Sunday, January 23, 2011

இந்தவாரப் பதிவர் - திரு.கன.வரோ.



இலங்கை வலைப்பதிவர்களுக்குள் இருக்கும் ஊடகவியலாளர்களில் வரோவும் முக்கியமான நபர். ஆரம்பத்தில் வான்மீகி என்று தனது தளத்தின் பெயரை வைத்திருந்து, பின்னர் அகசியமாக வலையுலகில் வலம் வந்துகொண்டிருப்பவர்.
இதழியல் கல்லூரியில் ஊடகத்துறை சார்ந்த கற்கைநெறியை பூர்த்தி செய்து இன்று ஒரு ஊடகவிலாளனாக பணியாற்றிவருகின்றார் இவர்.
நான் வேறு யாரோ கிடையாது, “உன்னைப்போல் ஒருவன்” என்று வலையுலகத்தில் தன் நிலைபற்றி தெரிவித்து, வாசகர்களை தூரப்போகாது, தன் அருகில் வைத்திருக்க எத்தனிப்பவர்.

கனகநாயகம் வரோதயன் என்ற இயற்பெயர் கொண்ட இவர். 2009ஆம் ஆண்டு நடுப்பகுதிகளில் பதிவுலகத்தில் பதிவெழுதல் என்பதை முழுமையாகத்தொடங்கினார்.
அன்றிலிருந்து இன்றுவரை அயராத தொடர்ச்சியாக புதிய புதிய சிந்தனைகளை புகுத்தி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார். பல்வேறுபட்ட தகவல்களை சுவாரகசியம் குன்றாமல் தருவது வரோவின் ஸ்ரைல்.
“மாற்றம் வேண்டும்” என்ற ஒரு கவிதையுடன் வலையுலகில் முழுமையானவனாக பிரவேசித்தார் வரோ. அதன் பின்னரும் கவிதைகளின் காதலனாக பல கவிதைகள்.

ஓவ்வொரு வலைப்பதிவாளருக்கும் ஒரு பெஸாலிட்டி இருக்கும் அந்தவகையில் வரோவின் பெஸாலிட்டி, நிகழ்வுகள் பற்றிய விபரிப்பு பதிவுகள்.
“விபரிப்புக்கு வரோ” என்ற அளவுக்கு இதில் வரோவுடைய முத்திரைகள் பல இடங்களில் நச் என்று பதிந்துவிட்டுள்ளன. ஒரு நிகழ்வின் ஆரம்ப நிலையில் இருந்து அந்த நிகழ்வின் இறுதிக்கட்டம்வரை, தன் எழுத்துக்களை கமரா போல கையாண்டு, எழுத்துக்களால் காட்சிப்புலங்களை காட்டிவிடுவார் மனிதர்.
வாசிப்பவர்களுக்கு நிச்சயமாக பக்கத்தில் வரோவுடன் இருந்து இந்த நிகழ்வுகளை பார்த்துவிட்டதுபோல ஒரு உணர்வை அந்த பதிவுகள் தந்துவிடுகின்றன.

“தலைநகரின் பூந்தோட்டம்” லங்கா மல் கண்காட்சி, விபரணைப்பதிவாக வரோ இட்ட முதல் விபரணப்பதிவு. அங்கேயே ஒரு மின்னல் தட்டுகின்றது.
தொடர்ந்து இன்றுவரை தான் பார்த்த நிகழ்வுகள் பற்றி செதுக்கி விபரணங்களை தந்துகொண்டிருக்கின்றார் வரோ. பதிவுலகில் விபரணப்பதிவுகளுக்கு வரோ..என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். யாராவது முக்கியமான ஒரு நிகழ்வு ஒன்றை மிஸ் பண்ணிவிட்டால் அந்த மிஸ்ஸிங் பீலிங்கை வரோவுடைய விபரண பதிவுகள் இல்லாமல் செய்துவிடும்.

