தமிழகத்தின் கலை பண்பாட்டு துறையின் சார்பில், தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இயல்துறையில் சிறந்து விளங்கும் ஜெயகாந்தனுக்கு பாரதி விருதும், இசைத்துறையில் சிறந்துவிளங்கும் இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும், நாட்டியத்துறையில் சிறந்துவிளங்கும் பத்மா சுப்பிரணியத்திற்கு பாலசரஸ்வதி விருதும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.
யார் செய்தாலும் என்ன? மகிழ்ச்சியான விடயம் என்பதன் காரணம் மிகத்தகுதியான இடங்களுக்கு விருதுகள் சென்றடைந்தமைதான்.
பூமியின் பூகம்பப் பிரதேசம்.
2004 ஆம் அண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதியை உலகம் என்றும் மறந்துவிடுவதற்கில்லை. ஏனெனில் குறிப்பிட்ட ஒரு சில மணித்தியாலங்களில் உலகத்தையே புரட்டிப்போட்ட வேதனையும், துயரமும் கலந்த மிகப்பெரும் துன்பியல் நிகழ்வு அது. அந்த நாளில் இருந்து இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாகவே பூமியின் தென்கிழக்கு மூலையில் உள்ள யாவா, சுமாத்திரா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அடக்கப்பட்டுள்ள வலையங்களில் நில நடுக்கங்கள் ஏற்பட்டவண்ணமே உள்ளன.
சுமாத்திராவில் பூகம்பம் ரிக்டர் அளவு 5.1, இந்தோனேசியாவில் பூகம்பம் ரிக்டர் அளவு 6.2 என்ற செய்திகள் உலகிற்கு இப்போ சர்வசாதரணமான நிகழ்வுகள் ஆகிவிட்டிருக்கின்றன.
பாரிய நிலக்கீழ் தகடு பிரியும் இடம் அதுவென பூகோள ஆராட்சியாளர்கள் தெரிவித்தாலும்கூட, திடீர் என ஏன் இந்தப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக இப்படி நடந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற கேள்விகளும் எழாமலும் இல்லை.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரீகனுடைய காலங்களில் இந்தப்பிரசேங்களில் கழிவு மற்றும் அணுக்கழிவுகளை, கடலின் அடியில் ஆழமாக ரில் செய்து அடைக்கப்பட்டதாகவும், அதன் விளைவுகளே இது எனவும் ஒரு செய்தி சொல்கின்றது, இதுபோல அச்சரியமூட்டும் பலவிதமான செய்திகள் மேலும் உள்ளன.
இந்தப்பிரதேசத்தில் பூமி அதிர்வினால் பாதிக்கப்படும் பிரதேசங்களிலேயே நாமும் உள்ளதனால்த்தான் இந்த பயமே.
எது எப்படியோ சுனாமி என்பதுபற்றி 2004ஆம் ஆண்டுதான் நாம் கண்களால்ப்பார்த்து அபாயத்தை புரிந்துகொண்டாலும், இலங்கை இந்தியாவுக்கு சுனாமித்தாக்கம் ஏற்பட்டது இது முதல்தடவை அல்ல, ராஜராஜசோழனுக்கு முற்பட்ட காலத்திலும், இலங்கையில் விகாரமாதேவியின் காலத்திலும் சுனாமித்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சில தகவல்களை பலர் மேற்கோள் காட்டியும் வருகின்றனர்.
சுஜாதா.
இந்தவாரம் முன்னர் வாசித்த சுஜாதாவின் மூன்று புத்தகங்களை மீள வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசித்து பல வருடங்கள் ஆகிவிட்டிருந்தாலும் மீண்டும் வாசிக்கும்போது பழைய நினைவுகள் அப்பப்போ எட்டிப்பார்த்ததை வாசித்துக்கொண்டு போகும்போது உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
நிர்வாண நகரம்.
கொஞ்சம் வித்தியாசமான கதைதான். தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகவே தொய்வு நிலை எங்கும் ஏற்பட்டுவிடாமல் சுஜாதா ஒரே இழுவையில் இழுத்துக்கொண்டு செல்வதுபோன்ற உணர்வு படிக்கும்போது ஏற்படும்.
மிகவும் கெட்டித்தனம் உள்ள ஒருவன், சமுகத்தால் புறக்கணிக்கப்படும்போதும், தன் திறமை கவனிக்கடாதபோதும் சமுகத்தின்மேல் வெறுப்புறுகின்றான்.
அந்த நகரத்தையே நிர்வாணமாக்கவும், அதன்மூலம் தான் பிரபலமடையவும் நினைக்கின்றான். மிகச்சாதுரியமாக தன் குறிக்கோள்களை பக்காவாக நகர்த்துகின்றான். நாமும் அவனுடனேயே போய்க்கொண்டிரக்கின்றோம்.
இறுதியில் கணேஷ் வசந்த் வருகின்றார்கள். திடீர் திருப்பங்கள்…
இந்தக்கதையின் முக்கியமான ஒரு அம்சமே இறுதியில் இந்தக்கதை நாயகனும் கணேஷ_ம் சந்தித்துக்கொள்ளும் சந்தர்ப்பமே.
“மிஸ்ரர் கணேஷ், நான் இந்த நகரத்தை நிர்வாணிக்கமுயன்றேன்! நிர்வாணம்னா எக்ஸ்போஷர். எங்கோ மூலையில பூச்சியா ஒரு எறும்பா இருந்தவனை….ஒரு அநாம தேயத்தை இந்த நகரம் பேச ஏன் கொண்டாடக்கூட ஆரம்பிச்சுடுச்சு பாருங்க. அவுங்களுக்கு வேண்டியது லெஸ்ஷேன். என்னைப்பத்தி அஸெம்பிலியில் பேசினாங்க. லாவணி பாடினாங்க. பெண்கள் டி ஷேட்ல எழுதினாங்க…பஸ் ஸ்ராண்டு, ரயில், செய்தித்தாள்கள் எங்கும், எங்கும் என்னைப்பத்தித்தான் சென்ற மூன்று மாசங்களாக பேசிக்கொண்டிருந்தாங்க. என்ன ஒரு கல்சுரல், அபர்ரேஷன் பாருங்க!
இந்த நகரத்தை என்னுடைய முறையில பழிவாங்குறது, கெலி செய்யுறது திருப்பித்தறது குற்றமா?” சிவராஜ் கேட்கும்கேள்வி கொஞ்சம் சிந்திக்கவைக்குது…
மூன்றுநாள் சொர்க்கம்.
குருராஜ், ராஜ், மனோ, சரஸ்வதி என்ற நான்கு விடலைப்பருவ இளைஞர்களின் அனுபவங்கள் ஊடான ஒரு பயணம்.
விடலை வயதினரை பெற்றவர்கள், சமுகங்கள் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை சுஜாதா சொல்லாமல் சொல்லியிருக்கின்றார். பணம், பெண், போதை என்பவற்றினை நோக்கி விடலை மனங்கள் இழுத்து செல்லப்படுவதையும், அதனால் வாழ்வில் ஏற்பட்டுவிடுகின்ற அபத்தங்களையும் சுவாரகசியமூடாக நாசுக்காக சொல்லிவிடுகின்றார் சுஜாதா.
விடலைப்பருவத்தினர், விடலைப்பருவத்து பிள்ளைகளின் பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய மூன்றுநாள் சொர்க்கம்.
அப்ஸரா
சிவராஜன் என்னும் சைக்கோபாத் எழுமாறாக கொலைகளை செய்துகொண்டு போகின்றமையும், அந்த கொலைகளுக்கு அவன் தனது கணனித்துறை வேலையில் றன்டமாக சில பெயர்களை தெரிவுசெய்து கொலைவேட்டையில் ஈடுபடுவதையும் அறியும்போது உச்சி உறைகின்றது. இந்த கதையில் கணேஷ் வசந்த் இல்லை என்றாலும் பொலிஸாரின் புலனாய்வும், தப்பு துலக்கலும் கலக்கலாக ஆவலுடன் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றது.
இந்தக்கதையின் இறுதியில்…
The Psychopath is a Social aggressive highly impulsive person who feels little or no guilt and is unable to from bonds of affection with other human beings.
