வலைப்பதிவுகள்மூலம் ஆக்கபூர்வமாக எதையாவது கொண்டுவரமுடியுமா! என்று சிந்தித்து, அதன்வழியே பதிவுகளை இட்டு, தன் குறிக்கோள்களில் சிலவற்றுக்கு வலைப்பதிவுகள்மூலம் சாதித்தும் காட்டியுள்ள ஒருவர் சிதறல்கள் ரமேஸ். நேர்தியான திட்டமிட்ட பதிவுகளை மிக இயல்பாக எழுதி யாவரையும் கொஞ்சம் சிந்திக்கவும் வைத்துவிடும் பதிவுகளின் சொந்தக்காரன் இவர்.
மிக சிக்கலான விடயம் ஒன்றைப்பற்றி எழுத வந்தாலும்கூட சகல மட்டத்தினரும் புரிந்துகொள்ளும் விதமாக இதமாக, ஆழமான கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதம் தெரிவிக்கும் நேர்த்தி ரமேஸ் உடைய எழுத்துக்களில் உண்டு.
சிவஞானம் ரமேஸ், இலங்கையின் மட்டக்களப்பில் உள்ள இயற்கை அழகு சூழ்ந்த இடமான தேத்தாத்தீவை சொந்த இடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர்.
ஆரம்பத்தில் சமுக சேவை நிறுவனத்தில் தொழில்புரிந்து தற்போது பொறுப்பான ஆசிரியத்தொழிலில் மாணவர்களுக்கு நல்ல ஒரு ஆசிரியனாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருந்து வரும் ஒருவர்.
வலையுலகில் ரமேஸ், சிதறல்கள் மூலமே பலராலும் அறியப்பட்டாலும்கூட, “தேனலை” என்ற வலைதளத்தையும் அவர் தொடர்ந்து எழுதிவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவிஞன், ஒரு உன்னத படைப்பாளி உண்மையிலேயே இயற்கையிடம் மனதை பறிகொடுத்தவனாகவும், இயற்கையின் காதலானகவே இருப்பான் என்பதற்கும் ரமேஸ் பெரியதொரு எடுத்துக்காட்டு என்றே சொல்லவேண்டும்.
ரமேஸ் எழுதிய பல கவிதைகளையும் உற்று நோக்கினால் அதில் ஆடிநாதமாக இயற்கை பற்றியதொரு வாஞ்சை, அபரிதமான இயற்கைநேசிப்பை கண்டுகொள்ளலாம்.
ஒரு சின்னவிடயம் ஒன்றை பதிவிட நினைத்தாலும், அதை முறையாக திட்டமிட்டு, அதுபற்றியதொரு முழுமையான அறிவுடன் அதை பதிவிடும் முறை ரமேஸ் இடம் உண்டு.
2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதிப்பகுதியில் ரமேஸ் சிதறல்கள்மூலம் பதிவுலகத்திற்கு அறிமுகமானார். “தாலாட்டின் இசைச்சிற்பி என்தாய்” என்று தனது முதலாவது பதிவை தன்தாய்க்கு ஒரு தாலாட்டாக அரங்கேற்றியவர்.
குடும்பவாழ்வு மீது அளவுகடந்த பற்றுறுதியும், சுற்றம் மீது பெரும் பாசமும் அவர் நெஞ்சில் உண்டு என்பதற்கு அவரது பதிவுகள் நல்லதொரு சான்று.
“சிதறும் சில்லறைகள்”, “ஸ்டேட்டஸ்ட்” என்பன பதிவுலகில் ரமேஸ் பதிந்து வைத்துள்ள முத்திரைகள்.
ரமேஸ் உடைய பதிவுகளில் பெரும்பாலான பதிவுகள் சமுகம்சார் பதிவுகளாகவே உள்ளன. சமுகசேவகனாக எப்போதும் தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் ரமேஸ் உடைய அடி மனதில் ஆழமானதாக உள்ளது என்பதை அவை புலப்படுத்துகின்றன.
கவிதை, இசை, இலக்கியம், பகுப்பாய்வு, வாழ்வுநிலைகள், யதார்தவியல், புதிய உலகு, என்று பயணிக்கும் ரமேஸ் உடைய எழுத்துக்களில் ஆன்மீகமும் அப்பப்போ எட்டிப்பார்ப்பதையும் கண்டுகொள்ளலாம்.
பதிவுலகில் ரமேஸ், சகல பதிவர்களுக்கும் வாஞ்சையான ஒரு நபராக இருப்பது அவரது நல்ல பேர்சனாலிட்டிக்கு நல்லதொரு சான்று. சாதிக்கத்துடிக்கும் இளைஞன் ஒருவனுக்கு ரமேஸ் உடைய வலைப்பதிவுகள் விருப்பத்திற்குரிய ஒன்றாக இருப்பதில் எந்தவித சந்தேகங்களும் இருப்பதிற்கில்லை.
ரமேஸ் உடைய தேடல்கள் ஒரு வரையறைக்கள் இல்லை என்பதை தொடராக அவர் பதிவிடும் “சிதறும் சில்லறைகளை” பொறுக்கிக்கொள்பவர்களுக்கு நன்றாக புரிந்துகொண்டிருக்கும்.
நடிகர்களின் நடிப்பில் ஒரு யதார்த்தவியலை குறிப்பிடுவதுபோல, ரமேஸ் உடைய எழுத்துக்களில் யதார்த்தவியலை காணக்கூடியதாக உள்ளது.
அமைதியாக, மென்மையாக, மெல்லியதொனியில் பேசுவதுபோன்ற ஒரு தொனி ரமேஸ் உடைய எழுத்துக்களை படிக்கும்போது தோன்றும். அதுவே ரமேஸ் உடைய எழுத்துக்களின் மெனாரிஸம்.
சரி..இந்த வாரப்பதிவரான சிதறல்கள் ரமேஸிடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளும் என்ன என்பதையும் அதற்கான அவரது பதில்களையும் பார்ப்போம்.
கேள்வி : பதிவுலகமும் வாழ்க்கையும் பற்றி ஏதாவது உங்கள் கருத்து?
ரமேஸ்: பதிவுலகம் என்னை அடயாளப்படுத்தியது இணைய நண்பர்களுக்கு. இன்னுமின்னும் என பல விடயங்கள் கிராமங்கள் சார்ந்தும் தெரியப்படாத அறிப்படாத தகவல்கள் உலகத்தரவேற்றம் செய்யப்படவேண்டும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்கிற முனைப்போடும் இரண்டுவருடங்களுக்கு முன்னர் பதிவுலகம் வந்தேன். இதுவரை பல விடயங்களை சாதித்திருக்கேன் என்று சொல்லுமளவுக்கு தன்னம்பிக்கை எனது எழுத்துக்களில் இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டு, பல நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். எமது புலம்பெயர் உறவுகளின் தொடர்பறா உறவை எமது கிராமத்தோடு இணைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. "பதிவுலகம் என்பது எனது வாழ்க்கை அல்ல வாழ்க்கையின் ஒரு நிலையில் பதிவுலகத்துக்குள்ளும் இருக்க முடிகிறது" என்பது திருப்தி
கேள்வி :பதிவுலகத்தின் இன்றைய நிலை மற்றும் தேவை என்ன?
ரமேஸ்: பதிவுகள் எழுதப்படவேண்டும் இன்னுமின்னும் காத்திரமான எத்தனையோ விடயங்கள் எழுதப்பட்டு அவை ஆவணப்படுத்தப்படவேண்டும். காழ்ப்புணச்சிகள் களையப்பட்டு நல்ல உணர்வுகள் உறவுகள் நீண்டுகொள்ளவேண்டும். புதிய புதிய பதிவர்கள் இனங்காணப்பட்டு ஊக்குவிக்கும் முயற்சியில் இருக்கவேண்டும். மற்றவர்களின் நலனுக்காக எழுத முடிந்தளவு எழுதி தீர்வாக உதவியாக இருக்குமளவுக்கு பதிவுலகம் மாறவேண்டும் அதாவது முன்மாதிரி என்கிற அளவுக்காவது தாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்ற வேண்டும்.
கேள்வி : பதிவுலகம் தாண்டி பதிவுலகத்தினால் சொந்தவாழ்க்கையில் என்று ஏதாவது சொல்லமுடியுமா??
ரமேஸ்: பதிவுலகம் தாண்டி சமூக தமிழ் உறவுக்காக மாணவர்களின் கல்விக்காக எப்போதும் பாடுபடுகிறேன். "எங்கெல்லாம் மனம் காயப்படுமோ அங்கெல்லாம் பூக்கவேண்டும் உணர்வின் உறவின் கரங்கள்" என்ற தொனிப்போடு இருக்கிறேன். இதனால் இப்பொழுது சற்றுகவலைப்படுகிறேன் எனது தந்தை எனக்கு ஏதாவது ஆகிடுமோ அல்லது யாராவது என்னை நோகடித்துவிடுவார்களோ என்கிற எண்ணமும் தன் மகன் தனது முன்னேற்றத்தில் தனது படிப்பிலிருந்து உயர்வான நிலையை அடையாமல் போய்விடுவானோ என்கிற எண்ணத்தில் இப்பொழுது மன அழுத்தத்திற்குள்ளாகி இருப்பதற்கு என்ன முடிவெடுப்பது என்று நேற்றிலிருந்து தடுமாறுகிறேன்.
19 comments:
தேவையான முயற்சி. வாழ்த்துகள்
கவிஞன், ஒரு உன்னத படைப்பாளி உண்மையிலேயே இயற்கையிடம் மனதை பறிகொடுத்தவனாகவும், இயற்கையின் காதலானகவே இருப்பான் என்பதற்கும் ரமேஸ் பெரியதொரு எடுத்துக்காட்டு என்றே சொல்லவேண்டும்.//
இன்று தான் இந்த அன்பு உள்ளம் பற்றி அறிந்து கொண்டேன். தொடர்ந்தும் சாதிக்க வாழ்த்துக்கள் றமேஸ். இப் பதிவர் பற்றி அறியத் தந்த ஜனா அண்ணாவுக்கு நன்றிகள். நல்ல முயற்சி.
கொஞ்சம் இருங்க ஜனா இதோ வந்துடறேன்!!
பதிவுலகில் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.
பதிவர் ரமேஷ் பற்றி அழகான தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளீர்கள் ஜனா! உங்கள் மூலமாக அவரை அறிந்துகொண்டது மகிழ்ச்சி! அவரது வலைப்பூவின் லிங்கைத் தந்திருக்கலாமே! சக பதிவர்களை அறிமுகப்படுத்தி வைக்கும் உங்களது பெருந்தன்மை வியக்கவைக்கிறது!
உங்கள் அறிமுகங்கள் சூப்பர்.. இந்த பகுதியை தொடர்ந்து ஆர்வத்துடன் படிக்கும் பலரில் நானும் ஒருவன்
வாழ்த்துக்கள் ரமேஸ். தொடர்ந்து எழுதவும்.
ரமேஸ்க்கு வாழ்த்துகள். மேலும் பல சாதனைகள் புரிய.
இப்ப கொஞ்ச நாளாத்தான் இவரை படிக்கிறேன் நன்றாக எழுதுபவர்
நான் நூறாவது பதிவை இட்டபோது இவரும் இட்டார். அன்று முதல் பின்னூட்டத்தில் இருவரும் இணைந்து கொண்டோம் என நினைக்கின்றேன். பழகுவதற்கு இனியவர். ரமேஸ் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். அறிமுகத்திற்கு நன்றி தல!
ரமேசுக்கு வாழ்த்துக்கள்.. பதிவுலகம் தாண்டிய ஒரு நண்பர் ரமேஸ்..
நன்றி ஜனா அண்ணா.. ரமேஸ் அண்ணரை பற்றி அப்படியே சொல்லியுள்ளீர்கள் உண்மையில் எனக்கு அவர் குரலால் கேட்கும் கவிதைகளில் எப்போதும் ஒரு தனிப்பிடிப்பு இருக்கும்... நான் பழகும் பதிவர்களில் சமூகத்தில் மிகவும் அக்கறை கொண்ட ஒரு மனிதராக இவரை அடையாளம் கண்ட கொண்டேன்....
இதுவே உங்கள் தளத்தை முதல் முறையாக பார்வையிடுகிறேன்.. எல்லாம் பதிவுகளும் அருமை
வாழ்த்துகள் றமேஸ்...
றமேஸின் அன்பிற்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்
என்ன அண்ணே இந்த முறை கேள்விகள் மாறி விட்டன ??
வாழ்த்துகள் றமேஸ்...!
வாழ்த்துக்கள் ரமேஸ் அண்ணா...
வணக்கம் ரமேஸ் அண்ணை. சிதறும் சில்லறைகளை அடிக்கடி பொறுக்குவதுண்டு. தொடர்ந்தும் இயற்கையின் காதலராக இருங்கள்.
அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். அத்தனையையும் உங்களோடு சேர்ந்து நானும் ஒருவன் என்பதை ஏற்றுணர்வீர்களாக. நாம் எழுதுவோம் எதிர்கால கனவுகளை விட நிகழ்கால நிஜங்களை வெல்வோம். ஜனா அண்ணா அடயாளங்களின் நீட்சியாக உணர்கிறேன் நன்றிகள் சொல்லிக்கொண்டு
Post a Comment