில் இலங்கை 1505 அம் அண்டு போத்துக்கேயர்களால் கைப்பற்றப்பட்டு 1658 வரை ஆளப்பட்டது. அந்தக்காலங்களில் இலங்கை மக்களின் சமயங்களான இந்து, பௌத்த சமயங்களைச்சேர்ந்த மக்களை கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறவேண்டும் என ஆணைபிறப்பித்திருந்தனர் போத்துக்கேயர். இதன் காரணமாக கோவில்கள், விகாரைகள் என்பன இடிக்கப்பட்டு, இவர்கள் கிறிஸ்தவ துதிகளைப்பாடவேண்டும் என கேட்கப்பட்டனர். அதன்பொருட்டு இடிக்கப்பட்ட ஆலயங்கள், விகாரைகள் இருந்த இடங்களில் தேவாலயங்கள் எழுப்ப்பட்டது. அப்போதைய இலங்கை மக்களை உடனயடியாக முழு கிறிஸ்தவர்களாக மாற்றுவது சிரமம் என உணர்ந்த போத்துக்கேயர், தேவ ஆரதனைகளுக்கு தமது வழக்கத்தில் இருந்த பொப் இசையினை பயன்படுத்த தொடங்கினர், இங்கு போத்துக்கேயர்களால் 16ஆம் நூற்றாண்டில் விதைக்கப்பட்ட பொப் இசை அத்தியாவரத்தின் சாயலே இன்றும் இலங்கையின் இசையில் பாரிய தாக்கத்ததை ஏற்படுத்திவருகின்றது.

அன்றில் இருந்து ஊர்ப்பாடகர்கள், அண்ணாவியர்கள் வாயிலாக, சில தமிழ் பொப் இசைப்பாடல்கள் செவிமடுக்கப்பட்டுவந்துள்ளன. அந்தக்காலங்களில் பெரும்பாலும், திருமண வீடுகளில் சில பாடகர்கள் இப்படியான பொப் பாடல்களை பாடிவந்திருந்தனர்.
“சின்னத்தம்பி சீமானாம் சிப்பிலி சந்தைக்கு போனானாம்”
அங்கே ஒருத்தியை கண்டானாம் கும்மட்டம் தம்பட்டம் போட்டானாம்”
என்று ஆரம்பிக்கும் பாடலும்,
அன்றைய போத்துக்கேய ஆட்சியாளர்களையே எதிர்ப்பதுபோன்ற
“என்ன பிடிக்கிறாய் அந்தோனி?
எலி பிடிக்கிறன் சினோரே!
போத்திபொத்தி பிடி அந்தோனி!!
கூவிக்கொண்டோடுது சினோரே”
போன்ற பாடல்கள் நாம் அறிந்த வகையில் போத்துக்கேயர் காலங்களிலேயே தமிழில் உருவாகிய பிரபலமான பாடல்கள். ஆகவே இது போன்ற பல பாடல்கள் கால மாற்றங்களால் அழிந்துபோய்விட்டன.
அதன்பின்னர் அங்கிலேயர் காலத்தில் (1815 -1948), மேற்கத்தேய நாகரிகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும், ஒரு முழுமையான நிர்வாக அமைப்பு முறை வந்ததும், இசை வடிவத்திலும் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தின, ஆங்கிலேயர்களின் பாண்ட், மொங்கட் ட்ரம், டிஸ், ட்டம்பற் ட்ரம், போன்ற வாத்தியங்கள், இந்த இசையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின. ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் பொப் இசை ஒரு புது வேகத்துடன் அரங்கேற ஆரம்பித்தது.
குறிப்பாக அந்த காலங்களில் பல கார்னிவேல்கள், விசேட சிறப்பு நிகழ்சிகள், பீஸ்ட் வைபவங்கள் போன்ற நிகழ்வுகளிலும், அப்போது இலங்கையில் பரபல்யம் பெற்ற “ருவிஸ்ட்” என்ற அட்டத்தின்போதும் இந்த பொப் இசை மேற்கத்தேய இசைக் கருவிகளின் பக்கவாத்தியத்துடன் புது உத்வேகத்துடன் அரங்கேறின. அதன் பின்னர் மீண்டும் பல விழாகளிலும். திருமணம் போன்ற வீட்டு விசேசங்களுக்கும் இந்த பாடல்கள் இசைக்கப்பட்டன.

சுதந்திரத்தின் (1948) பின்னரான
காலங்களில், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பல புதிய இசைக்குழுக்கள் ஆரம்பமாகி மேற்படி பொப் இசையினை, வழங்கி மிகப்பிரபலமாகின. இதில் குறிப்பிட்டுக்கூறக்கூடிய ஒருவர் கண்ணன் நேசன் அவர்கள். இவ்வாறு 1950 களின் கடைசி பகுதிகளில் தமிழ் பொப் இசை இசைக்குழுக்களால் இசைக்கப்பட்டுவரத் தொடங்கியது. இருப்பினும் தென்னிந்திய திரை இசைக்கு பலரும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து, தமிழ் திரையிசையின் தாக்கம் ஏற்றபட்ட காரணத்தினால் 1960 களில் பொப் இசையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவே கேட்ககக்கூடியதாக இருந்தது.

அதன் பின்னர் இலங்கையிலும் நிகழ்ந்த பல அரசியல்க்குழப்பங்கள், 58 கலவரங்கள், சிறிமா ஆட்சியில் பஞ்சம் என்பனவற்றால் மேற்படி தமிழ்ப்பொப் இசைக்கும் பஞ்சம் ஏற்படலாகிற்று.
1977 ஆம் அண்டு ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சியை கைப்பற்றி இலங்கையில் திறந்த பொருளாதாரக்கொள்கையினை கொண்டுவந்து, அனைத்தையும் நவநாகரிகப்படுத்தி, மேலைநாடடு கலாச்சாரங்கள், அப்படியே கொழும்புக்கு வந்துசேர்ந்தபோது, தமிழ் பொப் இசை மட்டும் இன்றி சிங்கள பொப் இசையும் வீறுகொண்டெழுந்து என்றும் இல்லாத சிகரத்தை அடைந்தது.

ஆம் இன்றும் நீங்கள் முணுமுணுக்கும்.
“சின்னமானியே உன் சின்னமகள் எங்கே” என்ற ஏ.ஈ மனோகரனின் பாடல்,
“சுராங்களி சுராங்களி” என்ற ஏ.ஈ.மனோகரனின் பாடல்,
“கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல்,
“குடத்தனையில குடியிருக்கிறது” என்ற நித்தியின் பாடல் போன்ற பாடல்கள் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றன.
அவை இலங்கையில் மட்டும் அன்றி இலங்கை வானொலியில் ஒலிபரப்பட்டு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை எற்படுத்தி இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டின.
நித்தி கனகரத்தினைத் தொடர்ந்து ஏ.ஈ.மனோகரன். அமுதன் அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன். வி.முத்தழகு, ஸ்டெனி சிவாநந்தன், அன்சார்.என்.இமானுவேல் போன்றோர் ஈழத்து பொப்பிசைச் துறைக்கு வர பொப்பிசை வளரத்தொடங்கியது பல இசைக் குழுக்களும் இதில் தடம் பதிக்க பல பாடல்கள் வெளிவரத்தொடங்கின. இக் காலம் ஈழத்து பொப்பிசையின் பொற்காலம் என்று கூட சொல்லலாம்.

அன்றைய காலங்களில் இலங்கை பொப் இசைகள் நகைச்சுவை, இலங்கை மண்ணியில்ப்பண்பு, இலங்கை மொழிவழக்கு, என்பவற்றை மட்டும் இன்றி சமுதாய சீர்திருத்தங்களையும் முன்னிறுத்துவதாக இருந்தன என்றால் மிகையாகாது. இதற்கு நித்தி கனகரத்தினத்தின் கள்ளுக்கடை பக்கம் பொகாதே என்ற பாடலை சொல்லலாம். அந்தக்காலங்களில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பெரியவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என்ற பேதங்கள் இன்றி அனைவரும் கள்ளு அருந்துபவர்களாக இருந்தனர். குறிப்பாக மாணவர்கள் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும்போதும், பல்கலைக்கழகங்களில் இருந்தும் கள்ளுக்கு தவறணைகளுக்கே நேரடியாக போபவர்களாக இருந்தனர். இந்த காலங்களிலேயே நித்தி கனகரத்தினத்தின் “ கள்ளுக்கடை பக்கம் போகாதே, காலைப்பிடித்து கெஞ்சுகின்றேன்” என்ற பாடல் வெளியானது.
இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்தப்பாடல் இலங்கை வானொலி மூலம் தமிழ் நாட்டிலும் பரவி, அப்போது முதலைமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால், தமிழக மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தமையாகும்.

பின்னர் இந்த இலங்கை பொப் இசைப்பாடல்கள் தென்னிந்திய தமிழ் திரைகளிலும் இடம்பெறலாகிற்று. 1977 அம் அண்டு, “அவர் எனக்கே சொந்தம்”என்ற படத்தில் “சுராங்கனி, சராங்கனி” என்ற பாடலை இளையராஜா உட்புகுத்தினார், இதனோடு நின்றுவிடாது. இந்த இலங்கை பொப் இசையை ஒட்டியதாக, “அண்ணே அண்ணே சிப்பாயண்ணே”, “உப்புமா கிண்டிவையடி”, பட்டண்ணா சொன்னாரண்ணா, போன்ற பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. இன்றும் கூட சுராங்கனி போன்ற பொப் பாடல்கள் மீள்கலவை இசை வடிவில் (ரீமிக்ஸ்) சில திரைப்படங்களில் வருவதை பார்த்திருக்க முடியும்.
எனினும், 1983 களின் பின்னதான இலங்கையின் இனப்பிரச்சினைகள், கலைஞர்கள். பாடகர்களின் வெளியேற்றம், தென்னிந்திய சினிமா பாடல் மோகம் என்பன போன்ற பல காரங்களினால் இன்று இந்த இலங்கை பொப் பாடல்கள் குறைந்துகொண்டு சென்று அழிவுப்பாதையில் செல்கின்றது.

இதற்கு உயிர்கொடுத்து அதை ஒலிபரப்பி தமது பாரம்பரியங்களை காத்துவைக்க அங்குள்ள எந்த அரச, தனியார் வானொலிகளுக்கும் வக்கத்துப்போய்விட்டது.எனினும், மேற்படி பொப் இசையில் சிங்களவர்கள் அதி சிகரத்தை அடைநதுள்ளனர். சிங்கள ஊடகங்களும், பத்திரிகைகளும் அதற்குரிய கௌரவங்களை கொடுத்து அதை ஊக்குவிக்கின்றன.

எது எப்படியோ, இன்று புலத்தில் புலம்பெயர்ந்துவாழும் மேற்படி பொப்பிசை திலகங்களை தொடர்புகொண்டு வெளிநாடகளில் வாழும் தமிழர்களாவது தமது இலங்கைத் தமிழர்களின் தனிச்சிறப்பான பொப் இசையினை வழங்க முயற்சி செய்யவேண்டும்.(உண்மையில் தேவைப்படுவோருக்கு இலங்கையின் பொப் இசைப்பிரபலங்களின் தொடர்புகளை தர நான் தயார்.)

வானம் தொட்டுவிடும் தூரத்தில்த்தான்.....


தயக்கம்
எம்மில் பெரும்பாலானவர்களிடம் இருந்து களையப்படவேண்டிய குணம் தயக்கமே ஆகும். துயக்கம் என்பதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது. தயக்கங்களின் காரணமாக பல நிகழ்வுகள் அரங்கேறாமலேயே போயிருக்கின்றன.
வாழ்கையில் பல முன்னேற்றங்களையும், புதிய திருப்பங்களையும் இந்த தயக்கம் என்ற ஒரே பதம் இல்லாமல் செய்துவிடுகின்றது.உலகில் வெற்றியாளர்களில் 100 வீதம் பேர், ஏதோ ஒருகட்டத்தில் அவர்களின் முன்னாலே தோன்றிய தயக்கங்களை தகர்த்துதெறிந்துவிட்டு முன்வந்தவர்களாகவே இருப்பார்கள்.

தயக்கம் என்பது, ஒரு விதமான அச்ச உணர்வே, ஏன் வீணாக இதற்கு முயற்சி செய்யவேண்டும?;, இப்போது வேண்டாம், முதலில் யாரும் முயற்சிக்கட்டும் பிறகு நான் பார்க்கலாம், எனக்கேன் இந்த தேவையில்லாதவேலை!, என்பவை போன்ற சிந்தனைகள்தான் தயக்கத்தின் தூதுவர்கள், முக்கியமாக தன்னம்பிக்கை இன்மையே இந்த தயக்கங்களையும் அதன் தூதுவர்களையும் மனிதர்களின் மனங்களினுள் அழைத்துவந்து மனிதர்களை முழுச்சோம்பேறி ஆக்கிவிடுகின்றது.

ஒருவனின் சுய முன்னேறத்தில் ஏராளமான காரணங்களை தோரணங்களாகக்கட்டி தயக்கம் திருவிழா கொண்டாடுகின்றது, தன்னம்பிக்கையோ இந்த திருவிருவிழாவில் தொலைந்துவிட்ட குழந்தையின் மனோநிலையினைப்போல பரிதவிக்கின்றது. உலகின் வெற்றியாளர்கள் பலரின் வாழ்கைக்குறிப்புக்களை எடுத்துப்பாருங்கள், அவர்கள் சில நடவடிக்கைகளை தமது வாழ்க்கையில் எடுப்பதற்கு தயங்கியது கிடையாது என்பது தெரியவரும்.

சீனாவின் பிரபல தொழிலதிபரும், அந்த நாட்டின் முக்கிய பணக்காரர்களில் ஒருவருமான ஹ_கான் ஸியாங் தெரிவிக்கும் கருத்தினை பாருங்கள், “ ஆரம்பகாலத்தில் நான் பல தொழில்ரீதியான சரிவுகளை கண்டேன், சொல்லப்போனால் அதற்குரிய காரணங்களை கண்டறியவே நான் தயங்கியவனாகவே இருந்தேன். இறுதியில்த்தான் தயக்கமே என் தொழில் எதிரி என்பதை தெரிந்துகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

எம்மில் பலருக்கு தொழிலில் மட்டுமின்றி பழக்கவழங்கங்களிலேயே தயங்கள் உண்டு. குறிப்பாக சிலரை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு மற்றவர்களிடம் சகயமாகப்பழகவே தயக்கமாக இருக்கும், இன்னும் சிலருக்கு தம்மிடம் பல திறமைகள் இருந்தும் அதை வெளிக்காட்டத் தயக்கம் இருக்கும், வேறு சிலருக்கு சந்தர்ப்பங்கள் தானே அமைந்தாலும் கூட, அந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தவே தயக்கமாக இருந்து அந்த சந்தர்ப்பங்களை மட்டும் இன்றி வாழ்கையினையே தொலைத்த சம்பவங்கள் பலவற்றை நாங்கள் காணலாம்.
ஏன் சிலர் தமது காதலை வெளிப்படுத்தவே தயங்கி அதிலும் தோற்றுப்போன சம்பவங்கள் சினிமாக்களில் மட்டும் இன்றி நியத்திலும் உண்டு.

கீதையிலேயே கண்ணன் அர்சுனனிடம், “கடமையை செய் பலனை எதிர்பாராதே” என விளக்கம் கொடுகின்றனார். அதாவது நீ செய்யவேண்டிய ஒரு செயலின் பலாபலன்களை கருத்தில் கொள்ளாது, எந்த வித தயக்கமும் இன்றி அந்த கடமையினை செய்! வெற்றியும் தோல்வியும் உன் செயற்பாடுகளாலும், சூழ்நிலைகளாலும் உருவாகும் என்கின்றார்.

ஏன் ஒருவிதத்தில் கீதை எனும் புனித உபதேசம் கூட ஒரு தயகத்தின் காரணமாக தயக்கத்தை அகற்றவே உருவாகியது. போர்க்களம் புகுந்தும்கூட தர்மத்தை நிலைநாட்ட யுத்தம் செய்யவேண்டிய அர்ச்சுனன், எதிரில் உள்ளவர்களும் தனது சகோதரர்கள் என நினைத்து யுத்தம் செய்ய தயக்கம் கொள்கின்றான். அந்த தயக்கத்தை போக்கி அவனை நெறிப்படுத்தவே கீதா உபதேசத்தை பரந்தாமன் அருளினான்.
அர்சுனனின் தயக்கத்தை பரந்தாமன் போக்கியதுபோல எமது தயக்கங்களை எம் அறிவு களையவேண்டும்.
நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை தயக்கங்களால் கைவிட்டுவிட்டால், எதிர்காலத்தில் அதை எண்ணி வேதனையடைவேண்டிய நிலை கண்டிப்பாக ஏற்படும்.முக்கியமான ஒன்றை கவனிததுப்பாருங்கள், உங்களிடம் அதீத திறமைகள் இருக்கும், ஆற்றல்கள் இருக்கும், அனால் உங்களைவிட அறிவிலும், திறமையிலும் குறைந்தவர்கள், உங்கள் துறையில் விற்பன்னர்களாக இருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள்!, அதேபோல நீங்கள் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பங்களை பெற்றுஅவர்கள் முன்நேறி இருப்பார்கள். காரணம், அந்த விற்பன்னர்களுடன் நெருக்கமுடைய நீங்கள் தயங்கியதும், பின்நின்றதுமே ஆகம். அது மட்டுமின்றி உங்களைவிட திறமை குறைந்த அவர்களே இவ்வாறு மன்னேற முடிந்திருந்ததென்றால் அந்த சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருந்தால், சும்மா பிரட்டிப்போட்டிருக்கமாட்டீர்களா?

தயக்கம் கூடாது என்பதற்காக ஆராயமல் ஒரு செயலில் தணிந்து இறங்குவது என்று பொருள் கொள்ளவும் கூடாது. சரி…தயக்கங்களை எவ்வாறு களைவது? ஒரு மழைநாளில் நனைந்துகொண்டு வீதியால் செல்லவேணடும் என உங்களுக்கு ஒரு ஆசை இருக்கலாம்! ஆனால் தயக்கம் இருக்கும்…விட்டுவிங்கள் தயகத்தை மழைவந்தவுடன் வீதிக்கு இறங்கி நடவுங்கள், இப்படி அன்றாடம் உங்கள் சின்னச்சின்ன ஆசைகளுக்கு (விபரீதம் இல்லாத ஆசைகள் மட்டும்) எற்படும் தயங்கங்களை தகர்க்க ஆரம்பியுங்கள். உங்களை நாளாந்தம் புதுப்பித்துக்கொள்ளுங்கள், கண்ணாடிக்கு முன் நின்று, உங்கள் பிம்பத்தை பார்த்து கட்டளை இடுங்கள், நீ சாதிக்கப்பிறந்தவன் என்று அறிவுறுத்துங்கள், உங்கள் துறைகளில், உங்கள் திறமைகளை மேலும் மேலும் மெருகூட்டி வையுங்கள், உங்கள் திறமைகளை கால ஓட்டத்திற்கு தக்கவாறு மெருகேறறுங்கள், அவற்றை வெளிக்காட்ட சந்தர்ப்பங்கள் கிட்டும்போது தைரியமாக எழுந்து நில்லுங்கள், இருக்கும் மட்டும்தான் புல்லும் மலைபோல தோன்றும், எழுந்துவிடால் மலையும் புல்தான்…

Friday, June 12, 2009

தூசுகள் பல தட்டப்படவேண்டிய மணி..

