Friday, November 27, 2009

கொமிக்ஸாக (காமிக்ஸாக) டயனாவின் கதை

வேல்ஸ் இளவரசி என வர்ணிக்கப்படும், பிரித்தானிய இளவரசியாக திகழ்ந்து 1997ஆம் ஆண்டு வாகன விபத்து ஒன்றில் மரணமடைந்து உலகத்தையே சோகத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற இளவரசி டயானாவின் வாழ்க்கையை மையமாகக்கொண்ட கதைகளை சேர்த்து அவற்றை கொமிக்ஸாக (காமிக்ஸ்) வெளியிடத்தொடங்கியுள்ளது ஃபுளு வோட்டர் என்ற கொமிக்ஸ் (காமிக்ஸ்) கதைகளை எழுதும் பிரபலமான வெளியீட்டு நிறுவனம்.

உலகின் பிரபலங்களின் கதைகளை மையமானக்கொண்ட கொமிக்ஸ் புத்தகங்களுக்கு கிடைத்த பெரும் வரவேற்பினை அடுத்தே, பலரது பரிந்துரைகளின்பேரில் இளவரசி டயானாவின் கதைகளை கொண்டு டயானா பற்றிய கொமிக்ஸ் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“பெண்படை” என்ற பெயரில் இந்த டயனா பற்றிய கொமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

இந்த புத்தக வெளியீடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஃபுளு வோட்டர் வெளியீட்டு நிறுவனத்தின் அதிபர் டேவிஸ், இளவரசி டயானா, என்றும் உலகத்தோரால் மறக்கப்படமுடியாத ஒருவர். அவருக்கு கௌரவம் அளிக்கும் முகமாகவே அவரது கதையினை தமது நிறுவனம் கொமிக்ஸாக வெளியிட எண்ணியதாக தெரிவித்துள்ளார். அதேவேளை அமெரிக்காவின் தற்போதைய சிறு பராயத்தினர்களுக்கு இளவரசி டயானா பற்றி அறிய இது ஒரு அரிய சந்தர்ப்பமாக அமையும் என்றும். வேல்ஸ் இளவரசி என்ற கௌரவத்தைவிட மனித நேயத்தில் அவர் கொண்ட ஆர்வம் காரணமாக இறுதிவரை அதற்காக அவர் போராடியமையினையும் அந்த நிலையில் இருக்கும் எவராலும் செய்துவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

புத்தகம் ஒன்று 22 பக்கங்களை கொண்டதாகவும், இளவரசி டயானாவின் நிற்சயதார்த்தம், இளவரசர் சார்ளஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணம், அவர்களின் மணக்கோல ஊர்வலங்கள், டயானாவின் மனிதநேயம், அவர்களின் மணமுறிவு, 1997ஆம் ஆண்டு இளவரசி டயானாவின் கார் விபத்து, மற்றும் அவரது மரணம் வரை கதைகளை கொண்டுள்ளதாக உள்ளது.

2 comments:

Unknown said...

மறக்கக்கூடிய நபரா டயானா?

Jana said...

அதுதானே விநோத்.

LinkWithin

Related Posts with Thumbnails