Thursday, January 27, 2011

அராஜகங்களின் உச்சங்களும் மக்களின் எழுச்சிகளும்!!

“ஜனநாயகம்! என்னும் ஆட்சிமுறை மக்களுக்கான வரமாகவும், அதேநேரம் அவர்களுக்கான சாபங்களாகவும் அமைந்துவிடுகின்றது” என்ற பொன்மொழிக்கேற்ப இன்று உலகில் ஜனநாயகத்தின்பேரால், அடக்குமுறைகள், ஊழல்கள், சுரண்டல்கள், ஏகபோகங்கள், பரம்பரை ஆட்சிகள், அதிகார துஸ்பிரயோகங்கள், சர்வாதிகார தன்மைகள் அத்தனையும் மலிந்துகிடக்கின்றன.
பல மூன்றாம் உலக நாடுகளில் ஈமைச்சடங்குகள் செய்து இன்னும் அடக்கம் செய்யப்படாமல் ஜனநாயகம் செத்துக்கிடக்கின்றது.

ஒரு நாட்டில் ஊழல், அராஜக ஆட்சி இடம்பெறுகின்றது என்றால் அதன் நேரடியான தாக்கம் பொருளாதாரத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் பெரும் சிக்கலை உண்டாக்கி நாளை அந்த நாட்டின் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்குறியைக்கூட தூக்கிச்சாப்பிட்டுவிடும். ஆனால் அதன் மறைமுகத்தாக்கங்கள் மக்களை பல வழிகளில் வாட்டிவதைத்துவிடும். உலக யுத்தங்களில் அனுபவிக்கும் கொடுமைகளைவிட கொடிய கொடுமைகள் நாட்டின் உள்ளேயே தலைவரித்தாட இது ஏதுவானதாக அமைந்துவிடும்.

நிச்சயமாக சொரணை உள்ள மக்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வீதிக்கு இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இதில் முற்றுமுழுதான பிழைகளையும் அதிகார வர்க்கங்களையே சாரும் எனச் சொல்லமுடியாது.
பெரும்பாலும் நல்வர்களை, ஆழுமையானவர்களை புறக்கணித்துவிட்டு, குறுகிய எண்ணத்துடன், அந்த காலத்தேவைகளுக்காக தகுதி அற்றவர்களை அரியணணையில் ஏற்றிவிட்ட மக்கள்மேலும் குற்றங்கள் உண்டு என்பதையும் எற்றுக்கொள்த்தான் வேண்டும்.

அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கமே மக்கள் அஜாரகங்கள், ஊழல்களுக்கு எதிராக வழித்தெழும் சம்பவங்கள் உலகலாவிய ரீதியில் தொடர்ச்சியாக எற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
எத்தனை கொடுமைகளையும், ஊழல்களையும், அராஜகங்களையும், அதிகார துஸ்பிரயோகங்களையும் மக்கள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ளமுடியாமல், தங்கள் வாழ்வாதாரத்திற்கு முன்னே பெரும் கேள்வி ஏற்பட்டவுடன் வீதிக்கு இறங்கி போராடத்தொடங்கிவிட்டார்கள்.

நியூ ஜோர்க்; டைம்ஸ் பத்திரிகையில் “நீல் ஜோன்ஸன்” அவர்கள் டிசெம்பர் 29 2010 அன்று எழுதியிருந்த அடுத்த ஆண்டு (2011) எப்படி உலகியலில் இருக்கும் என்ற தனது கட்டுரையில்,
“உலகியலில் சைபருக்கு பின்னதாக வரும் முதலாவது ஆண்டுகளில் உலகில் பாரிய மாற்றங்களும், புதிய சிந்தனைகளும், மக்கள் கை மேலோங்கும் நடவடிக்கைகளும், எதிர்பார்த்தவைகள் இயற்புடையதாகும் நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றன.
உலகம் சந்தித்த யுத்தங்கள் ஆரம்பம், மதம் சார் யுத்தங்கள், நிலம் சார்யுத்தங்கள் என்பவற்றை கடந்து, பின்னர் வர்க்க யுத்தங்கள், இனரீதியான யுத்தங்கள் என்பன வந்தன அவையும் இப்போது அடக்கப்பட்டுவிட்ட சூழல்களில் இனி இடம்பெறும் யுத்தங்கள் பொருளாதார யுத்தங்களாகவே இருக்கும்
அதற்கான ஆரம்ப நிலைகள் 2011இல் தொடங்கும்.

“முக்கியமாக இன்று இரண்டாம், மூன்றாம் நிலை உலகநாடுகளில் ஊழல், அரச அராஜகங்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் என்பன மலிந்து மக்கள் நலிவடைந்துள்ள நிலையில், உலகலாவிய ரீதியில் ஆண்டின் நடுப்பகுதியில் மக்கள் கிளர்ச்சிகள் உலகம் முழுவதும் பரவலடைய ஆரம்பிக்கும்”
என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இது எத்தனை உண்மை என்பதைபாருங்கள்.
நடுப்பகுதி என்ன முதல்மாதத்தின் நடுப்பகுதியிலேயே இந்த மக்கள் கிளர்ச்சிகள் ஆரம்பித்துவிட்டனவே!