சன் பிக்ஸஸ் காலநிதி மாறனின் தயாரிப்பில், ஆர்.என்.ஆர். மனோகர் இயகத்தில், இமானின் இசையமைப்புடன், காதலில் விழுந்தேன் வெற்றிப்பட ஜோடியான நகுல், சுனய்னா ஆகியோரின் நடிப்பில் இன்று (12.06.2009) வெளிவந்துள்ளது “மாசிலாமணி” திரைப்படம்.

சென்னையில் அசோக் பில்லர் (அசோக் நகர்) அருகில் உள்ள ராணி நகரில் தன் அக்காவுடனும், அக்காவின் சிறுவயது மகளுடனும் வசித்துவருகின்றார் மாசி (மாசிலாமணி) என்னும் நகுல். ஆரம்பத்திலேயே தப்பு தன் கண்முன்னே நடைபெற்றால் அதை தட்டிக்கேட்கும் துடிப்பான இளைஞராக அவர் அறிமுகமாகின்றார். இதேபோல தான் வாழும் ராணி நகரில் வாழும் மக்களிடம் அளவு கடந்த அன்பு வைத்து அவர்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து, அந்த ஊரினதே செல்லப்பிள்iயாக இருக்கின்றார்.
ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு பெண்களை கேலிசெய்து அடாவடித்தனம் செய்யும் ஒரு கும்பலிடம் திரும்பி அந்தப்பெண்களை கூட்டிவந்து அவர்களை தண்டிக்கும் துணிச்சல் பெண்ணாக வரும் சுனய்னாவை (திவ்யா) கண்டவுடன் அவர் காதலில் விழுகின்றார். அதன் பின்னர் அநியாங்களை தட்டிக்கேட்கும் அவரது செயல் சுனய்னாவுக்கு ரௌடிசியமாக தெரிகின்றது. அவர் நகுல் தன் காதலை சொல்லமதலே நகுலை வெறுக்கின்றார். இந்தச்சூழ்நிலையில் எவ்வாறு அவர் சுனய்னாவின் காதலை பெறுகின்றார் என்பதே இந்தப்படமாக இருக்கின்றது.

இலாபநோக்கத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, மசாலா படங்களை தயாரிக்கும் சன் பிக்கஸர்சிடம் இருந்து தரமான ஒரு தமிழ்ப்படத்தை எதிர்பார்க்கமுடியாது தான். இருந்தாலும் இன்று யதார்த்தவியலில் நல்ல ஒரு பாதையில் தமிழ் சினிமா சென்று பருத்திவீரன், பூ, சுப்பிரணமணியபுரம் என்று தரமான படங்கள் வந்துகொண்டிருக்கையில் மீண்டும், அரைத்தமாவை அரைத்து அதை திருப்பி அரைக்கும் ஒரு படமாகவே “மாசிலாமணி” தெரிகின்றது.

சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசையில், தம் பொருட்களையும், வாழ்வையும் பலர் இழக்கின்றார்கள் என சினிமாவில் இருந்துகொண்டு எத்தனை நாளுக்கு இந்த புழித்துப்போன நகைச்சுவைகளை ஓட்டப்போகின்றார்களோ தெரியவில்லை.இந்தப்படத்திலும், பாஸ்கர் இவ்வாறான ஒரு சினிமா பைத்தியமாக சித்தரிக்கப்பட்டு நடிக்கவைக்கப்பட்டுள்ளார்.

படம் பார்க்கும்போது, துள்ளாதமனமும் துள்ளும், பழனி, காதலில்விழுந்தேன், மேலும்சில ஆள்மாறாட்ட படங்கள் என பல திரைப்படங்களின் ஞாபங்கள் வந்துபோகின்றன.படத்தில் இயக்குனர் “ரச்” நன்றாக முத்திரை குத்துகின்றது. அது ஆர்.என்.ஆர். மனோகரின் ரச்சாக இன்றி, எழில், பேரரசு ஆகியோரின் ரச்சாகவே தெரிகின்றது.

நடிப்பில் நகுல், சுனய்னா ஆகியோர் சிறிது தேறிவருவதாகவே தெரிகின்றது. இந்தப்படத்தில் ஒரு பரதம் பயிலும் பண்பான பெண்ணாகவே சுனய்னா வருகின்றார். அவரிடம் “கோம்லி லுக்” நன்றாகவே உள்ளது. அனால் பாடல்களின்போது அவருக்கு அரைகுறை ஆடைகள் வழங்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்று புரியவில்லை? ஏன் பாடல்களில் அரைகுறை ஆடைகள் கட்டிவந்தால்த்தான் நாம் பார்ப்போம் என இரசிகர்கள் சொல்லிவைத்துள்ளனரா? ஏன் பூ போன்ற படங்கள் வெற்றிபெறவில்லையா? இவ்வாறான மாஜைகளில் இருந்தும், விரசங்களில் இருந்தும் தமிழ் சினிமா வெளிவரவேண்டும்.

இமானின் இசை பரவாயில்லை. படத்திற்கு ஒரு சிறு ஆறுதலாக இசை இருக்கின்றது. “ஓ திவ்யா திவ்யா நீ நடமாடும் நைல்நதியா”, “டோரா டோரா அன்பே டோரா” போன்ற பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றது.மொத்தத்தில் மீண்டும் ஒருமுறை சன் பிக்சர்ஸ் ஒரு மசாலா திரைப்படத்தை, வழங்கியுள்ளது.


அதுகும்போக திரைப்படத்திலேயே டெல்லி கணேஸ் மூலமாக தமது சன் நெட்வேர்க்ஸ் பத்திரிகையான தினகரனுக்கு ஒரு விளம்பரத்தையும் கொடுகின்றனர். இந்தப்பத்திரிகையின் அடுத்த நாள் பதிப்பு வருகின்றது என்பதால்த்தான் பத்திரிகையை மூடி வைக்கவேண்டி இருக்கின்றது. இதில் இல்லாத விசயங்கள் என்ன? என்ற அளவுக்கு இதில் விடயங்கள் நிறைந்து கிடக்கின்றது என்கின்றார் டெல்லி கணேஸ். அந்தளவுக்கு சுய விளம்பரங்கள் உள்ளது.
மொதத்தில் மாசிலா மணி ஒரு தனிராகமாக அல்லாமல், இராக மாலிகாவாக உள்ளது.

இலை துளிர் காலத்து உதிர்வுகள் …02


" எல்லாச்சாலைகளும் ரோமுக்குத்தான் செல்கின்றதோ என்னமோ" ! அந்தக்கால கட்டத்தில் ஈழத்தமிழர்கள் நாளாந்தம் உயிருக்கஞ்சி ஓடும் பாதைகள் எல்லாம் திடீர் மாற்றத்திற்கு உள்ளாகும் "அகதிமுகாம்களையே " சென்றடைவதாக இருந்தன.

ஓடுவார்கள் ஓடுவார்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள், கைகளில் அகப்பட்ட முக்கிய பொருட்களும், தமது உயிர்களுமே அவர்களுக்கு அப்போது சொந்தமாக இருக்கும். கெட்டதிலும் நன்மைகளாக பல நன்மைகளும் இந்த ஓட்டம்காணும் சமுதாயத்திற்கு அப்போது இல்லாமல் போனதும் இல்லை. எத்தனையோவருடங்களாக முகம்கொடுத்து பேச்சுக்கொடுக்காமல் பகமை உணர்வை மனதுக்குள் வைத்திருக்கும் பல குடும்பங்கள், இந்த அவல ஓட்டங்களில் பகைமை மறப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்ததையும் நான் கண்ணூடே கண்டிருக்கின்றேன்.

பாடசாலைகளில் ஏதிலிகளாக வந்து தங்கும் மக்களுக்கு, அடுத்த ஆபத்து தமக்குதான் என்பதையும் உணர்ந்துகொண்டு முன்னின்று அவர்களைத் தேற்றும் நடவடிக்கைகளில் அயல் ஊர் மக்கள் ஈடுபடுவதையும், அங்கே அவர்கள் தங்குவதற்கு உரிய அத்தியாவசிய உதவிகளை வழங்குவதையும் கண்டு அந்த சிறுவயத்திலேயே என்னையும் அறியாமல் கண்கசிந்துள்ளேன். இயைபாக்கம் அடைவது உலகியலில், விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்ட உண்மை என்பதை நிரூபிப்பதுபோல காலப்போக்கில், தொடர்ந்து முகம்கொடுத்துவரும் துயரங்களும், இழப்புக்களும் அவர்களுக்கு புழக்கமாகிவிட்டிருந்தன. வாழ்க்கையில் விரக்தி, நாளைகள்மீது ஏற்பட்டிருந்த நம்பிக்கையீனம், வெறுப்பு என்பன அவர்களை ஆட்கொண்டிருந்தது மட்டும் இன்றி இவை அனைத்தையும் விட மோசமான தன்மீதே தனக்கான " சுயவெறுப்பு" மனோநிலைக்கும் அவர்கள் ஆளாகியிருந்தனர்.

இந்த மக்கள் இடம்பெயர் தொடர்கள் இடம்பெறும் காலங்களில் மழைவேறு வந்துவிட்டால் இவர்களின்பாடு இன்னும் மோசமானதாகவே வந்துவிடும். இந்தக்கால கட்டங்களில்த்தான் எனக்கும் நிற்சயமற்ற ரீதியில் எப்போது பாடசாலை தொடங்கும் என்ற கேள்வி மனதில் உதித்தது. பாடசாலை இல்லாது விட்டாலும் எங்கள் வயது " அரை ரிக்கட்டுகளின்" பாடு படு சந்தோசமாகவே போய்க்கொண்டிருந்தது. எங்கும் பிள்ளைகளை வெளியில் செல்ல பெற்றோர்கள் அனுமதிப்பது கிடையாது. ஆனால் பாடசாலையில் ஆசியர்களைவிட படுமோசமாக " புத்தகத்தை எடுத்து படி" என்ற வார்த்தைகள் மட்டும் எங்கள் காதுகளுக்கு வேத மந்திரம்போல் எப்போதும் ஓதப்பட்டுக்கொண்டிருக்கும்.

நாங்களும் படித்துக்கொண்டுதான் இருப்போம். ஷெல், மற்றும் துப்பாக்கிச் சூடுகளின் மத்தியிலும், ஓடிவரும் மக்களின் அவலக்குரல்கள், உறவுகளை இழந்த மக்களின் கதறல்களுக்கு மத்தியிலும் நாங்களும் படித்துக்கொண்டுதான் இருந்தோம்.
ஏன் … எனது பெரியம்மா ஒருநாள் வந்து "இன்று காலை விழுந்த ஷெல்லில உன்னோட படிக்கிற சிறாப்பர் தனபாலசிங்கத்தின்ட மகனும் தாயும் செத்திட்டினமாம். என்று சொல்லும்போது கூட நான் படித்துக்கொண்டுதான் இருந்தேன்.

" விமலகாந்தன்"! மனது ஒருமுறை அவனது பேரை உச்சரித்துக்கொண்டது. மனதுக்குள் என்னவென்று சொல்லமடியாத ஒரு உணர்வை அப்போது உணர்ந்துகொண்டேன். " விமலகாந்தன்" என் வாழ்நாளில் குண்டுவீச்சினால் நான் இழந்த முதலாவது நண்பன்.

படிப்பு சுமார்தான், அனால் இன்றும் எனக்கு நல்ல நினைவு இருக்கின்றது அவன் நன்றாகப்பாடுவான். எங்களைப்போல் குழப்படி செய்வதில்லை. அப்போதெல்லாம் எங்களைப்போல் " நீ அவன்ர சைட்டா? எங்கட சைட்டா?" என கேள்விகள் கேட்டு " சைட்" பிரித்து அடிபடுவதில்லை. மாறாக யார் வம்புக்கும் போகாமல் அவன் பாட்டுக்கு பாடிக்கொண்டே இருப்பான் " என்ன சத்தம் இந்த நேரம்" , " தேன் மொழி என்தன் தேவி நீ" என்ற பாடல்கள் அவன் அதிகம் விரும்பி பாடும் பாடல்கள் என்பது மட்டும் இன்னமும் நினைவில் இருக்கின்றது.
ஆசிரியர்கள் வழித்துணையுடன் கைகளில் "நித்திய கல்யாணிப்பூவுடன் " அவனினதும், அவனை ஈன்ற தாயுடையதுமான சாவீட்டில் இருந்து சுடுகாடு மட்டும் சென்று அடிவயிற்றில் தீயிட்டவளுடனேயே அவனும் தீயுடன் சங்கமானது வரையான நிகழ்வுகள் இன்றும் அவ்வப்போது " கறுப்பு வெள்ளை" காட்சிகாக மனத்திரையில் வந்துவிட்டுப்போகும். கிட்டத்தட்ட என் விழிகளில் நின்று தூங்கவிடாமல் திரும்ப திரும்ப நினைவுகளில் வந்துகொண்டிருந்தான் விமலகாந்தன். மனம் அவனது இழப்பை ஏற்க மறுத்துக்கொண்டே இருந்தது. எங்கே அவன் என்னருகில் ஆவி ரூபத்தில் வந்துவிடுவானோ என்ற பயமும் என்னை சில நாட்களாக அலைக்கழிக்கத்தவறவில்லை.

அப்போதெல்லாம் நாம் செய்திகள் கேட்பதென்றால், காலையில் இந்தியச் செய்திகளைத்தான் கேட்போம். ஈழத்தமிழர்கள் படும் அவலங்கள் குறித்தும், அவர்களின் போராட்ட வெற்றிகள் குறித்தும் உணர்வோடு குறிப்பட்டு இந்தியச் செய்திகள் முழங்கிய காலம் அது. யாழ்ப்பாணத்தில் மக்கள் அனுபவித்துவரும், உணவுப்பற்றாக்குறை, மனித அவலங்கள் குறித்து அந்த செய்திகளில் முக்கியமாக செய்திகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும். எங்கள் ஊரிலிருந்தும், அயல் ஊர்களிலிருந்தும் ஓடுவதற்கு இனி இடம் இல்லை என்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் " தமிழ் நாட்டிற்கு" சென்றுகொண்டிருந்தனர்.
உணவுக்கான போராட்டத்திலும் மக்கள் அப்போது ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கூட்டுறவுக் கடைகள் உள்ள வீதிகள் " இப்போது ரஜினியின் படத்திற்கு முதல்நாள் திரையரங்குகளில் கூடிநிற்கும் இரசிகளர்களைவிட" மக்கள் கூட்டம் நிறம்பி இருக்கும்.வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு, நிரம்பல் மிக்க தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய தேவை அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கு இருந்தன.

எங்களுக்கான உணவுகளை தந்துவிட்டு தமது பகல்கால, இராக்கால உணவுகளாக வெறும் தண்ணீரையே அகாரமாக எடுத்துக்கொண்ட பெற்றோர்கள் நிறையப்பேர் இருந்தனர்.

ஒருநாள் மதியம் எதேட்சையாக "லங்கா புவத் " என அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்திகள் காதில் விழுகின்றன. " இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமாக, இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுளைய முயன்ற இந்திய கடற்படையினரின் கப்பல்கள், எமது சிறி லங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டன என்பதே அந்த செய்தி.

அவசரமாக எனது பெரிய தந்தையார் ஆர்வம் மேலோங்க இந்திய செய்திகளை கேட்பதற்காக அந்த வானொலியுடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டிருந்தார். ஆலிந்தியா ரேடியோ ….( All India Radio) என்ற சொல்லுடன் ஆரம்பமான அந்த இந்தியச் செய்தியை அப்போது சீத்தாராம் வாசித்துக்கொண்டிருந்தார், யாழ்ப்பாணத்தில் உணவின்றி இலங்கை அரசின் இனவாத நோக்கத்திலான பொருளாதார தடையினால் அல்லலுற்றுக்கொண்டிருக்கும் மக்களின் உணவுத்தேவையினை தீர்க்கும் பொருட்டு, இந்திய கடலோர ரோந்துப்படையினரும், இந்திய கடற்படையினரும் கொண்டு சென்ற உணவுப்பொருட்களை, யாழ்ப்பாணம் கொண்டு செல்ல முடியாதென சிறி லங்கா கடற்படையினர் வழிமறிப்பு செய்து தடுத்துள்ளனர் என்பதே அந்த செய்தி. இந்த செய்தி கேட்டு (லங்கா புவத்) தென்னிலங்கையில் பட்டாசு கொழுத்தி சிங்கள மக்கள் ஆரவாரம் செய்ததாகவும் அறியமுடிந்தது.

அதே நாள் மாலை சுமாராக 4.30 மணியிருக்கும் என நினைக்கின்றேன். காதைப்பிளக்கும் ஓசைகளுடன், நாங்கள் இதுவரை கேட்டிராத சத்தத்துடன் எமது வான் பிராந்தியங்கள் மேலாக பேரோசை எழும்பியது … வழமைக்கு விரோதமான இந்த சத்தங்களும், நிலம் அதிர்வதைப்போன்ற பேரிரைச்சலும், மக்களை மேலும் பயமுறுத்தியன!
-இலைகள் உதிரும்-

Thursday, June 11, 2009

ஓராயிரம் யானை கொன்றால் பரணி!!

மாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்பாடும் ஒரு பாடல் வடிவமே பரணி என தமிழ் இலக்கியத்தால் சிறப்பிக்கப்படுகின்றது.அந்தக் மாபெரும் யுத்தத்தில் பல சேனைகளை அழித்து, எதிரிகளின் பிணக்குவியல்களின் மீது, அவர்களின் பெரும்படையான யானைப்படையில் ஓராயிரம் யானைகளை கொன்ற தலைவன்மீதே இந்த பரணி பாடப்படுவதாக பல இலக்கியங்கள் வகை செய்துள்ளன.
குறிப்பிட்ட ஒரு யுத்தம் முடிந்ததன் பின்னர், அடுத்துவரும் பரணி நட்சித்திரத்தில் யுத்தம் இடம்பெற்ற இடத்தில் கூடும் பேய்களும், இராட்சத ஜந்துக்களும், போரில் இறந்துபோன உடல்கள், இரத்தங்கள் என்பவற்றை அளவில் பெரிய ஒரு பானையில் இட்டு, இரத்தத்தை தண்ணீராய் விட்டு, போர்த் தெய்வமான காளிக்கு இவற்றையே கூழாக காய்ச்சிப்படைத்து, வெற்றிபெற்ற தலைவன், மன்னன், ஆகியோரின் வீரப்பிரதாபங்களை சொல்லி தாமும் உண்டு மகிழ்வதாகவே இந்த பரணி உள்ளது.
இந்தப்பரணி என்பது தமிழில் உள்ள தொன்னூற்று ஆறு பிரபந்த வகைகளில் ஒன்றாகும். பொதுவாக பரணிப்பாடல்கள்கடவுள்
வாழ்த்து
கடை திறப்பு
காடு பாடியது
கோயில் பாடியது
தேவியைப் பாடியது
பேய்ப்பாடியது
இந்திரசாலம்
இராச பாரம்பரியம்
பேய் முறைப்பாடு
அவதாரம்
காளிக்குக் கூளி கூறியது
போர் பாடியது
களம் பாடியது
கூழ் அடுதல்ஆகிய பகுதிகளைக்கொண்டிருக்கும். பெரும்பாலும் போரிற் தோற்ற அரசன் நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு.
செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது கலிங்கத்துப்பரணி. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே இந்த பரணியின் பொருள். பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் கலிங்கத்துப் பரணி என அழைக்கப்படுவதாயிற்று.
தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணியே ஆகும். இது தாழிசையாற் பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது. கடவுள் வாழ்த்தில் உமபதி துதி என்று ஆரம்பிக்கும் இந்த
1.புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்தொழில்காட்டப் புவன வாழ்க்கைச்செயல்வண்ண நிலைநிறுத்த மலைமகளைப்புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம்.
ஏனத் தொடங்கும் பரணி கூழ் அவிழ்தல் எனும் பகுதியில் உள்ள பேய்கள் கழிப்பு மிகுதியால் கூத்தாடல், என்ற பகுதியில் வரும்,
வேத நன்னெறி பரக்க வேஅ பயன் வென்ற வெங்கலிக ரக்கவேபூத லம்புகழ்ப ரக்க வேபுவி நிலைக்க வேபுயல்சு ரக்கவே.
எனும் படாலுடன் முற்றுப்பெறுகின்றது.
அதேபோல தமிழில் உள்ள பரணிப்பாடல்களில் மற்றும் ஒரு பரணியாக அமைந்தது தக்கயாகப்பரணி ஆகும். தக்கயாகப் பரணி ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந்நூல் தமிழ் நாட்டில் சோழர் ஆட்சி நிலவிய 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த நூலின் வழியாக அக்காலச் சைவம் பற்றிய பல தகவல்களை அறிய முடிகிறது. சிவபெருமானுக்காகப் பாடப்பட்ட இந்நூலில், பிள்ளையார் பெயரில் காப்புச் செய்யுள் பாடும் மரபுக்கு மாறாக வைரவர் பெயரில் காப்புச் செய்யுள் உள்ளது.
சரி…தமிழ் புலவர்கள், மறத்தமிழர்கள் பலர், மதங்கொண்ட யானையினை அடக்குவதும், அதை வதம் செய்வதும் பெரும் வீரத்தின் எடுத்துக்காட்டாகவே கொண்டுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் யானையினை அடக்கிய வீரர்கள், விராங்கனைகள் பற்றியும், அதன் உச்சமாக பேரில் ஆயிரம் யானைகளை கொண்றவன் என்ற சிறப்புடன் பரணியும் உருவாகியது எனலாம்.

தமிழ் இலங்கியம் யானையை அடக்கிய அரியாத்தையினை கண்டுள்ளது, அயிரம் யானைகளைக்கொன்றவன்மேல் பாடப்படும் பரணியினை கண்டுள்ளது, தமிழனின் குணமே காதலும், விரமும் கலந்த வாழ்வுக்குணமே என சங்கத்துப்புலவர்கள் அடிததுக்கூறியுள்ளனர்.
இந்த வகையில் கீழ்வரும் பாடல்களை கவனித்துப்பாருங்கள்.
ஈன்று புறந்தருதல் தாயின்;கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
இந்தப் பாடலில் தாய் பெற்றெடுக்கிறாள். தந்தை அவனை சான்றோன் ஆக்குகிறான். சான்றோன் ஆன அம்மகனுக்கு... என்ன கடன் என்று பொன்முடியார் உரைத்திருக்கிறார்? அறிஞர்கள் அவையில் அறிஞன் என்று பெயர் வாங்க வேண்டும் என்றா? இல்லையே... அந்தத் தாய் பெற்ற பிள்ளையைத்தான் காளை என்று குறிப்பிடுகிறார். அந்தக் காளையின் கடமை ஒளிர்கின்ற வாளைப் பயன்படுத்தி, அரிய போரை நடத்தி அதில் யானையை வீழ்த்தி மீண்டு வருதல் என்பதுதானே சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த புறனாநூற்றுப் பாடல்: சோழனுக்கும் நிகழ்ந்த போர் பற்றி அவைக்களத்தில் பரணர் பாடுகிறார்:
..... யானையு மம்பொடு துலங்கி விலைக்கும் வினையின்றி படையொழிந்தனவே. விறல்புகல் மாண்ட புரவியெல்லாம் மறத்தகை மைந்தரோடு மாண்டு பட்டனவே. தேர்தர வந்த சான்றோரெல்லாம் தோள் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே.
பொருள்: யனைகள் அம்புகளினால் வீழ்த்தப்பட்டு மாண்டு ஒழிந்தன. குதிரைப் படை குதிரைகளெல்லாம் அதில் இருந்த வீரருடன் மாண்டன. தேரில் வந்து போரிட்ட சான்றோர்கள் மொத்தமாக மாய்ந்தனர் என்பதாகும்.
ஆண்டாள் அருளிய “நாச்சியார் திருமொழியில்” இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். திருமால் தன்னை திருமணம் செய்வது போல் தான் கண்ட கனவை கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்துநாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”திருமால் ஆயிரம் யானைகள் புடைசூழ வருகிறார், அக்காட்சியைக் கண்ட மக்கள் யாவரும் பொன்குடங்களை வைத்து, தம் சுற்றுப்புறங்களில் தோரணங்கள் கட்டி வரவேற்பதை தன் கனவில் கண்டதாக தோழியிடம் கூறுவதாகக் கூறப்படுகிறது.
ஆக…பரணியில் மட்டும் இன்றி தமிழ் இலங்கியங்கள் பலவற்றிலும் யானையினை அடக்கவது, யானையினை நேரில் நின்று கொல்வது, இவையே தமிழில் ஆண்மை, வீரம் என போற்றப்படுகின்றது. தமிழ் மறவன்கள் மட்டுமின்றி தமிழ் வீரம் நிறைந்த பெண்ணான அரியாத்தை எனும் வீர மறப்பெண் ஒருவருள் யானையினை அடக்கியுள்ளதாக பதிவுகள் உண்டு.
ஆக…தமிழனின் வீரமும், ஆண்மையும் நேற்று வந்ததல்ல, அது தமிழ் எனும் மொழி தோன்றியபோதே அவனுடன் கலந்து வந்துவிட்டது. தன் பலம் அறியா அனுமன்பொல அவன் இன்று சில தேச எல்லைகளாலும், சில சதிகளாலும், தந்திரங்களாலும் கட்டுப்பட்டிருக்கின்றான். என்றோ ஒருநாள் கங்கை, யவனம், கடாரம் வென்ற சோழன் மீண்டும் வருவது உறுதி.

Tuesday, June 9, 2009

இலை துளிர் காலத்து உதிர்வுகள் … 01முற்குறிப்பு – நான் ஜனனித்த ஈழ மணித்திருநாட்டில், யுத்த வடுக்களால் மட்டுமே எழுதப்பட்டிருந்த என் பால்குடிப்பருவங்களில் குறிப்பாக எனது நினைவு தெரிந்த அதேநேரம் நெஞ்சுக்குள் இன்றும் அடிக்கடி என்னை சித்திரவதை செய்துகொண்டிருக்கின்ற சம்பவங்களும், நிகழ்வுகளும் அன்றைய காலக்கண்ணாடியாகவே, ஒரு ஒன்பது வயது சிறுவனின் மனதில், பதிந்துள்ளவை, மரணப்படுக்கை வரை தொடர்ந்து பயணிக்கப்போகும் நினைவுகளை அந்த சிறுவனின் கண்களின் ஊடாகவே சொல்லவேண்டும் என நான் நினைத்து நினைத்து ஏங்கியவைகளை சொல்லத்தான் நினைத்து அடக்கி என் இதயக்கூட்டுக்குள் புதைந்து வைத்திருந்தவைகளை உங்களுடன் தொடராக பகிர்ந்து கொள்கின்றேன்.
சிந்தனைக்கும் அப்பால்ப்பட்ட இந்த சிறுவனின் ஏக்கங்களை, கண்ணால் கண்டவைகளை, சோகங்களை சிந்தனைக்கு உட்பட்ட எழுத்துக்களில் செதுக்கிவிடுபவை கஸ்டமான காரியம்தான். என்றாலும் கூட முடிந்தவரை என்கண்களினூடே உங்களையும் பயணிக்கவைக்க முயல்கின்றேன். இதில் வரும் சம்பவங்கள் நீங்கள் அறிந்தவைகள்தான், புரிந்தவைகளும் கூட, ஆனால் ஒரு சிறுவனின் மனம் அந்த சம்பவங்களை எப்படி உள்வாங்கிக்கொண்டது, அதன் தாக்கங்கள் உங்களை மட்டுமின்றி சிறுவர்களையும் எவ்வாறு தாக்கியது என்பதையும், அதேநேரம் இந்த சம்பவங்களுக்கு பிறகு பிறந்து இன்று வாலிபப்பருவங்களையும் தொட்டுவிட்ட என் இளையோருக்கு ஒரு சுவையான சோகத் தகவலாகவும் இது இருக்கும் என நினைக்கின்றேன்.

