Thursday, December 2, 2010

நாம் ஏன் இலங்கையர் என வேதனைப்பட்ட வேளைகள்..

பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது.



என்றும் கறுப்பு நினைவாக மனதை உறுத்திக்கொண்டிருக்கும் அந்த 1983ஆம் ஆண்டு இருண்ட நாட்கள்.



இந்திய அமைதிப்படை என்ற பெயரில்வந்து கோரத்தாண்டவமாடி, நம்மவனே எவ்வளவோ மேல் என்று இந்தியா நிரூபித்துவிட்டுப்போன வேளையில்..



பாரிய இடப்பெயர்வுகளும், உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் நிலங்கள் அபகரிக்கப்பட்டபோதும்..



கொஞ்சமாவது நின்மதியாக இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமற்போனதும் வடக்கு கிழக்கு தேர்தல் பகிஸ்கரிப்பும்.



மீண்டும் யுத்தம். அவலம்! அவலம்!! அவலம்!!! மட்டுமே..



பார்க்காத, கேட்காத பயங்கரங்கள் அனைத்தையும் கண்டுநின்றபோது...

15 comments:

Anonymous said...

எங்கள் தமிழனை புலிகள் கொன்ற பயங்கரங்கள் நடந்த போது மட்டும் நீங்கள் கண்ணை முடிவிட்டீர்கள் போல் இருக்கிறது.

டிலான் said...

வெல்கம் அனானி. புலிகளைத்தானே பயங்கரவாதிகள் என்றுவிட்டீர்கள் பிறகென்ன இந்தக்ககேள்வி?
இங்கே தலைப்பு நாம் ஏன் இலங்கையர் என வேதனைப்பட்டது என்பதுதான். இங்கே நோகக்காரணமான சம்பவங்கள்தான் முக்கியம். புலிகள் செய்வது எல்லாம் நியாயம் என்றால் தேர்தலைப்புறக்கணித்ததும், காசுபெற்றதும் என்ற ஒருவிடயத்தை அண்ணன்போட்டிருக்கமாட்டார்.

அப்புறம் அண்ணா. நேற்று உண்மையில் நான் உங்கள்மேல் உச்ச கோபத்தில் இருந்தேன். இன்று புரிந்துகொண்டேன்.

இன்னொரு அனானி said...

//நேற்று உண்மையில் நான் உங்கள்மேல் உச்ச கோபத்தில் இருந்தேன்.//

ஏன்?

Unknown said...

வணக்கம் ஜனா. நேற்று நான்கூட மூஞ்சிப்புத்தகத்தில் "நாங்கள் இலங்கையர் என்று பெருமைப்பட்டபோது" என்ற தொகுப்பை பார்த்து உங்களை விமர்ச்சித்திருந்தேன். மன்னிக்கவும். அது தொடரும் என்று அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

அப்புறம் அது என்ன சில நியாயங்களை சொன்னால் உடனே "புலிகளை" இழுத்து முக்கியமான விடயங்களை மறைக்கும் கறுமாந்திர பழக்கமோ புரியவில்லை.
அன்புள்ள இலங்கை ஜனநாயக விரும்பி அன்பர்களே..புலிகளை இழுத்து நீங்கள் கப்பல் விட்ட காலங்கள் முடிந்துபோச்சு. இனியாவது உருப்படியாக யோசிங்க..அல்லது சிண்டுமுடிக்க வேறு ஏதாவது அமைப்பை தேடிக்கொள்ளுங்க.
தயவு செய்து பெயரைப்போட்டு கருத்து சொல்லுங்க..
அடுத்து உங்கட அஸ்திரம் நாங்க வெளிநாட்டில இருந்து பேசுறம் என்பதாக இருக்கும்??? அதையும் சொல்லிப்பேசுங்க..கேட்டுக்கிறம்.

Unknown said...

அத அடிக்கடி பட்டுட்டுதானே இருக்கிறோம்! :-)

தேவராஜ்-மதுரை said...

நாம என்ன செய்வது! ஒரு தமிழானாக பக்கத்தில் இருந்துகொண்டே வேதனைப்படுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாத ஆறரைக்கோடிப்பேரில் ஒருவன்.

Ramesh said...

நான் கொஞ்சமாமவது நெனச்சது சரியாக இன்று நடந்திருக்கு உங்க நேற்றைய பதிவுக்கு ஒரு பின்னூட்டமிட்டு அழித்துவிட்டேன். ஆனாலும் இன்னும் இருக்கின்றன

ம.தி.சுதா said...

அண்ணா நேற்று கடுப்பில் தொடர்பு கொள்ளும் போது சொல்லியிருக்கலாமே ... இது ஜனாவின் மறுபக்கமில்லை நிஜப்பக்கம்...

ம.தி.சுதா said...

பயிரை வேலி மேய்ந்ததா..?? மாடு மேய்ந்நதா..?? என்பதல்ல எம் நிலை பதிக்கப்பட்டது பயிர்களென்று நினைத்துப் பேசுவோமாக.....

நம்மவருக்க இப்போதும் போர் வேண்டும் என்பதே இலக்காக இருக்கிறதே தவிர அதன் கொடுரம் தெரிவதில்லை எம் சகோதரங்கள் 20000 பேருக்கு மேற்பட்டவர் அப்படியே இருக்கவேண்டும் என மறைமுகமாகப் பிரார்த்திப்பது போலவே இருக்கிறது... (அதை அனுபவித்தவருக்கும் விளங்காதது தான் என் ஆதங்கம்..)

மிகுதிக்கு..
http://mathisutha.blogspot.com/2010/12/blog-post.html?utm_source=BP_recent

Jeevanmegam said...

ஒன்றில் அரச சார்பு எழுத்து அல்லது புலிச்சார்பு எழுத்து இதுவே இன்று இலங்கையில் தமிழ் எழுத்துக்களில் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கத்தின் வரலாற்று ரீதியான தவறுகளையும், அதேபோல விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான முடிவுகளின் தவறுகளையும் சமமான நிலையில் சுட்டிக்காட்டி மக்கள் சார்பில் உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

balavasakan said...

இப்ப புரியுது.. பாஸ் ..இத அப்பவே சொல்லிருகலாம்ல..

Bavan said...

ம்ம்ம்..:(

KANA VARO said...

நான் ஒரு இலங்கையனாக இவ்விடயம் தொடா்பாக பெரிதாக என்னைத்தை சொல்லிவிட முடியும். ?

இது திட்டமிட்ட இடுகையா? அல்லது நேற்று கிடைத்த பின்னுட்டங்கள், மறுமொழிகள் மீதான தாக்கத்தின் விளைவா?

ஆனாலும் தேடல் அதிகம் தான்!

anuthinan said...

:)))

jagadeesh said...

இந்திய அமைதிப்படை என்ற பெயரில்வந்து கோரத்தாண்டவமாடி, நம்மவனே எவ்வளவோ மேல் என்று இந்தியா நிரூபித்துவிட்டுப்போன வேளையில்////ஆரம்பிச்சுடீங்கள? எங்கடா சொல்லையேன்னு பார்த்தேன். இந்தியாவை குறை சொல்லாம உங்களால இருக்க முடியாதே... விடுதலைப் புலிக தா ஒளிஞ்சுடான்களே,,இன்னும் ஏன் இந்தக் கொலைவெறி..

LinkWithin

Related Posts with Thumbnails