Tuesday, November 10, 2009

பிடிச்சிருக்கா! பிடிக்கலையா!!


நேற்று இரவு மின்னஞ்சல்களை பார்த்துக்கொண்டிருக்கும்போது பதிவுலக நண்பர் ஊர்சுற்றி அவர்கள் ஒரு மின் மடலை அனுப்பியிருந்தார். அதில் பிடித்தது பிடிக்காதது பகுதிக்கு அழைப்பு விடுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இன்னும் தனது பிடித்த பிடிக்காதவைகளைப்பற்றி பதிவிடவில்லை. ஆனால் நான் எனக்கு பிடித்தவைகளை பற்றி பட்டியல் இட்டுவிட்டேன். பிடிக்காதவைகளை கண்டுபிடிக்கத்தான் பெரும்பாடு படவேண்டிய நிலை.

சரி..எழுதிமுடிந்துவிட்டால் அது பதிவுக்கு வந்துவிடவேண்டும் காத்திருக்கும் நேரத்தில்க்கூட விருப்பங்கள் மாறிவிடுமே.
ஸோ.. கேட்டுக்கொண்ட மூலவர் பதிவை முந்திக்கொண்டு பதிவிடுகின்றேன்.
நண்பர் ஊர்சுற்றி மன்னிப்பாராக.

பிடித்தமொழி -தமிழ்
பிடிக்காத மொழி -இந்தி

பிடித்த புலவர் -திருவள்ளுவர்
பிடிக்காத புலவர் -கம்பர்

பிடித்த கவிஞர் -கண்ணதாசன்
பிடிக்காத கவிஞர்? -கலைஞர்

பிடித்த விளையாட்டு – கிரிக்கட்தான்
பிக்காத விளையாட்டு – கோல்ப்

பிடித்த அணி - தென்ஆபிரிக்க அணி
பிடிக்காத அணி - இலங்கை, இந்திய அணிகள்

பிடித்த வீரர் -சச்சின் ரமேஸ் தென்டுல்க்கர்
பிக்காத வீரர் -முத்தையா முரளிதரன்

பிடித்த நடிகர் -மம்முட்டி
பிடிக்காத நடிகர் -சிறிகாந்த்

பிடித்த பாடகர் -கே.ஜே.ஜேசுதாஸ்
பிடிக்காத பாடகர் - கிரிஷ்

பிடித்த பாடகி - வாணி ஜெயராம்
பிடிக்காத பாடகி - இல்லை

பிடித்த பாடலாசிரியர் - வைரமுத்து
பிடிக்காத பாடலாசிரியர் - பா.விஜய்

பிடித்த எழுத்தாளர் - செங்கையாழியான்
பிடிக்காத எழுத்தாளர் -ஞானி

பிடித்த நிறம் - மேக நீலம்
பிடிக்காத நிறம் - கோப்பி நிறம்

பிடித்த அறிவிப்பாளர் -பி.எச்.அப்துல்ஹமீட்
பிடிக்காத அறிவிப்பாளர் - நிறையப்பேர்

பிடித்த இசையமைப்பாளர் - இளையராஜா
பிடிக்காத இசையமைப்பாளர் -சிறிகாந்த் தேவா

பிடித்த இயக்குனர் - உதிரிப்பூக்கள் மகேந்திரன்
பிடிக்காத இயக்குனர் -பேரரசு

பிடித்த தலைவர் - உங்களுக்கு தெரியும்
பிடிக்காத தலைவர் - முத்துவேல் கருணாநிதி

பிடித்த இசை – மெலடி
பிடிக்காத இசை – துள்ளிசை, ரீமிக்ஸ்

பிடித்த பேச்சாளர் -சீமான்
பிடிக்காத பேச்சாளர் -கம்பவாரிதி ஜெயராஜ்

பிடித்த நவாலாசிரியர் -சுஜாதா
பிடிக்காத நாவலாசிரியர் -பாலகுமாரன்

பிடித்த காலம் - இப்போ நடக்கும் மாரிகாலம்தான்
பிடிக்காத காலம் - கோடை காலம்

பிடித்த உணவு – யாழ்ப்பாண உணவுகள்
பிடிக்காத உணவு – வட இந்திய உணவுகள்

சரி, இவைபோதும் என நினைக்கின்றேன். பிடித்தவைகள் பல இருக்கின்றன ஆனால் அவற்றில் ஒன்றைத்தான் சொல்லவேண்டும் என்பது கட்டுப்பாடாம். அதுதான் பலவற்றை தவிர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
சரி..நிற்க..
இந்த இடத்தில் நானும் ஐந்துபேரை மடக்கிப்போடவேண்டாமா? இந்த தொடர்பதிவை தொடர்ந்து எழுத!!
இதோ என்னிடம் அகப்படும் பாண்டவர்கள்…