கவிதை, விபரணம், சினிமா, சமகாலம், சமுகம், சமுகமேம்பாடு, வரலாறு, விளையாட்டு, சிறுகதை என்று வரோ பல விடயங்களையும் தொட்டுக்கொண்டு செல்கின்றார். அதேவேளை பல பதிவர்கள் பல விடயங்களையும் ஒரு மிக்ஸ்ஸிங்காக சுவாரகசியமாக தருவதுபோல அகசியத்திலும், “பாயாசம்” என்ற பெயரில் வரோ பல்சுவைப்பாயாசம் தருகின்றார்.
நடிகர் விஜய்யின் பரம இரசியன் நான் என்று விஜய்யை பதிவுலகம் வறுத்தெடுத்த வேளைகளிலும் மறைக்காமல் சொல்லிநின்றவர். சொல்லியும் வருகின்றார்.

அடுத்து வரோ பற்றி தெரியவேண்டிய முக்கிமான விடயம் அவர் தொடராக எழுதிய யாழ்ப்பாணத்தை ஆண்ட இறுதி மன்னரான “சங்கிலியன்” பற்றிய ஒரு சரித்திர தொடர். சலிக்காமல், இடைநடுவே கைவிட்டுவிடாமல், அதை ஒரு முழுமையாக கொண்டு சென்றுவிட்டிருக்கின்றார் வரோ. உண்மையில் இன்றைய நிலையில் சரித்திர தொடர்களை எழுதுபவர்களை ஊக்குவிக்கவேண்டும் பாராட்டப்படவேண்டும்.
அந்த வகையில் வரோ பாராட்டப்படவேண்டியவர்.

சமுக அக்கறையுடனான பல பதிவுகள் வரோவிடமிருந்து பெருமளவில் வந்ததை அவதானிக்கமுடிகின்றது. நம்மால் செய்யக்கூடிய ஏற்புடைய திட்டங்களைவேறு அவர் தனது பதிவுகளில் யதார்த்தமாக சொல்லியிருப்பதையும் அவதானிக்கமுடிகின்றது.
பதிவுலகில் எதையாவது சாதிக்கத்துடிக்கும் ஒரு இளைஞனை வரோவின் பதிவுகளில் கண்டுவிடமுடிகின்றது. இவை தவிர விளையாட்டுக்கள் என்ற விடயத்தை எடுத்தாலக்கூட, சர்வதேச விளையாட்டுக்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, உள்ளுர் விளையாட்டுக்கள், இலைமறைகாய்களாக இருக்கும் வீரர்களை வெளிக்கொண்டுவருவது போன்ற பதிவுகளும் வரோவிடமிருந்து வெளிப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இந்தவாரப்பதிவரான வரோவிடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளையும், அதற்கான அவரது பதில்களையும் பார்ப்போம்.

கேள்வி: உங்கள் பதிவுலக பயணம் எப்படி ஆரம்பித்தது?

வரோ:முதலில் என்னை இந்தவார பதிவராக தெரிவு செய்தமைக்கு உங்களுக்கு நன்றிகள். கூடவே என் அனுதாபங்களும். அண்மைக்காலமாக பதிவுலகில் தொடர்ந்து ஹிட்டடித்துக் கொண்டிருப்பவர் நீங்கள். உங்களுக்கு இன்று ஒரு 'பிளாப்' பதிவு.

விடயத்துக்கு வருகின்றேன், 2007 காலப்பகுதியில் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து வெறும் படங்களை மட்டும் போட்டிருந்தேன். பின்னர் 2009ஆம் ஆண்டு ஊடகவியலைக் கற்கையில் 'Online Journalism' படிக்கும் போது வலைப்பதிவை ஆரம்பித்தேன். முதலாவது பதிவர் சந்திப்புக்கு பின்னர் அதிகமாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. இரண்டாவது சந்திப்புக்குப் பின்னர் தான் பல திரட்டிகளில் இணைந்து கொண்டேன். தொடர்ந்து நான் அறிந்த, பார்த்த, கேட்ட விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து வருகின்றேன்.

கேள்வி:இலங்கைப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு எப்படியிருக்கிறது?

வரோ:பதிவர்களில் ஏற்கனவே அறிமுகமானவர்கள் ஒரு சிலர் தான். நீங்கள் உட்பட அனைவரும் பதிவர்களாகவே என்னுடன் நட்பானவர்கள். தோள் தட்டிப் பழகியவர்கள் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என நினைத்தது என் அறியாமை. நான் பதிவுலகில் நுழைந்த சமயத்தில் ஒரு சிலரைக் கருத்துக்களால் பகைத்துக் கொண்டேன். இது மறுப்பதற்கில்லை. அவர்களும் கருத்துக்களாலேயே பதில் சொல்லியிருக்கலாம்! நடந்தது வேறு. 'ஒரு பதிவர் என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்க முடியுமோ, அவை அனைத்தையும் பதிவெழுத வந்த ஒரு வருடத்திற்குள் அனுபவித்துவிட்டேன்'. இனி பதிவுலகில் எதிர்கொள்வதற்கு எந்த கஷ்டங்களும் இல்லை போலும்!.

எனக்கு நேர்ந்த சில பதிவுலக துன்பியல் சம்பவங்களை என் தளத்திலேயே எழுதவில்லை. உங்கள் தளத்தில் அதை எழுதி உங்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையையும் நான் உருவாக்கவில்லை. "இயலாதவர்களின் அந்த செயல்களை நான் மன்னிக்கவும் இல்லை. காத்திருந்து பழி வாங்கப் போவதும் இல்லை. கூடிய வரை மறக்க நினைக்கிறேன்". ஆனாலும் சிலர் விடுவதாக இல்லை. ஏதேதோ சம்பவங்களுடன் என்னை தொடர்புபடுத்திப் பார்ப்பதும், தொடர்புபடுத்த நினைப்பதுமாக இருக்கிறார்கள். குறிப்பாக இலங்கையில் இல்லாத ஒருவர், கிடைக்கும் இடங்களிலெல்லாம் என்னை வசைபாடுவதையே தனது தொழிலாக கொண்டிருக்கிறார். என்னில் குற்றம் சுமத்துபவர்களுக்கு நான் குற்றமற்றவன் என தெரியும். என்னை அறியாதவர்கள் என்னைத் தப்பாக நினைத்தால் அதற்கு நான் எதுவுமே செய்ய முடியாது. கூடியவரை இன்றும் நான் யாரையும் பகைத்துக் கொள்ளாமலும், பகைக்க விரும்பாமலும் இருப்பவன். பல புதிய, இளைய பதிவர்கள் நட்பாக கிடைத்திருக்கிறார்கள்.

கேள்வி: பதிவுலகம் தாண்டி உங்கள் பொழுதுபோக்குகள் எவை?

வரோ:யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி பார்ப்பதையே என் முழு நேர தொழிலாக கொண்டிருந்தேன். கடந்த மூன்று வருடங்களாக அது மிஸ்ஸிங். அடுத்தது புத்தகம் வாசிப்பது. அதுவும் மிஸ்ஸிங். தொழிலுக்காக ஒரு வேலை. பொருளாதாரத்திற்காக இன்னொரு வேலை. கூடவே படிப்பு வேறு. நேரம் தான் பெரும் பிரச்சினை. ஆனாலும் புதிய படங்களை தியேட்டர்களில் பார்த்துவிடுவேன். அதுவும் வலைப்பதிவுக்காக!

17 comments:

தர்ஷன் said...

வரோ அவ்வப்போது பரிமாறும் பாயசத்தின் ரசிகன் நான்

Unknown said...

கேள்விகளை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம்...
இருவருக்கும் எனது பாராட்டுக்கள் ...

டிலான் said...

வணக்கம் வரோ பாயாசத்தை ஒழுங்கா ஒவ்வொரு கிழமையும் வடையோட தர வேண்டும்.

Unknown said...

இவ்வார பதிவராக தெரிவாகிய வரோ அவர்களுக்கு எம் இனிய நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

//"இயலாதவர்களின் அந்த செயல்களை நான் மன்னிக்கவும் இல்லை. காத்திருந்து பழி வாங்கப் போவதும் இல்லை. கூடிய வரை மறக்க நினைக்கிறேன்"//

அருமை..
நல்ல கேள்விகள், நாகரீகமான பதில்கள்..
இந்த பதிவும் ஹிட் பதிவு தான்... சந்தேகம் ஏனோ?

Unknown said...

//"இயலாதவர்களின் அந்த செயல்களை நான் மன்னிக்கவும் இல்லை. காத்திருந்து பழி வாங்கப் போவதும் இல்லை. கூடிய வரை மறக்க நினைக்கிறேன்"//

அருமை..
நல்ல கேள்விகள், நாகரீகமான பதில்கள்..
இந்த பதிவும் ஹிட் பதிவு தான்... சந்தேகம் ஏனோ?

ம.தி.சுதா said...

Nan adikkady sellum thalankalil akasijamum onru... Ivarathu arimikanal marakka mudijatha nalill onru...

Ivaril enakkoru kobam irukkirathu ethirijai kuda nanpanakk ninaikkum ulakil oru nalla rasikanai ivarahave thaddikkaliththuviddar

Vazhthukal varo...Nan adikkady sellum thalankalil akasijamum onru... Ivarathu arimikanal marakka mudijatha nalill onru...

Ivaril enakkoru kobam irukkirathu ethirijai kuda nanpanakk ninaikkum ulakil oru nalla rasikanai ivarahave thaddikkaliththuviddar

Vazhthukal varo...

ம.தி.சுதா said...

Nan adikkady sellum thalankalil akasijamum onru... Ivarathu arimikanal marakka mudijatha nalill onru...

Ivaril enakkoru kobam irukkirathu ethirijai kuda nanpanakk ninaikkum ulakil oru nalla rasikanai ivarahave thaddikkaliththuviddar

Vazhthukal varo...

KANA VARO said...

என்னை அறிமுகபடுத்தியதுக்கு நன்றி ஜனா அண்ணா! கூடவே என் கோரிக்கையை எற்றதட்கும்.

என் பதிவுலக வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என கருதிய நேரத்தில் தான் உங்களுடனான திடீர் சந்திப்பு இடம்பெற்றது. மீண்டும் உத்வேகத்துடன் இன்று வரை எழுதுவதற்கு காரணம் நீங்கள் எண்டு சொன்னால் அது புகழ்ச்சிக்காக இல்லை. இதை முன்னரே ஒரு பதிவில் குறிப்பிட்டு விட்டேன்.

anuthinan said...

நமக்கு அறிமுகமான அண்ணாவின் அறிமுகம்!!!!


வாழ்த்துக்கள்!!! ஜனா அண்ணா & வரோ அண்ணா!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நன்றி ஜனா பல நண்பர்களை நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்கிறீர்கள் உங்கள் பணி மேலும் தொடருட்டும்! கூடவே வரோவுக்கும் வாழ்த்துக்கள்!

ஷஹன்ஷா said...

வாழ்த்துகள் வரோ அண்ணா....

நல்ல பதிவு...!

பாயாசம்...-கலப்படமற்ற சுவை
அகஸியம்...-ஆகர்ஸிக்கும் உண்மை

Chitra said...

இவரது பதிவை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். அருமையாக இருக்கும்.

maruthamooran said...

வாழ்த்துக்கள் வரோ! எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயலாற்றுங்கள் .

Subankan said...

வரோ - பதிவுலகில் என்னால் மறக்கமுடியாதவர்களில் ஒருவர். மற்றவர்களால் இலகுவில் முடியாத காரியங்களை 'ஜஸ்ட் லைக் தட்' செய்து முடித்துவிட்டு சாதாரணமாக இருக்கும் இவரைக்கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். உங்கள் அறிமுகத்திற்கு நன்றி :)

ஆதிரை said...

பின்னூட்டங்களை 'லைக்' செய்யும் அல்லது பின்னூட்டங்களுக்கு வாக்களிக்கும் வசதி இருந்திருந்தால், சுபாங்கனின் பின்னூட்டத்தை லைக் செய்திட்டு போயிருப்பேன். :P

KANA VARO said...

கருத்துரைத்த பதிவர்களுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails