Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Monday, December 13, 2010

வாசகன் வம்பு!!

Dr.பாலவாசகனும் மரக்கறிக்கடைக்காரனும்




எச்சரிக்கை
மரக்கறி கடைக்காரன் :
இஞ்சியுடன், மரவள்ளி கலந்தானென்றால்
கொலைகாரப்பய எச்சரிக்கை.

கத்தரிக்காய் மட்டும் வித்தானா!
ஒழுக்கங்கெட்டவன் எச்சரிக்கை

தராசில் நிறுக்கையில் கதைபேசினால்
அனுபவம் மிக்கவன் எச்சரிக்கை

மிச்சம் தருகையில் அரசியல்பேசினால்
எண்ணிப்பார்த்துக்க எச்சரிக்கை
நீதான் பெஸ்ட்டு கஸ்ரமர் என்றானா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

சந்தைக்குவருமுன்னே மொத்தமாய் வாங்கி
பிரிச்சில்போடுதல் அதுவே நலமாகக்கொள்

லாபம் ஒன்றே குறியானபின்
கழிப்பது உன்னிடம் வேஸ்ட்டுகள்தான் என்று கொள்

உன்னை மரக்கறி வியாபாரி கேனையன் எனக்கொள்வான்
யோசிக்காமல் கண்ணாடிபார்த்து ஒத்துக்கொள்;.

மேலும் கீழும் காட்டும் ஐட்டம்ஸ்
உன் பைக்குள் வராது என்றே கொள்

வெங்காயத்தின் தலைமேல்
வேஸ்டைக்கட்டுதல் என்ற பண்டை செயலில்
உன் புத்தி கலவாது ஏற்றுக்கொள்

இந்த வியாபரிக்கெதிராய் கொன்சூமர் ஒன்றை
நாடத்துணியும் பணி சேர்த்துக்கொள்

பாலவாசகன்:
ஆஹா… நடாத்த துணியும் பணி சேர்த்துக்கணுமா?
பணியே கட்டியடிப்பதை வாங்கிச்செல்வதென்றான பின் கொன்சூமர் என்றெதற்கு?
தனியே வருவேன்…

மரக்கறி கடைக்காரன் :
அப்படி வாங்க வழிக்கு..
ஸோ..நீங்கள் பேமானிதானே?

பாலவாசகன்:
பிறில்லியன்ஸி அஸ் அக்கியூஸ்ட்

மரக்கறி கடைக்காரன் :
அப்ப ஜஜ்மென்ட் சொல்றன்

பாலவாசகன்:
சொல்லுங்க…

மரக்கறி கடைக்காரன் :
பதிலுக்கு ஒரு கவிதை சொல்லணும் அதுதான் தண்டனை

பாலவாசகன்:
யாருக்கு?

மரக்கறி கடைக்காரன் :
அது கவிதை என்று நீங்க சொல்லும் கண்றாவியை கேட்டாத்தானே தெரியும்?

பாலவாசகன்:
ஹக்…. அதுவும் சரிதான். ஆனால்…நீங்க கோவிச்சுக்க கூடாது!

மரக்கறி கடைக்காரன் :
ஏன் வியாபாரிகளை பற்றி கேலியா?

பாலவாசகன்:
சாச்சா…இது ஒரு வியாபாரியின் வேண்டுதல் மாதிரி
ஒரு வியாபாரி தெய்வத்துக்கிட்ட பாடுற தோத்திர பாடல்!
பின்னர் நானே கேட்கும் கேள்விகள்!!

மரக்கறி கடைக்காரன் :
ஓ… நீங்க சத்திமானா?

பாலவாசகன்:
நான் மிஸ்ரர் பீனா என்பதே கேள்விக்குறியா இருக்கு!

மரக்கறி கடைக்காரன் :
கவிதையை கேட்டால் கௌ;விக்குறி? சோதனைக்குறியா மாறலாம் இல்லையா?

பாலவாசகன்:
ம்ம்ம்ம்… மே பி… மே ஐ..

மரக்கறி கடைக்காரன் :
கன்ராவி…

பராக்கு

பாலவாசகன்:
மரக்கறி விற்கையில் பேரம்பேசி
தலையில் துண்டைப்போடாது, சொன்னதைக்கேட்கும்
என்போன்று இழிக்கும் வென்னிற பற்கள் வேண்டும்

10 ரூபா விலை சொன்னால் 1ரூபா கேட்டு
கடுப்பேற்றாதவன் என்போல் வேண்டும்.
அழுகிப்போனதை எறியமனமின்றி நிற்கையில்
வாங்கிப்போக என்போல் பலர் வேண்டும்
ஆடு பறக்கிறது என்றால் அண்ணாரவேண்டும்
பாவம்டா நீ எனத் திண்தோள் வேண்டும்!

நீலம்பாரித்த மரவெள்ளியை தட்டிட வசதியாய்
ஆர்வப்பதத்தில் நீயும்வேண்டும்
அதற்கு பின்னும் நீ உயிருடன்வேண்டும்

சந்தையில் மரக்கறி வீட்டில் சொஸேயஸ் என
சமைத்து சாப்பிட பணமும்வேண்டும்
ஏ.ரி.எம்மும்வேண்டும் டெபிட்டும் வேண்டும்
எனக்கென்று கிரடிட்கார்ட் கேட்கும்வேளையில்
ஏமாற்றவேண்டிய திட்டமும் வேண்டும்

இப்படி உன்போல் பலர் வரவேண்டும் என்று
21 நாட்கள் நோன்பிருந்தேன்
வரம் தருவான் விநாயகன் என
கடும் விரதம் இருந்து வேண்டிப்போனேன்

ம.வி: வேண்டி எங்க போனீங்க???

கடலுக்குத்தான்…

தூசனம் கொட்டியே வெறிமுறியவென
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
அப்புக்கள் பலபேர் திரிவதைக்கண்டேன்..
ரைம் மிஸின் உதவியால் சுபாங்கன்
வானிலே பறப்பதைக்கண்டேன்…

இந்தக்காலத்தில் ஏமாற்றமே என்றுவிட்டு..
ஐந்நூறுஆண்டுகள் முன்னால்ப்போய் மரக்கறி பார்த்தேன்.
எச்சந்தை ஆனால் என்ன வென்று லெமோரியாக்கண்டம்வரை
சென்றுபார்த்தேன்.
இன்று மட்டும் அல்ல அன்றும்
நல்ல லட்சணம் நிறைந்த வியாபரி
மரக்கறிச்சந்தையில் மிக மிகக்குறைவு

வரந்தரக்கேட்ட பிள்ளையாரே உனக்கு
சாப்பாடுகள் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் மாம்பழத்தை தவிர வேறு எது பலித்தது?
தும்பிக்கையில் சுற்றியிருக்கும் அந்த மோதகம் எப்படி?

பிரபஞ்சம் படைத்த உனக்கு நல்ல மரக்கறி கிடைத்தது உண்டோ?
சுவையும், இயற்கையும், பதமும் உள்ள நல்லமரக்கறி கிடைத்தது உண்டோ?

உனக்கேனும் அமையப்பெற்றால் உண்மையிலே அதிஸ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும் அமையச்செய்யேன்

"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே"

Monday, December 6, 2010

இனி எல்லாம் இப்படித்தான் - பதிவர்களின் பாட்டுக்கு பாட்டு.



புதிவர் சந்திப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதால் “சீசன்” பதிவுகளாக பதிவர்கள் மத்தியில் பதிவர்களையே பாத்திரங்களாக்கி நகைச்சுவைப்பதிவுகள் அரங்கேறிவருகின்றது.
இனி எல்லாம் அப்படித்தான்…

அந்தவகையில் நாமும் கோதாவில குதித்தாகணுமே..
இதோ இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பு இனிய முறையில் ஆரம்பித்து, இதோ இடைவேளை இன்னிசை என்ற நிகழ்வு, திடீர் என பதிவர்களால் மாற்றம்பெற்று,
புதிவர்களின் பாட்டுக்குப்பாட்டு என்று பெயரிட்டு ஒரு போட்டி நிகழ்ச்சியாக இடம்பெறுகின்றது.

இதோ மேடையில் லோஷன் மைக்குடன் ஏறுகின்றார்.
பதிவர்களின் பாட்டுக்கு பாட்டு… வலைப்பரப்பெங்கும் தமிழ் பரப்பி, தமிழுக்கு சிகரம்வைத்து, ஏராளமான மனங்களை வென்ற பதிவர்கள் சார்பில் இடம்பெறும் வேடிக்கை வினோத நிகழ்வு!
இந்த இனியவேளையில், மண்டபத்தினுள்ளே இயற்கையே குளிர்மையை கொலுவீற்றிருக்க செய்துள்ள இந்த இனியநேரத்தில், இந்த போட்டியை ஆரம்பித்து வைக்கின்றேன்.

இதோ முதலாவது போட்டியாளராக….
பேசிக்கொண்டிருக்கும்போதே கிறு கிறு என்று மேடையில் ஏறி லோஷனிடம் மைக்கை பறிக்கின்றார் மதிசுதா..
“அண்ணை எனக்குத்தான் சுடுசோறு” . சரி என்றதன் பின் மைக் லோஷனிடம் கொடுக்கப்படுகின்றது.
சரி..முதலாவது போட்டியாளராக தானே வந்துள்ளார் மதிசுதா..
அவருடன் போட்டியிட்டுப்பாட நாம் அழைப்பது கஞ்சுபாய்.. சீ..பழக்கதோசம் விடுகுதில்லை கூல்போய்.

சரி மதிசுதா..பாடுங்கள் உங்கள் அபிமானப்பாடலை!
வேண்டாம் அண்ணை அதுதான் சுடுசோறுவாங்கிட்டேனே, பாவம் கூல்போயே பாடட்டும்.
சரி கூல்.. பாடுங்கள் உங்கள் அபிமானப்பாடலை…
மொபைலா? மோபைலா? நீ என்ன பிரீப்பேடா, போஸ்பெய்டா சொல் சொல்…
என கூல்போய் சுதாவைப்பார்த்து கண்ணடித்துக்கொண்டே பாடுகின்றார்.

நல்லது கூல்போய்.. அருமையான ஒரு போன் பாடல். ஆனால் உங்கள் தொலைபேசி இலக்கம்தான், போஸ்பெய்டா, பிரீப்பெய்டா தெரியவில்லை. சுதாவை முந்திக்கொண்டுபோய் கொமன்ஸ் போட்;டுவிடலாம். ஆனால் உங்களை மொபைல்ல பிடிப்பதுதானே பெரும்பாடு.. இதோ சுதா “மொ” என்ற எழுத்தில் மணி ஒலித்தது நீங்கள் பாடவேண்டிய எழுத்து “மொ” என்றார் லோஷன்.

கொய்யாலே.. “மொ” என்ற மொக்கு எழுத்தில் மணியை அடிக்கவிட்ட சிதறல்கள் ரமேசுக்கு என் கண்டனங்கள். என்றாலும் விடமாட்டான் இந்த மதி.சுதா..
இதோ என் இசையிலும் நனையுங்கள்..
மொத்திவைத்த மல்லிகை மொட்டு! பூத்திருக்கு வெக்கத்தைவிட்டு…

இல்லை..இலை;லை..சுதா நீங்கள் பாடலையே மாற்றிவிட்டீர்கள். அது பொத்திவைத்த மல்லிகைமொட்டு. எனவே இந்த போட்டியில் இருந்து நீங்கள் நீக்கப்படுகின்றீர்கள்.
மைக்கை கொஞ்சம் பொத்திக்கொண்டே.. என்னசுதா..உங்களுக்கே தெரியும்தானே! என்கின்றார் லோஷன். இல்லை இந்தப்போட்டியில் வெல்பவருக்கு இலட்சரூபா பரிசு என்று யாரோ அதுக்குள்ள ஒரு பதிவு போட்டிருக்கின்றாங்கள் அதுதான்…
சிதறல்கள் ரமேஸை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே மேடையில் இருந்து இறங்கி தனது இருக்கையில் வந்து இருக்கின்றார் சுதா.

அடுத்த போட்டியாளராக நாம் இங்கே அழைப்பது காதல் உணர்வு கொப்பளிக்க, மோகன மயக்கத்தில் இருக்கும் சக பதிவர் மருதமூரான்.
மருதமூரான் பாடுங்கள் உங்கள் அபிமானப்பாடலை…
ஒரு சிரிப்புடன் மைக்கை வாங்கும் மருதமூரான்..
“என்காதல் சரியா தவறா? பீல் மை லவ்!!!”

அருமை அருமை..ஸ்ருதி பிசகாமல் அனுபவித்துப்பாடினீர்கள். உங்கள் காதலை காதலி மட்டும் இன்றி உங்கள் நண்பர்களும் உணரவேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை பல தடவைகள் கவனித்து இருக்கின்றேன். தேனீர்க்கோப்பைக்குக்கூட அதிக முத்தம் கொடுப்பரல்லவா நீங்கள்..!
மருதமூரானின் உணர்வோட்டமான பாடலில் ஈர்க்கப்பட்ட ரமேஸ் மணியை ஒலிக்கவிட மறந்துவிட்டதால், கூல்போய் நீங்கள் பாடவேண்டிய எழுத்து “கூ”

கூக்கூ என்று குயில் கூவாதோ…கூக்கூ என்று குயில் கூவாதோ…கூக்கூ என்று குயில் கூவாதோ…கூக்கூ என்று குயில் கூவாதோ…கூக்கூ என்று குயில் கூவாதோ…

அப்பா இப்படியே 47 தடவைகள் குயில் கூவாதோ என்று மட்டும் பாடிவிட்டீர்கள். அங்காலே போவதாக இல்லை. வசனங்கள் மறந்துபோச்சுபோல! எனவே…என்று லோஷன் சொல்வதற்கு முதலே.. சிரிப்புடன், லோஷனை ஒரு நன்றிப்பார்வை பார்த்துவிட்டு, தன் மொபைலை கிண்டிக்கொண்டே இறங்குகின்றார் கூல்போய்..

அடுத்து மேடையில்..நாம் அழைப்பது.. சுபாங்கன்..
வாருங்கள் சுபாங்கன்…
என்ன அபிமானப்பாடலை பாடவேண்டுமா? சரி பாடுறன்.
“குன்றத்திலை குமரனுக்கு கொண்டாட்டம்”
“கொ” என்ற இடத்தில் ரமேஸ் மணியை ஒலிக்கவிட்டார் எனவே என லோஷன் இழுக்கும்போதே.
வெரி சொறி பொஸ். இவ்வளவு நாளாக நான் மியூசிக்கை மட்டும்தான் இரசித்தேன். ஆனால் இந்த இரும்பிலே ஒரு இருதயம் முளைத்தபின்னர்தான் வசனங்களை இரசிக்கதொடங்கினேன். எனவே இந்தப்போட்டியில் இருந்து விடைபெறுகின்றேன் என்றார் மருதமூரான்.

நல்லது அடுத்து நாம் அழைப்பது பதிவர் கோபி. வாருங்கள் கோபி.
கோபி இருந்த இடத்தில் இருந்து முகத்தை பின்பக்கம் திருப்பிக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றார். பின்னால் இருந்து அனுதினன், நிருஜா, ஆதிரைபோன்றோர் கோபியை மேடையை நோக்கி தள்ளுகின்றார்கள்.
அண்ணை நான் இந்த விளையாட்டுக்கு இரசிகன். இறுதியில் வேண்டும் என்றால் இந்தப்போட்டியை அனலைஸ் பண்ணி எழுதிதாறன். நான் வரவில்லை பவனை கூப்பிடுங்கள்.
பவன் மேடைக்கு வாருங்கள் என்கின்றார் லோஷன்.
மேடைக்கு வந்த பவன்… அண்ணே ஸ்கிரீனிலை படத்தை போடுங்கள் அப்பதான் நான் பாடுவேன்.

ஆஹா.. இப்பவே கண்ணை கட்டுதே என்கின்றார் லோஷன்.
அடுத்து பதிவர் நிரூஜா
….
ஆணென்ன பெண்ணென்ன நான் என்ன நீயென்ன எல்லாம் ஓரினம்தான்….
ஓகோ அதுதான் பெண் பெயரில் எழுதுறிங்களோ என்று கேட்டார் சுபாங்கன்.
சுபாங்கனிடமிருந்து மைக்கை பிடுங்கிய லோஷன்..இங்க கொமன்ட் பண்ணுவது நான்தான் போட்டியாளர்கள் பண்ணக்கூடாது. மணி அடிக்கவிட்ட ரமேஸை காணவில்லை. உங்கள் அனைவரினதும் பாடல் இரசனையை கேட்டால் நான்கு நாளுக்கு ரூம்போட்டு அழவேண்டும் போல் உள்ளது.

சரி.. சுபாங்ஸ்.. நீங்கள் பாடுங்கள் “கு”
அப்படி போடுங்கண்ணே…கனநேரமாய் தொண்டைக்குள்ள நிக்குது..
“குழந்தை வாயை முகர்ந்ததுபோன்ற கடும் நாற்றமில்லாத வாயும்வேண்டும்
காமக்கழிவுகள் கழுவும்போதும் கூட நின்றவள் உதவிடவேண்டும்”

ஐயா…அது பாட்டும் இல்லை ஐயா..அதோடு அது முதல் வரிகளும் இல்லை என்று கத்தியே விட்டார் லோஷன்.
விடைபெறுகின்றேன் வணக்கங்கள்.. அடுத்து நாம் அழைப்பது வரோதயன். நிகழ்ச்சியை பார்க்க பின்னால் இருந்ததனால் தெரியாதகாரணத்தால், அங்கே இருந்த கப்பு ஒன்றில் ஏறி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வரோ திடுக்கிட்டு கீழே குதித்து…
ஆத்திசூடி..ஆத்திசூடி..யூமே ஆத்திசூடி…என்று பாடியபடி மேடைக்கு வந்து பாடுகின்றார்.
என்ன அதிசயம்…நிரூஜாவும், வரோவும் ஏட்டிக்குப்போட்டியாக அடுத்தடுத்து பாடல்களை அடுக்கினார்கள்.
ஓவ்வொருமுறையும் யாராவது தோற்றுப்போவார்கள் அடுத்தது நான் என்று இருக்கையில் இருந்து எழுந்து எழுந்து அனுதினன் ஏமாந்துபோனதுதான் மிச்சம்.

நல்லது பதிவர்களே இந்த இருவரையுமே வெற்றிபெற்றவர்களாக அறிவித்து இந்த போட்டியை என் பாடல் ஒன்றோடு நிறைவேற்றிக்கொள்கின்றேன். என்றுவிட்டு
“மரி மரிநின்னே முரலிட” என்று கண்களை மூடிக்கொண்டே பாடுகின்றார் லோஷன்.
பாடலின் இறுதியில் உச்ச ஸ்தாயியில் மரிமரிநின்னே..மரிமரிநின்னே….
என்று பாடிவிட்டு மேடையை பார்த்து அதிர்கின்றார் லோஷன்.

Saturday, November 20, 2010

மறந்து போகா நகைச்சுவைகள்…


நகைச்சுவைகள் பல தரப்பட்டவை. சில நகைச்சுவைகள் எந்தக்காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடிய அற்புதமான நயம்கொண்டவை. சில கால ஓட்டத்தில் மறைந்து போகக்கூடியவை. இதில் பழைய நகைச்சுவைகள் பிரதானமானவை. அவைகளில் சில தலைமுறைகளுக்கு கடத்தப்படாமல் மறைந்துபோயும் உள்ளன.
அண்மையில் நண்பர்களுடன் இருந்து அரட்டை அடிக்கும்போது இந்த பழைய கால நகைச்சுவைகள் பற்றி நீண்ட நேரம் பேசவேண்டி இருந்தது. அதில் எங்கள் மழலைக்காலங்களில் பெரியவர்கள் எங்களுக்கு சொன்ன நகைச்சுவைகள் பலவற்றை நினைவு படுத்தி சிரித்து மகிழ்ந்தோம்.
அவ்வாறான நகைச்சுவைகள் இன்றைய தலைமுறையினருக்கு கடத்தப்பட்டதோ என்ற ஐயம்வேறு வந்தது. பேசும்போது ஒரு நண்பர் ‘இந்த கதைகளில் சிலவற்றை பதிவாகப்போடலாமே’! என்று எடுத்து கொடுத்தார்.
ஆகவே அந்த காலத்தில் நாங்கள் கேட்ட சில நகைச்சுவைகளை பகிரலாம் என நினைக்கின்றேன். ஏற்கனவே கேழ்விப்பட்டிருந்தால் மீண்டும் ஒரு தடவை சிரியுங்கள்,
கேழ்விப்படவில்லை என்றால் இந்த சொற்களை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள்தான்..ஆம் உங்களிடம்தான் இவை மறுபடி சென்றடையவேண்டும் என்பது விதி!!

ஆரகரா..செம்பச்சோதி
இரண்டு கைராசிக்கார திருடர்கள், ஒரு வைர வியாபாரியிடம் இருந்து பெருமளவிலான மிகப்பெறுமதிவாய்ந்த வைரங்களையும் கற்களையும் திருடிக்கொண்டு, ரெயிலில் ஏறி குறிப்பட்ட ஒரு இடத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஏறிய காம்பவுண்டுக்குள் ஒரு நாடக்குழு சென்றுகொண்டிருந்தது. இவர்கள் ரெயிலில் ஏறி போகும் விடயம் எப்படியோ பொலிஸாருக்கு தெரிந்து அடுத்த ஸ்ரேசனில் இவர்களை பிடிக்க பொலிஸார் ஆயத்தமாக இருந்தனர். தூரத்தில் ரெயில் வரும்போதே பொலிஸாரை பார்த்துவிட்ட திருடர்கள் அந்த நாடகக்குழுவினரிடமிருந்த முனிவர்கள் வேடமிடும் இரண்டு உடைகளை அணிந்து முனிவர்களாகவே மாறியிருந்தனர். ஒருவன் தனது யடாமுடியினுள் வைரத்தை ஒழித்துவைத்தான், மற்றவன் முனிவர் கையில் வைத்திருக்கும் செம்புக்குள் வைரங்களை ஒழித்துவைத்திருந்தான்.
சோதனை போட்டுக்கொண்டு வந்த பொலிஸார் இவர்களிடம் வந்ததும், இவர்கள் உண்மையான சுவாமிகள் என நினைத்து யடாமுடிக்குள் வைரத்தை வைத்திருந்தவனிடம் ஆசீர்வதம் பெற்றனர். முனிவர் என்றால் ஏதாவது சொல்லவேண்டும் அல்லவா? அவனும் “அரகரா செம்பச்சோதி” என்று சொல்லிவிட்டு மற்றதிருடனைப்பார்த்து கண்ணடித்தான். மற்றவன் திடுக்கிட்டான்!! என்னடா இவன் செம்பை சோதிக்க சொல்கின்றான்!! ஏனெனில் மற்றவன் செம்பில் அல்லவா வைரங்களை ஒழித்துவைத்திருந்தான்! போட்டாடா குடுக்கிறாய்!!! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பொலிஸார் தன்னிடம் வந்தபோது “அரகரா சடையச்சோதி” என்றான் மற்ற திருடனைப்பார்த்தவாறு.. பிறகு என்ன இருவருமே பொலிஸாரிடம் பிடிபட்டதுதான் மிச்சம்.

எல்லாமே பின்பக்கம்..
ஒரு ஊரில் ஒரு பூசகர் இருந்திருக்கின்றார். அந்த ஊரில் அவர் மட்டும்தான் பூசகர் என்பதனால் அவர் படு பிஸியான ஆள். பல கோவில்களிலும் அவரே பூசகராகவேறு இருந்திருக்கின்றார். குறிப்பிட்ட ஒரு கோவிலில் மட்டும் தர்மகத்தா படு ஸ்ரிக்ட்டான ஆள். நேரம் தவறக்கூடாது. ஒரு கிருத்திகம் செய்ய பூசகர் சென்றிருக்கின்றார், குறிப்பட்ட அந்த கோவிலுக்கு பூசைக்கு செல்லவேண்டிய நேரம் அண்மித்து விட்டது. உடனடியாக வீடுவந்து அவசரமாக குளித்துவிட்டு வேட்டியை உடுத்திக்கொண்டார் பூசகர், வேண்டிக்கரை பின்பக்கமாக அமைந்துவிட்டது. நேரம் போய்க்கொண்டிருந்தபடியால் பறவாய் இல்லை என்று மனதுக்குள் நினைத்துவிட்டு ஜிப்பாவை அணிந்துகொண்டார் அவசரமாக. அதுவும் பின்பக்கமாக போய்விட்டது. பறவாய் இல்லை முதலில் கோவிலுக்கு சென்றுவிடவேண்டும் என்ற அவசரத்தில் ஓடிவந்து, தனது “லம்பிரட்டா” ஸ்கூட்டரை உதைந்துகொண்டு உச்ச வேகத்தில் சென்றுகொண்டிருந்தார் பூசகர். ஒரு வளைவில் ஒரு பெரிய பஸ் வர, பலன்ஸ் தவறி அருகில் இருந்த வயல் வரம்புடன் மோதி அதிர்ச்சியில் மயக்கமடைந்துவிட்டார் அவர்.
இதை கண்டு வயலிலே வேலை செய்துகொண்டிருந்த ஊர்மக்கள் கூடிவிட்டனர். பூசகரை ஓடிவந்து பார்த்த மக்கள்! பெருங்குழப்பத்துடன் பார்த்தனர்.
அதில் ஒருவர் “அடி பட்டதும் ஐயாவின் தலை திரும்பிவிட்டது” என்று சொல்லி, பூசகரின் தலையை மற்றப்பக்கம் திருப்பிவிட்டார்.. அட..பேப்பயலுகளா என்றவாரே பூசகர் வானத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஆவியாக.

மரக்கட்டை
இரண்டு ஊர்களின் மத்தியில் அடர்ந்தகாடு ஒன்று இருந்திருக்கின்றது. அந்தக்காட்டில் பெரும் கொள்ளைக்காரர்கள் இருந்திருக்கின்றார்கள். மேற்படி இரண்டு ஊர்களுக்குக்கிடையில் போக்குவரைத்து என்றால் இந்த காட்டை தாண்டியே ஆகவேண்டிய நிலை இருந்திருக்கின்றது.
இந்த நிலையில் இரண்டு ஊர்களில் உள்ள தம்பத்தியினருக்கு திருமணம் நடந்திருந்தது. புது மாப்பிள்ளை பெண்வீட்டில் இருக்கின்றார். சீதனப்பணத்தை வாங்கிக்கொண்டு உடனடியாக வரும்படி அவரது தாயாரிடமிருந்து மாலை மங்கும் நேரத்தில் செய்தி வருகின்றது. பெண் வீட்டார் எவ்வளவு சொல்லியும் புதுமாப்பிள்ளை அம்மா சொல்லை தட்டமாட்டேன் பணத்தை கொடுங்கள் நான் போயே ஆகவேண்டும் என்றிருக்கின்றார். எனவே பெண் வீட்டுக்காரர்களும் தனியாப்போகவேண்டாம் உங்கள் புது மனைவியின் ஆசைத்தம்பி, உங்கள் மைத்துனனையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள் காவலுக்கு என்றிருக்கின்றனர்.
அவனோ “ஆடு பறக்கிறது என்று சொன்னாலும் அண்ணாந்து பார்க்கின்ற படு முட்டாள்”. சரி என்று அவனையும் கூட்டிக்கொண்டு சென்றிருக்கின்றார். கடும் இருள் சூழ்ந்துவிட்டது. அத்திம்பேர்..பாதையே தெரியவில்லை இதற்கு மேல் என்னால் நடக்கமுடியாது பேசாமல் இங்கேயே படுத்துவிட்டு காலையில் போவோம் என்றிருக்கின்றான் அவன். புதுமாப்பிள்ளைக்கும் சோர்வு மிகுதியால் சரி..இங்கேயே படுப்போம்..ஆனால் ஒன்று இங்கு திருடர்கள் அதிகமாம் என்னிடம்வேறு ஒரு இலட்சம் ரூபா இருக்கு..ஒன்று செய்வோம் நீ உன் பைக்குள் 50 ஆயிரத்தை வைத்திரு. இரண்டுபேரும் அருகில் இருக்கும் புதருக்குள் மறைந்து படுத்திருப்போம் என்று அவனிடம் அரைவாசிப்பணத்தையும் கொடுத்து. புதர்மறைவில் படுத்துக்கொண்டார்கள். புதுமாப்பிள்ளை கழைப்பினால் தூங்கிவிட்டார். ஆனால் மைத்துனனுக்கு தூக்கம் வரவில்லை. எறும்புகள்வேறு கடிக்க தொடங்கவே. வீதியில்த்தான் யாரும் போகவில்லையே பேசாமல் அங்கேயே படுப்போம் என்றுவிட்டு, நடு வீதியில்போய் படுத்து நித்திரை ஆகிவிட்டான்.

சிறிது நேரத்தில் திருடர்கள் வந்துகொண்டிருந்தனர். முன்னால் வந்த திருடன் இவன்மேல் தடக்கு பட்டு, இடறி விழ இவனுக்கு தூக்கம் கலைந்துவிட்டது. கோபமும் வந்தது. இடறிவிழுந்த திருடன் தன் தோழர்களிடம் “பார்த்து வாங்கடா..நடுரோட்டிலை ஒரு மரக்கட்டை கிடக்கின்றது” என்றான். உடனே இவனுக்கு வந்தது இன்னும் கோபம்..
“டேய் உங்கள் ஊரில் மரக்கட்டை 50 ஆயிரத்தோடையாடா கிடக்கும்?” என்று கேட்டிருக்கின்றான். பிறகென்ன திருடர்கள் இவனை பிடித்து பணத்தை பறித்து எண்ணிப்பார்த்திருக்கின்றார்கள். அதற்கும் அவன் “சரியாகப்பார் மடையா 50 ஆயிரம் கணக்காக இருக்கும்”. என் அத்திம்பேர் கணக்கில் புலி. எனக்கு 50 ஆயிரம் தந்துவிட்டு, தான் 50 ஆயிரத்தை வைத்துக்கொண்டு அந்த புதருக்கு பின்னால்த்தான் தூங்குகின்றார் என்றானாம்;.

எம்.ஜி.ஆரா சிவாஜியா?
ஒரு இரட்டை பையன்கள் பாடசாலையில் எப்போது பார்த்தாலும் ஒருவன் எம்.ஜி.ஆர்தான் சிறந்த நடிகன் எனவும், மற்றவன் இல்லை சிவாஜிதான் சிறந்த நடிகன் என்று சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். இவர்களின் சண்டை ஒவ்வொருநாளும் தொடரவே மற்ற மாணவர்களும் பாதிக்கப்படவே, ஆசிரியர் நாளை வரும்போது உங்கள் அப்பாவையும் பாடசாலைக்கு அழைத்துவாருங்கள் உங்களை பற்றி அவரிடம் சொல்லவேண்டும் என்றாராம். மற்றநாள் அவர்களின் தந்தையார் பாடசாலைவரவே, ஆசிரியரும் வாருங்கள் ஐயா..உங்கள் பையன்கள் என்ன ஒரே சினிமா பைத்தியமாக இருக்கின்றார்கள், ஒருவன் எம்.ஜி.ஆர்தான் சிறப்பான நடிகன் என்றும் மற்றவன் சிவாஜிதான் சிறப்பான நடிகன் என்றும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள் நீங்கள் சொஞ்சம் கண்டிக்கக்கூடாதா என்று கேட்டாராம். அதற்கு அந்த தந்தை..சரியாகச்சொன்னீர்கள் ஐயா..இந்த மடையன்களுக்கு புத்தியில் உறைக்கிறமாதிரி சொல்லுங்கள். என்ன தான் இருந்தாலும் அவர்கள் ரெண்டுபேரும் ஜெமினி மாதிரி வருமா? என்று கேட்டால் புரியமாட்டுதென்கிறது இவனுகளுக்கு என்றாராம்.

இப்படி பல கதைகளை கூறிக்கொண்டே போகலாம் அனால் எழுதுவது சிரமம் அல்லவா? கண்டிப்பாக சிரித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

Friday, October 8, 2010

உடையுதிர்காலம் -இறுதிப்பாகம்

கூல்போயின் மொபைலில் “விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி” என்று கலைவாணரின் பாடல் “ஃபக் மியூசிக்காக” ஒலிக்க சுபாங்கன் தனது டைம் மெஷினை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொண்டிருந்தான்.
டேய்..கூல்…எவ்ரிதிங் ஓகேடா! இந்த டைம் மிஷினாலை உன் பாஸ் எங்கயோ போகப்போறேன்டா என்றான் சுபாங்கன்.
ஆமா பாஸ்..நீங்க இவ்வளவு கஸ்டப்படுறதை பார்த்தா எவ்ரிதிங் டபிள் ஓகே போலத்தான் தெரியுது.
பட் வன்திங்.. நான் கதைகளாக வாசித்த டைம் மெஷின் பற்றிய கதைகள் எல்லாம் விபரீதத்தில் மாட்டிக்கொள்வதாகவே இருந்ததுதான் உதைக்குது.
போடா…அதெல்லாம் கதைகளில்த்தான். இங்க இந்த சுபாங்கன்ட விஸ்பரூபத்தை நீ இன்னும் கொஞ்சநேரத்தில பார்க்கப்போகின்றாய் என்றான் சுபாங்கன் முகம் முழுவதும் பெருமிதத்துடன்.

டைம் மெஷின் பற்றி உனக்கு தெரிந்தவைகளை சொல்லு கூல். இல்லை வேண்டாம் நீ என்னையே குழப்பி விடுவாய்.
சார்ள்ஸ் டன்னின் “எக்ஸ்பெரிமன்ஸ் வித் டைம்” படித்திருக்கின்றாயா? அல்லது அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றாயா?
இல்லை பாஸ். ஆனால் நீங்க என்ன பாஸ் திடீர் என்று எக்ஸ்பெரிமண்ட்ஸ் வித் டைம் பற்றி எல்லாம் பேசுறீங்க?
டேய் முதல் நாங்க பார்த்தது ஆமானுச சம்பந்தமான விடயம். சோ..கொஞ்சம் திகில் தேவை இப்ப சயின்ஸ்பிக்ஸன்டா, அதுவும் டைம் மெஷின் பற்றியது ஆகவே இப்படி எல்லாம் பேசவேண்டும். அதுதான்.
ஓகே..பாஸ்..அங்காலை சொல்லி நீங்க கஸ்டப்படவேண்டாம்…
என்னால் இடம், வலம், மேல், கீழ், முன், பின், சகல திசைகளிலும் என்னால் முப்பரிமானத்தை உணரமுடிகின்றது.
எப்படி அது சாத்தியம் என்றால் நான் ஒரு நான்கு பரிமாண ஆசாமி.
நான்காவது பரிமாணம் காலம்… இப்படித்தானே சொல்லப்போறீங்க பாஸ்? என்றான் கூல்போய்.
வர வர, நீ ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுறாய்டா என்றான் சுபாங்கன்.

சரி ரொம்ப சஸ்பென்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது பாஸ். எந்திரன் படத்திலை சுப்பர் ஸ்ரார் எந்திரனை செட்பண்ணும்போதே இன்ருடியூஸ் ஆகிறாப்போல நீங்களும் டைம் மெஷினை செட் பண்ணும்போதே அந்த டைம் மெஷினுக்கு ஒரு இன்ருடியூஸ் கொடுப்போம் என்று விட்டு.
புதிய மனிதா பூமிக்குவா…என்ற பாட்டின் மியூசிக்கை ஒலிக்கவிட்டான் கூல்போய்..
இதோ என் டைம் மெஷின், இதனால் நான் அமரன் என்று பாடிக்கொண்டே டைம்மெஷினை றீசெட் பண்ணுகின்றான் சுபாங்கன்.


சரி பாஸ்..நீங்க இப்போ எந்தக்காலத்திற்கு போகப்போவதாக உத்தேசம்?
போகப்போறேன் அல்ல போகப்போறோம்! நீயின்றி நானா? வாடா சங்கிலியன்ட காலத்திற்கு போய் பார்க்கலாம் நம் இறுதி மன்னன் அல்லவா? சோ வீ காவ் ரு கோ இயர் 1505 என்றான் சுபாங்கன்.
ஓகே பாஸ்..எவ்வளவோ பண்ணிட்டோம். இதை பண்ணமாட்டோமோ என்ன?
என்றாலும் டைம் மெஷின் பற்றி கனக்க தகவல்களை திரட்டி பரிசோதனைகூட செய்திருப்பீங்க.. என்றாலும் இதில் உங்களுக்கு ஏதாவது டவுட் இருக்கா பாஸ்?
ஆமாடா…ஒரே ஒரு டவுட். எனக்கு மரணகாலம் இன்று என்று வைத்துக்கொள் நான் டைம்மெஷினில் பல ஆண்டுகள் முன்னுக்கு சென்றுவிட்டால் என்ன ஆகும்?
தப்பித்து விடுவேனா? அல்லது அங்கேயும் அந்த நேரத்தில் எனக்கு மரணம் சம்பவிக்குமா என்பதுதான்டா அந்த டவுட்!
சபாஷ். பாஸ்! காமடி இல்லாமல் அற்புதமான டவுட் ஒன்று உங்களுக்கு வந்திருக்கு… சரி வாங்க நாம் புறப்படுவோம் 1505ற்கு..
அழுத்துங்கள் டைம்மெஷினில் 1505ஐ, அமத்துங்கள் தன் செயற்பாட்டு பட்டனை.

அந்தநேரம் சுபாங்கனின் மொபைலில் “அவனே என்னை ஆட்டுகின்றான்” என்றுவிட்டு கந்தரனுபூதி பாடியது. யாராடா இது என்று விட்டு எடுத்து ஹலோ என்றான் சுபாங்கன்.
அடியேன் தங்கமுகுந்தன் தொடர்புகொள்ளும் சுவிஸ் நேரம் அதிகாலை 05.55 நிமிடம் என்று பதில் வந்தது.
ஓ…தங்கமுகுந்தன் அண்ணாவா சொல்லுங்கோ என்றான் கூல்போய்!
என்னடாப்பா இரண்டுபேரும் சேர்ந்து கலக்கிறியளாம், ஏதோ ஆவி திரத்தினியளாம், இப்ப டைம் மெஷின்ல போகப்போறியளாம்! என்றார்.
ஓமண்ணா..சரியான நேரத்திற்குத்தான் எடுத்திருக்கிறியள். நாங்க இப்ப 1505 அதாவது சங்கிலியன்ட காலத்திற்கு போகப்போறம். என்றான் சுபாங்கன்.
சரியாப்போச்சு. அப்ப அந்தக்காலத்தில செம்பகப்பாடினியார் என்ற ஒரு கவிஞர் இருந்தாராம் அவர்ட எழுத்துக்கள் ஏதாவது இருந்தால் எடுத்துக்கொண்டு வாருங்கோடா தம்பியவை என்றார் தங்கமுகுந்தன்.
சரி அண்ணை. புறப்படநேரமாச்சு. இது ரகசியமாக இருக்கட்டும். உங்களுக்கு தெரிந்தது போகட்டும் இனி வேறு எவருக்கும் சொல்லாதையுங்கோ என்றுவிட்டு, புறப்பட ஆயத்தனமானார்கள் இருவரும்.