01.அடலேறு (பிடித்தவைகள், பிடிக்காதவைகளைக்கூட கவியாக சொல்லக்கூடியவர்)
02.எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் (இதைக்கூட அழகாக சிறுகதைபோல தருவார்)
03.தங்கமுகுந்தன் (அருமையாக, பகைப்படங்களை பிடித்து விளக்கம் கொடுத்து பதிவு தருவார்)
04.சயந்தன் -(பதிவுக்கு புதியவர், ஏழுத்துலகத்திற்கு பழையவர், உணர்வோட்டத்துடன் பதில் தருவார்)
05.டிலான் -(சுதேச சொல்லாடல் எழுத்துக்களால் பதிவுலகத்தையே தன்பக்கம் திரும்ப வைத்து அமர்க்களப்படுத்துபவர். தவறணையில் இருந்து விருப்பு வெறுப்பு கதைத்தால்!!! அதன் சுவையோடு தருவார்)

13 comments:

என்.கே.அஷோக்பரன் said...

கம்பனைப் பிடிக்காதா? - வித்தியாசமாக இருக்கிறது - அது சரி விருப்பு வெறுப்பு அவரவர் சார்ந்ததுதானே!

Beski said...

ம்ம்ம்... லிஸ்ட் கொஞ்சம் பெரிசா இருக்கே...எனக்கெல்லாம் யோசிச்சுப் பாத்தா பத்து கூட சொல்லத் தெரியல.

நானும் எழுதிட்டேன்...
பிடிக்கும்... ஆனா பிடிக்காது

என்னடா இவ்ளோ வேகமான்னெல்லாம் நெனச்சுக்க வேணாம். ஏற்கனவே ஒருத்தர் கூப்டு ஒரு வாரம் ஆச்சு, இன்னொருத்தர் கூப்டு 4 நாள் ஆச்சு. பாதிக்கு மேல ரெடி பண்ணி வச்சுருந்தேன். நீங்களும் கூப்டுட்டீங்க... இதுக்கு மேலயும் ரிலீஸ் பண்ணலன்னா நம்மள சோம்பேரின்னு முத்திரை குத்திருவாங்க.
:)

டிலான் said...

தவறணையில நடக்கிற கதையள்ள ஒன்றுதான். எனக்கும் பிடிக்கும், பிடிக்காது என்பதுகள், எழுதிட்டா போச்சு.
அடடா..உங்கள் பிடிக்காததுகள் பலவற்றுடன் எனக்கும் ஒத்துப்போதல் தெரியுது.

கவிஞர்.எதுகைமோனையான் said...

எனக்கும் கம்பனை பிடிக்காது என்று, அதுவும் நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது காரணம் என்னவென்று சொல்லவும்.

சயந்தன் said...

மம்முட்டி, வாணிஜெயராம்,உதிரிப்பூக்கள் மகேந்திரன்
மற்றவைகளை விட இது அற்புதமான இரசனை.

உணர்வுபூர்வமாக இதை எப்படி அண்ணா எழுதுவது? ஏதோ தங்களின் விருப்பத்தின் பிரகாரம் நானும் பிடித்தவை, பிடிக்காதவைகளை எழுதுகின்றேன்.

தங்க முகுந்தன் said...

தனக்கு ஏற்பட்ட சோதனையை அடுத்தவன் மேல் திணிக்கும் - பதிவர் கூட்டத்தின் (ஒரு சாராரிடம்) கலாச்சார சூழலில் தற்காலிகமாக அகப்பட்டுக்கொண்ட நண்பன் ஜனாவின் வேண்டுகோளை ஏற்று - பதிவைக் கூடியவிரைவில் இடுகை இடுகிறேன்!