ஒன்று மட்டும் நிச்சயம் இன்று தொடர்ந்தும் ஈழத்தில் அணையாத காட்டுத்தீயாக கொழுந்துவிட்டெரியும் யுத்தத்தீ இன்றும் பல சிறுவர்களை இன்னும் இருபது வருடங்களில் இதுபோன்று சொல்லவைக்கும் என்பது மட்டும் உண்மை..
இதை வாசிக்கும்போது நீங்கள் எனக்காகச் செய்யவேண்டியது ஒன்றுதான், காலச்சக்கரத்தை முன்னகர்த்தி 1987க்கு வரவேண்டும்.. என்பக்கத்திலேயே நீங்களும் உள்ளதாக மனக்கிரயம் செய்யவேண்டும்.. சரி..வந்துவிட்டீர்களா?????
1987 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் ஓருநாள். ஆன்று காலைப்பொழுதே.. கதிரவன் ஒளி கசிந்து, வசந்தகால குறியீடுகளான குயிலின் கூவல்களிலும், அணிலின் கீச்சிடல்களிலும், பூக்களின் வாசங்களுடனும் விடிந்திருக்கவில்லை. வழமைபோல வானத்தில் இரண்டு உலங்குவானுர்திகளினதும், அவற்றினால் கக்கப்பட்டும் எரிகுண்டுகளுடனுமே விடிந்தது. அப்போதெல்லாம் சிறுவயது பேதமை மனமோ அல்லது விரக்தியோ தெரியவில்லை வானிலே பலியெடுக்கும், இரும்பு இராட்சதர்கள் வராது போனால் ஏதோ ஒரு வழமைவிரோத பண்பு தலைதூக்கும்.
அன்று அப்படி இல்லை. காலையிலேயே கச்சேரி ஆரம்பித்திருந்தது. "நல்லூர்க்கோவிலடிப்பக்கம்தான் கொட்;டுறாங்கள் " உடனடி முந்திய செய்தியை தெரிவித்துவிட்டு வீதியால் சைக்கிளில் செல்கின்றார் பாண் விற்பவர். மேலே பறந்துகொண்டிருந்த ஹெலிகொப்டரரின் சுற்றுப்பாதை அகலத்தொடங்கியது, கிணற்றுக்கட்டில் குளித்துக்கொண்டிருந்த என்தலைக்குமேலால் பறந்து செல்வது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது. மறுகணம் பட பட என்ற பாரிய சத்தத்துடன் முற்றுப்பெறாத வாக்கியத்தொடர்போல் 50 கலிபர் துப்பாக்கி ரவைகள் வீதியோரங்களை நோக்கி பாய்ந்துகொண்டிருந்தன. குளித்துக்கொண்டிருந்த என் மனதுக்குள்ளும் பயம் வந்து புகுந்துகொள்ள, மனதுக்குள் அப்போது பெரும் காப்பகமாகப்பட்டது சுமார் 10 வாழைகள் உள்ள எங்கள் வீட்டின் வாழைத்தோட்டம் தான்.

அப்போது தான் கவனித்தேன் இரண்டு ஹெலி கொப்ரர்கள் மட்டுமே சுற்றிக்கொண்டிருந்த நிலையில் இருந்த எங்கள் ஊர் வான்பரப்பின்மீது மேலும் "சியாமா செட்டி" என அழைக்கப்பட்ட இரண்டு குண்டு வீச்சு விமானங்களும், அவ்ரோ என அழைக்கப்படும் பாரிய விமானம் ஒன்றும் (பெரும்பாலும் அது பரல் குண்டுகள் என்ற வகை குண்டுகளையே வீசும்.) கூட்டுச்சேர்ந்திருந்தன.

வாழைகளின் மத்தியிலிருந்து அன்று என் சின்ன ஆராய்வு மூளை சொல்லியது "இன்று நடக்கப்போவது அதிகமாகவே இருக்கும் என்று ".அப்போதெல்லாம் எங்கள் அயலவர்களுக்கு தெரிந்திருந்த அறிவியல் உண்மை! பிளாட் போட்ட வீடுகளில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதுதான். அது எவ்வளவு முட்டாள் தனம் என்பது பிறகு நடந்த சம்பவங்கள் வேறு இருக்கின்றது.

இந்த நிலையில் பல அயலவர்களும் எங்கள் வீடு பிளாட் போடப்பட்டது என்பதால் எங்கள் வீட்டில் வந்து குழுமியிருந்தனர். அங்கு மேலால் நிலவிய பதட்டங்களைவிட தங்கள் கதைகளால் பதட்ட நிலைகளை அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அதிகரித்துக்கொண்டிருந்தனர். "இங்கபாருங்கோ … இவங்கள் பொம்பர்ல இருந்து ஓதோ எரிகுண்டு ஒன்று போடுறான்களாம், போட்டால் கீழே ஒரு சுற்று வட்டாரத்துக்கு ஒருத்தரும் தப்ப ஏலாதாம் " தன் ஆரம்ப உரையை மிகப்பயங்கரமாக அரங்கேற்றினார், ஓய்வுபெற்ற ஆசிரியர் வேலாயுதம். அவரது மாணவர் என்பதானாலோ என்னமோ உடனடியாக அதை வழிமொழிந்தார் மனோகரன் மாஸ்ரர். கேட்டுக்கொண்டிகொண்டிருந்த மற்றவர்களின் முகங்களில் ஈகூட ஆடவில்லை.

"மம்மி பின் கேட்டை லொக் பண்ணாமல் வந்திட்டேன், கேக் அடித்து வைத்திருக்கிறம் தானே.. இந்த ஏயார் பொம்பிங்கால பேக் பண்ணவும் குடுக்கேல்ல எங்கட "லான்ஸி" போய் அதுகளை சாப்பிட்டுபோடுமோ தெரியாது என்று தனது தாயிடம் செதல்லிக்கொண்டிருந்தா லக்ஸி அக்கா.அப்போது அவ உயர் தரம்படித்துக்கொண்டிருந்தா..அவவின்ட அப்பா வெளிநாட்டில இருந்தவர். கொஞ்சம் தமிழுடன் ஆங்கிலத்தை கலவி கொள்ள வைப்பதில் அவவுக்கு கொஞ்சம் விருப்பம் அதிகம் தான். அவ லான்ஸி என்று குறிப்பட்டது அவர்கள் வீட்டு நன்றியுள்ள நாலுகால் உடையவர்.

சனம் படுற பாட்டில உனக்கு கேக்குதான் கேட்குது என்ன? கொஞ்சம் அதட்டினார் வேலாயுதம் மாஸ்டர்.
இந்த சம்பவங்களுக்குள் எதுவுமே தெரியாமல் தனது தாயின் மடியில் இருந்துகொண்டே என் புது பேனாவை நான்காக உடைக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் "காகத்தை" காவம் என்று சொல்லப்பழகும் 2 வயதுடைய சஞ்சீவன்.

திடீர் என மிக பதிவாக விமானத்தின் ஓசை ஒன்று எங்கள் காதுகளின் செவிப்புலன்களை கெடுத்துவிடுவதுபோல் பேரிரைச்சலுடன் பதிந்து வந்தது. ஐயோ… முருகா, பிள்ளையாரப்பா… என்றெல்லாம் யார் யார் சொன்னார்கள் என்பதற்கு இடையில் பெரும் சத்தத்துடன் குண்டு ஒன்று போடப்பட்டு வெடித்தது. என் நெஞ்சுக்கூட்டின் இடைகளில் அடைப்பது போன்ற உச்ச பய உணர்வு அப்போது தெரிந்தது. எனக்கு ஆறுதலாகவோ அல்லது அவரது பயத்தாலோ மனோகரன் மாஸ்ரர் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தார்.

முதலில் நானும் அவரும்தான் வெளியில் எட்டிப்பார்ததோம் …நிலத்தில் கண்ணாடித்துண்டுகளும், சில குண்டு பிசிர்களும் முதலில் தென்பட்டன. வானத்தில் குண்டுச்சத்தம் கேட்ட திசையில் "நோட்டீஸ்கள்" பறப்பதுபோல மின்னி மின்னி ஏதோ பறந்தகொண்டிருந்தது. கீழே வந்து விழும்போது தான் அவைகள் நொட்டிஸ்கள் அல்ல விமானக்குண்டு விழுந்த கட்டடத்தின் ஸீட்கள்தான் மேலே பறந்து பின்னர் வந்து கீழே விழுவதை உணர்ந்துகொண்டேன். மீண்டும் பயப்பீதி உந்தவே வீட்டின் உள்ளே ஓடிச்சென்று விட்டோம். வீதியிலும் எவரையும் காணமுடியவில்லை. வானில் சத்தமும் கொஞ்சம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. மெல்ல மெல்ல வீதியில் ஆளலரம் அவலத்துடன் நடமாடுவதை உணரமுடிந்தது.

சொல்லி வைத்ததுபோல் அவ்விடத்தில் இருந்து அனைவருமே ஒன்றாக எழுந்து வீதிக்கு வந்தோம். முதலில் பல பொது இளைஞர்கள், தயவு செய்து இரத்தம் தேவைப்படுகின்றது கொடுக்கக்கூடியவர்கள் ஆஸ்பத்திரிக்கு உடனவாங்கோ எனத் தெரிவித்துக்கொண்டே சைக்கிள்களில் அவசரமாக ஓடினார்கள், அவர்களின் பின்னால், நான் கண்ட காட்சி அப்படியே சப்த நாடிகளையும் ஆட்டம் காணவைத்தது!! வயிற்றுப்பகுதியில் இரத்தம் வழிந்தோட கண்கள் மேலே சொருகியபடி மேல் மூச்சுவாங்க ஒரு நபரை இருவர் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். அதன் பிறகு மெல்ல மெல்ல சன நடமாட்டம் காணத்தொடங்கியது வீதி.
அன்றைய குண்டு வீச்சு விபரங்களும் வெளிவரத் தொடங்கியது. இரண்டு பெண்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாகவும், நல்லூர் பகுதியில் இரண்டாம் குறுக்கு வீதி, முத்திரச்சந்தையில் உள்ள ஒரு உருக்கு நிறுவனம், நல்லூர் பின்வீதியில் முடமாவடியில் இருந்த ஒரு பிரபலமான கட்டம் என்பன இந்த குண்டுவீச்சு தாக்குதல்களால் தரை மட்டமாகியதாக செய்திகள் உடன் வந்தன.. பலரது வாய்மூல அறிக்கைகளாக.. சிறிய ஒரு ஓய்வுக்கு பின்னர் நல்லூரில் இருந்த எனது வீட்டிலிருந்து தென்கிழக்காக தொடர்ச்சியாக ஆழுத்தம் கொடுக்கும் ஒரு அதிர் வெடி போன்று தொடர்ச்சியாக குண்டுச்சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அப்போதெல்லாம் நமக்கு அண்மையாக இருந்த இராணுவ முகாம்கள், ஒன்று கோட்டை இராணுவ முகாம், அடுத்தது நாவற்குளி இராணுவ முகாம்.

குடிமனைகளை நோக்கிய ஷெல்த்தாக்குதல்கள் கோட்டை இராணுவ முகாமிலிருந்தே இடம்பெறும். இரவு பகல் என்று காலவறைகள் எதுவும் அதற்கு கிடையாது. தென்கிழக்காக சத்தம் கடுமையாக கேட்டுக்கொண்டே இருந்தது. "நாவக்குளி காம்பில இருந்தும் அடிக்கத் தொடங்கிட்டான்போல! என வீட்டில் பெரியவர்கள் பேசிக்கொள்வதை கேட்டுக்கொண்டிருந்தேன். நேரம் மதியப்பொழுதை தாண்டி செல்லும் வேளைவரை இந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. சந்று நேரத்தால் வீதியில் பெரும் சனமாட்டத்துடன் கூடிய குரல்கள் எழுந்தபோது என்னையறிமாலே வீதிக்கு ஓடிச்சென்று பார்த்தேன். குழந்தைகளை கைகளில் ஏந்தியவாறு கிடைத்த தமது பொருட்களையும் ஏந்திக்கொண்டு பெருவாரியாக மக்கள் எங்கோ சென்று கொண்டிருந்தனர். வீதியில் நின்ற பெரியவர் ஒருவர் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் "எங்கியிருந்து தம்பி வாறிங்கள்? எங்க பிரச்சினை என்று கேட்டார். பாசையூர், குருநகர் இடங்களில இருந்து வாறம் அண்ணை. கண்போட்டால கொண்டுவந்து வெழுக்கிறான். கனபேருக்கு காயம் அண்ணை வீட்டு பக்கத்தில எல்லாம் வந்து விழுகுது. அதுதான் அங்கிருந்து பாதுகாப்புக்காக ஓடி வாறோம் என்றார்.

அவர்களில் பெரும்பாலான மக்கள் கல்விப்பணிமனைக்கு அருகில் உள்ள சாதனா படசாலையில் தங்கியிருந்தனர். நாங்கள் உட்பட பல எங்கள் இட மக்கள் தேனீர், படுக்கைகள் போன்றவற்றை அங்கு கொண்டுவந்து அந்த மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தனர். குழந்தைகள் சில இன்னும் அந்த சத்தத்தினால் ஏற்பட்ட பதட்டம் மாறாமல் காணப்பட்டனர். பெரியவர்கள் பெரும் வேதனை கலந்த தோற்றத்துடன் இருந்தனர். ஷெல், விமானத்தாக்குதல், கண்போர்ட் தாக்குதல் போன்ற மும்முனைத்தாக்குதல்களாலும் மக்கள் பெரும் அவலங்களை அனுபவித்துக்கொண்டிருந்னர்.

நான் உட்பட அனைவரும் தொடரப்போகும் அபாயங்கள் பற்றி தெரியாமல் இன்றைய நாளில் எமது பயங்கரம் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. இது ஆரம்பம்தான் இதைவிட பயங்கர அனுபவங்கள் எல்லாம் எமக்கு கிடைக்கப்போகின்றது என்று …
( இலைகள் உதிரும்)

Saturday, June 6, 2009

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்மையால் சருகாகும் மலர்கள்….

சிறுவர்கள் தங்குமிடங்கள், சிறுவர்கள் கற்கும் இடம்கள், சிறுவர்களை பராமரிக்கும் இடங்கள் போன்றவற்றில் அதிக அக்கறையுடனான சுவாத்திய சூழலும், எந்த வித ஆபத்துக்களும் அற்ற மையங்களாகவும், நாளாந்தம் பாதுகாப்பு பரிசீலிக்கப்படும் இடங்களையே தெரிவு செய்யவேண்டும்.குழந்தைகள் என்பவர்கள் தங்கி வாழ்பவர்கள், சுயமாக இயங்குபவர்கள் அல்லர். எனவே அவர்கள் தொடர்பில் அதீத அக்கறை எடுக்கவேண்டிய கடப்பாடுகள் மேற்படி சிறுவர்கள் உள்ள சூழலில் வாழும் அனைவரினதும் கடமையே.

உலக அரங்கிலே சிறுவர்கள் கற்கும் இடங்கள், தங்கியிருக்கும் இடங்கள், பாடசாலைகள் என பல இடங்களிலும் கடந்த சில வருடங்களாக தீயாபத்து ஏற்பட்டு பல சிறுவர்கள் பலியாவதைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.நாளைய எதிர்கால தலைவர்களான அவர்கள் பெரிவர்களின் அசண்டையீனம் காரணமாக இவ்வாறு தீயிற்கு தீனியாகும் சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டே வருகின்றது. சிறுவர் உரிமைகள், சிறுவர் நலங்களைக் கவனித்துக்கொள்வது, யுனிசெவ்வினதும், சேவ் தி சில்ரன் அமைப்பினதும் கடமை என்று மற்றவர்கள் இருந்துவிடக்கூடாது, சிறுவர் என்போரை பாதுகாத்து அவர்களுக்கு உகந்த ஒரு உன்னதமான சூழலை உருவாக்கிக்கொடுக்கவேண்டிய கடமைப்பாடு உலகில் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்.
இன்று அனைத்துலகமும் அதிரும்படி வந்த செய்தி, மெக்ஸிகோ வட மாநிலம் ஒன்றில் சிறுவர் காப்பகம் (டே கெயார் சென்ரர்) ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 குழந்தைகள் தீயில் எரிந்து இறந்துள்ளதாகவும், இந்த சிறுவர் பராமரிப்பகத்தில் 5 மாத குழந்தைகளில் இருந்து 5 வயதுவரையிலுமான குழந்தைகளே அதிகம் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. மெக்ஸிகோவாக இருந்தாலும் சரி, மேடவாக்கமாக இருந்தாலும் சரி, சிறுவர்கள் இருக்கம் இடங்களை ஒன்றுக்கு நாறுதடவைகள் முன்னெச்சரிக்கையுடன் கவனிக்கவேண்டியது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள். பாடசாலைகள், பராமரிப்பு நிலையங்களை நடத்தும் நிர்வாகிகளின் கடமையாகும்.

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கும்பகோணத்தில் நடந்த சம்பவத்தை தமிழகத்தில் உள்ள தமிழர்கள் இன்னும் மறந்திருக்கமுடியாது. அதேபோல் ஈழத்தில், செஞ்சோலை என்ற சிறுவர் பராமரிப்பு நிலையஙத்தின்மீது நடத்தப்பட்ட விமானக்குண்டு வீச்சில் 90 ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் இரத்தம் கொப்பளிக்க வெளியெடுக்கப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

குழந்தைகள் விடயத்தில் உலக மட்டத்தில், சமுகத்தினதும் அரசாங்கங்களினதும், பொறுப்பணர்வு போதாது என்றே எணத்தோன்றுகின்றது.சிறுவர்கள் வந்துபோகும் இடங்கள். சிறுவர் பாடசாலைகள், சிறுவர் நிலையங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் நடத்தப்படும் இடங்களை வாரத்திற்கு ஒருமறையாவது அரசாங்க பிரதிநிதிகள் நேரில் சென்று அங்குள்ள ஆபத்துக்கள், பாதுகாப்புக்கள் குறித்து ஆராயவேண்டும். அதேபோல சிறுவர் தொடர்பான தொண்டர் அமைப்புக்களும் இதற்கான தங்களது உதவிகளை நல்கவேண்டும்.
இது அரசாங்கத்தினதும், தொண்டர் அமைப்புக்களினதும் கடமை என்று நின்றுவிடாது, சிறுவர்களின் பெற்றோர்களும், சமுகத்தினரும் சிறுவர்கள் கூடுமிடங்கள், தங்குமிடங்கள், நிலையங்கள் என்பவற்றில் தீவிர அக்கறை எடுக்கவேண்டும்.இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாகவே மலரினும் மெல்லிய உடலையும, உள்ளங்களையும் உடைய நம் செல்வங்களுக்கு பாதுகாப்பான ஒரு பூமியை எம்மால் வழங்க முடியும்.

வானம் தொட்டுவிடும் தூரத்தில்த்தான் ……

தேடல்
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து " என்று ஒரு பழமொழி உண்டு. தயவு செய்து முன்னேறத்துடிப்பவர்கள் உங்கள் ஞாபகங்களில் இருந்து அந்த பழழொழியினை அழித்துவிடுங்கள், அல்லது வழக்கொழிந்துவிடச் செய்துவிடுங்கள். முன்னேறத்துடிப்பவர்களுக்கு அந்த பழமொழியில் சற்றும் உடன்பாடு வரக்கூடாது. எல்லோருமே எதையாவாது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன்தான் இருப்பார்கள், ஆனால் ஒரு சிலர் மட்டுமே சாதித்து வெற்றிக்கனிகளை பறித்து புசித்தக்கொண்டிருப்பதை எம்மில் பலர் கீழே இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு செயலில் நாம் வெற்றி பெறவேண்டும் என்றால் பொறுமையுடனான கால வரையற்ற தேடல்கள் எங்கள் மனதில் விதைக்கப்படவேண்டும். இங்கே தேடல் என்று சொல்லும் போது உங்களுக்கான வெற்றிப்பாதையின் கதவுகளை கண்டறிவதற்கான உங்கள் பயணமே தேடல் என்ற நிலையாகின்றது. ஆக வெற்றிபெறத்துடிக்கும் ஒவ்வொருவனுக்கும் மிக பிரதானமாக இருக்கவேண்டியது தேடல் உணர்வு.

ஓன்றை யோசித்துப்பாருங்கள் நாடுகாண் பயணங்கள் என்ற ஒரு தேடல் மட்டும் அன்று இல்லாது போயிருந்தால் இன்று உலகத்தில் அரைவாசி நாடுகளே காணமற்போயிருக்கும். ஏன் அதையும் விட முன்னோக்கிப்போனால் மனித இனத்தின் காட்டு வாழ்க்கையில் இருந்தே தேடல்கள் ஆரம்பித்துவிட்டன என்று கூறலாம். அங்கு மட்டும் தேடல்கள் இல்லாது போயிருந்தால் இன்று மனித இனம் இந்த அளவுக்கு முன்னேறியிருக்க முடியுமா? அதேபோல மார்க்கோனியின் தேடல், தோமஸ் அல்லாவின் தேடல், சுவாரிகினின் தேடல், கிரகாம் பெல்லின் தேடல், கலிலியோவின் தேடல் என்பவை தான் முறையே எங்களுக்கு வானொலி, மின்குமிழ், தொலைக்காட்சி, தொலைபேசி, வான்வெளிப்பயணங்கள் என்பனவற்றை தந்திருக்கின்றன. " என்னத்தை தேடி என்ன செய்வது? எல்லாத்தையும் கொண்டா போகப்போறோம் ""எனக்கு போதுமான பணமே போதும், அதிகம் பணம் சம்பாதித்து சாதித்து பணக்காரன் ஆகிவிட்டால் ஒருபோதும் நின்மதியாக வாழவே முடியாது "

எம்மில் பலர் அடிக்கடி தெரிவித்துக்கொண்டிருக்கும் தத்துவ முத்துக்களே இந்த சம்பாசனைகள்;. இப்படிப்பேசிக்கொண்டிருப்பவர்கள் முழுமையாக தேடுவதற்கு முயற்சி செய்யாதவர்களே, எத்தனை சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் இவர்களால் தேட முடியாது. இந்த நிலையில் இவர்களது மேற்படி பேச்சுக்கள் தங்களையும் கெடுத்து சுற்றி இருப்பவனின் மனதிலும் தேடலின் வெறியை மழுங்கடிக்கும் விஷம் என்றே கூறவேண்டும்.

ஒருவன் தேடல் ஒருபோதும் அவனுக்கு மட்டுமே பயன்பாடுகளை சந்துவிட்டுபோய்விடுவதில்லை. வேண்டும் என்றால் அந்த தேடலில் ஈடுபட்டவனுக்கு அதற்குரிய பணத்தையும், வரலாற்றுப்புகழையும், அந்த தேடல் மூலம் கொண்டுவந்திருக்கலாம். ஆனால் அந்த ஒருவனுடைய தேடல் மூலம் பயன்பெறப்போவது பலராகவே இருக்கும். மார்க்கோனியின் தேடல் அவருக்கு மட்டுமா பயன்தந்தது? அலக்ஸ் ஆன்டர் கிரகம் பெல்லின் தேடல் அவருக்கு மட்டுமா பயன்பட்டது? இல்லையே. சரி இவர்கள் சொல்வதுபோலவே உழைத்து பணம் சேர்த்து எதை நான் காண்பது? ஏன்ற கேள்விக்கே போவோம்.

பணம் சேர்ப்பதற்கு என்ன செய்யவேண்டும்? தொழிலில் தேடல்கள் மூலமான ஒரு தொடக்கம் வேண்டும். இவர் மட்டுமா தொழில் செய்யப்போகின்றார்? இல்லை அவர் லாபம் அடைய அடைய நிறுவனம் வழர்ச்சியடைந்து, ஊழியர்களின் எண்ணிக்கையும் கூடுதலடைகின்றது. சிந்தித்துப்பாருங்கள், சும்மா இருந்த ஒருவர் தேடல் வயப்பட்டு செயலில் இறங்கினால் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பினையும் பெற்றுத்தரமுடிகின்றது! தேடல்கள் என்பவை முடிவிலி, தொடர்ச்சியானவை, அவற்றுக்கு முடிவுகள் ஒருபோதும் இல்லை. தொழில் ரீதியான தேடல்களால் ஒருவன் அடைந்துகொண்டு செல்வது கண்டிப்பாக மேலும் மேலும் சிறப்பு என்பதுதான்.

உண்மையில் நடந்த இரு நண்பர்களின் கதை இந்த வியாபார வாழ்க்கை தேடல்களுக்கு நல்லதொரு சம்பவமாக இருக்கும் என நினைக்கின்றேன். கொளதமனும், சாரங்கனும் பாடசாலையில் இருந்தே நண்பர்கள், இரண்டுபேரும் பின்னர் பொறியில் துறையிலும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்து கணினி பொறியியல்த்துறையில் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் இருவரினதும் குணாதிசியங்கள் பற்றி குறிப்பட்டே அகவேண்டும். கௌதமன் ஒரு யதார்த்தவாதி, படிக்கும் காலங்களில்க்கூட படிப்புக்கான நேரத்தை எப்போதும் இழக்கவிரும்பமாட்டான். புறபாடவிதானங்களிலும் அவன் ஈடுபாடு காட்டுவது இல்லை. "படித்து பட்டம் பெற்றால்த்தான் சாதிக்கமுடியும் " இந்த காலத்தை வீணாக்குவது முட்டாள் தனம் என்பதுதான் அவன் தன் மனதில் வைராக்கியமாக காத்துவந்த வேதம். வகுப்பிலும், பாடசாலையிலும் அவனே முதன்மையானவன்.

சாரங்கன் அப்படி அல்ல! அப்போதே அவனுக்கு கலை ஆர்வம் கூடுதலாக இருந்தது. பாடசாலை நிகழ்வுகள் அனைத்திலும் அவனது கவிதைகள், பேச்சுத்திறமைகள் மெருகூடின. பெரும்பாலும் படிக்கும் நேரங்களைவிட அவன் கையில் பயன்தரக்கூடிய அறிவியல் புத்தகங்களே அதிகமாக இருந்தன. அப்போதே அவனுக்குள் புதியவற்றை தெரிந்துகொள்ளும் தேடலும், தனது துறையில் மற்றவர்களின் முறைகளையும் பற்றியெல்லாம் தேடிக்கொண்டிருப்பான். உயர்தர பெறுபேறுகள் வந்தபோது மிகச்சிறப்பாக கொளதமனுக்கே பெறுபேறுகளைப்பெற்று முன்னிலை வகித்தான். ஆனால் சாரங்கனும், கொளதமன் அளவுக்கு இல்லை என்றாலும் கூட பல்கலைக்கழக பொறியியல்த்துறைக்கு தெரிவாகியே இருந்தான். பின்னர் பல்கலைக்கழகத்திலும் கொளதமனே பெரிதாக பேசப்பட்டும் பெறுபேறுகள் பெற்றும் வந்தான். சாரங்கனது பெறுபேறுகள் சராசரியாகவே இருந்து இருவரும் பட்டத்துடன் வெளியேறினர்.

இருவரும் ஒரே வேளையில் தனித்தனியாக கணினி மென்பொருள் நிறுவனங்களை சிறிய அளவில் தொடங்கி தொழில் செய்தனர். கௌதமன் வழமைபோலவே கடுமையாக உழைத்து வந்தான். அனால் சாரங்கனது வியாபாரப்பயணம் அப்படி இருக்கவில்லை. சாதாரணமான நேரங்களுடனேயே அவன் தொழில் புரிந்துவந்தான். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஓராண்டு முடிவதற்குள்ளேயே சாரங்கனின் நிறுவனம் மூன்று மடங்கு வழர்ச்சி பெற்று பாரிய இலாபம் பெற்றான். காரணம் என்னவாக இருக்கும் என நீங்களே அனுமானித்திருப்பீர்கள். ஆம் காரணம் சாரங்கனின் தேடல்கள்தான். அவன் பெரும்பாலான நேரங்களில் தனது தொழிலில் மேல் நாடுகள், மற்றும் பிறநாடுகளில் கையாளப்படும் முறைமைகள், புதிய தொழிநுட்ப புகுத்தல் என்பவை பற்றி தேடித்தேடி தனது தொழிலில் புகுத்தினான் அதனால் அவன் அந்த வெற்றியை பெற்றான்.

ஆகவே ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்துவிடுகின்றது. திறமைகள் மட்டும் இருந்தும் தேடல்கள் இல்லை என்று ஆகிவிட்டால் மேலும் மேலும் வளர்ச்சி பெறுவது என்பது கேள்விக்குறியாகவே மாறிவிடும் என்பதுதான். விஞ்ஞானத்தின் மூலாதாரம் தேடல் என்பது மட்டும் இன்றி தனக்குள்ளான ஒரு தேடல்கள் தான் ஞானத்தை தரும் என்று ஆஞ்ஞானமும் சொல்கின்றது. தேடல் சிந்தனை என்பது ஒரு மனிதனின் மூளையில் எப்போது அலாரம் அடிக்கும் என்பதை சொல்லி விடமுடியாது. எந்த கணப்பொழுதிலும், ஒரு சம்பவத்திலும், சில உரையாடல்களிலும் கூட தேடல்கள் தொடங்கிவிடலாம். சோம்பலில் படுத்துக்கொண்டிருந்த நீயூட்டன் மீது அப்பிள் விழுந்த அந்த கணத்தில்த்தான் அவனது புவியீர்ப்பு பற்றிய தேடலும், அதன்பின்னரான கண்டுபிடிப்பும் உண்டாகியது என்பதை மறந்துவிடாதீர்கள்..
ஆகவே நீங்கள் புதிதாக ஒன்றையும் தேடும் பொறுப்பை உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு விட்டுவிட்டு போகவில்லை. அவர்கள் உங்களுக்காக பலவற்றை தேடி வைத்துவிட்டே சென்றுள்ளனர். ஆகவே இப்போது நிங்கள் தேடவேண்டியது உங்கள் துறைகள் எதுவோ அவற்றை மேலும் சிறப்புறச்செய்து எவ்வாறு முன்னேறுவது என்பது மட்டுமே.. என்ன தேடத்தொடங்கிவிட்டீர்களா??தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசி இருக்கும், காதல் போல தேடல் கூட ஒரு சுகமே..

LinkWithin

Related Posts with Thumbnails