Monday, January 3, 2011

நிழல்…

உண்மையின் ஒரு வடிவம்

அது ஒரு குக்கிராமம்…
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதில் எந்த புகழ்ச்சியும் இருக்கவில்லை. முப்பது வருடங்களுக்கு முன்னர் உயர் பாதுகாப்பு வலயம் என, இவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டபோது, அகதிகள் என்ற முத்திரையுடன் அலையத்தொடங்கியவர்களின் ஆதாரபூமி.

தற்காலிக கொட்டகைகள் என நிறுவனங்களால் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட கிடுகு கூடாரங்கள் இவர்களுக்கு மட்டும் வரைவிலக்கணங்களைத்தாண்டி இரண்டு தசாப்தங்களை கடக்க உதவிய புகழரன் ஆகியிருக்கின்றது.

பகலில் வெயிலுடனும், இரவில் இருளுடனும் போராடவே நேரம் சரியாகிப்போன இவர்களுக்கு அடிப்படை வசதிகள் என்பதுகூட ஆச்சரியக்குறிதான்.
வறுமையின் கசையடிகளுக்கு மருண்டோட பழகிக்கொண்ட இவர்கள், வாழ்க்கை மேம்பாடைப்பற்றியோ, சமூககட்டமைப்புக்களை பற்றியோ, கவலைப்பட்டதாகத்தெரியவில்லை.
இன்னொருவகையில் சொல்வதானால் இவர்களுக்கு கவலைப்பட நேரமும் இல்லை.

நீண்ட நாட்களின் பின்னர், இவர்கள்பால் கண்திறந்து கருணை காட்டினாள் கண்ணாத்தா என்பதுபோல அகதிமுகாமாக இருந்த பிரதேசம், அரசாங்க உயர் அதிகாரிகளின் அனுசரணையுடன் இவர்களுக்கான நிரந்தர காணிகளாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சில அபிவிருத்தி நிறுவனங்களின் அனுசரணையுடன் ஒருங்கிணைந்த அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மெல்ல மெல்ல தன்னை வறுமையின் பிடியில் இருந்து விடுவித்துக்கொள்ள தலைப்படுகின்ற இக்கிராமத்தை ஒரு நிழல் உற்றுப்பார்க்கின்றது….

மூன்று தசாப்த வறுமையின் ஆழத்தையும் பிடிமானமற்ற நலிவான சமூகக்கட்டமைப்பினையும் தன் தொழிலுக்கு மூலதனமாக்க முனைகின்றது இந்த நிழல். புசப்பு வார்த்தைகள் பேசி பெற்றொரைக்கவரும் இன்நிழல், வெளியிடங்களில் வேலைவாங்கிக்கொடுப்பதாகக்கூறி இளம்பெண்களை குறிவைக்கின்றது.

ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் வேலைக்கு ஆட்கள் தேவை என்கின்ற விளம்பர துண்டுப்பிரசுரம், இந்நிழலால் வர்த்தகமானி அறிவித்தல்போல் மக்களிடையே பிரமாண்டமாக சித்தரிக்கப்படும்.
பல்வேறு பண நெருக்கடிகளின் மத்தியில் புரளும் பெற்றோர்களுக்கும் இது ஒரு வசந்தத்தின் பாதை என்று தோன்றும். இன்னும் உற்று வாசித்தால், கவர்;சிப்பொடிகள் தூவிய அந்த தண்டுப்பிரசுரம் சுற்றுலாக்களைப்பற்றியும், களியாட்ட விழாக்கிளைப்பற்றியும், கவர்ச்சிகரமான தங்குமிட வசதிகள் பற்றியும் கூறி நீண்டு செல்கின்றது.

இன்றைய திகதியில் கவலையான செய்தி, இரண்டு இளம்பெண்கள் ஏற்கனவே ஆடைத்தொழிற்சாலைக்கு என இக்கிராமத்தில் இருந்து அகன்றுவிட்டனர் என்பதுதான். இத்துடன் நின்றுவிடாத நிழல் மேலும் ஆறு பெண்களை தயார்ப்படுத்திவருகின்றது. இவர்கள் உண்மையில் ஆடைத்தொழிற்சாலை பணிக்குத்தான் கொண்டு செல்லப்பட்டார்களா? இவர்களை வேலைக்கு இழுப்பவர்கள் சட்டத்தின் எல்லைகளுக்குள் நின்றுதான் செயற்படுகின்றனரா? இதனால் இவர்கள் அடையப்பொகும் சமுக புரள்வுகள்தான் என்ன? என்கின்ற கேள்விகள் பதில்காணமுடியாது நீழ்கின்றது.
இதுபற்றி பெற்றோர்களிடம் கேட்டபோது, அனுப்பட்ட இடமோ, அனுப்பட்ட தொழிற்சாலையோ, அவர்கள் செய்யும் பணியோ பற்றி எதுவும் தெரியாமல் மாலையில் அந்த நிழலினாலக்கொடுக்கப்படும் கையடக்கத்தொலைபேசியின் தமது மகளின் இரண்டு ஒரு வார்த்தைகளை கேட்டவண்ணம் காலத்தை கடத்துகின்றனர்.

இது இவர்களின் மடமையா? இல்லை உடைந்துபோன சமூகத்தின் குறிகாட்டிகளா?
தொலைந்துபோன வாழ்க்கை பற்றிய நம்பிக்கையின் பிம்பங்களா?

இது நம்பினால் நம்புங்கள் என்று பூச்சாண்டி பற்றி சொல்லப்படுகின்ற கதை அல்ல.
யாழ்ப்பாண மண்ணில் நடந்து கொண்டிருக்கின்ற உண்மைச்சம்பவம்.
எங்கோ ஒரு குக்கிராமம் என்று நினைக்காதீர்கள் இது உங்கள் கிhமமாகக்கூட இருக்கலாம் இல்லை உங்கள் அயல்க்கிராமமாகக்கூட இருக்கலாம்.

பாய்ந்துவருகின்ற இந்த நரோட்டம் உங்கள் உறவுகளையும் பதம்பார்க்கும்நேரம்வரை பொறுத்திருக்கப்போகின்றீர்களா?

எங்கே போனது எங்கள் சமுகக்கட்டமைப்பு? எங்கே அடகுவைக்கப்பட்டது எங்கள் இளைஞர்களின் தன்மானம்? எங்கே மறைக்கப்பட்டது எங்கள் விழுமியங்கள்?
செறிந்த பாரம்பரிய பின்புலம் உள்ள யாழ்மண்ணிற்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற மாற்றங்கள் ஏற்புடையதா? இப்புரள்வுநடைமுறைகளை சரி செய்யும் பொறுப்பு இப்போது யாரைச்சார்ந்து? காவலர்களை நியமிப்பதுயார்? காவலர்களை கண்காணிப்பது யார்? என்கின்ற பல கேள்விகளை நிறுத்தி முடிக்கின்றேன்.

இன்றல்ல சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு கிடப்பில் இருந்தது. இன்று மீண்டும் பார்க்கவேண்டிய தேவை வந்தது.


9 comments:

றமேஸ்-Ramesh said...

///இது இவர்களின் மடமையா? இல்லை உடைந்துபோன சமூகத்தின் குறிகாட்டிகளா?
தொலைந்துபோன வாழ்க்கை பற்றிய நம்பிக்கையின் பிம்பங்களா?///
இதே கேள்வியை தான் கேட்கமுடியும்.

இந்தக்கதைகளைப்பற்றி இன்னொரு வலையுலக சகபதிவரோடு பலமாதங்களுக்கு முன்னர் கதைத்தது ஞாபகத்துக்கு வந்தது.

சமூகமே...இது உங்களின் கவனத்துக்கு

றமேஸ்-Ramesh said...

காத்திரமான பதிவு அவசியமான பதிவு
நன்றி அண்ணா

டிலீப் said...

அருமையான பதிவு அண்ணா
புத்தாண்டிலாவது பழிதீர்க்கும் எண்ணம் எம்மை விட்டு நீங்கட்டும்

ம.தி.சுதா said...

உண்மையான விசயம் ஒன்றை எடுத்துரைத்துள்ளீர்கள்... நன்றி.. எப்போதும் ஏழைகள் தான் இப்படியாக ஏமாகிறார்கள் ஆனால் அவர்கள் மேல் கோபிக்க முடியாது அவர்களின் வறுமை கண்ணைமறைப்பதால் ஒரு அசாத்திய துணிச்சல் கிளம்பகிறதே...

பார்வையாளன் said...

அதிர்ச்சியளிக்கும் கட்டுரை .

ஜீ... said...

சில அதிர்ச்சிகரமான விஷயங்களில் இதுவும் ஒன்று!

தர்ஷன் said...

யாழ்ப்பாணத்திலா? நம்புவது கடினமாக இருக்கின்றது

நிரூஜா said...

:)

“நிலவின்” ஜனகன் said...

அருமையான,காத்திரமான,ஆதங்கமான பதிவு....

LinkWithin

Related Posts with Thumbnails