Jana said...

//கம்பனைப் பிடிக்காதா? - வித்தியாசமாக இருக்கிறது -//

வாருங்கள் அசோக்பரன். தங்கள் முதல் பின்னூட்டலுக்கு என் நன்றிகள். ஆம் எனக்கு கம்பனை பிடிக்கவே பிடிக்காது.
காரணம்… இத்தனை கவித்துவம், தமிழ்நாவரப்பெற்ற சிறந்த கவிஞன், ஆரியத்துதிபாடி, திராவிடனை இழிவுபடுத்தும், தமிழனை அரக்கனெனவும், திராவிடனை குரங்கு எனவும் கேவலப்படுத்தும் இராமயணத்தையும், ஆரியத்தின் விருப்புக்களையும் பூர்த்தி செய்துவிட்டானே என்ற கோபத்தில்த்தான்.
வடக்கில் உள்ளவன் இப்போ என்ன செய்கின்றானோ அன்றும் அதையே செய்திருந்தான்.

கம்பன் மேலேயே எனக்கு இத்தனை கோபம் என்றால், இராவணன் என்ற நம்பாட்டன் ஆண்ட பூமியில் இருந்து, ராம பெருமை பேசுவதும், இராமாயணத்துடனேயே காலங்காலமாக குண்டுச்சட்டிக்குள் குதிரைவிட்டு, பார்க்கும் மக்களின் காதுகளில் தோடுகுற்றி, இலங்கையில் பார்ப்பனியத்திற்கு வால்பிடிக்கும்,
நான் வெறுக்கும் கவிஞன்பெயர் கொண்ட கழக்கத்தில் எனக்கு எவ்வளவு கோபங்கள் இருக்கும்???

விரைவில் இது தொடர்பாக விரிவான பதிவு ஒன்றினை இடுகின்றேன்.
தங்கள் வருகைக்கும், பின்னூட்டலுக்கும் நன்றி அசோக்பரன்.

Jana said...

//நானும் எழுதிட்டேன்...
பிடிக்கும்... ஆனா பிடிக்காது//


வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது உங்கள் பிடிக்கும் பிடிக்காது
எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்

Jana said...

//தவறணையில நடக்கிற கதையள்ள ஒன்றுதான்//

ஓமோம் டிலான்..கெதியா உங்கட பிடிக்கிறதைப்பத்தியும், பிடிக்காததை பத்தியும் எழுதுங்கோ.

Jana said...

//எனக்கும் கம்பனை பிடிக்காது என்று,//

எனக்கும் கம்பனை பிடிக்காது என்று நான் சொல்லி உள்ளதாக எழுதியுள்ளீர்கள் கவிஞரே! அப்படி என்றால் எனக்கு முதலும் பலர் கம்பனை பிடிக்காது என்று சொல்லி இருக்கின்றார்களா? மிக்க சந்தோசம்..
காரணம் - மேலே சொல்லியிருக்கின்றேன்.
கவிஞர்.எதுகைமோனையான்

Jana said...

//மம்முட்டி,வாணிஜெயராம்,உதிரிப்பூக்கள் மகேந்திரன்
மற்றவைகளை விட இது அற்புதமான இரசனை//

நன்றி சயந்தன். உங்கள் விருப்பு வெறுப்புக்களையும் எழுதி தீருங்கள்.

Jana said...

//தனக்கு ஏற்பட்ட சோதனையை அடுத்தவன் மேல் திணிக்கும் - பதிவர் கூட்டத்தின் (ஒரு சாராரிடம்) கலாச்சார சூழலில் தற்காலிகமாக அகப்பட்டுக்கொண்ட நண்பன் ஜனாவின் வேண்டுகோளை ஏற்று - பதிவைக் கூடியவிரைவில் இடுகை இடுகிறேன்!//

ஒருவகையில் நீங்கள் சொல்வது உண்மைதான், என்றாலும், இந்த தொடர்பதிவின்மூலம் பல பதிவர்கள் இணைக்கப்படுகின்றார்கள் தானே முகுந்தன் அண்ணா.

ஊர்சுற்றி said...

இந்த தொடர் இடுகையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன உங்கள் பதில்கள். நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails