Friday, January 4, 2013

மியூஸிக் தெரப்பி.




'இசையால் வசமாகா இதயமெது? இறைவனே இசைவடிவம் எனும்போது' என்று மெய்சிலிர்க்க வைத்திடும்பாடல் வரிகள் ஒரு மிகைப்படுத்தப்பட்ட பாடல் வரிகள் என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு இசையின் மகத்துவம் பற்றி இன்று பல்வேறு ஆராட்சிகள் ஆச்சரியமான முடிவுகளை தந்துகொண்டிருகின்றன.
இசை என்பது மனிதனை மகிழ்வூட்டுவது, மனிதனை மட்டுமன்றி உயிரினங்களை சிலர்க்கவைக்கின்றது, மனித மனங்களின் சோர்வுகள், அலர்ச்சிகளை போக்கி புத்துணர்வை தருகின்றது என்பனவற்றை எல்லாம் கடந்து மருத்;துவரீதியில்க்கூட 
பல நோயாளர்களின் உள, உடல் ஆற்றல்களை மேம்படுத்தி இசையால் நோய்கள் நீங்கும் பண்புகள் பற்றி அண்மையில் ரீடேஸ் டஜஸ்ட்டில் வந்த கட்டுரை ஒன்று மனதை ஆச்சரியம் கொள்ள வைத்தது.

சுமார் எழுபது ஆண்டுகளாகவே இசையில் இருந்து நாம் அடையக்கூடிய வித்தியாசமான நன்மைகள் பற்றி பல நிபுணர்கள் பாரிய ஆராயவுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இவர்களின் ஆராட்சிகளில் இசை மனித, உடல் மற்றும் மனதிற்குள் நடத்தும் ஆச்சரியங்களும், மாறுதல்களும் மிக ஆச்சரியமானதாகவும், எதிர்பார்த்ததைவிட பாரிய அளவு பிரமிப்புக்களை உண்டாக்கக்கூடியதாகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இசை நோயாளர்களுக்கு மிக மிக நன்மையான ஒன்று அடித்துக்கூறுகின்றார்கள் அவர்கள்.

அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் மரினா என்ற பெண் பயங்கர கார்விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டாள். அவள் க்ளீவ்லான்டில் உள்ள செயின்லூக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள்.
சுற்றிலும் அறுவைச்சிகிற்சை நிபுணர்கள். மரினாவின் உடலின் பாகங்களை சிஸ்ரங்களுடன் இணைத்தார்கள். அவை அவளது மூளை அதிர்வுகளையும், இதயத்துடிப்பையும் பதிவு செய்தது. 
மறுபக்கம் இயர்போனை அவள் காதில் பொருத்தி, விவால்டி இசைத்த இசை இறுவெட்டொன்றை இசைக்கவிட்டனர்.

அறுவைச்சிகிற்சையின்போது அறுவை நிபுணர்கள் மற்றொருபுறம் மொஸார்ட், ப்ரொம்ஸ் போன்ற மேதைகளின் இசையினை கேட்க ஏற்பாடாகியிருந்தது.
தியேட்டரில் எந்த ரென்ஸனும் இல்லாமல் இயங்க இசை எமக்கு உதவியது. என்றும் 
நோயாளியின் முளையினை பதிய பொருத்தப்பட்ட சிஸ்ரத்தில் அவரது காதில் இயர்போன் மூலம் இசை சைக்கப்பட்ட பின்னர் ஆச்சரியமான வகையில் முளை அதிர்வுகள் அமைதியானதை அவதானிக்கமுடிந்ததாகவும், நோயாளி ரிலாக்ஸானதை தாம் உணரக்கூடியதாக இருந்ததாகவும் க்ளைட் நாக்ஷ் என்ற பெண் அறுவை சிகிற்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.

'மருந்தைவிட இசை மேலானது, அதனால் வலிநிவாரணி வழங்கப்படுவதை விட இசையினை பயன்படுத்துவது சிறந்தது என ஆயவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இசை நோயின்போது ஏற்படும் கடுமையான சிக்கல்களை தவிர்க்க உதவுகின்றது.
நோயாளியின் ஆரோக்கியத்தை மே;படுத்துகின்றது. நோயாளி மருத்துமனையில் தங்குவதற்கு அதிகநாள் எடுப்பதை தவிர்த்துவிடுகின்றது என்கிறார் நியூயோர்க் மருத்துவமனை நோயியல் நிபுணர் டாக்டர் மத்யூலி.

கடுமையான தலைவலியில் இருந்து நிவாரணம்பெற இசை உதவும். இரத்த அழுத்தத்தை குறைக்கவும், சுவாசத்தை சீராக்கி மன இறுக்கத்தை இல்லாதொழிக்கவும் வைக்கும்.

சூசன் கோல்ஸ்கி என்ற பெண்ணுக்கு முதற்பிரசவம். பிரசவிடுதியில் இரண்டு நாட்களுக்கும் மேலாக வலியினால் பெரும் அவதிப்பட்டாள். வலி பொறுக்கமுடியாமல் அவள் அவதிப்பட்டபோது, பீத்தோவான், பார்க் ஆகியோரின் இனிய இசையினை  மாறிமாறி ஒலிக்கவிட்டனர்.
சூசன் சாந்தமாகினாள் பிரசவிக்கின்ற கட்டத்தில் ப்ரொம்ஸின் ஸிம்பொனி வரவேற்புடன் குழந்தை உலகிற்கு வந்தது.

புற்றுநோயாளிகள் டாக்டர்களிடம்பேசுவதற்கு நிறைய யோசிப்பார்கள், இசைச்சிகிற்சை அவர்களுடனான தகவல் தொடர்புகளை இலகுபடுத்தி சிகிற்சையின்போது நோயாளிகளை ஒத்துளைக்கவைக்கின்றது.

அமெரிக்க மாநிலமான மேரிலான்டில் பள்ளிக்கூடமொன்றில் மூளை வளர்ச்சி குறைந்த, உணர்வுகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இசையிலும் நடனத்திலும் பயிற்சி அளிக்கின்றார்கள்.

நரம்புக்கோளாறு காரணமாக பேசவோ அசையவோ முடியாதவர்கள்கூட இசையின் அற்புதத்தால் ஆடவும் பாடவும் செய்கின்றார்கள்.
மூளைக்கோளாறுகளை சீரழிவில் இருந்து தடுத்து ஆரோக்கியத்துடன் இயங்கச்செய்யவும் இசை உதவுகின்றது.
தமக்கு பிடித்தமான இசையினை தொடர்ந்து கேட்கும்போது ஸ்ரோக் உள்ளவர்களும் குணமாக முடிவதாக தெரியவந்துள்ளது.

சோக நிமிடங்களை மகிழ்ச்சியாக்குவது இசை. அதை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமபோது அதன் சக்தியும் கூடுதலாக இருக்கும்.
இசை நோய் பற்றிய கவலையினை மனதில் இருந்து அகற்றும். மன இறுக்கத்தை குறைக்கும். பிரச்சினைகளை இலேசாக்கும்.
எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Realtor Ramanan said...

///சோக நிமிடங்களை மகிழ்ச்சியாக்குவது இசை. அதை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமபோது அதன் சக்தியும் கூடுதலாக இருக்கும்//

கடந்த பல வருடங்களாக இசையோடு இணைந்த வாழ்வாகிப் போன நாட்களில் இதனை முழுமையான உணர்நதிருக்கிறேன். இசை பற்றிய ஆழமான விடயங்களை பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழத்துகளும்

LinkWithin

Related Posts with Thumbnails