சரி அண்ணை. எப்படி இதை செலுத்துவது? சங்கிலியன் காலத்திற்கு தானே? எதுக்கும் பருத்தித்துறை வீதியாலை போறது சோர்ட் கட் என்றான் கூல்போய்.
1505 ஐ திரையில் அழுத்தி, சிவப்பு பட்டனை அமத்தினர் இருவரும்.
ஒரு நிமிடம் இருக்கும் இருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. குளிர், வெப்பம், நனைவு, தட்பவெப்பம் என்பன அந்த ஒரு நிமிடத்திற்குள் மாறி மாறி உணரப்பட்டன. ஏதேதோ சத்தங்கள், யார்யாரோ பேசுவது எல்லாம் கேட்டது.
இறுதியில் தள்ளப்பட்ட உணர்வுடன் ஒரு இடத்தில் நின்றது மெஷின்.

நினைத்ததைவிட யாழ்ப்பாணம் அன்று மிக மிக அழகாகவே காணப்பட்டது. தூரத்தே குதிரைகளில் போர் வீரர்கள் வந்துகொண்டிருந்தமை தெரிந்தது.
மண் பானைகளில் சில பெண்கள் தண்ணீர் முகர்ந்துகொண்டு வந்தார்கள். இவர்கள் இரண்டுபேரையும் கண்டவுடன் பானைகளை போட்டு உடைத்துவிட்டு வீரிட்டுக்கொண்டு ஓடினார்கள்.
இந்த அமர்க்களத்தில் குதிரையில் வந்த வீரர்கள், அவசரமாக ஓடி வந்து இவர்களை உற்றுப்பார்த்துவிட்டு, ஏ…காண்மின்..பறங்கிகன் இவ்விடமும் உட்புகல்கொண்டான் என்று ஈட்டியால் இவர்களை குத்தவந்தனர்;.
இல்லை! யாம் பறங்கிகள் அல்லர். உம்மினத்தவரே. ஐந்து நூற்றாண்டுகளின் பின் இருந்து வந்தோம் என்று கத்தினான் கூல்போய்..குத்த வந்தவன் நின்றான்.
யாம். மன்னன் சங்கிலியனை காணவேண்டும் தயவுசெய்து அழைத்து செல்லுங்கள் என்றான் சுபாங்கன்.

அருகில் வந்த அந்த கூட்டத்திற்கு பெரியவன் சுபாங்கனுடன் நீர் செப்பும் தமிழ் சற்று திரிபடைந்ததே என்று ஏதோ பேசினான். அதற்குள் டைம்மெஷினை அருகில் தெரிந்த புதர் ஒன்றினுள் மறைத்துவிட்டு அடையாளம் இட்டுவிட்டு வந்தான் கூல்.
சங்கிலி மன்னனிடம் அழைத்து செல்ல உடன்பட்டுவிட்டார்கள் என்றான் சுபாங்கன் கூல்போயிடம்.
போகும்வழியில் அழகிய பொய்கை ஒன்றை கண்டனர் டேய்..இதுதான்டா யமுனா ஏரி என்று இரகசியமாகச்சொன்னான் சுபாங்கன்.
சற்று தூரத்தில் அழகிய அரன்மனை ஒன்று தெரிந்தது. அங்கே இருவரும் அழைத்து செல்லப்பட்டு இருக்கை ஒன்றில் அமரவைக்கப்பட்டனர். பெண் ஒருத்தி வந்து கை அலம்புக உணவு புக என்றாள். இருவரும் கை கழுவிட்டு வந்திருந்தனர். சுடச்சுடச்சோறும், கத்தரி, பாகல், பயிற்றங்காய் கறிகளுடன் உணவு பரிமாறப்பட்டது. பாஸ்.. நான் ஏதோ கனிகள் பழங்கள் தான் தருவார்கள் என்று நினைத்துவிட்டேன் என்றான். சாப்பிட்டு இருவரும் சுவையான ஒரு பானம் அருந்தினர். இப்போதைய ஒரேஞ் கிரஸ்போலவே இருக்கு என்றான் கூல்போய்.

சங்கிலி மன்னனை சந்திக்க அழைப்பு வந்தது. இருவரும் உள்ளே அழைத்துவரப்பட்டனர். உயர்ந்த இடம் ஒன்றில் பெரிய இராஜ சிம்மாசனத்தில் சங்கிலி மன்னன் உட்கார்ந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு மீண்டும் சங்கிலியனை உற்றுப்பார்த்தனர்.
பாஸ்..சங்கிலியனைப்பார்த்தால் நம்ம வரோ போலவே இருக்கு என்றான் கூல்போய்.
ஆளை மட்டுமாடா பார்த்தாய் சிம்மாசனத்திற்கு மேலே என்ன எழுதியிருக்கு என்று ஒருமுறை பார் என்றான் சுபாங்கன். ஆம் அங்கே “அகசியம்” என்று எழுதப்பட்டிருந்தது.

டைம் மெஷின் பற்றி, நூற்றாண்டுகள் பற்றி, விஞ்ஞானம் பற்றி, யாழ்ப்பாணம் 1505ற்கு பின் என்று பலவற்றையும் சங்கிலியனுக்கு புரியவைத்தனர் இருவரும்.
ஆ…என் மண், ஐந்து நூற்றர்டின் பின்னும்…என்று அழுதான் சங்கிலியன்.
சற்று தொலைவில் பீரங்கிகள் ஒலி கேட்டது.
நண்பர்களே பறங்கியர் எம் அருகில் வந்துவிட்டனர். எம் வீரர்கள் தம்மிடமுள்ள ஆயுதங்கள் கொண்டு இறுதிவரை போராடுவார்கள். என் மரணம் எனக்கு புரிகின்றது.
அதன் முன்னர் நீங்கள் பத்திரமாக திரும்புங்கள் என்றான் சங்கிலி மன்னன்.
நண்பர்களே எனக்கு இருக்கும் ஒரே ஒரு கவலை. என் சுயசரித்திரத்தை நானே எழுதவேண்டும் என்பது என் கனவு. அது நிறைவேறாமலே நான் சாகப்போகின்றேன் என்றான்.
கவலைவேண்டாம் மன்னா! உங்கள் இந்த கனவு உங்கள் பல பிறப்புகளின் பின்னர் 2010 காலங்களில் நிறைவேறும் என்று விட்டு இடம் தெரியாமல் சிரித்தான் கூல். சுபாங்கன் முறைத்துப்பார்க்க எங்கேயோ பார்த்து சாமாளித்தான்.

பீரங்கிச்சத்தங்கள் மிக அருகில் கேட்கத்தொடங்கின. நண்பர்களே பறங்கியர்கள் நம்மை அண்மித்தனர் என நினைக்கின்றேன். நீங்கள் பத்திரமாக சென்றுவிடுங்கள் என்று ஆணையிட்டுவிட்டு, ஈட்டியும் கேடையமும் எடுத்து போருக்கு புறப்பட்டான் சங்கிலியன்.
இனிமேலும் இங்கிருந்தால் நிலமை மோசமாகும்டா கெதியா டைம்மெஷின் பக்கம் ஓடுவோம் என்றுவிட்டு, கூல்போயை திரும்பி பார்க்காமல் தலை தெறிக்க ஓடினான் சுபாங்கன். ஓடிவந்து டைம் மெஷின் இருந்த இடத்தை அடைந்து பார்த்தபோது, நாங்கை தொங்கப்போட்டுக்கொண்டு இளைப்பு வாங்க மூச்சிழுத்துக்கொண்டிருந்தான் கூல்போய்.
ரைம் மெஷினை எடுத்து கெதியா திருப்படா என்றான் சுபாங்கன்.
முடியவில்லை…..
பாஸ்…சொதப்பிட்டோமே பாஸ்..என்று தலையிலை கையை வைத்தான் கூல்போய்.
ஏனடா என்றான் சுபாங்கன் பதபதைப்புடன்?
“எக்ஸ்பெரிமன்ஸ் வித் டைம்” பற்றி எல்லாம் கதைத்தீங்க பாஸ்..இந்த கதையின் ஆரம்பத்தை மறந்துவிட்டீங்களே…போச்சு எல்லாம் போச்சு என்றான்…
கொலையுதிர்காலம் 01
சக்ஸஸ்..சக்ஸஸ்…என்று இரண்டு வயர்துண்டுகளை V வடிவமாக வைத்துக்கொண்டு சிவாஜி கணேசன் கணக்காக கதைக்குள் எண்டர் ஆகின்றான் சுபாங்கன்.
அப்படி அவன் கத்தியதற்கு காரணம் “கால இயந்திரம்” ஆம் அவனால் பின்பக்கமாக கடந்த நூற்றாண்டுகளுக்கு செல்லக்கூடிய ஒரு டைம் மெஷின் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. அதுதான் அந்த கத்தல்.

ஓகோ…இன்னும் முன்னுக்கு முன்னுக்கே நாம் போக முடியுமே தவிர மீண்டும் திரும்ப முடியாதுடா! சீ..உனக்குகூட இந்த சந்தேகம் வரவில்லையேடா…
எப்படிடா தப்புறது?
நோ சான்ஸ்…பாஸ்! ஒரே ஒரு சான்ஸ் மட்டும்தான் உண்டு. ஜனா அண்ணாவை ஏதாவது செய்யக் சொல்வதே.
“ஏதாவது செய்யுங்கள் அண்ணே பிளீஸ், முதல்ல எங்கள் இரண்டுபேரையும் பழைய இடத்திற்கே கொண்டுவந்து விட்டுடுங்க”
பேரிரைச்சலுடன் ஒரு பெரிய மெஷின் வருகின்றது அதில் ஜனா இருந்து இரண்டுபேரையும் சைகையால் அழைக்கின்றார். இதோ கண்முன்னாலே பறங்கியர் வீரர்களையும் மக்களையும் கொன்று குவிப்பது தெரிகின்றது. இருவரும் குறிகள்வேறு வைக்கப்படுகின்றனர்.
பல வேட்டுக்களுக்கு தப்பித்து அந்த டைம் மெஷினை அடைகின்றார்கள். இதோ அது ஜிவ் என்று கிளம்பகின்றது.

மீண்டும் பழைய இடம், பழைய சூழல். அப்பாடா என இரண்டு பேரும் மூச்சுவாங்குகின்றார்கள். சந்தேகம் தாளாமல் கூல் மேசையில் இருந்த வலம்புரி பேப்பரை எடுத்து பார்க்கின்றான். அதில் தேதி 08.10.2010 என்று இருக்கின்றது.
இப்போதுதான் முழுமையாக அப்பாடா என்றான் சுபாங்கன்.
அப்பாடா பெரிய ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றிவிட்டீங்க ஜனா அண்ணா என்று ஜனாவின் தோழில் தட்டுகின்றான் சுபாங்கன்.
“டொங்” என்று ஒரு சத்தம், ஆம் அது மனித தசை இல்லை.
வடிவாக உற்றுப்பார்த்து ஜனா அண்ணே என்கின்றான் சுபாங்கன்..
ஹலோ வேர்ள்ட்…ஐம் நொட் ஜனா.. ஐம் விலேஜ். ஸ்பீட் ஒன் தெராஹெட்ஸ், மெமறி வன் ஸிட்டா பைட்.

ஆஹா…என்றான் கூல்போய்.. அப்போ ஜனா அண்ணா எங்கே என்கின்றான் சுபாங்கன்?
அங்கே இருக்கும் சுவரில் இருவருக்கும் விஸ்வல் செய்துகாட்டுகின்றான் விலேஜ்.
அதில்…..
ஜெஸ் நான் இதை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

முற்றும்.

Friday, September 24, 2010

உடையுதிர்காலம் - பாகம் -04


மயங்கிவிழுந்த சுபாங்கனை சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு சென்று கட்டிலில் படுக்கவைத்தான் கூல்போய். அவரசரமாக பக்கத்தில் இருந்த தேனீர் குடுவையில் இருந்த தண்ணீரை அப்படியே தூக்கி சுபாங்கனின் முகத்தில் ஊற்றினான்.
அடேய்..நாதாரிப்பயலே என்று முகத்தை பொத்திக்கொண்டு குளறினான் சுபாங்கன்.
அப்போதுதான் பார்த்தான் கூல்போய்.. தேனீர்க்குடுவை இவ்வளவு நேரமாக கீற்றரிலேயே இருந்தது தெரிந்தது.

ஐயோ ..ஐயோ என்றுகொண்டே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான் சுபாங்கன்.
பாஸ்…எதுவும் வேண்டும் என்றே நடப்பதில்லை. உங்களை மயக்கத்தில் இருந்து காப்பாற்றவேண்டும் என்ற துடிப்பில் நான் அது சுடுதண்ணீர் என்பதை கவனிக்கவில்லை பாஸ் என்றான் கூல்போய்.
போடா குரங்கு… உன்னை அப்புறம் வச்சுக்கொள்ளுறன்..!
பாஸ் அப்படி எல்லாம் மனதில் வஞ்சத்தை வளர்ததுக்கொள்ளாதீங்க. அப்புறம் நாம காக்கா நரி கதையில வாற கக்காநரி ஆகிடுவோம் என்றான் கூல்போய்.
அது என்னடா காக்கா நரி கதை!!
இல்லை பாஸ்..காக்கா நரி கதை இல்லை இது கக்காநரிக்கதை,
அனுதின ஆனந்தா சுவாமிகள், அனுதின ஆனந்தசுவாமிகள் என்று ஒரு சுவாமிகள் இப்போ இணையத்தில் நீதிக்கதை எல்லாத்தையும் அனுதினமும் எழுதிவாராரே தெரியாதா பாஸ் உங்களுக்கு? அவர் சொன்ன கதைதான் பாஸ் இது!!

ஆ… அப்படியா…அந்த சுவாமிகள் தன்னை பார்க்க யார் சென்றாலும் சைடாக நின்று கட்டிப்பிடித்து “நண்பேண்டா..நண்பேண்டா” என்று தான் சொல்வாராம்.
சரிடா விடுலே பாவம் பயபுள்ளை தப்பிப்போகட்டும் என்றான் சுபாங்கன்.
நீ இப்ப ரொம்ப வாசிக்கத் தொடங்கிட்டே அதுதான் ஒரு மார்க்கமா இருக்காடா!
ஆமா பாஸ். துக்கம் வந்தா யாழெடுத்து நீ வாசி என்று யாரோ சொன்னாங்க என்று இப்ப துக்கம் வந்தா நான் இணையத்தை வாசிக்க ஆரம்பித்துடுவேன் பாஸ்.
கஸ்டத்தை மறக்க இணையம் வாசிக்கப்போனால் ரமேஸ் என்று ஒரு எழுத்தாளர் படு சோக ஸ்ரேட்டஸ் எல்லாம்போட்டு என்ன அழவே பண்ணிடுறாரு பாஸ்!!
நானும் எவ்வளவு நேரத்துக்குத்தான் அழாதமாதிரி நடிக்கிறது! என்றுவிட்டு ஓ…வென்று அழுதான் கூல்போய்.
உணர்வூட்டமான வாசிப்பில் நம்மள மிஞ்சிட்டான் போல இருக்கே என்று சுபாங்கன் மனதுக்குள் நினைச்சுக்கிட்டான்.

அதை எல்லாம் விடுங்க பாஸ்! இந்த ஆவிபேய் பற்றி நீங்க என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க?
அதுதான்டா எனக்கும் பெரிய தலைவலியாக இருக்கு! பேசாமா நாம திரும்பிடலாமா? என்ட டைம் மெஸின்வேற பரீட்சித்து பார்க்காமல் இருக்கு.
அதைவிட இதுமுக்கியம் என்று வந்தோம்னா நாங்க எவ்வளவு மடப்பயலுக என்று நினைத்துப்பார்ரா!
ஆமா பாஸ்!! நாம மடப்பயலுகதான். இந்த இடத்தில் உள்ள ஆவிகதை பற்றிய முழு விடயத்தையும் நான் அறிஞ்சாச்சுபாஸ்!
திடுக்கிட்டான் சுபாங்கன்! என்னடா சொல்லுறா!!

ஆமா பாஸ்! நீங்க மயக்கத்தில் அதே இடத்தில் கிடந்தீங்க சரி, மர நிழல்தானே சாவகாசமாக படுத்திருக்கட்டும். நினைவு திரும்பும்போது விழிக்கட்டும் என்று, பக்கத்தில் குண்டுபோளை விளையாடிய பயலுகளுடன் சேர்ந்து நானும் போளை விளையாடப்போட்டன் பாஸ்.
அந்த பயலுக மூலமாகத்தான்; பல விசியங்கள் புரிஞ்சுது. சொப்பன சுந்தரி சொப்பனசுந்தரி என்ற ஒரு பெண். சுஜாதாவின் நாவல்களை வாசித்து அதிலேயே ஊறிப்போய், தன்பெயரை சில்பியா என்று வேறு வைத்துக்கொண்டு முழு சுஜாதாவின் நாவல்கள் கட்டுரைகளை படித்துக்கொண்டே இருப்பாராம்.
இறுதியாக கொலையுதிர்காலம் படிச்சிட்டு இருக்கும்போது சுஜாதாவின் மறைவு அவரை பாதிச்சிடிச்சு, தலைமைச்செயலகத்தில் கொஞ்சம் பிசகு ஏற்பட்டு, கடைசியாக படித்த நாவல்போலவே வாழ ஆரம்பிச்சுட்டாவாம். அதாங்க அந்த ஆலமரத்து ஆவிபோல!
அதைப்பார்த்துதான் இந்த சனங்கள் பயப்பட்டு போட்டுதுகள். இதுக்குள்ள துளசிகாவின் கதைவேறு இடைச்செருக்கலாக இருக்கிறதால சனங்கள் இது துளசிகாவின் ஆவிதான் என்று முடிவு கட்டிட்டுதுக.

ஆனால் சின்னப்பயலுகளுக்கு விசியம் தெரியும். பின்னாலையே போய் சில்பியாவை கவனித்திருக்காங்க. இது பேயில்லை என்றும் தெரிந்துவிட்டது. இதை பெரியவங்க கிட்ட சொன்னபோது, அடேய் அங்காலைப்பக்கமே போகக்கூடாது. இப்படித்தான் அந்த பேய், பல ரூபத்தில வந்து உங்களை அடிச்சுப்போடும் என்று, ஏன்டா போகக்கூடாது என்று சொல்லியும் அங்க போனீங்க என்று அடி வேற போட்டிருக்காங்க.

பாஸ்! அதன் பிறகு, நீங்க விழுந்த இடத்திற்கு வந்தேன் மரத்தில் இருந்து அந்த சில்பியா இறங்கி போவது தெரிந்தது. பின்னாலேயே போனேன். பக்கத்தில் உள்ள ஒரு இடிஞ்ச வீட்டிற்குள் சில்பியா போனாள். போய்ப்பார்த்தேன், அந்த இடம்பூரா ஒரு தொகை சுஜாதாவின் புத்தகங்கள். சில்பியா அங்காலபோக அத்தனையையும் பொறுக்கிக்கொண்டு வருவமோ என்று யோசித்தேன் ஆனால் செய்யவில்லை.
பாவம் ஒரு எழுத்தின் தாக்கம் இப்படியான மனுசியை உருவாக்கிவிட்டது. அதற்கு மருந்தும் அதே புத்தகங்கள்தானே பாஸ்! என்றான் கூல்போய்.

டேய்..நெஞ்சை நக்கிட்டாய்டா… இந்தா பிடி உனக்கு இன்றில் இருந்து 1000 ரூபா அதிக சம்பளம் என்று 1000 ரூபா தாளை நீட்டினான் சுபாங்கன்.
சரிடா..நமக்கு இந்த வேலையினை கொடுத்தவரை கொன்டக் பண்ணி விபரத்தை சொலிடலாம்.
இல்லை பாஸ். ஆளை பிடிக்கமுடியலை. எவ்வளவோ ட்ரை பண்ணினேன்.
இதென்னடா பிரமாதம், மூஞ்சிப்புத்தகத்தை ஆன் பண்ணி தகவல் அனுப்பு ஆள் 24 அவர்ஸ் அதிலதான் நிற்கும்.
எங்கட அடுத்த வேலை அதுதான் பாஸ்! மூஞ்சிப்புத்தகத்தில இப்ப அவர்ட எக்கவுண்டே குளோஸ் ஆகிட்டுது. இந்த சதியின் பின்னால் யார் என்று கண்டுபிடிக்கணும்.

சரிவாடா நாம போகலாம்..என் டைம் மெசினை செக் பண்ணணும்… விஞ்ஞானத்தையே திரும்பி பார்க்க பண்ணணும் என இருவரும் புறப்பட்டார்கள்.

-அடுத்து இறுதிப்பாகம் கல கல..சுபாங்கனின் டைம் மெஸினால் கூல்போய்க்கு வந்த வினை. எதிர்பாருங்கள்.

Friday, September 17, 2010

உடையுதிர் காலம் - பாகம் 3



ஹாய்…என்று சிரித்துக்கொண்டே கன்-கொன்னின் குரல் வந்தது.
சுபாங்கன் அண்ணா, கூல் என்ன இரண்டுபேரும் ஆவி ஏதோ துரத்தபோறீங்கள் என்று கதை அடிபடுது! எனக்கும் கிரிக்கட் போல ஆவிகள் விசியத்திலும் கொஞ்சம் இன்ரஸ்ட்தான் என்றுவிட்டு சிரித்தார்..

கன்-கொன் ஒரு கிலாரிபிகேசன்..
ஒருத்தி சொல்லுகின்றாள்…
1988 ஏசியா கப் இந்தியா 6 விக்கட்களால் சிறி லங்காவை வென்ற தினத்தில் நான் பிறந்தேன்.
கபில்தேவ் வேர்ள்ட் ரெக்கோட் போட்ட அன்றைய நாள் நான் நேசறிக்கு போனேன்..
சச்சினின் நண்பன் பெயர்கொண்ட இவன் அவர்போலவே ஆரம்பத்திலேயே என் மனதில் ரெட்டைச்சதம் அடித்தான்.
1996 இன் அரையிறுதியில் அன்று அவர் வெளியேறியதுபோலவே இவனும் அழுதுகொண்டே என் மனதைவிட்டு போய்விட்டான்.. எனது இனிங்சும் முடிந்துபோய்விட்டது.
ஆம்..2008 இல் எனது இனிங்ஸ் முடிஞ்சுபோச்சு…இதுதான் என்றான் சுபாங்கன்..
அட இதுதானா!!

நவம்பர் மாதம் 04ஆம் திகதி 1988 அவள் பிறந்திருக்கின்றாள்.
1994 ஆம் ஆண்டு ஸ்கூலுக்கு போயிருக்காள்.
அது வினோத் கம்ளி..சோ இவள் காதலித்த ஆளின்பெயர் வினோத்.
2008 இல இறந்திருக்கின்றாள் அதாவது அவளது 20ஆவது வயதிலை..சரியா அண்ணா..

இதுதான் கன்-கொன் என்கிறது சபாஷ்..என்றான் கூல்போய்.
சரி..அண்ணா லோஷன் அண்ணாவும் ஒருக்கா தனக்கு உங்களை கோல் பண்ண சொன்னவர் ஒருக்கா எடுங்கோ என்ன! சரி நான் வைக்கின்றேன்.
பாஸ்..ஒருமாதிரி துளசிகாவின் பயோடேட்டாவை கண்டுபிடித்தாச்சு. சீ…ஒரு இரண்டு வருடத்திற்கு முந்தியே இந்த இடத்திற்கு வந்திருக்க கூடாதா! அந்த வினோத் பயல்மட்டும் என் கையில கிடைத்தான் செத்தான் என்றான் கூல்போய்.

மீண்டும் அந்த டைரி கிடந்த இடத்தில் ஆராய்ந்தான். தூசுகள்மூடி ஒரு புத்தகம் கிடக்கவே தட்டி பார்த்தான். வுந்தியத்தேவன் என்று அதில் பெரிய எழுத்துக்களால் இருந்தது. பாஸ் இங்க பாருங்க..நம்ம வந்தி அண்ணை தன்ரபெயரிலே புத்தகம் ஒன்று அடித்திருக்கின்றார் என்றான் கூல்போய்..
வாங்கிப்பார்த்தான் சுபாங்கன்.

அடேய்..இது நம்ம வந்தி அண்ணா இல்லைடா. ஒரியினல் வந்தியத்தேவன் பற்றியது. ராஜராஜசோழனின் மகள் குந்தவையின் கணவன். சோழப்பேரரசின் படைகளில் மிக முக்கியமான தளபதி. பொன்னியின் செல்வன் கேள்விப்பட்டனியோ?
ஆமாம் பாஸ்..இப்ப நம்மட பிரசாந்த் நடித்துண்டு இருக்காரே! பாவமண்ணை அந்த ஆள்!!
அடேய்..பொன்னியின் செல்வன் என்கிறது கல்கியின் கதையடா! அதின் கதாநாகன் இந்த வந்தியத்தேவன்தான்டா!!
ஓகோ…அந்தப்பாதிப்பிலைதான் நம்ம ஆள் அந்த பெயரை வைத்திருக்காரோ..
பாஸ் உங்க காலைக்காட்டுங்க பாஸ்…
சரி..சரி விடுடா…என்றான் சுபாங்கன்..
காலைக்காட்டச்சொன்னது இவ்வளவு அறிவாய்ப்பேசுறீங்களே! நீங்க சுபாங்கன்தானோ அல்லது ஆவியோ என்ற சந்தேகத்திலைதான் என்றான் கூல்போய்.

மீண்டும் போன் சிணுங்கியது…
ஹலோ நான் லோஷன் பேசுறேன்.
என்ன பல விடயங்கள் பற்றி கேள்விப்பட்டேன். ஆவியை நேரில் பார்த்தீங்களா?
இரண்டு பேரும் விழுந்தடித்துக்கொண்டு போனை ஸ்பீக்கரிலை விட்டு மாறி மாறி முழு விடயத்தையும் விளங்கப்படுத்தினார்கள்.
லோஷன் அண்ணா சிலபல விடயங்கள் புரியவில்லை எல்லாத்தையும் கேட்டீங்கதானே இந்த அமானுசம் உண்மையா? ஆவி இருக்கா நீங்களாவது சொல்லுங்கள் என்றான் சுபாங்கன்.

