Friday, July 10, 2009

வரலாற்றில் தொடர்ச்சியாக அமெரிக்கத் தலைவர்களால் ரஷ்யாவுக்கு வைக்கப்படும் செக் மேட்ஸ்


1991 ஆம் ஆண்டுகளின் முன்னதாக உலகம் இரண்டு வல்லாதிக்க சக்திகளுக்கு கீழ்ப்பட்டதாக இருந்துவந்தது. சோவியத் ஜூனியன் என்ற ஒரு பரந்த தேசம், பல வரலாற்று புரட்சிகளுக்கும், புதிய சிந்தனை வடிவங்களுக்கும், தாய் நிலமாக இருந்துவந்தது.
மறுபக்கம் முதலாளித்துவத்தால் உச்ச வழர்ச்சியை வேகமாகவும், தமது தந்திரங்களாலும், அடைந்துகொண்டிருந்த அமெரிக்கா. “இந்த இரண்டு வல்லரசு நாடுகளுக்கிடையில் ஏனைய நாடுகள்” என்றிருந்தது அன்றைய உலகம்.
ஆனால் அதன் பின்னர் சோவியத் ஜூனியன் என்ற தேசம் பல துண்டுகளாக உடைக்கப்பட்டது. உண்மையில் சொல்லப்போனால் அமெரிக்கா அப்போதுதான் உண்மையான சந்தோசத்தை அடைந்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


சோவியத் ஜூனியன் உடைவுக்கு அடிகோலிய ரஷ்ய ஏகாதிபத்திய பணக்காரர்களும், உயர் மத்தியதர வர்க்கமும், ரஷ்ய பொருளாதாரத்தை முதலலாளித்துவ பாதையில் கொண்டு செல்லும் போது, தாம் அமெரிக்க முன்மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார்கள். இது உலகெங்கும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு தான், அவர்களது இயற்கையான வர்க்க குணாம்சம். அதற்கு ரஷ்யர்களும் விதிவிலக்கல்ல.
ஆரம்பத்தில் புதிய சந்தைகளை தேடும் அமெரிக்க முதலீட்டாளர்களையும், அதிக செலவை வைக்கும் ஆலோசகர்களையும், ரஷ்யர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர். மேலைத்தேய கல்வி, முகாமைத்துவம், வர்த்தக நடைமுறை போன்றவற்றை தாமும் பின்பற்ற விரும்பினர். தாம் முன்பு கம்யூனிச நாடாக இருந்த படியால் தான் மேற்குலகம் தம்மை எதிரியாக பார்த்ததாகவும், தற்போது தாமும் அவர்களின் முதலாளித்துவம், ஜனநாயகம் ஆகியவற்றை வரித்துக்கொண்ட, உற்ற நண்பர்களானதாகவும் கருதிக்கொண்டனர்.


ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டனர் என்பது உண்மை. “இந்த 21 ஆம் நூற்றாண்டுப் பனிப்போர்" முதலாளித்துவம் வேண்டுமா? அல்லது கம்யூனிசம் வேண்டுமா? என்று ஏதோவொரு அரசியல் கொள்கை அடிப்படையில் வரவில்லை. தமது அரசியல்-பொருளாதார நலன்களை மிக அப்பட்டமாக காட்டிக்கொள்ளும் வல்லரசு போட்டி இது. இங்குதான் அமெரிக்கா தொடர்ந்தும் ரஷ்யாவை அமத்தி வைத்திருக்கும் தந்திரங்களை கையாளத்தொடங்கியது.
பழைய விடயங்கள் அனைவரும் அறிந்த விடங்களாகவே இருப்பதினால். அண்மைக்கால நிலவரங்களில் இருந்து நாம் பார்க்கலாம்.






ஜோர்ஜ் புஷ்ஸின் காலம்.

போலந்து, செக் குடியரசில் அமெரிக்கா நிறுவிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நிலையத்தை கண்காணிக்க ரஷ்ய பரிசோதகர்களை அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அமெரிக்காவின் புஷ் நிர்வாகம் உடனடியாக மறுத்தது. (சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட போது, அங்கிருந்த ஏவுகணை நிலையங்களில் அமெரிக்க பரிசோதகர்கள் நிறுத்தப்பட்டனர்.) செக்-போலந்து ஏவுகணைகள் ஈரானை குறிபார்க்கின்றன என்றும், ரஷ்யா இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் அமெரிக்கா அப்பொது கூறியது. செக் குடியரசில் மக்கள் ஆதரவுடன் இடதுசாரி கட்சிகள் நடத்திய அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ரஷ்யா நிதியுதவி வழங்குவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

தொடர்ந்தும் ஜோர்ஜ் புஷ்ஜினுடைய வெளிப்படையாக ரஷ்யாவுக்கு எதிரான வெளியுறவுக்கொள்கைகளால் மீண்டும் பனிப்போர் நிகழத்தொடங்கியது என்றே சொல்லலாம். இதன் விழைவுகளாக ரஷ்யாவும் தன்பாட்டுக்கு சும்மா இருக்காமல்,
அமெரிக்காவுக்கு ஆத்திரம் வரத்தக்க செயல்களை புரிந்தது,
ரஷ்யா, கியூபாவை அணுகி இராணுவ-பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது பற்றி கேட்ட போது, கியூபா தயங்கியது. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா மட்டுமே , ரஷ்யாவுடன் ஒருங்கிணைந்த இராணுவ மற்றும் கடற்படை ஒத்திகைகளை நடாத்தியிருந்தது.
அணுவாயுதம் பொருத்திய "மஹா பீட்டர்" யுத்த கப்பலும், அதனோடு இரண்டு விநியோக கப்பல்களும், வட ரஷ்ய துறைமுகமொன்றில் இருந்து வெனிசுவேலா நோக்கி செல்லும் வழியில், சிரியாவின் மத்தியதரைக்கடல் துறைமுகத்திற்கும் விஜயம் செய்தது. இதற்கிடையே சிரியாவுக்கு செய்மதி படங்களை கொடுப்பதாக, இஸ்ரேல் குற்றச்சாட்டு வேறு உள்ளது. ஜோர்ஜியாவுக்கு அமெரிக்கா யுத்தகப்பல்களை அனுப்பியதன் பதிலடியாகவே, ரஷ்யா-வெனிசுவேலா கடற்படை ஒத்திகை அமெரிக்காவின் மூக்கு நுனியின் கீழ் இடம்பெற்றது.

அந்த சூழ்நிலைகளில் வெனிசுவேலா அதிபர் சாவேஸ், மொஸ்கோ விஜயத்தின் போது போடப்பட்ட ஒப்பந்தப்படி, ரஷ்யா அணு உலை அமைக்கும் தொழில்நுட்பத்தை வெனிசுவேலாவிற்கும் விற்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் பெற்றோலிய ஏகபோக நிறுவனமான புயளிசழஅ, வெனிசுவேலாவின் தேசிய பெற்றோலிய நிறுவனமான Pனுஏளுயு ஆகியன பொது வேலைத்திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனர். அதேநேரம் வெனிசுவேலா ஆயுதங்கள் வாங்கவென ரஷ்யா பில்லியன் டாலர் கடனுதவி வழங்குகின்றது. இது மீண்டும் முன்புபோல ஆயுத உற்பத்திப்பெருக்கத்திற்கு வழிவகுத்தது. ரஷ்யா தனது பாதுகாப்பு செலவினத்தை 26 சத வீதமாக அதிகரித்தது.
அதனைத்தொடர்ந்து ஜோர்ஜிய பிரச்சினையின் போது, மேற்கத்திய ஊடகங்கள் "ரஷ்ய ஆக்கிரமிப்பு" என்று கூறி ரஷ்யாவை வில்லனாக சித்தரித்த விதம், ரஷ்ய ஆட்சியாளர்களை வெறுப்படைய வைத்தது. அந்த பிரச்சினையில் ஜோர்ஜியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக ஒரு பக்க சார்பான செய்தி வெளியிட்டதாகவும், இனிமேல் மேற்குலகம் "ஊடக சுதந்திரம்" பற்றி எமக்கு பாடம் சொல்லித்தர வேண்டாம், என்று ரஷ்ய ஊடகவியாலாளர்கள் வெளிப்படையாகவே கூறினர்.
மோத்தத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அனைத்து விடையங்களிலும் தமது வெளியுறவுக்கொள்கைளால் மூக்கை நுளைத்து சொதப்பியதுபோல ரஷ்ய விடயத்திலும் பல சொதப்பல்களை செய்துவிட்டே பதவியில் இருந்து ஓய்வு பெற்றுச்சென்றார்.

ரஷ்யா தொடர்பாக ஒபாமாவின் காய் நகர்த்தல்.