என்று மக்கார்ட் சொன்னது இங்கு நினைவு கூரத்தக்கது. சிவராஜன் சைக்கோபாத் மட்டுமல்ல, காரண காரியங்களையும் செயல்களில் தராதரங்களையும் பாகுபடுத்த முடியாத நிலையில் ஏறக்குறைய மிருக நிலையில் இருக்கின்றான். அவனை உடனடியாக இன்ஸிரியூட்டில் சேர்க்கவேண்டும் என்று சிபாரிசுசெய்கின்றேன். இவனை கோட்டில் அழைத்துச்சென்று கூண்டில் அடைத்து குற்றம் சாட்டி வழக்கு நடத்தி தண்டனை கொடுத்து சிறையில் அடைப்பதிலோ அல்லது தூக்கில் தொங்கவிடுவதிலேயோ சமுகத்தில் எந்தவிதக்காரணமும் எந்த விதத்திலும் முன்னேறுவதில்லை. இது என் அபிப்பிராயம் என இறுதியில் டாக்டர் சேர்டிபிக்கேட்டில் அபிப்பிராயம் சொல்லியிருப்பது டாக்டரது அபிப்பிராயம் மட்டும் இன்றி சுஜாதாவினதும் நமதும் அபிப்பிராயமாகவும் இருக்கும்.
இந்தவாரக்குறும்படம்
துனீஸியா
உலகச்செய்திகளில் தற்போது முதன்மை இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது துனீஸியா. ஆபிரிக்க கண்டத்தில் வட ஆபிரிக்காவில், மத்தியதரைக்கடலுக்கு அண்மையில் அமைந்துள்ளது துனீஸியா தேசம்.
1987ஆம் ஆண்டு இரத்தம் சிந்தாமல் ஏற்பட்ட இராணுவப்புரட்சி மூலம் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜய்னுல் ஆப்தீன் தொடர்ந்தும் அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருகின்றார்.
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது 89 சதவீத வாக்குகளை பெற்று இவர் ஐந்தாவது முறையாக ஜனாதிபதியாக பதவிக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில், இவரது ஊழல் மலிந்த ஆட்சி பற்றி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைதோன்றியிருந்தது, அதேவேளை நாட்டில் ஆபிரிக்க கண்டத்திலேயே மிக அதிகமாக கல்வி அறிவு கொண்டிருக்கும் நாடு என்ற மதிப்பை பெற்றிருந்தும், வேலைவாய்ப்புக்கள் இன்றி இளைஞர்கள் வீதியில் நின்றதே இவருக்கு பெரும் சிக்கலாக அமைந்துவிட்டது.
இளைஞர்கள் வீதிக்கிறங்கி, போராட்டங்களை நடத்த அதற்கு மக்களின் ஆதரவு வலுப்பெற்றுச்செல்ல, இவற்றை அடக்க இராணுவத்தை பயன்படுத்த ஜனாதிபதி முடிவெடுக்க பிரச்சினை விஸ்பரூபமாகிவிட்டது.
இறுதியில் ஜனாதிபதி நாட்டில் இருப்பதே தனக்கு ஆபத்து என்று நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு அது கொண்டுசென்றுவிட்டது. முன்னர் அவர் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பித்து சென்றதாக தகவல்கள் வந்தாலும், பிரான்ஸ் உடனயடிhக அதை மறுத்துவிட, சவுதி அரேபியா அவர் தமது நாட்டில்த்தான் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆக… துனிஸியா மக்கள் பல நாட்டு தலைவர்களுக்கும் ஒரு எதிர்காலச்செய்தியை சொல்லியிருக்கிறார்கள் என்று தெரியுது.
4 கோல்டன் குளோப் விருதுகள்: கலக்கிய சோசல் நெட்வேர்க்
68ஆவது கோல்டன் குளோப் விருதுவழங்கும் விழா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்றது. இதில் பலரும் ஆரூடம்கூறியபடியே சோசல் நெட்வேர்க் நான்கு விருதுகளைப்பெற்று கலக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த படத்திற்கான விருதையும், சிறந்த இயக்குனருக்கான விருதையும், சிறந்த திரைக்கதை, மற்றும் சிறந்த இசைக்கான விருதுகளையும் இந்தத்திரைப்படமே தட்டிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பம்முதல் இறுதிவரை திரைப்படம் விறுவிறுப்பாகவும், திறமையான வசன நகர்வாகவும் சென்றபோதே இந்த திரைக்கதைக்கு நிற்சயம் விருது கிடைத்துவிடும் என பலர் ஆரூடம் குறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் சிறந்த இயக்குனருக்கான விருதை டேவிட் பின்ஞ்சரும், சிறந்த திரைக்கதைக்கான விருதை ஆர்ரொன் சோர்க்கினும், சிறந்த இசையமைப்புக்கான விருதை ரன்ட் டெஸ்னர் மற்றும் ஹர்டிக்கஸ் ரோஸ் அகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
எனினும் 127 ஹவர்ஸ் திரைப்படத்தின் இசைக்காக இரண்டாவது தடவையாகவும் ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இம்முறை தவறிவிட்டது.
மியூசிக் cafe
ஜோக் பொக்ஸ்
ஒரு தொழிற்சாலை முதலாளி தனது தொழிற்சாலையில் பணிபுரிவதற்கு அழகிய பெண்கள் தேவை. நல்ல சம்பளத்துடன், போனஸ்கள் தரப்படும் என்று விளம்பரம் செய்தார். பல அழகான பெண்கள் வந்திருந்தார்கள். அவர்களின் மிக அழகானவர்களை தெரிவு செய்து வேலைக்கு அமர்த்தியிருந்தார்.
முதல்மாச சம்பளத்துடன், அவர்கள் அனைவருக்கும் பாவாடை போனஸாக கொடுக்கப்பட்டது.
மறுமாதமே முதலாளி போனஸை உயர்த்தும் வேலைகளை தொடங்கிவிட்டாராம்.
14 comments:
கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்
விருதுகள் பெற்ற ஜெயகாந்தனும், இளையராஜாவும், பத்மா சுப்ரமணியமும் அவரவர் துறைகளில் ஜாம்பவான்கள்தான். மனம் மகிழும் அரசின் செயல்.
அதுசார், ஒரே இடுகையில் இத்தனை செய்திகளா?
நல்லாத்தான் இருக்கு :))
கதம்ப மாலை போல் அனைத்து தகவல்களும் சிறப்பாக இருந்தது.
கலை பண்பாட்டு துறை விருது பெற்ற அனைத்து ஜாம்பவான்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.
சுனாமிக்கு பின்புலம் அணுக்கழிவு என்பது அதிர்ச்சியான தகவல்.
சுஜாதா புத்தகங்கள் பற்றி தனிப்பதிவு போட்டிருந்தால் நிறைவாக இருந்திருக்கும். ஆமாம்.. மூன்றுநாள் சொர்க்கம் உங்களை அதிகம் ஈர்க்கவில்லையா?
அதிக தகவல்களை ஒரே பதிவில் தந்தற்கு நன்றிகள்.
ம்ம் அணுக்கழிவு விடயத்தை போல ஆதாரமில்லாமல் ஊகங்களாக சொல்லப்படும் நிறைய விடயங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். அப்சராவும் நிர்வாண நகரமும் வாசித்திருக்கிறேன். ரஹ்மான் ஏமாற்றமே 127 hours இன் இசை Slumdog ஐ விட சிறப்பாய் இருந்ததாய் ஒரு உணர்வு.
அடேங்கப்பா . பல விஷயங்களை ஒரே பதிவில் சொல்லிவிட்டீர்கள்
சூப்பர் அண்ணே! கலக்கலா இருக்கு!
ரஹ்மானுக்கு விருது கிடைக்காதது கவலைதான்!
சுஜாதா புத்தகங்கள் பற்றி... அருமை!
பார்ரா! போனஸ் ஜோக்!! :-))
தகுதியானவர்களுக்கான மிகவும் பொருத்தமான விருதுகள்.
ஆனால் இவ்வளவு காலதாமதமாகவா?
ஜனா.. சுஜாதாவின் ‘எப்போதும் பெண்’ வாசியுங்கள். இப்ப கிட்டடியிலதான் வாசித்தேன். சுஜாதாமீது சொல்லப்படுகிற குறைகள் {பார்ப்பன ஆதரவு etc) தாண்டி ஒரு நல்ல கதை
அப்பப்பா இவ்வளவு தேடல்களா? வாழ்த்துக்கள் நண்பா!
:-))
வழக்கம் போல கலக்கல் அண்ணே! இந்தமுறை செய்தித்தகவல்கள் அதிகம், பிரியோசனமானவையும் கூட. சுஜாதா பற்றி நிறைய எழுதுறீங்க.
தேடல்கள் பல............அருமை அண்ணா...
நிறைய தெரிந்து கொண்டேன்...நன்றிகள்...
இப்போது காலநிலையில் ஏற்படும் சடுதியான மாற்றங்கள் இலங்கையிலும் நிலநடுக்க சாத்தியக்கூறுகளை தோற்றுவிக்க கூடும்.
Social Network படம் நான் இன்னமும் பார்க்கவில்லை.
Joke நச்சு!!
Post a Comment