சரி..சரி.. கொஞ்சம் யோசிக்கத்தான்வேண்டும். நீங்கள்வேறு களத்தில இறங்கி ரிஸ்க் எடுக்கின்றீர்கள். எதுக்கும் நான் நாளைக்கு சொல்லுறன். இரண்டுபேரும் கவனம். உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் முதலில். நான் நாளை கூப்பிடுகிறேன் என்றுவிட்டு போனை வைத்துவிட்டார் லோஷன்.

பாஸ்..நித்திரை கொள்ள பயமாக இருக்குது. எதுக்கும் ரேடியோவை சத்தமாக போட்டுவிட்டே படுப்பம் கொஞ்சம் பயம் தீரும் என்றுவிட்டு. ரேடியோவை போட்டுவிட்டே படத்துவிட்டனர் இரண்டுபேரும்.
இரண்டுபேர் கனவிலும் துளசிகா வந்தாள்..ஆவியாக அல்ல.

வணக்கம் நேயர்களே ஆவிகள் ஆமானுசங்கள் உண்மையா? உங்களுக்கு அவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளனவா? இது பற்றி இன்றைய விடியல் நிகழ்ச்சியில் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என்று தனது சிம்மக்குரலில் கர்ஜனை செய்துகொண்டிருந்தார் லோஷன்.
இதைக்கேட்டு இரண்டுபேரும் திடுக்கிட்டு எழுந்துகொண்டனர்.

என்ன தம்பியவை எழுந்திட்டீங்கபோல! அது சரி..அந்த பெண்ணின் பெயர் துளசிகாவா? 2008 தானா இறந்தாள்? ஓம் தம்பி அப்ப இது அவளேதான். நான் வெளியாலை ஒருக்கா போகவேண்டி இருக்கு போய்ட்டு வாறன் என்றார் பெரியவர்.
இருவரும் பெரும் ஆச்சரியத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
டேய்..கவனித்தாயா நாங்கள் பேசியது எப்படி மேல்மாடியில் இருந்த அவருக்கு கேட்டது!
ஆமாம் பாஸ். இந்த பேய்..ஆவி என்பதெல்லாம் இந்த ஆளின் விளையாட்டுத்தான் போல. நாங்கள் கதைப்பதை கேட்க ஏதோ கருவி கீழே பூட்டப்பட்டிருக்கலாம் வாங்க தேடுவோம் என இரண்டுபேரும் முழு இடத்தையும் சல்லடை போட்டு தேடினார்கள்…ம்ம்கூம்..ஒரு சின்னத்துண்டு வயர்கூட கிடைக்கவில்லை…
பின்ன எப்படிடா? என்றான் சுபாங்கன்..இரண்டுபேரும் படுத்த இடத்தின் மூலையில் பிளாட்டில் பெரிய ஓட்டை ஒன்று இருப்பதை கவனிக்காமலே.

இதையெல்லாம் யோசித்துக்கொண்டே அந்த இடத்தில்ப்போய் படுத்துக்கொண்டான் சுபாங்கன். என்னடா இது பிரம்மசூத்திரமாக இருக்கு…கொஞ்சநேரம் மனதை ரிலாக்ஸ் பண்ணினால்த்தான் யோசனைகள் வரும் என்றுவிட்டு கண்களை மூடினான்..நித்திரையாகிப்போய்விட்டான்.

திடீர் என பின்பக்கம் மரங்கள் உலுப்பப்படுவதுபோல சத்தம். திடுக்கிட்டு எழுந்தான் சுபாங்கன். கூல்போயை காணவில்லை. பாவிப்பயல் மீண்டும்போய் கரண்டில அடிபட்டுபோட்டானோ என்று நினைத்துக்கொண்டே வளவை நோக்கி ஓடினான்.
பின் வளவில் மரங்கள் அனைத்திலிருந்தும் இலைகள் உருவப்பட்டதுபோல இருந்தது. ஒரே அமைதியாகவேறு இருந்தது.
எல்லா இடமும் தேடிப்பார்த்தான் யாரும் இல்லை. ஒரு இடத்தில் சென்று சற்று தயங்கி நின்றான். திடீர் என பின்பக்கம் இருந்து சுபாங்கனின் தோழில் ஒரு கை தொட்டது. திரும்பி பார்த்தான்..பயங்கர உருவம் ஒன்று நெருக்கமாக நின்றது.
மாஸ்கை கழட்டிக்கொண்டு பாஸ்..பயப்படாதீங்க அது நான்தான் என்று கூல்போய் சொல்வதற்குள் மயங்கி விழுந்துவிட்டான் சுபாங்கன்.

தொடரும்…

Thursday, September 16, 2010

உடையுதிர்காலம்!!! -02



குறிப்பு - இந்த கதைக்கு இலங்கை பதிவர்களின் அமோக ஆதரவுக்கு மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், இன்னும் இந்த கதை பற்றி விடயம் தெரியாதவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி- இந்த நகைச்சுவை கதையில் இலங்கையின் பெரும்பான்மையான பதிவர்கள் அனைவரும் கெஸ்ட் ரோல்ல ஏதோ ஒரு கட்டத்திற்கு வந்து கொண்டிருப்பார்கள் என்பதை அறியத்தருகின்றேன்.
சரி..இனி கதை…முதல் பகுதியை படிக்காதவர்கள் தயவு செய்து கீழே சென்று படித்துவிட்டு வாருங்கள்.

ஆவியின் கதையினை சொல்லத்தொடங்கினார் பெரியவர். சுபாங்கனும், கூல்போயும் மிக ஆர்வத்துடன் கேட்கத்தயாரனார்கள்.
ஒரு கோல்லீபை சேட் பொக்கற்றுக்க இருந்து எடுத்து, லைட்டரால் பத்த வைத்து, ஒரு உல்லாச இழுவை இழுத்துவிட்டு தொடங்கினார் அவர்…
நான் இந்த காணியை வாங்கமுதல் இந்த இடத்தில நல்ல வசதியான ஆக்கள்தான் இருந்தார்கள். அந்த குடும்பத்தில் ஒரே ஒரு பெண் பிள்ளைதான் இருந்ததாம். ரொம்ப செல்லமாக வளர்ந்த பிள்ளை. உயர்தரம் பாஸ் பண்ணி இருக்கின்றாள். ஆனால் ஒரு நாள் திடீர் என்று நஞ்சுகுடித்து செத்துப்போய் இருக்கிறாள். ஏன் செத்தாள் என்பது புதிராகத்தான் இருக்கு!!
அவள் செத்த மாதம் செப்ரம்பர் நடுப்பகுதி என்பதால் ஒவ்வொருவருடமும் இந்த மாதத்தில் அவள் நடமாடுவதாக சொல்லுறாங்க. நானும் 3 செப்ரெம்பர் மாதங்களில அவளை கண்டுகொண்டுதான் வாறான் என்றார்.

டேய்..இன்பொமேஷனை நோட் பண்ணிக்கடா என்றான் சுபாங்கன்.

சரி ஐயா..அந்த அடிவளவு வேப்பமரத்தடியிலதானே ஆவி வாறது. நேரம் 9.30 ஆகிவிட்டது நாங்கள் அந்த மரத்தடியில போய் நிற்கிறம் என்று விட்டு இருவரும் அங்கு சென்றனர்.
10 மணி, 10.30, 11 மணி என நேரம் போய்க்கொண்டிருந்தது.ஆவியை காணவில்லை. என்னடா கனநேரமாய் கூல்போயின் சத்தத்தை காணவில்லை என்று உற்றுப்பார்த்தான் சுபாங்கன்..கூல்போயிடமிருந்து மெல்லிய கொறட்டை சத்தம் இப்போது கேட்டது.

அடப்பாவிப்பயபுள்ளை. என்று அவனை தட்டியெழுப்பிய அதே நேரம் மரத்தின் மேலே ஏதோ உலுப்புவதுபோல சத்தம் கேட்டது. இரண்டுபேரும் ஓடிவந்து..பெரியவரை தேடினர் ஆளைக்காணவில்லை. பெரியவர் வைத்திருந்த வெற்றிலை தட்டம் அப்படியே இருந்தது.
சுபாங்கன் அவசர அவசரமாக தனது புது கூல்பிக்ஸர் எல் ருவன்டி கமராவை எடுத்துக்கொண்டு வாடா கெதியாக என்று கத்திக்கொண்டே அடிவளவை நோக்கி ஓடினான்.
ஏன் பாஸ் கமரா? என்றான் கூல்போய்!
நல்ல சீனெறிகள் எடுத்து பவனிட்ட போட்டோ கொமன்ஸ் போடச்சொல்லப்போறன்..!
அடநீவேற!! ஆவியை போட்டோ எடுத்து ஆதாரபூர்மாக ஆராயத்தானடா!!
ஜெஸ் பாஸ்..எடுத்திட்டு பவனிட்ட காட்டினா உண்மையான கொமன்ஸ் கிடைத்திடும் என்றான் கூல்போய்.

இருவரும் ஈரக்குலைகளே ஆட அப்படியே நின்றுவிட்டனர். காரணம்..இரண்டு பெரிய கண்கள் மட்டும் பளிச்என்று இவர்களை உற்றுப்பார்த்துகொண்டிருந்தன. அந்த வேப்பமரத்துக்கு முன்னால் உள்ள ஜம்புநாவலில் இருந்து.
என்ன நினைத்தானோ தெரியவில்லை கூல்போய்..பெரியவரின் வெற்றிலை தட்டம் இருந்த இடத்திற்கு ஓடிவந்து அங்கிருந்த பாக்குவெட்டியை எடுத்துக்கொண்டு ஓடிவந்து அந்த கண்ணை நோக்கி பாக்குவெட்டியை தூக்கி காட்டினான் கூல்போய்..
மறு நிமிடம்..ஐயோ என்றொரு சத்தம் சுமார் 9 அடிக்கு தூக்கி எறியப்பட்டான் கூல்போய். சுபாங்கனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த கண்கள் அவனை நெருங்குவதுபோலவே இருந்தது. கமராவை தூக்கி சட சட என்று போட்டோக்களை அடித்தான் சுபாங்கன். அதற்குள் கூல்போயின் சத்தம் கேட்டு வளவுக்கு ஒரு பவரான டோச் லைட்டுடன் ஓடிவந்துகொண்டிருந்தார் பெரியவர்.
என்ன தம்பியவை..ஏன் இந்த தம்பி விழுந்து கிடக்கிறார் என்று ஓடிவந்தார்.

டேய் உனக்கு என்னடா நடந்தது! இப்படி பறந்துபோய் விழுந்தாய் என்று கேட்டுக்கொண்டே வந்தான் சுபாங்கன். மெல்லமாக கண் வழித்துப்பார்த்தான் கூல்போய். கூல்போய் பாக்குவெட்டியை தூக்கி காட்டிய இடத்தில் டோச்சை அடித்துப்பார்த்தார் பெரியவர்.. அந்த இடத்தில் ஒரு கரண்ட் கம்பி இருந்தது!!

ஏன்டா பாக்குவெட்டியை கொண்டுவந்து தூக்கி பிடித்தாய் என்றான் சுபாங்கன். பாஸ் அந்த கண்ணை பார்த்தால் எனக்கு ஆந்தையிண்ட கண்கள்போல இருந்தன. ஆந்தைக்கு பாக்குவெட்டியை தூக்கி காட்டினால் ஓடிவிடும்…சீ..பறந்துவிடும் என்று சொல்லுங்கள் பெரிசுகள் அதுதான். பாழாய்ப்போன கரண்ட் கம்பி இதாலை போகுமெண்டு எனக்கு தெரியவில்லை என்றான் கூல்போய்.

சரி..வா உள்ளபோவோம் என்றான் சுபாங்கன். சரி தம்பியவை நீங்கள் கீழபடுங்கோ நான் மேல்மாடியில படுக்கிறன் கதவு ஜன்னல் எல்லாத்தையும் சாத்திவிட்டு படங்கோ..ஏதும் அவசரம் என்றால் என்னை கூப்பிடுங்கோ என்றுவிட்டு இந்தாங்கோ சுடுதண்ணி வைக்கிற கொயில் சீனி, தேயிலை எல்லாம் இருக்கு களைத்துப்போட்டியள் ரீபோட்டு குடியுங்கோ என்றுவிட்டு மேலே போனார் அவர்.

அவரை அனுப்பிவிட்டு இரண்டுபேரும் உள்ளே போனார்கள். பாஸ்..போட்டோ எடுத்தீங்கள் தானே. அதுபோதும் அதை உங்கள் லப்ரொப்பில போட்டு பார்த்தால் சரி என்றான் கூல்போய்.
ஓமடா..நீ கரண்ட் அடித்து விழுந்தபோதும் உன்னைக்கூட தூக்காமால் என்ன நடந்தாலும் பறவாய் இல்லை என்று றிஸ்க் எடுத்து பட பட என்று போட்டோ அடித்தேன் என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றனர்.
புளொக்கில் கமராவின் பற்றி இரண்டும் போட்டபடி அப்படியே இன்னும் சார்ச் ஏறிக்கொண்டிருந்தது!!
சொதப்பிட்டீங்களே பாஸ்..வயித்தை கிள்ளுது பாஸ்..நைட் சாப்பிட மறந்துபோய்ட்டோம் என்றான் கூல்போய்.

இந்த நடு சாமத்தில சாப்பாட்டுக்கு எங்கபோறது. அந்த ஆள் சீனி, தேயிலை எல்லாம் தந்திருக்கு ரீ போட்டு குடிப்பம் என்றான் சுபாங்கன்.
அதென்ன பாஸ். உங்கள் பைக்குள்ள ஒரு பார்சல்? ஓமடா…எங்கட யோ..வொய்ஸ் யோகா!! ஏதோ ஒரு பார்சல் அனுப்பி இருந்தார். இந்த அமளிதுமளியில அதை மறந்துபோயாச்சு எடுத்து ஒருக்கா என்ன வென்று பிரித்துப்பார் என்றான் சுபாங்கன்.

பாஸ்..பார்சல் முழுக்க நூடில்ஸ் பக்கட் என்றான் கூல்போய்.
அடடா…எடுத்து சுடுதண்ணிக்க போடுடா நைட் சாப்பாடு ரெடி. மனுசன் கணக்காத்தான் பார்சல்போட்டிருக்கு என்றான் சுபாங்கன்.
நூடில்ஸை சுவைத்துக்கொண்டே..பாஸ் அங்கபாருங்க அழகான ஒருபுத்தகம் என்று தூசிகளுக்கு மத்தியில் இருந்து ஒரு புத்தகத்தை தூக்கினான் கூல்போய்.
டேய்..அது புத்தகம் இல்லைடா டயரி இங்கே தா..என்று பறித்து திறந்துபார்த்தான் அவன்.
என் பெயர் துளசிகா..என்று ஒரு அழகான பெண்ணின் படத்துடன் தொடங்கியது அந்த டயரி..உள்ளே!!
1988 ஏசியா கப் இந்தியா 6 விக்கட்களால் சிறி லங்காவை வென்ற தினத்தில் நான் பிறந்தேன்.
கபில்தேவ் வேர்ள்ட் ரெக்கோட் போட்ட அன்றைய நாள் நேசறிக்குப் போனேன்.
என்று முழுவதும் கிரிக்கட் சம்பந்தமாக சூசகமாவே அந்த டயரி முழுவதும் எழுதப்பட்டிருந்தது.
சச்சினின் நண்பன் பெயர்கொண்ட இவன் அவர்போலவே ஆரம்பத்திலேயே என் மனதில் ரெட்டைச்சதம் அடித்தான்.
1996 இன் அரையிறுதியில் அவர் வெளியேறியதுபோலவே இவனும் இன்று அழுதுகொண்டே என் மனதைவிட்டு போய்விட்டான்.. எனது இனிங்சும் முடிந்துபோய்விட்டது. என எழுதப்பட்டிருந்தது…
புடித்துக்கொண்டே சுபாங்கன் சொன்னான் டேய்..அடிடா தொலைபேசியை கன்-கொன்னுக்கு..

-தொடரும்…

Wednesday, September 15, 2010

உடையுதிர்காலம்!!!



கதையின் முற்குறிப்பு – பதிவர்களில் பெரும்பாலானோர் எழுத்தாளர் சுஜாதாவின் பரம ரசிகர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய அமானுசத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் கொண்ட “கொலையுதிர் காலத்தை” நகைச்சுவைக்காக மட்டுமே உள்ட்டா பண்ணி வரப்போவதுதானுங்க இந்த உடை உதிர்காலம்.
இதில் கணேசாக – பதிவர் சுபாங்கனும், வஸந்த் ஆக – பதிவர் கூல்போய் கிருத்திகனும் வாறாங்க. (சகிக்காதுதான் என்றாலும் அந்த இரண்டுபேரையும் இந்த நகைச்சுவை கதை முடியும் மட்டும் கணேஸ் வசந்தாக ஏத்துக்குங்க)
முக்கிய குறிப்பு - இது சுபாங்கன், கூல்போய் கிருத்திகனை தவிர மற்ற யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
சரி…இனி கதைக்கு போங்க…


சக்ஸஸ்..சக்ஸஸ்…என்று இரண்டு வயர்துண்டுகளை V வடிவமாக வைத்துக்கொண்டு சிவாஜி கணேசன் கணக்காக கதைக்குள் எண்டர் ஆகின்றான் சுபாங்கன்.
அப்படி அவன் கத்தியதற்கு காரணம் “கால இயந்திரம்” ஆம் அவனால் பின்பக்கமாக கடந்த நூற்றாண்டுகளுக்கு செல்லக்கூடிய ஒரு டைம் மெஷின் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. அதுதான் அந்த கத்தல்.

அடடா..இந்த வெற்றியை யாருக்காவது சொல்லனுமே என்று கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தபோது…
மொபைல் சிலிர்த்த்துகொண்டிருந்தது. ஆர்வத்துடன் எடுத்துப்பார்த்தான் சுபாங்கன்.
மருதமூரான் என்று டிஸ்பிளேயில் விழுந்தது.
ஹலோ வணக்கம் பொஸ்…யாழ்ப்பாணத்திலையா நிற்கிறீங்கள்? மருதமூரானிடமிருந்து
ஓமோம்…ஒரு முக்கியமான விசியம் ஒன்…

அதைவிட முக்கியமான விடயம்.. உங்கட கொக்குவில் பக்கம் உள்ள, சொதி வளவு என்ற இடத்தில் ஆவி ஒன்றின் அட்டகாசமாக இருக்குதாம். அந்தப்பக்கமே சனங்கள் போக பயப்படுகுதுகளாம். இதைபற்றி விரிவாக ஆராய ஒருத்தரும் இல்லை அதுதான் உங்களிடம் சொல்லுறன்..ஒருக்கா உண்மையோ என்று அராய்ந்துபாருங்கோவன்…

ஓ…அதுசரி…நான் ஒரு டைம் மெஷி…

நான் ஆவிகளை நம்பிறதில்லை. இதில ஏதோ வேற விடயங்கள் இருக்கு கண்டிப்பாக போய் ஒருக்கா ஆராயுங்கோ..

ஓம் அண்ணை…நான் ஒரு ரைம் மெஷி..
கவனமாக காண்டில் பண்ணவேணும் சுபாங்கன். பலபேர் இந்த ஆவியை பார்த்திருக்கினமாம். பஸ்ஸில போய்கொண்டிருக்கின்றேன் சுபாங்கன் நான் பிறகு கோல் பண்ணுறன். போனை கட் பண்ணிவிட்டார் மருதம்ஸ்.

கொய்யாலே…நான் சொல்லவந்த விசியத்தை கேட்டுதா இந்த மனுசன்??? மனதிற்குள் நினைத்துக்கொண்டான் சுபாங்கன்.

ஆவியா? படு இன்ரஸ்ரிங்கான விசியம்தான். ஆனால் அதற்கு முதல் என்ட ரைம் மிஸின் பத்தி யாருக்காவது….!! மொபலைப்போட்டு நோண்டுகின்றான் சுபாங்கன்.
மதி.சுதா….!! ஜெஸ் ஆர்வமான பெடியன் இவனிடம் டைம் மிஷின் பற்றி பேசிக்கொள்ளலாம்.

மறுமுனையில் வணக்கம் சுபாங்கன் அண்ணா..எப்படி இருக்கிறியள்? யாழ்ப்பாணத்தில நிற்கிறீங்களாம்.

ஓமோம்..சுதா டைம்மிஸின் ஒன்…

ஓமண்ணா.. நான் அது பற்றி ஒருகதையை போனமாசம் எழுதியிருந்தன். இப்பதான் படிச்சனீங்களோ?
பற்றி தீர்ந்து சுபாங்கனின் போன் “ஓப்” ஆகிவிட்டது.

சற்றுநேரத்திற்கெல்லாம் சி.பி.ஷட் ஒன்றின் உறுமல் சத்தம் கேட்க வந்துகொண்டிருந்தான் கூல்போய்.
பாஸ்… டைம் மெஷின் என்ன ஆச்சு! சக்ஸஸா?
ஆமாடா…யாருக்காவது சொல்லுவோம் என்றால் செவிகொடுக்கிறாங்களா பார்!
பாஸ்..ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதையுங்கோ அந்த மெஷினை வைத்து செய்யவேண்டிய காரியங்கள் பல இருக்கு! அதை பிறகு பார்ப்போம்..
மருதம் கோல் பண்ணி ஒரு விடயம் சொன்னார். உங்களுக்கும் கோல் பண்ணினதாக சொன்னார் என்றான் கூல்போய்.

ஆமாடா நீ ஆவிபேயை நம்புறியா என்ன?
ஜெஸ் பாஸ்..சில சம்பவங்களை விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியலையே!
இது எங்களுக்கு ஒரு பெரிய சலேஞ்ச் பாஸ். நாங்கள் இந்த மர்மத்தை கண்டுபிடித்தே ஆகவேண்டும்.
நீயே சொல்லிட்டாய் பிறகு என்ன கிழம்பு. உன்ர ஆர்வத்திற்கு இன்றையில இருந்து உனக்கு 80 ரூபா சம்பளம் யாஸ்தி.

இருவரும் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு புறப்பட்டு சென்றார்கள். ஒரு பெரிய வளவுதான். அயலிலே பெரிதாக ஒரு வீடும் இல்லை. ஆனால் வளவின் பின்பக்கம் கோவில் மதில்மாதிரி சிவப்பு, வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருந்தது. முன்னால் ஒரு பழையகால மாடி வீடு ஒன்று இருந்தது. வளவு முழுக்க ஒரே பற்றைகளாகவும் நிறைய மரங்களும் நின்றன. பட்டப்பகலிலை பார்க்கும்போதே ஒரு பயங்கரம் தெரிந்தது உண்மைதான்.
டேய்.. பக்கத்தில் ஏதாவது ஒரு வீட்டில் விசாரித்து பார்ப்போம் வா என்றான் சுபாங்கன்!
இருவரும் சற்று தள்ளி இருந்த ஒரு வீட்டின் முன்னால் சி.பி.ஷட்டை நிறுத்தி கோர்ன் அடித்தனர்.

உள்ளே..இருந்து ஒரு பதினெட்டு வயது மதிக்கத்தக்க பருவ மங்கை ஓடிவந்தாள்.
பாஸ்…எழிமையிசை இயக்கம் நிறுவப்படுது பாஸ் என்றான் கூல்போய்.
டேய்..ஆரம்பிச்சுட்டியா? சும்மா இருடா!! அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்றான் சுபாங்கன்.
அதுசரி..அதை நீங்க சொல்லுறீங்க!!! என்று விட்டு அன்புள்ள சந்தியா..என்று வாய்க்குள் பாடலை முணுமுணுத்தான் கூல்போய்.

வாசல் வரை ஓடிவந்த அந்த பெண்ணில் இவர்களைக்கண்டவுடன் ஒரு ஏமாற்றமும், அதைவிட ஒரு அச்சமும் தெரிந்தது.
பாஸ்..இவள் வேற யாரையோ எதிர்பார்த்துகொண்டிருக்கின்றாள் போல என முணுமுணுத்தான் கூல்போய்.
என்ன என்பதற்கான பாவத்தை தன் முகத்தில்க்காட்டி இவர்கள் இருவரையும் பார்த்தாள் அவள்!
தூரத்தில் தெரியும் அந்த வளவைக்காட்டி இது யாருடையது என்று உங்களுக்கு தெரியுமா என்றான் சுபாங்கன்.
தெரியாது அண்ணா!! அந்த அண்ணா என்ற சொல்வந்ததும் பீறிட்டுக்கொண்டுவந்த வறட்டு எச்சிலை கஸ்டப்பட்டு விழுங்கினான் சுபாங்கன். சந்தர்ப்பங்களை மறந்து ஹெக்கெக்கே என்று சிரித்துக்கொண்டிருந்தான் கூல்போய்.

நாங்கள் இந்த இடத்திற்கு வந்து 2 மாசம்தான் ஆகுது அண்ணா. அது யார்ட என்று தெரியாது அம்மாவுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இப்போ வீட்டில் யாரும் இல்லை என்றாள் அவள்.
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா! என்றான் கூல்போய்! வீட்டில் யாரும் இல்லை என்பது அவனின் காதில் விழுந்த மறுவினாடியே.
கூலைமுறைத்துபார்த்த சுபாங்கன். போதும் எடுடா சி.பி.ஷட்டை என்றுவிட்டு. நன்றி சிஸ்ரர் என்று கஸ்டப்பட்டு சொல்லிவிட்டு மீண்டும் தங்கள் இருப்பிடம் வந்தனர்.

டேய்..இன்றைக்கு இரவு எப்படியும் அந்த வளவுக்குள் நுளையவேண்டுமடா! இன்பர்மேஷன் ஒன்றும் கிடைக்கலையே. அது இருக்கட்டும். ஆவி என்பது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்? என்றான் சுபாங்கன்.
என்னைப்பொறுத்தவரை அது இருக்கு பாஸ் என்றான் கூல்போய்.
திடீரெனறு;..நினைவு வந்ததும்..டேய்..இது பற்றி கேட்க சரியான ஆள் நம்மட பாலவாசகன் தாண்டா. எடுடா போனை ஆளை கனநாள் தொடர்புகொள்ளமுடியலை என்றான் சுபாங்கன்.
பாலவாசனுக்கு போன் போகவில்லை. கோல் பெயிலியர் என்று வந்துகொண்டிரந்தது.
பாஸ்..ஒரு செய்தி. பாலவாசகன் இப்ப ரொம்ப பிஸி. ஆளை பிடிக்கவே முடியாது.
ஆள் நாசாவுக்கு போய்ட்டார் என்றும் ஒரு கதை அடிபடுது என்றான் கூல்போய்.

இருப்பு கொள்ளுதில்லைடா..வா திரும்ப அந்த வளவுப்பக்கம்போய் ஏதாவது தகவல்கள் கிடைக்குதா என்று பார்ப்போம் என இருவரும் புறப்பட்டார்கள்.
இப்பொழுது அந்த வளவிற்குள் ஒரு நடுத்தர வயதானவர் நின்று கொண்டிருந்தார்..
அவரை இருவரும் அணுகினார்கள்.
யார் தம்பிமார் நீங்கள்?
ஓன்றும் இல்லை அண்ணை. இந்த வளவிற்குள் ஏதோ ஆவி சுற்றுதாம் என்று கேள்விப்பட்டோம் அது உண்மையா என்று அறியத்தான் என்றான் கூல்போய்.
இவர்களை ஏற இறங்க பார்த்த அவர்.
ஓம் தம்பி நான் பல தடவை கண்டிருக்கின்றேன். ஆரம்பத்தில ஒருவரும் நம்பேல்லை. இப்ப கனக்கபேர் பார்த்திருக்கினம். என்றார் அவர்.

எங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை அண்ணா. இது உங்கள் வளவா? என்றனர் இருவரும்.
ஓம் தம்பி இது என் வளவுதான். வேண்டுமென்றால் இன்றைக்கு இரவு நின்றுபாருங்கள் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்றார் அவர்.
ஒரு விசியம்தம்பி. உங்கட ஆர்வக்கோளாறை பார்த்தால் எனக்கும் தைரியம் வருது. இன்றைக்கு நீங்கள் இங்க நின்றால் உதவிக்கு நானும் நிப்பேன். பார்ப்போம் என்றார் அவர். சரி தம்பியவை நான் இன்றைக்கு இங்க தான் நிற்பேன் ராவுக்கு வாருங்கோவன் என்றார் அவர்.

இரவு 8 மணிபோல் இரண்டுபேரும் அந்த வளவை அடைந்தார்கள். ஒரு காக்கா குருவிகூட இல்லையேடா என்றான் சுபாங்கன்.
பாஸ்..காக்கா குருவி எல்லாம் தங்கட கூட்டில் நித்திரைக்கு போயிருக்கும் என்றான் கூல்போய்.
என்ன தம்பியவை வந்திட்டியளோ? என்று கேட்டுக்கொண்டே அந்த மனிதரும் வந்தார். பழைய கிணத்தடி ஒன்றில் இருந்து மூவரும் பல கதைகள் பேசினர்.
தம்பி இந்த ஆவி பற்றி ஒரு கதை இருக்கு என்று அந்த தெரியவர் கூறத்தொடங்கினார்…

பெரியவரின் கதையும், ஆவியின் அட்டகாசமும், ஆவிதுரத்தும் பதிவர்களின் கேனைத்தனமும் அடுத்த பதிவில்.. இனித்தான் உங்கள் வயிறும் நோகவுள்ளது…

Thursday, July 8, 2010

“ஸ்பெயின் வொன் த வேர்ள்ட் கப்” - நகைச்சுவை சிறுகதை


நாள் 11.07.2010 ஞாயிற்றுக்கிழமை
நிறைந்த அமாவாசை

இன்று என்னமோ தெரியவில்லை, மனதுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறந்துகொண்டே இருக்கின்றது. சாப்பாடுகூட காலையில் இருந்து ஒரு அவசரத்துடன்தான் சாப்பிடத்தோன்றுகின்றது. மனது முழுக்க ஸ்பெயின் கோல்க்கீப்பர் ஹஷில்லாஸ் தவிர மற்ற பத்துபேரும் ரொனால்ட்டோவின் மனதிற்குள் கோல் போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ரொனால்ட்டோ!! ஆச்சரியம் வேண்டாம். காற்பந்தாட்டத்தில் இவனுக்கு இருக்கும் ஆர்வக்கோளாறு காரணமாக அவனது ஊரே அவனுக்கு வைத்த பெயர் ரொனால்ட்டோ.. அவனது நியப்பெயர் வெங்கட். ஆக நாம் அவனை ரொனால்ட்டோ வெங்கட் என்று அறிந்துகொள்வதே பொருத்தம்.
எப்போதுமே பிரேஸில்தான் அவனது ஆதர்ஸன அணி. இந்தமுறை பிரேசில் தோற்றுப்போனதை ஒருநாள் முழுதும் சாப்பிடாமல் நோன்பிருந்து ஆற்றிக்கொண்டு, அடுத்து தனது அபிமான அணியாக ஸ்பெயினை தேர்ந்தெடுத்துக்கொண்டான்.
தான் எப்போதும் அணியும், பிரேஸிலின் மஞ்சள்கலர் ஜேசியைக்கூட கழட்டிவிட்டு, ஸ்பெயின் ஜேசியை தேடிப்பிடித்து வாங்கி அணிந்துகொண்டுவிட்டான் ரொனால்ட்டோ வெங்கட்.

இந்த பிஃபா உலக்கோப்பை 2010 தொடங்கியதில் இருந்து ஊரில் உள்ள கேபிள்காரனுக்கும் அவனுக்கும் இடையில் பெரும்போரே வெடித்துவிட்டது. இவனது ஸ்கட் ஏவுகணைகளை தாங்காமல் கேபிள் காரரும் எந்த சனல் தெளிவாக இருக்குதோ இல்லையோ, ஈ.எஸ்.பி.என் மட்டும் கண்ணாடிபோல தெரியவேண்டும் என்று பகீரதப்பிரயத்தனம் செய்துகொண்டிருக்கின்றார்.

சரி..இன்று இறுதிப்போட்டி அல்லவா? காலையில் இருந்து ரொனால்ட்டோ வெங்கட்டிற்கு காலும் ஓடவில்லை கையும் ஓடவில்லை. ஏதோ ஸ்பெயின் அணிக்கே தான்தான் அறிவிக்கப்பட்ட இரசிகன் என்பதுபோல துடித்துக்கொண்டிருந்தான். எப்போதுமே தான் இரசிப்பதை மற்றவர்களும் சேர்ந்து இரசிக்கவேண்டும், என எண்ணுபவன் அவன். அதற்காக தான் பார்த்த படங்களைக்கூட வேண்டும் என்றே நண்பர்களை ஒற்றைக்காலில் நின்று அழைத்துக்கொண்டுபோய் இரண்டாம்முறையும் இரசிப்பான் இந்த ஆர்வக்கோளாறு.

அதன் பிரகாரம் இன்று இறுதியாட்டத்தை 16அடி திரையில் போடுவதாக உத்தேசம். வீட்டில் இருந்து சற்று தள்ளியிருக்கும் சனசமுக நிலைய மைதானத்தில் ஸ்கிரீன், புரொஜக்டர் என்பன வாங்கிவைத்து, ஊரே பார்க்கவைத்து தானும் இரசிக்கவேண்டும் என்ற திட்டத்தில்த்தான் காலையில் இருந்து காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு ஓடித்திரிகின்றான் ரொனால்ட்டோ வெங்கட்.

ஒருவாறு 12 ஆயிரத்திற்கு அவற்றை வாடகைக்கு எடுத்து, எலக்ரோனிக் விற்பன்னான கோபியிடம் அதை கொண்டு சேர்த்து…இந்தா.. மச்சான்… சரியா ஆறு மணிக்கே வாசிகசாலையில் வைத்து ரெஸ்ட் பண்ணிப்போடனும்..இறுதியாட்டம் சும்மா யமாய்க்கவேண்டும்.. ஸ்கீனில பாக்கேக்க பார்க்கவாறவைக்கு, றிங்ஸ்சும், பிஸ்கட்டும் தருவதாக கடைக்கார அண்ணை ஒத்துக்கொண்டுவிட்டார், ஒருக்கா வாசிகசாலை கிரௌண்டையும் துப்பரவாக்கவேண்டும், பெடியள் வருவாங்கள் என்று விட்டு ஓடியே விட்டான்..

ஒருவாறு மாலை 6 மணிக்கே புரொஜக்டரை, 16அடி ஸ்கீனில விழுத்தி, கேபிள் கொடுத்து எல்லாம் பார்த்தாகிற்று. எதற்கும் முன்னேற்பாடாய், மின்சார சபைக்கும்…!
அண்ணை எல்லாம் சரி..நீங்கள் அந்த நேரத்தில் சொதப்பக்கூடாது என்று வோனிங் கோலும் கொடுத்துவிட்டான் ரொனால்ட்டோ வெங்கட்.

நேரம் 8.30 வீட்டுக்கு ஓடிப்போய் அவசர அவசரமாக அம்மா தட்டில் போட்டுவைத்திருந்த என்னத்தையோ வாய்க்குள் திணித்து தண்ணீர் குடித்துவிட்டு வெளியால் வந்தான்… நேரம் 9 மணி. 11.30ற்கு எல்லாத்தையும் தொடங்கினால் சரி..கால் கையெல்லாம் காலையிருந்து ஓடித்திரிந்ததில் அலுப்பாய் இருக்கிறது..கொஞ்ச நேரம் படுப்பம்! இன்றும் ஒன்னரை மணித்தியாலம் சின்ன நித்திரை கொண்டுவிட்டு ஓடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு கட்டிலில் விழுந்தான் ரொனால்ட்டோ வெங்கட்.

இதோ ஆட்டம் தொடங்கிவிட்டது ஆட்டம் தொடங்கி முதல் பதினைந்தாவது நிமிடத்திலேயே கோனல் கிக் மூலம் தமது முதலாவது கோலைப்போட்டே விட்டது நெதர்லாந்து…ஐயோ..என கையை அடித்தான் ரொனாட்டோ வெங்கட்..
அப்புறம் இதோ டேவிட் வில்லா லாபகமாக பந்தைக்கொண்டு சென்று கர்லஸிடம் தட்ட, கார்லஸ் பந்தை மேலால் அடிக்க ஆம்..அதோ அழகான ஒரு கோல்..துள்ளிக்குதித்தான் ரொனால்ட்டோ டேவிட். அப்பறம் இரண்டு அணியும் இரண்டாவது கோல்.. யார்போடுவது என்று செமப்போட்டி போட்டார்கள்.
எதிர்பாராத நேரத்தில் இதோ பப்ரிகேஸ் அடித்த கிக் கோலாகின்றது..ஸ்பெயின் இரண்டுகோல்கள்..அனந்தத்தில் அழுதே விட்டான் ரொனால்ட்டோ வெங்கட்.

ஆட்டம் முடிகின்றது. மக்கள் ஸ்பெயின் கொடிகளுடன் ஆரவாரம் செய்கின்றர்.
இதோ ஸ்பெயின் அணி வரிசையாக வருகின்றது…அணித்தலைவர் ஹஷில்லாஸ்
ஆரவாரத்திற்கு மத்தியில் மேலே ஏறி உலகக்கோப்பையை பெற்று கத்திக்கொண்டே கோப்பையை மேலே தூக்குகின்றார்..பேப்பர்கள் பறக்கின்றன. ஆரவார ஒலியின் மைதானமே அலறுகின்றது…


ஷாமினாமினா..ஏ..ஏ...
வக்கா வக்கா..ஏ..ஏ..
ஷாமினாமினா...
ஷாமினாமினா..க்லைவா..
திஸ்ரைம் போர் அப்ரிகா


என ஷஹிரா பாடிக்கொண்டே ஆடுகின்றார்…திரும்பத்திரும்ப அதேபாடல்!!!!
நினைவுக்கு வருகின்றது அது தற்போதைய அவனது செல்போனின் ரிங்டோன்..
திடுக்கிட்டு எழும்புகின்றான் ரொனால்ட்டோ டேவிட்.. அழைப்பு கோபியிடம் இருந்து
நேரம் அதிகாலை 2 மணி.

“மச்சான் எங்டா திடீர் என்று உன்னைக்காணவில்லை. மச் முடிந்து பார்க்கவந்த ஆட்கள் எல்லாம் போய்ட்டார்கள். புரொஜக்டரையும், ஸ்கிரீனையும் வந்து எடுத்திட்டுப்போடா!!

என்ன????? திடுகிட்டான்…ரொனால்ட்டோ டேவிட்…
இந்த இரவிலேயே அவனுக்கு மேலும் இருட்டிக்கொண்டுவந்தது..மென்று விழுங்கிக்கொண்டு

மச்சான் ஸ்பெயின்தானே வென்றது??? என்று கேட்டான்

இல்லை மச்சான் நெதர்லாந்து 2-1 என்றான்..கோபி
கட்டிலில் தொப் என்றொதொரு சத்தம் கேட்டது…

16 அடி திரை ஒரே இருட்டாக இருந்தது.

LinkWithin

Related Posts with Thumbnails