ஆனால் தற்போது பதவி ஏற்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, தனனை ஒரு மிதவாதியாக உலகத்திற்கு காட்டிக்கொள்வதைப்பொலவே ரஷ்யாவுடனும் நடந்துகொள்கின்றார். எனினும் ரஷ்யா தொடர்பாக அவர் மிக நதானமடனும், அதேநேரம் முன்னெச்சரிக்கையுடனுமே காய்களை நகர்த்தவதாக மேற்குலக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமெரிக்காவை விரோதமாக கருதும் நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாகவும், அந்நாடுகள் அமெரிக்கா குறித்து கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்களை களையும் நோக்குடனும் செயல்பட்டு வருகிறார் ஒபாமா! என்பது வெளிப்புறத்தோற்றமாக இருந்தாலும் கூட, ஜோர்ஜ் புஷ்ஸினதும் அமெரிக்கர்களுக்கே உரிய கர்வங்களுக்கும் அடிபணியாமல் ஒபாமா செயற்படுவதை அமெரிக்க எதிர் கட்சினரோ அல்லது சி.ஐ.ஏ யோ எச்சரிக்கை செய்யாது பார்த்துக்கொண்டிருப்பது ஒபாமா வேறுவிதமான திட்டங்களுடன் அமெரிக்காவின் கொள்கைகளில் இருந்து விலகாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுலவதைப்போல் செயற்பட்டுவருவதாகவே எண்ணத்தோன்றுகின்றது.

உண்மையில் கறுப்பினத்தவராக இருக்கம் ஒபாமா, தன்மேல் நம்பிக்கை வைத்து அந்த நாட்டின் தலைவராக தம்மை ஆக்கிய பெரும்பான்மையான வெள்ளையர்களுக்கும், அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் தமது விசுவாசத்தை காட்டவேண்டியவராகவும் காட்டுபவராகவுமே இருப்பார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

இந்த நினையிலேயே இந்த வாரம் இரண்டுநாள் உத்தியோகப+ர்வ விஜயமாக அவர் மொஸ்கோ சென்று பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மோசமாகியுள்ள உறவை சரி செய்து புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கத்தோடு இருநாடுகளின் தலைவர்களும் புதிய உடன்பாடுகளை அறிவித்தனர்;.
ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்தும் தங்கள் அணு ஆயுத உற்பத்தியைக் குறைப்பது குறித்து ஒருமித்த கருத்துக்கு வந்திருப்பதாக ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வேடெவ்வும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் அறிவித்துள்ளனர்.
இவ்வாண்டு இறுதியில் காலாவதியாகும் அணு ஆயுத உற்பத்தி (1991 ஆம் ஆண்டு செய்யப்பட்டது) உடன்படிக்கையை புதுப்பித்துக் கொள்ள இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அணு ஆயுத உற்பத்தியைப் பெரும் அளவில் குறைக்கவும் ரஷ்யாவின் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க இராணுவ உதவி அளிக்கப்படுவதற்கும் இருவரும் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளனர்.

ஆனால் அமெரிக்க அதிபர் என்னும் முறையில் முதல் முதலாக மாஸ்கோவிற்கு சென்றிருந்த ஒபாமா, கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணை தற்காப்பு மையத்தை அமைக்கும் திட்டம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதோடு முன்னாள் சோவியத் நாடான ஜியார்ஜியாவிற்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இருப்பது தொடர்பான மொஸ்கோவின் கொள்கை குறித்தும் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் ஜோர்ஜியா மீது ரஷ்யா போர் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உறவு சீர்குலைந்திருப்பதை இருவருமே ஒப்புக் கொண்டதாக செய்தியாளர் சந்திப்பின்போது ஒபாமா குறிப்பிட்டார்.
கிரேம்லினில் நடந்த கூட்டுச் செய்தியாளர் மாநாட்டில் ரஷ்ய அதிபர் மெட்வேடெவ்வும் உடன் இருந்தார். தொடர்ந்து ஒபாமா அங்கு பேசுகையில் அமெரிக்க - ரஷ்ய உறவுகளை மறுசீரமைப்பதில் தங்களுக்கிடையில் உடன்பாடு கண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

தாம் பதவியேற்ற 6 மாதங்களுக்குப் பிறகு இந்த உடன்பாடு தங்களுக்குள் ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 1991ஆம் ஆண்டில் அணு ஆயுத களைவு குறித்த உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டது.
அந்த உடன்படிக்கை இந்த ஆண்டு இறுதியுடன் காலாவதியாகிறது. அதனைப் புதுப்பிக்கும் வகையில் இரு அதிபர்களுக்கும் இடையே உடன்பாடு காணப்பட்டிருக்கிறது.
அதன் மூலம் கணிசமான அளவுக்கு இரு நாடுகளுமே அணு ஆயுத உற்பத்தியைக் குறைப்பது என முடிவு செய்துள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி பழைய உடன்படிக்கை காலாவதியாகிறது.
ஆனால் அதை புதுப்பிக்க இரு நாட்டுத் தலைவர்களும் உடன்பாடு கண்டிருந்தாலும் எப்போது புதிப்பது என்னும் தேதியை இதுவரை நிர்ணயிக்கவில்லை.

இதேவேளை மற்றும் ஒரு முக்கிய கட்டமாக ஒபாமாவின் இந்த பயணத்தையொட்டி அமெரிக்காவும் , ரஷ்யாவும் செய்து கொண்ட உடன்பாடு குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் போரின்போது காணாமல் போன இரு நாட்டு வீரர்கள் மற்றும் கைதிகளின் நிலை குறித்து விசாரித்து அறிய, கடந்த 1992 ஆம் ஆண்டு இரு நாடுகளும் சேர்ந்து ஏற்படுத்திய ஆணையத்தை மீண்டும் புதுப்பிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போர், கொரிய போர் , வியட்நாம் போர் மற்றும் ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் மறைமுக போர்களில் காணாமல் போன மற்றும் கைதிகளின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கத்துடனேயே இந்த ஆணையம் செயல்படும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக ஆழமாகப்பார்த்தால் அமெரிக்காவிற்கு பல நன்மைகளை தரவல்ல சில பேச்சுக்களையும், ஒப்பந்தங்களையும் ரஷ்யாவுடன் செய்ய மெல்லமாக அதேவேளை மிகவும் புத்திசாலித்தனமாக ஒபமா முன்னிறுத்தி அதில் வெற்றி கண்டுள்ளார்.
இதேவேளை தமது ரஷ்ய வியத்தின் ஒரு கட்டமாக மொஸ்கோ இளம் பட்டதாரிகளை சந்தித்துப்பெசிய அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, வலுவான, அமைதியான, வளமான நாடாக ரஷ்யா விளங்குவதையே அமெரிக்கா விரும்புகிறது என்றும் கூறியிருக்கின்றார். இது சிந்திக்க வைக்கின்றது.

Thursday, July 9, 2009

பிறரின் சிரிப்புக்காக முட்டாள்ப்பட்டத்தையும் சந்தோசமாக ஏற்கும் சர்தாஜிகள்.


மனிதனது உணர்வின் வெளிப்பாடுகளில், மகிழ்ச்சிக்குரிய ஒரு புள்ளியாக நகைச்சுவைகள் உள்ளன. உண்மையிலேயே இன்றைய இயந்திரத்தனமான உலகத்தில் சிரிப்பினை தொலைத்துவிட்டு இறுகிய முகத்துடன் மனிதன் எதையோ நோக்கி பலவற்றை தொலைத்துக்கொண்டு செல்கின்றான்.
விஞ்ஞானம் இதை கூர்ப்படைகின்றான், நாகரிகம் அடைந்து செல்கின்றான் என்கின்றது. உண்மையில் மனிதன் நாகரிகம் அடைந்துவிட்டானா? என்ற கேள்விக்கு உண்மையான பதில் இன்னும் இல்லை என்பதாகே இருக்கும்.


இந்த நிலையில் பண்டைய காலங்களில் இருந்து ஒவ்வொரு இனத்தினரும், நகைச்சுவை உணர்வுகொண்டவர்களாக பல நகைச்சுவை பாத்திரங்களை முன்னிறுத்தி நகைச்சுவைகளை எழுதியும் சொல்லியும் வந்தனர்.
பரமார்த்த குருவும் சிஷ்யர்களும், முல்லாவின் கதைகள், மாதனமுத்தா கதைகள்,
பலரையும் கவர்ந்த சர்தாஜி ஜோக்ஸ்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்தியாவிலே பலவேறு தரப்பட்டோரினாலும், பல ஊடகங்களில்க்கூட “சர்தாஜி ஜோக்ஸ்” என்பது மிகப்பிரபலமாக சொல்லப்பட்டு அனைவரினதும் அபிமானத்தைப்பெற்றதாக இன்றும் உள்ளது.


அரசியல், மதத் தீவிரவாத சக்திகளும், இந்திய கொள்ளைவகுப்பு பார்ப்பன் ஆதிக்க சக்திகளும் ஆரம்பங்களில் இருந்து தமக்கு பெரும் இட்டுக்கட்டாக இன ரோசத்துடன் எதிர்த்த சீக்கியர்களை (இன்று நிலை வேறு) வேண்டும் எனவே அவமானப்படுத்துவதற்காகவே சர்தாஜிகளை முட்டாள்களாக்கி சந்தோசப்பட்டுக்கொண்டனர் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
இது குறித்து ஊடகம் ஒன்று நன்கு படித்த, உயர் பதவியில் இருக்கும் சீக்கியர்கள், சீக்கிய உயர் கல்வி கற்கும் மாணவர்களிடம் எடுத்த கருததுக்கணிப்பில் “ மற்றவர்களின் கண நேர சிரிப்புக்கு, துக்கத்தை மறந்த அவர்கள் முகம் மலர்வதற்கு ஏதோ ஒருவகையில் நாம் காரணமாக சித்தரிக்கிகப்படுகின்றோம். அந்தவகையில் எம்மை முட்டாள்கள் ஆக்கினாலும் எம்மால் மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படமால் அவர்களுக்கு மனமகிழ்ச்சியையே வழங்ககின்றோம்” என்று அவர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான அவர்களது கருத்து அவர்களின் பெருந்தன்மையினையே காட்டுகின்றது.

சரி, தலைப்பில் இருந்தே சர்தாஜி ஜோக்ஸை படிக்கவேண்டும் என்று ஆர்வமாக இருக்கும் உங்களின் எணத்தை புரிந்துகொண்டு, அனைத்து மேன்மக்களான சர்தாஜிகளிடமும், அவர்களின் எண்ணப்படியே இந்த நகைச்சுவைகளையும் மற்றவர்களின் சிரிப்புக்காக சர்தாஜி ஜோக்ஸ்களில் தேர்தெடுக்கப்பட்ட சில ஜோக்ஸ்ஸை உங்களுடன் பகிர்கின்றேன்.

நெப்போலியனும் சர்தாஜியும்.

நம்ம சர்தாஜி ஒருநாள் நூலகத்திற்கு சென்றிருந்தார். அங்கே நெப்போலியனின் படமும் போட்டு..”முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்ற அவரது வசனமும் போடப்பட்டிருந்தது. அதை வாசித்த சர்தாஜி, நெப்போலியனின் படத்தைப்பார்த்து
இப்ப நீங்கள் இதைச்சொல்லி என்ன பிரியோசனம்.? அகராதியை வாங்க முதல் நீங்கள் அதை கண்டிப்பாக சரிபார்த்திருக்கவேண்டும். வாங்கிவிட்டு குறைகூறக்கூடாது என்றார்.

டிடக்ரிவ் சர்தாஜி

புலனாய்வு நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதற்காக நம்ம சர்தாஜி விண்ணப்பித்திருந்தார். சர்தாஜிக்கு அந்த நிறுவனத்தில் இருந்து நேர்முகப்பரீட்சைக்கு தோற்றுமாறு அழைப்பு வந்தது. சர்தாஜி அங்குவந்து காத்திருந்தார். அவருடன் ஒரு இத்தாலியரும், ஒரு யூதரும் அதேவேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தனர். முதலில் உள்ளே போன யூதரிடம்….புலனாய்வு அதிகாரி..ஜேசுவைக்கொன்றவர்கள் யார்? என்று கேள்வி கேட்டார்? யூதர் அது நிற்சயமாக ரோமர்கள்தான் என்றார்..சரி நீங்கள் போகலாம் என்றுவிட்டு அடுத்ததாக இத்தாலியரை அழைத்தார் புலனாய்வு அதிகாரி…அவரிடமும் ஜேசுவைக்கொன்றவர்கள் யார்? என்று கேட்டார். நிச்சயமாக அது யூதர்கள் தான் என்று அடித்துக்கூறினார் இத்தாலியர்…சரி..நீங்கள் போகலாம் என்று விட்டு கடைசியாக நம்ம சர்தாஜியை கூப்பிட்டார் புலனாய்வு அதிகாரி.. சர்தாஜியிடமும் ஜேசுவைக்கொன்றவர்கள் யார்? என்று கேட்டார். கொஞ்சம் யோசித்த சர்தாஜி எனக்கு கொஞ்ச நாட்கள் தருகின்றீர்களா கண்டுபிடித்து சொல்கின்றேன் என்றார். அதிகாரியும் சரி போய்வாருங்கள் அனால் அடுத்த வாரம் இதே நாளுக்கிடையில் சொல்லவேண்டும் என்றார்.
வீடு செல்லும் வழியிலேயே சர்தாஜியைக்கண்ட அவரது மனைவி…எப்படி நேர்முகத்தேர்வு? எனக்கேட்டார்..அதற்கு சர்தாஜி…ம்ம்ம்ம்..ரொம்ப நல்லது..எனக்கு வேலை கிடைத்துவிட்டது. ஒருவரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கவேண்டி உள்ளது. உன்னுடன் கதைக்க நேரம் இல்லை இன்னும் ஒருவாரத்துக்குள் அவர்களை பிடிக்கவேண்டும் என்றுவிட்டு ஓடினார் சர்தாஜி.

நேர்முகப்பரீட்சையிலும் கொப்பி அடித்த சர்தாஜி

நம்ம சர்தாஜி அரசாங்க வேலை ஒன்றுக்காக விண்ணப்பித்து நேர்முகப்பரீட்சைக்காக வெளியில் காத்திருந்தார். உள்ளே இன்னும் ஒருவர் நேர்முகப்பரீட்சையை சந்தித்துக்கொண்டிருந்தார்.
நிர்வாகி - இந்தியாவுக்கு எப்போ சுதந்திரம் கிடைத்தது?
மற்றவர் - பல ஆண்டுகள் தள்ளிப்போய் இறுதியில் 1947 இல்.
நிர்வாகி -இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர் யார்?
மற்றவர் - பலர்..இதில் ஒருவரை சொல்லி மற்றவர்களை அவமதிக்க
என்னால் முடியாது.
நிர்வாகி – நல்லது. எயிட்ஸ் நோயை தடுக்கமுடியுமா?
மற்றவர் - இது பற்றிய பரிசோதனைகள் நடந்துவருகின்றன. எனவே
அவை வெளியிடப்பட்டதும் திட்டவட்டமாக சொல்கின்றேன்.
மேற்படி மற்றவரின் பதிலை கேட்ட நிர்வாகிகள் அவரை கைலாகுகொடுத்து வாழ்த்துவதையும், மெச்சுவதையும் கண்ணாடியினூடாக நம்ம சர்தாஜி பார்த்துவிட்டார். அவர் வெளியில் வந்ததும் அவரிடம் ஓடிச்சென்று..நண்பரே உள்ளே அவர்கள் எத்தனை கேள்வி கேட்டார்கள்? என்று கேட்டார்..அவரும் 3 என்றார்…..சரி அப்படி என்றால் அந்த 3 கேள்விக்கும் நீங்கள் சொன்ன பதிலை எனக்கு சொல்லுங்கள் என்றார் அவரும் சொன்னார்..
அடுத்து உள்ளே போன நம்ம சர்தாஜி நிர்;வாகியிடம் தெரிவித்தவைகள்
நிர்வாகி – நீங்கள் எப்போது பிறந்தீர்கள்?
சர்தாஜி - பல ஆண்டுகள் தள்ளிப்போய் இறுதியில் 1947 இல்.
நிர்வாகி – உங்களது தந்தை பெயர் என்ன?
சர்தாஜி - பலர்..இதில் ஒருவரை சொல்லி மற்றவர்களை அவமதிக்க
என்னால் முடியாது.
நிர்வாகி – உனக்கு என்ன பைத்தியமா?
சர்தாஜி - இது பற்றிய பரிசோதனைகள் நடந்துவருகின்றன. எனவே
அவை வெளியிடப்பட்டதும் திட்டவட்டமாக சொல்கின்றேன்.

பில்கேட்சுக்கு சர்தாஜி எழுதிய கடிதம்.

ஐ.பி.எம் கணனி ஒன்றை வாங்கிய சர்தாஜி அதில் எம்.எஸ்.ஒபிஸ், மற்றும் விண்டோஸ் ஆகியவற்றை ஆராய்து அதில் உள்ள குறைபாடுகள் பற்றி மைக்கிரோ ஸொப்ட் அதிபர் பில் கேட்சுக்கு எழுதிய கடிதத்தை படித்தப்பாரங்கள்…

Dear Mr Bill Gates,

This letter is from Banta Singh from Punjab. We have bought a
computer for our home and we found problems, which I want to bring to
your notice.

1. After connecting to internet we planned to open e-mail account and
whenever we fill the form in Hotmail in the password column, only ****** appears, but in the rest of the fields whatever we typed appears, but we face this problem only in password field.

We checked with hardware vendor Santa Singh and he said that there is no problem in keyboard. Because of this we open the e-mail account with password *****.

I request you to check this as we ourselves do not know what the
password is.

2. We are unable to enter anything after we click the 'shut down '
button.

3. There is a button 'start' but there is no "stop" button. We request you to check this.

4. We find there is 'Run' in the menu. One of my friend clicked 'run' has ran upto Amritsar! So, we request you to change that to "sit", so that we can click that by sitting.

5. One doubt is that any 're-scooter' available in system? As I find only 're-cycle', but I own a scooter at my home.

6. There is 'Find' button but it is not working properly. My wife lost
the door key and we tried a lot for tracing the key with this ' find',
but unable to trace. Is it a bug??

7. Every night I am not sleeping as i have to protect my 'mouse' from
CAT, So i suggest u to provide one DOG to protect from the cat.

8. Please confirm when u are going to give me money for winning
'HEARTS' (playing cards in games) and when are u coming to my home to
collect ur money.