துனிஸியா, எகிப்து, ஏமன் என்று அராஜகங்களுக்கும், ஊழல்களுக்கும் எதிராக மக்கள் கொதித்து எழுந்து போரடி வீறுகொண்டு நிற்கின்றனர். அடுத்து லிபியா என்று ஆரூடங்கள் கூறுகின்றன!!
இந்திய இலங்கை மக்கள் இதை எழுதியும், படித்தும்கொண்டு நிற்கின்றோம்!!!

16 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வட?

Unknown said...

//“முக்கியமாக இன்று இரண்டாம், மூன்றாம் நிலை உலகநாடுகளில் ஊழல், அரச அராஜகங்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் என்பன மலிந்து மக்கள் நலிவடைந்துள்ள நிலையில், உலகலாவிய ரீதியில் ஆண்டின் நடுப்பகுதியில் மக்கள் கிளர்ச்சிகள் உலகம் முழுவதும் பரவலடைய ஆரம்பிக்கும்”
என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இது எத்தனை உண்மை என்பதைபாருங்கள்.//
எல்லாம் சரி தான் ஆனால் அனைத்திற்கும் மக்கள் ஆதரவு முக்கியம் கண்டியளோ..
நம்ம இலங்கை சனத்த பத்தித் தான் தெரியுமே..
முறையான நேரத்தில கால வாரி விட்டிடுங்கள்...

சக்தி கல்வி மையம் said...

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்..
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_27.html

சக்தி கல்வி மையம் said...

எது எப்படியோ...நம் இரத்த சொந்தங்களை அழித்தவர்களை ஒழித்தால் சந்தோஷப்படும் பலகோடி இதயங்களில் நானும் ஒருவன்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பல மூன்றாம் உலக நாடுகளில் ஈமைச்சடங்குகள் செய்து இன்னும் அடக்கம் செய்யப்படாமல் ஜனநாயகம் செத்துக்கிடக்கின்றது.

அது சரி நம்ம நாட்டில இப்போ எப்படி இருக்கு " ஜனநாயகம்? " ! நாட்டை விட்டு வெளியேறி ரொம்ப நாளாச்சு ஹி.... ஹி... ஹி.....

Admin said...

//இந்திய இலங்கை மக்கள் இதை எழுதியும், படித்தும்கொண்டு நிற்கின்றோம்!//

இதான் பஞ்ச்..

உலகப் புரட்சி நடந்தாலும், நம்ம புரட்சி சினிமா கிசு கிசுக்களுக்குள்ளும், டீ வி க்குள்ளும் ஒளிந்து கொள்ளும்

Anonymous said...

"சும்மா இருந்தால் சுதந்திரம் என்றால் எனக்கும் இரண்டு கிலோ" என்ற நிலையில் தான் இலங்கை இந்தியா இருக்கிறது

test said...

//இந்திய இலங்கை மக்கள் இதை எழுதியும், படித்தும்கொண்டு நிற்கின்றோம்!!//

ஏதோ எங்களால் முடிஞ்சது..திடீரென்று 'சொரணை' பற்றி எல்லாம் சொன்னா?....நாம என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றோம்? :-)

அண்ணே இங்க 'இலங்கையன்' எண்டு பெருமைப்படறவங்க, தேசபக்திய 'டீ'ல மிக்ஸ் பண்ணி குடிக்கிறவங்க யாருமில்லையே? வந்து கடிச்சிறப் போறானுங்க!:-)

தமிழ் உதயம் said...

நல்ல நேரம் பார்க்கிறார்கள் போலும் நம்மவர்கள்.

KANA VARO said...

துனிஸியா நாடு பற்றி அண்மையில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின படியே இருக்கிறது, அதிபர் ஓடிவிட்டார். அவருக்கு சார்பான மக்களையும் வெளியேற்றும்படி கோருவது சரியாகப்படவில்லை. முன்னாள் அதிபரின் மனைவி கொண்டு சென்ற தங்கத்தின் பெறுமதியை நினைக்க தலை சுற்றுகிறது.

Chitra said...

சிந்திக்க வைக்கும் பதிவு.

pichaikaaran said...

கடைசி வரி கலக்கல்

maruthamooran said...

நல்ல பதிவு பொஸ். வீதியில் இரங்கி போராடுவதற்கும் எங்களின் நாட்டில் ?????????????????????

http://rkguru.blogspot.com/ said...

பதிவு அருமை.......வாழ்த்துகள்

தர்ஷன் said...

நல்ல பதிவு

Ramesh said...

நல்ல இடுகை. நான் தேடியது இங்கே கிடைத்தது. மகிழ்ச்சி.
கடைசி வரி நச்.

LinkWithin

Related Posts with Thumbnails