Monday, December 27, 2010

கமல் ஹாசனின் தசா அவதாரங்கள்…


தாய்மடியில் பிறந்து, தமிழ்மடியில் வளர்ந்து, நாடகத்தில் கலந்த ஒரு உன்னத கலைஞன் கமல் ஹாசன். விருப்பத்துடனும், அர்ப்பணிப்புடனும் கலைத்துறையில் இருக்கும் கலைஞானி.
“எனக்கு பிடித்தமான தொழிலை செய்யச்சொல்லி, அதற்கு பணமும் தருவது எனக்கு பெரிய ஆட்சரியமே” என்று மிக எழிமையாக தன் கலைவாழ்வை குறிப்பிட்டுக்கொள்பவர். “சகலகலா வல்லவன்” என்பதன் உருவமே கமல் ஹாசன்தான்.

எனக்கு பிடித்தமான, எனக்கு உயிரான ஒரு நடிகன், மகாகலைஞன் பற்றி எழுது என்று மதி.சுதா என்னை அழைத்ததையும் கமல் ஹாசனின் ஆச்சரியத்துடனேயே நானும் பார்க்கின்றேன். கரும்பு தின்னக்கைக்கூலிதேவையா என்ன?

எனக்கு கமல் ஹாசனை எப்படி பிடித்தது? இன்றும் என் மனது கேட்கும் பெரிய கேள்வி இது? எனக்கு கமல் ஹாசனை பிடித்தது பாலர்பராயத்தில் இருந்தே என்றுதான் சொல்லவேண்டும்.
என் பக்கத்து வீட்டில் நாம் முதலாம் ஆண்டு படிக்கும்போது, இருந்த நண்பன். தற்போது அவன் ஜெர்மனில் வசிக்கின்றான். அப்போதே அவன் தந்தையாரின் தூண்டலால் ஆங்கிலப்படங்களை பார்த்துவிட்டுவந்து, எமக்குள் விளையாட்டாக மோதிக்கொள்ளும்போது, நான்தான் புரூஸ்லி வா..அடிபடுவோம் என்பான், அப்போது அப்பாவியாக நான், சரி…நான்தான் கமல் ஹாசன் என்றுவிட்டு அவனுடன் பாசாங்கிற்கு அடிபடுவேன். அப்போதிருந்தே நான் கமல் ரசிகனே.
என்ன ஆச்சரியம் பாருங்கள் நான் நானாகவே இருக்கின்றேன்.. அவன் இப்போ தீவிர கமல் ரசிகன்.

கமல் ஹாசன் பற்றி சொல்லவேண்டும் என்றால், அதற்கு தனியாக ஒரு வலைப்பூவையே அமைத்து எழுதிக்கொண்டே இருக்கலாம்.
விடயத்திற்கு வருகின்றேன். என்னை பதிவெழுத அழைத்த அன்பு நண்பர் பதிவர் மதி.சுதாவின் வேண்டுகோளுக்கிணங்க இதோ என்னைக்கவர்ந்த கமல் ஹாசனின் தசாவதாரங்கள்… (கமல் ஹாசனின் படங்களுக்குள் என்னைப்பொறுத்தவரையில் பிடித்தபடங்கள், பிடிக்காத படங்கள் என்று கிடையாது. இருந்தபோதிலும், பெரும்பாலும் மற்றவர்கள் எழுதாத படங்களாக பார்த்து தருகின்றேன்)

ஏக் துயே ஹேலியே…

கமல் ஹாசனின் நடிப்பில் சிகரம் தொட்ட ஒரு படமாக இதனைக்கொள்ளலாம்.
குருநாதர் கே.பாலச்சந்தர் இயக்கிய இந்தி திரைப்படம். 1981ஆம் ஆண்டு வெளியாகி பெருவெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் கமல் ஹாசனுடைய ஜோடியாக ரதி நடித்திருந்தார்.
தமிழ்நாட்டில் இருந்து கோவா செல்லும் கமலும், அங்கே பக்கத்துவீட்டு வடநாட்டு பருவமங்கை ரதியும் ஒருவரை ஒருவர் காதல் கொள்கின்றனர். இருவீட்டிலும் கடும் எதிர்ப்பு, பின்னர் மொழிகடந்த இவர்களின் காதல் பலம் புரிந்து, இருவரும் ஒரு வருடப்பிரிவு ஒப்பந்தத்திற்கு நிற்பந்திக்கப்பட்டு, அந்த ஒரு வருடத்தில் வாழ்வில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், சூழ்ச்சிகளில் சிக்கி, பின்னர் இருவரும் இணையும் சந்தர்ப்பத்தில் விதியின் சூழ்ச்சியில், இறுதியில் இருவருமே ஒருவராக உயிர்விடும் காட்சிகளை பார்த்து உருகி அழாதவர்கள் இருக்கமாட்டார்கள். படத்தின் இறுதி முடிவு படம் பார்ப்பவர்களின் மனதில் குறைந்தது இரண்டு நாளுக்கு தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற “தெரேமெரே பீச் மென்” என்ற பாடலைப்பாடியதற்காக பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தேசிய விருது முதற்தடவையாக கிடைத்து என்பது குறிப்பிடத்தக்கது.

உல்லாசப்பறவைகள்

1980 ஆம் ஆண்டு சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், கமல் ஹாசன், தீபா, ரதி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் உல்லாசப்பறவைகள்.
தனது காதலி தீபாவின் இழப்பினால் மனதளவில் தாக்கத்திற்கு உள்ளாகும் கமல் ஹாசன், மனப்பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும்வேளையில், அவரது தந்தையால் மாற்றம் ஒன்றிற்காக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். அங்கே அவரது பால்ய சினேகிதியான ரதி அவருக்கு உதவுகின்றார். அதேவேளை அவரது சொத்திற்கு ஆசைப்படும் நபரால் கமல் ஹாசனும் கொலை செய்ய எத்தனிக்கப்படுவதும், பின்னர் சூழ்ச்சிகளை வென்று ரதியை கரம்பிடிப்பதுமே படத்தின் போக்கு.
இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் இசை…ஆஹா..போட வைத்தது.
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல், ஜெர்மனியின் செந்தேன்மலரே…போன்ற அற்புதமான பாடல்களும் இந்த திரைப்படத்தில் உண்டு.

கடல் மீன்கள்.

கமல், சுஜாதா, அம்பிகா நடிப்பில் தந்தை, மகனாக கமல் இரட்டைவேடத்தில் நடித்த திரைப்படம் கடல்மீன்கள். 1981 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படத்தினை ஜி.எம்.ரங்கராஜன் இயக்கியிருந்தார்.
கடற்தொழில் செய்பவராக வரும் தந்தை கமல் இயங்கைச்சீற்றத்தினால், கடலிலே அல்லாடிப்போவதும், கரையில் தன் மனைவி சுஜாதாவை நினைத்து ஏங்குவதும், மீண்டு வந்து பார்க்கும்போது கடற்கரைக்குடியிருப்புக்கள், கடல்கேளால் பாதிக்கப்பட்டதையும், தன் மனைவி, கருவில் இருந்த குழந்தை இருவருமே இறந்துவிட்டதாக எண்ணி மறுவாழ்வு வாழ்வதும், மறுகரையில் தாயும், மகனும் தப்பித்து வாழ்வதும், பின்னர் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான மோதல்களும்,
இறுதியில் தந்தையை புரிந்துகொண்ட தனையன் பாசத்திற்காக ஏங்கும்போது, தாயும் தந்தையும் கடலிலேயே காவியமாவதும் கண்களுக்குள் கடலை கொண்டுவந்துவிடுகின்றது.

சிம்லா ஸ்பெஷல்.

கமல் ஹாசன், ஸ்ரீ பிரியா, எஸ்.வி.சேகர் நடிப்பில் உருவான தரைப்படம் சிம்லா ஸ்பெஷல். 1982ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை வி.சிறினிவாசன் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படத்தில் நாடகக்கலைஞராக கமல் ஹாசன் நடித்திருப்பார். இவரது நண்பராக எஸ்.வி.சேகர், வை.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
தன் சுயநலத்திற்காக நண்பனின் இக்கட்டான நிலமைகளைக்கூட நண்பனிடமிருந்து மறைக்கும், நண்பனின் துரோகத்திற்கு மத்தியிலும், நண்பனிடம் கொடுத்த வாக்கிற்காக, வாக்கை காப்பாற்றும் நட்பும் படத்தின் அடிநாதமாக அமைந்தது. “உனக்கென்ன மேலே நின்றாய் ஓ..நந்தலாலா” பாடல் ஒரு ஹைலைட்.

பேசும்படம்.

சங்கீதம் சிறினிவாச ராயோ இயக்கத்தில் கமல் நடித்த படம் பேசும்படம். இது ஒரு பேசாத படம். ஆம்…சைலன்ட்மூவி. 1987ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கமல் ஹாசனின் ஜோடியாக அமலா நடித்திருந்தார்.
புனிக்கட்டி கத்தியால் கொலை செய்வது இன்றுவரை என்னை அதிசயிக்க வைத்துகொண்டிருக்கின்றது.

கலைஞன்.

கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரில் படங்களில் ஒன்று. சில கொலைகளும், சில செயல்களும், அதில் கமல்தான் சம்பந்தப்படுவதுபோன்ற ஒரு மாயத்தோற்றமும், இறுதிவரை திரிலாக செல்லும் ஒரு திரைப்படம். கலைஞன்.
ஜி.பி.விஜய்யின் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம்.
இதில் கமல் ஹாசனுடன், பிந்தியா, நிர்மலா, சிவரஞ்சனி ஆகியோர் ஜோடிகளாக நடித்திருந்தனர். இதில் நடனக்கலைஞனான இந்திரஜித்தாக கமல் வாழ்ந்திருந்தார்.

சதி லீலாவதி.

முழுநீள நகைச்சுவையான ஒரு திரைப்படம். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இந்த திரைப்படத்தில் கமல் ஹாசனின் ஜோடியாக கோவை.சரளா நடித்திருந்தார். ரமேஷ் அரவிந்த் கல்ப்பனா தம்பதிகளிடையில், ரமேஸ் அரவிந்த் ஹீரா தொடர்புகளால் ஏற்படும் குளறுபடிகளை நீக்க கமல் ஹாசன் படும் பாடுகளும், சரளா கமல் தம்பதிகளின் லூட்டிகளும், வயிறுவெடிக்கும் வரை சிரிக்க வைக்கும் கிளைமக்ஸ் காட்சிகளும் அபாரம்.
ஏப்போதும், எத்தனை தடவைகளும் மீண்டும் மீண்டும் பார்க்கக்கூடிய ஒரு திரைப்படம்.

அவ்வை சண்முகி

சண்முகா…உனது படைப்பால் உயர்ந்து நிற்கும் பிள்ளையா..பிரபல நாடகச்சக்கரவர்த்தி அவ்வை சண்முகம் நினைவாக கமல் ஹாசன் பெயரிட்டு நடித்த படம். நகைச்சுவை, சென்டிமென்ட் நிறைந்த நகைச்சுவைப்படம்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கமல் மடிசார் மாமியாக பிள்ளைப்பாசத்தினால் போட்டுக்கொண்டவேடமும் பாவங்களும் அபாரம்.
இதில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக மீனா, ஹீரா ஆகியோர் நடித்திருந்தனர்.

வேட்டையாடு விளையாடு.

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த அக்ஸன் திரைப்படம் வேட்டையாடு விளையாடு. பொதுவாக கௌதம்மேனனின் திரைப்படங்களில் இயக்குனர் முத்திரைதான் தெறிக்கும், அதையும்தாண்டி கமல் முத்திரைகள் தெறித்த படம் வேட்டையாடு விளையாடு. அதிகம் அக்ஸன் படங்களில் பேசி நடிக்காத கமல் இதில் பேசி நடிப்பது ஆச்சரியம்.
இரத்தமும் சதையும் துடிக்கும் ஒரு படம்.

மருதநாயகம்
இது கமல் ஹாசனின் இலட்சியத்திரைப்படம் மட்டுமல்ல என் ஏக்கத்திரைப்படமும் கூட…என்றோ ஒருநாள் கண்டிப்பாக வரும் என்ற எதிர் பார்ப்புடன்…

சரி..அடுத்தது இதை எழுத வேறு பதிவர்களை அழைக்கவேண்டுமா? ஏற்கனவே ஒரு லிஸ்ட் ஒன்றை பல பதிவர்களுக்கு கொடுத்தனால் பலர் என்மீது கடுப்பாக இருக்கும்நேரத்தில்!!!! ம்ம்ம்ம்...சரி..கமல் ஹாசன் ரசிகர்களாக உள்ள பதிவர்கள் இதை எழுத வேண்டும் என நினைக்கும் பதிவர்களை தொடர்ந்து கமலின் 10 படங்கள் பற்றி எழுத அழைக்கின்றேன்.

20 comments:

டிலீப் said...

மருதநாயகம் எப்ப அண்ணா வரும் ??

நிரூஜா said...

சில படங்கள் நான் கேள்விப்பட்டதே இல்லை. இனிமேல் தான் தேடி பார்க்க வேணும்.

அல்ல தெரிவுகள் அண்ணா

Bavan said...

கமல் = உலகநாயகன்.
கமல் ரசிகனின் தெரிவுகள் நல்லாத்தான் இருக்கு, கமல் படங்களில் எனக்குப் பிடிக்காதது என்று ஒன்றைச் சொல்வது கடினம்.

நல்ல தெரிவுகள் அண்ணே..:D

FARHAN said...

சூப்பர் தெரிவுகள்

Unknown said...

கலக்குறீங்க! :-)

Vathees Varunan said...

kamal - SuperB

யோ வொய்ஸ் (யோகா) said...

உங்களது தெரிவுகளில் பேசும் படத்தை தவிர மற்றைய அனைத்தையும் பார்த்திருக்கிறேன்.

சிறிய வயதில் கலைஞன் படம் பார்த்து பயந்தது நினைவுக்கு வருகிறது

ஷஹன்ஷா said...

அட அட அட....கலக்கல் அவதார படைப்பு அண்ணா...

ஒரு சில படங்களை இனித்தான் பார்க்கப் போகின்றேன்...(கடல் மீன்கள்)

அண்ணா நான் போடலாம் எண்டு பார்த்தால் முந்தீட்டீங்களே...(ஏக் துயே ஹேலியே…)இருந்தாலும் நானும் போடுவேன்...எனக்கும் புடிச்சிருக்கு...

pichaikaaran said...

தேவையற்ற பதிவு... ஆனாலும் உங்க எழுத்து நல்லா இருந்துச்சு

அன்புடன் நான் said...

கமல் நல்ல கலைஞன்.

KANA VARO said...

தமிழ் சினிமா ஒரு கோயில் என்றால் கமல் அங்கே கடவுள் (இதை எங்காவது கேட்ட ஞாபகம் இருந்தால் சங்கம் பொறுப்பேற்காது)

sinmajan said...

அதிகமாய் கமல் படம் பார்க்கிறேன் என்று எண்ணியிருந்தேன்..ஆனால் உங்கள் பட்டியலில் வெறும் மூன்றே படங்களைத் தான் பார்த்திருக்கிறேன்..!!!!

தர்ஷன் said...

ம்ம் அருமை ஜனா அண்ணா
பலரும் விரும்பாத படங்களை போட்டிருக்கிறீர்கள். அத்தனையும் நானும் பார்த்திருக்கிறேன்.

ஏக் துஜே கேலியே - ம்ம் அருமை கமலின் துடிப்பான நடிப்பு பிடிக்கும். கூடவே பாடல்கள், ரதியை விட மாதவியும் அந்தக் கண்களும் மற்றும்படி வழமை போல கமராவில் எடுத்த KB யின் டிராமா
முதுகில் காதல் கடிதம், மின்குமிழ் அணைத்து ஒளிரச் செய்வது எல்லாம் இதற்கு முன்பே மூன்று முடிச்சில் இருந்தது.

உல்லாச பறவைகள் - "ஜெர்மனியின் செந்தேன் மலரே", தீபா ரெண்டே விஷயம்தான் பிடிக்கும்.

கடல் மீன்கள்- ம்ம் நல்ல மசாலா எனக்கு 80 களில் SPM , ராஜசேகர், ரங்கராஜன் இயக்க கமல் நடித்தப் படங்கள் எல்லாம் பிடிக்கும். பிரச்சினையில்லாத கமல். அப்பா தலைய சொறிஞ்சி கொஞ்சம் ஓவர் ஆக்ட் பன்னுவார்தானே

தர்ஷன் said...

சிம்லா ஸ்பெஷல் - கமலுக்கே பிடிக்குமா தெரியவில்லை

பேசும் படம் - சூப்ப்பர் கமலை தவிர யாராலும் நிச்சயம் நடிக்க முடியாது. நீங்கள் சொன்ன பனிக்கட்டி கத்தி ராஜேஷ்குமார் கமலிடம் பகிர்ந்த ஒரு விடயம் என எங்கோ எப்போதோ படித்த ஞாபகம் கேள்விப்பட்டிருக்கிரீர்களா?

கலைஞன்- சொறி ரொம்பவும் அலுப்பான ஒரு படம் தில்லுபறு ஜானி, எந்தன் நெஞ்சில் நீங்காத பாடல்கள் பிடிக்கும். கதாநாயகி கொஞ்சம் மாதுரி டிக்சித் போல இல்லை

சதிலீலாவதி- இதுவும் சூப்ப்பர் எத்தனை தடவையும் பார்க்கலாம்

அவ்வை சண்முகி- என்றென்றைக்கும் என் பிரிய நடிகையான மீனா நடித்தது. சிறப்பான நகைச்சுவை பொழுது போகும். என்ன கொஞ்சம் Mrs Doubtfire ஐ நினைத்தல்தான்

வேட்டையாடு விளையாடு - கொஞ்சம் underplay பண்ணி நடித்திருப்பார்.All credits goes to Gowtham

கன்கொன் || Kangon said...

அவ்வ்வ்வ்....
கமல்மீன்கள், சதிலீலாவதி, அவ்வை ஷண்முகி, வேட்டையாடு விளையாடு மட்டும் தான் பார்த்திருக்கிறேன்... :-(

Unknown said...

அருமையான படத் தெரிவுகள்..ஆனால் உங்களளவுக்கு கமல் படங்கள் தெரிந்தோர் இங்கே குறைவென்றே நினைக்கிறேன்!!

shortfilmindia.com said...

அருமை.. அருமை..
கேபிள் சங்கர்

எழிலன் said...

அதெல்லாம் சரி.. தெரு நாய் மாதிரி சீசனுக்கு சீசன் ஒரு பொம்பளைய யூஸ் பண்ணிவிட்டு அப்புறம் கழட்டிவிட்டு அடுத்ததை பிடிச்சிகினு புதுபுது அவதாரம் எடுத்து, கேட்டா ரொம்ப அறிவுஜீவித்தனமா என்னுடைய பெட்ரூம எட்டிப்பார்க்காதீங்க உளறிகொட்டறாரே, இதப்பத்தி என்ன சார் நினைக்கிறீங்க..

பிரசன்னா கண்ணன் said...

கடல் மீன்கள் - பயங்கரமான பிளாப் படம்..
பேசும்படம் & அவ்வை சண்முகி -> என்னுடைய all-time favourite படங்கள்..

Naresh said...

I regret to inform that you have missed films like Indian, Apoorva sagothargal, Michael madana kama rajan ( Hilarious comedy with one of the best timing comedy of character Kameshwaran), Devar Nagan ( First Tamil film to expose the realities of Rural Southern Tamil Nadu), Nayagan ( reveals the story of underworld Mumbai don Varadaraja mudaliar, One of the Top 100 films of wisdom though inspired from Godfather), Moondram Pirai or Sudma ( National award performance), Salangai Oli (Portrayal of the struggles of a classical dancer in the film world), Aalavandan, Mahanadi, Virumandi (Gives a View of anti-capital punishment with a very strong real life story and a volatile screen play), Gurudipunal (Not a hit but, A Fantastic action movie with lots of stunts and scenes reflecting actual anti-national problems in the country) Hey ram (brings the cruel realities existed during the time of partition) and Last but not least Anbe Sivam ( Though I'mt not an avid supporter of communism, still this is one of the best films made in India)

LinkWithin

Related Posts with Thumbnails