9. My child learnt 'Microsoft word' now he wants to learn 'Microsoft
sentence', so when u will provide that?

10. Hey, I brought computer, cpu, mouse and keypad there is only one
icon with 'MY Computer', where is remaining ?

11. And in 'MY Pictures' there is not even single photo of mine, So when u will keep my photo in that.

Thanks
Banta Singh…

நாள்பூராகவும் வானத்திலேதானா???

மும்பையில் இருந்து ரொரன்டோவுக்கு விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார் நம்ம சர்தாஜி. நீண்ட தூரம் என்பதால் தூங்கியிருந்த சர்தாஜிக்கு விமானியின் ஒலிபெருக்கி ஊடான அழைப்பு திடுக்கிடவைத்தது.
கனவான்களே…சிமாட்டிகளே…எமது விமானம் இன்னும் 15 நிமிடத்தில் ரொன்டோ விமானநிலையத்தை அடைந்துவிடும் என்றார் விமானி…
அடுத்த 10ஆவது நிமிடத்தில் கனவான்களே…சிமாட்டிகளே…எமது விமானத்தில் 4 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன அவற்றில் ஒன்று வேலை செய்ய முடியாமல் போய்விட்டது ஆகவே இன்னும் ஒரு மணித்தியாலம் தாமதித்தே நாம் ரொடன்டோவை அடைவோம். பயப்படத்தேவையில்லை எமது பொறியிலாளர்கள் செயற்பட்டுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார் விமானி…
அடுத்த ஒரு மணித்தியாலத்தில்… கனவான்களே…சிமாட்டிகளே…எமது விமானத்தில் அடுத்த ஒரு இன்ஜினும் வேலை செய்யவில்லை எனவே வெறும் இரண்டு என்ஜினுடன் நாம் பயணிக்கவேண்டியுள்ளதால் நாம் ரொரன்டோவைச்சென்றடைய இன்னும் 2 மணித்தியாலங்கள் ஆகும்.. பயப்படத்தேவையில்லை எமது பொறியிலாளர்கள் செயற்பட்டுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார் விமானி…
அடுத்த இரண்டாவது மணித்தியாலத்தில் கனவான்களே…சிமாட்டிகளே…எமது விமானத்தில் அடுத்த ஒரு இன்ஜினும் வேலை செய்யவில்லை எனவே வெறும் ஒரு என்ஜினுடன் நாம் பயணிக்கவேண்டியுள்ளதால் நாம் ரொரன்டோவைச்சென்றடைய இன்னும் 4 மணித்தியாலங்கள் ஆகும்.. பயப்படத்தேவையில்லை எமது பொறியிலாளர்கள் செயற்பட்டுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார் விமானி…
பொறுக்கமுடியாத சர்தாஜி..எழுந்து நின்று அடுத்த என்ஜினும் பழுதானால் நாங்கள் நாள்பூராவும் வானத்தில்த்தான் நிற்கவேண்டிவரும் போல என்றார்…

sardar wrote an essay
Our sardar had to learn two essays for the exam. One is about friend and the other is about father. He had studied only about friend. But in the exam the essay asked was about father. Sardar dint give up. He replaced father with friend in the essay and it read:

"I am a very fatherly person, I have lots of fathers, My best father is my neighbor."

He ended the essay as, "A father in need is a father in deed....!"

Wednesday, July 8, 2009

உலகின் கிரிக்கட் பேராட்டம் ஆஷஸ் தொடர்.


இங்கிலாந்து - அவுஸ்ரேலியா அணிகள் இடையே கடந்த 122 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க ஆஷஸ் ரெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தொடர் நடைபெறுகிறது.
இந்தவகையில் இம்முறை இந்த ஆஷஸ் தொடரின் போட்டிகள் இன்று ஜூலை 08, புதன்கிழமை இங்கிலாந்தின் ஷோபியா கார்டின் மைதானத்தில் ஆரம்பமாகின்றது.
இங்கிலாந்தில் ஐந்து ரெஸ்ட் தொடர்களில் ஆடுவதற்காக ரிக்கி பொன்டிங் தலைமையிலான அவுஸ்ரேலிய அணியினர் இங்கிலாந்துக்கு வந்துள்ளனர்.
கடைசியாக நடந்த கடந்த 2006-07-ம் ஆண்டு, ஆஷஸ் கோப்பையை 5-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா முழுமையாக கைப்பற்றியது அறிந்ததே.


ஆனால் இம்முறை அவுஸ்ரேலியாவுக்கு வெற்றி அவ்வளவு இலகுவானதாக இல்லை என பல விமர்சகர்களும் கருத்துக்கூறியுள்ளனர். முக்கியமாக அண்மைய நாட்களில் அவுஸ்ரேலியா அணியின் வெற்றிப்பாதைகள் மூடப்பட்டு. திடீர் வீழ்ச்சிகளை கண்டுவருவது, முந்தைய ஆஷஸ் தொடரில் விளையாடிய அவுஸ்ரேலியாவின் வீரர்களில் கில்கிறிஸ்ட், வார்னே, மெக்ராத், ஹைடன், லாங்கர், மார்ட்டின் ஆகிய நட்சத்திரங்கள் ஓய்வு பெற்று விட்டனர். இதனால் அவுஸ்ரேலிய அணி அனுபவம் குறைந்த அணியாகவே தெரிகிறது. தவிர, இடது விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ முதலாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிரெட்லீ விலகல் அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. என்றாலும் அவுஸ்ரேலிய அணித்தலைவர்; பொண்டிங், துணை தலைவர் மைக்கல் கிளார்க், சைமன் கேடிச், ஜோன்சன், ஸ்டூவர்ட் கிளார்க் உள்ளிட்டோரை அணி நிர்வாகம் அதிகமாக நம்புகிறது.
எனினும் தற்போதும் ஐ.சி.சி. ரெஸ்ட் தரவரிசையில் அவுஸ்ரேலிய அணி 128 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 119 புள்ளியுடன் தென்ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த ஆஷஸ் தொடரை வென்றால் மட்டுமே அவுஸ்ரேலிய அணியால் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். தொடர் சமனில் முடிந்தால் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விடும். எனவே நம்பர் வன் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.


இதேவேளை இங்கிலாந்து அணியினை எடுத்துக்கொண்டால், சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்கு கூடுதல் நெருக்கடியாகும். அந்த அணி அன்ட்ரூ ஸ்டிரொஸ் தலைமையில் களம் இறங்குகிறது. பீட்டர்சன், பிளின்டோவ் அணியின் நம்பிக்கை தூணாக உள்ளனர். குறிப்பாக பீட்டர்சனை கண்டு தான் அவுஸ்ரேலிய அணி மிரளுகிறது. கடந்த இரு ஆஷஸ் தொடரில் மட்டும் அவர் 963 ரன்கள் குவித்து இருக்கிறார். அதில் 2005-ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை 2-1 என்ற கணக்கில் வெல்ல பீட்டர்சன் முக்கிய காரணமாக இருந்தார்.
எனவே அவர் தான் அவுஸ்ரேலியாவின்; பிரதான இலக்காக இருக்கிறார். புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஒனியன்ஸ், சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் ஆகியோர் சமீப காலமாக பிரகாசித்துவருவது அணிக்கு சாதகமான விடயமாகும்.
இம்முறை ஐந்து ரெஸ்ட் தொடர்களை உள்ளடக்கியதான இந்தப்போட்டித்தொடரில்,
முதலாவது ரெஸ்ட் போட்டி இன்று ஜூலை 08 புதன்கிழமை ஷோபியா கார்டின் மைதானத்திலும்
இரண்டாவது ரெஸ்ட் போட்டி ஜூலை 16 ஆம் திகதி வியாழக்கிழமை லோட்ஸ் மைதானத்திலும்,
மூன்றாவது ரெஸ்ட் போட்டி ஜூலை 30 ஆம் திகதி வியாழக்கிழமை எஜ்பஷ்டன் மைதானத்திலும்
நான்காவது ரெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹெடிங்லே மைதானத்திலும்
ஐந்தாவது ரெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 20ஆம் திகதி ஓவல் மைதானத்திலும் ஆரம்பமாகவுள்ளன.

ஆஷஸ் (சாம்பர்)

கிரிக்கட் விளையாட்டினை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி கிரிக்கட்டின் தாய்வீடாக இங்கிலாந்து உள்ளது. ஆரம்ப காலங்களில் இந்த கிரிக்கட் விளையாட்டினை இங்கிலாந்துக்கு அடுத்ததாக அவுஸ்ரேலியாவே அறிமுகப்படுத்தியது, எனவே முதலில் இந்த இரண்டு நாடுகளே உத்தியோகபூர்வாமாகவும், தமது நாடுகளின் கௌரவத்திற்காகம். “கனவான்களின் ஆட்டம் கிரிக்கட்” என்ற மகுடத்துடன் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில், அவுஸ்ரேலிய அணி 1882 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஓவலில் நடந்த ரெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து மண்ணில் அவுஸ்ரேலியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். சொந்த மண்ணில் அடைந்த தோல்வியால் இங்கிலாந்து மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. “தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்” எனற பத்திரிகை இங்கிலாந்தின் தோல்வியை கிண்டல் செய்து இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தது, அதில் இங்கிலாந்து கிரிக்கெட் செத்து விட்டது

Obituary“ in affectionate remembrance of English cricket which died at the oval, 29th August,1882.deeply lamented by a large circle of sorrowing friends and acquaintances, Rip.NB the body will be cremated and the Ashes taken to Australia..

