டயானாவின் மருமகள்.
இளவரசர் வில்லியத்தின் இதயத்தை பித்துக்கொண்ட ஹேட் மெடல்டன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் அவரை கரம்பிடித்து இளவரசியாகவுள்ளார்.
எட்டுவருடகால இந்தக்காதல், சென்ரூட்ஸ் பல்கலைக்கழகத்தில் மலர்ந்ததாகவும், இருவரும் மனமொத்த காதலர்கள் எனவும் அவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ, பேரனின் காதலை மகாராணியாரும், மகனின் திருமணத்தை இளவரசர் சார்லஸ_ம் ஏற்றுக்கொண்டுவிட்டனர். இது குறித்து பிரித்தானிய மக்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் அந்த திருமணத்தை காண பெரும் ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த லொலிட்டா?
லொலிட்டா….பலருடைய கதைளிலிலும், பாடல்களிலும் வந்துபோகும் ஒரு தேவதைப் பெயர். அதேபோல அழகான ஒரு பெண், அடையாளமோ பெயரோ தெரியாது என்றவுடன் லொலிட்டா என்று சொல்லி அழைக்கும் மரபுகளும் உண்டு. தமிழ்ப்பாடல்கள் பலவற்றில்க்கூட வந்து போன ஒரு பெயர் லொலிட்டா…
யார் இந்த லொலிட்டா…ஏன் இந்த லொலிட்டா??? எப்போதாவது சிந்தித்ததுண்டா?
“விலாடிமிர் நபோக்கோப்” என்ற எழுத்தாளரினால் 1955 ஆம் ஆண்டு பாரிஸில் எழுத்தப்பட்ட ஒரு காதல் ரசம் சொட்டும் ஒரு புத்தகம்தான் வொலிட்டா.
எழுத்து நடை, பிரமாதமான விபரிப்பு என்பவற்றிற்காக சர்வதேச ரீதியில் புகழப்பட்ட ஒரு நாவல் லொலிட்டா.
20 ஆம் நூற்றாண்டின் சிறந்த நாவல்கள் தொகுப்பில் நான்காவது இடத்திலும் (மொடேன் லைபரரியின் கருத்து கணிப்பு), ரைம்ஸ் கருத்து கணிப்பில் சிறந்த ஆங்கில நாவல்களில் பட்டியலிலும் இடம்பிடித்ததன் பெருமை பெற்றது.
இந்த லொலிட்டா நாவல் பாத்திரத்தில்வரும் பெண் பற்றிய விபரிப்பு, இந்த நாவலின் காதல் ரசம், இந்த நாவலின் நாயகியுடன் வாசகர்களின் உலகலாவிய இலகிப்பு என்பவையே “லொலிட்டா” என்ற பெயர் மந்திரமாகி உலகப்புகழ் பெற்றதன் காரணம். அட… அழகான பெண் ஆனால் பெயர் தெரியவில்லையா? நீங்களும் லொலிட்டா என்று அழையுங்கள்.
ஜெயமோகனின் குறுநாவல்கள்.
குறுநாவல்கள் பற்றி எனக்கு நெடுநாளாக ஒரு மயக்கம் ஏற்பட்டதுண்டு. ஏன் என்றால் கொஞ்சம் பெரிய சிறுகதை என்றாலே குறுநாவல்தானோ? என்ற ஒரு மயக்கம் என் மனதில் இந்த புத்தகத்தை வாசிக்கும்வரை இருந்தது.
அதில் எனது தவறு என்றும் சொல்வதற்கில்லை. காரணம் கொஞ்சம் பெரிய சிறுகதை “குறுநாவல்” என்ற கருத்தில் சில பிரபல எழுத்தாளர்கள் எழுதியவற்றை வாசித்த மாயை அதுவாக இருக்கலாம்.
ஆனால் ஜெயமோகனின் இந்த குறுநாவல் அவ்வாறான ஒரு எண்ணக்கருவை முழுமையாக மாற்றிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
மண், நிழலாட்டம், இறுதி விஷம், பத்மவியூகம், அம்மன் மரம், பரிணாமம், பூமியின் முத்திரைகள், கிளிக்காலம், டார்த்தீனியம், மடம், லங்கா தகனம்.
போன்ற குறுநாவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதில் வந்த “மடம்” என்னும் குறுநாவல் வாசித்து முடிக்கையில் ஒருவித உணர்வை பெறக்கூடியதாக இருந்தது. இதில் வந்த பாத்திரமான “பண்டாரம”; கதை முடிந்தவுடனும்கூட பெரியதொரு ஆச்சரியமாகவும், பண்டாரத்தின் இறுதிச்சிரிப்புக்கும், கதை ஆரம்பத்தில் வந்த குருநாதரின் சமாதிச்சிரிப்புக்கும் இடையிலான நிகழ்வுகள்….. ஒருமுறை வாசித்துப்பாருங்கள்.
இந்தவாரக்குறும்படம்
ரஹ்மானின் ஓய்வு வருடம்!
2011 ஆம் ஆண்டுமுழுவதும் தாம் ஓய்வெடுக்க விரும்புவதாகவும், இந்த வருடத்தில் தாம் தமது குடும்பத்தாருடன் அதிக நாட்களை செலவுசெய்யவும், தன் இசைக்கல்லூரியின் வளர்ச்சிகளில் கூடிய கவனம் எடுக்கவுள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த அறிவிப்பு அவரின் இசை இரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் என்றாலும்கூட ஓய்வில்லாத அவரின் தொழிலுக்கு ஒரு நிதானமான அமைதியும், ஓய்வும் தேவை என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சென்றவருடம் முழுவதும் படு பிஸியான ஒருவராக ஏ.ஆர்.ரஹ்மான் இருந்தார். இசையமைப்புக்கள் மட்டும் அன்றி பெரும்பாலான நாடுகளில் இசை நிகழ்வுகளையும் அவர் நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வருடம் அவர் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், தன் மகளை தான் பார்ப்பதே அவளது தூக்கத்தில்தான் என்று சொன்ன விடயம் கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் அவரின் இந்த வருட ஓய்வு அறிவிப்பும், குடும்பத்தாருடன் வருடத்தை செலவழிக்க திட்டமிட்டுள்ளதும் வரவேற்கத்தக்கதே.
ஏற்கனவே தாம் ஏற்றுக்கொண்ட இசையமைப்பு வேலைகள் அத்தனையையும் ஏ.ஆர்.ரஹ்மான் செய்து முடித்துள்ளார் என்பது மேலதிக தகவல்.
படித்தவர்களுக்காக படமெடுக்கும் மணிரத்னம்!
தனது கணவர் மணிரத்னம்போல கௌதம் வாசுதேவ மேனனும் படித்தவர்களுக்காக படம் எடுக்க தொடங்கியுள்ளது மகிழ்ச்சியான விடயம் என சுஹாசினி கூறியுள்ள விடயம் சர்ச்சை ஒன்றை தோற்றுவித்துள்ளது.
கௌதம் வாசுதேவ மேனனின் தயாரிப்பில் அஞ்சனா இயக்கத்தில் வெளிவரவுள்ள “வெப்பம்” திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சுஹாசினி மணிரட்னம் இவ்வாறு கூறியுள்ளார்.
புடித்தவர்களுக்கான படம் என்று அவர் எதை வரையறை செய்கின்றார் என்ற கேள்வி எழுக்கின்து. மணிரட்னம், கௌதம் வாசுதேவ மேனன் என்பவர்கள் நகரத்தை மையமாக வைத்து தமது திரைப்படங்களை அமைப்பதால் அதைத்தான் படித்தவர்களுக்கான படம் என்று அவர் கருதுகின்றாரா என்றும், அதேவேளை அப்படி என்றால் ஏனைய இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் படித்தவர்களுக்கானது அல்ல என அவர் கூறுகின்றாரா? படித்தவர்களுக்கு படம் எடுக்கும் மரபுக்கவிதை போன்ற திரைப்பட இரசனை இது என்று பெருமை கொள்கின்றாரா? என்பது போன்ற பெரும் கேள்விகள் பல மட்டத்திலும் எழுகின்றன.
பொதுவாகவே இன்று சுஹாசினியின் பேச்சுக்கள் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கிவருகின்றது.
அவர் சொல்லவது உண்மைதான்! இராமாயணம், மஹாபாரதம், வரலாறுகள், பிற நாவல்களைப்படித்தவர்களுக்குத்தானே மணிரத்னம் எடுக்கும் படங்கள் புரியும்!! என்று எழும் காமன்டுகளும் இங்கு கவனிக்கப்படவேண்டும்.
எதிர் எதிர் முற்றத்தில் ஒரு வீட்டு சிங்கங்கள்!
நாளைய இந்தியா!!! என்ற பெரும் கேள்வி பலர் மத்தியிலும் உதித்துள்ளது.
இருந்தபோதிலும் இந்தியாவில் மட்டும் அன்றி தெற்காசிய பிராந்தியத்திலேயே வலுவான ஒரு தலைவராக இருக்கும் தகுதிகள் ராகுலுக்கு முழுமையாக வந்துவிட்டன என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தியாவின் தற்போதைய தேவையும் வலுவான ஒரு தலைவராகத்தான் இருக்கின்றது. ராஜீவ் காந்திக்கு பின்னர் அப்படி ஒரு “மாஸ்” உள்ள தலைவர் அங்கே பெரும் வெற்றிடமாகவே உள்ளது.
அதேபோல மறுமுனையில் பா.ஜ.க. அத்வானி, சுஸ்மா ஆகியோரின் பின்ரான உறுதியான வெற்றிடம் நேரடியாகவே கொண்டுவரப்போவது வருணை.
வரலாறுகள் நிகழ்த்திக்காட்டிய ஆச்சரியங்கள் எண்ணில் அடங்காதவை.
ஏன் நாளைகளில் பிரதமர் ராகுல்காந்தி, எதிர்கட்சித்தலைவர் வருண்காந்தி என்ற நிலை வருவதுகூட ஆச்சரியப்படுவதற்கில்லையே!!
(இதைத்தான் சொல்லவந்தேன் அதைவிடுத்து என்ன! நாளைய இந்தியாவே ஒரு குடும்த்திடமா? அண்ணன் தம்பிகளிடமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் பொறுப்பாளி இல்லை)
என்னவண்ணமோ?
“எனி டைம் பேவரிட்” என்ற வரையறைக்குள் இந்த “ராஜ“ கீதத்தை போட்டுவைத்துக்கொள்ளலாம்.
சர்தாஜி ஜோக்
நம்ம சர்தாஜி அரசாங்க வேலை ஒன்றுக்காக விண்ணப்பித்து நேர்முகப்பரீட்சைக்காக வெளியில் காத்திருந்தார். உள்ளே இன்னும் ஒருவர் நேர்முகப்பரீட்சையை சந்தித்துக்கொண்டிருந்தார்.
நிர்வாகி - இந்தியாவுக்கு எப்போ சுதந்திரம் கிடைத்தது?
மற்றவர் - பல ஆண்டுகள் தள்ளிப்போய் இறுதியில் 1947 இல்.
நிர்வாகி -இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர் யார்?
மற்றவர் - பலர்..இதில் ஒருவரை சொல்லி மற்றவர்களை அவமதிக்க
என்னால் முடியாது.
நிர்வாகி – நல்லது. எயிட்ஸ் நோயை தடுக்கமுடியுமா?
மற்றவர் - இது பற்றிய பரிசோதனைகள் நடந்துவருகின்றன. எனவே
அவை வெளியிடப்பட்டதும் திட்டவட்டமாக சொல்கின்றேன்.
மேற்படி மற்றவரின் பதிலை கேட்ட நிர்வாகிகள் அவரை கைலாகுகொடுத்து வாழ்த்துவதையும், மெச்சுவதையும் கண்ணாடியினூடாக நம்ம ஷர்தாஜி பார்த்துவிட்டார். அவர் வெளியில் வந்ததும் அவரிடம் ஓடிச்சென்று..நண்பரே உள்ளே அவர்கள் எத்தனை கேள்வி கேட்டார்கள்? என்று கேட்டார்..அவரும் 3 என்றார்…..சரி அப்படி என்றால் அந்த 3 கேள்விக்கும் நீங்கள் சொன்ன பதிலை எனக்கு சொல்லுங்கள் என்றார் அவரும் சொன்னார்..
அடுத்து உள்ளே போன நம்ம ஷர்தாஜி நிர்வாகியிடம் தெரிவித்தவைகள்
நிர்வாகி – நீங்கள் எப்போது பிறந்தீர்கள்?
ஷர்தாஜி - பல ஆண்டுகள் தள்ளிப்போய் இறுதியில் 1947 இல்.
நிர்வாகி – உங்களது தந்தை பெயர் என்ன?
ஷர்தாஜி - பலர்..இதில் ஒருவரை சொல்லி மற்றவர்களை அவமதிக்க
என்னால் முடியாது.
நிர்வாகி – உனக்கு என்ன பைத்தியமா?
ஷர்தாஜி - இது பற்றிய பரிசோதனைகள் நடந்துவருகின்றன. எனவே
அவை வெளியிடப்பட்டதும் திட்டவட்டமாக சொல்கின்றேன்
19 comments:
வழக்கம்போல் கலக்கல்.
இளவரசி.. நீயும் டயானவா இல்லை அந்த சோகப்புன்னகை கண்ணில் காணவில்லை.
ஜெயமோகன் படிக்கணும்
ரஃமானின் ஓய்வு நல்லதே.. அவசியம் உழைப்பாளிகளுக்குத் தேவை.
பாடல் ரசனை.
டயானாவின் மருமகள் - :)
லொலிட்டா - ;-)
ஜெயமோகனின் குறுநாவல்கள் - வாசித்துவிட்டுக் கொடுங்கள்
குறும்படம் - டச்சிங்
ரஹ்மான் - ஓய்வுக்கும்பின் புயலாக வருவார் என நம்பலாம்
படித்தவர்களுக்காக படமெடுக்கும் மணிரத்னம் - உண்மைதானே(?!)
லொலிட்டா.. ஆலோசனைக்கு நன்றி ஜனா அண்னா :)
ஓஓஓஓஓ மம்ம்ம் குறும்படம்..:(
யார் இந்த லொலிட்டா ?
தகவலுக்கு நன்றி அண்ணா
காவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு
பலவருடங்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் இங்கிலாந்து அரசகுடும்ப திருமணத்திற்கு இப்போதே எதிர்பார்ப்புக்கள் தொடங்கிவிட்டது...
குறும்படம் காலம்கடந்த ஞானம் அந்த புகைப்படக் கலைஞருக்கு பின்னராவது உணர்ந்தாரே...
ரஹ்மானுக்கு ஓய்வு கட்டாயம் தேவைதான் ஓய்வுக்கு பிறகு புயல்போல வருவார்
ஆமாய்யா எனக்கும் மணிரத்தினதினுடைய படங்கள் விளங்குதில்ல ஆயுத ஏழுத்து திரைப்படம் இன்னும் விளங்கலை
இலங்கை மற்றும் தமிழ்நாட்டு குடும்ப அரசியலை பார்த்து இந்திய மத்திய அரசுக்கும் குடும்ப அரசியல் ஆசை வந்திருக்கலாம்
:)
உங்களது பலதரப்பட்ட ரசனை வியக்க வைக்கிறது. சந்திக்கும் ஆவல் அதிகரித்து வருகிறது
எனது பேவரைட்ட்டும் கூட !
தகவல்களுக்கு நன்றி !
வழமைப் போலவே அருமையாக இருக்கிறது
லோலிட்டா ஓகே senorita என்பார்களே அப்படிஎன்றால் என்ன என்றும் கொஞ்சம் சொல்லுங்களேன். நம்ம ஷாருக் "தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே " யில் கஜோலை அப்படி கூப்பிடுவதாக ஞாபகம். அதுவில்லாமல் ரெண்டு தமிழ்ப் பாடல்களில் ஆரம்ப வரியாகவும் வந்திருக்கிறது அல்லவா?
மணிரத்தினம் பற்றி சுகாசினி கூறியவைகள் பொழுதுபோக்காக சினிமாவைக் கருதாமல் சற்று நுண்ணுணர்வுடன் சினிமாவை அணுகுபவர்களைப் பற்றியதாக இருக்கலாம். பெரிதுபடுத்தாமல் விடுவோம்.
ராகுலைப் பற்றி அவ்வாறன ஒரு பிம்பத்தை ஊடகங்களும் காங்கிரசும் உருவாக்கி வைத்திருகின்றன என நினைக்கிறேன். ராஜிவைப் போல ஆனால் சோனியா உண்மையில் ஒரு சாணக்கியவாதி என்னளவில்
"தென்றல் வந்து தீண்டும் போது " உண்மையில் மனதை வருடும் பாட்டு
டயானாவின் மருமகள்: அழகு; ஆனால் என்ன, தற்போதைய மகாராணியுடன் இங்கிலாந்தின் ராஜகுடும்பம் வாரிசை இழக்கிறது.
யார் இந்த லொலிட்டா: அப்படியா? நல்ல தேடல்
ஜெயமோகனின் குறுநாவல்கள்: வாசிக்க வேண்டும்
இந்தவாரக்குறும்படம்: எங்கையா தேடி எடுக்கிறீங்கள்? வார்த்தை இல்லை
ரஹ்மானின் ஓய்வு வருடம்: கண்டிப்பாக தேவை
சுகாசினி: நானும் படித்திருந்தேன்
எதிர் எதிர் முற்றத்தில் ஒரு வீட்டு சிங்கங்கள்: :)
என்னவண்ணமோ: இளையராஜாவின் தெரிவுகள் எப்போதும் அருமை
சர்தாஜி ஜோக்: கேட்டிருக்கின்றேன்
அதிர்ச்சியில் உறைய வைத்தது குறும்படம். நன்றி
ரகுமானின் ஓய்வு எனக்கு கவலையான விடயமாக இருந்தாலும், தலைவர் ஓய்வுக்கு பின்னர் கலக்குவார் என நம்பலாம்.
லோலீட்டா எனக்கு பிடித்த பெயர்
கேட் வில்லியம் திருமணத்தினால் எமக்கு 3 நாட்கள் விடுமுறை கிடைக்கின்றது.
லொலிட்டா புதிய செய்தி
ஜெயமோகன் நாவல்களை வாசிக்கும் அளவிற்க்கு எனக்கு பொறுமை இல்லை.
ரகுமானுக்கு செம்மொழிப்பாடலும் கொமன்வெல்த் பாடலும் பெரிதாக பெயர்கொடுக்கவில்லை அந்த வகையில் அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைதான்.
சுஹாசினி நுணலும் தன் வாயால் கெடும்.
இந்தியா விரைவில் ரஸ்யாவாக மாறும் சாத்தியம் அதிகம். குடும்ப அரசியல் நாட்டை குட்டிச் சுவராக்கிவிடும்.
ராஜகீதம் கண்ணைமூடி ரசியுங்கள் ஒவ்வொரு கலரும் மனதில் தெரியும்.
சர்தாஜி ஜோக்கை மன்மோகன் சிங் ஜோக் என மாற்றுங்கள்.
தென்றல் வந்து - சூப்பர் எனக்கும் பிடித்த பாடல்
சுஹாசினி - விடுங்க பாஸ் இவிங்க எப்பவுமே இப்பிடித்தான்!
கலக்கல்ஸ் ஜனா அண்ணா! :-)
அண்ணர் அந்த குறும்படம் மனதை ரொம்ப பாதித்து விட்டது.
இம்முறை எனக்க அறிய --- தான் பரவாயில்லை.. அத்துடன் லொலிட்டாவை நான் பயன்படுத்திக் கொல்லட்டுமா..??
பாடல் அருமை...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel
வந்தி அண்ணா அந்த மூன்று நாளில் மூன்ற பதிவு போடணும்...
// ம.தி.சுதா said...
இம்முறை எனக்க அறிய --- தான் பரவாயில்லை.. அத்துடன் லொலிட்டாவை நான் பயன்படுத்திக் கொல்லட்டுமா..??
//
ஓ, இந்தமுறை கொலையா? :P
Post a Comment