அதனை தகனம் செய்து அதன் அஸ்தியை (ஆஷஸ்) அவுஸ்ரேலியா தங்களது சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்கிறது என்று கூறியிருந்தது.
அடுத்த முறை இங்கிலாந்து அணி (1882-83) அவுஸ்ரேலியா சென்ற போது, கொண்டு செல்லப்பட்ட அஸ்தியை திரும்ப எடுத்து வருமா? என்று இங்கிலாந்து மீடியாக்கள் கேள்வி எழுப்பி இருந்தன.
ஆந்த முறை இங்கிலாந்து அவுஸ்ரேலியாவுக்கு சென்ற போது இங்கிலாந்து கேப்டன் இவா பிளையிடம் மெல்போன் நகரத்து பெண்கள் தாழி போன்ற சிறிய ஜாடியை வழங்கினர். இதில் கொஞ்சம் சாம்பல் இருந்தது. அது கிரிக்கெட் ஸ்டெம்ப் அல்லது வேல்ஸ்; ஆகியவற்றை எரித்த சாம்பலாக இருக்கலாம் என்று கூறப்பட்டது
இந்த சம்பவங்களுக்கு பிறகு தான் அவுஸ்ரேலிய - இங்கிலாந்து இடையிலான ரெஸ்ட் தொடருக்கு “ஆஷஸ்' என்று பெயரிடப்பட்டு இதுவரை அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது. தாழி போன்ற கோப்பையின் மாதிரி ஒவ்வொரு தொடரின் போதும் வழங்கப்படுகிறது.

அஷஸ் தொடரின் குறிப்புகள்.

இதுவரை 316 போட்டிகள் இரண்டு அணிகளுக்கிடையிலும் இடம்பெற்றுள்ளன.இதில் 131 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது அவுஸ்திரேலிய அணி.இங்கிலாந்து 97 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 88 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
729/6 (டிக்ளேர்) 1930 அவுஸ்திரேலியா
903/7 (டிக்ளேர்) 1938 இங்கிலாந்து

சேர் டொன் பிரட்மன்(அவுஸ்) (1928-1948) 5028 ஓட்டங்கள்
ஜெக் ஹொப்ஸ்(இங்கி) (1908-1930) 3636 ஓட்டங்கள்

சேர் டொன் பிரட்மன் (அவுஸ்) 37 போட்டிகளில் 19 சதங்கள்
ஜெக் ஹொப்ஸ்(இங்கி) 41 போட்டிகளில் 12 சதங்கள்

ஷேன் வோர்ன் (அவுஸ்) 36 போட்டிகளில் 195 விக்கெட்டுகள்
இயன் பொத்தம் (இங்கி) 36 போட்டிகளில் 148 விக்கெட்டுகள்

ஜிம் லேக்கர் (அவுஸ்) 10/53
மெய்லி (இங்கி) 9/121

கிரேக் செப்பல் (அவுஸ்) 35 போட்டிகள் 61 பிடிகள்
இயன் பொத்தம் (இங்கி) 36 போட்டிகள் 57 பிடிகள்

Monday, July 6, 2009

வரலாற்றுப்புகழும் தெய்வீகப்புகழும் கொண்ட நயினாதீவு.


இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு சொந்தமான தீவுகளில் மிகவும் புராதானமானதும், வரலாற்றுச்சிறப்பும் கொண்டது நயினாதீவாகும். முக்கியமாக இந்த தீவின் வரலாறு நாகர்களுடன் தொடர்புடையதாக உள்ள காரணத்தினால் இங்கே எழுந்தருழியிருக்கும் சக்தி நயினை நாகபூஷணி என்ற சிறப்பு பெயரால் சிறப்பிக்கப்படுகின்றாள்.
வரலாற்றுச்சிறப்பு மிக்கதும், 64 சக்தி பீடங்களில் புவனேஸ்வரி பீடமாகவும் விளங்கும் இந்த நயினை நகபூசணியின் தேர்த்திருவிழாவுக்கு இலங்கையின் வட பகுதி மக்கள் அனைவரும் இந்தத்தீவில் ஒன்றுகூடுவது வழக்கமாக உள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து மண்டதீவு, புங்குடுதீவு ஆகிய தீவுகளுக்கு பாலம் உள்ள காரணத்தினால், அவற்றினூடாக வந்து குறிகட்டுவான் என்ற ஏறு துறையில் இருந்து நயினா தீவுக்கு தோணிகளில் பயணிக்கவேண்டும். கடல்வழிப்பயணத்தின் ஊடாக சென்று நாகபூசணியினை தரிசிப்பது உள்ளத்தில் பெரும் ஞானப்பெருக்கை உண்டாக்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

வரலாறு.
நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டன
வென்று கருதப்படுகிறது. திரு.குல.சபாநாதன் அவர்கள் 1957 இல்
தாம் எழுதிய ‘நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில்
தேர்த் திருப்பணிச் சபை மலரில்’ (பக்கம் -16) “இத்தலத்திற்கு
நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்
தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு,
ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம்,
நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக்
கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்
படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக்
கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக்
குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே
உள்ளன. நாகதீப, மணிபல்லவம்| ஆகிய பௌத்த சமயச்
சார்புடைய பெயர்களை, குறிப்பாக “நயினாதீவு”டன்
தொடர்புபடுத்தும் தொல்பொருட் சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
ஆனால், நாகதீவு (நகதிவ) எனும் பெயர் “யாழ்ப்பாணக் குடாநாடு”
முழுவதையும் குறிப்பதாக வழங்கப்பட்டதற்கு அசைக்க முடியாத
சான்றாக வசப அரசனின் காலத்தில் (கி.பி.66-111) பொறிக்கப்பட்ட
வல்லிபுரப் பொற்சாசனம் (Vallipuram Gold Plate Inscription)
விளங்குகின்றது. ஆகவே, நாகதீப அல்லது நாகதீபம் என்ற
பெயரால் நயினாதீவை அழைக்கும் வழக்கம் மிகச் சமீப காலத்தில்
- இங்குள்ள புத்தர் கோவில் அமைக்கப்பட்ட 1940 களின்
முற்பகுதியில் - தோன்றியது என்பதே சரியாக அமையும். ஆயினும்,
நாகதிவயின| என்ற சிங்களப் பெயர், நயினாதீவைக் குறிப்பதாக
கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘நம்பொத்த| என்ற
சிங்கள நூலில் காணப்படுகின்றது. இது ‘நயினார்தீவு’ அல்லது
‘நாகநயினார்தீவு’ அல்லது நாகதீவு| என்ற தமிழ்ப் பெயரின்
சிங்கள வடிவமே.


பதினைந்தாம் நூற்றாண்டில், நயினாதீவுக்கு வழங்கிய தமிழ்ப் பெயர்
நாகதீவு, நயினார்தீவு, நாகநயினார் தீவு - இவற்றில் எதுவாகவும்
இருந்திருக்கலாம் என்பதே
‘நம்பொத்த’ மூலம் நமக்குத் தெரியவருகின்றது.
ஆயினும் மகாவம்சத்தில் ‘புத்தர் நாகதீபத்திற்கு வந்தார்’
என்று சொல்லப்பட்ட கட்டுக் கதையில் சுட்டப்பட்ட ‘நாகதீபம்’
என்பது அக்காலச் சிங்களவர்களுக்கு அதிக பரிச்சயமற்றதாக
வட இலங்கையில் அமைந்து இருந்த நாகர் இராச்சியத்தைக்
குறிப்பிடுவதாகவே கொள்ளப்படவேண்டும்.


மணிபல்லவம்| என்ற பெயரும் நாகதீபம் என்ற பெயரைப்
போன்று முழு யாழ்ப்பாணக் குடாநாட்டையுமே குறிப்பதாக
வழங்கப்பட்டது என்பது நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார்
ஊ. இராசநாயகம் ஆகிய அறிஞர் பெருமக்களது கருத்தாகும்.
டொக்டர் போல் பீரிஸ், டாக்டர் பரணவிதான போன்ற சிங்கள
தொல்பொருளியல் அறிஞர்களும் இதே கருத்தையே
வெளியிட்டுள்ளனர். இதனை திரு. குல. சபாநாதன் மேற்குறித்த
அவரது நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்:


இச்சிறுதீவின் தற்காலப் பெயரான ‘நயினாதீவு’ என்ற பெயர்
இத்தீவுக்கு இடப்பட்ட காரணம் இங்கு நயினார்பட்டர் என்ற
பிராமணர் குடியேறியதே என்று சிலர் கூறுவது பொருத்தமற்ற
கூற்று என்பதை நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு
தெளிவுபடுத்துகின்றார்:
“நாகதீவு, நயினாதீவு எனப் பெயர் மாறியது நயினாபட்டர்
என்னும் பிராமணர் ஒருவர் அங்கு குடியேறிக் கிலமாய்க்
கிடந்த நாகதம்பிரான் கோயிலைப் புதுக்கியபின் என்ப.
ஆயின், “நாகநயினார் தீவு” என வையாபாடலில் வருகின்-
றது. நாகதம்பிரான், நாகநயினார் எனவும் அழைக்கப்பட்ட-
தேயோ?”(யாழ்ப்பாண வைபவ விமரிசனம் : பக்கம் -21)


திரு. குல.சபாநாதன் அவர்களும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின்
மேற்குறித்த கருத்தை வழிமொழியும் வகையில் தனது நூலில்
பின்வருமாறு குறித்துள்ளார்:
“நாகர் தாம் வழிபட்ட நாகத்தை, நாகநயினார், நாகதம்-
பிரான் எனப் போற்றியிருத்தல் கூடுமாதலின், அத்தெய்வம்
கோவில் கொண்டெழுந்தருளிய தலம் நாகநயினார்தீவு,
நயினார்தீவு எனப் பெயர்பெற்றதாகவும் கூற இடமுண்டு.”
(தேர்த் திருப்பணிச் சபை மலர் : பக்கம் -23)
“நயினார்தீவு” எனும் பெயருக்கான காரணம் தொடர்பாக
இக்கட்டுரையாளர் வெளியிட்ட “நயினாதீவு நாகம்மாள்” என்ற
நூலின் 102 ஆம் பக்கத்திலும், கனடிய நயினாதீவு நாகம்மாள்
கோவிலின் திருக்குட முழுக்குப் பெருவிழா மலரில்
இக்கட்டுரையாளர் வரைந்த “நயினாதீவு சிறீ நாகபூசணி அம்மன்
கோவில்” என்ற தலைப்பிலான கட்டுரையிலும் மேலதிக
தகவல்களைக் காணலாம்.


நயினார்தீவும், ஏனைய யாழ்ப்பாணத் தீவுகளையும் யாழ்
குடாநாட்டையும் போன்று, சரித்திர காலத்துக்கு முன்னர் - அதாவது
விசயன் வரவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் - நாகர்களது
ஒரு குடியிருப்பாக இருந்திருக்கலாம். அல்லது, சில நூற்றாண்டுகள்
கழித்து, நாகர்கள் நாகதீபத்தில் (யாழ். குடாநாட்டில்) இருந்தோ
அல்லது அயல் தீவுகளில் இருந்தோ நயினாதீவில் குடியேறியிருக்கலாம். எங்கிருந்து அவர்கள் வந்தனர், எப்போது வந்தனர் என்பதைத்
திட்டவட்டமாகக் கூறமுடியாவிடினும். முதன் முதலாக நயினாதீவில்
குடியேறிய மக்கள் நாகர்கள் என்பது சந்தேகமறப் புலப்படுகின்றது.

இன்றைய நிலை.

இலங்கையின் இனப்பிரச்சினைகாரணமாக தமிழர் வாழ் நிலங்கள் சுவிகரிக்கப்பட்டதற்கும், அவர்களின் பாரம்பரிய காலாச்சாரங்கள் ஒடுக்கப்படும் நிகழ்வுகளுக்கும் நயினாதீவும் விதிவிலக்காகிவிடவில்லை. 1991 ஆம் ஆண்டில் இருந்து 1996 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் இருந்து எவரும் இந்த நயினாதீவுக்கோ அல்லது நாகபூஷணி அம்மனை தரிசிக்கவோ முடியாத நிலையில் இருந்தனர். அதன் பின்னரும்கூட கமையான கெடுபிடிகள், படையினர், கடற்படையினரின் சோதனை நடவடிக்கைகள் அலைக்கழிப்புகள் என பல்வேறு காரங்களாலும் இங்குவரும் மக்களின் தொகை குறைந்தகொண்டே சென்றது.
இங்கு கடல்வழிப்பாதையில் சேவையில் ஈடுபட்டிருந்த குமுதினிப்படகில் பயணித்துக்கொண்டிருந்த மக்கள் 1984 களில் சிறி லங்கா கடற்படையினால் வெட்டி கோரக்கொலை செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு.


இத்தனைக்கும் மத்தியில் இந்த தீவை இங்குவாழும் மக்களும் இங்கிருந்து புலம்பெயர்ந்து உலகநாடுகளில் வாழும் மக்களும் கைவிட்டுவிடவில்லை. முக்கியமாக இந்தக்கோவிலின் அபிவிருத்திக்கும், இங்கு தினந்தோறும் இடம்பெற்வரும், அமுதசுரபி என்ற அன்னதானத்திற்கும் , இந்த தீவின் அபிவிருத்திக்கும் தொடர்ந்தும் ஊக்கத்துடன் உழைத்தும்வருகின்றனர்.
எந்த வித கெடுபிடிகளும் இல்லாமல் , சுந்திரமான நடமாட்டத்துடன் இந்த தீவுக்கு தமிழர்கள் சென்று வழிபட்டுவர அங்குள்ள நாகபூஷணிதான் இனியாவது வழிவகுக்கவேண்டும்.

Sunday, July 5, 2009

உணர்வுகளை உறைய வைத்த நியூயோர்க்.


உலகை உலுக்கிய ஒரு பயங்கரமான பாரிய தாக்குதல் எத்தனை மனிதர்களின் வாழ்வுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றது. எத்தனை பேர்களின் உணர்வுகளை, அவர்களின் வாழ்க்கையினையே மாற்றி எண்ணங்களை சிதறடிக்கின்றது என்பதை ஒரு இளையோட்டமாக காட்டுகின்றது இந்த நியூயோர்க் இந்தித் திரைப்படம்.


ஜாஷ் ராஜ் பிலிம்ஸ், ஜாஷ் ஷோப்ராவின் தயாரிப்பில், ஹபீர்கானின் இயக்கத்தில் கடந்த ஜூலை 26ஆம் திகதி வெளிவந்துள்ளது இந்த “நியூயோர்க்” திரைப்படம்.
ஜோன் ஏப்ரஹாம், கத்ரீனா ஹைவ், நீல் நிதில் முகேஸ் மற்றும் இர்பான் ஹான் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து பெருவெற்றியை பெற்றுள்ளது இந்த திரைப்படம்.
இத்திரைப்படத்தில் ஓமர் என்ற பாத்திரத்தில் நீல் நிதின் முகேசும், ஸ்ஷாமாக ஜோன் ஏபிரகாமும், மாயாவாக கத்ரீனா ஹைவ்வும் நடித்தார்கள் என்பதைவிட வாழ்ந்தார்கள் என்று கூறலாம்.


திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே நியூயோர்க் பொலிஸாரும், எவ்.பிஐயினரும் குறிப்பிட்ட ஒரு காரை மடக்கிப்பிடிக்கின்றனர். அந்தக்காரில் இருந்து ஏ.கே 47 துப்பாக்கியுடன் சில வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படுகின்றது. அதன் அடுத்தகட்டமாக தனது தங்குமிடத்தில் இருக்கும் ஓமர் (நீல் நிதில் முகேஸ்) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு எவ்.பி.ஐ ஆல் விசாரிக்கப்படுவதாக துவக்கமே விறுவிறுப்பாக இந்தத் திரைப்படம் தொடங்குகின்றது.


ஓமரை விசாரணை செய்யும் எவ்.பி.ஐ. அதிகாரியாக இர்பான் ஹான் வருகின்றார்.
இவரது விசாரனைகளில் ஓமர் சொல்லும் தனது கதையாக அழகான நாட்களாகவும், கண்ணுக்கு இனிய காட்சியாகவும் அவர்களது கல்லூரி வாழ்க்கை திரையில் தெரிகின்றது.
முதன் முதலில் அமெரிக்கா வந்து நியூயோர்க்கில் தான் கற்கும் பல்கலைக்கழகத்தை சுற்றிப்பார்த்து வியக்கும் ஓமருக்கு முதலில் நண்பியாக மாஜா (கத்ரீனா ஹைவ்) அறிமுகமாகின்றார். இதனைத் தொடர்ந்து படு அமர்க்களமாக திரையில் ஸ்ஷாம் (ஜோன் ஏப்ரஹாம்) தோன்றுகின்றார். அதன் பின்னர் இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆகின்றனர். ஒருவர் மேல் ஒருவர் என மூவருமே அன்பு பாராட்டுகின்றனர்.


ஒரு கட்டத்தில் ஸ்ஷாமுக்கும், மாஜாவுக்கும் உள்ள காதலை ஓமர் அறிந்து கொள்கின்றான். அதே நேரம் தன் மனதிற்குள்ளும் மாஜா இருப்பதை நினைத்து விம்முகின்றான். அந்தச்சந்தர்ப்பத்திலேயே உலகையே உலுக்கிய செப்ரெம்பர் 11 தாக்குதல் நடப்பதை தொலைக்காட்சியில் உடனடியாக பார்த்து பல்கலைக்கழகமே கதறுகின்றது. அந்தே நேரம்கூட ஓமருக்கு அந்த தாக்குதலைவிட தனது காதல் தோல்வியே அதிகம் கவலையை தர அந்த இடத்தை விட்டு வெளியேறுகின்றான்.


எனினும் மறுநாள் அவனைச்சந்திக்கும் மாஜா, ஸ்ஷாமுக்கும் தனக்கும் இடையிலான காதலை அவனிடம் விபரிக்கும்போது ஒரு பக்கம் சோகத்தையும், மறுபக்கம் தனது இரு நண்பர்களும் காதலர்கள் என்ற சந்தோசத்தையும் ஓமர் (நீல் நிதில் முகேஸ்) காட்டும் முகபாவம் அடித்து சபாஸ் எனச்சொல்ல வைக்கின்றது.

இவ்வாறு பல்கலைக்கழக வாழ்வை சொல்லிவந்த ஓமர் பின்னர், முக்கியமாக அந்த தாக்குதலின் பின்னர் அவர்கள் மூவரும் என்ன ஆனார்கள், அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? யார் எப்படி பயங்கரவாதத்திற்கு துணைபோகினர் அல்லது பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டனர் என்பதில் கதை திரும்புகின்றது.


இதில் எவ்.பி.ஐ. அதிகாரியாக வரும் இர்பான் ஹான், கதையோட்டத்தை தொய்வடையச்செய்யாமல் இருக்க தனது நகைச்சுவை கலந்த அனால் சீரியஸான நடிப்பால் கதையினை கொண்டு செல்கின்றார்.
முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் தான் என்ற எண்ண ஓட்டம், மாற்றப்படவேண்டும் என்தை கவனத்தில் எடுக்கவைக்கின்றது.
முக்கியமாக திரைப்படத்தின் பின்னணி இசையினை குறிப்பிடவேண்டும், திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கும்படியாக திரைப்படத்துடன் ஒன்றிய பின்னணி இசை திரைப்படத்திற்கு வலுச்சேர்க்கின்றது. இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் பிரித்தமின் இசை கச்சிதமாகவே உள்ளது.


திரைப்படத்தின் இறுதியில் தனது தாய் தந்தையரான ஸ்ஷாம், மாஜா ஆகியோர் எவ்.பி.ஐ மற்றும் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டபின்னர், ஓமரின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை, அங்குவரும் எவ்.பி.ஐ அதிகாரியான இர்பான் ஹானை தனது நண்பனாக தன்னுடன் உணவருந்த வருமாறு அழைப்பது நெஞ்சத்தை சுறுக்கென்று குத்துகின்றது.
மொத்தத்தில் தற்போது வெளிவரும் அனேகமான இந்தி திரைப்படங்களில் இருந்து விலகி ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் வெளிவந்துள்ளது “நியூயோர்க்” திரைப்படம். படம் முடிந்து வெளியில் வரும்போது மனம் லேசாகக்கனப்பதும் உண்மையே.

Friday, July 3, 2009

இந்தியாவின் பெரும்பான்மையானவர்களின் “ஹலோக்களின் சொந்தக்காரர்”.


சீர்மையான நிர்வாகம், மேலும்மேலும் சிறப்பு, சிறந்தவைகளின் தொடர்பு, அடுத்த கட்டங்கள் பற்றிய தெளிவு இவற்றுக்கு அர்த்தம் என்ன வென்றால் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம், பார்தி குழுமத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான சுனில் பார்தி மிட்டல் என்று.
“ஏர்டெல்” இந்தியர்களின் தொலைத் தொடர்பின் மற்றுமொரு பெயர் என்ற அளவுக்கு அந்த நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டும் இன்றி பட்டி தொட்டி எல்லாம் தன் கிளைகளைப்பரப்பி நிற்கின்றது. இன்று தேச எல்லைகளையும் கடந்து சிறி லங்காவிலும் ஏர்டெல் தன் சேவையினை விஸ்தரித்துள்ளது.

இந்தியாவின் 27 சதவிகித மொபைல் சந்தாதாரர்கள் இவர் வசமுள்ளனர். அதாவது நூறு மில்லியன் இணைப்புக்கள். உலகின் மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் ஏர்டெல் உள்ளது.
இத்தனை சிறப்புக்களுக்குரியவராக சுனில் மிட்டல் இருந்தபோதிலும் இன்றும் அவரது சுறுசுறுப்பிலும், தொழிற்பாட்டிலும், சிறு ஆறுதலையும் காணமுடியவில்லை. மேலும் மேலும் சிறப்பு என்ற தத்துவத்தின்படி மேலும் பல தொழிநுட்பங்களை (3ஜீ உட்பட) தமது சேவையில் புகுத்த அவர் அயராது பாடுபட்டுவருகின்றார்.


சுனில் மிட்டலின் தந்தை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர், என்ற போதிலும் சுனில் மிட்டல் அவரது அடியை ஒற்றி அவரது பெயரை வைத்து வெற்றிபெற்றவர் அல்லர். 1957ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம், 23 ஆம் திகதி ஷட் பவுல், லலிதா தம்பதிகளுக்கு, பஞ்சாப்பின் லுத்தியானாவில் பிறந்த சுனில் மிட்டல், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் அரசியல் ஆகிவற்றில் பட்டம் பெற்றவராவார்.
தனது தந்தை வழியில் அரசியலில் இவர் இறங்க ஆதரவுகள் பல இருந்தபோதிலும் அதில் நாட்டம் கொள்ளாத இவர், உச்ச பெறுமானத்தை தருவது வியாபாரமே என்ற கொள்கையுடன் இருந்தார். இதன் படி தனது நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் சைக்கிள், மற்றும் உதிரிப்பாகங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் ஒரு வியாபாரத்தை 1979 ஆம் அண்டு தொடங்கி நடத்தினார். இதற்காக இவர் தனது தந்தையிடம் பெற்ற தொகை 20 000 ரூபா. அதன் பின்னர் டில்லி பம்பாய் ஆகிய இடங்களுக்கிடையில் 1981 வரை பல வியாபரங்களில் அவர் ஈடுபட்டிருந்தார்.

1981 ஆம் அண்டு ஜப்பானில் இருந்து ஜெனரேட்டர்களை வாங்கி இந்தியாவில் விற்பனை செய்யும் தொழிலை அவர் ஆரம்பித்திருந்தார். எனினும் அன்று இறக்குமதிக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்தமையினால் அவரால் அந்த வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. இருந்தபோதிலும், தொழில் நுணுக்கங்கள், விளம்பரப்படுத்தல் போன்ற விடயங்களை அவர் இதன்போது கவனித்து வைத்திருந்தார்.


1990 களில் சுனில் மில்டனின் கவனம் தொலைத் தொடர்பில் திரும்பியது அப்போது தான் அவர் தனது வெற்றிப்பாதையின் முதலாவது அடியினை எடுத்துவைக்கின்றார் என்பது இந்தியாவுக்கோ, உலகத்திற்கோ தெரிந்திருக்க எந்த நியாமும் இல்லை.
90 களின் ஆரம்பங்களில் தமது தாய்வானிய விஜயத்தின்போது அவர் ஆழுத்தும் தன்மை கொண்ட தொலைபேசி மொடல்களைக்கண்டு அவற்றை குறிப்பெடுத்து வந்து, தாம் ஸ்தாபித்த பார்தி ரெலிகொம் லிமிட்டட் மூலம் ஜெர்மனிய தயாரிப்புக்களான “சிமென்ஸ்” போன்களை வாங்கி இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அடுத்த கட்டங்களாக 90 களின் ஆரம்பங்களிலேயே கோர்ட்லெஸ் போன்கள், மற்றும் நவீன ரக பக்ஸ் மெசின்களையும் இறக்குமதி செய்து அறிமுகப்படுத்தியது பார்தி ரெலிகொம் லிமிட்டட்.

இந்த நிலையில் வாழ்க்கையின் முக்கியமான திருப்பக் கட்டமாக 1992 ஆம் அண்டு சுனில் மெட்டலுக்கு அமைந்திருந்தது. ஆம் இந்திய அரசாங்கம், மொபைல் போன் சேவைக்கான அனுமதியினை முதற்தடவையாக தனியார் ஒருவருக்காக இவருக்கு வழங்கியமைதான் அது. ஆரம்பத்தில் பிரெஞ்ச் சேவை ஒன்றின் உதவியுடன் இவர் தமது சேவைகளை ஆரம்பித்தார். அதன் பின்னர் தமது மொபைல் சேவையினை டில்லிக்கு வழங்கும் நோக்கில் அவர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருந்தார். 1995 ஆம் ஆண்டு “பார்தி செலுலர் லிமிட்டட்” தமது பிராண்ட் நாமமான “ஏர்டெல்” என்ற சொல்லின் கீழ் கொண்டுவரப்பட்டது.
ஆரம்பத்தில் டில்லிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் கடின உழைப்பு, மிட்டலின் சுறுசுறுப்பான தொழிற்பாடு, முயற்சிகளால் விஸ்பரூபம் எடுக்கத் தொடங்கியது. முதன் முதலில் இந்தியாவில் சர்வதேச அழைப்புக்களை ஏற்படுத்திக்கொண்டுத்த தனியார் தொலைபேசிச்சேவை என்ற பெருமையினையும் ஏர்டெல் பெற்றுக்கொண்டது.
டில்லியில் மையம் கொண்ட இந்த “ஏர்டெல் புயல்” இன்று முழு இந்தியாவின் தொலைத்தொடர்பின் நாமமாக மாறி, இன்று சிறி லங்காவையும் மையமிடத்தொடங்கிவிட்டது.


2002 ஆம் அண்டின் சர்வதேச விருதான “தொழிநுட்ப மனிதன்” என்ற விருதை சுனில் மில்டன் பெற்றார், இவ்வாறு அவரை விருதுகள் துரத்த ஆரம்பித்தன. எனினும் இன்றும்கூட அவர் ஓய்நது;விட்டதாக இல்லை.
குறிப்பாக ஒரு பிரபலமான உலக சஞ்சிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொரு மனிதனின் வெற்றிகளின் பின்னாலும், எத்தனை கரடுமுரடான பாதைகளும், சில சறுக்கல்களும், அதிருப்திகளும், அவமானங்களும் வழக்கொழிந்து கிடக்கின்றன என்பதை நான் எனது அனுபவத்தின் மூலம் கண்டுகொண்டேன். சாதித்தவர்கள் என்று சொல்வது சுலபம் அந்த சாதனைகளின் அவர்களின் பாதைகள் நினைததுப்பார்க்கமுடியாதவைகள்.
ஓய்வு என்பது இப்போதைக்கு எனக்குத் தேவைப்படாது. நான் நாளைய ஓய்வுக்காக இன்று கடினமாக வேலை செய்கின்றேன். இதேபோல நாளைய ஓய்வுக்காக மிகக்கடினமாக இன்று வேலைசெய்பவன் ஒருவன் தோற்றுப்போவது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

Thursday, July 2, 2009

நம் வாழ்க்கையின் MSQ


Multiple Choice Questions என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றே. இன்றும்கூட சர்வதேச ரீதியில் பலதரப்பட்ட பரீட்சைகளுக்கும் இந்த எம்.சீ.க்யூ முறைமூலமான வினாத்தாள்கள் கொடுக்கப்படுகின்றன.
அதில் சரியான விடை நான்கிலும் ஒன்றுதான். என்றாலும் உரிய கேள்விக்கு நான்கு விடைகளும் சரியான பதிலையே சுட்டிநிற்கின்றதுபோல ஒரு மாயை தோன்றும். எனினும் ஏனைய மூன்றிலும் ஒன்றே ஒன்று மிகச்சரியான விடையினை கொண்டதாக இருக்கும் அதனை கண்டுபிடித்தாலே எமது புள்ளிகள் உயரும்.

நாம் வாழும் சவால் மிகுந்த வாழ்விலும், வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் நாம் இந்த எம்.சி.க்யூ போன்ற நான்கு சொய்ஸ்களில் சரியானதை தெரிவுசெய்யும் கட்டத்தில் தவித்திருப்போம். அந்த வாழ்வின் கட்டங்களில் மிகச்சரியானதை நாம் தெரிவு செய்திருந்தோமானால் எம் வாழ்வுப்பாதை வளமானதாக மாற்றப்பட்டு முன்னேறியவர்களாக மாறியிருப்போம்.
விருப்பத்துக்கும், தமது திறமைக்கும் இடையில் சிக்கி பரிதவிப்போர் அதிகம்பேரை நாம் பார்த்திருப்போம்.

எமது செயல்களின் விளைவுகளும் இதே எம்.சி.க்யூ போன்ற நான்கு விடைகளையே எமக்கு திருப்பியும் தந்துவிடுகின்றது.
ஒருவர் எதிர்பார்த்து செய்த செயல் நினைத்தபடி கிடைத்தால் அது திருப்தி, அதே செயல் நினைத்ததைவிட அதிகம் பலன் தந்தால் அது பூரிப்பு, நினைத்ததைவிட சற்று குறைவானால் அதிருப்தி, நினைத்ததே நடக்காதுவிட்டால் தோல்வி.
அதாவது எமது ஒவ்வொரு செயலுக்கும் காலம் கொடுக்கப்போகும் பதிலும் எம்.சி.க்யூபோல நான்காகவே பூரிப்பு, திருப்தி, அதிருப்தி, தோல்வி என்றே அமையப்போகின்றது.

முன்னைய காலங்களைப்போலல்லாது இன்று பல துறைகள் முன்னேற்றப்பாதையிலும், இலாபத்தை தரும் துறைகளாகவும் நாளாந்தம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று இந்த “மல்ரிபிள் சொய்ஸ்” என்ற நிலை இன்றுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் அன்றி எம் எவ்வொருவரினதும் எதிர்காலத்தையும் வழிவகுக்கக்கூடியதாகவே உள்ளது.
இதில் எமக்கேற்ற மிகச்சரியான தெரிவை நாம் “ரிக்” செய்தால் எமது முன்னேற்றப்பாதையின் பாதை இலகுவாக திறந்துவிட்டதாக கருதமுடிம். இந்தக்கட்டங்களிலேயே ஒருவனுடைய வெற்றிகளும் தோல்விகளும் நிர்ணயிக்கப்படுவதாகவும் உள்ளது.


மிகச்சரியானதை, மிகச்சரியான நேரத்தில், மிகச்சரியான முறையில் தொடங்கினால் அந்தத்தொடக்கத்திலேயே முக்கல்வாசி வெற்றி கிடைத்துவிட்டதாக பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சரியான தெரிவைப்போல் அதற்கு மிக நெருக்கமாக பல மாஜைகளும் தோன்றுவதன் குறியீடுகளாகவே நாம் இந்த எம்.சி.க்யூவை கருதவேண்டும்.
தெரிவுகளை செய்தபோதும் கூட, சில தெரிவுகள் ஏனைய தெரிவுகளைவிட அந்த நேரத்தில் சரியானதாகவே தோன்றினாலும், பின்னர் அது பெரும் ஆபத்தில் போன அபாயகரமான தெரிவுகளும் அண்மைய வரலாறுகளில் இல்லாமல் இல்லை.
தூரநோக்கத்துடன் சிந்திக்கின்றோம் என்ற பெயரில் அந்த நேரத்தில் அப்போது மிகச்சரியாக இருந்த தெரிவு பிழை எனக்கருத்தி, பிழையான தெரிவை, “ரிக்” செய்துவிட்டு அந்தப்பிழையான தெரிவால் அத்திவாரமே தகர்க்கப்பட்ட வரலாறுகளும் உண்டு.


எனவே வாழ்க்கை எம் முன்னால் வைக்கும் எம்.சி.க்யூ தெரிவுகளையும், அதன்மூலம் எமக்கு கிடைக்கப்போகும் அதே எம்.சி.க்யூ விடைகளையும் நாம் மிக அவதானமாக கையாளவேண்டும்.
பரீட்சைகளில் பல கேள்விகள் இருக்கும் ஒன்று பிழையாகப்போனாலும் பரவாய் இல்லை, அனால் எம் வாழ்க்கையின் கால கட்டங்களில் முக்கியமான வேளைகளில் காலம் எமக்கு முன்னாள் வைக்கும் எம்.சி.க்யூ கேள்வி ஒன்றே எனவே நாம் அதைப்பற்றி எம்மையே ஆராய்ந்து சரியான தெரிவை “ரிக்” செய்யவேண்டும். மிகச்சரியானதை “ரிக்” செய்தவர்கள் இன்று நாம் அண்ணாந்து பார்க்கமுடியாத உயரத்தில் உள்ளனர், பிழையாக ரிக் செய்தவர்கள் வாழ்விழந்து போய் உள்ளர். ஒரு சிலர் அதிஸ்ரவசமாக, குறிப்பிட்ட ஒன்றைப்பற்றிய விபரம் அறியாமல் தமது வாழ்வின் கட்டம் ஒன்றில் சாரியான பாதையினை “ரிக்” செய்து வெற்றியின் உச்சிக்கு போனவர்களும் உண்டு. அதேவேளை மிகவும் திறமையுடன், பல செயற்திட்டங்களுடன் முன்னேறி எதோ ஒரு கட்டத்தில் தவறான வாழ்வின் புதிருக்கு விடையினை “ரிக்” செய்து அத்தனை முயற்சிகளையும் போட்டுடைத்தவர்களும் உண்டு.

எனவே இந்த எம்.சி.க்யூ சொல்லும் விடையும் என்னவென்றால், தயமயந்தியாய் இரு என்பதுவே. அதாவது தமந்தியின் சுயம்வரத்துக்கு அவள் நளனைத்தான் காதலிக்கின்றாள் என அறிந்து தேவ குமாரர்கள் பலர் நளனைப்போலவே தாமும் உருக்கொண்டு சுயம்வரத்தில் கலந்துகொண்டபோதும், அதன் சூட்சுமத்தை அறிந்து தேவகுமாரர்களின் பாதம் தரையில் படாது என்ற நுண்மையான விடயத்தை அந்தநேரம் மிகச்சரியான தருணத்தில் அறிவைப்பயன்படுத்தி, உண்மையான நளனுக்கு மாலையிட்டாள் தயமந்தி, அதேபோல எம் வாழ்வு எமக்கு முன்னாள் வைக்கும் பலதரப்பட்ட விடைகளில், மிகச்சரியனதை எமது நுண்அறிவு, அறிவாற்றல் மூலம் தெரிவுசெய்து வாழ்வில் வெற்றிபெறவேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails